07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, June 29, 2013

கொஞ்சம் கவிதை, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் மருத்துவம்- எல்லாம்

வணக்கத்துடன் வெற்றிவேல்...


சிறந்த எழுத்தாளர், பதிவுலக நண்பர்களை சொந்தமே என்று மிகவும் அன்பாக அழைப்பவர். நீண்ட பெரும் இடைவெளிக்குப் பின் வந்துள்ளார், அவருக்கு நம் அன்பான வரவேற்ப்பையும், ஆதரவையும் அளிப்போம். காற்றுக் காதலே கவிதை, காட்சிப்பிழைகள், விடைகேட்டு வருகிறேன் வாசக் திறவுங்கள் இவையெல்லாம் இவரது சிறந்த எழுத்துக்கு உதாரணங்கள்.... வாழ்த்துவோம்.

௨) சிறுவர் உலகம்- சோபியா ஆண்டன்

இவர் ஓர் ஆசிரியை, இவரது பதிவுகளிலிருந்து இவர்களின் மாணவர்களை இவர் எவ்வளவு அன்பாக அக்கறையாக சொல்லிக்கொடுக்கிறார் என்பது புரியும். சூழலை அறிதலும் உடற் பயிற்ச்சியும்விளையாட்டு மைதானம் போன்ற பதிவுகள் அனைத்தும் உதாரங்கள் தான். இவர் இணைய பதிவுலகத்திற்கு புதியவர். இவரை வரவேற்று நம் அன்பையும், வாழ்த்துகளையும் அறிவிப்போம்.


இவர் டேலி (Tally) மென்பொருளை இவர் தளத்தில் மிகவும் எளிமையாக அழகாக சொல்லிக்கொடுக்கிறார். படித்து, பகிர்ந்து பயன் அடையுங்கள். புது வருடமும் புது கணக்கும்30 நாட்களில் டாலி, டெலி ஷாப்பிங் பதிவுகள் நிச்சயம் அனைவருக்கும் பயன்படக்கூடியவை.


தொடர்ந்து பொன் முட்டையிடும் வாத்து போல இவர் தினம் நான்கைந்து பதிவுகளை போட்டுக்கொண்டே இருப்பார். எப்படித்தான் இவரால் இவ்வளவு வேகமாக சலிக்காமல் எழுத முடிகிறதோ தெரியவில்லை. வியப்புதான். தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை அவசியம். அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. பயன் பெறுங்கள்.

௫) COUNSEL FOR ANY -ஷண்முக வேல்.

மருத்துவம், மன நல சந்தேகங்கள் பற்றிய பல பதிவுகளை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். உணர்ச்சிகளை வெளியே காட்டுங்கள்,  எய்ட்ஸ் தெரிந்தும் தெரியாததும் என்பன உதாரங்கள். 


இவர் தளத்தில் அனைத்தையும் பற்றியும் எழுதுகிறார். உங்கள் குழந்தையை வளர்க்காதீர்கள், வளர விடுங்கள், ஆண்களே உஷார், சாம்சங் குறுக்கு விசைகள் என பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி மிகவும் அழகாகவே பேசுகிறார். அவருக்கு நமது வாழ்த்துகள்.

௭) ஹ ஹா - ஹாஸ்யம் 

நகைச்சுவை பதிவுகள் எழுதுபவர், மிகவும் கருத்தாக பேசுவார். தமிழனுக்கு கணிதம் வராதா?வெட்கப் படாதே சகோதரி இவை உதாரணங்கள் தான். அப்புறம் ஒலிம்பிக்கில் சொதப்புவது எப்படி. அவருக்கு நம் வாழ்த்துகள் தெரிவிப்போம்.


இவரது கவிதைகள் அனைத்தும் சிறப்பானதாக இருக்கும். உதாரணம் முதிர்கன்னி மற்றும் இவரது காதல் கவிதைகளை படித்துப் பாருங்கள் சிறப்பானதாக இருக்கும்.


தாய்மை பற்றி பேசும் ஜன்னலோரத்து மழை, அழகான என் தோழிக்கு கவிதை உதாரணங்கள். இவரது கவிதைகள் தனி நடையில் மிளிர்ந்து விளங்கும். படித்துப் பாருங்கள்...


இவரது பதிவுகள் அமெரிக்க முக்கிய வழக்குகள் பற்றி நிறைய குறிப்பிடுகிறார், ஒற்றை குழந்தை ஆய்வு அனைவரும் பார்க்க வேண்டிய பதிவுகள். பாராட்டுகள்...

அனைவருக்கும், பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்...

வெற்றிவேல் 
சாளையக்குறிச்சி...

16 comments:

 1. கலவையான தளங்கள் அனைத்தும் சிறந்த தளங்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்...

  முடிவில் உள்ள ௧௦) செல்லப்பா தமிழ் டைரி அவர்களின் தளத்தின் தலைப்பின் இணைப்பு ௯) முகிலின் பக்கங்களுக்கு செல்கிறது...

  அதே போல் முகிலின் பக்கங்களின் பகிர்வுகள் இரண்டும் ஒரே இணைப்பு உள்ளது கவனிக்கவும்... நன்றி...

  ReplyDelete
 3. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.....

  ReplyDelete
 4. தங்களை போன்றோரின் மேலான ஒத்துழைப்பு இருக்கும் வரை நான் எழுதுவது தடைபடாது. தங்கள் வாழ்த்துக்கு நன்றி...

  ReplyDelete
 5. கதம்ப மலரென கலந்துதந்த அறிமுகங்கள் சிறப்பு.

  உங்களுக்கும் அறிமுகங்கள் அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

  த ம.2

  ReplyDelete
 6. இன்று நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  ஹ ஹா -ஹாஸ்யம் கோமா அவர்கள் என்னை பதிவு எழுத தூண்டியவர்கள். ஆரம்பத்தில் என் பதிவுகளுக்கு முதலில் வந்து பின்னூட்டம் கொடுத்து உற்சாகப்படுத்தியவர்கள். எங்கள் ஊரை சேர்ந்தவர்கள்.என்னை எங்கள் அம்மா வீட்டில் கூப்பிடும் பெயரும் அவர் பெயரும் ஒன்று.

  ReplyDelete
 7. அறிமுகத்திற்கு நன்றி..

  ReplyDelete
 8. பல்சுவைத்தளங்களை அறிந்துகொண்டேன்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 9. அறிமுகமான அனைத்து வலைப்பதிவர்கட்கும் வாழ்த்துகள்.

  எனது தளத்தினை அறிமுகம் செய்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே !!

  ReplyDelete
 10. அறிமுகங்களுக்கு என் இனிய நல் வாழ்த்துக்கள் தொடரட்டும் பணி

  ReplyDelete
 11. வணக்கம் வெற்றி.

  வலைச்சரத்தில் ஆசிரியப்பணி செய்வதே ஒரு சவாலான செயல்தான். காரணம் ஏராளமான தளங்களுக்குச் சென்று படித்து, தேர்ந்து, பகுத்து, தொகுத்து அறிமுகம் செய்ய வேண்டும். அதே நேரத்தில், பலருடைய எண்ணங்களை எளிதில் தேடிப்படிக்க அனைவருக்கும் உபயோகமாக இருப்பதால் மிகுந்த உற்சாகத்துடன் செய்ய விரும்பும் வேலை இது.

  தேடித்தேடி சிறப்பாக தொகுத்து வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. என்னுடைய தளத்தையும் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. மிகவும் உற்ச்சாகமாக இருக்கிறது.

  ReplyDelete
 13. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .அனைவரையும்
  மிகச் சிறப்பாக அறிமுகப் படுத்திய சகோதரரே உங்களுக்கும் என் நன்றி
  கலந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

  ReplyDelete
 14. அனைவருக்கும், பாராட்டுகள் ,, வாழ்த்துகள்...

  ReplyDelete
 15. என் தளத்தை தாங்கள் வலைத் தளத்தி அறிமுகம் செய்தமைக்கு என் அன்பு நன்றிகள் பல தங்கள் ஆதரவு போல் மற்றவர்கள் ஆதரவும் பெருகும் என்று நம்புகிறேன் மிக்க நன்றிகள் வெற்றிவேல் அண்ணா

  ReplyDelete
 16. வணக்கம் சொந்தமே!மிக நீண்ட இன்மையின் போதும் இப்படியாய் உற்சாகம் தந்த ஆதரவிற்கு நன்றி.அனைத்து சொந்தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது