07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஜெய்லானி.. Show all posts
Showing posts with label ஜெய்லானி.. Show all posts

Sunday, September 26, 2010

ஆத்தா நா பாஸாயிட்டேன்---ஏழாம் நாள் (விடை பெறுதல் )

             ஒரு வாரம் எப்படி ஓடியதே தெரியல .இங்கு நிறைய பேரை அறிமுகம் செய்ய ஆசைதான் .என் ஒருவனால் மட்டும் இது முடிகிற காரியம் இல்லை. அதுவுமில்லாமல்  அடுத்து வருபவர்க்கும் இடம் வைக்கனுமே. அதனால் இதில் இன்னும் சிலரை மட்டும் அறிமுகம் செய்கிறேன் ( பின்னால யாரோ முனகும் சத்தம் கேக்குது)

சைவகொத்துப்பரோட்டா -  இந்தகிரீன் பார்க்படிக்கும் போது  சிலநேரம் இப்படியும் வருமான்னு தோனுது

சூர்யா கண்ணன்  இவரும் தமிழில் அனைத்து கம்ப்யூட்டர்  டெக்னிக்களையும் எழுதி வருகிறார்...

சாமக்கோடங்கி ... -  இவரின்  கார்பன் சுவடுகள்  மனதில் ஒரு பயம் வருவதை கானலாம்.

உபுண்டு -  நாம அதிகம் உபயோகிக்கும் விண்டோசை விட இது ரொம்ப நல்லா இருக்கு .சில சஃப்ட் வேர்  மட்டுமே இதில் வேலை செய்யல. எதையும் புதுசா என்னை மாதிரி டிரை பண்ணுபவர்க்கு இது பெஸ்ட்

இதயம் பேசுகிறது -  இதுவும் ஒரு வித இலுப்பை பூவும் இன்ஸ்டன்ட் காப்பியும் ! மாதிரிதான் தெரியுது


ILLUMINATI -  ஆங்கில .படங்களை பற்றி  தமிழில் எழுதுகிறார்


பனன்காட்டுநரி -  இப்படியெல்லாம் பேர் இருக்கு என்னசெய்ய ஆனா சில மனிதர்கள் எனும் மிருகங்கள்    தெரிஞ்சுக்க வேண்டிய பதிவு


"ஷ‌ஃபிக்ஸ்" -இதில எப்படி அணுகலாம்?  


              எந்த வேலையை செய்தாலும் அதை நேர்த்தியாக செய்யனும் என்பது  எனது கனவு..ஆனால் அதில் சிலநேரம் தவறாக கூட முடிந்து விடும்.  இதில(( வலைசர விதிகளில் ))    ஏதாவது மாற்றமாக  .இல்லை மீறி இருக்கிறேனா தெரியாது. தலைவர் வந்து சொல்லும் போதுதான் தெரியும். .இது வரை இதில் தொடர்ந்து ஆதரவு கொடுத்த  அனைத்து வலையுலக சகோதர , சகோதரிகளுக்கும் ,மற்றும் இதன் ஆசிரிய குடும்பத்தாருக்கும் , இங்கு வாய்பளித்த சீனா அய்யா அவர்களுக்கும்   என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்
மேலும் வாசிக்க...

Saturday, September 25, 2010

மசாலா மிக்ஸ் --ஆறாவது நாள்

      டிஸ்கி முன்னாலேயே சொல்லிக்கிறேன் வார்த்தைகள் இதுல என்னோட ஒரிஜினல் கமெண்ட்  ஸ்டைலில வரும் .. நோ சீரியஸ் , நோ ..டென்ஷன் பிளிஸ்.... ஹி..ஹி..
                       சமையலில் என்னந்தான் காய்கறி  , பருப்பு , மட்டன் ,சிக்கன் போட்டாலும் அதை அப்படியே சாப்பிடமுடியாது .அதுக்கு சில மசாலா பொடிகள் சேர்க்க வேண்டி வருது...அது மாதிரி தினம் ஒரு தலைப்புல போட்டாலும் சில பதிவர்கள் விட்டு போய்விடுகிறார்கள் .  ஏனென்றால் இது வேனுமின்னே செய்வது இல்லை..அவர்களை  எதில வகைப்படுத்து வதுன்னு ஒரு குழப்படி அதான்  ..எப்பவுமே நான் குழம்பிதான் அடுத்தவங்க்ளை குழப்புவது வழக்கம் .
                    இந்த பதிவில் இலவங்கம் , ஜாதிக்காய் , உப்பு , மிளகா மாதிரி அறு சுவையும் வரும்   பாருங்க ..
இரா பக்கங்கள் ஒரே மாதிரி விஷயங்கள எப்படி மாறுதுன்னு சொல்ற கட்டுரையா கவிதையா...?  யாருக்கு தெரியும்  வாழ்ந்திருத்தல்

அப்பு! உங்க ...உறவுகாரன்பா நானு!   இப்படி சொல்லிட்டு இதையும் வேண்டாமுன்னு சொல்ரார் என்ன செய்ய அவரைதான் கேக்கோனும் .



♥ப்ரியமுடன்......வசந்த் -ன் இந்த கதை நானும் நித்யாவும் காதலும் ! எதிர் பாராத சினிமா முடிவுமாதிரி ஆனா இல்லை


‘என்’ எழுத்து இகழேல்  எல்லாமே கொட்டி கிடக்குது ..பாட்டா, பிளாகர் டிப்ஸா, கவிதையா ,கட்டுரையா , மொத்ததுல ஒரு நந்தவனம்  மாதிரி . .வாத்தியாரம்மாவுக்கு மூளை அதிகம்



ஹாய் அரும்பாவூர் - எந்த சின்ன மேட்டர் கிடைத்தாலும்  அதை ஆராய்ந்து  பதிவு தேத்துவதில செம கில்லாடியான ஆள்


ஸ்டார்ட் மியூசிக்! -இது நம்ம பன்னிகுட்டியோட பிளாக்  ஆட்டத்தை பாருங்க, இப்பதான் வளர்ந்து வருது .இன்னும் தெளிவாக நாள் பிடிக்குமோ


வேலன் -  எல்லாருக்கும் புரியரமாதிரி  படங்களோட ஒன்னாம் கிளாஸ் வாத்தியார்  மாதிரி தெளிவா சொல்றார் . இவர்கிட்ட கத்துக்காட்டி அந்த ஆளை  ஒன்னும் பண்ண முடியாது. நேரம் அப்படி

சேட்டைக்காரன் -  பேருக்கேத்த மாதிரி  சேட்டை செம கெட்டி

விக்னேஷ்வரி    நகைச்சுவையும் , கொசு வர்த்தியும் கலந்து வரும் ரகம்


வார்த்தைச் சித்திரங்கள் -ஒரு வேளை டைரி தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க போல வீட்டில ரெண்டு நாளைக்கு ஒரு இடுகைன்னு  போட்டு தீத்துகிறாங்க கோவத்தை இந்த புது வரவு . வாழ்க வளமுடன்



வந்தேமாதரம் - இவருக்கும் அந்த வியாதியான்னு தெரியல படிச்சி முடிக்கும் முன்னே  அடுத்த இடுகை ரெடி.. ஆனா இவர் பிளாகர் டிப்ஸ்  ஸ்பெஷல்.

லினக்ஸ் -அருமையா சொல்றார் நம்ம வடுவூர் குமார் ஆனா எனக்குதான் மண்டையில  ஏற மாட்டேங்குது.  இவர்கிட்ட புத்திசாலி மக்கா நீங்கலாவது கத்துக்கோங்க


ருத்ரனின் பார்வை - இது நம்ம டாக்டர் ஐயா .பிளாக் ஆனா நான் விவேக் மாதிரி நைசா படிச்சிட்டு மட்டும் வந்துடுவேன் ராத்திரியோட ராத்திரியா இவருடைய் பதிவை  .


யாவரும் நலம் -இவங்க வெளியூரு போவதை பார்தால் நமக்கும் ஆசையாவரும்  டிக்கிலயாவது உட்கார்துகிட்டே போகலாமுன்னு. அழகா சொல்வாங்க .


மௌனராகங்கள் -இவங்க சொல்ரதை பார்த்தா  ஏன் எல்லாரும் மரத்தை  வெட்றாங்கன்னு இப்பதான் புரியுது


மலர்வனம் - ஆனா ஒன்னு வருடாந்திர பொருட்களின் அளவுகள்.
சரியா இருந்தா எப்படி சிக்கனமா சுவையா செய்யலாமுன்னு சொல்லும் விதம் சூப்பர் .. ஆனா மொத்தமா வாங்கினா டப்பா டான்ஸ் ஆடிடாதா என்ன.?

ப்ரியா கதிரவன்  இவங்க பயம் இவங்களுக்கு வெட்டுக்கிளி(என்னை தேடுதே)
ஆனா எனக்கும் தேடுதே எங்கே போய் தேட


பொன் மாலை பொழுது  எனக்கு இவரது பதிவுகளியே ரொம்ப பிடிச்சது  இதுதான்  நான் அந்த தப்பை இதுவரை செஞ்சதில்லை .ஆனா நடப்பதை என்னி சிரிப்பேன் அடிக்கடி .. ஏன்னா அதான் அடிக்கடி நடக்குது இங்கே..

பிரியாணி - கலந்து கட்டி அடிச்சிகிட்டு இருந்த வங்களை ( ? ) ரொம்ப நாளா கானோம் . வரட்டும் அதுவரை அரபி காரங்க மண்டையும், அதுல உள்ள கொண்டையும்.. பாத்துகிட்டு இருக்கலாம்


பாடினியார் -  இது அறிவொளி இயக்கம் சாதித்தது என்ன?  என்ற நல்ல பதிவு .இது மாதிரி யாரும் ஏன் போடமாட்டேங்கிறாகன்னு தெரியல ..


நிஜாம் பக்கம் பல்சுவை பக்கம்   இவரின் வானொலி குறுக்கெழுத்துப் போட்டி! அனுபவத்தை பார்த்துட்டு எதை நம்புவது எதை நம்பகூடாதுன்னே புரியல


அலைவரிசை - எப்போ எதுன்னு தெரியாம எல்லாமே வரும்


நாஞ்சில் எக்ஸ்பிரஸ் - போடரது மொக்கைன்னு புரியாம சிலர் சீரியஸான கமெண்ட போடற ஆளும் இருக்கு அதுல ."எந்தி"ரனும், "எந்தி"ரிக்காதவனும்...

தெரியாததை தெரிந்து கொல்வது  தமிழ் தகறாரு செய்தாலும் சரியாய் நச்ன்னு அடிக்கும் இவரது பதிவு இறப்பு


தின சிந்தனை - நாம  நம்மை ரிஃபெரஷ்  செய்ய உதவும் சின்ன இடுகைகள்


இது இமாவின் உலகம் -  இவரின் உலகமே தனிதான் போட்டோ கிராபி , கை வண்ணம்  , எல்லாத்தயும் கலந்து செய்த கலவை ..பெண் கமல்ஹாசன்    மாதிரி.

என் பக்கம் - இவங்களும் அதே மாதிரி  ஆனா ஒரு மாசமா ஆளையே கானோம். தேடுதல் வேட்டையும் ஒரு பக்கம் நடக்குது..


இதயம் பேசுகிறது -  பிளாக் நல்லாவே பேசுகிறது   படித்தேன் ரசித்தேன் !..

மனதோடு மட்டும் -   குடும்ப விவகாரத்துறை  கொஞ்சம் அதிகமா இருக்கும் அவ்வளவுதான் . ஆள் ஜாலி  டைப் ஆனா பதிவுதான் சீரியஸாம் .
               ரொம்ப நாளா ரூம் பக்கமே வராதவனை கடைத்தெருவில் வச்சி பிடிச்சேன்  நான் .ஏண்டா ராஸ்கோல் ரூம் பக்கமே கானோம் .அந்த அளவுக்கு காசு அதிகம் வந்துடுச்சா, பழசெல்லாம் மறந்துட்டியா ன்னு கேட்டதுக்கு அமைதியா இருந்தவன் அப்புறம் மெதுவா சொன்னான் ..சரி நீ இவ்வளவு சொல்றே நான் வரேன் உன் ரூமுக்கு ஆனா வந்தா காஃபி , டீ , பச்சதண்ணி குடிக்க மாட்டேன் . இஷ்டமிருந்தா சொல்லு வரேன்னு கண்டிஷன் போட்டான்.
                      வந்துச்சே கோவம் எனக்கு அப்போ நீ வரவேண்டாம் போடான்னு திட்டிட்டேன் . அப்புறம் ரெண்டாவது நிமிஷமே கோவம் போயி ஏன் இப்படி அழிச்சாட்டியம் பண்ரேன்னு கேட்டேன் . அதுக்கு அவன் சொல்றான் .டேய்...சுலைமானி டீயில  ((  பால் சேர்காத டீ ,  )) சீனிக்கு பதிலா உப்பை போட்டு குடிச்சி பாத்துட்டு அப்புறம் எனக்கு போன் பண்ணி சொல்லுன்னு பதிலை கூட கேக்காம பயபுள்ள என்னா ஓட்டம் ஓடிட்டான் ..
                    அப்பதான் என் மரமண்டைக்கு லேசா புரிஞ்சுது...ச்சே முதல்ல சீனி பாட்டலை மாத்தனும் .இல்லாட்டி அதில மார்கரால பேராவது எழுதி வைக்கனு ம். வெளிநாடு வந்தும் திருந்தாட்டி என்னதான் செய்யறதான் . நா என்னை சொன்னேன் .((இப்பதான் புரியுது  ஏன் ஃபிரண்ட்ஸ வீட்டுக்கு கூப்புட்டா வர பயப்படரானுகன்னு)) அவ்வ்வ்வ்வ்
                        மீண்டும் சந்திப்போம்  :-))
மேலும் வாசிக்க...

Friday, September 24, 2010

சிரிக்கலாம் வாங்க --ஐந்தாம் நாள்

         இந்த பூலோகத்துல  சிரிக்க தெரிஞ்ச உயிரினம் மனுஷந்தாங்க ..அதே மாதிரி சிரிப்பா சிரிக்கக் கூடியதும் மனுஷந்தாங்க..   அப்போ குரங்கு சிரிக்கலையான்னு யாரும் கேள்வி கேக்கக்கூடாது (( டால்ஃபினும் சிரிக்கிறதா சொலறாங்க )) ஏன்னா அது சிரிக்காது.ஈ....ஈ...ன்னு இளிக்கும் .நாமளும் யாராவது ஃபிகர பார்த்தா சிலநேரம் அப்படி பண்ணி மாட்டிக்கிறது வழக்கம் தங்ஸ்கிட்ட.. .அதுவும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரீஈ.....ஈ....ஈ...ன்னு ..

         நாம சிரிக்கும் போது மட்டும்  மனசு லேசாகிறது..கவலை மேகங்கள் சிதறடிக்கப்படுகிறது.  வாழ்க்கை வாழ்வு நேரம்,  காலம் நீடிக்கப்படுகிறது.. அதனால எப்பவும் சந்தோஷமா இருப்பது முக்கியம் . அதுக்கு நல்ல ஹியூமர் சென்ஸ் உள்ள ஆட்கள் கூட நட்பு வைத்து கொள்வதும் , இல்லை நல்ல சிரிப்பு புத்தகம் ,  படம் பார்பதும் ரொம்ப அவசியம்  . அதே நேரத்துல  அதிக அளவு சந்தோஷமும் , துயரமும் ஒரு ஆளை இதய நோயாளியா ஆக்கிடும்


     இன்றைய  ஐந்தாம் நாளில் நல்ல சிரிப்பு  பதிவுகளை பார்க்கலாம் கொஞ்ச நேரம்  மனசு விட்டு சிரிக்கலாம் வாங்க

ஹா..ஹா...ஹாஸ்யம் -  பேருக்கேத்த மாதிரி  கோமாக்காவின் இட்லியின் அருமை  பெருமைகளை பாருங்கள் அவஸ்தை புரியும் 


வெளியூர்க்காரன்-னின் உச்சிமாங்காளி..

Just for Laugh -காயத்திரியின்  நானும் நாப்பது கொள்ளையர்களும் ரசிக்கவும் ,சிரிக்கவும் வைக்கிறது


Scribblings - இது வித்யாவின் வித்யாசமான  விண்வெளியில் விசயகாந்த்

அநன்யாவின் எண்ண அலைகள் -இவரின் பேச்சு வழக்கில் சிரிக்க வைக்கும் பேன்களும் சில பெண்களும்.

அவிய்ங்க -ராசாவின் நினைவில் ஆத்தா..நான் பிரபல பதிவர் ஆயிட்டேன்….

"ஆஹா பக்கங்கள்" -சிஷ்யப்பிள்ளையின்.(அப்படி சொன்னாதான் பிடிக்குமாம்)வியாழக் கிழமையானா வரும் ஜுரம்! !

எங்கே செல்லும் இந்த பாதை ..... -  கே ஆர் பி .செந்திலின் பயோடேட்டா  சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் .


என் இனிய தமிழ் மக்களே... -அன்னுவின்  அப்டேட்டும் ஒரு கதையும்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே -  இதில உப்புமா  சாப்பிட்ட கையோடு  இவரையும் பாருங்கள் பிய்ந்த பொட்டி பீதாம்பரம்

ஒண்ணுமில்லை.....ச்சும்மா - எம் எம் அப்துல்லாஹ்வின்  சின்ன ஒரு விஷயத்தை  சுவைபட சொல்லிய ஆxதிக்க பயங்கரவாதி குசும்பனே.. வெளியே வா.!

கவிப்பக்கம்(new)  கூட்டாக கலக்கிய  ஒரு சிரிப்பு

இடுகையூரில் ஒரு பதிவர் சந்திப்பூஊஊஊ


கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா டீச்சரின்  ஆண் பேச நினைப்பதெல்லாம் .......

கோகுலத்தில் சூரியன் வெங்கட்டின்   யதார்த்தம்..!!!

சிநேகிதன் -அக்பரின் மேனேஜரை டேமேஜர் ஆக்குபவர்களுக்கு

சிரிப்பு போலீஸ்   ரமேஸின் ராங்நம்பர்

பட்டாபட்டி...  இவரின்     10 நாளில் கோடிஸ்வரன் ஆவதெப்படி ?... நல்ல சிரிப்பு வெடி  .சில அரசியல் பதிவுகளை ( தேவையற்ற வார்த்தை ) தவிர்த்து  விட்டால் சிரிப்புக்கு பஞ்சமில்லை.


பட்டிகாட்டான் ( பட்டணத்தில்)     ஜேயின் அதிசயம்...ஆனால் உண்மை...

பூங்கதிர் தேசம்... - எல் போர்ட்.. பீ சீரியஸ்.ஆனா சீரியஸ் இல்லை டம்மி பீஸ் ஹி..ஹி.. இதிலே இப்படித் தான் முடியும் 

மங்குனி அமைச்சர் - இதில மட்டும் கொஞ்சம் எக்டிராவா தனக்கு தானே சூனியம் வச்சுகிறது இது தானோ ?

            ஒரு தடவை என் மனைவி கேட்டாள்,  ஏங்க அந்த பொண்ணு  நல்லா இருக்கு அதையே கல்யாணம் பண்ணிக்கன்னு உங்க ஃபிரண்டுகிட்டபோய்   பொய் சொல்றீங்கன்னு கேட்டள் . அந்த நேரம்  பார்த்து ஏதோ நினைவில இருந்த நான் ஏன் என் கல்யணத்துக்கு மட்டும் அவன் என்ன  உண்மையா சொன்னான் படுபாவின்னு  சொல்லிட்டேன்.  இதுல என்ன தப்புன்னே தெரியலை எனக்கு .  


         அப்புறமென்ன எனக்கு  ரெண்டு நாளைக்கு கொஞ்சம் நொண்டி நொண்டி நடக்க வேண்டியதா போச்சி  . வருத்த படாத வாலிபர்கள் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்ப்பா சகஜம்.
மேலும் வாசிக்க...

Thursday, September 23, 2010

கதை கேளு...கதைகேளு....நான்காம் நாள்

            சின்ன வயசுல யாரும் தாத்தா கிட்டையோ  இல்லை பாட்டிகிட்டயோ கதை கேக்காத ஆளே இருக்க முடியாது.. அப்பவே அவங்க அழகா கதை சொல்லியே தூங்கவச்ச  சம்பவங்களும் நடந்திருக்கும் ..

            எனக்கு சில தின  , வார பத்திரிக்கைகளை திறந்தாலே கொட்டாவி வந்து விடும் அவ்வளவு மரண மொக்கையா இருக்கும் அது .தூக்கம் வராத இரவுகளுக்கு இது ஒரு நல்ல பிரண்டு மாதிரி ,   அடுத்த பத்தாவது நிமிடத்துல யாராவது வந்து ரூம் லைட்ட அனைச்சாதான்  உண்டு .இல்லாட்டி அடுத்த நாள் காலை வரை  ஓடிக்கிட்டே இருக்கும்

           சில கதைகள் பெரிய புரட்சியே பண்ணியிருக்கு வரலாற்றில.. வலையுலகில  இன்னைக்கு மனதை தொட்ட சில கதைகளைப் பார்கலாம் 

மசக்கவுண்டனின் கிறுக்கல்கள்   இவர் பழைய காலத்து திருமண நிகழ்வுகளை சுவைபட கிராமத்து பாஷையில  (( நகரத்து பாஷைன்னு சொன்னா  டமில்ல சம்திங் ஏதோ டாக்கிங்  ஆமா ஐ நோ ))  சொல்வதை நாள் முழுசும்  கேக்கலாம்

ஹுஸைனம்மா    இது வீட்டுக்கதை   கேள்வியின் நாயகன் படிச்சிப்பாருங்கப் புரியும் ஹா..ஹா..

வெறும்பய -பேருதான் வெரும் பய ஆனா கதைய ஆரம்பிச்சதே இவருதான் இதையும் பாருங்க சரித்திரம் புரிபடும் 

முகிலனின் பிதற்றல்கள் படிக்கும் போதே ஆர்வததை தூண்டியது  இந்த
உறவுகள்

பித்தனின் வாக்கு -  பேருதான் இப்படி ஆனா சிந்து சமவெளியில் ஒருவன் சொன்ன விதம் கலக்கல்


பாகீரதி   ஒரு மர்ம நாவலை படித்த திருப்தி  பாவத்தின் பரிசு

நாடோடியின் பார்வையில் - நல்லா எழுத ஆரம்பிச்சு   சில‌ துரோக‌ங்க‌ள்  
திடீர்ன்னு முடிச்சி நமக்கும்   பண்ணிட்டாரு  :-)


செ.சரவணக்குமார் பக்கங்கள் - இவருடையது எல்லாமே கதைதான் அதாவது  வாசித்தது நேசித்தது ..நாம தனியா புக் வாங்கி படிக்க வேண்டியதில்லை. இவருடைய  விமர்சனம் படிச்சாவே போதுங்கிற மாதிரி ஃபீலிங் .

குடந்தையூர் -  ஆர் வி எஸ்ஸின்  இருமன அழைப்பிதழ் 

சாந்தினி வரதராஜன்  இதில  பிடிச்சது  சாய்மனை கதிரை
 
அப்பாவி தங்கமணி -  ஆனா இவங்களின்  அதே கண்கள் பார்த்தா அடப்பாவின்னு சொல்ற மாதிரி இருக்கு.


Vanathy's -  மனசுக்கு பிடிச்ச கதாசிரியர் லிஸ்டில இப்போ இவங்களும் ஒன்னு. இதை படிச்சு பார்த்தா  இவங்க புதுசா இப்பதான் கதை எழுத ஆரம்பிச்ச மாதிரி தெரியல.. கதையின் தாக்கம் அப்படி இன்னும் அடி  மனசில ஓடுது..
   
ஆடுமாடு இதுல கொள்ளி
 
எம்.ரிஷான் ஷெரீப்  இவரிடம் தனியாகவே   எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள் ன்னு  முழு பிளாகே இருக்கு ..


சேட்டிலைட் டீ வி. வருவதுக்கு முன்னே  நிறைய நாவலகள் ,சிறுகதைகள் . பொழுது போகவும் , லெண்டிங் லைப்ரரிகளிலும் கிடைத்து வந்தது . ஆனா இப்போ பொழுதே கிடப்பதில்லை .  டீவீ சீரியலே பாதி  (? ) நேரமே நம்மை அழவச்சிகிட்டு இருக்கும் போது புக் வேர தனியா படிச்சி அழனுமா என்ன ஹி..ஹி..ஆனாலும் வலையுலகில் நல்ல கதைகளுக்கு பஞ்சமில்லை. தேடிப்ப்டிப்பதில் தனி சுகமே..!!
மேலும் வாசிக்க...

Wednesday, September 22, 2010

விருந்து இல்லை மருந்து--மூன்றாம் நாள்

           ””செவிக்கில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈ.....”” இதுமாதிரி யாரோ சொன்னாங்க ..இருங்க ..இருங்க ..இதை பத்தி கடைசியா சொல்றேன் .. சாப்பாடு ஒரு மனுஷனுக்கு  ரொம்ப முக்கியம் ... பசி வந்தால் பத்து இல்லை  ஆயிரம் இருந்தாலும் பத்தாது. நமக்கு பேப்பரா  முக்கியம் .. நடை பாதை கடைக்கு பத்து போதும் ..இருங்க அடிக்க வராதீங்க ..ஒரு இட்லி ஒரு வடைக்கு போதும்  இப்ப உள்ள விலைவாசிக்கு  , ஆயிரம் ஸ்டார் ஹோட்டலுக்கு. கூட இப்போ பத்தாது.

        உண்னும் உணவை மருந்து மாதிரி  சாப்பிடற வரை  வியாதி நம்மளை நெருங்காது ஆனா அதே அளவுக்கு அதிகமா  சாப்பிட்டா கட்டாயம் மருந்து சாப்பிட்டே ஆகனும்..தினமும் நாம் சாப்பிடும் அளவு முக்கியமில்லை  அதன் சத்து தரம்தான்  முக்கியமா இருக்கனும் .குண்டா இருப்பதும் நோய் லிஸ்டில வந்தாச்சு.

       சமையல்ன்னு சொன்னா அது நிறைய பேர் இது பெண்களுக்கு மட்டுமேன்னு தப்பா நினைச்சுகிட்டு இருக்காங்க .ஹோட்டல்களில் நூற்றுக்கு 99 பேர் சமையல் ஆண்கள்தான் .ஆனா அதை டேபிள சர்வ் செய்வது பெண்களா இருக்கலாம். வீடுகளில் அப்படியே தலைகீழா இருக்கும் .

     இதுல முக்கியமா நாம கவணிக்க வேண்டியது. ஒன்னுதான்  அது குடும்பத்தில பெண்கள் செய்யும் சிக்கனமா , சுவையா செய்யும் பக்குவத்துல அவங்க பக்கத்திலே கூட நாம  நெருங்க முடியாது..நா ஆம்லட் போட்டா கால் லிட்டராவது எண்னெய் வேனும் . வடை பொறிப்பது மாதிரி இருக்கும் .  இதே  வீட்டில அழகா சின்னதா ஒரு ஸ்பூனிலேயே ( ஙே..? ) சப்பாத்தி மாதிரி செஞ்சிடுவாங்க . கேட்டாஇப்போ  இருக்கிற கொழுப்பு  பத்தாதா இன்னும் வேனுமான்னு ஒரு நக்கல்  ( அவ்வ்வ்)இது ஆரோக்கியமா..இல்லை கிண்டலான்னே இன்னும் புரியல.
    ஓக்கே ..இப்ப வலையில கலக்கும் சமையல் பதிவர்களை பார்க்கலாம்..

சமையல் அட்டகாசங்கள் -  என்னுடைய முதல் ஓட்டு இவங்களுக்குதான் ..கிட்டதட்ட ஐந்நூறு  விதமான சமைய்ல குறிப்புகள இது வரை குடுத்திருக்காங்க .. யாரும் இது மாதிரி வலையுலகத்தில குடுத்திருக் காங்களான்னு தெரியல.... பேருக்கேத்த அட்டகாசம்..இவங்க செய்யாத ஐட்டமே  இல்லை

 சமைத்து அசத்தலாம் .  குறுகிய காலத்துல வேகமா போய்கிட்டிருகாங்க . சமயத்தில கவிதையும்  , கதையும் கூட இலவச இனைப்பா வருது.

CREATIONS - இது விஜிகிச்சனின் சமையல் கூடம் .சிலநேரம் போரடிகாம நமக்கு ஊரையும் சுத்தி காட்டுவாங்க.

என் இனிய இல்லம் - இவங்க சமையல் மட்டும் இல்லாம பெண்களுக்கு தேவையான அத்தனை கலைகளையும் கத்து தரவங்க .என்னுடைய இரண்டாவது ஓட்டு இவங்களுக்கு

SASHIGA    எப்பவுமே  கிச்சனுக்குள்ளேயே இருப்பங்களோன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் . வித விதமா சமையல் செய்வதில கில்லாடி. என்னுடைய மூனாவது ஓட்டு இவங்களுக்குதான்..

கலைச்சாரல்     இவங்களை ஒரு  கவிஞரா பார்த்தாலும் அரபி சமையல் வரை கலக்கலா வருது. சமையல் வாசனை ஊரை கூட்டினாலும் , என்னா ஒன்னு பார்ஸல்தான் வரமாட்டேங்குது.. ஹா..ஹா..  :-)

முத்துச்சிதறல் -  பலதரப்பட்ட கலைகள் கற்றவர்.. மலாய் குலோப்ஜாமூன் -னை ஒரு ஓவியம் மாதிரி செய்து காட்டியிருக்கிறார் . அமீரகத்தில் நிறைய வருட அனுபவமிக்கவர்.

திவ்யாம்மா    முதல்ல கேரட் ஹல்வா குடுத்தவர்  கொஞ்ச நாள்ளயே  கேரட் இல்லாம  குடுத்துட்டார்.. ஆளையே கானோம் ..வாங்க..

தமிழ்குடும்பம்  இங்கே போனா நிறைய பேரை பார்க்கலாம்.. சமையல் குறிப்புக்கள் எழுதும் பெண்கள்  ஒன்னு கூடும் இடம்

south indian dishes -  மலர் விழி எழுதுறாங்க ..ஆனா ஆங்கிலத்துல ..என்னால ஃபைன் , சூப்பர் இப்பிடி பீட்டர்  அடிக்க முடியாது .அதானால படிக்கிறதோட சரி..

Priya's Easy N Tasty Recipes -  இதுவும் ஆங்கிலத்திலேயே வரும் பதிவுகள்,,ஹி..ஹி.. ஒரு வேண்டுகோள் .தமிழிலும் கூடவே பதிந்தால் நல்லா இருக்கும்

Aparna's Kitchen--  தமிழ்ல எப்படி எழுதனு முன்னு இன்னும் தெரியல அதனால இந்த புத்தம்புது வரவை இந்த தடவை மன்னிச்சிடலாம். ””ஆத்தா வையும் சீக்கிரம் கத்துக்கோங்க “”    :-))

நித்து பாலாஇவங்களும் ஆங்கிலத்துலதான் அருமையான குறிப்புக்கள் தராங்க . இவங்க கிட்ட உள்ள சிறப்பு என்னனா .ஒவ்வொரு திங்கள் கிழமையும் ஒரு பெண் கலைஞரை பேட்டி எடுத்து அவங்களை அறிமுகப்படுத்துவது.

 அம்முவின் சமையல் -  நல்லா சமையல் செஞ்சிகிட்டு இருந்தவங்கள மூனுமாசமா கானல  ஒருவேளை ஊருக்கு போயிருக்கலாம்

ஆஹா என்ன ருசி...  பேரிலேயே  ஆஹா என்னே ருசின்னு சொல்ற மாதிரி சின்ன சின்னதா அழகா சொல்லி தறாங்க..நீங்களே பாருங்களேன்.

என் சமையலறையில் -வித்தியசமா ஒரு வெஜிடேரியனுக்காக காளான் பிரியாணி  செஞ்சிப்பாருங்க..டேஸ்டியா இருக்கும் .ஆனா நான் சாப்பிட்டதில்லை.
சின்னு ரேஸ்ரி  இலங்கையை சேர்ந்த இவரது மலேசியன் ஸ்டைல் ஹொட் சிக்கின்
என் சமையல் அறையில் - இவங்க செய்யும் சமையல்  வித்தியாசமா அதுக்கு சத்து விபரத்தை சொல்லிட்டு  போடும் முறையும் அழகா இருக்கும் . பார்லி எலுமிச்சை சாதம்.  சாப்பிட்டுதான் பாருங்க .திரும்பவும் கேப்பீங்க..


சமையலும் கைப்பழக்கம் -  இப்ப இரண்டு மாசமா ஆள கானேம் .இவங்களும் ஊருக்கு போய் இருக்கலாம்


Welcome to Mahi's Space... -  பேரை பார்த்து பயப்பட வேனாம் .ஆனா எழுதறது  சுந்தர தமிழிலதான் .. . என்னால எப்படியெல்லாம் பயந்து போய் செய்த  தயிர் பச்சடி யை பார்த்தா உங்களுக்கே புரியும்..ஹா..ஹா..

          இந்த வலையுலகில தேடி பார்த்ததுல ஓரே ஆண் சமையல் பிளாக் வச்சிருக்கிற  இவர்  செஞ்சது,  வெறும் வாசனையிலேயே வயிறு நிறைஞ்சது அது என்னன்னு சொன்னாராஜ‌ இறால் மிள‌கு வ‌றுவ‌ல் (Lobster pepper fry) இத்தனை பெரிய சைஸ்தான் கிடைக்கனும் விலை குறைவா 


          ஓக்கே இப்ப கேள்விக்கு வருவோம்..செவிக்கு உணவில்லாத போதுன்னா அப்போ..காதுகேக்காத , பிறவி செவிடுக்கு இந்த பழமொழி செல்லாதே...!! ஒரு பழமொழி சொன்னா அது எல்லாருக்குமே பொதுவா இருக்கனும் . இதையெல்லாம் யார்தான் கேப்பாங்களோ  . பசி ருசி அறியாது .ருசி வருதுன்னா அங்கே பசி இல்லை .. இங்கே சமையல் பதிவர்களை சொல்லிட்டு இதையும் சொல்றேன்னா அதுக்கு காரணம் இருக்கு.

           ஒரு தடவை  பேச்சிலர்ஸ்ஸா இருக்கும் போது ஆரம்ப புதுசுல குழம்பு வைச்சேன். சாப்பிட்டவங்க புளிக்குழம்பு ரொம்ப நல்லா இருந்துச்சின்னு பாராட்டி சாப்பிட்டு விட்டு ஆனா அதுல எப்படி  மீன் முள்ளா கிடக்குதுன்னுதான் தெரியலன்னு சொன்னானுங்க ..

         நான் சொன்னேன் ..அடப்பாவிங்களா இது மீன் குழம்புடா. ((  மீனை ஆரம்பத்திலேயே போட்டதுல கரைஞ்சி போய்ட்டுது. ))

மீண்டும் நாளைக்கு சந்திக்கலாம் .
மேலும் வாசிக்க...

Tuesday, September 21, 2010

ஜெய்லானி டிவியில் இன்று ஒரு கவிதை --இரண்டாம் நாள்

            வணக்கம் நேயர்களே  ஜெய்லானி டீவியில இன்னைக்கு சில முக்கிய நண்பர்களை நாம பார்க்கப் போறோம்  நமக்கு பொதுவா கவிதைன்னு சொன்னா  அந்த காலத்தில பாரதியார் , கவிக்குயில்  சரோஜினி நாயுடு இப்படி விரல் விட்டு என்னக்கூடிய ஆளைதான் தெரியும்..அதுக்கு பிறகு சினிமான்னு ( மீடியா ) ஒன்னு வந்ததும் தான் கொஞ்சம் பரவலா எல்லாருக்கும் தெரிய ஆரம்பிச்சது  யப்பா யாராவது சித்தர் அப்படி இப்படின்னு சொல்லி சண்டைக்கு வந்துடக்கூடாது .எற்கனவே டீவி நஷ்டத்துல ஓடுது.. ((ஒரு மாசம் கரண்டு கட் --இது எதிரிகளின் சதி ))


         கவிதை என்பது  எல்லாருமே  அத்தனை ஈஸியா எழுதிட முடியாது ..ஆனா சிலருக்கு வாயை திறந்தாலே  கவிதை கொட்டும் ....காரணம்  ரசிக்கத் தெரிஞ்சவங்களுக்கு கவிதை ரொம்ப ஈஸியா வருது. அது யாரை , எதைன்னு சொன்னா தவளை தன் வாயால கெடும்ன்னு சொல்றமாதிரி  என்னை நீங்க கேள்வி கேக்க ஆரம்பிச்சிடுவீங்க அனுபவம் அப்படி ஹி..ஹி..

       இன்னைக்கி சில கவிஞர்களை இங்கே  நாம  பார்க்கலாம்..

அன்புடன் ஆனந்தி -  இவங்க கொஞ்சம் நகைச்சுவையுடன்  நடு நடுவில கொஞ்சம் குழம்பி   கவிதையா  ஹாஸ்யமான்னு  பெண்டுலம்   மாதிரி  இருக்காங்க .ஆனா  உன் நினைவில்..கவிதையை படிச்சா  இவங்களையும் இந்த லிஸ்டில சேர்த்திடலாம். கவிஞர் தான் .


எழுத்தோசை   தமிழரசி  இவங்களோட இந்த   வெட்கம் பார்த்துட்டு எனக்கும் வெட்க  வெட்கமா  வந்துச்சின்னா பாத்துக்கோங்களேன்  பாருங்கள்  உங்களுக்கும்  பிடிக்கும்


முபீன் ஸாதிகா -  இவங்களோட எல்லாமே சுத்த தமிழ்ல இலக்கண சுத்தமா இருக்கும்.. அதனால தமிழ் பற்று உள்ள எல்லாருக்குமே  அவளகரம் அவனகரம் இது பிடிக்கும்

சோமாயணம் -  வித்தியாசமான பேர்தான் இன்னும் கொஞ்சம் டிரை பண்ணீனா  நல்லா வர சான்ஸ் இருக்கு மணசாட்சி  கொஞ்சமா குத்துதே..!!

வாரியர் ..இல்லாட்டி வாரியார் -  யாரு நம்ம தேவாதான்   கவிதை எழுதிட்டு புரியாதவங்களுக்கு மூனு ஆப்ஷன் குடுத்த வள்ளல் ..((எல்லாம் நம்ம தொல்லை தாங்காம தான் ) வெளி...! அது கவிதையா கட்டுரையான்னு நீங்க கேக்க பிடாது  ..  இவர்  என்ன கட்டுரை போட்டாலும் இவரை ஒரு கவிதையாளராதான் சரியா பார்க்க முடியுது..சிலநேரம் சாமியார் மாதிரி பேசுறார் அதான் பயமா இருக்கு..


அன்புடன் அருணா   இவங்க  எழுதுவது எளிய நடையில,,   கவிதையை   படிச்சா நமக்கும் அது போல வே எழுததூண்டும்  இதை பாருங்க கை விரித்துச் சிரித்தது மரம்!!

அன்புடன் நான்   கருணாகரசு அவர்கள் வாயை திறக்கும் போதே சிலதில் அனல் பறக்கும்  ,மென்மையும் இருக்கும்  இதில  காணாமல் போகும் முன் 

ஆயிரத்தில் ஒருவன்   சங்கர்  இலங்கையை சேர்ந்த  இவர் ஆரம்பத்தில நல்ல கவிதையா குடுத்தவர் ....  வெள்ளி கிழமையும் என் காதலும்      ஒரு வேளை கேட்டது கிடச்சுதான்னு தெரியல பயபுள்ள இப்ப கவித பக்கமே போவதில்லை ஆசை அதுவும் .அதுமேல ...பேராசைதான்

இந்திராவின் கிறுக்கல்கள்  புதியவர்  இன்னும் இவரிடம் எதிர் பார்க்கலாம் படித்தில பிடித்தது  நமக்கான நம் முகங்கள்  


ஹேமாவின் வானம் வெளித்த பின்னும்   முழு பிளாகும் கவிதையாவே இருக்கும் ..படிக்க படிக்க இனிமையா இருக்கும் .

என் உயிரே...! - அப்துல் மாலிக்கின் விளையாட்டாய் ஒரு முயச்சி   வலைப்பதிவுகளின் பெயரில் ஒரு கவிதை

கனவு பட்டறை..... - நடத்தி  அசத்தி வரும் சீமான் கனி இதில ராச்சஷி பூக்கள்...

காகிதஓடம் -  பத்மாவின் முத்தக் கப்பல்

சும்மா  வாவது பேருக்கு தலைப்ப வச்சிகிட்டு  இவங்க வாய திறந்தாலே அது கவிதைதான் . இவங்க எழுதுவதில எது நல்லா இருக்குன்னு தனியா  பிரிக்கிரது ரொம்ப கஷ்டம்  . யாரு நம்ம தேனக்கா தான்

நான் வாழும் உலகம்...! -  ரியாஸின் மனசு...! புரிகிறது...

விஜய் கவிதைகள்   இதில  விளிம்பு நிலை  என்ன சொல்ல....!!!!!!!!!

நிலாரசிகன் பக்கங்கள்  கவிதைகள் மென்மையாய்   பறவை வேடமிட்ட புல்லுருவி

கவிதை நேரமிது.   இது ஒரு அமைதிச்சாரலில் நடக்கும் ஒரு சாகசப்பயணம்...

நானும் என் கவிச்சாரலும்.   கானவில்லை என்ன செய்ய பாருங்க ஐ லவ் யூடா புருஷா

தியாவின் பேனா பேசுகிறது...படிக்கும் போதே வலிக்கும் தேவதைகள் உலவுகிற தேசம்

நிலா அது வானத்து மேல!  -ன்னு சொல்லிகிட்டு அப்படியே கவிதையில் அவ்வபொழுது பிரமிக்க வைக்கும் ஸ்டார் நான் கோவலன் அல்ல..   இப்பிடி சொன்னா நாங்க நம்பிடுவோமா .

நீரோடைபெயருக்கேத்த ஓடை இல்லை ..இது மலையருவி மாதிரி துள்ளும் , ஆடும் பாடும் சாதாரணமா எளிய நடையில் படிக்க முடியும்.. வலையுலகில் நான் படிக்க ஆரம்பிச்ச முதல் கவிதை பிளாக் இவங்கதான் ..குறிப்பிட்டு இது நல்லா இருக்குன்னு சொல்ல முடியாதபடி .எல்லாமே நல்லா இருக்கும்..

பலா பட்டறை ஷங்கருக்கு எதிர்  கவிதைகள் நல்லாவே வருது  மோதல்..

பனித்துளிச்சங்கர்   இவரின்  காதல் சிலுவைகள்   நல்ல ரசனையா இருக்கும்



    கவிஞர்களை பாராட்டி அவங்களுக்கு ஊக்கமா ஒரு கருத்துப் போட்டா அது அவங்களை இன்னும் நல்லா கவிதை எழுத வைக்கும்  .

.
       இவங்க கவிதைகளை படிப்பதாலோ என்னவோ எனக்கும் சில நேரம் மண்டைக்குள்ள பல்ப் சின்னதா கண் சிமிட்டும்.திரும்ப .நல்லா படிங்க எரியாது.. இதை என் மொக்கை பதிவுகளில் சில நேரம் போடுவேன் . பாத்துட்டு , படிச்சிட்டு பல பேர் எனக்கு ஸ்வீட்டு  பரிசா வாங்கி  தந்திருக்காங்க பார்ஸலும் வந்திருக்கு பாராட்டி  இன்னும் நிறைய எழுதுன்னு  சொல்லி இல்ல   இனிமே இப்படி எழுதி எங்களை கொல்லாதேன்னு... ஸ்வீட்ட பார்த்தா ஆசையாவும் இருக்கு..

             எழுதாட்டி இது கிடைச்சி இருக்குமான்னு ஒரு சந்தேகமாவும் இருக்கு. இப்படி இங்கேயும் என்னை சந்தேகம் கேக்க வச்சிட்டாங்களே..சில கவிஞர்களுக்கு ஸ்வீட் வாங்கி தருவதன் ரகசியம் ஒரு வேளை இதானோ..?

         பெண்கள் தன்னுடைய பணிச்சுமையின் நடுவிலும்  பிளாகில கொடிகட்டி பறப்பதை பார்க்கும் போது உண்மையில ஆச்சிரியமும் பெருமையும் தோனுது. ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னே ஆணும் இருக்கிறான் .அது ப்போல ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னே கண்டிப்பாக ஒரு பெண்ணும் இருக்கிறாள்...

       சரிங்க இந்த கவிதை ., கவிதைன்னு எழுதறவங்களுக்கு கமெண்ட் போடற எல்லாருக்குமே அந்த கவிதை புரிஞ்சுதான் கமெண்ட் போடறாங்களா..???  . ஹி..ஹி.. ஏன்னா ஒருத்தரோட கவிதையை படிச்சிட்டு (பேரெல்லாம் கேக்கப்பிடாது  , அவர் இங்கேதான் இருக்கார் ) ரெண்டு நாள் வேலைக்கு லீவு போட்டுட்டு  முழுசும் அழுதிருக்கேன் அது என்னான்னே  புரியாம..அவ்வ்வ்வ்வ்வ்

   எலேய்.மக்கா  கேமராவை மூடுலே  ஆள் அரிவாளோட வருதூஊஊஊஊஊ.எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
(    ஜெய்லானி டீவியில் திரும்பவும் பவர் கட் நாளை திரும்பவும் சந்திப்போம் )

  
மேலும் வாசிக்க...

Monday, September 20, 2010

அறிமுகம் --முதல் நாள்

       வலையுலக நண்பர்கள்  அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்
         வலைச்சரம் என்ற வலைக்குள் என்னையும் ஏற்றி அழகு பார்க்க வைத்துள்ளார் சீனா அய்யா அவர்கள். அவருக்கு என் முதல் நன்றி. எத்தனையோ பேராற்றல் படைத்தவர்கள் வந்து கலக்கி சென்ற இந்த இடத்தில் இப்போது நான் வந்திருக்கிறேன் ..இதற்கு முழு , பாதி , இல்லை இல்லை கால்வாசியாவது தகுதி  இருக்கான்னு என் உள் மனசு இன்னும் கேக்குது...
         ஆனாலும் முன்னே கால எடுத்து வச்சிட்டேன் ... இனி வழுக்கி விழுந்தாலும்  , ஓடி நடந்தாலும் (எப்படின்னு குறுக்கு கேள்வி கேக்க பிடாது.) ஒரு வாரம் இங்கும் சில மொக்கை தொடரும்..
          என்னை பத்தி அறிமுகம் என்ன சொல்றது ஆங்...மகா மொக்கை..பெரும்பாலான பிளாக் போய் எடக்கு மடக்கா ஏதாவது கமெண்ட போட்டுட்டு வரதுதான் வேலையே.. இது பத்தாம என் பேரிலேயே சொந்தமா ( நல்லா கவனியுங்க ) ஒரு பிளாக் வச்சி இம்சை குடுத்துட்டு வரேன் .நமக்கு மனசுக்கு பிடிச்சுதான் எழுதரோம் அதனால நான் எழுதினதுல எதுன்னு குறிப்பிட்டு சொல்ல முடியல
          நிறைய பிளாக்  படிக்க பிடிக்கும் ஆசையும்தான் ..ஆனால் நேரம் கிடைப்பதில்லை (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி வருது பாருங்க ) முதல்ல நாளே ஏதாவது சொல்லி உங்களை விரட்டி அடிக்க விரும்பல அதனால நல்ல (?) பிள்ளையா இப்போ போயிட்டு ..மீண்டும் நாளை சந்திப்போம்  வருவீங்கத்தானே..!!! .

இப்படிக்கு 
ஜெய்லானி , 
தலைவர் , வருத்தபடாத வாலிபர் சங்கம் .
ஷார்ஜா கிளை , யூ ஏ ஈ.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது