07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 16, 2009

காலடியில் ஜே.கே.ரித்தீஷ்?

காலடி என்ன ஒரு பணிவான பெயர், அதையே மிதியடின்னு வெச்சிருந்தா நம்ம கலாச்சாரப்படி பணிவில்லாத செருக்கான பெயராகிவிடும் என பயந்து போய் மனுசன் இவரோட தளத்திற்கு காலடின்னு பேர் வெச்சிட்டார் போலருக்கு..

இவர் பெங்களூரூவில் இருந்து எழுதுகிறார், பெரும்பாலும் அனுபவம் சார்ந்த பதிவுகள், ஆனால் கட்டுடைக்க ஆசைப்படும் கட்டுமஸ்தான மனிதர், ஆனால் பாவம் இவருக்கும் கால் கட்டு போட்டுவிட்டார்கள். இவர் வீட்டு அம்மிணி என்னை ரொம்ப நல்லவன்னு வேற சொல்லிருக்காங்க, அதுக்காகவேனும், பெங்களூரூ சென்று இவர் வீட்டில் இரண்டு வேலை சாப்பிட்டு விட்டு வரவேண்டும். அப்புறமா அந்த திண்ணி முண்டம் குடுகுடுப்பைய வாட்டாள் நாகராஜ் கிட்ட பிடிச்சி கொடுங்கன்னு சொல்லிருவாங்க.

இவரின் பதிவுகள் சில இங்கே.

கட்டுடைக்க நினைத்து இவர் எழுதிய பதிவு இங்கே, அங்கே அவர் பார்த்ததை சொன்னதற்காக ,அதன் பின்னர் கையுடைந்து மாவுக்கட்டுடன் ஆணழகனாக மாற நினைத்தது இங்கே, இந்தப்பதிவில் என்னுடைய பின்னூட்டம் பார்த்து என்னை பெண்களூரூவில் ஆண் அழகுக்கடை வைக்கவும் அழைத்திருக்கிறார். எனக்கு ஆணழகுக்கடை வேண்டாம் வடை போதும் என்று சொல்லிவிட்டேன்.

இன்னொரு பதிவர் கவிக்கிழவர். இவருடைய அனைத்து கவிதைகளையும் படியுங்கள், ஈழத்தமிழனின் வலி தெரியும்.

முந்திய பதிவு இங்கேயும்.

மிஸ்டர் NO என்பவர் ஆரம்ப காலங்களில் கோவி கண்ணனின் ”காலத்தில்” , தன்னுடைய கலாய்த்தல் பின்னூட்டங்களை ஆங்கிலத்தில் அளித்துக்கொண்டிருந்தார், தற்சமயம் இந்த புயல் எந்தக்காலத்திலும் பிரதமர் ஆக முடியாத தருமபுரி காந்தி, நண்பர் சஞ்சய் காந்தியின் பதிவில் மையம் கொண்டிருக்கிறது தவறாமல் படியுங்கள். இவர் பதிவர்களின் கருத்துக்கள் மீது தனி மனித தாக்குதல் இல்லாமல் விமர்சிக்கும் தன்மை ஒட்டு மொத்த பதிவுலகத்திற்கு ஒரு படிப்பினை.

NO' வின் பின்னூட்டங்கள்


தலைப்பு விளக்கம் : ஒரு பின்னூட்டத்தில் இவர் ஜே.கே ரித்தீஷ் போல இருப்பதாக ஒருவர் கூறியிருந்தார். ஜே.கே ரித்தீஷ் பதிவுலகில் நல்ல விலைபோகும் பெயர் என்பதால்.

8 comments:

 1. பிரபஞ்ச நாயகன் ஜே.கே.ஆரின் புகழ் பாடியதற்கு நன்றி!

  ReplyDelete
 2. தீபாவளி வாழ்த்துகள்

  ReplyDelete
 3. டெரரா இருக்கே...தலைப்பு!! ;)

  ReplyDelete
 4. குடுகுடுப்பைய வாட்டாள் நாகராஜ் கிட்ட பிடிச்சி கொடுங்கன்னு சொல்லிருவாங்க.//

  அவ்வ்வ்வ்!

  :)))))))))

  இந்த பதிவின் சாரம் இங்கதான் காவிரி போல ஊத்தெடுக்குது.

  இந்தாளு தஞ்சைக்கு வருவாரா, வந்தா நாம ஊத்தெடுத்து கவுத்துடலாம்!

  ReplyDelete
 5. வால்பையன் said...
  பிரபஞ்ச நாயகன் ஜே.கே.ஆரின் புகழ் பாடியதற்கு நன்றி!
  //

  அட என்ன சுசுமிதாசென் லெவலுக்கு இருக்கு.

  கொஞ்ச நாளைக்கு அட்ரச யாருக்கும் சொல்ல வேண்டான்னு தலைமை சொல்லி இருக்கு, ஏன்னா, இதுனால வாரிசு பெரச்சனை வேற தலை எடுக்குதாம்.

  ராமன் ஆன்டா நமக்கென்ன, ராவணன் ஆன்டா நமக்கென்ன.

  ReplyDelete
 6. நம்மாளூ 'காலடி' ஜெகநாதனே ஒரு பார்வைக்கு அண்ணன் ஜே.கே.ஆர் மாதிரிதான் இருப்பார்..... :)) இதை நான் அவரிடமே கூறியிருக்கிறேன்.

  வலைச்சர வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவாளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. சந்தனமுல்லை said...

  டெரரா இருக்கே...தலைப்பு!! ;)//
  எனக்கு வைக்கும்போது தெரியல, இப்பத்தெரியுது

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது