07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 10, 2012

முதல் அறிமுகம்

 இன்று முதல் அறிமுகம்.. ஏழு நண்பர்களையும் அவர்களது இடுகைகளையும் அறிமுகபடுத்துவதில் மகிழ்ச்சி  அடைகிறேன்..

வரலாறு , அறிந்திராத செய்திகள் என்று தொடர்ந்து கொடுத்து வரும் கொழந்த அவர்களின்  அண்மைய அறிவியல் இடுகையான சாத்தானின் இசை(Blues): 1 - எங்கிருந்து தொடங்கியது ? படித்து பாருங்கள்

அறிய புகைப்படங்களை பார்க்க வேண்டுமெனில் ராம் அவர்களின் நினைவுப்பாதை வலைப்பூவை reference  ஆகா எடுத்து கொள்ளலாம்

மௌனி – இன்னும் சில புகைப்படங்கள்

 அறியபடாத எழுத்தாளரை அறிய வைக்க ஒரு பயனுள்ள இடுகை இட்டுள்ளார் துரோணா    அரசனின் கடல்நினைவுகள்

 நிறையபேர் கவிதை எழுதினாலும் சிலரது கவிதைகள் தெரியாமல் போய் விடுகின்றது அன்புடன் ஆனந்தி  எனை மீட்டுகின்ற உயிராய்... \என்று கவிதைகள் எழுதி வந்து கொண்டு இருக்கிறார்.. கவிதை பிரியர்கள் கவனிக்கலாம் 

  பிரபு கிருஷ்ணாவின்   விவாதத்திற்கு உண்டான அம்மா போல் மனைவி - ஆண்களின் குரூரம் டித்து உங்கள் கருத்துகளை பகிரலாம் 

 செம்மனிதர் நிலம் கனவுகளின் காதலன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வலை பூ .. மறந்து பன எனது காமிக்ஸ் புத்தககங்களை நினைவு படுத்துபவர் இவர்.. மீண்டும் காமிக்ஸ் தேடி என்னை அலையை வைத்தவர் இவர் ..

 கர்ணன் படத்தை மீண்டும் வெளிவிட்ட்ட போது அதை பற்றி  அவ்வளவாக யாரும் எழுத வில்லை.. அதை பார்த்த ஆதி தாமிர நம்மிடம் படத்தை பற்றி பகிர்ந்துள்ளார் .. 

 

15 comments:

 1. என் தலைவன் கொழந்தையின் பதிவுக்கு லிங்க் போட்ட உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 'பிரபல பதிவர்'களில் ஒருவராக இருந்தபோதிலும், க்ரூப்பிஸம் இல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களிடமும் அன்பாகப் பழகுவதில் கொழந்த ஒரு மனிதருள் மாணிக்கம். பதிவுலகம் என்பதை Deconstruct - அதாவது கட்டுடைப்பு செய்துகொண்டிருக்கும் கொழந்தையின் பரிசோதனைச்சாலையின் வாயிற்காப்போன்கள் நாங்கள். வெகுவிரைவில் கொழந்தையின் ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும். இப்படிக்கு, பதிவுலக பிரம்மா கொழந்தையின் நற்பணி மன்றத் தொண்டன்.

  ReplyDelete
 2. அவரின் இந்த அறிவியல் இடுகையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி, மேலும் தொடரட்டும் உங்களின் அரிய அறிமுகங்கள்.

  ReplyDelete
 3. திரு. கொழந்தை சார் எழுதிய 'Blues இசை' பற்றிய கட்டுரைகள் அத்தனையும் கிடைத்தற்கரிய முத்துகள். நாடி நரம்பு ரத்தம் சதை மஜ்ஜை மூளை ஆகிய அனைத்திலும் இசை பாய்ந்துகொண்டிருக்கும் ஒருவரால் தான் அப்படியெல்லாம் எழுத முடியும். இவரை ஒரு முறை நான் சந்தித்திருக்கிறேன். சென்னையில் புத்தகக் கண்காட்சியின்போது பத்து பதினைந்து பேர் (ஆண்கள்தான்) புடைசூழ ஒரு பிரபல இலக்கியவாதியிடம் பேசிக்கொண்டிருந்தார். அங்கு சென்று, கொழந்தையின் கையெழுத்து வாங்கினேன். 'வாழிய நலம்' என்று போட்டு கையெழுத்து போட்டு கொடுத்து, ஒரு அரைமணி நேரம் அற்புதமான Blues சூஃபி கலைஞர்கள் பற்றி ஒரு உரை ஆற்றினார் பாருங்கள். ஆடி விட்டேன். இவரது சேவை thamilppadhivulagaththukkuth தேவை. அடுத்தது, ஜாஸ் இசை பற்றி எழுதுகிறேன் என்று என்னிடம் வாக்கு கொடுத்திருக்கிறார். ஜாஸ் படத்தில் வரும் இசைதான் அது என்பது என் சிறுமூளையில் உதிக்கும் எண்ணம். அந்தப் படத்தை டிவிடி கடை பாயிடம் சொல்லி வைத்திருக்கிறேன். அவர் அதை எழுதும் முன்னர் அந்தப் படத்தை பார்த்துவிடுவேன்.

  என் இன்ஸ்பிரேஷன் பதிவரைப் பற்றிப் போட்டதற்கு நன்றிகள். இந்த லிங்கை என் அட்ரஸ் புக்கில் இருக்கும் 400 பேருக்கும் அனுப்பிவிட்டேன். வாழ்க உங்கள் தொண்டு.

  ReplyDelete
 4. மிக்க நன்றி....ரொம்ப ரசித்து எழுதிய பதிவு அது.....மீண்டும் படிக்கப்படுவதில் சந்தோஷம்.....

  எனது குருநாதர்களில் ஒருவரனான
  கனவுகளின் காதலர் பதிவும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி.....

  -------

  ஆனா, // அறிவியல் இடுகை //ன்னு சொல்லி ஸ்பூப் செய்யாம இருந்திருக்கலாம் :)

  ReplyDelete
 5. அலோ... யாருப்பா அது வீராசாமி? கொழந்தையைப் பத்தி நாந்தான் பாராட்டுவேன். எனக்குத்தான் அந்த உரிமை இருக்கு. நீங்களும் அன்னாரின் வெறியர்ன்னு தெரியுது. இருந்தாலும், இப்படியெல்லாம் வாசாகார் காடிதாம் எழுத முறையா உரிமை வாங்கிருக்கீங்களா? என்னோட லைசன்ஸ் பதிவு எண்: ASS87458 . உங்க பதிவு எண் என்ன? பித்தளை தகட்டுல பொறிச்சி, ரெண்டு ஓட்டை போட்டு, செகப்பு கயிறு அதுல் கட்டியிருக்கா? இதை ஏன் கேட்கிறேன்னா, போலிகள் பல பேரு உலவுவதால், எங்க நற்பணி மன்றத்தை முறையா ரெஜிஸ்டர் பண்ணிட்டோம். எனக்கு மெயில் அனுப்புங்க. அதுக்கப்புறம், ஒவ்வொரு வாசகரும் ஒரு நாளைக்கி ஒரு வாசகர் கடிதம் அனுப்பலாம். அதுதான் சங்க முறை. உங்க கோட்டா ஆல்ரெடி தீர்ந்துபோச்சு. இனிமே நீங்க நாளைதான் வாசகர் கடிதம் ரெடி பண்ணனும். ஓகேவா? இப்படிக்கு, கொழந்தை ரசிகர் மன்ற தலைவர்.

  ReplyDelete
 6. அறிமுகப்படுத்தியவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. சில பதிவர்களை நான் அறிந்துக்கொண்டேன்..மிக்க நன்றி சகோ..தொடரட்டும் தங்களது சிறப்பான பணி.

  சொந்தக்கதை சோகக்கதை : என் மன நினைவில்.ஓரு மரணம்..

  ReplyDelete
 8. எனது கவிதையை பலர் அறிய அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி.

  உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  ஆனந்தி.

  ReplyDelete
 9. அனைத்து அறிமுகங்களுக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 10. அறிமுகத்துக்கு நன்றி.

  ReplyDelete
 11. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்...

  ReplyDelete
 12. அருமையான அறிமுகங்கள்

  ReplyDelete
 13. அனைத்து அறிமுகங்களுக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள்..!

  தங்களுக்கும் வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது