07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label துரை டேனியல். Show all posts
Showing posts with label துரை டேனியல். Show all posts

Saturday, March 31, 2012

கதம்பம் - 7 (வலைச்சரத்தில் இன்று)





இன்று வலைச்சரத்தில் எனக்கு ஏழாவது நாள். அதாவது கடைசி நாள். இன்றும் சில பதிவுகளைப் அறிமுகம் செய்து நெகிழ்ச்சியுடன் விடைபெறுகிறேன். அறிமுகங்களைப் பார்த்து விடலாம்.

1. ராஜ்குமார் நடத்தும் தமிழ்க்குறிஞ்சி தளத்தில் இருக்கும் இந்தக் கட்டுரையைப் பாருங்கள. இது கட்டுரையா அல்லது கவிதையா என வியக்க வைக்கும் அருமையான பதிவு. உணர்வுகள் நெருடுகின்றன. நெஞ்சம் கனத்துப் போகிறது. கண்கள் பனிக்கிறது. உங்களுக்காக இதோ அந்த பதிவு. ஒரு குருவிக்கு நிகழ்ந்தது. ஆனால் இப்பதிவர் நீண்ட நாட்களாக பதிவெழுதாமல் இருந்து வருகிறார். இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

2. சுபா நடத்தும் சுபாவின் குறிப்பு தளத்தில் உள்ள இந்த பதிவைப் படியுங்கள். வீட்டிலுள்ள பொருட்களைப் பாதுகாக்க டிப்ஸ். பல மருத்துவக் குறிப்புகளும் எழுதியுள்ளார்.

3. ச.பிரேம்குமார் நடத்தும் மொழியோடு ஒரு பயணம் என்கிற வலைப்பூவில் உள்ள இந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற கவிதையைப் பாருங்கள். காதலிக்கு ஏக்கத்தோடு வாழ்த்து சொல்லும் கவிதை. ஏன் என்று நீங்களே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

4. இந்த மண்குதிரை எனும் வலைப்பூவில் ஆசிரியர் தேவதச்சனின் கவிதை நூல் ஒன்றை விமர்சனம் செய்து எழுதியுள்ள இந்த ஒரு கணத்தின் நூற்றாண்டு அனுபவம் என்கிற கட்டுரையை வாசித்துப் பாருங்கள். நவீனத்துவக் கவிதைகளும் விமர்சனங்களும் விரவிக் கிடக்கிற தளம் இது.

5. தமிழ்த்தேனீயின் தளத்தை (அவரது தளத்தின் பெயரும் அதுவே) வாசிக்கத் தவறாதீர்கள். அருமையாக உள்ளது. அவரது உணவும் ஆரோக்கியமும் ஒரு ஒப்பற்ற மருத்துவக் கட்டுரையாகும். அது எப்படி உணவையே மருந்தாக மாற்றுவது என்ற அழகாக விவரிக்கிறது.

6. தமிழ் உதயத்தின் (தளத்தின் பெயரும் அதுவே) சிறுகதைகளை வாசிக்கத் தவறாதீர்கள். தரமான கதைகள். வார இதழ்களிலும் எழுதி வருகிறார். கல்கி இதழில் வெளிவந்த அவரது மீசைக்கார அப்பா என்ற இக்கதையை வாசியுங்கள்.

7. இதோ தமிழ்ப்புத்தாண்டு வரப் போகிறது. ஆனால் இந்த சங்கப்பலகை எனும் தளத்தின் ஆசிரியர் தை முதல் தேதிதான் தமிழ்ப்புத்தாண்டு என்று அடித்துச் சொல்கிறார். அதற்கு சில காரணங்களும் சொல்கிறார். முடிவு எடுக்க வேண்டியது உங்க பொறுப்பு.

நன்றி சொல்லும் நேரமிது.

- இந்த அருமையான வலைச்சரப் பணியை எனக்கு வழங்கி கௌரவப்படுத்திய அன்பின் சீனா சார் அவர்களுக்கும் மற்றும் பிரகாஷ் சார் அவர்களுக்கும் மற்றும் வலைச்சர ஆசிரியர் குழு அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதைவிட இந்த ஏழு நாட்களும் நான் தொடுத்த வலைச்சரங்களை பார்வையிட்டு வாக்கிட்டு கருத்துரையிட்டு எனக்குப் பேராதரவு வழங்கிய அத்தனை வலையுலக சொந்தங்களுக்கும் உன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை நெகிழ்சியுடன் தெரிவிக்கிறேன். நன்றி! நன்றி! நன்றியைத் தவிர வேறில்லை....!

மேலும் வாசிக்க...

கதம்பம் - 6 (வலைச்சரத்தில் இன்று)





இனறைக்கு வலைச்சரத்தில் ஆறாவது நாள். இன்றும் சில அறிமுகங்களைக் காணலாம்.

1. நளாயினி ஸ்விட்சர்லாந்தில் வசிக்கிறார். இவரது தளமான உயிர்கொண்டு தளத்தில் கவிதை, கட்டுரை போன்ற அருமையான பதிவுகள் எழுதியிருக்கிறார். சமீப காலங்களில் எழுதியதாக தெரியவில்லை. ஆனால் இவரது பழைய பதிவுகள் சுவையாக இருக்கின்றன. இவரது கவிதையான பால் கடன் படித்துப் பாருங்கள். ஒரு தாயின் ஏக்கம் தெரிகிறது.

2.ஜீவி நடத்தும் பூவனம் தளத்தில் பல்சுவைக் கட்டுரைகள் நிறைந்துள்ளன. தினம் தினம் சந்தோஷம் என்ற அவரது வாழ்வியல் தொடரை வாசித்துப் பாருங்கள். நதியோரம் காற்று வாங்கிய உணர்வு வரும்.

3. தமிழ்ச்சித்தன் எழுதும் ஒரு அகதியின் டைரிக்குறிப்பு என்ற தளத்தில் இருக்கும் இந்த கட்டுரையைப் பாருங்கள். நாட்டைப் பற்றி நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது - அருந்ததிராய். இந்த தளத்தில் அருமையான தமிழ் தளங்களின் நீண்ட பட்டியல் ஒன்று உள்ளது. க்ளிக்கிப் பாருங்கள்.

4. துமிழ் (தமிழ் அல்ல) நடத்தும் மருத்துவம் பேசுகிறது என்ற தளத்தில் அனைத்து வியாதிகளுக்கும் தேவையான ஆலோசனை மற்றும் குறிப்புகள் இருக்கிறது. உங்களுக்கு ஏதேனும் வியாதியிருந்தாலும் அதைப்பற்றி இமெயில் அனுப்பினால் பதில் தருவேன் என்கிறார். இதை விட வேறென்ன வேணும்? உடனே விஜயம் செய்யுங்கள். உதாரணத்திற்கு அவரது மருத்துவக் கட்டுரையான சர்க்கரை வியாதியும் சளியும் படித்துப் பாருங்கள்.

4. ரமேஷ் நடத்தும் தமிழ் நகைச்சுவை தளத்தில் ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகள் குவிந்து கிடக்கின்றன. கவலை மறந்து சிரிக்க இந்த தளத்தை அணுகுங்கள். உதாரணத்துக்கு சிரிப்பைத் தூண்டும் புகைப்படங்கள் என்ற பதிவை வாசியுங்கள். இல்லை இல்லை பாருங்கள். சிரிப்பு பொத்துக் கொண்டு வரும்.


5. தமிழ் இனிது என்ற இத்தளத்தில் அழகான கவிதைகள் இருக்கின்றன. படியுங்கள் இக்கவிதையை நெடுஞ்சாலையில் சிதறிய மனிதநேயம்.


6. தமிழ் அமுதன் நடத்தும் கண்ணாடி தளத்தில் பல்சுவைப் பதிவுகள் எழுதுகிறார். ஒரு சிறுகதை. நிஜக்கதை போல் இருக்கிறது. ஒரு இடத்தை விற்கிறார். பிறகு வருந்துகிறார். காரணம் நெஞ்சைப் பிழிகிறது. கனமான கதை. படியுங்கள். கருவேல மனம்.

7. ஜீவநதி தளத்தில் தங்கராசு எழுதியுள்ள இந்த மாரடைப்பு பற்றிய மருத்துவக் கட்டுரையைப் படியுங்கள். நிச்சயம் கவரும். படங்களுடன் விளக்குகிறார். மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகள் எழுதியிருக்கிறார்.


நாளை வலைச்சரத்தில் கடைசி நாள். மீதமுள்ள சில பதிவுகளை நாளை அறிமுகப்படுத்துகிறேன். நன்றி!



.
மேலும் வாசிக்க...

Friday, March 30, 2012

கதம்பம் - 5 (வலைச்சரத்தில் இன்று)

வலைச்சரத்தில் இன்று ஐந்தாவது நாள். இன்றும் சில அறிமுகங்களைப் பார்க்கலாம்.

1. ஜ்யோவ்ராம் சுந்தர் தளமான மொழிவிளையாட்டு என்கிற வலைப்பூவில் அருமையான பல்சுவைப் பதிவுகள் எழுதி வருகிறார். நவீனத்துவம் மற்றும் முற்போக்கான படைப்புகளை படைத்து வருகிறார். நன்றாக எழுதுகிறார். கதை, கட்டுரை, கேள்வி-பதில் என்று நிறைய எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.

இவரது விமலாதித்த மாமல்லன் என்ற விமர்சனக் கட்டுரையை வாசித்துப் பாருங்கள்.

2. நீங்கள் மொழிப்பற்று மிக்கவரா? தமிழ் மொழி பற்றி அறிந்துகொள்ள வேண்டுமா? மொழி, பண்பாடு பற்றிய நிறைய தகவல்கள், தமிழ் அகராதிகள், கட்டுரைகள், பழந்தமிழ் இலக்கியங்கள் என்று அனைத்தும் இத்தளத்தில் குவிந்து கிடக்கின்றன. பார்க்கத் தவறாதீர்கள். உதாரணத்துக்கு அனைத்துலக தாய்மொழி நாள் என்ற கட்டுரையை வாசியுங்கள். தமிழ் வளர என்ன செய்ய வேண்டும்? என அருமையாக கூறுகிறார் சுப.நற்குணன்.


3. மரு.ஜா.மரியானோ என்பவர் நடத்தும் பயணங்கள் என்ற தளத்தில் அருமையான அற்புதமான கட்டுரைகள் மற்றும் பல்சுவைப் பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. அருமையாக எழுதுகிறார். உதாரணத்திற்கு அவரது சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு வேண்டுமா வேண்டாமா என்ற கட்டுரையை வாசியுங்கள்.

4. பூங்குழல் நடத்தும் பூச்சரம் வலைப்பூவில் அருமையான கவிதைகள், கட்டுரைகள் என்று குவிந்திருக்கின்றன. நன்றாக எழுதுகிறார். கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய அவரது வித்தியாசமான பார்வையை கூடங்குளம் என்ற அவரது கட்டுரையில் காணுங்கள்.

5. ஜீவா வெங்கட்ராமன் நடத்தும் என்வாசகம் வலைப்பூவை சுவாசித்துப் பாருங்கள். இளைப்பாறுதலாக உணர்வீர்கள். இசையும் தெய்வீகமும் விஞ்ஞானமும் கலந்து அருமையான படைப்புகளை படைத்துள்ளார். பாடல்களை கர்நாடிக் ராகம் மெட்டுப் போட்டு ராக தாள குறிப்புகளுடன் படைக்கிறார். மனம் ஏதய்யா என்ற தெய்வீகப் பாடலைப் படியுங்கள். பாடுங்கள்.

6. உழவன் என்பவர் நடத்தும் தமிழோடு என்ற வலைப்பூவில் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பல தளங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் என்று அருமையான படைப்புகள் பல உள்ளன. உதாரணத்துக்கு வால்மீகி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? என்ற தகவல் கட்டுரையைப் படியுங்கள்.

7. தீஷு மதுரையில் வசிக்கிறார். இவர் நடத்தும் பூந்தளிர் வலைப்பூவில் குழந்தைகளுக்கான ஏராளமான விஷயங்கள் குவிந்திருக்கின்றன. பெரியவர்களும் படித்தால் குஷியாகிவிடுவீர்கள். திடீரென நாம் கார்ட்டூன் படம் பார்க்கிறோமே. அதுபோலத்தான். இவரது தளத்தில் பழைய அம்புலிமாமா புத்தகங்களைக் காணும் லிங்கை கொடுத்திருக்கிறார். இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு. பேப்பரை வெட்டி அழகாக கலர்புல்லாக பேப்பர் வியூவிங் செய்வது எப்படி? என்ற பதிவை படித்துப் பாருங்கள்.



- அடுத்த அறிமுகங்களோடு நாளை வருகிறேன். நன்றி.


டிஸ்கி:

இந்த பதிவை எழுதுவதற்குள் இரண்டு முறை கரண்ட் கட் ஆகிவிட்டது. என்னுடையது ரொம்ப ஸ்லோ கனெக்‌ஷன். இல்லையென்றால் இன்னும் நிறைய நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்தலாம். முடியவில்லை. காலத்தின் கோலம். வாய்பிருந்தால் பிற்காலத்தில் அவ்வாறு செய்கிறேன். இன்றைய பதிவு அறிமுகங்கள் இத்துடன் நிறைவு பெறுகின்றன. நாளை மற்றும் சில அற்புத பதிவர்களோடு உங்களைச் சந்திக்கிறேன். தொடர்ந்து எனக்கு ஆதரவுக் கரம் நீட்டும் பதிவுலக சொந்தங்களுக்கு என் நெஞ்சம் கனிந்த நன்றியை உரித்தாக்கிக் கொண்டு இன்றைய அறிமுகங்களை நிறைவு செய்கிறேன். நன்றி!
மேலும் வாசிக்க...

Thursday, March 29, 2012

கதம்பம் - 4 (வலைச்சரத்தில் இன்று)

இன்று வலைச்சரத்தில் நான்காவது நாள். இன்றும் கதம்பமாக சில பதிவுகளைப் பட்டியலிடுகிறேன். வளவளன்னு பேசிட்டு இருக்காமல் நேரா அறிமுகங்களுக்குப் போய் விடலாம்.

1. சந்தனமுல்லை எழுதிய பப்பு டைம்ஸ் படித்துப் பாருங்கள். நகைச்சுவைப் பதிவுகள் அருமையாய் எழுதுகிறார். இவரது தளத்தில் அருமையான பல பல்சுவைப் பதிவுகள் குவிந்திருக்கின்றன.

2. ரத்னா எழுதிய இந்த பூமியைத் தாக்கப் போகும் சூரியப் புயல் என்ற பதிவைப் பாருங்கள். அருமையாக உள்ளது. இவரது தளத்தில் பல்சுவைப் பதிவுகள் அழகழகாகப் பதியப்பட்டுள்ளது. தேடி வாசியுங்கள்.

3. வடிவேலன் எழுதும் இந்த gouthaminfotech.com தளத்தில் தொழில்நுட்பத் தகவல்களும் ஏராளமான இலவச சாப்ட்வேர்களும் குவிந்து கிடக்கின்றன. அருமையான தகவல் தொழில் நுட்பத் தகவல் களஞ்சியம். உதாரணத்துக்கு 101 தொழில்நுட்ப தளங்களின் பட்டியல் தரும் இவரது பதிவொன்றை படித்துப் பாருங்கள். 101 தளங்களின் தொகுப்பு.

4. தாமரைச் செல்வன் எழுதும் படிச்சதும் கடிச்சதும் படிச்சுப் பாருங்க. அவர் தளத்தை தவற விட மாட்டீங்க.

5. பத்ரிசேஷாத்ரி என்பர் அருமையான பல்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதிவருகிறார். எல்லாமே சும்மா 'நச்' 'நச்' னு இருக்குதுங்க. தரமான கட்டுரைகளைப் படிக்க இந்த தளத்தை அவசியம் பாருங்க. பாலுறவு பற்றிய திருநங்கைகளின் (ரோஸ்) கருத்தை வைத்து தொலைக்காட்சியில் இவர் பங்கு கொண்ட ஒரு கலந்தாய்வுப் பேட்டியை பற்றி இவர் எழுதியிருக்கும் கட்டற்ற பாலியல் சுதந்தரம் என்ற கட்டுரையை இப்போதே வாசியுங்கள்.

6. கீதா சாம்பசிவம் என்பவர் அருமையாக நடத்தி வரும் வலைப்பூதான் எண்ணங்கள். இதில் அருமையான பல்சுவைப் பதிவுகளை ரசிக்கும் வண்ணமாக வெளியிட்டு வருகிறார். எல்லா லேபிள்களையும் படித்துப்பார்த்தால் ருசிக்கிறது. உதாரணமாக தேயிலைத் தரத்தைப் பற்றி இவர் எழுதிய டீ குடிக்க வாங்க...! என்ற பதிவை வாசித்துப் பாருங்கள்.

மின்சாரத் தட்டுபாட்டால் நிறைய பதிவுகளை அறிமுகப்படுத்த முடியாமல் போகிறது. சரி. அடுத்த பதிவில் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Wednesday, March 28, 2012

கதம்பம் - 3 (வலைச்சரத்தில் இன்று)

இன்று வலைச்சரத்தின் 3-வது நாள். எனக்குப் பிடித்த பதிவுகளை நேற்று பட்டியலிட்டிருந்தேன். இன்றும் அதைத் தொடர்கிறேன். போலாம்...ரைட்...!

1. இவர் ஒரு ஆல்ரவுண்டர். கதை, கவிதை, கட்டுரை, படத்தோடு கூடிய அற்புத செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள் என்று எல்லாப் பகுதியிலும் அசத்தக் கூடியவர். பிரபலமான பதிவரும் கூட. வேற யாரைச் சொல்றேன்னு நினைக்கறிங்க... நம்ம சென்னைப் பித்தன் அவர்களைத்தான். அருமையான பதிவர். சும்மா சாம்பிளுக்கு ஒண்ணு.

நேரம் போதவில்லை!

2. தோழி சசிகலா அவர்கள் எல்லா கருப்பொருள்களையும் கொண்டு அழகழாய் கவிதை படைத்து வருகிறார்.அவரது சமீபத்திய கவிதையான தொடர்ந்திடுவோம் பயணமதை என்ற கவிதையை படித்துப் பாருங்கள்.

3. சகோதரர் ஹைதர் அலி அவர்கள் அறிவுபூர்வமான அருமையான கட்டுரைகளை அற்புதமாய் படைத்தளித்து வருகிறார். ஆக்கபூர்வமான இவரது படைப்புகள் தவறாமல் படிக்க வேண்டியவை. இவரது சமீபத்திய கட்டுரையான தொடாமலேயே ஷாக் அடிக்கும் கூடங்குளம் படித்துப் பாருங்கள். எத்தனை வித்தியாசமான அணுகுமுறை. இதைவிட அற்புதமான கட்டுரைகள் நிறைய உண்டு இவரது தளத்தில். படிக்கத தவறாதீர்கள்.

4. புதிதாக வலைப்பூ உருவாக்கம் செய்ய விரும்புவர்களுக்கும். வலைப்பூவை உருவாக்கிவிட்டு எப்படி அதை மேம்படுத்துவது என தொழில்நுட்பத் தகவல்கள் தெரியாதவர்களும் அவசியம் படிக்க வேண்டிய தொடர்தான் இந்த பிளாக் எழுதுவது எப்படி? என்கிற தொடர். எழுதியது நம்ம அப்துல் பாசித் அவர்கள். அற்புதமான தொழில்நுட்ப பதிவராவார். இவரது தளத்தைப் போய் பாருங்களேன்.அசந்து விடுவீர்கள்.அத்தனை அருமையான தொழில்நுட்பத் தகவல்கள். பிளாக் ஆரம்பிக்கணும்னா இவரது தளத்தை ஒரு விசிட் அடிச்சா போதுங்க. உதாரணத்துக்கு பிளாக் தொடங்குவது எப்படி - பகுதி 1 படித்துப் பாருங்கள்.


5. நண்பர் ஹாஜாமைதீன் அருமையான கட்டுரைகளை படைத்தளித்து வருகிறார். பிரயோஜனமான தகவல்கள் இவரது தளத்தில் ஏராளம் உண்டு. அதிரடி ஹாஜாதான் இவர். ஆபத்தை ஏற்படுத்தும் நான் ஸ்டிக் பாத்திரங்கள் என்ற இவரது பதிவை படித்துப் பாருங்களேன்.

6. அடுத்து பதிவர் வெங்கட் நாகராஜ். இவர் பல்சுவைப் பதிவுகள் எழுதினாலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் இவரது பிரயாணப் பதிவுகள். அந்நகரை நாமே சுற்றிப் பார்த்தது போல உணரச் செய்வன. மத்தியபிரதேசம் அழைக்கிறது என்ற தலைப்பில் ஒரு அருமையான தொடரை எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள். சாம்பிளுக்கு கீழே லிங்க்.

ஜான்சியில் ரயில் எஞ்சின்


7. அடுத்து ரஹீம் கசாலி. இவர் அரசியல் பதிவுகளை அட்டகாசமாய் எழுதி வருகிறார்.
சங்கரன்கோவிலில் ஜெயித்தது யார்?


மற்றவை அடுத்த பதிவில்.
மேலும் வாசிக்க...

Tuesday, March 27, 2012

கதம்பம் - 2 (வலைச்சரத்தில் இன்று)

இன்று எனக்குப் பிடித்த சில பதிவுகளை பட்டியலிடுகிறேன்.

எனக்குப் பிடித்த சில வலைப்பதிவுகள்:

1. இவர் அற்புதமான கவிஞர். நான் பதிவுலகில் கண்ட சிறந்த பதிவர்களில் இவரும் ஒருவர். வெறும் பொழுதுபோக்குக்காக காதல், கத்தரிக்காய் என்று எழுதாமல் ஆழமான கருப்பொருள் கொண்டு அழகான படிமம், குறியீடு உள்ளடக்கி அற்புதமாய் கவிதைகளைப் படைப்பவர். இன்றைய பதிவுலகக் கவிஞர்களில் இவர் தலைசிறந்தவர் எனலாம். மற்ற படைப்பாளிகள் இருக்கின்றனர். அநேகர் நல்ல கவிதைகளை தந்தாலும் பலரது கவிதைகளை படித்தவர்கள் தவிர பாமரர்கள் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் இவரது கவிதைகள் எளிமையின் மறுஉருவம். எளிமையாய் இருந்தாலும் அசத்தல் வார்த்தைகள். அலங்கார நடை. வானம் வரை எட்டும் உரைவீச்சு. இவா யார்? அவர்தான் ரமணி சார். இவரது கவிதைத் திறத்துக்கு ஓர் உதாரணமாக இந்த பரிணாமம் அல்லது யதார்த்தம் கவிதையை படித்துப் பாருங்கள். நீங்களே நான் சொல்வதனைத்தையும் ஒத்துக்கொள்வீர்கள். நல்ல தரமான பதிவர். தவறவிடாதீர்கள் இவரது கவிதைகளை.


2. அடுத்தது நம்ம முனைவர் இரா.குணசீலன். இவர் அற்புதமான படைப்பாளி. இந்த பரபரப்பான வாழ்க்கையில் இலக்கியங்களை நாம் மறந்துவிட்டோம். டென்சனாய் இருக்கும் நேரங்களில் இவரது படைப்புகளில் சற்று இலக்கியச் சாறு அருந்தினீர்களானால் நிச்சயம் உங்கள் இதயத்துக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். சந்தேகமில்லை. இவர் நம்மிடையே பதிவுலகில் இருப்பது நாம் செய்த பாக்கியமே. சாம்பிளுக்கு இந்த படைப்பை பாருங்கள்.

மனசை வாசித்தவள்

3. அடுத்து நாம் பார்க்க இருப்பது சகோதரி ஹேமா. இவர் அற்புதமான கவிஞராவார். கவிதை இவர் கரங்களில் துள்ளி விளையாடுகிறது. வார்த்தைகள் சரம் சரமாய் வந்து விழுகிறது. இவரது படைப்புகள் அனைத்துமே அருமையானவை. தவறவிடக் கூடாதவை. உதாரணத்துக்கு இந்த படைப்பைப் பாருங்கள்.

கனவு

4. அடுத்து நாம் பார்க்க இருக்கும் நபர் சகோதரர் மகேந்திரன் அவர்கள். வசந்தமண்டபம் மகேந்திரன் என்றால் பதிவுலகில் பிரசித்தம். எளிமையான வார்த்தைகளால் கவிதைச் சரம் தொடுக்கும் அற்புதப் படைப்பாளி. அழகழாய் கவிதை புனைகிறார். நாட்டுப்புற மெட்டில் சில நேரம் இவர் படைக்கும் பாடல்கள் அற்புதம். அழகு. உதாரணமாக இவரது கீழ்க்கண்ட படைப்பைப் பாருங்கள்.

நதிக்கரை தாகங்கள்


5. அடுத்து நாம் பார்க்க இருக்கும் நபர் சகோதரர் கணேஷ் அவர்கள். இவர் பயங்கர படிப்பாளி என்பது இவரது படைப்புகளைப் பார்த்தாலே புரியும். எழுத்துக்கள் அட்சர சுத்தம். கண்ணைப் பறிக்கும். நடைவண்டிகள் என்று ஒரு தொடர் எழுதுகிறார் பாருங்கள். அருமையிலும் அருமை. மற்றும் பல்சுவைப் பதிவுகளும் எழுதுகிறார். உதாரணத்துக்கு இவரது நடைவண்டிகள் தொடரின் 9-ம் பகுதியைப் பாருங்கள்.

நடைவண்டிகள் 9


6. அடுத்தது சகோதரி கீதா. கீதமஞ்சரி என்னும் வலைப்பூவினூடாக இவர் அற்புதமான படைப்புகளை படைத்து வருகிறார். இவர் உண்மையான கலைப் படைப்புகளை ஆழமாய் சுவாசிக்கும் குணமுடையவர். மேலோட்டமாக படிக்காமல் பதிவை நன்றாக உள்வாங்கி அழகாக பின்னூட்டமிடுவார். அதுவே அவரது ரசிப்புத்திறனையும், படைப்புத்திறனையும் வெளிப்படுத்துகிறது. படிப்பாளிதான் படைப்பாளி ஆக முடியும் என்பது அறிஞர்களுக்கே புரியும். அருமையான படைப்பாளி. எடுத்துக்காட்டாக இவரது ஓர் படைப்பு கீழே.

உயிரின் வலி

7. அடுத்து நாம் பார்க்கப் போகும் நபர் பதிவுலகிற்கு கிடைத்த சொத்து. இன்றைக்கு கவிதைகள் என்ற பெயரில் கவிதையின் அடிப்படைக் கூறுகளே தெரியாத கவிஞர்கள் என்ற பெயர் படைத்தவர்கள் பதிவுலகிலே பரவியிருக்கிற இந்த நேரத்திலே அற்புதமான மரபுக் கவிஞர் இவர். மரபுக் கவிதைகள் அநாயசமாய் அற்புதமாய் படைப்பவர். இவரைச் சொல்லாமல் இப்பதிவு நிறைவடையாது. இவரது திறமைக்கு ஓர் உதாரணம் கீழே.

மாற்றம் ஒன்றே நிலையாகும்


நேரமாகிவிட்டபடியாலும் பதிவு பெரிதாகிவிடக் கூடாதென்பதாலும் அடுத்த பதிவில் எனக்குப் பிடித்த மற்ற பதிவர்களைப் பற்றி சொல்கிறேன். இந்த பட்டியல் இதோடு முடிந்து விடவில்லை. அற்புதமான பதிவர்களுடன் நாளையும் நீளுகிறது...! காத்திருங்கள்!
மேலும் வாசிக்க...

Monday, March 26, 2012

கதம்பம் - 1 (வலைச்சரத்தில் இன்று)

வலைச்சரப் பணியின் தொடக்கமான முதல் பதிவில் என்னைப் பற்றி, என் பதிவுகளைப் பற்றி பேசியாச்சு. இனி நேரா பதிவுகள் அறிமுகத்துக்குப் போயிரலாம். பதிவுகளை ஒரு கதம்பம் போல தொகுத்திரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். போலாமா ரைட்...!

1. முதலில் கடவுள் வாழ்த்துலருந்து ஆரம்பிச்சுருவோமா? கடவுள் வாழ்த்துன்னவுடனே நமக்கு ஞாபகத்துக்கு வர்றது திருக்குறள்தான் இல்லையா. அந்த திருக்குறள் பதிவை வாசிச்சிருங்க. இந்த தளத்துல 1330 குறளும் அழகா வரிசைப்படுத்தப்பட்டு ஆங்கில மொழியாக்கத்துடன் உள்ளது. படிச்சா பிரமிச்சு போயிருவீங்க. உடனே போங்க.

2. நம்ம பதிவர் சந்தானம் என்ன சொல்ல வர்றார்னா அட இப்படியா சங்கதி னு சொல்றார். இவரோட தளத்துல என்ன விசேஷம்னா நம்ம தென்கச்சி சுவாமிநாதன் இன்று ஒரு தகவல் என்று தினமும் சொல்வாரே அதைப் போல அருமையான தகவல்களை இவரும் என்றும் ஒரு தகவல் அப்படின்னு சொல்றார். அத்தனையும் அருமை. படிச்சுத்தான் பாருங்களேன்.

3. நம்ம பதிவர் இளங்கோ அழகழகா கவிதை எழுதறார். என்னைக் கவர்ந்த கவிதை ஒன்னு கொஞ்சம் சொற்கள் மட்டுமே. மீதி கவிதைகளையும் நீங்களே போய் படிங்க. ஓ.கே.வா?

4. நம்ம தோழர் தமிழன் தன்னோட ஒரு பதிவில் கூகுளில் எப்படி நேர்த்தியா சர்ச் பண்றது (அதாவது வித்தியாசமான முறையில்) அப்படின்னு சொல்றார். கேளுங்க. கூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்.

5. பதிவர் சிவகுமார் தன்னுடைய உள்ளத்தை திறந்து சுவையான நடையில் சொல்லும் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் கதையைக் கேளுங்கள். மறுபரிசீலனை.


6. சர்க்கரை வியாதிக் கட்டிகளுக்கும், சூட்டினால் வரும் கட்டிகளுக்கும் பதிவர் டாக்டர் குயீர்ஷ்யூர் (Curesure) ஒரு எளிய ஆயுர்வேத மருத்துவ தீர்வு படியுங்கள். இந்த தளத்தில் எல்லா வியாதிகளுக்கும் அருமையான தீர்வுகள் உள்ளன. விசிட் பண்ணத் தவறாதீர்கள். அருமையான தளம்.

7. பதிவர் பிரபாதமு (பேரு தமிழ்ல கரெக்டான்னு அவர்தான் சொல்லணும்) ஓட்ஸ் சாப்பிட்டா முதுமைய விரட்டலாமா அப்படின்னு ஒரு அருமையான பதிவு இட்டிருக்கிறார். மற்ற அவரது அத்தனை மருத்துவ பதிவுகளும், பல்சுவைப் பதிவுகளும் அருமை. போய்ப் பாருங்கள்.

அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி!
மேலும் வாசிக்க...

சுய அறிமுகம் செய்து கொள்கிறேன் (வலைச்சரம்)

இன்று (26.03.2012) துவங்கும் வலைச்சர வாரத்தில் அன்பின் சீனா சார் மற்றும் பிரகாஷ் சார் ஆகியோரின் அன்பு கட்டளைக்கிணங்க ஆசிரியர் பொறுப்பை ஏற்க (தகுதியிருக்கா அப்படின்னு தெரியலை) இசைவு தெரிவித்தேன்.

என்னுடைய வலைப்பூவின் பெயரும் துரைடேனியல் தான். படித்து ஆதரவு தாருங்கள்.


முதலில் என்னுடையதில் சிறந்த பதிவுகளை பட்டியலிட சீனா சார் கேட்டுக்கொண்டார். இது கொஞ்சம் தர்மசங்கடமான விஷயம்தான். அடுத்தவங்க பதிவுன்னா பாய்ஞ்சு பாய்ஞ்சு எழுதிடலாம். நல்லதா பார்த்து பொறுக்கிடலாம். எனக்கேன்னா? சீரியஸ் மேட்டர்தான். என்னுடைய பதிவுகள் சிறந்தவையா இல்லையா என்பதை வாசகப் பதிவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

என்னுடையதுன்னா தயங்க வேண்டியிருக்கு. காரணம் இங்கே நீதிபதிகள் நான் இல்லை. நீங்கள்தான். இருந்தாலும் அடியேன் துணிகிறேன். முதலில் என்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். சீனா சார் என்னை ஏற்கனவே நேற்றே அறிமுகப்படுத்திட்டாரு. ஆனாலும் நானும் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல விழைகிறேன். கொஞ்சம் பொறுமையா படிங்க.

நான் வலைப்பூ தொடங்கியது ஒரு விபத்துத்தான். கணினி கிடைச்சா போதும் நேரம் போவது தெரியாம விளையாடிட்டும், வெப்சைட் பார்த்துட்டும் இருப்பேன். கூகுளில் ஒரு நாள் அப்படித்தான் என்னென்ன இருக்குன்னு நோண்டிப் பார்த்துகிட்டு இருந்தப்பதான் இந்த BLOG பத்தி பார்த்தேன். GOOGLE காட்டின வழிமுறையின் படி Step by Step ஆ முயற்சி செய்தப்போ பிளாக் ஓப்பன் ஆயிடுச்சி.

ரொம்ப நாளு எதுவுமே செய்யாம அப்படியே விட்டுட்டேன். ரொம்ப நாள் கழிச்சி ஒருநாள் தமிழ்மணம் என் கண்ணுல பட்டுச்சு. அப்பத்தான் தெரிஞ்சது. அடடா இப்படி ஒரு உலகம் இருக்குதான்னு. அப்புறம் என்னோட வலைப்பூவை நானே கூகுளின் வழிகாட்டுதலின் படியும் தமிழ்மணம் மூலமா அறிமுகமான தொழில்நுட்ப வலைத்தளங்கள் மூலமாகவும் வலைப்பூவை வடிவமைச்சேன் (ஆமா இவரு பெரிய வெப் டிசைனரு, போய்யா....!) அப்படின்னு நீங்க சொல்றது சரிதான். எல்லாம் இந்த கூகுளின் கைங்கர்யம்தான்.

இப்படித்தான் நான் இந்த வலையுலகிற்கு வந்தேன். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா நான் வலைப்பூ எழுத ஆரம்பித்து ஐந்து மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள்ள இந்த வலைச்சர ஆசிரியப் பணி. ஆனாலும் என் மேல் நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை தந்த சீனா சாருக்கும், பிரகாஷ் சாருக்கும் நன்றிகள் பல.

சரி. போதும் சுயபுராணம். இனி என் பதிவுகளைப் பற்றி பேசுவோம். இரத்தினச் சுருக்கமாத்தான் பேசப் போறேன்.


நான் அடிப்படையில் ஒரு கவிஞன். (அப்படித்தான் நான் நெனைச்சிகிட்டு இருக்கேன்.) ஆகவே நான் எதைச் சொன்னாலும், செய்தாலும் அதில் ஒரு கவிதைத்தனம் இருக்கும். அது என் பழக்கமாகி விட்டது. என் பதிவுகளில் நிறைய கவிதைகள் தான் இருக்கும்.

அப்புறம் சின்னச் சின்னச் சிந்தனைகள் என்ற பெயரில் சில சிந்தனைப் பதிவுகளை இட்டு வருகிறேன். மருத்துவக் குறிப்புகளும் அவ்வப்போது எழுதி வருகிறேன். இவைதான் பிரதானம்.

மற்றவை பொன்மொழிகள், இதர கட்டுரைகள். ஆனாலும் பிரதானமாக கவிதைகளும், சின்னச் சின்ன சிந்தனைகளுமே எனக்குப் பிடித்தவை. இன்னும் சொல்லப் போனால் அவைதான் என் சொந்த படைப்புகள். மற்றவை நான் படித்து ரசித்து உள்வாங்கிய விஷயங்களையே படைப்புகளாக மாற்றி தருகிறேன். ஆனால் கவிதைகள் என்னுடைய சொந்த படைப்புகளாகும். ஆகவே கவிதை எழுதும்போது மட்டும் ஒரு தாயின் சந்தோஷம் எனக்குக் கிடைக்கும். சந்தேகமில்லை.

என்னுடைய கவிதைகள்

எனக்குப் பிடித்த என்னுடைய கவிதைகளில் இரண்டை மட்டும் தருகிறேன். மற்றவற்றை நீங்களே படித்துக் கொள்ளுங்கள் (விருப்பமிருந்தால்)

சாம்பிளுக்கு இரண்டு.

1. இன்றைய சினிமாவும் பத்திரிக்கையும் எவ்வளவு தரம் கெட்டுப் போயிருக்கின்றன. அதனால் சமுதாயத்தில் எவ்வளவு சீரழிவு என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இந்த கவிதையை எழுதினேன். லிங்க் கீழே.

வாழ்க்கை நடத்தின காம பாடம்

2. நான் பிறந்த ஊரில் ஓடும் ஒரு நதியின் அழுகையாக, கால மாற்றத்தினால் மனிதர்களால் அது எவ்வளவு சீரழிந்திருக்கிறது என்பதை ஒரு கவிதையாக வடித்தேன். அதன் லிங்க் கீழே.

ஒரு நதியின் அழுகை


சின்னச் சின்ன சிந்தனைகள் என்ற தலைப்பில் சில சிந்தனைத்துளிகளை வடித்து வருகிறேன். அவற்றின் சாம்பிளுக்கு இரண்டு மட்டும் கீழே:-

1. பிள்ளைகளை கண்டித்தால் மட்டும் போதாது. நாமும் அவர்களுக்கு முன்னுதாரணமாய் நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு சிந்தனைத்துளியின் லிங்க் கீழே:-

பார்த்தலும் கேட்டலும்

2. நம்முடைய வாழ்க்கையில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ஒரு எளிய முறையை ஒரு சிந்தனைத்துளியாக வடித்தேன். அதன் லிங்க் கீழே:-

பிரச்சினைகளுக்குத் தீர்வு சிந்தனை அழிப்பான் (Thoughts Eraser)


எஞ்சியிருக்கும் கவிதை மற்றும் சின்னச் சின்ன சிந்தனைகளை என்னுடைய பதிவில் போய்ப் படித்துக் கொள்ளுங்கள்.

அவ்வப்போது மருத்துவக் குறிப்புகளையும், விஞ்ஞானக் கட்டுரைகளையும் எழுதுகிறேன். அவைதான் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அவற்றில சாம்பிளுக்கு சிலவற்றின் இணைப்பைத் தருகிறேன்.


1. சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது குறித்து நான் எழுதிய பதிவின் லிங்க் கீழே:-

சிகரெட் சில உண்மைகள்

2. வாழை இலையில் சாப்பிடுவது குறித்த ஒரு மருத்துவப் பதிவின் லிங்க் கீழே:-

வாழை இலையில் சாப்பிடுவது உண்மையில் நல்லதா?


விஞ்ஞானப் பதிவுகளும் அவ்வப்போது இடுகிறேன். அதில் சாம்பிளுக்கு ஒன்று மட்டும். மீதமுள்ளவற்றை வியப்பூட்டும் உண்மைகள் என்ற லேபளில் சென்று படித்துக் கொள்ளுங்கள்.

1. நாம் விண்வெளியில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பிரயாணம் செய்து கொண்டே இருக்கிறோம். தெரியுமா உங்களுக்கு?

போதும் என்று நினைக்கிறேன். என்னுடைய பதிவுகளைப் பற்றிய ஒரு புரிதல் உங்களுக்கு வந்திருக்கும். என்னுடைய எல்லாப் பதிவுகளுமே பிரயோஜனமானவைதான். சினிமாப் பதிவுகளும், மொக்கைப் பதிவுகளும் நான் இடுவதில்லை. ஒவ்வொரு பதிவுமே ஏதாவது ஒரு வகையில் மனிதர்களுக்கு பிரயோஜனமாக இருக்க வேண்டும் என்பதே என் அவா.

மற்ற என் பதிவுகள் அனைத்தையும் நீங்கள் என்னுடைய வலைப்பதிவில் போய் படித்து கருத்துரை இட்டு ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நாளை மறுபடியும் பார்க்கலாம். என்னைக் கவர்ந்த பழைய மற்றும் புதிய பதிவர்களின் அறிமுகங்களோடு தொடர்வோம். நன்றி!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது