07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, March 16, 2012

ஆசை அன்பு இழைகளினாலே...
கல்யாணமெல்லாம் எப்படி நடந்துது அத்தை?
கல்யாணத்துக்கு நீயும் மதனும் வரலன்னுதான் எல்லாருக்கும் ஒரே குறை. ஆபிஸ் வேலை என்னிக்கும்தான் இருக்கும். நாளும் கிழமையுமா நாலு சொந்தக்காரங்களைப் பார்க்கிற வாய்ப்புக் கிடைக்குமா? பூச்சரம் பூங்குழலி குறிப்பிடுற பறவைக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?
அடுத்த விசேஷத்துக்கு வரப் பார்க்கிறோம்கல்யாணத்தைப் பத்தி சொல்லுங்க.
அது பிரமாதமா  நடந்துது. ஆனா பலபேருக்கு பல விஷயம் புரியிறதே இல்லை. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுன்னு வாழ்த்தினாலே ஒண்ணைப் பெத்தே ஒழுங்கா வளர்க்க முடியல, இதில் பதினாறு பிள்ளையான்னு கிண்டலடிக்கிறாங்க. பதினாறு பேறுகள் என்னென்ன அப்படின்னு அபிராமி அந்தாதியில் அழகாச் சொல்லப்பட்டிருக்குன்னு தேநீர் நேரத்தில் பிரதீபா எடுத்துக்காட்டியிருக்கிறதைச் சொல்லிட்டுவந்தேன்.

அர்த்தம் புரிஞ்சி யார் சொல்றா? பல சம்பிரதாயங்களுக்கே அர்த்தம் புரியாம தப்பு தப்பா செஞ்சிட்டிருக்கோம். திருமணச் சம்பிரதாயங்களுக்கு  ராஜராஜேஸ்வரி மேடம் சொல்ற காரணங்களைப் புரிஞ்சிகிட்டாவது இனி ஒழுங்கா செய்யணும்.
நீ சொல்றது சரிதான். முகூர்த்தக்காலைப் பார்த்ததுமே எனக்கு பக்குனு ஆயிடுச்சி. காலமே மாறிப்போய்க் கிடக்கு. கல்யாணம், பண்டிகைக் கொண்டாட்டம் எல்லாத்தையும்   கான்ட்ராக்ட்  பேசி  விட்டுடுறாங்க.  அம்பது வருஷத்துக்கு முந்தைய தன்னுடைய தலைதீபாவளி பத்தி குறை ஒன்றுமில்லை லக்ஷ்மியம்மா எழுதியிருக்கிறதையும் பாரு. இன்னிக்கு கொண்டாடுற தீபாவளியையும் பாரு. பலகாரமெல்லாம் வீட்டில் யார் செய்றா? எல்லாம் கடையிலதான்.
குரல் சக்தி எழுதியிருக்கிற பாக்கியலக்ஷ்மியின் தலைப்பொங்கல் அன்னிக்கு அவ முழிக்கிறதைப் பாருங்க. வெளிநாடுவாழ் தமிழ்க்குழந்தைகளுக்கு தை பொங்கல் எல்லாம் டை பொங்கலாப் போச்சு. யாவரும் நலம் சுசி எழுதியிருக்காங்க.
அதனாலென்ன? எப்படியிருந்தாலும் நம் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காம கொண்டாடுறாங்களேன்னு சந்தோஷப்பட்டுக்கணும்.

சரி, நன்னிலம் சின்னத்தை பேத்தி கமலாவுக்கு வரன் தகைஞ்சிதா? போனதடவையே முடியுறமாதிரி இருக்குன்னாங்க. 
அந்தக் கொடுமையை ஏன் கேக்குறே? கருப்பு, கருப்புன்னு எல்லாரும் சொல்றாங்கன்னு எவளோ சொன்னாள்னு ஏதோ கிரீமை வாங்கித் தடவி முகமே வெந்துபோய்க் கிடக்கு. பிரபலமான அழகுநிலையங்களிலேயே எவ்வளவு அலட்சியமா இருக்காங்கன்னு வார்த்தைச் சித்திரங்கள் ஜிஜி எழுதியிருக்கிறதைப் பத்தி சொல்லி எச்சரிச்சிட்டு வந்தேன். 
இன்னொன்னு தெரியுமா?  முகபாலிஷ்  பத்தி மழைமேகம் சுந்தரா சொல்றதைக் கேட்டால் பகீர்ங்குது... பாக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா பக்கவிளைவு என்னாகுமோன்னு யோசிச்சா பயமா இருக்கு 
முகம் பளிச்சினு இருக்கணும்னா ஆயிரத்தெட்டு இயற்கை மருந்து அடுக்களையிலேயே   இருக்குன்னு வனப்பு சந்திரகௌரி கூட நிறைய எழுதியிருக்காங்க. எதுவுமே இயற்கையா இருந்தாதான் அழகு. தோல் கருப்பா இருந்தா என்ன? மனசு வெள்ளையா இருந்தா பத்தாதா?  
தூரிகையின் தூறல் மதுமதியும் திராவிட நிறம்தான் பேரழகுன்னு  அருமையா கவிதை எழுதியிருக்கார் 
இது தெரியாம, சிவப்பு நிறத்துக்கு ஆசைப்பட்டு இப்ப உள்ளதும் போச்சுன்னு பார்க்கச் சகிக்காம நிக்கிறா. பெரியவ கதை இப்படின்னா சின்னவ செல்லமணி மவனைத்தான் கட்டுவேன்னு அவள் ஒரு பிரச்சனை பண்ணிட்டுக் கிடக்கிறா. சொந்தத்துக்குள்ள வேணாம்னு எவ்வளவோ எடுத்துச் சொல்லியாச்சி ரத்னவேல் நடராஜன் ஐயாவோட வலையில் பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் எழுதின இரத்தம் உறையா நோய் பத்தியும் கூட சொல்லிப் பயமுறுத்திப் பார்த்துட்டேன். ஒண்ணும் கேக்கிறபாடாத் தெரியல. அந்தக்காலத்துலன்னு வாயைத் திறந்தாலே அந்தக் காலப் பேச்சையெல்லாம் விடுங்க.. இன்னிய பேச்சைப் பேசுங்கன்னு வெடுக்குனு சொல்லிடுதுங்க. 
இதைத்தான் பொறுமை தொலைத்தப் பொழுதுகள்னு கசியும் மௌனம் ஈரோடு கதிர் சொல்லியிருக்கார்.பல பிள்ளைகளுக்குப் பழைய கதையெல்லாம் கேட்கப் பிடிக்கமாட்டேங்குது 
அப்பவெல்லாம் டிவி ஏது? கம்ப்யூட்டர் ஏது? கதை கேட்க நேரம் இருந்தது. விளையாட்டு சாமானும் இத்தனை விதம் கிடையாது. மிஞ்சி மிஞ்சிப் போனா பெண்குழந்தைகளுக்கு சொப்பு சாமானும், மரப்பாச்சி பொம்மையும் இருக்கும். சில வீடுகளில் மரக்குதிரை இருக்கும்.
இதைப்பத்தி ஹரணி பக்கங்களில் ஹரணி ஐயா எழுதியிருக்கார். மரக்குதிரை தாய்வீட்டுச் சீதனமா வருமாமே! மடலேறுதல்னு  கடிதங்கள் பத்தியும் சொல்லி ஆதங்கப்பட்டிருக்கார். அதனால்தான் காணாமல் போகுமுன் உனக்கொரு கடிதம்   எழுதுகிறேன்னு கடிதத்துக்கே கடிதம் எழுதியிருக்கார் அன்புடன் நான் சி.கருணாகரசு. முகவரிகள் எல்லாம் எழுத்திலிருந்து எண்களுக்கு மாறிவிட்டதால் உன் அழகே போயிடுச்சின்னு அவர் சொல்றது எவ்வளவு உண்மை. அதுவும் எஸ்.எம்.எஸ்னு இருக்கு பாருங்க. அதையே இன்னும் சுருக்கி குறியீடுகளாக்கிட்டாங்களாம்.  மழைக்காலத் தவளைகள் வலையில் ஆறுமுக வடிவேல் படம்போட்டுக் காட்டியிருக்கார்.
நாகரிகம் துவங்கிய காலத்தில் ஆப்பெழுத்துக்கள், சித்திர எழுத்துகள்னு எழுத ஆரம்பிச்சாங்க. முரண்சுவையில் கோவி எழுதிய மாயன்கள்  பத்திய பதிவிலும் சித்திர எழுத்துக்கள் இருக்கும் பாரு.
மறுபடியும் பழைய காலத்துக்கே போயிடுவோம் போல. அந்தக் காலத்தில் இறகுப் பேனாவைப் பயன்படுத்தியபோது பட்ட பாட்டை இலக்கியச்சாரல் சொ.ஞானசம்பந்தன் ஐயா எழுதியிருக்கிறதைப் படிக்கும்போது நாம் அப்படியெல்லாம் கஷ்டப்படலையேன்னு நிம்மதியா இருக்கு.
பேனாங்கவும் ஞாபகத்துக்கு வருது. நேத்து சின்னவளை பேனா எடுத்துட்டு வாம்மான்னா திருதிருன்னு முழிக்கிறா. எந்தலையில பேன் இல்லையே பாட்டிங்கிறா. அப்புறம் நவீன் சொல்றான், பாட்டி, அவளுக்குப் பென் அப்படின்னு சொன்னாதான் புரியும்னு. தமிழ் வார்த்தைகளே தெரியாம வளருதுங்க.
அதுக்காகத்தான் வானம் வெளித்த பின்னும் ஹேமா வழக்கொழிஞ்சிபோற வார்த்தைகளுக்காகவே  ஒரு கவிதை எழுதியிருக்காங்க.
ஹூம்இதையெல்லாம் படிச்சா ஆதங்கமாத்தான் இருக்கு. சின்ன வயசில் அண்ணனோடு லூட்டி அடிச்சது, அதோட சேர்ந்து மரம் ஏறி விழுந்ததுன்னு எல்லாம் நினைவுக்கு வருது. உனக்கும் எனக்குமிடையே விழுந்து கிடந்த மௌனம்னு மயூ மனோ நினைவுகளின் பிரதியில் எழுதின கவிதை மாதிரிதான் எங்க சின்ன வயசில் அத்தனைப் பிரியமா இருந்து இப்ப விலகிக் கிடக்கோம். அதெல்லாம் ஒரு காலம்...
உங்க அண்ணனை நான் பார்த்ததே இல்லை அத்தை.
அந்தப் பெட்டியில பழைய ஆல்பமெல்லாம் இருக்கும் பாரு. அதில் இருக்கும்.
பழைய புகைப்படங்களைப் பார்க்கிறதே ஒரு ஆனந்தம்தான். இந்தியா 1800 இல் எப்படி இருந்ததுன்னு கிராமத்துக்காக்கை   பல படங்களைப் பகிர்ந்திருக்கார். பார்க்கும்போதே நம்மை அந்தக் காலத்துக்கே  அழைச்சிட்டுப் போயிடுது. 
தெரியுதா? அதனால்தான் நான் அந்த ஆல்பத்தை எடுக்கிறதே இல்லை. எனக்கு அதைப் பார்த்தாலே பழசெல்லாம் நினைவுக்கு வந்து படுத்தும். பாரதிக்குமார் கதையில் சொல்றமாதிரி நிழலும் சுடும்கிறது   அதைப் பார்க்கும்போதுதான் புரியும். சிலதுதான் அப்படி. சில அமிர்தம் சூர்யாவோட குலதெய்வங்களின் ஆல்பம்   மாதிரி ஒவ்வொரு உறவா நினைக்கவச்சி சிலிர்ப்பூட்டும். ஹூம்  
(அம்மா பெருமூச்செரியும் வேளையில் அப்பா குறுக்கிடுறார். இனிமேல் இவங்கதான் பேசிக்கப் போறாங்க. மருமகள் வெறும் பார்வையாளர் மட்டுமே.)  
ஆரம்பிச்சாச்சா? எத்தனை வயசானாலும் பிறந்த வீட்டுப் பாசம் போவுதா பாரு. பிறந்தவீட்டுப் பெருமை பேசறேன்னு பெண்கள் படுத்துற பாட்டையும்  தன் சொல்லமுடியாத சோகத்தையும் வை.கோபாலகிருஷ்ணன் சார் தன்னோட பவழம் கதையில அழகா நச்சுனு சொல்லிட்டார். 
அது சரி.  காமாக்ஷியோட ஜிமிக்கி கதை படிச்சீங்களா? அதுல ஆம்பிளைங்க பண்ற அட்டகாசத்தை அழகா சொல்லியிருப்பாங்களே. இத்தனை வருஷமா நான் தினமும் வக்கிற குங்குமத்தோட நிறம் இன்னதுன்னு சரியாத் தெரியிதா உங்களுக்கு? என்னென்னமோ வாங்கிட்டு வந்து தருவீங்க.. இதோ பாருங்க, எங்க அக்கா எனக்காகவே வாங்கி வச்சிருக்கா.. சரியான நிறம். எப்பயோ பாக்குறோம், எப்படி ஞாபகம் வச்சிக்க முடியுது அவளாலே? அதான் பாசம். 
நான் மட்டுமில்ல. பொதுவாவே ஆண்களுக்கு நிறமெல்லாம் சரியா பிடிபடாதாம்அவிழ்மடலில் வண்ணங்களும் பெண்களும் பதிவில் ஆளுங்க தெளிவா எழுதியிருக்கார் பார். இனிமேலாவது என்னைக் குறை சொல்லாதே. புள்ளிக்கோலத்தில் சக்தி பொட்டு வைத்த முகம்   பதிவில் எழுதினமாதிரி நீயும் ஒட்டுப்பொட்டுக்கு மாறிடு. 
அதெல்லாம் எனக்கு ஒத்துவராது. நீங்க கவலைப்படாதீங்க. எப்பவும் போல என் மருமகளே எனக்கு பார்த்து வாங்கித் தருவா.  
மருமகளை நல்லாத்தான் ஐஸ்வைக்கிறே 
இதிலென்ன தப்பு? அவளும் நம்ம பெண் மாதிரிதான். சொல்லப்போனா பெண்ணை விடவும் ஒசத்தி. கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுக்கு அப்புறம் பெண்ணெல்லாம் விருந்தாளி மாதிரிதான். தொண்டை அடைச்சா, சட்டுனு தண்ணி எடுத்துக் குடுக்கிறவ இவதான். இவளைக் கொண்டாடுறதில என்ன தப்பு?  
நீ சொல்லவும் கே.பி.ஜனாவோட திறப்புவிழா  கதைதான் நினைவுக்கு வருது. அதுபோலவே நல்ல சாமர்த்தியம்தான் உனக்கும் 
இது சாமர்த்தியம் இல்ல. இதுதான் நிதர்சனம்.  எங்க கிளம்பிட்டீங்க?
ஒரு பெரிய பூசணிக்காய் வாங்கிட்டு வரேன்.
இப்ப எதுக்கு?
இவ்வளவு ஒத்துமையா இருக்கிற மாமியாருக்கும் மருமகளுக்கும் திருஷ்டி சுத்த வேணாமா? அதுக்குதான்.
கிண்டலைப் பாரேன்.


43 comments:

 1. நல்ல அறிமுகங்கள் தோழி. இராஜராஜேஸ்வ அவர்களின் வலைத்தளம் நீங்கள் கொடுத்த லிங்‌க்கை க்ளிக் செய்தால் ஓபன் ஆகவில்லை. என்னவென்று பாருங்களேன், ப்ளீஸ்! அறிமுகமான அனைவருக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. உரையாடல் மூலம் அழகாகத் தொகுத்துள்ளீர்கள்.

  ReplyDelete
 3. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கணேஷ்.

  இராஜராஜேஸ்வரி அவர்களுடையது மட்டுமல்ல, தூரிகையின் தூறலும் திறப்பதில் சிக்கல் உள்ளது. பலமுறை முயன்றும் சரிசெய்யமுடியவில்லை. சிறிதுநேரம் கழித்து மீண்டும் முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
 4. இதை இத்தனை அழகாக உழைப்பைச் சிந்தி செய்ய முடியுமா என்கிற மாதிரி மிக நூதனமாய் உங்கள் அறிமுகங்கள்!
  என்னுடைய எழுத்தையும் அறிமுகப் படுத்தியதற்கு அன்புடன் என் நன்றி!

  ReplyDelete
 5. ஆரம்பத்தில இருந்து கவனிக்கிறேன் கீதா.எத்தனை அறிமுகங்கள்.அதுவும் திறமையின் அடிப்படையில் வரிசைப்படுத்தும் உங்கள் அனுபவத் தேர்வு அசத்தல்.பிரமிப்பாவும் இருக்கு.உங்கள் அன்புக்கு நன்றி.இத்தனை பேருக்குள்ளும் நானும் ஒரு ஆளான்னு இருக்கு.
  நன்றி சகோதரி !

  ReplyDelete
 6. இன்றைய உங்கள் பதிவால் சில புதியபதிவர்களின் படைப்புகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. (குறிப்பாக, கோவி அவர்களின் பதிவ்கள்)

  பல நட்பு பதிவர்களின் தவறவிட்ட படைப்புகளைப் படிக்கும் வாய்ப்பையும் தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 7. மிக்க நன்றி!

  ReplyDelete
 8. நல்ல தொகுப்பு.

  ReplyDelete
 9. அறிமுகத்திற்கு மிக்க நன்றி .அதை உரையாடல் ஊடே நீங்கள் தொகுத்திருப்பது அழகு

  ReplyDelete
 10. நிறைய பதிவுகளை அறிமுகப்படுதியுள்ளிர்கள்.மாலையில் எல்லாவற்றுக்கும் ஒரு விசிட் அடித்துவிடலாம்.அனைவருக்கும் வாழ்த்துகள்.
  தேடித்தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 11. சிறப்பான அறிமுகங்கள்..

  ReplyDelete
 12. அருமையான அறிமுகங்கள்...
  நிறைய மெனக்கெடல் தெரிகிறது உங்கள் பதிவில்... தொடருங்கள்... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. ஆசை அன்பு இழைகளினாலே- இழைத்த அறிமுகங்களில் உங்கள் உழைப்பு தெரிகிறது. அறிமுகவர்களிற்கும், உங்களிற்கும் முதலில் வாழ்த்துகள். சகோதரி உங்கள் வாரத்திற்கு , அது இனிது நிறைவுற என் இனிய வாழ்த்துகள். இனி வரப்போகும அடுத்த வார ஆசிரியருக்கும் இனிய நல் வரவு. நான் இனி புதன் கிழைம தான் வலைச்சரப் பக்கம் வருவேன். என் கருத்திடலும் புதன் கிழமை தான் இருக்கும். நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 14. ஆசை அன்பு இழைகளினாலே- இழைத்த அறிமுகங்களில் உங்கள் உழைப்பு தெரிகிறது. அறிமுகவர்களிற்கும், உங்களிற்கும் முதலில் வாழ்த்துகள். சகோதரி உங்கள் வாரத்திற்கு , அது இனிது நிறைவுற என் இனிய வாழ்த்துகள். இனி வரப்போகும அடுத்த வார ஆசிரியருக்கும் இனிய நல் வரவு. நான் இனி புதன் கிழைம தான் வலைச்சரப் பக்கம் வருவேன். என் கருத்திடலும் புதன் கிழமை தான் இருக்கும். நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 15. உங்களின் அறிமுகங்கள் எல்லாம் முத்தாய் இருக்கின்றது வாழ்த்துக்கள் தொடருங்கள்!

  ReplyDelete
 16. அனைத்து அறிமுகங்களும் சிறப்பாக தொகுத்திருக்கீங்க. அதில் என்னையும் சேர்த்திருக்கீங்க. நன்றிம்மா.மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. //ஆரம்பிச்சாச்சா? எத்தனை வயசானாலும் பிறந்த வீட்டுப் பாசம் போவுதா பாரு. பிறந்தவீட்டுப் பெருமை பேசறேன்னு பெண்கள் படுத்துற பாட்டையும் தன் சொல்லமுடியாத சோகத்தையும் வை.கோபாலகிருஷ்ணன் சார் தன்னோட பவழம் கதையில அழகா நச்சுனு சொல்லிட்டார். //

  இன்று மீண்டும் என்னையும், என் சிறுகதை “பவழம்” என்பதையும் அனைவருக்கும் வலைச்சரத்தில் அடையாளம் காட்டிப் பிரபலப்படுத்தியுள்ளதற்கு என் அன்பான நன்றிகள்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 18. இன்றைக்கு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்துப் பதிவுகளுமே அருமை.

  அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  தங்களின் கடும் உழைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 19. நன்றி கீதா.மீண்டும் மீண்டும் புதிய தளங்களுக்கு விரல்பிடித்து
  இட்டுச் செல்லும் தேவதையே நன்றி .
  பிரமிப்பாக உள்ளது.இத்தனை வலைப்பூவிலும் நுணுகி நுணுகித் தேன்
  எடுத்துப் பாடம் செய்து பதமாகப் பரிமாறியிருக்கும் உங்கள் திறன்
  அன்பு... வாழ்க வளர்க!

  ReplyDelete
 20. நல்ல பதிவர்களை அறிமுக படுத்தியமைக்கு நன்றி

  ReplyDelete
 21. அழகான அறிமுகம். இவ்வளவு பேருள் நானுமா? மிக்க நன்றிங்க கீதா. நிச்சயம் எனக்குப் புதிதானவர்களின் பக்கங்களைச் சென்று பார்க்கிறேன்.

  ReplyDelete
 22. இப்போ என்னால இராஜராஜேஸ்வரியின் தளத்தைப் படிச்சுக் கருத்திட முடியுது. என்னையும் மதித்து உடனே கவனித்து சரி செய்தமைக்கு மிகமிக நன்றிகள் கீதா.

  ReplyDelete
 23. //தொண்டை அடைச்சால் சட்டுனு தண்ணி எடுத்துக் குடுக்குறவ //
  -இரசித்தேன்.

  அருமை.

  ReplyDelete
 24. இத்தனை அறிமுகங்களா வியப்பாக இருக்கிறது . பதிவாக்கிய தங்களை நினைத்து . வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. சிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.

  ReplyDelete
 26. @ விச்சு,

  தொடர்ந்து தரும் உற்கசாகத்துக்கு நன்றி விச்சு.

  @ கே.பி. ஜனா,
  தங்கள் வருகைக்கும் ஊக்கமிகுப் பாராட்டுக்கும் நன்றி.

  @ ஹேமா,
  தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு நன்றி ஹேமா.

  @ சத்ரியன்
  தங்கள் வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி சத்ரியன்.

  ReplyDelete
 27. @ கதிர்
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கதிர்.
  @ ஆஸியா
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

  @ பூங்குழலி,
  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி பூங்குழலி.

  @ கோகுல்
  தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி கோகுல்.

  ReplyDelete
 28. @ அமைதிச்சாரல்
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அமைதிச்சாரல்.

  @ சே.குமார்,
  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

  @ கோவைக்கவி
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சகோதரி. பணியை முடித்து முடியும்போது வந்து பாருங்கள்.

  @ தனிமரம்
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 29. @ Lakshmi,
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி அம்மா.

  @ வை.கோபாலகிருஷ்ணன்,
  தங்கள் வருகைக்கும் அன்பான பாராட்டுகளுக்கும் நன்றி வை.கோ சார்.

  @ சக்தி,
  தங்கள் வருகைக்கும் அழகானப் பாராட்டுரைக்கும் மிகவும் நன்றி மேடம்.

  @ "என் ராஜபாட்டை"- ராஜா
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

  ReplyDelete
 30. @ பிரதீபா,
  தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி பிரதீபா.

  @ கணேஷ்,
  இது என் கடமை அல்லவா? இன்னும் தூரிகையின் தூறல் திறப்பதில் பிரச்சனை இருப்பதால் சற்றே மனவருத்தம் இருக்கிறது.

  @ NIZAMUDEEN
  தங்கள் வருகைக்கும் ரசித்த வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கும் மிகவும் நன்றி.

  @ சசிகலா,
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சசிகலா.

  @ கோவை2தில்லி
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 31. அருமையான அறிமுகங்கள்
  அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 32. அருமையான அறிமுகங்கள் , யதார்த்தமான எழுத்துக்கள் உடைய பதிவுகள். பகிர்விற்கு நன்றி கீதா.

  ReplyDelete
 33. நல்ல அறிமுகங்கள்....

  அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்... பாராட்டுகள்.

  ReplyDelete
 34. இதிலென்ன தப்பு? அவளும் நம்ம பெண் மாதிரிதான். சொல்லப்போனா பெண்ணை விடவும் ஒசத்தி. கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுக்கு அப்புறம் பெண்ணெல்லாம் விருந்தாளி மாதிரிதான். தொண்டை அடைச்சா, சட்டுனு தண்ணி எடுத்துக் குடுக்கிறவ இவதான். இவளைக் கொண்டாடுறதில என்ன தப்பு?

  அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 35. அர்த்தம் புரிஞ்சி யார் சொல்றா? பல சம்பிரதாயங்களுக்கே அர்த்தம் புரியாம தப்பு தப்பா செஞ்சிட்டிருக்கோம். திருமணச் சம்பிரதாயங்களுக்கு இராஜராஜேஸ்வரி மேடம் சொல்ற காரணங்களைப் புரிஞ்சிகிட்டாவது இனி ஒழுங்கா செய்யணும்

  அருமையாய் எமது தளத்தை அறிமுகம் செய்ததற்கு மன்ம் நிரைந்த இனிய நன்றிகள்..

  காலை 5 மணிமுதல் பிளாக் திறக்கமுடியாமல் மிகவும் சிரமமாக இருந்த்து..

  பிறகு மகன்களின் உதவியால் ஒருவாறு மீட்டெடுக்க முடிந்தது

  ReplyDelete
 36. என் பதிவையும் அறிமுகம் செய்ததுக்கு ரொம்ம்ம்ப நன்றி.

  எல்லாரையும் அழகாக அறிமுகப்படுத்தி இருக்கிங்க :)

  ReplyDelete
 37. ஆசை அன்பு இழைகளினாலே என்ன அழகான தலைப்பு!

  திருமதி. லட்சுமி அவர்களின் தலைதீபாவளி அன்பு இழையை காட்டும் அற்புத காவியம்.

  எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 38. @ மகேந்திரன்

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மகேந்திரன்.

  @ சாகம்பரி

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சாகம்பரி.

  @ வெங்கட் நாகராஜ்

  வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.

  ReplyDelete
 39. @ இராஜராஜேஸ்வரி,

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்.

  காலையிலிருந்து ப்ளாக் திறக்காததால் என் தவறு என்றே எண்ணி பல தடவை முயன்றுகொண்டிருந்தேன். நல்லபடியாக வலை திறந்தமை மகிழ்ச்சி தருகிறது.

  ReplyDelete
 40. @ சுசி,

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  @ கோமதி அரசு,

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 41. எனது பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!!

  தவிர்க்க இயலாத சில காரணங்களால், தாமதமான பதிலிற்கு மன்னிக்கவும்.

  அழகிய உரையாடல் மூலம் பலரை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.
  நன்றி!

  ReplyDelete
 42. @ ஆளுங்க,

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஆளுங்க.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது