07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 24, 2013

வணக்கத்துடன் வெற்றிவேல்...

வெற்றி'யின் வணக்கம்...

அன்பின் வலைச்சர மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கத்தை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். எதுவுமே தெரியாத (வாய்ல விரல வச்சாக்கூட கடிக்கத் தெரியாத, நம்பனும்!!!) இந்த 22 வயது குழந்தைய புடிச்சிகிட்டு வந்து எதை எதையோ சொல்லி என்னையும் ஆசிரியராக இருக்க ஒத்துக்க வச்சிட்டாங்க. ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ள மிகவும் தயக்கமாக இருந்தது உடனே நம்ம அடியாள், எங்கள் மண்ணின் மைந்தர் அரசன் அண்ணாவுக்கு போன போட்டு விஷயத்த சொன்னேன், உடனே அவுங்க வாழ்த்துகள் தம்பின்னு ரொம்பவும் சந்தோசப்பட்டாங்க... நானும் தயக்கத்துடன் ஒத்துக்கொண்டேன், இப்பெரும்பணியை எப்படியாவது மன நிறைவோடு முடித்துவிட வேண்டும். தங்கள் அனைவரின் ஆதரவோடும் வெற்றிகரமாக முடிப்பேன் என்று நம்புகிறேன்...

இது முதல் பதிவு, ஆதலால் நான் கண்டிப்பாக என்னைப் பற்றியும் என் அறிமுகத்திற்க்காகவும் இந்த முதல் பதிவை எழுத வேண்டுமாம். ஆதலால் நான் சொல்லப் போற பொய்யை அனைவரும் படித்து, கருத்துகளை  வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் (படிக்காம, கமென்ட் போடாம போறவங்க பிளாக் நாளைலேருந்து முடக்கிடடும்னு நம்ம விக்கிலீக் ஜூலியன் அசாஞ்சே'கிட்ட சொல்லிட்டுதான் வந்துருக்கேன், பார்த்துகோங்க. ஹ ஹா ஹா) அப்புறம் உங்க இஷ்டம்...

என் பெயர் வெற்றிவேல், அரியலூர் மாவட்டம் சாளையக்குறிச்சி தான் என் கிராமம். சிறு வயதிலேயே படிப்புடன் வயல், உழைப்பு, ஆடு, மாடு என்று வளர்ந்தவன். இன்றோ நான் ஒரு கெமிகல் என்ஜினீயர். மழை பொழியும் முன்னரே மழையுடன் மண் வாசனை இதயத்தை தொட்டுவிடும் கிராமத்தில் வளர்ந்தவன் இப்போது பல ராசயனங்களின் மூக்கைத் துளைக்கும் வாடையில் பிழைப்பைத் தேடிக்கொண்டிருப்பவன். கல்லூரியில் என் நண்பன் தான் எனக்கு பிளாக் பற்றி முதலில் கூறினான், ஆனால் அவன் ஆரம்பித்ததோடு சரி, காணாமல் போய் விட்டான். தமிழ் மீது கொண்ட ஆர்வம். என் தோழியின் சிறு சிறு உற்ச்சாகங்கள் என என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்து விட்டது. ஒரு காலத்தில் அவளிடம் வாசித்துக் காட்டவே எழுதத் தொடங்கியது தான் இந்த பழக்கம், அவள் சென்ற இடம் இன்று தெரியவில்லை. அவள் பதித்துவிட்டுச் சென்ற இந்த தடத்தை மட்டும் நான் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்... நீங்கள் என்னைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த இணைப்பை சொடுக்குங்கள்.

எனக்கு பல பல சமயங்களில் ஆதரவாக, உறுதுணையாக இருந்து என்னை உற்சாகப் படுத்திய தோழி கவிச்சக்கரவர்த்தினி, கவிதாயினி ஹேமாவிற்கு நான் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

எனது ஆரம்ப கால கவிதைகளை என்னாலேயே மீண்டும் படிக்க இயலாது, ஆதலால் அதைப் பற்றி பார்க்க வேணாம். 

எப்போதுமே எனக்கு நான் இழந்துவிட்ட அந்த கிராமத்து வாழ்வின் மேல் எனக்கு ஒரு பொறாமையும், வருத்தமும் எப்போதுமே இருக்கச் செய்யும். அதை நினைத்து மனம் நொந்து எழுதிய கவிதைதான் தடம் மாறிய பொழுதுகள்.

என்னோட எதிர்கால நினைவுகள் பற்றி எழுதியவை: எதிர்கால நினைவுகள்

எங்க வீட்டுல ஒரு அழகான சிட்டுக்குருவி இருந்துச்சு, அத நெனச்சிகிட்டு எழுதுன கவிதைதான் எனக்கு மிகவும் பிடித்த் கவிதை... எந்தன் வீட்டுச் சிட்டே. பிறகு களவாடப் படும் கனவுகள், விட்டில் பூச்சியல்லடி நான், எந்தன் இறைவா இது நியாயமா போன்ற கவிதைகள் மிகவும் பிடிக்கும். 

எல்லாரும் தீபாவளிக்கு எதை நினைத்து கொண்டாடுவீங்க, நான் எப்படி, யாரை நெனச்சிகிட்டு இருந்தேன்னு தெரியனுமா அப்போ இதை படிங்க: இன்று எனக்கு தீபாவளி தானா! 

தமிழ் மீது எனக்கு எப்போதுமே தீராக் காதல் உண்டு ஆதாலால் சீரான இடைவெளியில் தமிழ் பற்றிய பதிவுகள் எழுதிக்கொண்டே இருப்பேன். அதில் உங்களுக்கு சில ஔவையாரையும் கிறங்கடித்த காதல் & பகுதி இரண்டு, தமிழிற்கு தி.மு.க செய்த துரோகம் மற்றும் ஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா

அடுத்து சில அரசியல் பதிவுகளும் கார சாரமாக போட்டேன், எனக்கும் அரசியல் ஞானம் கொஞ்சம் உள்ளது என்பதால், பிசுபிசுத்த ஜனாதிபதி தேர்தல், அதிர்ச்சி தரும் ஜெயலலிதாவின் நடவடிக்கை என நீளும்.

தேடல் என்பது எனக்கு எப்போதுமே மிகவும் பிடிக்கும் அதிலும் நமக்குப் பிறகு என்ன என்பது பற்றிய தேடல்கள் மரணத்திற்குப் பின்னால், மரணத்திற்குப் பின்னால் மறு ஜென்மமா?, மனித மூளை பற்றிய அசாத்திய தகவல்கள், அசோகர் பற்றி நாம எல்லோருமே மரம் நட்டார், சாலை அமைத்தார் என்றுதான் படித்திருக்கிறோம் ஆனால் அவரது சுய ரூபம் பற்றி இந்த பதிவில் விளக்கமாக எழுதியுள்ளேன். படித்துப் பாருங்களேன். அசோகர் வரலாற்றின் கரும்புள்ளி.

எல்லோரும் ஆட்படும் காதலாம் நானும் ஆட்பட்டு என்னை மறந்த காலங்கள் உண்டு அப்போது எழுதிய கவிதைகள் தான் உதிரும் நான், என் மறு ஜென்மக் கனவை இதில் வெளிப்படுத்தியுள்ளேன் படித்துச் சொல்லுங்களேன். மற்றுமோர் ஜென்மம் உண்டெனில்.

அடுத்து விநாயகர் எப்படி நம்ம தமிழ் நாட்டுக்கு வந்தாருங்கற கதை தெரியனுமா? இதை படிங்க முதல்ல. புள்ளையார் அதிர்ஷ்ட்டமும், தென்னகத்தில் அவர் வேரூன்றிய விதமும்...

என்னைப் பற்றிய புராணங்கள் போதுமென நினைக்கிறேன், இனி அடுத்த பதிவு முதல் பதிவுலக நண்பர்கள் பற்றி பேசலாம்...

எனக்கு இந்த வாய்ப்பளித்த அன்பின் சீனா அய்யா அவர்களுக்கும், அடுத்த ஒருவாரம் என்னைத் தொடரப்போகும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்...

அன்புடன் வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

40 comments:

 1. குழந்தைக்கு என்னவெல்லாம் தெரியுது...! ஹிஹி... எதிர்க்கால நினைவுகள் போலவே ரசித்து எழுதிய சுய அறிமுகம் அசத்தல்... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete

 2. (படிக்காம, கமென்ட் போடாம போறவங்க பிளாக் நாளைலேருந்து முடக்கிடடும்னு நம்ம விக்கிலீக் ஜூலியன் அசாஞ்சே'கிட்ட சொல்லிட்டுதான் வந்துருக்கேன், பார்த்துகோங்க. ஹ ஹா ஹா) அப்புறம் உங்க இஷ்டம்...//

  என்னிக்காச்சும் ஒரு நாளைக்கு அரசியல்லே நுழைஞ்சு அட்டகாசம் பண்ணி அதிரடியா முதல்வரானாலும்
  ஆகிவிடுவீங்க... அப்படின்னு சொல்ல முடியாட்டாலும் ,

  ஒரு வட்டம் இல்லைன்னா ஒரு மாவட்டம் இல்லைன்னா ஒரு கொ.ப.செ. ஆகிவிடுவீங்க..

  வாழ்க.

  சுப்பு தாத்தா.


  ReplyDelete
 3. வெற்றிவேல், இனிய தொடக்கம்... ஒருவார வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள்.. நன்றி...

  ReplyDelete
 4. தீபாவளி கவிதை படித்தேன்... அருமை... சொந்த அனுபவமோ?

  ReplyDelete
 5. (படிக்காம, கமென்ட் போடாம போறவங்க பிளாக் நாளைலேருந்து முடக்கிடடும்னு நம்ம விக்கிலீக் ஜூலியன் அசாஞ்சே'கிட்ட சொல்லிட்டுதான் வந்துருக்கேன், பார்த்துகோங்க. ஹ ஹா ஹா) அப்புறம் உங்க இஷ்டம்...//

  அதற்காகத்தான் வந்திருக்கிறேன்.
  ஆனாலும் உங்கள் சுயபுராணம் அருமையாக உங்களைப் பற்றி சொல்லிவிட்டது.
  வாழ்த்துக்கள்.
  தொடருங்கள்....

  ReplyDelete
 6. // நம்ம அடியாள், // இப்படி வேருமனையா சொன்னா எப்புடி சங்கத்து அடியாள் ன்னு சொன்னா தான சங்கத்துக்கும் ஒரு விளம்பரம் கிடைக்கும் (காமெடி கும்மி கவனிக்க )

  புராணமா, நன் எதோ தகவல்ன்னு இல்ல நினைச்சேன் ஹா ஹா ஹா, அந்த ஹிந்தி பதிவு அருமையான பதிவு, உங்களது மற்ற பதிவுகளையும் நேரம் கிடக்கும் பொழுது படிக்கிறேன்...

  வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்.மிக சுவையான சுய அறிமுகம்.

  ReplyDelete
 8. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. அறிமுகமே அமர்க்களம்!
  நன்றே தொடரட்டும் உங்கள் இவ்வார ஆசிரியப்பணி!

  நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. அட்டகாசமான அறிமுகம்.இவ்வாரம் உங்கள் ஆசிரிய‌பணியை திறம்பட நடாத்திட‌ என் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. அன்பின் வெற்றிவேல் - அருமையான சுய அறிமுகம் - இதுவரை உன் படைப்புகளைப் படித்ததனால் உன்னைப் பற்றி ஒரளவு தெரிந்தது - குறுந்தொகை படித்திருக்கிறாய் - படிக்கிறாய் என்னும் செய்தி எதிர்பாராத ஒன்று - மிக்க மகிழ்ச்சி - இன்னும் படிக்க வேண்டிய சுட்டிகள் இருக்கின்றன - சென்று படிக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 12. வணக்கம் வெற்றிவேல்.
  அறிமுகம் சிறப்பாக இருக்கிறது.
  வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை சிறப்பாகச் செய்ய வாழ்த்துகள்!

  ReplyDelete
 13. ஆரம்பமே அட்டகாசம் வெற்றி.இந்த வாரம் முழுதும் உங்கள் கையில்தான்.அசத்துங்கள்.வாழ்த்துகளும் கூட !

  ReplyDelete
 14. @திண்டுக்கல் தனபாலன்

  குழந்தைக்கு என்னவெல்லாம் தெரியுது...! ஹிஹி... எதிர்க்கால நினைவுகள் போலவே ரசித்து எழுதிய சுய அறிமுகம் அசத்தல்... தொடர வாழ்த்துக்கள்...

  ////////////////////////////////
  இந்தக் குழந்தை பாவம் அண்ணா... தங்கள் பாராட்டுகளுக்கும், ஊக்கத்திற்கும் மிக்க மகிழ்ச்சி அண்ணா...

  ReplyDelete
 15. @sury Siva said...

  (படிக்காம, கமென்ட் போடாம போறவங்க பிளாக் நாளைலேருந்து முடக்கிடடும்னு நம்ம விக்கிலீக் ஜூலியன் அசாஞ்சே'கிட்ட சொல்லிட்டுதான் வந்துருக்கேன், பார்த்துகோங்க. ஹ ஹா ஹா) அப்புறம் உங்க இஷ்டம்...//

  என்னிக்காச்சும் ஒரு நாளைக்கு அரசியல்லே நுழைஞ்சு அட்டகாசம் பண்ணி அதிரடியா முதல்வரானாலும்
  ஆகிவிடுவீங்க... அப்படின்னு சொல்ல முடியாட்டாலும் ,

  ஒரு வட்டம் இல்லைன்னா ஒரு மாவட்டம் இல்லைன்னா ஒரு கொ.ப.செ. ஆகிவிடுவீங்க..

  வாழ்க.

  சுப்பு தாத்தா.
  //////////////

  இப்படிதான் உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிடுறீங்க!!! அரசியலா! இதுவும் நல்லாதான் இருக்கும், ஒரு ரவுண்டு நேரம் கிடைத்தால் சென்று வருவோம்!!!ஹி ஹி....

  வணக்கம் சுப்பு தாத்தா, தங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 16. @ஸ்கூல் பையன் said...

  வெற்றிவேல், இனிய தொடக்கம்... ஒருவார வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள்.. நன்றி...
  //////////////////////////////

  வணக்கம் ஸ்கூல் பையா!
  தங்கள் வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 17. @ஸ்கூல் பையன் said...

  தீபாவளி கவிதை படித்தேன்... அருமை... சொந்த அனுபவமோ?

  ///////////////////////////////////
  சொந்த அனுபவம் அப்புடின்னும் சொல்லலாம்!!! கொஞ்சம் கற்பனைதான்....

  ReplyDelete
 18. @ஸ்கூல் பையன் said...

  தீபாவளி கவிதை படித்தேன்... அருமை... சொந்த அனுபவமோ?

  ///////////////////////////////////
  சொந்த அனுபவம் அப்புடின்னும் சொல்லலாம்!!! கொஞ்சம் கற்பனைதான்....

  ReplyDelete
 19. rajalakshmi paramasivam said...
  (படிக்காம, கமென்ட் போடாம போறவங்க பிளாக் நாளைலேருந்து முடக்கிடடும்னு நம்ம விக்கிலீக் ஜூலியன் அசாஞ்சே'கிட்ட சொல்லிட்டுதான் வந்துருக்கேன், பார்த்துகோங்க. ஹ ஹா ஹா) அப்புறம் உங்க இஷ்டம்...//

  அதற்காகத்தான் வந்திருக்கிறேன்.
  ஆனாலும் உங்கள் சுயபுராணம் அருமையாக உங்களைப் பற்றி சொல்லிவிட்டது.
  வாழ்த்துக்கள்.
  தொடருங்கள்....
  ///////////////////////////////

  என் சுய புராணம் கொஞ்சம் அதிகமாவே நீண்டுடுச்சி... என்ன செய்ய!!! தங்கள் இனிய கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 20. வணக்கம்
  வெற்றிவேல்

  சுயஅறிமுகம் மிக சிறப்பாக உள்ளது இந்த வாரம் வலைச்சரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 21. @சீனு
  // நம்ம அடியாள், // இப்படி வேருமனையா சொன்னா எப்புடி சங்கத்து அடியாள் ன்னு சொன்னா தான சங்கத்துக்கும் ஒரு விளம்பரம் கிடைக்கும் (காமெடி கும்மி கவனிக்க )

  புராணமா, நன் எதோ தகவல்ன்னு இல்ல நினைச்சேன் ஹா ஹா ஹா, அந்த ஹிந்தி பதிவு அருமையான பதிவு, உங்களது மற்ற பதிவுகளையும் நேரம் கிடக்கும் பொழுது படிக்கிறேன்...

  வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துக்கள்
  ///////////////////////////////////////
  வணக்கம் சீனு, நேரம் கிடைக்கும் போது மறக்காமல் படியுங்கள்...
  வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 22. @Asiya Omar said...
  வாழ்த்துக்கள்.மிக சுவையான சுய அறிமுகம்.

  //////////////////////////
  வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 23. @சமுத்ரா said...
  வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.

  //////////////////////////
  வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 24. @இளமதி said...
  அறிமுகமே அமர்க்களம்!
  நன்றே தொடரட்டும் உங்கள் இவ்வார ஆசிரியப்பணி!

  நல் வாழ்த்துக்கள்!

  ///////////////////
  வணக்கம் இளமதி...
  தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 25. @priyasaki said...
  அட்டகாசமான அறிமுகம்.இவ்வாரம் உங்கள் ஆசிரிய‌பணியை திறம்பட நடத்திட‌ என் நல்வாழ்த்துக்கள்..

  //////////////////
  வணக்கம் பிரியசகி...

  தங்கள் இனிய கருத்துக்கும், வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 26. @cheena (சீனா) said...
  அன்பின் வெற்றிவேல் - அருமையான சுய அறிமுகம் - இதுவரை உன் படைப்புகளைப் படித்ததனால் உன்னைப் பற்றி ஒரளவு தெரிந்தது - குறுந்தொகை படித்திருக்கிறாய் - படிக்கிறாய் என்னும் செய்தி எதிர்பாராத ஒன்று - மிக்க மகிழ்ச்சி - இன்னும் படிக்க வேண்டிய சுட்டிகள் இருக்கின்றன - சென்று படிக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  /////////////////////////////////////

  வணக்கம் அய்யா!!!
  அனைத்தையும் படியுங்கள்... படித்துவிட்டு எப்படி உள்ளது என்றும் சொல்லுங்கள்... தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 27. @Ranjani Narayanan said...
  வணக்கம் வெற்றிவேல்...
  அறிமுகம் சிறப்பாக இருக்கிறது.
  வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை சிறப்பாகச் செய்ய வாழ்த்துகள்!

  ///////////////////////////////
  வணக்கம்...
  தங்கள் பாராட்டுகளுக்கும் இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 28. @ஹேமா said...
  ஆரம்பமே அட்டகாசம் வெற்றி.இந்த வாரம் முழுதும் உங்கள் கையில்தான்.அசத்துங்கள்.வாழ்த்துகளும் கூட !
  ////////////////////////////////////////
  வணக்கம் ஹேமா. உங்கள் கருத்து மற்றும் வாழ்த்துகளை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி... கூட நிறைய வாழ்த்துகள் தந்ததில் பெருமகிழ்ச்சி...

  ReplyDelete
 29. @2008rupan said...
  வணக்கம்
  வெற்றிவேல்

  சுயஅறிமுகம் மிக சிறப்பாக உள்ளது இந்த வாரம் வலைச்சரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-
  /////////////////////////////////

  வணக்கம் ரூபன்...

  தங்கள் வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 30. அருமையான அறிமுகம்! வாழ்த்துக்கள் வெற்றிவேல்!

  ReplyDelete
 31. வெற்றிவேல்...
  வெற்றிகரமான
  வலைச்சர
  வருகைக்கு
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள் வெற்றிவேல்(இரவின் புன்னகை).... வெற்றிகரமாகத் தொடருங்கள்.... நானும் தொடர்கிறேன் உங்களின் அனுபவங்களை...

  ReplyDelete
 33. பணியை சிறப்பாக அலங்கரிக்க வாழ்த்துக்கள் படித்த பின் தான் கமெண்டு போடுகின்றேன்:))))

  ReplyDelete
 34. வாழ்த்துகள் வெற்றிவேல். இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள்.

  ReplyDelete
 35. வலைச்சர பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 36. @சுரேஷ் , @இராஜராஜேஸ்வரி, @எழில் @தனிமரம் @அப்பாதுரை @வெங்கட் நாகராஜ் @கோமதி அரசு
  என வாழ்த்து வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,,,

  நன்றி, வணக்கம்...

  ReplyDelete
 37. வாழ்த்துகள் நண்பரே ... சுய அறிமுகம் அருமை...

  ReplyDelete
 38. //அவள் பதித்துவிட்டுச் சென்ற இந்த தடத்தை மட்டும் நான் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்...// தொடருங்க...அசோகர் வரலாற்றின் கரும்புள்ளி வித்தியாசமான ஆய்வு.

  ReplyDelete
 39. அன்பின் வெற்றிவேல் - புள்ளையார் அதிர்ஷ்ட்டமும், தென்னகத்தில் அவர் வேரூன்றிய விதமும் - பதிவின் சுட்டி வேலை செய்ய வில்லை - சரியான சுட்டி : http://iravinpunnagai.blogspot.com/2012/09/blog-post_19.html. .காம் என்றிருக்க வேண்டும் - .இன் என்றிருக்கிறது.

  சரி செய்யவும்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது