07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 1, 2009

அக்டோபர் 5 முதல் ஆசிரியராக அன்பு

சக பதிவர்களே

செப்டம்பர் 28 முதல் ஆசிரியப் பொறுப்பேற்க வேண்டிய நண்பர் செல்வேந்திரன் தவிர்க்க இயலாத காரணங்களினால்பொறுப்பேற்க இயலவில்லை. பல முறை அலைபேசியில் அழைத்து பொறுப்பேற்க வேண்டியும் அவரால் இயலவில்லை.

அதனால் இவ்வாரம் இடுகைகள் இடுவது தடைப்பட்டு விட்டது.

வருந்துகிறேன்

வருகிற அக்டோபர் ஐந்தாம் நாள் முதல் அருமை அன்புமதி ஆசிரியப் பொறுப்பெற்கிறார். இவர் சிவகாசியினைச் சார்ந்தவர். இருபதே வயது நிரம்பிய இளைஞர். வாழ்க்கையின் முழு அர்த்தததைத் தேடித் திரியும் சராசரி வாலிபர் எனச் சொல்லிக் கொள்பவர். சூன் 2008 முதல் பதிவராக இருக்கிறார். டிசம்பர் 2008 துவங்கி இன்று வரை ஏறத்தாழ 75 இடுகைகள் இட்டுள்ளார். இவரை தொண்ணூற்று மூன்று பதிவர்கள் பின் தொடர்கின்றனர். யார் நூறாவது பின் தொடரும் பதிவரோ தெரியவில்லை.

பல்வேறு தலைப்புகளில் இடுகைகள் இட்டுக் கலக்குபவர்.

இவரை வருக வருக என வலைச்சரம் சார்பினில் வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.

சீனா


9 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. அன்பின் சீனா, மிகவும் மன்னிக்கவும். வலைச்சரத்திற்கான முழுக்கட்டுரையையும் ஓரிரவில் எழுதி முடித்து விட்டேன். முற்றிலும் தொழில்நுட்ப அறிவில் இருக்கிற தேக்கத்தினால் ஏற்பட்டுவிட்ட குழப்பம் இது. உதவி வேண்டி தம்பி சுரேஷினை இருபது முறைதான் அழைத்திருப்பேன். என்னால் ஏற்பட்டு விட்ட குழப்பத்திற்கு மன்னிக்கவும்.

  மிக்க அன்புடன்,
  செல்வேந்திரன்.

  ReplyDelete
 3. வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் அன்புமதி!
  :))

  ReplyDelete
 5. லஞ்சம் வாங்குபவர்கள் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு.

  http://ulalmannargal.blogspot.com/

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. அன்பின் செல்வேந்திரன்,

  சும்மா இடுகைய டைப் பண்ணி கொடுத்தா போதுமா..

  நான் எப்படி லாக்கின் பண்ணுறதுன்னு எவ்ளோதடவ கேட்டேன்..

  ஒருமுறையாவது பதில் சொன்னிங்களா..

  சும்மா இடுகைய கொடுத்துட்டு போஸ்ட் பண்ண சொன்னா அத என்னோட பிளாக்ல வேணா போஸ்ட் பண்ணலாம்..

  வலைச்சரம்ள போஸ்ட் பண்ணனும்னா அதுக்கு உங்களோட id'ல தான் பண்ணியாகணும்..

  கடேசியா நீங்க கால் பண்ணினப்போவே வலைச்சரம்ல லாக்கின் பண்ண ஒரு வழி சொல்லிருந்தா ஒழுங்கா போஸ்ட் போட்டிருக்கலாம்..

  நீங்களாவது என்னை இருபது முறை அழைத்ததா சொல்றிங்க..

  கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. உங்க போஸ்ட்ட நான் பப்ளிஸ் பண்ண உங்கள எவ்ளோதடவ கூப்டு பேசினேன்.. கடேசிவரைக்கும் ஜீடாக்'ல பிராப்ளம்னு சொல்லியே எஸ்கேப் ஆகிட்டிங்க..

  லாகின் பண்ண வழிசொல்லாம சும்மா போஸ்ட் போட சொன்னா அது எப்டின்னு மட்டும் சொல்லுங்க..

  அடுத்த முறை ஜமாய்ச்சுடலாம்..

  இந்தமுறை உங்களுக்கு உதவ முடியாமைக்கு மன்னிக்கவும்..

  ReplyDelete
 8. 'அன்பு'த்தம்பி வரவிற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. அன்பின் செல்வேந்திரன், சுரேஷ் குமார்

  ஒன்றும் கவலைப்பட வேண்டாம் - இதெல்லாம் சகஜம். இன்னொரு வாய்ப்பு அளித்து விடுவோம். என்ன கெட்டுப் போச்சு

  ஏதேனும் பிரச்னைன்னா
  கோவையிலே நெரெயப் பேரு இருக்காங்க - நான் இருக்கேன் - கவலைப்படாதீங்கப்பா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது