07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 4, 2012

பைங்கிளியிடம் இருந்து ஸாதிகா பொறுப்பேற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே


அனைவருக்கும் வணக்கம்

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற தென்காசித் தமிழ்ப் பைங்கிளி - தான் ஏற்ற பொறுப்பினை வித்தியாசமான முறையில் - மன நிறைவுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் தினந்தினம் ஒரு பதிவரினைத் தேர்ந்தெடுத்து அவரின் பதிவுகளில் பலவற்றை அறிமுகப்படுத்தியபின், ஐந்து பதிவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பதிவுகளையும், புதிய பதிவர்களில் ஐந்து பேருடைய ஐந்து பதிவுகளையும் அறிமுகப்படுத்தி ஆக தினந்தினம் 11 பதிவர்களின் இருபது பதிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

தன்னுடைய சுய அறிமுகத்தினில் - தன்னுடைய சிறந்த 18 பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

இவரது பதிவுகள் : 7
அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்கள் : 67
அறிமுகப் படுத்தப் பட்ட பதிவுகள் : 138
பெற்ற மறுமொழிகள் : 145

பைங்கிளியினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நன்றி பைங்கிளி ; சென்று வருக பைங்கிளி

அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் வருகிறார் சகோதரி ஸாதிகா ஹாஜா .

இவர் "எல்லாப் புகழும் இறைவனுக்கே " என்ற தளத்தில் எழுதி வருகிறார்.1980 களில் பதின்பருவத்தில் இருந்தே பத்திரிகைகளுக்கு எழுதுவதில் அதிக ஈடுபாடு காட்டி வந்த இவருக்கு,கதை,கட்டுரை,கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். திருமணம்,குழந்தைவளர்ப்பு என்று இவருக்கும் ,பத்திரிக்கைக்குமான தொடர்பு சிறிதுகாலம் விட்டுப்போய் இருந்தாலும், மீண்டும் 2009 இல் இருந்து எழுத ஆரம்பித்து விட்டார்..தமிழ்நாட்டில் தென்கோடியில் பிறந்த இவர் இப்பொழுது குழந்தைகள் படிப்பு நிமித்தமாக புலம்பெயர்ந்து வசிப்பது சென்னையில்.

சகோதரி ஸாதிகா ஹாஜாவினை வருக வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் தென்காசித் தமிழ்ப் பைங்கிளீ

நல்வாழ்த்துகள் ஸாதிகா ஹாஜா

நட்புடன் சீனா26 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. பைங்கிளி சிறப்பாகயிருந்தது உங்கள் வாரம்,நல்வாழ்த்துக்கள் தோழி ஸாதிகா,அருமையான பகிர்வுக்கு காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 3. இந்த வார ஆசிரியர் பைங்கிளிக்கும், வரும் வார ஆசிரியர் பொறுப்பேற்று இருக்கும் ஸாதிகா அவர்களுக்கும் வாழ்த்துகள்....

  தொடரட்டும் வலைச்சர வாரங்கள்...

  ReplyDelete
 4. சாதிகா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. சீனா ஐயா,
  வலைச்சர ஆசிரியர் பணியினை இவ்வாரத்திற்கு தந்து வலையுலகில் இன்னும் அதிகம் என் பதிவுகள் பார்க்கப்படவும்,என் எழுத்துக்களின் வளத்தை மேலும் பெருக்கிக்கொள்ளவும் இந்த ஆசிரியர்ப்பணி கண்டிப்பாக துணை நிற்கும்.இந்த வாய்ப்பினை கொடுத்த தங்களுக்கும் மற்றும் வலைச்சர குழுவினருக்கும் என் அன்பின் நன்றிகள்!வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 6. மிக்க நன்றி ஆசியா.

  ReplyDelete
 7. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ வெங்கட் நாகராஜ்.

  ReplyDelete
 8. கடந்த வார வலைச்சர ஆசிரியர் பணியினை சிறப்புடன் நிறைவேற்றிய தென்காசித் தமிழ் பைங்கிளிக்கு வாழ்த்துக்கள்.வாழ்த்து தெரிவித்த தங்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 9. வாழ்த்துகள் அக்கா

  ReplyDelete
 10. ஸாதிகா அக்கா அருமையான ஆசியர் பொறுப்பு, கலக்குங்க கலக்குங்க இது உங்கள் வாரம்

  ReplyDelete
 11. பாராட்டுக்கள் பைங்கிளி. வாழ்த்துக்கள் ஸாதிகா.

  ReplyDelete
 12. அழகிய அறிமுகங்களை அள்ளித்தந்து வந்த பைங்கிளியொன்று மாயமாய் மறைந்து விட்டதில் [பறந்து விட்டதில்] வருத்தம் தான்.

  வருந்த வேண்டாம், என் பெயர் ஸாதிகா, நான் ஸாதிக்கவே இவ்வுலகில் பிறந்துள்ளேன். என் எல்லாப்புகழும் இறைவனுக்கே எனச் சொல்லி, ஸாதிகா அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது மிகவும் மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

  ஸாதிகாவின் ஸாதனைகள் வெற்றி பெற வாழ்த்துகள்.

  பறந்து சென்ற பைங்கிளிக்கும் நன்றிகள்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 13. பைங்கிளியுடன் கடந்த வாரம் நன்றாகச் சென்றது. இந்த வாரம் ‘நம்ம’ ஸாதிகாவுடன் தொடர்ந்து செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். மை ரெட் கார்ப்பெட் வெல்கம் டு ஸாதிகா!

  ReplyDelete
 14. தேடித் தேடிப் பல நல்ல வலைத்தளங்களை அறிமுகப்படுத்தியப் பைங்கிளிக்குப் பாராட்டுகள். தொடர்ந்து வரும் ஸாதிகாவுக்கு இனிய வரவேற்புகள்.

  ReplyDelete
 15. வாருங்கள் ஸாதிகா. வாழ்த்தி வரவேற்கிறோம்.

  ReplyDelete
 16. ஓ! ஸாதிகா! நேற்றே வரவேற்புக் கூறிட்டாங்க..நான் கவனிக்காமல் இருந்து விட்டேன்.திங்கள் பதிவு இப்போது தான் கருத்திட்டேன் இதையும் கண்டேன். நல்வரவு...சகோதரி.வாழ்த்தகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 17. கருத்துக்கு மிக்க நன்றி ஆமினா.

  ReplyDelete
 18. வ்ரவேற்புக்கு மிக்க நன்றி அப்துல்காதர்.

  ReplyDelete
 19. கலகல பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஜலி.

  ReplyDelete
 20. வாழ்த்துககளுக்கு மிகிக நன்றி சகோ நிஜாமுதீன்.

  ReplyDelete
 21. வி கே ஜி சார்.உற்சாக வற்வேற்புக்கும்,இனிய வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 22. சிகப்புக்கம்பள வரவேற்புக்கு மகிழ்ச்சிகலந்த நன்றி கணேஷண்னா.

  ReplyDelete
 23. வாழ்த்துக்களுக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றி வேதா திலகம்.

  ReplyDelete
 24. ஸாதிகா புதிய ஆசிரியர் பொறுப்புக்குக்குவாழ்த்துகள்.

  ReplyDelete
 25. இந்த வார ஆசிரியர் பைங்கிளிக்கும், வரும் வார ஆசிரியர் பொறுப்பேற்று இருக்கும் ஸாதிகா அவர்களுக்கும் வாழ்த்துகள்....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது