07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 20, 2013

டயட் மலர்

இன்று மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. டயட் மலரில்  உடல் நலம்,ஆரோக்கியம் பற்றி பார்ப்போம்.


உணவால் தான் உடல் செழுமை பெறுகிறது. உணவில் சத்துள்ளதை சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்.அளவிற்கு மிஞ்சாமல் அளவாக சாப்பிடும் பொழுது உடல் நலத்திற்கு எந்தக் குறைவும் வராது. நல்ல உணவு, உடற்பயிற்சியினால் உடலைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளலாம். காலை மாலை காலார நடப்பது, சின்ன சின்ன வேலைகள் செய்வது, உணவு செரிக்க, உடல் வியர்வை வெளிவர உதவும். உடல் நலமாய் இருந்தால் மனம் மகிழ்ச்சியாய் இருக்கும். நிறைவான வாழ்க்கை வாழ விரும்புவோர் உடம்பைப் பேணிக் காத்தல் மிகவும் அவசியம்.
உடம்பைப்  பேணிப்  பாதுகாக்க நம் பதிவர்கள் சிலர் பகிர்ந்த இடுகைகளைப் பார்ப்போம்.

சின்னுரேஸ்ரி இவர் ஒரு இடுகையிட எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்கள் என்னை மிக ஆச்சரியப் பட வைக்கும். பகிர்வுகள் எல்லாமே மிக ஆரோக்கியமானவையாக இருக்கும். இவர் பகிர்ந்த நல்ல உணவும் குப்பை உணவும் உடல் நலத்திற்கு அவசியமான பகிர்வு.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு விளக்கமான உணவு பழக்கங்கள் பற்றி குறிப்பிடுகிறார்   ஐயா ரத்னவேல் நடராஜன்.

எடைக் குறைப்பும் தூக்கமும் பற்றி அருமையாக எடுத்துரைக்கிறார்ரஞ்சனி நாராயணன்.

தேவை கொஞ்சம் தேன் பற்றி குறிப்பிடுகிறார் நீடூர் சீசன்ஸ்.

தமிழ்வாசி பிரகாஷ் பகிர்ந்த டயட் சார்ட்டை பின்பற்றினால் 2 வாரத்தில் 3 கிலோ எடை குறையலாம் என்கிறார். சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள், எளிமையான உடற்பயிற்சிகள் இவற்றை பற்றியும் பகிர்ந்திருக்கிறார்.

உடல் நலம் தொடர்பான ஏகப்பட்ட தகவல்களை ஒரு தொகுப்பாக்கி தந்திருக்கிறார்,(இவர் பகிர்வில் ஒவ்வொன்றையும் கிளிக் செய்து பார்க்கவும்.) செந்தில் வயல். தொப்பையைக் குறைக்கும் வழி பற்றியும் தெரிவிக்கிறார்.

உடல் எடையைக் குறைக்க எலுமிச்சை டயட் பற்றி நண்பன் தமிழ் வலைப்பூவில் அருமையான பகிர்வு.

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள் சிலவற்றை பகிர்கிறார் மணக்கால் அய்யம்பேட்டை ரமேஷ்.

புதுகைத் தென்றல் அதிர்ச்சிதந்த டயட்   அதிர்ச்சிதராத டயட்
என்று இரண்டு விதமாக பகிர்ந்திருக்காங்க. நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

உடல் பருமனைக் குறைக்க பாதாம் மற்றும் பருப்பு வகைகள் உதவும் என்ற ஆராய்ச்சி பற்றி குறிப்பிடும் பகிர்வு சமையல் குறிப்பில்.

கீர்த்திகா கண்ணன் என்ன தெரிவிக்கிறார்?உடல் நலம் சில துணுக்குகள் பற்றி சஹாபுத்தீன் கூறுவது.

உடல்நலம் காக்கும் சஞ்சீவி பற்றி விஜயலெஷ்மி சொல்வதைக் கேளுங்கள்.

கன்னியாகுமரி முஹம்மது ஆரோக்கியம்டிப்ஸ், இனிய இல்லம் பற்றி பகிர்கிறார்.
இயற்கை வைத்தியம் பற்றி அன்பு பகிர்வதை அறியுங்கள்.

ஒரு ஈஸி டயட் கஞ்சிக்கு சமையல் குறிப்பிற்கு செல்லவும்.


டயட் ஜூஸ் குறிப்பிற்கு அதிரை எக்ஸ்பிரஸ் செல்லவும்.

வாக்கிங் ஆராய்ச்சி பற்றிய பகிர்வு சிரிப்பில்.

உடல் எடையைக் குறைக்க உதவும் வெந்தயம் பற்றி கூறுகிறார் முஹைதீன் பாட்சா.

தொப்பையைக் குறைக்க இலகு வழி பற்றி பார்த்தி கணேஷ் கூறுவதைக் கேளுங்கள்.

ஆஹா ! என்ன ருசியில் நிஷாவின் இதயம் காக்க பகிர்வைப் பாருங்க, நிச்சயம் பயன் தரும் பகிர்வு.

வளைகுடா தமிழன் உடல் எடை குறைக்க எளிய வழி, இருபது வயதில் இருந்த எடைக்கு திரும்பச் சொல்கிறார்.

உடல் பருமனைக் குறைக்க சொல்லக் கூடாத வார்த்தைகள் என்னவென்று அறிய இங்கே செல்லவும்.

உடல் பருமனைக் குறைக்க எளிய வழியாக தங்கராஜ் விஸ்வநாதன் விஸ்வரூபத்தில் கூறுவதைக் கேளுங்கள்.

கான்சரை குணமாக்கும் கெடோஜெனிக் டயட் பற்றி பகிர்ந்துள்ளார் செல்வன் கோவை.

எப்படி மெலியலாம் என்பதை விளக்கும் அருமையான பகிர்வு, 
மெலியனும் என்ற புனிதப் போருக்கு தயாரா என்று கேட்கிறார் ரெவெரி.

விரைவில் எடை குறைக்க உதவும் GMC டயட்  பற்றிச் சொல்கிறார் வீடு திரும்பல் மோகன்குமார். அதே முறையை இங்கேயும் பகிர்ந்திருப்பதும் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

வாய்க்கு ருசியாகவும் இருக்கவேண்டும் டயட் உணவாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சில உணவுக் குறிப்புக்களை
நம்ம ஆல் இன் ஆல் சமையல் அட்டகாசங்கள் ஜலீலா டயட் சமையல் லிஸ்ட் கொடுத்திருக்காங்க. கிளிக் செய்து பார்க்கவும்.

கீதா ஆச்சல் சமையலறை ஆரோக்கியத்தை முன்னிறுத்தியே இருக்கும். இவரின் 25 வகை டயட் இட்லியே உதாரணம். நீங்க எந்த டேஸ்டிற்கு ரெசிப்பி தேடினாலும் ஆரோக்கியமானதாக இவர் வலைப்பூவில் கிடைக்கும்.


பொதுவாக டயட்டீசியன் கிட்ட போனால், எடை முதற்கொண்டு எல்லா டெஸ்ட்டும் எடுத்து விட்டு உணவு சார்ட் ஒன்று தருவாங்க, அதற்கு ஏகப் பட்ட ஃபீஸ் கொடுத்திட்டு வருவோம்.இங்கே நம் பதிவர்கள் அக்கறையாக எத்தனை பதிவு போட்டிருக்காங்க. இதில் உங்களுக்கு எது தேவையோ அதனை பின்பற்றி பயன் அடையும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உடல் நலம், ஆரோக்கியம் பற்றி  தொகுக்கப்பட்ட டயட் மலர் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது குறித்த ஏகப்பட்ட பகிர்வுகள் தேடலில் கிடைத்தது என்றாலும் பகிர்வை சுருக்கிக் கொள்ளக் கருதி இத்துடன் முடிக்கிறேன்.

மீண்டும் நாளை அசத்தலான  பதிவர்களோடு சந்திக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

37 comments:

 1. ஹாய் நான் தான் இன்றைக்கு முதலில் ப்ரசண்ட் ஆசியா. இந்த டயட் மலர் அவசியம் நான் போய் பார்க்கிறேன். இதில் சில வலைதளங்கள் தெரியும். சில தெரியாது. கண்டிப்பா உங்க தயவால் + வலைசரத்தின் உதவியால் நல்ல புதிய வலையுலக தோழர்+தோழிகளின் அன்பும் நட்பும் கிடைத்துகொண்டே இருக்கிறது. நன்றி ஆசியா. நல்ல அழகாக தொகுத்து எழுதியிருக்கிங்க. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. மனமார்ந்த நன்றி விஜி.உங்கள் முதல் வருகையும், கருத்தும் மிக்க மகிழ்வையே தருகிறது.நேரம் கிடைக்கும் பொழுது பாருங்க தோழி.

  ReplyDelete
 3. அருமையான பல தளங்களை அறிமுகப் படுத்தி வருகிறீர்கள். மிக்க நன்றி.

  ReplyDelete
 4. வெறும் சமையல் குறிப்புகளாக அல்லாமல் இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான டயட் சமையலை எடுத்துக்கொண்டு, அதற்காக மெனக்கட்டு வலைத்தளங்களைத் தேர்வு செய்து அனைவருக்கும் முக்கியமாக மகளிர்க்கு நல்ல உபயோகமான தகவல்களைக் கொடுத்திருக்கிறீர்கள் ஆசியா!! இனிய நன்றியும் மனமார்ந்த வாழ்த்துக்களும்!!

  ReplyDelete
 5. நிறைய தளங்கள் தெரியாதவை.... அறிமுகத்துக்கு நன்றி....

  ReplyDelete
 6. உடல் நலம், ஆரோக்கியம் பற்றி தொகுக்கப்பட்ட டயட் மலர் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.//
  நிச்சயம் உபயோகமாய் இருக்கும் ஆசியா. அனைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  பயனுள்ள தகவல்களை, நல்ல பதிவுகளை தொகுத்து வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. உடல் நலம், ஆரோக்கியம் பற்றி தொகுக்கப்பட்ட டயட் மலர் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.//
  நிச்சயம் உபயோகமாய் இருக்கும் ஆசியா. அனைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  பயனுள்ள தகவல்களை, நல்ல பதிவுகளை தொகுத்து வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. அறியாத பல தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  தொடருங்கள் அயராத தேடல்களை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. பயனுள்ள நலம் தரும்
  பகிர்வுகளுக்குப்
  பாராட்டுக்கள்..

  ReplyDelete
 10. எனது பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 11. ஆரோக்கியமான குறிப்புகளை தேடிப்பிடித்து டயட் மலசரமாக்கி வலைசரத்தில் அழகாக தோரணம் கட்டி விட்டீர்கள்.அவசியமான விழிப்புணர்வஊட்டக்கூடிய நல்ல பகிர்வு.அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. அருமையான உபயோகமான அறிமுகங்கள் இன்று.
  அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள் ஆசியா!

  ReplyDelete
 13. டயட்டை பற்றி அவ்வளவாகக் கவலை இல்லை. இருந்தாலும் சென்று படிக்கிறேன்.
  ஆசிரியர் பணியை மிக நிறைவாக செய்கிறீர்கள்.
  நான் தான் சொதப்பி விட்டேன் :)

  ReplyDelete
 14. வணக்கம் ஆசியா.
  டயட் மலரில் எனது பதிவு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நன்றி! இந்தச் செய்தியை என் தளத்திற்கு வந்து அறிவித்த விதம் அருமை. அதற்கு ஒரு சிறப்பு நன்றி!

  DD அவர்களுக்கும் தளத்திற்கு வந்து செய்தி சொன்னதற்கு நன்றி!

  நீங்கள் இங்கு சுட்டிக்காட்டிஇருக்கும் எல்லா தளங்களுக்கும் போய் வாசித்துவிட்டு வருகிறேன்.

  மீண்டுமொருமுறை நன்றி!

  ReplyDelete
 15. டயட் மலர் அழகாகத் தொடுத்து உள்ளீர்கள். இம்மாதிரி தொகுப்புகளினால் விசேஷமாக விஷயங்களைத் தனிப்பட அறிந்து கொள்ள முடிகிறது. பெரிய உதவியது.
  எல்லாவற்றையும் படிக்க வேண்டும்.
  எல்லோரைப் பற்றியும் அறிய முடிகிறது. ரஞ்ஜனி நாராயண் கட்டுரைகள் ரஞ்ஜகமானவை. மற்றவர்களையும் படிக்க அனுபவிக்க
  சான்ஸ். மிகவும் நன்றி.
  உங்களின் கதைச்சர பதிலுக்கும் மிகவும் நன்றி ஆசியா. அன்புடன்காமாட்சி

  ReplyDelete
 16. எனக்கு இப்போ ரொம்ப தேவையா இருக்குதுன்னு நினைத்ததால ஓரளவுக்கு எல்லா பதிவுலயும் உள்ள போய் பார்த்திட்டேன்...பல பயனுள்ள செய்திகள்..ஆனால் ஒன்று எடை குறைப்பில் யாராவது அவர்கள் சொந்த அனுபவம் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்....

  ReplyDelete
 17. கவிநயா மிக்க நன்றி.

  மனோ அக்கா உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

  ஸ்கூல் பையன் மிக்க நன்றி.

  ReplyDelete
 18. கோமதியக்கா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

  தனபாலன் சார் மீண்டும் மீண்டும்
  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இராஜராஜேஸ்வரிமா மிக்க நன்றி.

  ReplyDelete
 19. புதுகை தென்றல் வருகைக்கு மிக்க நன்றி.

  ஸாதிகா தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி.

  இளமதி மிக்க நன்றி.மகிழ்ச்சி.

  ReplyDelete
 20. சமுத்திரா கருத்திற்கு நன்றி.

  ரஞ்சனி மேம் மிக்க நன்றி.

  காமாட்சிமா வாங்க,உங்கள் அறிமுகம் கிடைத்தது மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete
 21. எழில், நான் GMC செய்து எடை குறைவதை அனுபவித்திருக்கிறேன்.இதோ என் பகிர்வு தமிழ்குடும்பத்தில்
  http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&view=article&id=2404:2404&catid=15:--
  இந்த லின்க் பாருங்க.
  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 22. அருமையான நலம் தரும் அறிமுகங்கள்.

  அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  தங்களுக்கு என் அன்பான நன்றிகள்.

  ReplyDelete
 23. இன்று டயட் மலரா.. அருமை அருமை. டயட் பற்றி கண்டிப்பா எல்லோரும் தெரிஞ்சிக்கணும். உடம்பை வளர்த்தேன்; உயிரை வளர்த்தேனே என்று திருமூலர் கூற்றுக்கு நாம் பொருள் சேர்க்கணும். சீரான உணவுபழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, மனதை கட்டுக்கோப்பாக வைத்தாலே நோய் என்ற சொல்லே இருக்காது எனலாம். கடவுள் கொடுத்த உயிரையும் உடலையும் பாதுக்காக்க வேண்டிய அவசியம் நமக்கு உண்டு. எனவே நாம் உண்ணும் உணவில் ஆரோக்கியம் இருக்கவேண்டும்.

  இனிய அறிமுகங்கள். வாழ்த்துகள். நன்றி

  ReplyDelete
 24. மிகவும் பிரயோசனமான,அவசியம் தேவைப்படுகின்ற தளங்களை அறிமுகப்
  படுத்தியிருக்கிறீங்க ஆசியா. மிக்க நன்றி.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. மிக்க நன்றி அசியா ஓமர்

  ReplyDelete
 26. எல்லோரும் தேவையான டயட் சமையல் உடற்பயிற்சி அனைத்து பதிவுகளின் சுட்டிகளையும் ஒரே இடத்தில் தொகுத்து கொடுத்து இருக்கீங்க,

  சூப்பர் ஆசியா எவ்வளவு சிரமம் இதை கோர்த்து தருவது.
  என்னையும் இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி
  அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. வணக்கம்
  ஆசியா உமர்

  இன்று வலைச்சரத்தில் அறிமுகமான பதிவுகள் அனைத்தும் மிக பயனுடையவை இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன்பதிவுகளை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 28. மிகவும் அருமையாக டயட் மலர் பதிவுகள் அனைத்தையும் அறிமுகம் செய்து பலருக்கும் அறியத் தந்துள்ளீர்கள். பாராட்டுகள்.

  சின்னு ரேஸ்ரி அறிமுகத்துக்கு மிக்க நன்றி.
  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 29. அருமையான தகவல்கள்

  வாழ்த்துகள்

  ReplyDelete
 30. வை.கோ ஐயா கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

  ஸ்டார்ஜன் தொடர் வருகைக்கு மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 31. ப்ரியசகி மிக்க நன்றி.தொடர் வருகைக்கு மகிழ்ச்சி.

  மோகன் குமார் மிக்க நன்றி.

  ReplyDelete
 32. ஜலீலா வாங்க,பய்னதரும்டயட் சமையல் பகிர்வுக்கு மிக்க நன்றி.வருகைக்கு மகிழ்ச்சி.

  ரூபன் தொடர் வருகைக்கு மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 33. மாதேவி வாங்க,வருகைஇகும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

  திகழ் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 34. மகிழ்ச்சி.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 35. ரத்னவேல் ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 36. வணக்கம் சகோ...

  எனது பதிவை டயட் மலரில் குறிப்பிட்டமைக்கு நன்றி....

  சுவையான தலைப்புகள் - அருமையான பதிவுகள் என வலைச்சரத்தில் அசத்துறிங்க..... தொடருங்கள்...

  தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்க...

  ReplyDelete
 37. தமிழ்வாசி பிரகாஷ் வருகைக்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது