07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 29, 2010

நகைச்சுவை மலர்கள்

எழுத்தைக் கொண்டு பிறருக்கு என்ன விதமான நன்மைகள் செய்ய முடியும்? நகைச்சுவையாக ஒரு பதிவை எழுதி, படிப்பவர்களை கவலை மறந்து சிரிக்க வைத்தால், அதுவே ஒரு பெரிய நல்ல விஷயம் தானே? அப்படி நகைச்சுவையான நடையில் எழுதுபவர்களை பற்றிய தொகுப்பு இன்று.

ஜவஹர் சார் எழுதும் அனுபவ பதிவுகளில், எங்காவது ஒரு இடத்திலாவது வாய்விட்டு சிரிக்க வைத்துவிடுவார். உதாரணத்திற்கு, காரில் குறுக்கு வழியில் சென்ற அனுபவம் கூறும் இந்த பதிவை பாருங்கள்.

அம்மாஞ்சி என்ற வலைப்பூவில் எழுதும் அம்பி, எதை எழுதினாலும் அதில் அவருடைய நகைச்சுவையான நடை கண்டிப்பாக இருக்கும். ஐசிஐசிஐ விளம்பரம் பற்றி இவர் எழுதிய பதிவு, என்னால் மறக்க முடியாதது.

படங்களை போட்டு அதில் உள்ளவர்களை கலாய்ப்பது, சுகுமாரின் வேலை. ராமராஜனை எப்படி வாரியிருக்கிறார் என்று இங்கு சென்று பாருங்கள். விஜய்யை எஸ்.எம்.எஸில் கலாய்த்திருக்கிறார்கள். மெயிலில் கலாய்த்திருக்கிறார்கள். பதிவெழுதி கலாய்த்திருக்கிறார்கள். இவர் ப்ளாஷில் கலாய்த்திருக்கிறார்.

ரஜினியின் எந்திரனை தயாரித்த சன் பிக்சர்ஸ், அடுத்து கமலின் மருதநாயகத்தை தயாரித்தால் எப்படி இருக்கும் என்பதை பாலகுமார் இங்கே சொல்லியிருக்கிறார். யோசித்தே சிரியுங்கள். இவை நடந்தாலும் நடக்கும்!

இன்றைய பதிவுலக இலக்கியவாதிகளின் பழைய உண்மை வாழ்க்கையை ’ப்ளாஷ்பேக்’காக புட்டு புட்டு வைத்திருக்கிறார் குசும்பன் இப்பதிவில். இதை படிச்சிட்டு சிற்றிதழ், புத்தகக்கண்காட்சி என்றெல்லாம் பேச முடியுமா, என்ன?

’ஆஹா பக்கங்கள்’ அப்துல் காதர், மனைவியை கைக்குள் போட்டு கொள்வது எப்படி? என்பதை இப்பதிவில் விளக்கியிருக்கிறார். முடிவில் சீரியஸாக ஐடியாக்கள் கொடுத்திருந்தாலும், ஆரம்ப ஐடியாக்கள் ஜோர்.

நெகிழ வைக்கும் பதிவுகளை அவ்வப்போது எழுதினாலும், அவிய்ங்க ராசா துள்ளலான நகைச்சுவை எழுத்திற்கு சொந்தக்காரர். கல்யாண வீட்டு பந்தியில் அவர் பட்ட பாட்டை, இங்கே பாருங்கள்.

வெகுஜன பத்திரிக்கைகளில் தென்படும் நகைச்சுவை துணுக்குகள், வலையுலகிலும் காணக்கிடைக்கின்றன. கணவன் - மனைவி ஜோக்குகளை ஆண்டோ நாம் சிரிப்பதற்காக இங்கு பதிந்திருக்கிறார்.

இந்த கால பசங்ககிட்ட மாட்டிக்கிட்டு ஒரு வாத்தியார் படும் பாட்டை, இந்த பதிவில் ராஜ்குமார் கேள்வி-பதில் வகையாக எழுதியிருக்கிறார்.

இந்த வலைப்பூக்கள் உங்களை மகிழ்வித்திருந்தால், அந்த புண்ணியம் அந்த எழுத்துக்களின் சொந்தக்காரருக்கே போய் சேரும். அதனால், புண்ணியம் சேர்க்க இப்படியும் ஒரு வழியிருக்கிறது.

நாளை வேறொரு வகை பூக்களுடன், உங்களை சந்திக்கிறேன்.

.

9 comments:

 1. எழுதுவதில் மிக சவாலான விசயம் நகைச்சசுவையே. தெரிந்த தளங்கள் தான்.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. நகைச்சுவை பதிவர்களுக்கு பாராட்டுக்கள்.அட இந்த சிரிக்கவைக்கும் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. நகைச்சுவை மலர்கள் அருமை,
  நீங்கள் குறீப்பிட்ட நகைச்சுவை மலர்கள் எல்லாம் போய் பார்த்தேன். இதில் முன்று பேர் வலைகள் நல்ல அறிந்தது மீதி புது முகங்களுக்கும் இனி முடிந்த போது போய் பார்த்து படித்து சிரித்து கொள்ள்வேண்டியது தான்.
  புதிய நகைச்சுவை அறிமுகங்களுக்கு நன்றி குமரன்

  ReplyDelete
 4. மிக நல்ல தளங்கள் நன்றி!

  ReplyDelete
 5. நன்றிங்க சரவணகுமரன்... அனைத்து சுட்டிகளும் நன்று...

  ReplyDelete
 6. சரவணக்குமார் நன்றிங்க!

  நீங்க சொல்றதப் பார்த்தா கலக்கலா இருக்கும் போல இருக்கே. கண்டிப்பா எல்லா பதிவுகளையும் போய் பார்த்திட்டு வந்திடறேன் ஒரு நடை.

  நன்றி நண்பா!

  ReplyDelete
 7. பாருங்க ரமேஷ்...

  ஆமாம் ஜோதிஜி. நீங்கள் சொல்வது போல், சவாலான இவ்விஷயத்தை எழுதுபவர்களை பெரும்பாலோர் தெரிந்திருப்பார்கள்.

  நன்றி asiya omar.

  நன்றி Jaleela Kamal.

  நன்றி எஸ்.கே.

  நன்றி சுகுமார்.

  நன்றி வசந்தகுமார்.

  நன்றி கிருஷ்ணஜெயந்த்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது