07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 14, 2009

பித்துக்குளி பித்தர்களும்,பிதற்றல்களும்.

நான் சின்னப்பிள்ளையா இருந்தப்போ எங்கப்பா, பொக்கிசமாக வைத்திருந்த மர்பி ரேடியோவில் பாடல் பாடியவர் :பித்துக்குளி முருகதாஸ் என்று எப்போதோ காதில் விழுந்தது, அதே சமயத்தில் வலைமாமனி விருது பெற்ற நாகம்மாள் எங்களையெல்லாம் மிரட்டுவதற்கு வெளியில் சென்று விளையாண்டால் தாடி வெச்சிருக்கிற பித்துக்குளி புடிச்சிட்டு போயிருவான் அப்படின்னு பயமுறுத்தி வெச்சிருந்தாங்க. எப்படியோ பித்துக்குளின்னாலே , பித்துக்குளி முருகதாஸ்தான்னு முடிவு செஞ்சிட்டேன் , அவரு ஒரு நாளைக்கு நம்மள வந்து பிடிக்கப்போறான்னு பயம். இந்த சமயம் ஒரு நாள் எங்க வீட்டு வாசலில் ஒரு தாடி வெச்ச ஆள் எங்கப்பாகூட பேசிட்டு இருந்தாரு. நான் அழுது அப்பா அந்த பித்துக்குளி முருகதாஸ விரட்டி விடுங்க பயமா இருக்குன்னு அழுதது இந்த நவீன ஞானபித்தனின் கிழமொழி படிக்கும் போதும் ஞாபகம் இருக்கிறது.

இந்த ஞானபித்தன் புரியாமல் எழுதுவதில் கில்லாடி, இவர் நன்றாக அறிமுகமான பதிவராக இருந்தாலும் என்னுடன் கருத்து ரீதியிலும் நிறைய ஒத்துப்போவதால் இந்த சப்பாத்திப்பதிவையும் அறிமுகம் செய்கிறேன். இவர் இங்கே பயணக்கட்டுரைகளும் எழுதுகிறார்.

இவர் பித்தன் , நான் பித்தன், பி-த்-த-ன் இப்படியெல்லாம் இருந்த பெயர் ஞானபித்தனாக மாற காரணமாக இன்னோரு பித்தர் காரணமாக இருந்திருப்பார் என நினைக்கிறேன். அந்த பித்தர் என்னுடைய எழுத்துக்கள் மேல் மோகம் கொண்டுதான் எழுதவே ஆரம்பித்தாராம். அதனால்தானோ என்னவோ என்னைப்போல் எழுத்துப்பிழைகளில் அதிகம் இவரும் கவனம் செலுத்துவதில்லை, அதே சமயத்தில் சிலர் தொடர்ச்சியாக படிக்கும் அளவுக்கு எதையோ எழுதுகிறோம் என்ற திருப்தி.

இவரின் பதிவுகளை இங்கே படியுங்கள். தமிழ்மணத்தில் இணையாமலேயே ஐம்பது பதிவுக்கு மேல் எழுதிவிட்டார்.

நகைச்சுவையான கல்யாண அனுபவம்

கடலை தயிர், சாப்பாட்டு ராமன்

ஐம்பது பதிவுகளை தாண்டிவிட்டார்,இவருடைய நிறைய பதிவுகள் நானும் இதுவரை படித்ததில்லை, பிடிந்திருந்தால் பாலோ செய்யுங்கள்.


நியூயார்க் மாகாணத்தில் இருந்து எழுதுகிறார். மிக நன்றாக கற்பனை வளம் இருக்கிறது. எனக்குப்போட்டியாக அதிபர் வேட்பாளர் ஒருவரை வளர்ப்பதாக பிதற்றிக்கொண்டிருக்கிறார்.

இவருடைய பதிவுகள் இங்கே.

வித்தியாசமான உத்தியில் சுவாராஸ்யமாக எழுதப்பட்ட கதை.

உளவு

ஆனைப்பட்டி அனுபவம்

இப்போ பித்துக்குளி முருகதாஸ் என்ன ஆனார்னு பார்ப்போம், பித்துக்குளி முருகதாஸ்னு நான் நெனச்சிட்டு இருந்தவர், தாடி ராமன் என்பவர் எங்க வீட்டு நடவுக்கு நாத்து பறிக்க காண்ராக்டு பேச வந்தவர். நாத்து பறிக்க வந்தவர் அவர் தாடியையும் பறிச்சிட்டு வந்திருக்கலாம்.

9 comments:

 1. நல்ல அறிமுகங்கள். நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன்.

  ReplyDelete
 2. அன்பின் குடுகுடுப்பை

  பல புதிய பதிவர்கள் அறிமுகங்கள் - படிக்கிறேன் - நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 3. அறிமுகத்திற்கு நன்றி!! படிக்கிறேன்!!

  ReplyDelete
 4. அந்த ரெண்டு பேருமே என்னை பித்தனாக்கியவர்கள்!

  ReplyDelete
 5. வலைச்சர ஆசிரியருக்கு மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 6. அறிமுகங்கள் அனைத்துமே அருமை
  நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன்!

  ReplyDelete
 7. என்னையும் ஒரு பதிவனாக(நமக்கு நாமே என்னத்துக்கு மரியாதை) மதித்து அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 8. அன்புள்ள அய்யா, எனது அறிமுகம் நன்று. நானும், ஞானப்பித்தனும் சென்னையில் இருக்கும் ஒரு பித்தனுக்காக, ஞானப்பித்தன், பித்தனின் வாக்கு என உருமாறிப் போனேம். என்னை வலையுலகத்தில் உங்கள் எழுத்துக்கள் மூலம் எழுத தூண்டியது இல்லாமல் அறிமுகமும் செய்யும் உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். நான் தொடர்ந்து எழுத ஆர்வம் தூண்டிய வால்பையன், சுசிதங்கை, மேனகாசத்தியா, ஹேமா, கிருஷ்னமூர்த்தி, வசந்த்,துளசி டீச்சர்,சிங்ககுட்டி மற்றும் சீனா ஆகியோருக்கும், எனது வலையுலகில் ஆர்வமாய் உதவி புரியும் கோவியார், குழலி,அப்பாவி முருகு(எனது வலையை வடிவமைத்தார்), மாரனேரி(ஜேசப்),ஞானப்பித்தன் மற்றும் சிங்கை பதிவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது சுவையான ரெசிப்பிகளுக்காக எனக்கு முதல் விருது அளித்த சகோதரி சந்தனமுல்லை அக்காவிற்கும் எனது நன்றி. தங்களின் அறிவுரையாக ஏற்றுக் கொண்டு இனி தவறு இல்லாமல் பதிவு இடுகின்றேன். நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது