07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 14, 2012

என்னுயிர்த்தோழி.. கேளொரு சேதி...
கண்மணி, நான் மலர் பேசறேன். எப்படிடீ இருக்கே..?

மலர், நீயா? என்ன ஆச்சர்யம்? நானே உனக்கு போன் பண்ணனும்னு இருந்தேன். நீயே பண்ணிட்டே.

ஏய், உண்மையைச் சொல்லு. நிஜமா என்னை நினைச்சியா?

பொய் சொல்வேனாடி? என்னைப் பத்தி உனக்குத் தெரியுந்தானே?

ஏய், சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன். என்னடி விஷயம்? திடீர்னு என் ஞாபகம் வந்திருக்கு?

எப்பவும் உன் ஞாபகம் இருக்கும்டி. இந்த சின்ன வாண்டு எந்தவேலையும் செய்யவிடறதே இல்ல. தூங்கினாலும் கொஞ்சநேரந்தான். அவ தூங்கும்போதுதான் எல்லா வேலையும் முடிக்கவேண்டியதா இருக்கு. அந்த நேரத்தில்தான் வலைப்பக்கமும் போய் கொஞ்சம் மேய்வேன்.

அலுத்துக்காதடிஎத்தனைச் செல்வம் இருந்தாலும் குழந்தைச் செல்வம் இல்லாமலிருந்தா அதுக்கு பயனே இல்லைன்னு புறநானூறு சொல்லுது. ஒரு குழந்தை தன் தாய் வயிற்றினுள் இருக்கும்போதே அன்புள்ளஅம்மான்னு  அழைச்சிப் பேசுறதை ரெவரி அழகா எழுதியிருப்பார். படிக்கும்போதே அந்தப் பெண்குழந்தைக்காக மனசு ஏங்கும். 

உண்மைதான், பாலைத்திணை காயத்ரி சித்தார்த் சொல்வது போல் அவள் வளர்ந்து கொண்டிருக்கிறாள், நாங்கள் வாழுநம் என்னும் செருக்கோடு வாழ்ந்துகிட்டிருக்கோம்டி.

கேக்கவே சந்தோஷமா இருக்கு. தவமிருக்கும் எல்லாருக்கும் இந்த வரம் வாய்க்கிறதில்லைநான் பேச நினைப்பதெல்லாம் சென்னைப்பித்தன் ஐயாவோட விதி கதை படிச்சிருக்கியா? நாம் ஒரு முடிச்சை அவிழ்க்க, வாழ்க்கை அதுவாகவே ஒரு முடிச்சு போட்டுவைக்கும் அதிசயம். சரி, உன் மகள் எப்படி இருக்கா? நடக்கிறாளா? தானே சாப்பிடுறாளா? 

தானா சாப்பிடுறதா? ஊட்டினாலே சாப்பிடவைக்கிறது அத்தனைக் கஷ்டம். என்ன குடுக்கிறதுன்னே புரியல. சாப்பாடு ஊட்டுறது பெரும்போராட்டம்தான்.

சாப்பிடவாங்க வலையில் புதுகைத்தென்றல் குழந்தைகளின் ஆரம்பகாலஉணவு பத்தியும் அதை ஊட்டும் முறை பத்தியும்  தெளிவா எழுதியிருக்காங்களே.. படிச்சி அதன்படி செய். உன் அம்மாவும் அப்பாவும் ஊரில் தனியாத்தானே இருக்காங்க. கூட்டிட்டுவந்து கூட வச்சிக்கலாமே. எத்தனைக் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியோட வளரும் பாக்கியம் கிடைக்குது தாத்தாபாட்டி கைகளை சேமிக்கத் தெரியாதவர்களை எண்ணி வெயில்நதி இயற்கைசிவம் பரிதாபப்படும் கவிதை படிச்சிப்பார்.

என் கணவரும் அதைத்தான் சொல்றார். ஆனா எனக்குத்தான் சம்மதமில்ல. என் அப்பாவுக்கு சட்டுனு கோவம் வந்திடுது. ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் சீறுவார். அவரை சமாளிக்கவே முடியாது. அதுவுமில்லாம அக்கம்பக்கம் பேச்சுத்துணைக்கும் ஆளில்ல. பொழுது போகாம கஷ்டப்படுவாங்களேஎதுக்கு சிரமப்படுத்தணும்னு பார்த்தேன். 

அப்படின்னு நீ நினைக்கிறே! அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு உனக்குத் தெரியாதேகுடும்பம்னு இருந்தா பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதையெல்லாம் சாமர்த்தியமா சமாளிக்கக் கத்துக்கணும். குடும்பஉறவில் முரண்பாடுகளைத் தவிர்ப்பது எப்படின்னு   மகிழம்பூச்சரம் சாகம்பரி மேடம் எழுதியிருக்காங்க.. அதைப் படிச்சா உனக்கொரு தெளிவு கிடைக்கும். நேரம் கிடைக்கும்போது கட்டாயம் படி. அதுவுமில்லாமல் முதுமையில் உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ வரக்கூடிய பல சங்கடங்களை அவங்க வாய்விட்டுச் சொல்லுறதே இல்லைதீதும் நன்றும் பிறர் தர வாரா  ரமணி சார் ஒரு கவிதையில் ஒரு முதியவரின் மனசுக்குள் அழுத்தும் மரணபயத்தை உணர்வுபூர்வமா எழுதியிருப்பார். நாம் என்னதான் பார்த்துப் பார்த்துக் கவனிச்சாலும் இந்த பயத்தைப் போக்க நம்மால் முடியாது. அந்தவேளையில் அவங்களை அனுசரிச்சுதான் போகணும். குற்றவாளியாட்டம் பார்க்கக் கூடாது   வயசான காலத்தில் அவங்களுடைய ஏக்கங்களைப் புரிஞ்சிகிட்டு முதுமையிலும் தாலாட்டுங்கள்னு தென்றல் சசிகலா சொல்றது நிறையவே யோசிக்கவைக்குது. பேரக்குழந்தைகளின் வளர்ச்சியை பக்கத்திலிருந்து பார்த்து அணு அணுவாய் அனுபவிக்கிறது ஒரு ஆனந்தம். பெண் பெற்றபெண்ணின் அறிவு வளர்ச்சியில் பெருமை கொள்ளும் கவிஞர் கணக்காயன் கவிதை படிச்சால் உனக்கே புரியும். தன் அன்புப் பாட்டியைஇழந்த வேதனையை  பூமகளின் பூக்களத்தில் பூமகள் எப்படிப் புலப்படுத்தியிருக்காங்க. பேரப்பிள்ளைகளுக்கும் தாத்தா பாட்டிகளுக்கும் இடையில் உள்ள பந்தம் விவரிக்க இயலாத பிணைப்பு கொண்டது. தன் தாத்தா பாட்டியை கமல் ஶ்ரீதேவின்னு வர்ணிச்சு அவங்க அன்பையும் அந்நியோன்னியத்தையும் பத்தி ஒரு பேரன் தமிழில் எழுதத் தெரியாத நிலையிலும் தங்கிலிஷில் கவிதை  எழுதி வாழ்த்தினது தெரியுமா உனக்கு?

தெரியாதே! யாரந்த கொடுத்துவச்சத் தாத்தா?

நம்ம ஜி.எம்.பி. ஐயாதான். அவரே அவர் மனைவிக்கு இயற்றிய  பாமாலை மூலம்   அவர் பேரன் சொன்னது மிகையில்லைன்னு  உறுதியாயிடுச்சே! இந்த மாதிரி நல்ல முன்னுதாரணமா பெரியவங்க இருக்கிற வீட்டில் குழந்தைகளும் பல நல்ல விஷயங்களை தங்களையறியாமலேயே கத்துக்கிறாங்க. எங்க வீட்டையே எடுத்துக்கயேன். எங்க மாமனாரும் மாமியாரும் ஊருக்குப் போனதில் இருந்து எப்ப வருவாங்க எப்ப வருவாங்கன்னு ரெண்டும் துளைச்செடுத்துகிட்டிருக்குங்க. அவ்வளவு பாசம்.

பேரப் பிள்ளைகளை விட்டுட்டு ரெண்டுபேரும் ஜாலியா எங்க போயிருக்காங்க? 

புதுக்கோட்டை சின்னம்மா மகனுக்குக் கல்யாணம். கல்யாணத்தை விடவும் எங்க மாமியாருக்கு குடுமியான் மலை போகணும்னு ரொம்ப ஆசை. அதான் கிளம்பிட்டாங்க. ரெண்டுநாளில் வருவாங்க.

குடுமியான் மலையா? அதில் என்ன விசேஷம்? 

குடைவரைக் கோயிலும் கற்சிற்பங்களும் பிரமாதமா இருக்கு. மரகதம் புவனேஸ்வரி ராமனாதன் எழுதின குடுமியான் மலை  பதிவைப் பார்த்ததில் இருந்து அங்க போகணும்னு சொல்லிட்டே இருந்தாங்க. சந்தர்ப்பம் கிடைக்கவும் கிளம்பிட்டாங்க 

ம்கொடுத்து வச்சவங்க.. நாம் நினைச்சாலும் இப்படிக் கிளம்பிடமுடியுதா? எனக்கும் பழங்கால சிற்பங்கள் மேல கொள்ளை ஆசை. பென்னேஸ்வர மடம் கேள்விப்பட்டிருக்கியா? 

பென்னேஸ்வர மடத்து நடுகல்கள்  பத்தி ஒரு பதிவு மண்ணின் குரல் வலைப்பூவில் பார்த்தேன். ஒரு மனிதன் தன்னைத்தானே  பலியிட்டுக்கிற  சிற்பங்கள் எல்லாம் பார்க்கவே சிலிர்க்குது. சோழர் கால சிற்பங்களாமே

ஆமாம்டி. அதைப்பத்திதான் சொல்ல வந்தேன். அதெல்லாம் சரியா பராமரிக்கப்படாம இருக்கிறதாவும் குடிநீர்க் குழாய் அமைக்கிறோம்னு அவற்றையெல்லாம் தோண்டி, ரோட்டோரம் போட்டு வச்சிருக்கிறதாவும் கேள்விப்பட்டேன். எவ்வளவு பழங்கால சிலைகள். இப்படிப் பொறுப்பில்லாம இருக்கிற நம் அரசையும் மக்களையும் நினைச்சால் வேதனையா இருக்கு.   

மண்ணின் குரல் வலைப்பூ நம் பாரம்பரியம் காக்கும்  அருமையான தொண்டை செய்வதைப் பாராட்டணும். அதிலும் நம் கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு பற்றிய பதிவுகள் ஒலிவடிவில் பதியப்பட்டிருப்பது இன்னும் சிறப்பு. படிக்கிறது ஒரு வகையில் சுகம்னா, கண்ணை மூடிகிட்டு காதால் கேட்டு ரசிக்கிறது ஒருவகையில் சுகம். 

புத்தகம்னு ஒரு வலைப்பூ இருக்கு. பா.சேரலாதன் தான் படிக்கும் பல புத்தகங்களின் விமர்சனங்களைத் தந்து படிக்கும் ஆவலைத் தூண்டுறார். ஒவ்வொரு விமர்சனத்துக்கும் பின்னால் அவருடைய பரந்த வாசிப்புத் திறன் தெரியிது. அதில் பண்பாட்டு அசைவுகள்  அப்படிங்கிற புத்தகத்தைப் பத்தி எழுதியிருக்கார். படிக்கையில் நம் பண்பாட்டுப் பெருமைகளை நினைச்சு உடம்பு சிலிர்க்குது.  

புத்தகங்கள் வாயிலாய் அடுத்தடுத்தத் தலைமுறைக்கு பல நல்ல விஷயங்கள் கடத்தப்படுவது ரொம்ப நல்ல விஷயம். ஆனா என்ன, குழந்தையிலிருந்தே வாசிக்கிற பழக்கத்தைக் கொண்டுவரணும். இப்ப குழந்தைகளுக்குன்னு புத்தகங்கள் நிறைய வரதில்லையே 

லயன் காமிக்ஸ் புத்தகங்களை   மறுபதிப்பு பண்றாங்களாமே. தமிழ் காமிக்ஸ் உலகம் விஸ்வா முதல் பத்துப் புத்தகங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளார்.  

அப்படியா? நல்ல விஷயமாச்சே! வாங்கிடவேண்டியதுதான். நாமெல்லாம் சின்னப்பிள்ளைகளா இருக்கும்போது எக்கச்சக்கமா படிப்போமே. கதை.. கதை கதை! எந்நேரமும் கதைதான்.. அதெல்லாம் ஒரு பொற்காலம். இல்லடி…?  

ஆமாமா…. இப்பவெல்லாம் டிவி எல்லாருடைய வாழ்க்கையையும் ஆக்கிரமிச்சிடுச்சே சீரியலுக்கு அடிமையானவங்களுக்கு அதை விட்டு வெளியிலும் வாழ்க்கை இருக்குங்கிறதே எப்ப தெரியுதுன்னு சுஜா கவிதைகளில் எழுதியிருக்காங்க. மின்னல் வரிகள் கணேஷ் பெண்களின் அறியாமையைப் பயன்படுத்தி தொலைக்காட்சிகள் படுத்துற பாட்டை நகைச்சுவையா எழுதியிருந்தாலும் படிக்கையில் இப்படிப்பட்ட பெண்கள் உண்மையிலேயே இருக்காங்களேன்னுதான் நினைச்சி வருத்தப்படத் தோணுது. இப்ப எந்தப் பாட்டிக்கு கதை சொல்ல நேரம் இருக்கு. சீரியல் பாக்கவே அவங்களுக்கு நேரம் போதல. 

சலிச்சிக்காதடி. இப்பவும் கதை சொல்லும் பாட்டிகளும் இருக்காங்க. நீதிக்கதைகள், இதிகாசக்கதைகள், பக்திக்கதைகள்னு ருக்மணி சேஷசாயிப் பாட்டி என்ன அழகா குழந்தைகளுக்கு எளிமையாப் புரியும்படி சொல்றாங்க. மணி மணியாய் சிந்தனையில் ஒரு சிறுவனால் மனத்தெளிவு கிடைத்தது பற்றி  அருமையா எழுதியிருக்காங்க. அந்தச் சிறவனை நினைத்தால் ஆச்சரியமா இருக்கு அந்தச் சிறுவன் மட்டுமா? எமனையே திகைக்கவைத்தச் சிறுவன் நசிகேதஸ்   கதையை வித்யா சுப்ரமணியம் மேடம் எழுதியிருந்ததைப் படிக்கலையா நீ? இப்ப இருக்கிற குழந்தைகளும் சளைச்சவங்க இல்லை. அவங்க கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளமாட்டேங்குது. குழந்தைகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாது வற்றிய குளம்போல் வார்த்தைகளற்று நிற்கும் நிலையை பரிவின் இசை சுந்தர்ஜி ரொம்ப அழகா சொல்லியிருப்பார் இங்கே குழந்தைகளை சமாளிப்பது போல் எளிதல்ல, அவர்களுடைய கேள்விகளை சமாளிப்பது.
ஹா..ஹா...

ஏன்டி சிரிக்கிறே?

சட்டுனு அகரத்தான் கவிதை ஒன்று ஞாபகம் வந்திடுச்சி.

குழந்தைகளிடம்
புத்திசாலித்தனம் சுடர்விடுகையில்
அவளைப் போலிருப்பதாகவும்,
அசட்டுத்தனம் வெளிப்படுகையில்
என்னைப் போலிருப்பதாகவும்
எப்போதும் சொல்லித் திரிவாள்
என் வீட்டுப் பத்தினி. 

வேடிக்கைதான். அவர் எழுதியிருக்கிற குறும்பூக்கள் எல்லாமே ரசிக்கவைக்குது. இப்படித்தான் காணாமல் போன கனவுகள் ராஜி அவங்க வீடு நிறையவிதவிதமா பல்ப்ஸ்  ஜொலிக்கிற அழகை நமக்கும் வெளிச்சம்போட்டுக் காட்டுறாங்க 

அதையெல்லாம் படிக்கும்போது நாமும் குழந்தைகளாவே இருந்திருக்கலாம்னு சில சமயம் தோணும். மழை, பவழமல்லி ரத்திகாவின் வயசைக் கரைச்சிக் குழந்தையாக்கிடுதாம். மழைநாளில் தன்னை பால்யத்திடமிருந்துமீட்கும் மந்திரம் யாருக்காவது தெரியுமான்னு கேட்கிறாங்க. ஆனா குழந்தைகளாய் இருக்கும்போது அம்மா அப்பா கட்டாயப்படுத்துற சில விஷயங்கள் நமக்குப் பிடிக்காது. அப்படிப் பிடிக்காத விஷயங்கள் பெரியவங்களானபிறகு பிடிக்கிறது ஏன்னு இப்ப புரிஞ்சிடுச்சின்னு பிடிக்காமல் போன நவராத்திரி பற்றி மின்மினிப்பூச்சிகள் ஷக்திபிரபா சொல்லும்போது அட, ஆமாம்னு நமக்கும் தோணுது.

சின்ன வயசு நினைவுகளே எப்போதும் சந்தோஷந்தான்இல்லே? நாமெல்லாம் சின்ன வயசில் பொன்வண்டு வளர்த்திருக்கோம்சில்வண்டும்  வளர்த்தவரைத் தெரியுமா உனக்கு?

எது? சீ…..ன்னு மரத்திடுக்கில் இருந்துகிட்டு காதைக் குடையுற மாதிரி கத்திகிட்டேயிருக்குமே அதானே?

அதேதான். மனசு சே குமார் வளர்த்ததில்லாம அதை வச்சி சேட்டையெல்லாம் பண்ணியிருக்காராம் பாரு. பையன்களே இப்படித்தான் போல!

இந்த மாதிரி சந்தோஷமா விளையாடித்திரிய வேண்டிய வயசில் குழந்தைகள் வேலைக்குப் போய் படுற கஷ்டத்தை  வெங்கட் நாகராஜ் பார்த்து எவ்வளவு வருத்தப்பட்டிருக்கார். அவர் கேட்கிற ஒரு கேள்விக்குக்கூட பதில் கிடையாது நம்மகிட்ட. வேதனை!  

குழந்தைகள் வேலை செய்யிறாங்க. ஆனா உடல் வளர்ந்தவங்க சிலரைப் பாரேன். பிச்சையெடுத்தும் ஏமாத்தியும் சம்பாதிக்கிறாங்க.  இதனால் உண்மையிலேயே கஷ்டப்படுறவங்க யாருன்னே நம்மளால் கண்டுபிடிக்க முடியாமப் போயிடுதுன்னு வருத்தப்படுறார் இரவுவானம். உண்மைதானே!

ப்ச்! இவங்களையெல்லாம் என்ன பண்றது? தானா திருந்தினாதான் உண்டு.

சமீபமா நிறைய குட்டீஸ் வலைப்பூ ஆரம்பிச்சிருக்காங்களே தெரியுமா?  

குட்டீஸா? யார் யாரு?

தேவதையின் கனவுகளைத் தூயா ஆரம்பிச்சிருக்காங்க. காணாமல்போன கனவுகளின் வாரிசுதான் இந்தத் தேவதையின் கனவுகள். அவங்க மாமா மாமியின் இரண்டாவது திருமணநாளுக்கு எழுதின வாழ்த்துப்பாவைப் பாரேன்.. எவ்வளவு அர்த்தத்தோடு அருமையா இருக்கு. அடுத்தவர் காகிதப்பூக்கள் ஏஞ்சலின் மகள் ஷேரன். அம்மா மாதிரியே பொறுமையும் அசத்துற கைவேலைத்திறனும் இருக்குங்கிறது  இந்த மான்குட்டியைப் பார்த்தாலே தெரியும் ரோஷ்னியோட ரோஸி பொம்மை க்யூட்டா இருக்கில்லேஅப்பாவும் அம்மாவும் எழுதி அசத்துறாங்க. மகள் வரைஞ்சு அசத்துறா

ஹூம்இதையெல்லாம் பாத்தா எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. முதலில் என் மகளுக்கு ஒழுங்கா சாப்பிடக் கத்துத்தரணும் இன்னைக்கு உன்னோடு பேசினதில் மனசு தெளிவா இருக்குடி. அப்பா அம்மாவை இங்கு வரச்சொல்லி இன்னைக்கே பேசறேன். நன்றி மலர்.

நமக்குள்ளே என்னடி?  குழந்தையை நல்லா கவனிச்சிக்கோ.  இன்னொருநாள் பேசுவோம்.


48 comments:

  1. என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோதரி கீதா...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அட! எத்தனையோ முத்துக்களுக்கு இடையில் நானும்! எனக்கும் ஒரு இடம் தந்ததில் மிகமிக மகிழ்கிறேன். நன்றி தோழி! லயன் காமிக்ஸ் நான் சின்ன வயசுல ரொம்பப் படிச்சு ரசிச்சது. வழி காட்டிட்டிங்க... வாங்கிடுறேன்! அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! மிக்க நன்றி!

    ReplyDelete
  3. அத்தனை அறிமுகங்களையும் அருமையாக அளித்தமைக்கு மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. லயன் மற்றும் முத்து காமிக்ஸ் எடிட்டரின் அற்புதமான வலைத்தளம் இங்கே: லயன் மற்றும் முத்து காமிக்ஸ் எடிட்டரின் வலைத்தளம்

    ReplyDelete
  5. எத்தனை அறிமுகங்கள் ...பெரும்பாலானோர் தெரிந்த முகங்களே

    ReplyDelete
  6. அத்தனையும் முத்தான அறிமுகங்கள்,பிறகு வாசிக்க வேண்டும்.

    ReplyDelete
  7. நல்ல அறிமுகங்கள்....

    என் வலைப்பூவினையும் என் மகள் ரோஷ்ணியின் வலைப்பூவையும் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. பலரும் அறிந்தவர்களாக இருந்தாலும் அனைவருமே சிறந்த படைப்பாளிகள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. காலையில் எழுந்து கணினியைப் பார்த்தால் இன்ப அதிர்ச்சி. அன்பு கீதமஞ்சரி, வலைச்சரத்தில் என்னைப் பற்றி எழுதியதற்கு, நன்றி. வலைச்சரத்தில் நான் முன்பே அறிமுகப் படுத்தப் பட்டவந்தான். ஆனால் அறிமுகத்துக்கு நீங்கள் எடுத்துக் கொண்ட பதிவுகள் நானே ரசித்தது. மீண்டும் நன்றி.

    ReplyDelete
  10. தோழியுடன் அருமையான பதிவுகளை பகிர்ந்து கொண்டு தோழிக்கு தேவையான அறிவுரை கூறிவிட்டீர்கள்.
    தோழியின் பெற்றோர்கள் மகிழ்வார்கள்.

    பேரக்குழந்தைகள் மகிழ்ச்சி அடையும்.

    எல்லா பகிர்வுகளும் அருமை.
    நன்றி கீதமஞ்சரி.

    ReplyDelete
  11. ஒரு தொகை பதிவுகள்! பல புதுசாக உள்ளது! சென்று பார்க்க முயற்சிப்பேன் மிக்க நன்றி சகோதரி புதிய அறிமுகவர்களிற்கும், தங்களிற்கும். இன்று காலையிலேயே இந்தப் பதிவைப் பார்த்துவிட்டேன். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. அனைத்து அறிமுகஙக்ளும் மிக அருமையாக வித்தியாசமாக அறிமுகப்படித்தி இருக்கீஙக் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. நல்ல அறிமுகங்கள்
    அருமை

    ReplyDelete
  14. என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ!
    அனைவருக்கும் வாழ்த்துகள்.சிறப்பாகத் தொகுத்தளித்துள்ளீர்கள்.

    ReplyDelete
  15. அத்தனை அறிமுகங்களையும் அருமையாக அளித்தமைக்கு மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள்..

    அறிமுகம் ஆன அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. தினமும் வியக்க வைக்கிறீங்க.அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  17. அருமையான உரையாடல் போன்ற பதிவு

    ReplyDelete
  18. அத்தனை அறிமுகங்களையும் அருமையாக அளித்தமைக்கு மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள்..

    ReplyDelete
  19. பதிவில் உங்களின் மகத்தான உழைப்பு தெரிகிறது சகோதரி.
    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. வலைச்சர ஆசிரியர் வாழ்த்துக்கள் கீதமஞ்சரி..... ரொம்ப அழகா சுவாரஸ்யமா தொகுக்கறீங்க....அபார உழைப்பு....என் பதிவை இணைச்சதுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  21. தென்றலையும் அறிமுகப்படுத்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றி . தங்களின் ஆர்வம் , கவனம் பதிவில் தெரிகிறது வாழ்த்துகள் .

    ReplyDelete
  22. நேரம் கிடைக்கும் போது அனைவரது தளங்களுக்கும் செல்கிறேன்.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  23. என் நிழலும் உங்கள் வலைத்திரையில் விழுந்தமைக்கு மனதின் ஆழத்திலிருந்து நன்றி கீதமஞ்சரி.

    ReplyDelete
  24. உங்க வாசிப்பு வட்டம் வியக்க வைக்குது!!

    ReplyDelete
  25. மிக மிகக் குறிப்பான திறமையானவர்களைத் தேடித் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.கூடுதலாக அனைவருமே தோழமைக்குரியவர்கள்தான் !

    ReplyDelete
  26. அருமையான அறிமுகங்கள். அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ரோஷ்ணிக்காக ஒரு ஸ்பெஷல் நன்றி.

    ReplyDelete
  27. இன்றைய "கேளொரு சேதி" அருமை.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. வலைச்சரத்தில் மீண்டும் ஒருமுறை என் பதிவு...

    அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோதரி.

    மற்ற அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    தொட்ருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  29. @ ரெவெரி
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரெவெரி.

    @ கணேஷ்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கணேஷ்.

    @ இராஜராஜேஸ்வரி,
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்.

    @ King Viswa
    வருகைக்கும் வலைத்தள அறிமுகத்துக்கும் நன்றி விஸ்வா.

    ReplyDelete
  30. @ எல்.கே
    வலையுலக ஜாம்பவானுக்குத் தெரியாத வலைப்பூக்களும் இருக்குமா? வருகைக்கு நன்றி சார்.

    @ Asia Omar,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆஸியா.

    @ வெங்கட் நாகராஜ்
    வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

    @ தமிழ்வாசி பிரகாஷ்
    அனைவருமே சிறந்த படைப்பாளிகள் என்பதாலேயே புதியவர்களுக்கு அறிமுகம் செய்ய விரும்பினேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  31. @ G.M Balasubramaniam
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    @ கோமதி அரசு,
    தங்கள் வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

    @ Kovaikkavi
    தங்கள் வருகைக்கும் ஊக்கமிகுப் பின்னூட்டத்துக்கும் நன்றி.

    @ Jaleela Kamal
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜலீலா.

    ReplyDelete
  32. @ செய்தாலி
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    @ சென்னை பித்தன்
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

    @ வை.கோபாலகிருஷ்ணன்,
    தங்கள் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் நன்றி சார்.

    @ thirumathi bs Sridhar
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆச்சி.

    ReplyDelete
  33. @ sekar
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சேகர்.

    @ Lakshmi
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி லக்ஷ்மி அம்மா.

    @ மகேந்திரன்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மகேந்திரன்

    @ Shakthiprabha
    வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் நன்றி ஷக்திபிரபா.

    ReplyDelete
  34. @ சசிகலா,
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சசிகலா.

    @ வரலாற்று சுவடுகள்
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    @ சுந்தர்ஜி
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    @ ஹூஸைனம்மா
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா.

    ReplyDelete
  35. @ ஹேமா
    வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் நன்றி ஹேமா.

    @ கோவை2தில்லி
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆதி. ரோஷ்ணியை நிறைய வரையச் சொல்லுங்கள்.

    @ மாதேவி
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மாதேவி.

    @ சே.குமார்
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி குமார்.

    ReplyDelete
  36. வலைச்சரம் பணிக்கு வாழ்த்துக்கள்.
    மகிழம்பூச்சரத்தினை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி கீதா.
    தங்கள் உழைப்பின் வீச்சு என்னை பிரமிக்க வைக்கிறது. அறிமுகப்பதிவுகளை கண்டிப்பாக படிக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  37. தோழிகளுக்கிடையே நடக்கும் அர்த்த முள்ள அரட்டை சூப்பர்! பாராட்டுக்கள் கீதா!

    ReplyDelete
  38. என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ!
    சிறப்பாகத் தொகுத்தளித்துள்ளீர்கள்.

    ReplyDelete
  39. அறிமுகத்திற்கு நன்றி சகோதரி....மேலும் பல நல்ல பதிவர்களையும் அறிமுகபடுதியதர்க்கு பாராட்டுக்கள்..........

    ReplyDelete
  40. அற்புதமாக எல்லோரையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.நன்றி சகோதரி.

    ReplyDelete
  41. நல்ல வித்தியாசமான சிந்தனையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகள் அருமை.

    ReplyDelete
  42. குழந்தை வளர்ப்பில் தொடங்கி வாசிப்பு, பயணம், தொன்மையான இடங்கள் என பலவற்றையும் கலந்த அற்புதமான பதிவு. தொ.பரமசிவன் அய்யாவின் பண்பாட்டு அசைவுகள் நூல் குறித்த பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  43. நான் எதிர்பார்த்தது போலவே
    அறிமுகப்படலம் அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  44. @ சாகம்பரி,
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி சாகம்பரி.

    @ கலையரசி

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி அக்கா.

    @ அகரத்தான்,

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

    @ சுஜா,
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சுஜா.

    ReplyDelete
  45. @ சித்தாரா மகேஷ்,
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சித்தாரா.

    @ முட்டாப்பையன்,
    தங்கள் வருகைக்கு நன்றி.

    @ விச்சு,
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி விச்சு.

    @ சித்திரவீதிக்காரன்
    தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி

    @ புலவர் சா இராமாநுசம்
    தங்கள் வருகைக்கும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  46. மன்னிக்கவும் தாமதமாக வருவதற்கு. என்னுடைய மிக நல்லதொரு பதிவை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி. உங்கள் இதர அறிமுகங்கள் எல்லாமே வியக்க வைக்கின்றன.

    ReplyDelete
  47. @ வித்யா சுப்ரமணியம்,

    தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது