07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 13, 2012

இல்லம் சங்கீதம்…( நாம் இப்போ பார்க்கப்போற  கூட்டுக்குடும்பம் ஒரு அதிசயமான குடும்பம். கூட்டுக்குடும்பமே அதிசயம்னு சொல்றீங்களா? அதுவும் உண்மைதான். ஆனால் அதையும் மீறின ஒரு அதிசயம் என்னன்னாஇந்தக் குடும்பத்தில் அப்பா, அம்மா, மகன், மருமகள் என்று எல்லோருமே வலைப்பூ வாசகர்கள். நல்ல பயனுள்ள விஷயம் எங்க இருந்தாலும் தேடிப்போய் வாசிக்கிறவங்க. அதனால் வலைப்பூக்களில் பலவற்றை மேற்கோளிட்டு சர்வசாதாரணமா வீட்டில் பேசுவாங்க. வாங்க, இந்த ஒரு வாரமும் நமக்கு வேலை அவங்க வீட்டில்தான். ஒட்டுக்கேட்கிறோமேன்னு தப்பா நினைக்காதீங்க. நல்ல விஷயங்கள் எங்க இருந்தாலும் நாடிப் போய் சேகரிக்கணும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்களேஅதனால் தயங்காமல் என்னோடு வாங்க.)ஆவாரம்பூவுஆறேழு நாளா
நீ போகும் பாதையில் பூத்திருக்கு
உன்நுனிமூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு 

அட்டகாசமான இசை. ராஜா ராஜாதான். இல்லே மலர்?
உங்களை மாதிரிதான் நானும் இந்தப் பாட்டுக்கு இசை இளையராஜான்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனா இசையமைச்சவர் இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மனாம்.
நிஜமாவா? நம்பவே முடியல. 
என்னாலயும்தான். ரேடியோஸ்பதி கானா பிரபா சொல்லித்தான் எனக்கும் தெரிஞ்சது. அங்க நிறையப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் இவர்களுடைய பேட்டியெல்லாம் இருக்கு. அப்புறம் அடுக்குப்பானையில கூட எனக்குப் பிடிச்ச பழைய பாட்டு வீடியோவோட நிறைய இருக்குங்க 
அதுக்குள்ள ஏன்டி வச்சிருக்க? 
ஐயே.. அழகுஅடுக்குப்பானைங்கிறது ஒரு வலைப்பூ. அதில் இருக்குன்னு சொன்னேன். உங்களுக்குப் பிடிச்ச மல்லிகை என் மன்னன் மயங்கும்  பாட்டுக்கூட அதில் இருக்கு. பாக்குறீங்களா?
! பேஷா  மல்லிகைப்பூ வாசம் பிடிக்காத மணாளர்கள் உண்டோ? அதுவும் மனைவி தலையில் சூடியிருக்கும்போது அதன் அழகே தனிதான்.
ரொம்ப அழகுதான். பூக்களை நினைச்சாலே வியப்பா இருக்கு. எத்தனை எத்தனை விதம்? இயற்கையோட அதிசயம்தான் அது. கிளிப்பூ பார்த்திருக்கீங்களா? ரம்யம் மாதேவி காட்டியிருக்காங்க பாருங்க. கிளி மாதிரியே என்ன அழகா இருக்கு. பூக்கள் பத்தி ஏராளமான தகவல் தந்திருக்காங்க. ஒரு பூ பூச்சிகளைத் தின்னுமாம். ஆச்சர்யமா இருக்கில்லே
ஒரு பூ இல்ல,  ஏராளமா இருக்கு. தங்கம்பழனி அசைவப் பூக்கள் பத்தி ஒரு பெரிய பதிவே போட்டிருக்கார். பார்த்தியா? பார்க்கவே பயங்கரமா இருக்கு.
உங்களை மாதிரிதான் போல..
நான் என்ன அவ்வளவு பயங்கரமாவா இருக்கேன்.
அதைச் சொல்லல. ஒருநாளும் அசைவமில்லாமல் சாப்பிட முடியுதா உங்களால்? அதைச் சொல்றேன்.
உனக்கு தினமும் சமைக்க அலுப்பா இருந்தால் கோழி ஊறுகாய்  செய்து வச்சிடு. கொஞ்சநாளைக்கு உன்னைத் தொல்லை பண்ணமாட்டேன்.
என்னது? கோழி ஊறுகாயா? நான் கேள்விப்பட்டதே இல்லையே
ப்ரனிஸ் கிச்சன்ல இருக்கே.
தண்ணி குடிக்கவும் வீட்டுக் கிச்சனுக்குள்ள வரதில்ல. மத்த கிச்சனுக்கெல்லாம் போய்ப் பாருங்க. வகை வகையாப் பாத்துவச்சிகிட்டு, என் சமையலைக் குறை சொல்லுங்க. சமைக்கிற கஷ்டம் எனக்குத்தானே தெரியும்?
நீ கஷ்டப்பட்டு சமைக்கிறியா? நாங்க இல்லே கஷ்டப்பட்டு சாப்பிடறோம். அம்மா சமைச்சவரைக்கும் எப்படி இருந்தது. சமையல் பொறுப்பு உன் கைக்கு வந்ததில் இருந்து நீ சமைக்கிறதுதான் சாப்பாடுன்னு ஆயிடுச்சி. என்ன இருந்தாலும் எங்க அம்மா கைமணம் வருமா உனக்கு?
ஹூஸைனம்மா சரியாத்தான் சொல்லியிருக்காங்க. பூவோடு சேர்ந்த நார் பதிவில் அவங்க சொன்னதைப் படிச்சிப்பாத்தாதான் நான் ஏன் அப்படி ருசியா சமைக்கிறதில்லைங்கிறது உங்களுக்குப் புரியும்.
இது வேறயா? ஆடத்தெரியாதவ.. சரி, முறைக்காதேசமைக்க கஷ்டமா இருக்குன்னியேஇன்னிக்கு ஹோட்டலில் வாங்கிட்டு வந்திடவா?
ஹோட்டல் எதுக்கு? கொஞ்சம் பொறுங்க. சீக்கிரம் சமைச்சிடறேன்.
ஏதாவது நான்வெஜ் வாங்கிட்டு வரலாம்னு நினைச்சேன்.
ஹோட்டலில் அசைவம் சாப்பிடுபவரா நீங்கள்  அப்படின்னு கேட்டு சண்முகவேல் ஒரு பதிவு போட்டிருக்கார். அதைப் படிச்சதில் இருந்து பயமா இருக்கு.
அடக்கடவுளே.. இப்படியுமா அக்கிரமம் பண்றாங்க? 
அது மட்டுமில்ல, ஒரு பசுவின்கண்ணீர்க்கதையை  முகுந்த் அம்மா எழுதியிருக்காங்க. படிக்கலைன்னா படிச்சிப் பாருங்க பால் இறைச்சி மூலமாகவும் நமக்கு வியாதிகள் வருதுங்கிற உண்மை புரியும்.
ச்சே! என்னவொரு குரூரம்!  அன்றைக்கு வீட்டுப்பசுக்களிடம் சுடசுடக் கறந்த பால், இன்றைக்கு பாக்கெட்டுகளில் அடைபட்டு உறைந்துபோய்க் கிடப்பதை பட்டி திரும்பிய பசுக்களும் பால்குடித்த நினைவுகளும் கவிதையில் டாக்டர்.எம்.கே.முருகானந்தன் ஆதங்கத்தோடு சொல்லியிருக்கார். படிச்சியா?
ம்! காலமாற்றத்தாலும், நவீன விஞ்ஞான வளர்ச்சியினாலும் இயற்கைக்கு முரணாய் உருவாக்கப்படும் காய்கறிகளும் இறைச்சியும் கெடுதல் தரக்கூடியது. இதில் சுகாதாரமற்ற முறையில் சமையலும் செய்தால் உடம்புக்கு கேடு வராமல் வேறு என்ன செய்யும்?
போற போக்கைப் பாத்தால், ருசி எப்படியிருந்தாலும் வீட்டுச் சமையலே பெட்டர்ங்கிற முடிவுக்குத் தள்ளிடுவாங்க போலிருக்கே
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வீட்டுச் சமையல்தான் சுத்தமும் ஆரோக்கியமும். இது தெரிஞ்சுதான் துளசிதளம் துளசி மேடம் எங்க போறதா இருந்தாலும் கையோடு கட்டுச்சோறு கொண்டுபோயிடறாங்க. இங்க பாருங்க.. உயிருக்கே ஆபத்துன்னு சொன்னபின்னாலும் துணிந்து கிளம்பியதோடு இல்லாமல் திரும்பி வருவோமென்னும் நம்பிக்கையுடன் மதிய சாப்பாட்டை ஆக்கிவச்சிட்டுக் கிளம்பினேன்னு எவ்வளவு சாதாரணமா சொல்லி, தான் ஒரு துணிந்த கட்டைங்கிறதை உறுதிப்படுத்தியிருக்காங்க பயண அனுபவத்தில் அவங்க கொடுக்கிற ஒவ்வொரு குறிப்புகளும் படங்கள் மூலம் தரும் விளக்கங்களும்  அந்த இடங்களுக்குப் பயணம் செய்பவர்களுக்கு  ஒரு கையேடாகவே பயன்படும். அந்த அளவு நுண்ணிய விவரங்கள்.
வாழ்க்கைப் பயணத்திலும் பல பேரோட அனுபவங்கள் நமக்குப் பாடமா அமைவது எவ்வளவு பெரிய வரம்! தாயின் கர்ப்பத்தில் இருக்கும் இதம்போல தாய்நாட்டில் கொண்டாடப் பல இதமான நிகழ்வுகள் இருந்தாலும் அக்கரைப் பச்சைக்கு ஆசைப்பட்டுப் புறப்படும் பலரால் தாயகம் திரும்புவதற்கான பயணங்கள் முடிவதில்லைன்னு  சொல்லி கண்ணில் நீர் வரவழைக்கிறாங்க கலகலப்ரியா.
ஆனா பாருங்க, வாழ்க்கையின் சாலையெங்கும் பயணம், எங்கேனும் இறங்கத்தானே வேண்டும்னு கேக்கறாங்க உயிரோடை.   
யாரு? அந்தத் தமிழ்த்திமிர் பிடித்தவளா?
ஐயையோஎன்னங்க இப்படிச் சொல்றீங்க?
ச்சீ... நான் சொல்லல. அவங்களே தன்னை அப்படிச் சொல்லிக்கிறாங்க. அதுவுமில்லாமல் திமிரும் அழகுதான்னு மனவிழி சத்ரியன் சொல்லியிருக்காரே நீ கவனிக்கலையா? 
அவர் அது மட்டுமா எழுதியிருக்கார்? அவளுக்கும் அமுதென்று பேர் கவிதையில் முப்பொழுதும் வாயில் முத்தங்கள் வைத்துக் காத்திருக்கும் காதலி பற்றியும் எழுதியிருக்காரேரொம்பக் குறும்புதான். ஆனால் இப்படி முத்தம் கொடுத்து கோபத்தை சமாளிக்கிறதெல்லாம் ஆண்களின் வேலை. இதை நான் சொல்லல, யேடி கள்ளச்சின்னு மறவாதே கண்மணியே லோகு சொல்றார் பாருங்க.
இப்படியா குட்டைப் போட்டு உடைப்பார்!
முதல் காதலும் முதல் முத்தமும் கோவை.மு.சரளாவுக்கு எங்கே ஆரம்பமாயிருக்குன்னு அவங்க சொல்றதைக் கேளுங்க. இன்னும் தீரவில்லையாம் அந்தக் காதல்.
ஹாஹாஹா
எதுக்கு இந்த சிரிப்பு?
பெண் என்னும் புதுமை அல்லவா? அதான் புரிஞ்சுக்கவே முடியல. இன்னொரு கவிதாயினி என்ன சொல்லியிருக்காங்கன்னு தெரிஞ்சா இப்படி சொல்லமாட்டே
யாரு? என்ன சொல்லியிருக்காங்க?
அப்படியான்னு அதிசயித்திருக்காங்க வாசல் கௌசல்யா. காதலனைக் கண்டநாள் முதல் புத்தகங்களைக் கண்டுக்கவே இல்லையாம். புத்தங்கள் திட்டித் தீர்க்கின்றனவாம்.
காதல் ஒரு ஆளை என்னவேணாலும் செய்யவைக்கும், எப்படிவேணுமானாலும் பேசவைக்குமேகவிதை வீதி சௌந்தர் இது நியாயமான்னு  புலம்புற புலம்பலைக் கேட்டீங்களா?  
ம்அவர் கேக்குறது நியாயம்தானேஎதையும் தனக்குள்ள வச்சி மருகிட்டு இல்லாமல் புலம்பலா இருந்தாலும் நேராக் கேட்கிறதுதான் நல்லது. ஏய்இப்ப உனக்கென்ன நமட்டுச் சிரிப்பு? சொல்லிட்டு சிரி..
நீங்களும் நானும் காதலித்த நாளை நினைச்சுகிட்டேன். கூர்வாள் கயல் சொல்வது போல் மனசு காதலை சொல்லத்துடிச்சாலும்    நீங்களும் நானும் சொல்லாமத் தவிச்சிட்டிருந்தோம்
எப்படியோஒரு வழியா துணிச்சல் வந்து சொன்னோமேஇல்லையானா…. வானவில் மனிதன் மோகனுடைய காதலின் பொன்வீதியில் காதலர்கள் மாதிரி ஒரு பாட்டை நினைவுப்பாடலா வச்சிகிட்டு கடைசிவரை மனசுக்குள்ள குமைஞ்சிட்டிருந்திருப்போம். 
அந்தக் கதை படிக்கும்போதே மனசைக் குடைஞ்செடுத்துடுச்சி. ஆனாலும் பெத்தவங்க மனசு படுற பாட்டைப் பார்க்கும்போது அவங்களைக் கஷ்டப்படுத்துற இந்தக் காதல் தேவையான்னு தோணுறது இயல்புதானேஎன்னதான் காதல் திருமணம் செய்திருந்தாலும் நாளைக்கு நம்ம பிள்ளைகள் காதல்னு சொல்லி நின்னா நாம் சட்டுனு ஏத்துக்குவோமான்னு தெரியல.
ஏத்துகிட்டுதான் ஆகணும். கலித்தொகையில் தன் காதலனுடன் உடன்போக்கு மேற்கொண்ட மகளைத் தேடிவரும் செவிலித்தாயிடம் எதிர்பட்ட சான்றோர் சொன்னது    தெரியுமில்லையா? மலையிலே பிறந்தாலும் மார்பிலே பூசுபவர்க்கல்லாது அந்த சந்தனத்தால் மலைக்கு என்ன பயன்? கடலிலே பிறந்த முத்தால்...
புரியுதுநம் மகளாயிருந்தாலும் உரிய பருவத்தில் அவள் அவளுக்குப் பிடித்தவருடன் வாழ்தலே இயல்பு. அதைத்தானே சொல்லவரீங்க? நானும் படிச்சிருக்கிறேன். அதுபோல உடன்போக்கு போகுமுன் ஒரு பெண் படும் பாட்டையும் எவ்வளவு அழகா குறுந்தொகை காட்டுது. தீயில் விழுந்த தளிர் போலன்னு சொல்லும்போதே அவள் நிலைமை கண்முன் விரியுதே.
சங்க கால இலக்கியங்களில் இருந்து எத்தனை எத்தனை அருமையானப் பாடல்களை அள்ளி அள்ளித் தருகிறார் முனைவர் இரா.குணசீலன். அவருடைய வேரைத்தேடி வலைப்பூ தமிழ் ஆர்வலர்களுக்கு ஒரு மாபெரும் இலக்கியப் பெட்டகம்தான்.  
தமிழ்மொழியைக் கற்பதும் கதைப்பதுமே சொர்க்க சுகம்  என்று அம்பாளடியாள் சொல்வது எத்தனை உண்மை! இன்னொரு கவிதையில் சொல்றாங்க,
கட்டிப் போட்ட கைக்குள் அடங்க என்றும்
கைக்குட்டை அல்லவே நாம் கற்ற தமிழ்! 
என்ன உணர்ச்சிகரமான வரிகள்!
தமிழராயிருந்தும் தமிழ்மொழியின் அருமை உணராதவங்க வாழ்க்கையில் எவ்வளவோ இழந்துட்டாங்கன்னுதான் சொல்லணும்.
தமிழில் ஆர்வம் இருந்தும் அழகிய மரபுக்கவிதைகள் எழுத முடியலையேன்னு வருந்துறவங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் அவலோகிதம். யாப்பு கற்காதவர்கள் எளிதாக அசை பிரிக்க உதவும் வகையில் அவலோகிதம் என்னும் மென்பொருளை உருவாக்கி நமக்கு வழங்கியிருக்கும் விநோத் அவர்களைப் பாராட்டணும். இனி மரபுக்கவிதை எழுத விரும்புபவர்கள் இதன்மூலம் எளிதாய்ப் பழகலாம்.
மரபுக்கவிதைன்னாலே புலவர் சா.இராமாநுசம் அவர்கள்தான் நினைவுக்கு வரார்.  கருத்தாழமிக்கப் பாடல்களை அழகுத் தமிழில் அவர் வழங்குறதைப் பார்த்தால் வியப்பும் மலைப்பும்தான் வருது.
பெற்றோரிடம் கோபித்துச் சென்ற அவரது நண்பரை கவிபாடியே வீடுதிரும்ப வைத்திருக்கிறாரே...  இந்நிகழ்ச்சி ஒன்றுபோதுமே அவர் கவித்திறனுக்கு எடுத்துக்காட்டு
ஆனால் பாவம், இங்கொரு கவிஞரின் கவித்திறனைக் கேலி செய்து அவரது நண்பரே காயப்படுத்தியிருக்கிறார். எழுதிக்குவித்துஎன்ன பயன்   என்று சிவகுமாரன் கவிதைகள் சிவகுமாரனை விரக்தியடையச் செய்த நண்பரை என்னன்னு சொல்றது?
அந்த நண்பர்கிட்டப் போய் கவிராயனும் கொல்லனும்  கதையைச் சொல்லணும்.
அதென்ன கதை? 
தங்கம்பழனியின் சிறுவர்கதை இது. இதுமாதிரி நிறையக் கதைகளும் பாடல்களும் இங்கே கொட்டிக்கிடக்கு
கவிதைகள் பல வித மனங்களில் இருந்து பல விதமான உணர்வுகளின் அடிப்படையில் வெளிப்படுவதால் அதைப் படிக்கும் எல்லோருடைய எண்ணத்துக்கும் ஒத்துப் போகணுங்கிற அவசியம் இல்லை. ஒத்துப்போகாததாலோ, புரியாததாலோ அதைக் கேலி பேசுறது பெரும் தவறு. காகித ஓடம் பத்மா எழுதியதுபோல் யாருக்கும் புரியாத கவிதைகள்  தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் காத்திருக்கும், அதைச் சரியாகப் புரிந்துகொள்ளும் வாசகன் வரும்வரை. அந்தக் கவிதை பற்றிப் படிக்கையில் மிகவும் பரிதாபமா இருக்கு.
விமர்சனங்களை எதிர்கொள்ளுவது எப்படின்னு ஒரு நல்ல அலசலை முன்வைத்திருக்கிறார் ஹாய் நலமா?  டாக்டர் எம்.கே.முருகானந்தன். மிகத் தீவிரமான விமர்சனத்திலிருந்தும் உங்களால் நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தேவையற்றவையை அசட்டை பண்ண முடியும்னு அவர் உரைப்பதன் பின்னணியை நாம் உணரவேண்டும். சில தேவையில்லாதக் கருத்துகள் கேட்க நல்லாயிருக்கும். நல்லபிள்ளையாட்டம் உள்ளத்தில் புகுந்துகிட்டு அப்புறமா நம்மைக் குடைஞ்சு குடைஞ்சு ஒருவழி பண்ணிடும்.
ட்ரோஜன் ஹார்ஸ் மாதிரி!
அது வைரஸாச்சே
வைரஸ்தான். அதுக்கு அந்தப்பெயர் ஏன் வந்ததுன்னு தமிழ் கம்ப்யூட்டரில் படிச்சிப்பாரு. 
அட, எவ்வளவு பொருத்தமான பேர்!
சிலபேர் இப்படித்தான்! பார்த்தால் பரமசாது மாதிரி இருப்பாங்க! பழக ஆரம்பிச்சப்புறம்தான் தெரியும் அவங்களோட அராஜகம்!
…….?
ஏய்…. என்னை ஏன் முறைக்கிறே…. உன்னைச் சொல்றேன்னு நினைச்சியா? சொல்வேனா அப்படி….? என் ராஜாத்தியில்ல….
ஐயேபோதுமேசிந்தனை அழிப்பானைப்  பயன்படுத்தி மனத்தில் உருவாகும் தேவையில்லாத சிந்தனைகளை அழிச்சிடலாம்னு துரைடேனியல் சொல்லியிருக்காரேஅதுமாதிரி எல்லாராலும் செய்ய முடிஞ்சா வாழ்க்கையில் பிரச்சனைகளே இருக்காது. இல்லையா?
கடையில் விக்கிறதா இருந்தா ஆளுக்கொண்ணுன்னு வாங்கி மாட்டிக்கலாம். மூளைக்குள் உருவாக்குறது ரொம்பக் கஷ்டம். மூளைன்னு ஒண்ணு இருக்கணும் முதலில் அதுக்கு!  மறுபடியும் முறைக்காதேடி. நான் உன்னைச் சொல்லல 

(கணவனும் மனைவியும் பண்ற கலாட்டாவை ரசிச்சீங்களா? நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாமா? அதுவரைக்கும் எல்லோருக்கும் வணக்கம்.  நாளை சந்திப்போம். வணக்கம்.)


50 comments:

 1. காட்டாறு....கேள்விப்பட்டுருக்கேன். ஆனால் இப்போதான் நேரில் பார்க்கிறேன்!!!!!!!!

  எல்லா இடத்திலும் புகுந்து புறப்பட்டு...

  இவ்வளோ அறிமுகங்களா!!!!!!!

  போகும் வழியில் 'புல்லுக்கும் பொசியுமாம்' போல...நமக்கும்.....

  நன்றிகள் பல.

  ReplyDelete
 2. ஒருநாள் பதிவில் பலபேரும்
  உரைத்த பெருமை உமைசாரும்
  வருநாள் முற்றும் வருவாரை
  வாழ்த்திட அறிமுகம் பெறுவாரை
  திருநாள் போல பாராட்டி
  தென்றலாய்த் தவழச் சீராட்டி
  தருவீர்!தந்தீர்!என்பெயரே
  தன்னிகர் இல்லா கீதாவே
  நன்றி!

  ReplyDelete
 3. ஒருநாள் பதிவில் பலபேரும்
  உரைத்த பெருமை உமைசாரும்
  வருநாள் முற்றும் வருவாரை
  வாழ்த்திட அறிமுகம் பெறுவாரை
  திருநாள் போல பாராட்டி
  தென்றலாய்த் தவழச் சீராட்டி
  தருவீர்!தந்தீர்!என்பெயரே
  தன்னிகர் இல்லா கீதாவே
  நன்றி!

  ReplyDelete
 4. வலைச்சரத்தில் றேடியோஸ்பதி கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் மிக்க நன்றி

  ReplyDelete
 5. எத்தனை எத்தனை அழகான அறிமுகங்கள் கீதமஞ்சரி! அற்புதம்! அதுவும் அவலோகிதம்... என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு மிகமிகப் பயன்தரும் விஷயம்! அறிமுகம் பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களும், உங்களுக்கு என் நன்றியும்!

  ReplyDelete
 6. உரையாடல் தொனியில் வலைச்சரத்தைத் தொடுத்திருப்பது அருமை..!!

  வாசிப்பவர்களுக்கு சுமை தெரியாத நடையில் எழுதிய பாங்கு இனிமை.!!

  வாசிப்பிற்கிடையில் அறிமுக இடுகைகள், அறிமுகப் பதிவர்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடிந்தது..

  குறிப்பாக கிளிப்பூவைப் பற்றிய இடுகை புதுமை..!!

  வலைச்சரம் மணம் கமழ்கிறது..!!!

  தொகுத்தளித்தமைக்கும்,உங்களின் உழைப்புக்கும் மிக்க நன்றி..!! வாழ்த்துகள்..!!

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் சகோதரி அறிமுகம் செய்த அத்தணையும் விலை மதிப்பில்லா கற்கள் அதை அழகுபட கோர்த்து மாலை செய்த விதம் பார்பவரை வசீகரிக்க செய்கிறது கணவனும் மனைவியும் கோர்த்த மாலை அல்லலவா ??????/ அதுதான் இத்தனை சுவாரசியங்கள் .. என்னையும் என் முதல் காதலையும் அனைவரும் அறியும்வண்ணம் பறை சாற்றியதர்க்கு மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி இனிது நடக்கட்டும்

  ReplyDelete
 8. பலரின் புதிய அறிமுகம் உங்களின் தேடல் மூலம் வாசம் வீசுது கவியின் செயல்கள்!

  ReplyDelete
 9. ரசித்து வாசிக்கும்படி உள்ளது. அருமை. நடுவே நானும்....

  நன்றிப்பா.

  ReplyDelete
 10. அப்பப்பா.. எத்தனை விதமான அறிமுகங்கள்..

  உங்கள் கடுமையான உழைப்புக்குப் பாராட்டுகளுடன் அறிமுகங்களுக்கு வாழ்த்துகளும்.

  ReplyDelete
 11. மல்லிகை மணத்துடன் ஆரம்பித்த நல்ல பல அறிமுகங்கள்.

  அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

  அறிமுகம் செய்த தங்களுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete
 12. guna thamizh said...

  \\அறிமுகங்கள் அருமை..\\

  முதல் பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவரே.

  ReplyDelete
 13. துளசி கோபால்said...

  \\காட்டாறு....கேள்விப்பட்டுருக்கேன். ஆனால் இப்போதான் நேரில் பார்க்கிறேன்!!!!!!!!

  எல்லா இடத்திலும் புகுந்து புறப்பட்டு...

  இவ்வளோ அறிமுகங்களா!!!!!!!

  போகும் வழியில் 'புல்லுக்கும் பொசியுமாம்' போல...நமக்கும்.....

  நன்றிகள் பல.\\

  காட்டாறு என்னும் உவமையை மிகவும் ரசித்தேன்.

  புல்லா? அப்படியெனில் பெரும்புல்! தென்னையும் புல்வகைதானாமே... தொல்காப்பியர் சொல்லியிருக்காரே...

  தங்கள் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 14. @ புலவர் சா இராமாநுசம்

  பாச்சரத்தால் வலைச்சரப்பின்னூட்டத்தினை அலங்கரித்தத் தங்களுக்கு மிகவும் நன்றி ஐயா.

  ReplyDelete
 15. @ கானா பிரபா

  தங்கள் வருகைக்கும் மகிழ்வின் பகிர்வுக்கும் மிகவும் நன்றி.

  ReplyDelete
 16. @ கணேஷ்,

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி கணேஷ். அவலோகிதம் உங்களுக்குப் பயன்படுமென்பதை றிந்து மிகவும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 17. @ தங்கம்பழனி,

  தங்கள் வருகைக்கும் கருத்துரைத்துப் பாராட்டியதற்கும் மிகவும் நன்றி.

  ReplyDelete
 18. @ கோவை மு.சரளா

  அழகானப் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி சரளா.

  ReplyDelete
 19. @ கோவை மு.சரளா

  அழகானப் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி சரளா.

  ReplyDelete
 20. @ தனிமரம்

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

  ReplyDelete
 21. @ ஹூஸைனம்மா,

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

  ReplyDelete
 22. @ அமைதிச்சாரல்

  தங்கள் வருகைக்கும் ஊக்கம்தரும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி.

  ReplyDelete
 23. @ வை.கோபாலகிருஷ்ணன்,

  தங்கள் வருகைக்கும் ஊக்கம்தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 24. கலக்கிட்டிங்க,அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. இத்தனை அறிமுகங்களா!!!!

  கலக்கலா இருந்தது. வாழ்த்துகள்.

  ReplyDelete
 26. ஒரு பெரிய கூட்டமே சேர்ந்து இருக்கிறாங்கப்பா.அப்பாடி......!

  ReplyDelete
 27. அழகிய வண்ணத்து பூச்சியுடன்
  ஆரம்பம் கலக்கல் .......
  ஆவாரம் பூ போல அழகான அறிமுகங்கள் சகோதரி..
  எனக்கு அறிமுகம் இல்லாதவர்களை சென்று பார்க்கிறேன்.

  ReplyDelete
 28. நன்றி சகோதரி.
  உண்மையில் அவன் தான் நல்ல நண்பன். என்னைக் கேலி செய்து கேலி செய்து உசுப்பேற்றியே நிறைய கவிதைகள் எழுத வைத்தான் .

  ReplyDelete
 29. முதலில் பாராட்டுக்கள். வலைச்சரத்தில் தொகுப்பதற்கு.

  இரண்டாவது ஆச்சரியம்! எவ்வளவு ஹோர்ம் வேக் செய்திருக்கறீர்கள். இத்தனை விதம் விதமான, வகை வகையான வலைத்தளங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். ஒரு நாளில் நீங்கள் அறிமுகப்படுத்தியதை நான் வாசிக்க எத்தனை நாட்கள் தேவையோ?

  மூன்றாவதாக எனது முருகானந்தன் கிளிக்குகள் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு.
  வழக்கமாக எல்லோரும் எனது மருத்துவ தளத்தையே அறிமுகப்படுத்துவார்கள். நீங்கள் முற்றிலும் வித்தியாசமாக எனது கவிதை புகைப்படங்கள் அடங்கியதை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.
  நன்றி

  ReplyDelete
 30. அறிமுகங்கள் பலரையும் ஒரே பார்வையில் தந்த உங்களுக்கு நிறைந்த வாழ்த்துக்கள்.

  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  "ரம்யம்" அறிமுகத்துக்கு மகிழ்வுடன் நன்றி கூறுகின்றது.

  ReplyDelete
 31. என் வலையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி கீதாஃ

  ReplyDelete
 32. என்னையும் அறிமுகப்படுத்திய அன்புக்கு மனமார்ந்த நன்றி!

  கூட்டுக்குடும்பம் சொன்ன செய்திகள் அருமை. அனைத்து அறிமுகங்களும் அசத்தல்.

  ReplyDelete
 33. உங்கள் கடுமையான உழைப்புக்கு ஒரு சல்யூட்!

  ReplyDelete
 34. அம்மாடீயோவ்! எவ்வளவு அறிமுகம்! இன்று காலையில் வர முடியவில்லை மாலை தான் கிடைத்தது கருத்திட. மிக ஆச்சரியமாக உள்ளது எவ்வளவு தேடுதல்! வாழ்த்துகள் சகோதரி அனைத்து அறிமுகங்களிற்கும், உங்கள் கடின உழைப்பிற்கும். மகிழ்ச்சி. சங்கீதமாகவே உள்ளது.அன்புடன்
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 35. அனைவர்க்கும் வாழ்த்துக்கள் ):

  ReplyDelete
 36. அடுக்குப்பானை வலைப்பூவையும் தங்களின் பதிவில் அறிமுகப்படுத்தியதிற்கு மிக்க நன்றிங்க கீதமஞ்சரி... நல்ல அறிமுகங்கள்.. வாழ்த்துகள்.

  ReplyDelete
 37. நன்றி கீதமஞ்சரி...

  ReplyDelete
 38. @ thirumathi bs sridhar said...

  \\கலக்கிட்டிங்க,அனைவருக்கும் வாழ்த்துகள்.\\

  நன்றி ஆச்சி. தொடர்ந்து வாங்க.

  ReplyDelete
 39. @ கோவை2தில்லி
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆதி.

  @ ஹேமா
  வாங்க ஹேமா, அசந்து போனீங்களா? ஆயாசமானீங்களா?

  @ மகேந்திரன்
  வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி மகேந்திரன்

  @ சிவகுமாரன்
  நல்லது சிவகுமாரன். தங்கள் கவிதை என்னைப் பாதித்ததாலேயே இங்கு குறிப்பிட்டேன்.

  ReplyDelete
 40. @ Muruganandan M.K.

  தங்கள் வருகைக்கும் நெடிய பின்னூட்டத்துக்கும் நன்றி டாக்டர். மூன்று பாராட்டுக்களையும் நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன். முருகானந்தன் கிளிக்குகளில் என் மனம் தொட்டக் கவிதையை இங்கு அறிமுகப்படுத்தியதில் நிறைவு எனக்குதான் டாக்டர்.

  @ மாதேவி,
  வாழ்த்துக்கு மிகவும் நன்றி மாதேவி.

  @ guna thamizh
  தங்கள் வலைக்கு அறிமுகம் தேவையில்லை என்றாலும் புதியவர்களுக்கு ஒரு வழிகாட்டலாகவே எண்ணி அறிமுகப்படுத்தியுள்ளேன் முனைவரே. தங்கள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 41. @ துரைடேனியல்

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் மனமார்ந்த நன்றி.

  @ kovaikkavi
  தங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி.

  @ wesmob
  வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

  @ க.பாலாசி
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

  @ Robin son
  வருகைக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 42. அருமையான அறிமுகங்கள்.

  நன்றி.

  ReplyDelete
 43. அருமையான அறிமுகங்கள்.

  நன்றி.

  ReplyDelete
 44. என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி கீதாமஞ்சரி அவர்களே..

  நன்றி.

  ReplyDelete
 45. @ லோகு,
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லோகு.

  @ முகுந்த் அம்மா
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முகுந்த் அம்மா.

  ReplyDelete
 46. வித்தியாசமாக பாடி அருமையான சங்கீதத்துடன் அறிமுகப்படுத்தி இருக்கீஙக்

  அனைவருக்கும் வாழ்த்துகக்ள்

  ReplyDelete
 47. தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஜலீலா.

  ReplyDelete
 48. அறிமுகம் செய்தமைக்கு நன்றி.மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது