07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 25, 2010

மசாலா மிக்ஸ் --ஆறாவது நாள்

      டிஸ்கி முன்னாலேயே சொல்லிக்கிறேன் வார்த்தைகள் இதுல என்னோட ஒரிஜினல் கமெண்ட்  ஸ்டைலில வரும் .. நோ சீரியஸ் , நோ ..டென்ஷன் பிளிஸ்.... ஹி..ஹி..
                       சமையலில் என்னந்தான் காய்கறி  , பருப்பு , மட்டன் ,சிக்கன் போட்டாலும் அதை அப்படியே சாப்பிடமுடியாது .அதுக்கு சில மசாலா பொடிகள் சேர்க்க வேண்டி வருது...அது மாதிரி தினம் ஒரு தலைப்புல போட்டாலும் சில பதிவர்கள் விட்டு போய்விடுகிறார்கள் .  ஏனென்றால் இது வேனுமின்னே செய்வது இல்லை..அவர்களை  எதில வகைப்படுத்து வதுன்னு ஒரு குழப்படி அதான்  ..எப்பவுமே நான் குழம்பிதான் அடுத்தவங்க்ளை குழப்புவது வழக்கம் .
                    இந்த பதிவில் இலவங்கம் , ஜாதிக்காய் , உப்பு , மிளகா மாதிரி அறு சுவையும் வரும்   பாருங்க ..
இரா பக்கங்கள் ஒரே மாதிரி விஷயங்கள எப்படி மாறுதுன்னு சொல்ற கட்டுரையா கவிதையா...?  யாருக்கு தெரியும்  வாழ்ந்திருத்தல்

அப்பு! உங்க ...உறவுகாரன்பா நானு!   இப்படி சொல்லிட்டு இதையும் வேண்டாமுன்னு சொல்ரார் என்ன செய்ய அவரைதான் கேக்கோனும் .♥ப்ரியமுடன்......வசந்த் -ன் இந்த கதை நானும் நித்யாவும் காதலும் ! எதிர் பாராத சினிமா முடிவுமாதிரி ஆனா இல்லை


‘என்’ எழுத்து இகழேல்  எல்லாமே கொட்டி கிடக்குது ..பாட்டா, பிளாகர் டிப்ஸா, கவிதையா ,கட்டுரையா , மொத்ததுல ஒரு நந்தவனம்  மாதிரி . .வாத்தியாரம்மாவுக்கு மூளை அதிகம்ஹாய் அரும்பாவூர் - எந்த சின்ன மேட்டர் கிடைத்தாலும்  அதை ஆராய்ந்து  பதிவு தேத்துவதில செம கில்லாடியான ஆள்


ஸ்டார்ட் மியூசிக்! -இது நம்ம பன்னிகுட்டியோட பிளாக்  ஆட்டத்தை பாருங்க, இப்பதான் வளர்ந்து வருது .இன்னும் தெளிவாக நாள் பிடிக்குமோ


வேலன் -  எல்லாருக்கும் புரியரமாதிரி  படங்களோட ஒன்னாம் கிளாஸ் வாத்தியார்  மாதிரி தெளிவா சொல்றார் . இவர்கிட்ட கத்துக்காட்டி அந்த ஆளை  ஒன்னும் பண்ண முடியாது. நேரம் அப்படி

சேட்டைக்காரன் -  பேருக்கேத்த மாதிரி  சேட்டை செம கெட்டி

விக்னேஷ்வரி    நகைச்சுவையும் , கொசு வர்த்தியும் கலந்து வரும் ரகம்


வார்த்தைச் சித்திரங்கள் -ஒரு வேளை டைரி தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க போல வீட்டில ரெண்டு நாளைக்கு ஒரு இடுகைன்னு  போட்டு தீத்துகிறாங்க கோவத்தை இந்த புது வரவு . வாழ்க வளமுடன்வந்தேமாதரம் - இவருக்கும் அந்த வியாதியான்னு தெரியல படிச்சி முடிக்கும் முன்னே  அடுத்த இடுகை ரெடி.. ஆனா இவர் பிளாகர் டிப்ஸ்  ஸ்பெஷல்.

லினக்ஸ் -அருமையா சொல்றார் நம்ம வடுவூர் குமார் ஆனா எனக்குதான் மண்டையில  ஏற மாட்டேங்குது.  இவர்கிட்ட புத்திசாலி மக்கா நீங்கலாவது கத்துக்கோங்க


ருத்ரனின் பார்வை - இது நம்ம டாக்டர் ஐயா .பிளாக் ஆனா நான் விவேக் மாதிரி நைசா படிச்சிட்டு மட்டும் வந்துடுவேன் ராத்திரியோட ராத்திரியா இவருடைய் பதிவை  .


யாவரும் நலம் -இவங்க வெளியூரு போவதை பார்தால் நமக்கும் ஆசையாவரும்  டிக்கிலயாவது உட்கார்துகிட்டே போகலாமுன்னு. அழகா சொல்வாங்க .


மௌனராகங்கள் -இவங்க சொல்ரதை பார்த்தா  ஏன் எல்லாரும் மரத்தை  வெட்றாங்கன்னு இப்பதான் புரியுது


மலர்வனம் - ஆனா ஒன்னு வருடாந்திர பொருட்களின் அளவுகள்.
சரியா இருந்தா எப்படி சிக்கனமா சுவையா செய்யலாமுன்னு சொல்லும் விதம் சூப்பர் .. ஆனா மொத்தமா வாங்கினா டப்பா டான்ஸ் ஆடிடாதா என்ன.?

ப்ரியா கதிரவன்  இவங்க பயம் இவங்களுக்கு வெட்டுக்கிளி(என்னை தேடுதே)
ஆனா எனக்கும் தேடுதே எங்கே போய் தேட


பொன் மாலை பொழுது  எனக்கு இவரது பதிவுகளியே ரொம்ப பிடிச்சது  இதுதான்  நான் அந்த தப்பை இதுவரை செஞ்சதில்லை .ஆனா நடப்பதை என்னி சிரிப்பேன் அடிக்கடி .. ஏன்னா அதான் அடிக்கடி நடக்குது இங்கே..

பிரியாணி - கலந்து கட்டி அடிச்சிகிட்டு இருந்த வங்களை ( ? ) ரொம்ப நாளா கானோம் . வரட்டும் அதுவரை அரபி காரங்க மண்டையும், அதுல உள்ள கொண்டையும்.. பாத்துகிட்டு இருக்கலாம்


பாடினியார் -  இது அறிவொளி இயக்கம் சாதித்தது என்ன?  என்ற நல்ல பதிவு .இது மாதிரி யாரும் ஏன் போடமாட்டேங்கிறாகன்னு தெரியல ..


நிஜாம் பக்கம் பல்சுவை பக்கம்   இவரின் வானொலி குறுக்கெழுத்துப் போட்டி! அனுபவத்தை பார்த்துட்டு எதை நம்புவது எதை நம்பகூடாதுன்னே புரியல


அலைவரிசை - எப்போ எதுன்னு தெரியாம எல்லாமே வரும்


நாஞ்சில் எக்ஸ்பிரஸ் - போடரது மொக்கைன்னு புரியாம சிலர் சீரியஸான கமெண்ட போடற ஆளும் இருக்கு அதுல ."எந்தி"ரனும், "எந்தி"ரிக்காதவனும்...

தெரியாததை தெரிந்து கொல்வது  தமிழ் தகறாரு செய்தாலும் சரியாய் நச்ன்னு அடிக்கும் இவரது பதிவு இறப்பு


தின சிந்தனை - நாம  நம்மை ரிஃபெரஷ்  செய்ய உதவும் சின்ன இடுகைகள்


இது இமாவின் உலகம் -  இவரின் உலகமே தனிதான் போட்டோ கிராபி , கை வண்ணம்  , எல்லாத்தயும் கலந்து செய்த கலவை ..பெண் கமல்ஹாசன்    மாதிரி.

என் பக்கம் - இவங்களும் அதே மாதிரி  ஆனா ஒரு மாசமா ஆளையே கானோம். தேடுதல் வேட்டையும் ஒரு பக்கம் நடக்குது..


இதயம் பேசுகிறது -  பிளாக் நல்லாவே பேசுகிறது   படித்தேன் ரசித்தேன் !..

மனதோடு மட்டும் -   குடும்ப விவகாரத்துறை  கொஞ்சம் அதிகமா இருக்கும் அவ்வளவுதான் . ஆள் ஜாலி  டைப் ஆனா பதிவுதான் சீரியஸாம் .
               ரொம்ப நாளா ரூம் பக்கமே வராதவனை கடைத்தெருவில் வச்சி பிடிச்சேன்  நான் .ஏண்டா ராஸ்கோல் ரூம் பக்கமே கானோம் .அந்த அளவுக்கு காசு அதிகம் வந்துடுச்சா, பழசெல்லாம் மறந்துட்டியா ன்னு கேட்டதுக்கு அமைதியா இருந்தவன் அப்புறம் மெதுவா சொன்னான் ..சரி நீ இவ்வளவு சொல்றே நான் வரேன் உன் ரூமுக்கு ஆனா வந்தா காஃபி , டீ , பச்சதண்ணி குடிக்க மாட்டேன் . இஷ்டமிருந்தா சொல்லு வரேன்னு கண்டிஷன் போட்டான்.
                      வந்துச்சே கோவம் எனக்கு அப்போ நீ வரவேண்டாம் போடான்னு திட்டிட்டேன் . அப்புறம் ரெண்டாவது நிமிஷமே கோவம் போயி ஏன் இப்படி அழிச்சாட்டியம் பண்ரேன்னு கேட்டேன் . அதுக்கு அவன் சொல்றான் .டேய்...சுலைமானி டீயில  ((  பால் சேர்காத டீ ,  )) சீனிக்கு பதிலா உப்பை போட்டு குடிச்சி பாத்துட்டு அப்புறம் எனக்கு போன் பண்ணி சொல்லுன்னு பதிலை கூட கேக்காம பயபுள்ள என்னா ஓட்டம் ஓடிட்டான் ..
                    அப்பதான் என் மரமண்டைக்கு லேசா புரிஞ்சுது...ச்சே முதல்ல சீனி பாட்டலை மாத்தனும் .இல்லாட்டி அதில மார்கரால பேராவது எழுதி வைக்கனு ம். வெளிநாடு வந்தும் திருந்தாட்டி என்னதான் செய்யறதான் . நா என்னை சொன்னேன் .((இப்பதான் புரியுது  ஏன் ஃபிரண்ட்ஸ வீட்டுக்கு கூப்புட்டா வர பயப்படரானுகன்னு)) அவ்வ்வ்வ்வ்
                        மீண்டும் சந்திப்போம்  :-))

71 comments:

 1. நெறய பதிவுகளைத் தெரிஞ்சுக்கிட்டேன்.

  ReplyDelete
 2. நன்றி ஜெய்லானி என்னய மாதிரி சின்னபையனயும் பத்தி இங்க சொன்னதுக்கு :)

  ReplyDelete
 3. // இராமசாமி கண்ணண் said...

  நன்றி ஜெய்லானி என்னய மாதிரி சின்னபையனயும் பத்தி இங்க சொன்னதுக்கு :)//

  yaaruppaa athu. nee chinna paiyanaa?

  ReplyDelete
 4. மசாலா, வாசனையா இருக்கு :))

  ReplyDelete
 5. நல்ல வாசனையான பதிவுகள்தான் :-))

  ReplyDelete
 6. ஆசிரியர் பணி ரொம்ப சீரீயஸான பணியின்னு சொல்லுவாங்க! ஆனா நீங்க ஜோக்கா ஒவ்வொரு நாளும் பேசறது ரொம்ப சந்தோஷமா இருக்கு!

  என்னை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி நண்பரே! உங்களுக்குப் புண்ணியம் அதிகமா கிட்டும்.

  முடிவு செய்திட்டேன். இனி உங்க ப்ளாக்கையும் ஃபாலோ செய்றதுன்னு. பின்னே இவ்வளவு நகைசுவையா பேசறவரை சும்மா விட்டுட முடியுமா என்ன?

  ReplyDelete
 7. அறிமுகத்திற்கு நன்றி ஜெய்லானி!

  பரவாயில்லை நிறைய பேரை அறிமுகப்படுத்தியிருக்கீங்க.

  ReplyDelete
 8. அய்யா நான் மொக்கை போடுறேன்னா...நீரு மட்டும் என்ன உலகதரத்துலயா போடுறீரு??:))

  ரொம்பத்தான் லொள்ளுவ்வோய் உமக்கு...:))

  அப்புறம் அந்த கவிதையே புரியாம கமெண்ட் போடுறது யாருன்னு நான் சொல்லட்டுமா வேண்டாமா??? எவ்வாயை கிளறாம இருவே....:))

  ReplyDelete
 9. கரம் மசாலா அளவா இருக்கு.சூப்பர்.

  ReplyDelete
 10. எவனாவது தெரிஞ்சே பால்ட்டாயில குடிப்பானா சார்.

  ReplyDelete
 11. //ஸ்டார்ட் மியூசிக்! -இது நம்ம பன்னிகுட்டியோட பிளாக் ஆட்டத்தை பாருங்க, இப்பதான் வளர்ந்து வருது//

  அப்போ நான் இன்னும் பிரபல பதிவர் இல்லிய்யா? பிச்சிபுடுவேன் பிச்சி! ங்கொக்கமக்கா இரு போயி நல்லா ஏத்திக்கிட்டு வாரேன்!

  ReplyDelete
 12. //ஸ்டார்ட் மியூசிக்! -................இன்னும் தெளிவாக நாள் பிடிக்குமோ//


  இப்பெல்லாம் எந்தச் சரக்கும் சரியில்லைய்யா...! 2 மணிநேரத்துக்குல கப்புனு தெளிவாயிடுது!

  ReplyDelete
 13. மசாலா மிக்ஸ் அருமை. ஆனால் காரம் கொஞ்சம் கம்மி தான்.
  நாஞ்சிலார்க்கு இப்ப தல கால் புரியல,

  ReplyDelete
 14. வேலன் சார் பதிவு கண்டிப்பாக எல்லோருக்கும் பயனுள்ளது.

  மற்ற அறிமுகங்களும் அருமை.

  ReplyDelete
 15. சசி தம்பி போடும் பதிவுகள் அனைத்து பிளாக்கருக்கும் பயனுள்ளது

  ReplyDelete
 16. நன்றி நண்பரே.தங்கள் அறிமுகம் படுத்தியமைக்கு நன்றி...
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  ReplyDelete
 17. @@@ இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இன்று முதல் எங்கள் தலைவர்
  "ஜெய்லானி"க்கு எல்லோரையும் பெருமையுடன் அறிமுகப்படுத்தி மகிழ்ந்த தன்னிகரில்லா தலைவருக்கு
  *******************************
  "வலை ஞாநி ஜெய்லானி"
  என்ற பட்டத்தை, கொடுத்து மகிழ்கிறோம்.
  *******************************
  இப்படிக்கு

  எம் அப்துல் காதர்(ஆஹா பக்கங்கள்)

  வருத்தமில்லா வாலிபர் சங்கம்
  தம்மாம் கிளை,சவுதி அரேபியா

  ReplyDelete
 18. இன்றும் வானிலையின் அறிமுக மேகங்கள் மிதமாகவும் தட்ப வெப்ப மில்லாமலும் இருந்தது. உங்களுக்கும் அறிமுக(மாகி அறிமுக)மான அனைவருக்கும் நல் வாழ்த்துகள்!!

  ReplyDelete
 19. அசத்தல் அறிமுகங்கள்.உங்கள் இருபிடத்திற்கு வர நினைக்கும் ஒரிரண்டு நட்புகள் கூட இந்த பதிவஇன் கடைசி பாராவைப்பார்த்தால் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

  ReplyDelete
 20. புதியவளான என்னையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி..கண்டிப்பாக அனைத்து பதிவுகளையும் படிக்கிறேன்..

  ReplyDelete
 21. நல்ல வாசனையான மசாலா . நன்றி ஜெய்லானி .

  ReplyDelete
 22. இவ்வளவு அருமையான பதிவர்களுடன் என்னையும் சேர்த்துப் பெருமைப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஜெய்லானி!

  ReplyDelete
 23. ///.((இப்பதான் புரியுது ஏன் ஃபிரண்ட்ஸ வீட்டுக்கு கூப்புட்டா வர பயப்படரானுகன்னு)) அவ்வ்வ்வ்வ்
  மீண்டும் சந்திப்போம் :-))////


  ஆஹா... இம்புட்டு தெளிவா சொன்ன பிறகு..மீண்டும் சந்திக்கறதா.....???

  ஹ்ம்ம் ஹும்ம்ம்ம்... ஒரு முடிவோட தான் திரியுறீங்க.. ஜெய்.. :-)))


  அறிமுகங்கள் எல்லாம் நல்ல இருக்குங்க..

  தொடருங்கோ...!!

  ReplyDelete
 24. இது நேத்து போட வேண்டிய கமன்ட் , நேத்து நான் கொஞ்சம் ஆணி புடுங்கிகிட்டு இருந்தேன் , அதான் இன்னைக்கு போட்டேன் ரொம்ப சாரி பிரண்ட்ஸ்


  "ஜெய்லானி உன்கிட்ட எனக்கு புடிச்ச விசயமே , வாங்குன காசுக்கு வஞ்சகம் இல்லாம நீ செயல்படுறது தான் , ரொம்ப நன்றி ஜெய்லானி , அமவுண்ட் உன் அக்கவுன்ட்டுல கிரடிட் ஆனா ரிசிப்ட் எனக்கு வந்திருச்சு . (பட்டா ஆனாலும் நம்ம ஜெய்லானி குடுத்த காசுக்கு மேலே டபுள் மடங்கா கூவுராண்டா ) "

  ReplyDelete
 25. @@@DrPKandaswamyPhD--//

  நெறய பதிவுகளைத் தெரிஞ்சுக்கிட்டேன்.//

  வாங்க ஐயா... சந்தோஷம் ..உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி

  ReplyDelete
 26. @@@இராமசாமி கண்ணண்--//
  நன்றி ஜெய்லானி என்னய மாதிரி சின்னபையனயும் பத்தி இங்க சொன்னதுக்கு :) //


  வாங்க சார்..!! அப்போ நான் கிழவனா என்ன ஹா..ஹா.. உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 27. @@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) --
  // இராமசாமி கண்ணண் --//

  நன்றி ஜெய்லானி என்னய மாதிரி சின்னபையனயும் பத்தி இங்க சொன்னதுக்கு :)//

  yaaruppaa athu. nee chinna paiyanaa? //


  வாங்க பொலீஸு..அதானே நீங்களே கேளுங்க..ஹா..ஹா. உங்கள் வருகைக்கு நன்றிங்க..

  ReplyDelete
 28. @@@சைவகொத்துப்பரோட்டா--//

  மசாலா, வாசனையா இருக்கு :)) //

  வாங்க சை.கோ.ப ..!! சந்தோஷம் ..உங்கள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 29. @@@அமைதிச்சாரல்--//

  நல்ல வாசனையான பதிவுகள்தான் :-)) //

  வாங்க சாரலக்கா..!! சந்தோஷம் ..உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 30. @@@என்னது நானு யாரா?--//

  ஆசிரியர் பணி ரொம்ப சீரீயஸான பணியின்னு சொல்லுவாங்க! ஆனா நீங்க ஜோக்கா ஒவ்வொரு நாளும் பேசறது ரொம்ப சந்தோஷமா இருக்கு!//

  வாங்க சார்..!!ஆமாங்க எதையுமே சிம்பிளா யோசிக்கனும் அதான் எனக்கு பிடிக்கும் ..

  // என்னை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி நண்பரே! உங்களுக்குப் புண்ணியம் அதிகமா கிட்டும்.//

  எங்கே நல்லா இருக்கோ அதை பாராட்டனும் இதான் என் பாலிஸி.. இதுல என்ன புண்ணியம் வாத்தியாரே..!!

  // முடிவு செய்திட்டேன். இனி உங்க ப்ளாக்கையும் ஃபாலோ செய்றதுன்னு. பின்னே இவ்வளவு நகைசுவையா பேசறவரை சும்மா விட்டுட முடியுமா என்ன? //

  ஹ..ஹா.. வாங்க ..வாங்க.. ஆனா பயந்துகிட்டு பாதியில ஓடிடக்கூடாது ...ஹா..ஹா.. உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 31. @@@ Chitra --//

  Garam masala!!!! Super! //

  வாங்க டீச்சர்..சந்தோஷம் உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 32. @@@ ஜெயந்தி--//
  அறிமுகத்திற்கு நன்றி ஜெய்லானி!

  பரவாயில்லை நிறைய பேரை அறிமுகப்படுத்தியிருக்கீங்க. //

  வாங்க மேடம்..!! சந்தோஷம் ..உங்கள் வருகைக்கு நன்றி..

  ReplyDelete
 33. @@@நாஞ்சில் பிரதாப்--//அய்யா நான் மொக்கை போடுறேன்னா...நீரு மட்டும் என்ன உலகதரத்துலயா போடுறீரு??:)) //

  வாங்க தல ...!!டிஸ்கியதான் முதல்ல போட்டிருக்கேனே கவனிக்கலையா ஹி..ஹி..

  // ரொம்பத்தான் லொள்ளுவ்வோய் உமக்கு...:)) //


  கூச்சமா இருக்கு ரொம்பதான் என்னை புகழ்றீங்க ஹி..ஹி..

  // அப்புறம் அந்த கவிதையே புரியாம கமெண்ட் போடுறது யாருன்னு நான் சொல்லட்டுமா வேண்டாமா??? எவ்வாயை கிளறாம இருவே....:)) //

  ஆத்தாடி இதென்ன வம்பா இருக்கு..பேச்சி பேச்சோட இருக்கனும் இல்லாட்டி நா அழுதுடுவேன்..அவ்வ்வ்வ்வ்..உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி

  ReplyDelete
 34. @@@நட்புடன் ஜமால்--//

  செம மிக்ஸிங் ...//

  வாங்க ஜமால் ..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 35. @@@asiya omar --//

  கரம் மசாலா அளவா இருக்கு.சூப்பர். //

  வாங்க ஆசியாக்கா..!! சந்தோஷம்.. உங்கள் வருகைகு நன்றிங்க..!

  ReplyDelete
 36. @@@ சசிகுமார்--//

  எவனாவது தெரிஞ்சே பால்ட்டாயில குடிப்பானா சார்.//

  வாங்க சசி..!! அதான் பய அந்த ஓட்டம் ஓடிட்டான் போலிருக்கு.. ஹா..ஹா..உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 37. @@@ பன்னிக்குட்டி ராம்சாமி --

  //ஸ்டார்ட் மியூசிக்! -இது நம்ம பன்னிகுட்டியோட பிளாக் ஆட்டத்தை பாருங்க, இப்பதான் வளர்ந்து வருது//

  அப்போ நான் இன்னும் பிரபல பதிவர் இல்லிய்யா? பிச்சிபுடுவேன் பிச்சி! ங்கொக்கமக்கா இரு போயி நல்லா ஏத்திக்கிட்டு வாரேன்!//

  வாங்க குட்டி சார்...!!இன்னும் கொஞ்சம் சரக்கு வேனுமில்ல நல்லதா ஏதாவது சொல்ல அதான் அப்படிகா சொன்னது ஹி..ஹி..

  ReplyDelete
 38. @@@பன்னிக்குட்டி ராம்சாமி--//

  //ஸ்டார்ட் மியூசிக்! -................இன்னும் தெளிவாக நாள் பிடிக்குமோ//


  இப்பெல்லாம் எந்தச் சரக்கும் சரியில்லைய்யா...! 2 மணிநேரத்துக்குல கப்புனு தெளிவாயிடுது! //

  வாங்க ...பன்னி சார்..!!அதுக்கு பேசாம காசை உண்டில்ல போடுங்க ..நாளைக்கு ஏதாவது வயசான காலத்துல உதவும் ஹி..ஹி... உங்கள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 39. @@@ Jaleela Kamal --//

  மசாலா மிக்ஸ் அருமை. ஆனால் காரம் கொஞ்சம் கம்மி தான்.//

  வாங்க ஜலீலாக்கா..!! காரம் கம்மியா ..இதுக்கே கொலமெறட்டல் வருது..ஹா..ஹா..

  // நாஞ்சிலார்க்கு இப்ப தல கால் புரியல, //

  அது வந்து....வந்து...ஆமா சொல்லவா...இல்லைன்னு சொல்லவா...ஹி..ஹி.. நான் என்னைய சொன்னேன்..

  ReplyDelete
 40. @@@Jaleela Kamal --//

  வேலன் சார் பதிவு கண்டிப்பாக எல்லோருக்கும் பயனுள்ளது.

  மற்ற அறிமுகங்களும் அருமை.//

  ஆமாங்க அவ்வளவு ஈஸியா இருக்கும் ..

  //சசி தம்பி போடும் பதிவுகள் அனைத்து பிளாக்கருக்கும் பயனுள்ளது//

  . ஆமாம் ..ஆனா கொஞ்சம் கேப் குடுத்து போட்டா நல்லா இருக்கும்..உங்கள் வருகௌக்கு ரொம்ப நன்றி

  ReplyDelete
 41. @@@அப்துல்மாலிக் --//
  Vazhthukkal..! //

  வாங்க அப்துல் ..சந்தோஷம் .உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 42. @@@ வேலன்--//

  நன்றி நண்பரே.தங்கள் அறிமுகம் படுத்தியமைக்கு நன்றி...
  வாழ்க வளமுடன்.
  வேலன். //

  வாங்க சார்..!! சந்தோஷம்..உங்கள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 43. @@@Starjan ( ஸ்டார்ஜன் )--//

  Super.. //

  வாங்க ஷேக்..!! சந்தோஷம் ..உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 44. @@@ எம் அப்துல் காதர்--//
  @@@ இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இன்று முதல் எங்கள் தலைவர்
  "ஜெய்லானி"க்கு எல்லோரையும் பெருமையுடன் அறிமுகப்படுத்தி மகிழ்ந்த தன்னிகரில்லா தலைவருக்கு
  *******************************
  "வலை ஞாநி ஜெய்லானி"
  என்ற பட்டத்தை, கொடுத்து மகிழ்கிறோம்.
  *******************************
  இப்படிக்கு

  எம் அப்துல் காதர்(ஆஹா பக்கங்கள்)

  வருத்தமில்லா வாலிபர் சங்கம்
  தம்மாம் கிளை,சவுதி அரேபியா //


  வாங்க அப்துல்..!! இதென்ன கிளைன்னு போடாம நேரடியா சங்கமுன்னு ?ஆஹா..அங்கே உண்டியல டப்பா எதுவும் வைக்கலையே..ஹி..ஹி..

  ReplyDelete
 45. @@@ எம் அப்துல் காதர்--//

  இன்றும் வானிலையின் அறிமுக மேகங்கள் மிதமாகவும் தட்ப வெப்ப மில்லாமலும் இருந்தது. உங்களுக்கும் அறிமுக(மாகி அறிமுக)மான அனைவருக்கும் நல் வாழ்த்துகள்!! //

  வாங்க சார்..!!சந்தோஷம்..உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 46. @@@ஸாதிகா--//
  அசத்தல் அறிமுகங்கள்.உங்கள் இருபிடத்திற்கு வர நினைக்கும் ஒரிரண்டு நட்புகள் கூட இந்த பதிவஇன் கடைசி பாராவைப்பார்த்தால் எஸ்கேப் ஆகிவிடுவார்கள். //

  வாங்க ஸாதிகாக்கா..!! எப்பவும் இப்பிடி இல்லை எப்பாவது இப்பிடி ஆகிடும் ..அப்போ நீங்க வந்தா வரும் போதே கையில சீனியை கொண்டு வந்திடுங்கே ஷாசே பாக்கெட்டா இது நல்ல ஐடியாவா இருக்கே..!! ((இப்படி சொன்னாவும் விருந்தாளிங்க வருவாங்களா என்ன..)) ஹி..ஹி..உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 47. @@@ஜிஜி --// புதியவளான என்னையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி..கண்டிப்பாக அனைத்து பதிவுகளையும் படிக்கிறேன்..//


  வாங்க ஜிஜி..சந்தோஷம்...உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 48. @@@ஜெஸ்வந்தி--//நல்ல வாசனையான மசாலா . நன்றி ஜெய்லானி .//

  வாங்க மேடம்..!! சந்தோஷம்..உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 49. @@@சேட்டைக்காரன்--//

  இவ்வளவு அருமையான பதிவர்களுடன் என்னையும் சேர்த்துப் பெருமைப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஜெய்லானி! //

  வாங்க சேட்டை..!!உங்க பிளாக் என் ரீடரில் கிடப்பதில்லை அதான் தொடர முடியாமல் இருக்கு..உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 50. அனைத்து அறிமுகங்களையும் நகைச்சுவையாய் செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  //சமையலில் என்னந்தான் காய்கறி , பருப்பு , மட்டன் ,சிக்கன் போட்டாலும் அதை அப்படியே சாப்பிடமுடியாது .அதுக்கு சில மசாலா பொடிகள் சேர்க்க வேண்டி வருது...//

  இதுமாதிரி மசாலா பொடிக்கு ஒப்ப என்னையும் அறிமுகப்படுத்திய
  ஜெய்லானி அவர்களே, மிக்க நன்றி!

  ReplyDelete
 51. @@@ Ananthi--//

  ///.((இப்பதான் புரியுது ஏன் ஃபிரண்ட்ஸ வீட்டுக்கு கூப்புட்டா வர பயப்படரானுகன்னு)) அவ்வ்வ்வ்வ்
  மீண்டும் சந்திப்போம் :-))////


  ஆஹா... இம்புட்டு தெளிவா சொன்ன பிறகு..மீண்டும் சந்திக்கறதா.....??? //

  வாங்க ..!!வாங்க..!!ஏன் பயப்படறீங்க .தைரியமா வாங்க..

  // ஹ்ம்ம் ஹும்ம்ம்ம்... ஒரு முடிவோட தான் திரியுறீங்க.. ஜெய்.. :-))) //

  ஹா..ஹா.. ஏன் இந்த கொல வெறி


  அறிமுகங்கள் எல்லாம் நல்ல இருக்குங்க..

  தொடருங்கோ...!! //


  ஹா..ஹ..சந்தோஷம்..உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 52. வலைப்பூவின் பயன்பாட்டு பெயரையே மறந்து தேடிக் கண்டுபிடித்தேன். அவ்வளவு நாட்களாக வலைப்பக்கமே வராமல் இருந்த என்னையும் திரும்ப இழுத்து வந்து விட்டது உங்களின் அறிமுகம். மிக்க நன்றி என்னை உணரச் செய்தமைக்கு.
  நன்றிகள் பல.

  ReplyDelete
 53. நன்றி
  ஜெய்லானி என்னைபற்றி உங்களின் பார்வைக்கு
  நிச்சயம் உங்களில் கருத்து எனக்கு பயன்படும் ஒன்று

  ReplyDelete
 54. @@@ மங்குனி அமைசர்--//
  இது நேத்து போட வேண்டிய கமன்ட் , நேத்து நான் கொஞ்சம் ஆணி புடுங்கிகிட்டு இருந்தேன் , அதான் இன்னைக்கு போட்டேன் ரொம்ப சாரி பிரண்ட்ஸ் //

  வாய்யா மங்கு..!! உனக்கும் ஒரு நாளைக்கு ஆணி அடிச்சதான் சரி வரும் போல இருக்கு


  // "ஜெய்லானி உன்கிட்ட எனக்கு புடிச்ச விசயமே , வாங்குன காசுக்கு வஞ்சகம் இல்லாம நீ செயல்படுறது தான் , ரொம்ப நன்றி ஜெய்லானி , அமவுண்ட் உன் அக்கவுன்ட்டுல கிரடிட் ஆனா ரிசிப்ட் எனக்கு வந்திருச்சு . (பட்டா ஆனாலும் நம்ம ஜெய்லானி குடுத்த காசுக்கு மேலே டபுள் மடங்கா கூவுராண்டா ) "//


  ச்சே..இப்பிடி பப்ளிக்குல மானத்தை வாங்குறியே...இரு உன்னை அங்கே வந்து வச்சிக்கிறேன் :-))
  உங்கள் வருகைகு நன்றி

  ReplyDelete
 55. @@@ NIZAMUDEEN-//

  அனைத்து அறிமுகங்களையும் நகைச்சுவையாய் செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.//

  வாங்க் நிஜாம் ..!! சந்தோஷம்

  //சமையலில் என்னந்தான் காய்கறி , பருப்பு , மட்டன் ,சிக்கன் போட்டாலும் அதை அப்படியே சாப்பிடமுடியாது .அதுக்கு சில மசாலா பொடிகள் சேர்க்க வேண்டி வருது...//

  இதுமாதிரி மசாலா பொடிக்கு ஒப்ப என்னையும் அறிமுகப்படுத்திய
  ஜெய்லானி அவர்களே, மிக்க நன்றி! //

  :-)))) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

  ReplyDelete
 56. @@@ செந்தமிழ் செல்வி--//

  வலைப்பூவின் பயன்பாட்டு பெயரையே மறந்து தேடிக் கண்டுபிடித்தேன். அவ்வளவு நாட்களாக வலைப்பக்கமே வராமல் இருந்த என்னையும் திரும்ப இழுத்து வந்து விட்டது உங்களின் அறிமுகம். மிக்க நன்றி என்னை உணரச் செய்தமைக்கு.
  நன்றிகள் பல //

  வாங்க க்கா..!! சந்தோஷம் நீங்க மறந்தாலும் நான் மறக்கலை :-))).உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 57. @@@ஹாய் அரும்பாவூர்--//

  நன்றி
  ஜெய்லானி என்னைபற்றி உங்களின் பார்வைக்கு
  நிச்சயம் உங்களில் கருத்து எனக்கு பயன்படும் ஒன்று //

  வாங்க ..!!சந்தோஷம்.. உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 58. ஜெய் ....நிறைவான தேடலுடன் உங்கள் பணி சிறப்பாய் இருக்கிறது.

  ReplyDelete
 59. என் உலகை இங்கு அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி ஜெய்லானி. ;)

  நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்து வலைப்பூக்களையும் ஒரு முறை வலம் வந்து விட்டேன். நன்றி.

  ReplyDelete
 60. @@@ஹேமா-//

  ஜெய் ....நிறைவான தேடலுடன் உங்கள் பணி சிறப்பாய் இருக்கிறது.//

  வாங்க குழந்தை நிலா..!! ரொம்ப சந்தோஷம் ..உங்கள் வருகைக்கு நன்றிங்க

  ReplyDelete
 61. @@@இமா--//

  என் உலகை இங்கு அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி ஜெய்லானி. ;) //

  வாங்க மாமீ..!!சந்தோஷம் :-))

  // நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்து வலைப்பூக்களையும் ஒரு முறை வலம் வந்து விட்டேன். நன்றி.//

  நீங்க யாரூ பூலோக .....(((ஒன்னுமில்ல உலகம் சுற்றும் வாலிபி ன்னு சொல்ல வந்தேன் ))..ஹி..ஹி....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

  ReplyDelete
 62. ///வலை ஞாநி ஜெய்லானி"
  என்ற பட்டத்தை, கொடுத்து மகிழ்கிறோம்.
  *******************************
  இப்படிக்கு

  எம் அப்துல் காதர்(ஆஹா பக்கங்கள்)//
  நானும் அதை வழிமொழிகிறேன், நாட்டாமை.


  வருத்தமில்லா "வாலிபர்" சங்கம்
  நீங்கள் வாலிபரா?
  haha....

  ReplyDelete
 63. மிக நன்று
  நிறைய பதிவுகளையும்
  அதன் உள்ளுறைகளையும்
  மிக எளிதாக அறிமுகம் செய்வதற்கு நன்றி
  மற்றும் உங்கள் சிறந்த பணி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 64. மிக நன்று
  நிறைய பதிவுகளையும்
  அதன் உள்ளுறைகளையும்
  மிக எளிதாக அறிமுகம் செய்வதற்கு நன்றி
  மற்றும் உங்கள் சிறந்த பணி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 65. நல்ல வாசனை மசாலா நன்றி ஜெய்லானி

  ReplyDelete
 66. ஜெய்! வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி!

  எல்லா வலைப்பூக்களும் அருமை! கம கம கமவென வாசம் வருதே ! ( கமல் ஸ்டயிலில் படிங்க)

  ReplyDelete
 67. என்னையும் நினைவு வைத்து வலைசரத்தில் அறிமுக படுத்தியதுக்கு மிகவும் நன்றி சகோ...நான் ஒரு வாரமா பதிவுலகம் பக்கம் வரவில்லை....இப்போதுதான் பார்கிறேன்...அனைத்து தளங்களும் அவசியம் படிக்க வேண்டிய தளங்கள் தான். அதில் ஒன்றாக என் தளமும் இருப்பதில் மகிழ்கிறேன்.

  மீண்டும் நன்றி சகோ.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது