07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஆசியா உமர்.. Show all posts
Showing posts with label ஆசியா உமர்.. Show all posts

Sunday, June 23, 2013

பல்சுவை மலர்

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

வலைச்சரத்தின்  ஒரு வார ஆசிரியப்பணியில்  இறுதி நாளான இன்று பல சுவையான பகிர்வுகளைத் தருவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். கதம்ப மலர், அறுசுவை மலர் என்ற தலைப்புகளில் பார்க்கலாம்.

கோலங்கள் சாருஸ்ரீ பகிர்ந்த தினமும், அவருக்கு படித்ததில் பிடித்ததாம். நமக்கும் நிச்சயம் பிடிக்கும். வாசித்து பாருங்க.

ப்ளாக்கர் நண்பன் அப்துல் பாசித் வலையுலகில் அற்புதமான பணி செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே!
புதிய பதிவர்கள் செய்ய வேண்டியது என்ன ? என்ற அவரின்  பகிர்வு, நிச்சயம் பலருக்கும் உதவியாக இருக்கும்.

சுமஜ்லாவின் மவுஸ் ரைட் கிளிக் இயங்காமல் செய்ய - இந்த பகிர்வைப் பாருங்கள்.காப்பி பேஸ்ட் செய்ய முடியாமல் தடுத்து விடலாம்.

நம் வலைப்பூவை இழந்து விட்டால் - அறிவுக் களஞ்சியத்தின் பகிர்வு. உபயோகமான பகிர்வு.

மாய உலகம் ராஜேஸ் நம்மை எல்லாம் சோகத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்த இளம் வலைப்பதிவர். அவர் நமக்காக பயன் தரும் வகையில் தொகுத்த பிளாக், கணினி, மென் பொருள் பற்றி பதிவிடுகிற வலைப்பூக்கள். என்ற பகிர்வு. வலையுலக தொழிநுட்பத்தில் பிரச்சனை என்றால் இந்த தொகுப்பில் உள்ள வலைப்பூக்களில் நுழைந்து பாருங்க.

பொன்மலர் பக்கத்தில் இறப்பிற்கு பின் தானாக ஜிமெயில் கணக்கை அழிக்க, தகவல்களை மாற்ற –  இந்த பகிர்வையும் பாருங்கள்.

ரஜின் அப்துல் ரஹ்மானின் இல்லத்தரசி யார் அவள்?வாசித்து பாருங்க.

உணவு உலகம் சங்கரலிங்கம் சாரின் விழிப்புணர்வு பகிர்வு
இறைச்சி தரும் இன்னல்கள், தேவையான பகிர்வு.உணவு கலப்படம் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரு விழிப்புணர்வாக பகிர்ந்து வருகிறார்.

சகோ.எல்.கே.எஸ்.மீரானின் அதிர்ச்சி அலைகள், எனக்கு பிடித்த பகிர்வுகளில் ஒன்று.

உங்களுக்காகவின் பகிர்வு செல்போன் டிப்ஸ்.

புதுகை தென்றலின் இல்லதரசிகளுக்கு இனிப்பான டிப்ஸ் .பயனுள்ள பகிர்வு.

மண், மரம், மழை, மனிதன் சம்பந்தப்பட்ட அனைத்து பகிர்வுகளும்
இங்கே சென்று தெரிந்து கொள்ளலாம்.


விவசாயம் ஒரு ஆழமான பார்வை – ஈரோட்டைச் சேர்ந்த சதீஸின் பகிர்வு கழுகில்.


மரங்களை வெட்டுங்கள் – மனதோடு மட்டும் கௌசல்யாவின் விழிப்புணர்வு   பகிர்வு.

துளசி  மேம் உங்க தளத்தில் எதை அறிமுகப்படுத்த. நான் ! ! ! இத்தனை வருஷமாக ஆயிரக்கணக்கில் பகிர்ந்திருக்கீங்க, இனி மேல் வருஷதிற்கு மூணு பகிர்வை பார்த்ததும் ரோசாரோசா!.. ரோசாரோசா!... ரோசா ! பாடத் தோன்றியது.அழகோ அழகு.
துளசிதளம் போல் யாரும்  இந்த அளவு பயணக்குறிப்புகள் கொடுத்திருக்கமாட்டங்கன்னு நினைக்கிறேன். வாசிக்கவும் பார்வையிடவும் நிறைய பகிர்வுகள் குவிந்து கிடக்கிறது. நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் பார்வையிடுவேன்.

இதயம் பேசுகிறது  இலாவின் சிட்டப்பூஊஊ சுவாரசியமான பகிர்வு.

ஏஞ்சலினின் தோட்டத்துப் பூவும், காகிதப்பூவும், மிக அருமை. இவர் தளத்தில் க்வில்லிங், வாழ்த்து அட்டைகள் உண்டாக்குவது பற்றிய பகிர்வுகள் ஏராளம். அனைத்தும் அருமையான பகிர்வுகள் தான்.

அப்சராவின் இல்லத்தில்  மாமியாரின் கைவண்ணம் மிக அழகான பகிர்வு.


இத்தனை பகிர்ந்த பின்பு விருந்தில்லாமல் எப்படி, அறுசுவை மலர் உங்களுக்காக..!

மனோ அக்காவின் மலாய் குலோப் ஜாமுன் , தனித்துவம் மிக்க இந்தக் குறிப்பை செய்து பாருங்க, நிச்சயம் அசத்தலாக இருக்கும், பக்குவமாக செய்ய வேண்டிய குறிப்பு.

சாம்பார் சாதம் – பார்க்கவே ருசிக்கத்தோணும். நாவில் நீர் ஊறும் பகிர்வு.

அசத்தலான பகிர்வு, அதன் கலரும் செய்முறையும் எல்லோரையும் செய்யத் தூண்டும், இஸ்லாமிய இல்லக் குறிப்பு. ஜலீலாவின் சமையல் குறிப்புகளில் ருசி அருமையாக இருக்கும். செய்து பாருங்க.

முர்தபா வாவ் ! மிக அசத்தலான குறிப்பு.

தேனக்காவின் செட்டிநாடு ஸ்பெஷல் கவுனரிசி ,நாங்க எங்க ஊரிலும் இந்த கவுனரிசி செய்யும் பழக்கம் உண்டு, இன்னொரு  பகிர்வு வெண்டைக்காய் மண்டி, செட்டிநாடு குறிப்புக்களுக்கு அக்காவோட ப்ளாக் போய்ப் பாருங்க.அசந்துடுவீங்க.

கீதா சாம்பசிவத்தின் பட்டூரா செய்து பாருங்க, உப்பலாகவே இருக்குமாம்.

அன்னை மீராவில் - நவரத்ன குருமா.அருமையான பகிர்வு.

மேனகா சத்யாவின் ஜாங்கிரி செய்து பாருங்க, சூப்பராக செய்து காட்டியிருக்காங்க.இவங்க ப்ளாக்கில் குறிப்புக்கள் மலை போல் குவிந்து கிடக்கு,நாம் தேடும் அத்தனை ரெசிப்பியும் இருக்கும்.

மற்றும் செட்டிநாடு மட்டன் பிரியாணி பார்க்கவே செய்யத் தூண்டும்.

கீழக்கரை ஸ்பெஷல் சிக்கன் 65. அட, ஈசியாக இருக்கே!

மகியின் வெஜ் பேஸ்ட்ரி வீல், இந்த குறிப்பை பார்த்து அசந்தே போயிட்டேன் நான்.

மகியின் கலகலா எத்தனை நேர்த்தியான செய்முறை.

இனிய இல்லம் ஃபாயிஜாவின் ரிச் நட்ஸ் & மட்டன் பிரியாணி
ஃபாயிஜா இந்த பிரியாணியை அவங்க ஊர் ஸ்பெஷல்ன்னு சொல்றாங்க. கையும் வாயும் மணக்கும்.

மற்றும் கிரில் பிரியர்களுக்காக தந்தூரி சிக்கன், சூப்பர்.

பாசமலரின் காளிப்ளவர் முட்டைப் பொரியல், எத்தனை இலகுவான சத்தான  பொரியல்.

வாங்க சமைக்கலாமில் சூப் வகைகள் , மிக அசத்தலான பகிர்வு, சூப் யாருக்குத்தான் பிடிக்காது.

மீன் குழம்பு - மனோகரி மன்றத்தில்,பகிர்ந்திருக்காங்க, சூப்பராக இருக்கும்.

விஜிஸ் வெஜ் கிச்சனில்  மைசூர் ரசம்  & கேரள மிளகூட்டல்  விஜியின் கைமணமே தனி தான்.

சித்ரா சுந்தரின் புரிட்டோ, ஆரோக்கியமான குறிப்பு.

கோவை2தில்லியின் கருவேப்பிலைக் குழம்பு & சூப்பர் கஷாயம், மாமியார் கிட்ட இருந்து கத்துக்கிட்டாங்களாம்.நல்ல பகிர்வு.

ராதாஸ் கிச்சன் – கிரீன் குழம்பு, வித்தியாசமாக செய்து அசத்தியிருக்காங்க.

மின்மினியின் கோதுமைமாவுப் பணியாரம், அட, இதைச் செய்து பாருங்க அத்தனை ருசி.

அன்னுவின் ஒரு ரெசிப்பி – பல காம்பினேஷன், ஆரோக்கியமாகவும் ஈசியாகவும் செய்யக் கூடிய குறிப்புக்கள்.


விஜி பார்த்தியின் நெய்யப்பம் ஸ்வீட், பார்க்கவே ஆசையைத் தூண்டுது.

பயணிக்கும் பாதை அஸ்மாவின் மரவள்ளிக்கிழங்கு அடை, மரவள்ளிக்கிழங்கில் இத்தனை ருசியாக ஒரு பதார்த்தம்! சூப்பர்.

தெய்வ சுகந்தியின் ஃப்ரூட் சாலட் வாவ் ! அசத்திட்டாங்க..

அநன்யாவின் பன்னீர் சோடா சாப்பிடுங்க, கொண்டாடுங்க !

இத்துடன் இன்றைய பகிர்வை முடித்துக் கொள்கிறேன்.
ஒரு சிறிய மனச்சங்கடம், நான் பகிர நினைத்த ஒரு சில பதிவர்களின் வலைப்பூக்கள் துடிப்பதால் என்னால் பார்வையிட முடியவில்லை.

நன்றி நவில்கிறேன், விடை பெறுகிறேன்...!

எனக்கு இந்த  வாய்ப்பளித்த,  வலைச்சரப்  பொறுப்பாசிரியர் மதிப்பிற்குரிய சீனா ஐயா மற்றும் குழுவினருக்கு முதற்கண் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை வாழ்த்தி, பாராட்டி, கருத்தும், தொடர்ந்து ஊக்கமும் அளித்த   சக பதிவுலக அன்பு நட்புள்ளங்களுக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

வலைச்சரத்திற்கு வந்த பின்பு பல நல்ல அறிமுகங்கள் கிடைத்தது நான் பெற்ற அதிர்ஷ்டமே !

நான் இந்தப் பணிக்காக அமரும் பொழுதெல்லாம், என் கணவர், தெம்பாக வேலை செய் என்று முதுகில் தட்டிக் கொடுத்து அப்ப அப்ப டீ, காஃபி போட்டுத் தந்து ஊக்கம் கொடுத்ததை பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.
இந்த அனுபவம் எனக்கு மிக சந்தோஷத்தைக் கொடுத்தது.

மீண்டும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன், மனநிறைவுடன்  விடைபெறுகிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.



மேலும் வாசிக்க...

Saturday, June 22, 2013

கவிதை மலர்

கற்பனையும் உண்மையும் கலந்து தான் கவிதை மலர்கிறது. மனத்திரையில் எழுதி, பின்பு  முழுவடிவம் பெறுகிறது. அப்படி வடிவம் பெற்ற என் தேடலில் கிடைத்த, நான் ரசித்த, சில கவிதைகளை இன்று பகிர்ந்திருக்கிறேன்.

வலைச்சரப் பொறுப்பாசிரியர் மதிப்பிற்குரிய சீனா அய்யா,  வாழ்க்கை பற்றி எழுதிய புதுக் கவிதை. இது மொக்கையா ? இல்லவே இல்லை.

சிறுமுயற்சி கயல்விழி முத்துலெட்சுமியின்  கண்ணாடிகளற்ற அறை - ஏனோ மனதை மிகவும் தொட்டு விட்டது.

முத்துச்சரம் ராமலஷ்மியின் தேவதைக்கு பிடித்த காலணிகள். அருமை. தளத்தில் எந்தக் கவிதையை நான் தேர்ந்தெடுப்பது. குவிந்து கிடக்கிறதே !

தோழி ப்ரசாவின் படத்துடன் கவிதை தொகுப்பில் அன்னையைப் பற்றி எழுதிய கவிதைகள்.

தேனக்காவின் ரசனையில்  சூரியத்தாய்.

தோழி இளமதியின் இயற்கை பற்றிய கவிதை தொகுப்பு. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் பற்றிய பகிர்வு. தேடலில் எப்பொழுதும் அவர் கவிதைகள் ஒன்றை ஒன்று விஞ்சும் படியாய்..

ஹேமா – தன் குழந்தை நிலாவில் பகிர்ந்த சாத்தியக்கூறுகளின் போது -அருமை
ஹேமாவின் எல்லாக் கவிதைகளும் எனக்கு பலமுறை வாசித்தால் தான் புரியும்.

கவிநயாவின் நெற்றிக்கண் என்னை மிகவும் கவர்ந்தது.

சமையலறை கூட போதிமரம் தான் என்கிறார் கவிஞர் ரமணி. என்னமோ! சமையலறையே என் உலகமாய் இருப்பதால், இந்தக் கவிதையையே தேர்ந்தெடுத்தேன்.

ஆயிஷா ஃபரூக்கின் உழவைக் காப்போம் கவிதையின் வரிகள் என் உள்ளத்தை பிரதிபலிப்பதாய் இருக்கிறது. உழவின்றி  உணவிற்கு வழியேது, உழவனன்றி உழவிற்கு ஆள் ஏது – நாம் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டிய வரிகள்.

நாடோடியின் பார்வையில் – விவசாயியின்,  கவலை உனக்கு என்ற கவிதை எத்தனை உண்மை.

சீனியின் பக்கத்து வீடு – இனம், மதம், மொழி கடந்து பக்கத்து வீட்டாருடன் பரிவோடு நடப்பது நன்மை பயக்கவல்லது என்கிறார்.

மீனவர்கள் எதிர்பார்க்கும் தீர்ப்புகள் திருத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை தானே!

கவிதைவீதி சௌந்தரின் கண்ணீர் வடிக்கும் வேப்பமரம்  கருத்துள்ள கவிதை,

உங்க விஞ்ஞானத்துல 
ஒரு அரிசி செய்யுங்க 
காலமெல்லாம் உங்க வீட்டில் 
கால்புடிச்சு நிப்போமுங்க..............

நட்பும் காதலும் குறித்த கோபியின் இந்தக் கவிதை தொகுப்பு மிகவும் அருமை.

கிருஷ்ணப்ரியாவின் தஞ்சை கவிதையில் இல்லத்தரசியின்

கல்யாணசுந்தரத்தின் கனவு மெய்ப்பட வேண்டும் -    கருத்துள்ள கவிதை.

தமிழ் நிலாவின் நிச்சயமில்லை கவிதை – உலகம் எப்போதோ அழிந்து விட்டது. இறக்கப் பயப்படாதே. மனிதம் இறந்து நாளாகிவிட்டது என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். மனிதங்களை நேசிக்கும் சக்தி ஒன்று தான் நிலையானது. மதங்கள் அல்ல என்கிறார்.

சிநேகிதன் அக்பர் – வெளிநாட்டுவாசியின் விடுமுறை நாட்கள் - நச் கவிதை.

இளம் தூயவனின் – அழகுஅருமை.


தேனி சூர்யாவின் உன்னில் தேடியவை உன்னிலே கிடைத்து விட்டால் நீயும் ஒரு மகாத்மாவே !   என்கிறார்.

எங்கள் வாழ்வுக்கு ஒரு விடிவு வராதா? என்ற மனவேதனை நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

ரேகா ராகவனின் ஆனால் ...
கவிதை வரிகளில் நாட்டின் நடப்பை பகிர்ந்த விதம் அருமை.

நிம்மதி என்னும் வெளிச்சத்தில் என்ற நீரோடை மலிக்காவின்  கவிதைப் பகிர்வு  வானொலியில் புத்தாண்டுக்கவிதையாக வாசிக்கப்பட்டதை கேட்டு ரசியுங்கள்..

தோழி ஸாதிகாவின் சாம்பிராணி கவிதை சிந்திக்க வைத்தது.

இதயத் துடிப்பின் கவிதை துடிப்பு - ப்ரசாந்தின் இதயத் துடிப்பில் வெளிவந்த கவிதை 



நேற்று இறந்து விட்டேன் - மணிகண்டவேல்  கவிதையை வாசித்து பாருங்க, அவர் இறந்ததின் காரணம் தெரியும்..


அப்பாதுரை – நிழலின் ஒளி – வித்தியாசமான ஒரு கவிதை.

ரஹீம் கஸாலி பகிர்ந்த - கண்ணீரில் ஒரு கவிதாஞ்சலி
கலைஞரின் கவிதைகளுக்கும் அவருடைய குரலுக்கும் நான் பெரிய ரசிகை, அவ்வளவே ! 

அடுத்து நான் ரசிப்பது கவிஞர் வைரமுத்து
இதோ தமிழ்வாசி பகிர்ந்த தன் அம்மாவிற்காக - பெத்தவளே உன் பெருமை, ஒத்த வரி சொல்லலையே  அவரே வாசிக்கிறார். கேட்டுப் பாருங்கள்.


இத்துடன் இன்றைய பகிர்வை முடித்துக் கொள்கிறேன்.

மீண்டும் அசத்தலான பதிவர்களுடன் நாளை சந்திப்போம்.

என்றென்றும் அன்புடன்,

ஆசியா உமர்.







மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது