07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 6, 2009

சாமான்யனின் பாவனாதீதம் - 4

வணக்கம்! விமானப் பயணம் என்பது எமக்கு தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி விமானத்தில் சென்று வருகிற போதெல்லாம், இளம்பிராயத்தை நினைத்து அசை போட்டுக் கொண்டே செல்வதில் கிடைக்கும் பேரின்பம் போல எதுவுமில்லை. அப்படிச் சமீபத்தில் நிகழ்ந்த நினைவசையில் அகப்பட்ட சொல்தான், ‘கவக்கோல்’. எங்கள் ஊர்ப் பக்கம், ‘டேய் மாசாணி, அந்த கவக்கோலை எடுத்தாடா!’ என்பார்கள்.

நுனியில் இரண்டாகப் பிரியும் தடியை கவட்டிக்கோல் என்று சொல்வார்கள். அப்படியானால், இந்த கவக்கோல் என்றால் என்னவென்று மனம் கிடந்து தவித்தது. ஊரில் இருக்கும் என் பெற்றோர்களைக் கேட்டால், அது கவைக் கோல்தானடா என்றார்கள். இறுதியில் பல புத்தகங்களை புரட்டிப் பார்த்ததில் விபரம் தெரிய வந்தது. இதோ அது உங்கள் மேலான கவனத்திற்கு:

அடி மரத்தினின்று பிரிவது கவை.
கவையிலிருந்து பிரிவது கொம்பு.
கொம்பிலிருந்து பிரிவது கிளை.
கிளையிலிருந்து பிரிவது சினை.
சினையிலிருந்து பிரிவது போத்து.
போத்திலிருந்து பிரிவது குச்சு(சி).
குச்சு(சி)னின்று பிரிவது இனுக்கு.

இதிலிருந்து மரத்தின் பாகங்களை எப்படியெல்லாம் பெரியவர்கள் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்கள் என்று உணர முடிகிறது. அதே போல ஊறு (feeling) என்பது எப்படியெல்லாம் இருக்கிறது என்று பார்ப்போம்.


வெம்மை, தண்மை, வன்மை, மென்மை, நொய்ம்மை (கனமற்றது), சீர்மை(கனமானது), இழுமை (வழுவழுப்பு), சருச்சரை( சுரசுரப்பு) என எட்டு வகையாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியாகத்தான், சீரும் சிறப்புமென்பது, வலுவாகவும் சிறப்பாகவும் என்று பொருள்படுகிறது.

சரி மக்களே, சீரும் சிறப்பாகவும் இன்றைய அறிமுகங்களைப் பார்ப்போம் வாருங்கள்!

இவர் இப்போதுதான் பதிவுலகத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு தமிழின்பால் நிறையவே ஆவலிருக்கிறது. இன்னும் நிறைய எழுதி, இலக்கிய சிந்தனையை வளர்த்துக் கொள்ள அவரை வாழ்த்துவோம். அந்த அன்பர்தான் நமது சிநேகிதன் அக்பர் அவர்கள்!

அடுத்ததாக நாம் பார்க்க இருப்பவர், மட்டக்களப்பு மறுமலர்ச்சி, தமிழை அலசி ஆராயும் நண்பர் சந்துரு அவர்கள். பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல், சமூகத்துக்கு எதையாவது செய்யத் துடிக்கும் இவரது வேட்கையை பாராட்டுவோமாக!

அடுத்து நாம் பார்க்க இருப்பது, நாமனைவரும் அறிந்த சுல்தான் ஐயா அவர்கள். 2006ம் ஆண்டிலிருந்து படைப்புகள் படைத்து வரும் ஐயா அவர்களின் பதிவுக்கு அடிக்கடி சென்று வருபவன் நான். அவரது நிறைய இடுகைகள் எனக்கு பிடிக்கும். ஐயா அவர்கள் மேலும் மேலும் இடுகைகள் இட வேண்டிக் கொள்வோமாக!

பணிவுடன்,
பழமைபேசி.




கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போய்விடுமா?

11 comments:

  1. அடி மரத்தினின்று பிரிவது கவை.
    கவையிலிருந்து பிரிவது கொம்பு.
    கொம்பிலிருந்து பிரிவது கிளை.
    கிளையிலிருந்து பிரிவது சினை.
    சினையிலிருந்து பிரிவது போத்து.
    போத்திலிருந்து பிரிவது குச்சு(சி).
    குச்சு(சி)னின்று பிரிவது இனுக்கு.]]


    நல்ல தகவல்கள்.

    நன்றிங்க.

    சுல்தான் ஐயாவை மட்டும் அதிகம் பார்த்ததில்லை - இதோ தொடர்ந்து விட்டேன்.

    அக்பர் மற்றும் சந்துரு - படிப்பதுண்டு.

    ReplyDelete
  2. /அடி மரத்தினின்று பிரிவது கவை.
    கவையிலிருந்து பிரிவது கொம்பு.
    கொம்பிலிருந்து பிரிவது கிளை.
    கிளையிலிருந்து பிரிவது சினை.
    சினையிலிருந்து பிரிவது போத்து.
    போத்திலிருந்து பிரிவது குச்சு(சி).
    குச்சு(சி)னின்று பிரிவது இனுக்கு./

    அருமையான தகவல்கள்

    வாழ்த்துகள்

    ReplyDelete
  3. /இளம்பிராயத்தை நினைத்து அசை போட்டுக் கொண்டே செல்வதில் கிடைக்கும் பேரின்பம் போல எதுவுமில்லை. அப்படிச் சமீபத்தில் நிகழ்ந்த நினைவசையில் அகப்பட்ட சொல்தான், ‘கவக்கோல்’. எங்கள் ஊர்ப் பக்கம், ‘டேய் மாசாணி, அந்த கவக்கோலை எடுத்தாடா!’ என்பார்கள்.

    நுனியில் இரண்டாகப் பிரியும் தடியை கவட்டிக்கோல் என்று சொல்வார்கள். அப்படியானால், இந்த கவக்கோல் என்றால் என்னவென்று மனம் கிடந்து தவித்தது. ஊரில் இருக்கும் என் பெற்றோர்களைக் கேட்டால், அது கவைக் கோல்தானடா என்றார்கள். /

    பல மறந்த சொற்களை எல்லாம் நினைவுப் படுத்தி உள்ளீர்கள்

    ReplyDelete
  4. //கவை, கொம்பு, கிளை, சினை,போத்து,குச்சு(சி)இனுக்கு.//

    ஒவ்வொன்றிற்கான பொருள் இப்போதுதான் விளங்குகிறது

    ReplyDelete
  5. நல்ல தகவல்கள் நல்ல அறிமுகங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. பாவாணர் அவர்கள் சொல்லும்போது

    "கப்பு என்பது மரக்கிளையைக்
    குறிக்கும்.ஆதிமனிதன் நதிக்கரையில் வாழ்ந்தான்.கிளைகளைப் போன்ற பாய்மரங்களைப் பற்றி நீரில் பயணம் செய்தான்.அதன் காரணமாக கடலில் செல்லும் கலத்திற்குக் கப்பல் என்னும் பெயர் வந்தது " என்பார்.


    ஆனால் முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று,

    கம்பன் பிளவுபட்ட நாக்கை " கப்புடை நாவினர் " என்பதாகவும்
    அதிவீரராம பாண்டியர் பிச்சையுண்ணும் கலத்தை " கப்பரை " என்பதாகவும் ,

    கப்பு என்பதை மேலோட்டமாக பார்த்தால் கிளை என்னும் பொருளாக தோன்றியாலும் அதன் நுண்பொருள் பிளவு அதாவது மரத்திலிருந்து பிரிந்துள்ளது.ஆகையால் தான் கப்பல் அதாவது பிளவுபட்டது அல்லது துளையுள்ளது என்னும் பொருளில் கப்பல் என்னும் சொல் உருவானது என்று உரைப்பார்.

    மேலும் கப்பல் என்னும் சொல்
    வேற்று மொழியில் உள்ளதை படம்பிடித்துக் காட்டுவார்.

    Latin - Scapha

    Greek - Skaph

    Itly - Schifu

    English - Ship

    இன்னும் கப்பு என்னும் சொல் ( துளை )
    ஆங்கிலத்தில் இன்றும் வழங்குவதை

    Cup, Coffin என்னும் சொல் மூல‌ம் அறியும் முடியும் என்றும் கூறுவார்.

    இதைப் பற்றி விரிவாக‌ , த‌மிழ்க்க‌ப்ப‌ல் என்னும் பொத்த‌க‌த்தையும் எழுதியுள்ளார்.

    ReplyDelete
  7. அன்பின் பழமை பேசி

    மரத்தில் ஆரம்பித்து இனுக்கு வரை விளக்கம் அளித்தமை நன்று

    அறிமுகம் செய்த பதிவர்கள் அனைவருமே சிறந்த பதிவர்கள்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  8. நல்ல விளக்கத்துடன் இன்றைய அறிமுகங்கள்.

    தங்கள் விளக்கத்தை தொடர்ந்து திகழ்மிளிர் கூறிய விளக்கமும் நன்று.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. @@திகழ்மிளிர்

    மேலதிகத் தகவல் அருமைங்க, நன்றி!

    @@நட்புடன் ஜமால்
    @@கதிர் - ஈரோடு
    @@Suresh Kumar
    @@cheena (சீனா)
    @@குடந்தை அன்புமணி

    நன்றி! நன்றி!!

    ReplyDelete
  10. வணக்கம் பழமை பேசி அவர்களே உங்கள் தகவல்கள் ஒவ்வொன்றும் மிக அருமை.பல சொற்களை நாம் மறந்து இழந்து வருகின்றோம்.தமிழ் சொற்கள் ஒவ்வொன்றும் பொருள் குறித்து தான்.எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே எனத் தொல்காப்பியரும் கூறுவார்.பழமையான தமிழ் சொற்களை மீட்டெடுப்பது நமது கடமை.அந்த வகையில் உங்கள் பணி சிறப்பாகவுள்ளது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. @@முனைவர் சே.கல்பனா

    மிக்க நன்றிங்க. உங்களது பாராட்டுகளே எமக்கு ஊக்கம்!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது