07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 9, 2013

நன்றி...

[அவசர வேலை காரணமாக ஊருக்கு செல்ல வேண்டி வந்து விட்டதால் 
இரண்டு பதிவுகள் எழுத முடியவில்லை. மன்னிக்கவும்...]உயிரின் இறுதி ஊர்வலம் 
உடல் மேலேயே 
நடக்கிறது! - இது எதைக் குறிக்கிறது? விடை உள்ளே...

நாம் தினமும் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம்.  அவர்கள் சாதாரண மனிதர்கள். அமைச்சர்களோ, எம்.எல்.ஏ க்களோ , சினிமா ஸ்டார்களோ எழுத்தாளர்களோ அல்ல. சாதாரண மனிதர்கள்..ஆட்டோ ஓட்டுபவர், பஸ் கண்டக்டர், செருப்பு தைப்பவர், சவரம் செய்பவர், இப்படி....உண்மை என்ன என்றால் எம்.எல்.ஏ , எழுத்தாளர் இவர்கள் இல்லாவிட்டாலும் நம் நாட்கள் நகரும். ஆனால் இந்த 'சாதாரணர்கள்' இல்லை என்றால் நம் நாட்கள் நகர்வது கஷ்டம். இப்படிப்பட்டவர்களிடம் நாம் வலியச் சென்று பேசுவதில்லை.ஆட்டோவில் ஏறி அமர்ந்தால் இறங்கும் வரை உம்மணா மூஞ்சியாகவே வருவோம். ஏன் அவர்களைப் பார்த்து புன்னகைக்கக் கூட மாட்டோம்.

வீடு திரும்பல் மோகன்குமார் இப்படிப் பட்ட மனிதர்களுடன் வலியச் சென்று வாலண்டியராகப் பேசி, அவர்கள் சொன்னதை தன் ப்ளாக்கில் கேள்வி பதில் வடிவில் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.


உதாரணத்துக்கு ஒரு பதிவு:

ஜிம் டிரெயினர் வாழ்க்கை - அறியாத தகவல்கள் 

செருப்பு தைப்பவர், மாவு மில் வைத்திருப்பவர், பஸ் டிரைவர், இப்படி நிறைய பேருடன் உரையாடி இருக்கிறார் மோகன்.

ஜிம் என்றதும் ஞாபகம் வருகிறது. இத்தனை வருட வாழ்க்கையில் (எத்தனை வருடம் என்பது சீக்ரெட்) ஒரே ஒரு முறை தான் ஜிம்  போயிருக்கிறேன். காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கொண்டு ஒரு மாதமோ என்னமோ போனேன். ஜிம் உடம்புடன் மாமிச மலை போல நடமாடுபவர்கள் மத்தியில் ஒரு எறும்பு போல உணர்ந்தேன். சில ஜிம் கன பாடிகள் என்னை பாண்டியன் சபையில் பாட்டெடுத்துக்கொண்டு நுழைந்த தருமியைப் போல துச்சமாகப் பார்த்தன.

எனக்கு என்னவோ எல்லா விஷயங்களும் சீக்கிரம் சலித்துப் போய் விடுகின்றன. உடம்பு அது பாட்டுக்கு இருந்து விட்டுப் போகட்டுமே, அதை ஏன் போய் அதைத் தூக்கு இதை முறுக்கு இதை இழு என்று தொந்தரவு செய்து கொண்டு என்று சும்மா விட்டு விட்டேன். மேலும் 

வளமையும் மாறி இளமையும் மாறி வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு


வயது முதிர்ந்து நரைதிரை வந்து வாதவிரோத குரோதம் அடைந்துஎன்ற சித்தர் பாட்டெல்லாம் நினைவு வந்து அப்படியே விட்டு விட்டேன்.


பார்க்க:
சரி...தொப்பையை ஏனைய்யா குறைக்க வேண்டும் என்கிறீர்களா? சிக்ஸ் பேக்ஸ் உடம்பை வைத்து யாரை இம்ப்ரெஸ் செய்ய வேண்டும்?
கல்யாணமும் ஆகி விட்டது. தொப்பை அது பாட்டுக்கு ஒரு ஓரத்தில் இருந்து விட்டுப் போகட்டும் என்கிறீர்களா? சரிதான்.

 தொப்பை ஓரத்தில் இருந்தால் சரி தான். தொப்பை வளர்ந்து உங்களை ஒரு ஓரத்தில் தள்ளாமல் இருந்தால் சரி தான்.

next என்ன எழுதுவது? link கிடைக்கவில்லையே....


லிங்க் என்றதும் நினைவில் வருகிறது. ஒரு விஷயத்தை ஆன்லைனில் படிப்பது எவ்வளவு வசதியானது? ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தால் 
அதில் வேறு புத்தகத்தைப் படியுங்கள் என்று மட்டுமே சொல்ல முடியும். அந்தப் புத்தகத்துடன் உங்களை 'லிங்க் ' செய்ய முடியாது. புத்தகத்தில் இருந்து இன்னொரு புத்தகம் வருவது ஹாரி பாட்டரில் மட்டுமே நடக்கும்.
ஆன்லைனில் அந்தப் புத்தகத்தின் லிங்கை கொடுத்தால் போதும்! எனவே ஆன்லைனில் ஒரு புத்தகம் படிப்பது ஒன்பது புத்தகம் படிப்பதற்கு சமம். 
சில சமயம் லிங்கில் உள்ள புத்தகத்தில் மெய் மறந்து ஒரிஜினல் புத்தகத்தையே மறந்து விடுவோம் என்பது வேறு விஷயம். இன்டர்நெட்டில் 
broad knowledge கிடைக்குமே தவிர deep knowledge கிடைக்காது!

இருந்தாலும் நிஜ புத்தகங்களை வாசிக்கும் சுகமே தனி தான்.


I'm writing a book. I've got the page numbers done.
Steven Wright 

புத்தகம் படிப்பது எப்படி -எஸ்.ராம கிருஷ்ணன் 

excerpt :

ஏ 
வாசகனே!
உனக்குதான் 
எத்தனை 
எழுத்தாளர்கள் ! - நகுலன் 


நகுலனின் மற்றொரு கவிதை:நான் 
இறந்த பிறகு எனக்கு 
அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த வேண்டாம்.
ஏனென்றால் 
என்னால் வர முடியாது..

:)


இதே வலைப்பூவில் கல்யாண்ஜி யின் கவிதைகளும் ரசிக்க வைக்கின்றன.


அடிக்கடி பார்க்க முடிகிறது 
யானையைக் கூட 
மாதக் கணக்காகிறது 
மண் புழுவைப் பார்த்து!

சரி..இனி கவிதை எழுதினால் என்னை அடிக்க வருவீர்கள். ஒன்றே ஒன்று 
மெழுகுவர்த்தி பற்றி வைரமுத்து எழுதி இருப்பது இங்கே:

இந்தப் 
பிணத்துக்கு 
கொள்ளி வைத்த பிறகுதான் 
உயிர் வருகிறது 

அதோ 
உயிரின் இறுதி ஊர்வலம் 
உடல் மேலேயே 
நடக்கிறது!


-வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்? ஆமாம்...மெழுகு 
வர்த்தி செய்து கூட பிழைத்துக் கொள்ளலாம். இந்த சுட்டியில் பாருங்கள் 
நூறு பிசினஸ் டிப்ஸ்.


எல்லாமே பிசினஸ் ஆகி விட்டது அல்லவா இப்போது..கடவுளும் , பக்தியும் கூட..மூன்னூறு ரூபாய் கொடுத்தால் வி.ஐ.பி..ஐநூறு கொடுத்தால் வி.வி.ஐ.பி...'பணம்' என்ற ஒன்று இருப்பதே கடவுளுக்குத் தெரியுமா?


இதற்கு இன்னொரு கோணம் இருக்கிறது. ஓஷோ, கடவுள் எப்படி இலவசமாக கிடைப்பார் என்று கேட்கிறார். நட்சத்திர ஹோட்டலில் சாப்பாடு 500 ரூபாய்க்கு கிடைக்கிறது. கடவுள் இலவசமா????இலவசமாகக் கிடைப்பது எதுமே மதிப்பை இழந்து விடும் அல்லவா? கடவுளுக்காக 500 ரூபாய் கொடுக்கத் தயாராக இல்லாத நீங்கள் நாளை எப்படி உங்கள் உயிரை, உங்கள் ஆத்மாவை சமர்ப்பணம் செய்வீர்கள்?

'நான் வியாபாரி தான்...ஆன்மீக வியாபாரி' என்கிறார் புரந்தர தாசர்.

தாசரின் சில பாடல்களை நீங்கள் இந்தத் தளத்தில் தமிழில் காணலாம்.

மதுகர விருத்தி என்னது - 
அது பலு சன்னது 
பதுமனாபன பாத - பதும மதுபவெம்ப (மதுகர) 

தேனீயைப் போன்ற வாழ்க்கை என்னுடையது 
அது (வாழ்க்கை) மிக அருமையானது 
பத்மனாபனின் சரணத்தை - தாமரையாக பாவித்து 
அதை சுற்றி வரும் (மதுகர) மிக மிக எளிமையானது புரந்தர தாசரின் பக்தி மார்க்கம். கஷ்டமே படாதேப்பா என்கிறார். நீ தினந்தினம் வேலை செய்யும் போது கிருஷ்ணா என்று கூறு..போதும் என்கிறார்.

நீர நெரெவாக பார ஹொரிவாக 
கிருஷ்ணா என பாரதே 

மலகெத்து மெய் முரிது 
ஏலுத்த லொம்மெ ஸ்ரீ கிருஷ்ணா என பாரதே 

-நீரை இறைக்கும் போதும் பாரம் சுமக்கும் போதும் கிருஷ்ணா என்று கூறலாகாதா? தூங்கி எழுந்து சோம்பல் முறிக்கும் போது கிருஷ்ணா எனலாகாதா?

நுடிவ மாதுகலெல்லா கடல சயனன ஜபவு 
மடதி மக்களு எல்லா ஒடனே பரிவார 
நடு மனெய அங்களவே உடுப்பி பூ வைகுண்ட 
எட பலாத மனெயவரெ கடு பாகவதரு 

-சொல்லும் சொல் எல்லாம் ஹரியின் ஜபம் 
மனைவி மக்களே பக்திப் பரிவாரம் 
வீடே வைகுண்டம் உடுப்பி 
பக்கத்து வீட்டுக் காரர்களே பாகவதர்கள் 

- that 's  all பக்தி...


சில தளங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்:

மூலிகைகள் அவற்றின் மகத்துவங்கள் பற்றி அறிய 

மூலிகை வளம் 

அறிவியல் பற்றி விஷயங்கள் அறிய 
ஏன் எதற்கு எப்படி? - அறிவியல்புரம் 


புத்தகங்கள் பற்றி அறிந்து கொள்ள 

ஆம்னிபஸ் 

பல்சுவை 

ராஜன் லீக்ஸ் 


தகவல் தொழில்நுட்ப செய்திகள் 

தகவல் தொழில்நுட்ப செய்திகள் 


சமையல்:

அம்முவின் சமையல் 

பயனுள்ள பதிவுகள், அறிவியல் செய்திகள்:

வரலாற்று சுவடுகள் 


கதம்ப மாலை:


கதம்பமாலை 

கவிதைகள் 

கனவில் கிறுக்கியவை 

ஆன்மிகம் 

பரமாச்சாரியாரின் தெய்வீகப் பொன்மொழிகள் 


சமூகம்:

வாங்க காபி சாப்டுண்டே பேசலாம் இலக்கியம் 

அணிலாடு முன்றில் கட்டுரைகள் 


தமிழினியன் 

சுவாசிகா 

படங்கள்


அழகிய படங்கள் 
வாய்ப்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் 

சமுத்ரா 
10 comments:

 1. அறிமுக தளங்களுக்கு சென்று விட்டு வருகிறேன்...

  ReplyDelete
 2. இரண்டு பகிர்வுகளில் அறிமுகம் செய்ய வேண்டியதை இன்றே மொத்தமாக தொகுத்து வழங்கி விட்டீர்கள்...

  10 தளங்கள் புதிது... நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. மகிழ்ச்சியும், நன்றியும் சமுத்ரா !

  ReplyDelete
 4. சென்று வாருங்கள்...

  ReplyDelete
 5. நிறைய புது தளங்களை அறிந்தேன். நன்றி!

  ReplyDelete
 6. நிறைய தளங்களை நிறைவாய் அறிமுகம் செய்தமை நன்று! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. நிறைய தளங்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது