07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 1, 2012

வெங்கட் நாகராஜ் பொறுப்பில் வரும் வார வலைச்சரம்

அன்பின் சக பதிவர்களே,

இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு வலைச்சரத்திற்கு பொறுப்பேற்றிருந்த துரை டேனியல் அவர்கள் தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை மிகச் சிறப்பாக நிறைவேற்றி மனநிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார்.

இவர் தனது சுய அறிமுக இடுகையுடன் சேர்த்து மொத்தம் எட்டு இடுகைகள் வரை பதிவிட்டுள்ளார். சுய அறிமுக இடுகை அல்லாது, "கதம்பம்" என்ற தலைப்பின் கீழ் சுமார் ஐம்பது பதிவர்களின்  இடுகைகளை அறிமுகம் செய்து சுமார் 234-க்கும் அதிகமான மறுமொழிகளைப் பெற்றுள்ளார்.
 
தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை ஏற்று மிகச்சிறப்பாக முடித்த திரு. துரை டேனியல் அவர்களை "சென்று வருக!" என வாழ்த்தி வழியனுப்புவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை முதல் ஆரம்பிக்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க இருப்பவர் திரு. வெங்கட்ராமன் (எ) வெங்கட் அவர்கள். இவர் வெங்கட் நாகராஜ் என்ற வலைப்பூ எழுதி வரும் இவர் சிறு வயது முதல் கல்லூரி படிப்பு வரை நெய்வேலியில் இருந்தார். இவரது படிக்கும் காலத்திலேயே அரசு பணி கிடைத்து, கடந்த  இருபத்தியொன்று வருடமாக  தில்லியில் வசிக்கிறார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பே இவர் வலைப்பூ ஆரம்பித்து அதில் தான் சந்தித்த, சிந்தித்த விசயங்களையும், தில்லி நகரம் பற்றியும், பயண அனுபவ கட்டுரைகளையும், தன்னை பாதித்த விசயங்களையும் பதிவேற்றி வருகிறார்.

வெங்கட் அவர்களை "வருக...வருக..." என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
 
நல்வாழ்த்துக்கள் துரை டேனியல்...
நல்வாழ்த்துக்கள் வெங்கட்...

வாழ்க வளமுடன்,
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

17 comments:

 1. இந்த வார ஆசிரியர் நண்பர் துரை டேனியல் அவர்களுக்கு பாராட்டுகள்....

  நாளை துவங்கும் வாரத்திற்கு என்னையும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க அழைத்திருக்கும் சீனா ஐயா அவர்களுக்கும், நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும், மிக்க நன்றி.

  ReplyDelete
 2. இந்த வாரத்திற்கு வலைச்சரப் பொறுப்பேற்றிருக்கும் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மிகச் சிறப்பாக பணி முடிக்க இறைவனருள் கிட்டுவதாக. எனக்கு மிகப் பெரும் கௌரவமளித்த திரு.பிரகாஷ் சார் , சீனா சார் மற்றும் வலைச்சரக் குழுவினருக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. நண்பர் வெங்கட் ஏற்கனவே வலை சர ஆசிரியராக இருந்ததாக நினைவு. இது இரண்டாம் இன்னின்க்சா ?

  வாழ்த்துகள் நண்பா ! அசத்துங்கள் !

  ReplyDelete
 5. தமிழ்வாசியை வலைச்சரம் Administrator-களில் ஒருவராக காண மகிழ்ச்சியாக உள்ளது. சீனா சார் ஊருக்கு போயிருக்காரா?

  ReplyDelete
 6. இந்த வார புதிய வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. புதிய வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு பணி சிறப்புடன் மிளிர மனமார்ந்த வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 9. வருக வருக என்று வரவேற்கிறேன். தங்கள் வரவு வெற்றிகரமாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்,

  ReplyDelete
 10. வாங்க வாங்க நண்பர் வெங்கட்
  கலக்குங்க..
  வாழ்த்துக்கள்.

  அருமையா தன் பணியை முடித்த
  நண்பர் துரைடேனியல் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. வாழ்த்திய நல்லுள்ளங்கள் கொண்ட அனைவருக்கும் நன்றி......

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது