07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 31, 2012

கதம்பம் - 6 (வலைச்சரத்தில் இன்று)

இனறைக்கு வலைச்சரத்தில் ஆறாவது நாள். இன்றும் சில அறிமுகங்களைக் காணலாம்.

1. நளாயினி ஸ்விட்சர்லாந்தில் வசிக்கிறார். இவரது தளமான உயிர்கொண்டு தளத்தில் கவிதை, கட்டுரை போன்ற அருமையான பதிவுகள் எழுதியிருக்கிறார். சமீப காலங்களில் எழுதியதாக தெரியவில்லை. ஆனால் இவரது பழைய பதிவுகள் சுவையாக இருக்கின்றன. இவரது கவிதையான பால் கடன் படித்துப் பாருங்கள். ஒரு தாயின் ஏக்கம் தெரிகிறது.

2.ஜீவி நடத்தும் பூவனம் தளத்தில் பல்சுவைக் கட்டுரைகள் நிறைந்துள்ளன. தினம் தினம் சந்தோஷம் என்ற அவரது வாழ்வியல் தொடரை வாசித்துப் பாருங்கள். நதியோரம் காற்று வாங்கிய உணர்வு வரும்.

3. தமிழ்ச்சித்தன் எழுதும் ஒரு அகதியின் டைரிக்குறிப்பு என்ற தளத்தில் இருக்கும் இந்த கட்டுரையைப் பாருங்கள். நாட்டைப் பற்றி நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது - அருந்ததிராய். இந்த தளத்தில் அருமையான தமிழ் தளங்களின் நீண்ட பட்டியல் ஒன்று உள்ளது. க்ளிக்கிப் பாருங்கள்.

4. துமிழ் (தமிழ் அல்ல) நடத்தும் மருத்துவம் பேசுகிறது என்ற தளத்தில் அனைத்து வியாதிகளுக்கும் தேவையான ஆலோசனை மற்றும் குறிப்புகள் இருக்கிறது. உங்களுக்கு ஏதேனும் வியாதியிருந்தாலும் அதைப்பற்றி இமெயில் அனுப்பினால் பதில் தருவேன் என்கிறார். இதை விட வேறென்ன வேணும்? உடனே விஜயம் செய்யுங்கள். உதாரணத்திற்கு அவரது மருத்துவக் கட்டுரையான சர்க்கரை வியாதியும் சளியும் படித்துப் பாருங்கள்.

4. ரமேஷ் நடத்தும் தமிழ் நகைச்சுவை தளத்தில் ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகள் குவிந்து கிடக்கின்றன. கவலை மறந்து சிரிக்க இந்த தளத்தை அணுகுங்கள். உதாரணத்துக்கு சிரிப்பைத் தூண்டும் புகைப்படங்கள் என்ற பதிவை வாசியுங்கள். இல்லை இல்லை பாருங்கள். சிரிப்பு பொத்துக் கொண்டு வரும்.


5. தமிழ் இனிது என்ற இத்தளத்தில் அழகான கவிதைகள் இருக்கின்றன. படியுங்கள் இக்கவிதையை நெடுஞ்சாலையில் சிதறிய மனிதநேயம்.


6. தமிழ் அமுதன் நடத்தும் கண்ணாடி தளத்தில் பல்சுவைப் பதிவுகள் எழுதுகிறார். ஒரு சிறுகதை. நிஜக்கதை போல் இருக்கிறது. ஒரு இடத்தை விற்கிறார். பிறகு வருந்துகிறார். காரணம் நெஞ்சைப் பிழிகிறது. கனமான கதை. படியுங்கள். கருவேல மனம்.

7. ஜீவநதி தளத்தில் தங்கராசு எழுதியுள்ள இந்த மாரடைப்பு பற்றிய மருத்துவக் கட்டுரையைப் படியுங்கள். நிச்சயம் கவரும். படங்களுடன் விளக்குகிறார். மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகள் எழுதியிருக்கிறார்.


நாளை வலைச்சரத்தில் கடைசி நாள். மீதமுள்ள சில பதிவுகளை நாளை அறிமுகப்படுத்துகிறேன். நன்றி!.

17 comments:

 1. அருமையான தொகுப்பு சகோ

  ReplyDelete
 2. அருமையான பலரின் அறிமுகம் .

  ReplyDelete
 3. வலைச் சரத்தில் தங்களைப் பார்க்க முடிகிறது.
  தங்கள் வலை திறக்க மறுக்கிறது
  காரணம் தெரியவில்லை!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 4. @ ஹைதர் அலி

  - வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ. (Spl Tnx 4 infn.)

  ReplyDelete
 5. @ தனிமரம்

  - வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 6. @ புலவா சா இராமாநுசம்

  - அய்யா! நான் நண்பர்களை விட்டு பரிசோதித்து விட்டு அமைப்புகளில் ஏதும் சிக்கல் ஏதும் உள்ளதா என்று பார்த்துவிட்டு உங்களுக்கு தகவல் சொல்லுகிறேன். தங்களின் முயற்சிக்கும் என் மீதுள்ள அன்பிற்கும் நன்றி!

  ReplyDelete
 7. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. தங்கள் ஏழு அறிமுகவாளர்களிற்கும் வாழ்த்துடன், தங்களிற்கும் வாழ்த்துகள். ஆசிரியப் பயணம் நிறைவுறக் கிட்டவாக வந்துவிட்டீர்கள். சந்திப்போம்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 9. @ வரலாற்றுச் சுவடுகள்

  - வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 10. @ Kovaikkavi

  - தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்குக் கருத்துரைக்கும் நன்றி மேடம்.

  ReplyDelete
 11. அருமையான பலரின் அறிமுகம் . அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 12. @ Lakshmi

  - வருகைக்கும் வாழ்த்துக்கும் தொடரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 13. அருமையான அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 15. சிறப்பான அறிமுகங்கள் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 16. ஆறாம் நாளில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் எமது நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
 17. ஞாயிறு பதிவு திறக்க இயலவில்லை. கதம்பம் - 7 (வலைச்சரத்தில் இன்று) Sorry, the page you were looking for in this blog does not exist. என்று வருகிறது.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது