
ரமலான் பெருநாளை கொண்டாடும் என் அன்பு உறவுகளுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் ஒரு மாமனிதரைப் பற்றி எழுதுவது மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.இந்தப் புன்னகை பூ புதுக்கோட்டை அப்துல்லாவை நான் அறிமுகப்படுத்தித் தான் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று இல்லை. இவர் ஏற்கனவே எல்லோருக்கும் மிகவும் தெரிந்த, பலருக்கும்...
மேலும் வாசிக்க...
என் மனம் கவர்ந்த இருபதிவர்களை குறித்த பதிவு இது.இவர்களை உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். ஆனாலும் இவர்களைப் பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.மனசுக்குள் மத்தாப்புமென்பொருள் துறையில் இருப்பதாலோ என்னவோ மிக மென்மையான காதல் கதைகளை எழுதி குவிக்கிறார் இந்த பதிவர். மிக எளிய நடையில், சரளமான ஓட்டத்தில் கதை எழுதும் இவரது தனிச்சிறப்பே கதையின் இடையே வரும் கவிதைகளும் அந்த கதைக்கும், கவிதைக்கும் ஏற்றப் படங்களும் தான்.இவரது கதாப்பாத்திரங்கள்...
மேலும் வாசிக்க...
பகிரங்க கடிதம் என்பதை தமிழ் வலையுலகிற்கு அறிமுகம் செய்த உங்களுக்கே நான் ஒரு பகிரங்க கடிதம் எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.
பரிசல்காரருக்கு நீங்கள் எழுதிய பகிரங்க கடிதம் பின்னர் பலருக்கும் பலரால் எழுதப்பட்டு சில வார காலங்களுக்கு தமிழ் மணத்தின் சூடாண இடுகைகளை நிரப்பியிருந்ததை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன்.
கோயம்புத்தூர் என்றதும் என் நினைவுக்கு வருபவை குடிப்பதற்கிணிய சிறுவானி ஆற்று நீரும், கேட்பதற்கிணிய கொங்குத்...
மேலும் வாசிக்க...
திறமைமிக்க பலரும் வகித்த இப்பொறுப்பிற்கு அடியேன் என்னையும் தேர்ந்தெடுத்த வலைச்சர குழுவினருக்கும், சீனா அய்யாவிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு என் பணியை ஆரம்பிக்கிறேன்.எனக்கு முன் இப் பொறுப்பை வகித்த கவிதைச் சாலையின் உரிமையாளர் அன்புக்குறிய சேவியர் அவர்கள்,பணிச் சுமையின் காரணமாக இடையில் திடீர் என விடை பெற்றுவிட்டாலும், இடைபட்ட குறுகிய காலத்திலும் தனது முத்திரையை அழுத்தமாக பதிவிட்டுத் தான் சென்றிருக்கின்றார்.என்னைப்...
மேலும் வாசிக்க...
அன்பின் பதிவர்களே !ஒரு வார காலம் ஆசிரியப் பொறுப்பினை சிறப்பாகச் செய்து - கொடுத்த பணியினை சீராக நிறைவேற்றி - பணியின் அழுத்தம் காரணமாக விடை பெறுகிறார் அருமை நண்பர் சேவியர். அவர்களும் ஏழு பதிவுகள் - சுய அறிமுக முன்னுரை, பல படிக்க வேண்டிய கவிதைப்பூக்களின் அறிமுகம், அறிவியலில் தமிழ் - வலைப்பூக்களின் அறிமுகம், காதல், புரட்சி, பெற்ற தாய் பற்றிய பல புதிய பதிவுகளின் அறிமுகம் என அரிய பதிவுகளைப் படைத்து விட்டுச் சென்றிருக்கிறார். அவர்களுக்கு...
மேலும் வாசிக்க...

காலையில் வந்த உடனேயே அலுவலகம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. நான் பணிபுரியும் வாஷிங்டன் மியூட்சுவல்ஸ் வங்கியை ஜெ.பி மார்கன் வாங்கியதால் தான் இந்த பரபரப்பு.ஒரு உயரதிகாரி எனும் முறையில் காலையிலிருந்தே விவாதங்களும், என்ன நடக்கும் எனும் ஊகங்களும், தேவையற்ற மீட்டிங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.இன்றைய பொழுது வலைத்தளம் பக்கம் வருவதற்கான...
மேலும் வாசிக்க...

ஆயிரந்தான் கவிசொன்னேன்அழகழகாய் பொய் சொன்னேன்பெத்தவளே ஒம் பெருமைஒத்தவரி சொல்லலையே!காத்தெல்லாம் மகன்பாட்டுகாயிதத்தில் அவன் எழுத்துஊரெல்லாம் மகன் பேச்சுஒங்கீர்த்தி எழுதலையே!எழுதவோ படிக்கவோஏலாத தாயப்பத்திஎழுதி என்ன லாபமின்னுஎழுதாமப் போனேனே!என கவிப்பேரரசு வைரமுத்து தன் அன்னையைப் பற்றி கவிதை வரிகளில் கண்ணீர் வடித்திருப்பார். அன்னையைப் பற்றி எழுத...
மேலும் வாசிக்க...
.jpg)
சமூகக் கட்டமைப்பின் மீதும், மனித நேய மறுதலிப்புகள் மீதும் கோபம் கொண்டும், சக மனித கரிசனையின் வெளிப்பாடாகவும் பல கட்டுரைகள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. பெரும்பாலான கட்டுரைகள் சமூகத்தின் கறைகளை எப்படியேனும் அகற்றவேண்டும் என்றும், அதன் குறைகளை குறைந்த பட்சமேனும் குறைக்க வேண்டும் எனவும் மும்முரம் காட்டுகின்றன.இத்தகைய சமூக, சக மனித அக்கறை...
மேலும் வாசிக்க...

கவிதைகளிலிருந்து காதலையும், காதலில் இருந்து கவிதையையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது. சங்கம் முதல் இன்று வரை கவிதைகள் காதலையும், காதல் கவிதையையும் ஒன்றுக்குள் மற்றொன்றை ஊற்றி நிரம்பியிருக்கின்றன.காதலியை மனக்கண்ணுக்கு முன்னால் நிறுத்தினால் போதும் கவிதைத் தமிழ் காதலனின் விரல்களில் வழிந்தோடும். அதே நிலை தான் காதலனை நினைக்கும் காதலிக்கும்....
மேலும் வாசிக்க...

கலை கலைக்கானது எனும் விவாதங்களை விட்டு இலக்கியம் இன்று வெகுதூரம் விலகி வந்து சமூகத்தோடு இணைந்து விட்டது. இலக்கியம் இணைந்த அளவுக்கு நமது தமிழ் சமூகத்தோடு இணைந்ததா என்பது கேள்விக்குறியே.அறிவியல் என்றாலும், புதிய மேனாட்டு கண்டுபிடிப்புகள் என்றாலும், அறிவியல் விதிகள் என்றாலும் ஆங்கிலத்தில் மட்டுமே சொல்லப்பட முடியும் எனும் குருட்டுத் தனமான விவாதங்கள்...
மேலும் வாசிக்க...

இலக்கிய வடிவங்களில் எனக்கு மிகவும் பிடித்தமானது கவிதை. ஒரு நாவலின் கனத்தை ஒரு நான்கு வரிக் கவிதை எழுதிவிட முடியும்.இந்தக் காட்டில்எந்த மூங்கில்புல்லாங்குழல்என்னும் அமுதபாரதியின் கவிதை இன்னும் நினைவுகளின் இடுக்கில் நிலைத்திருப்பதற்கு அதன் எளிமையும் அது சொல்லும் வலிமையான கருத்துக்களுமே காரணம் எனலாம்.இன்னொன்று கவிதையில் நீங்கள் கட்டுரையின்...
மேலும் வாசிக்க...

ஒரு வாரம் அழுத்தமான எழுத்துக்களும், வாசிப்புகளும் வாய்க்கப்பற்ற விக்னேஷ் அசத்திக் கொண்டிருந்தார். இந்த வாரம் அந்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சவாலான, சுவாரஸ்யமான பணியை எனக்கு அளித்த ஆசிரியர் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.என்னைக் கவர்ந்த சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன். அதற்கு முன் எனது எழுத்துலக அனுபவத்தைக் கொஞ்சம்...
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே15ம் நாள் துவங்கி ஒரு வார காலத்திற்கு ஆசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றிய அருமை நண்பர் விக்கி எனச் செல்லமாக அழைக்கப்படும் விக்னேஷ்வரன் அடைக்கலம் இன்று பொறுப்பை ஒப்படைக்கிறார். அருமையான ஆறு பதிவுகள் இட்டு விடை பெறுகிறார். அருமையான கதைகளின் அறிமுகம், இனிய கவிதைகளின் அறிமுகம், சக பதிவர்களின் பொழுதுபோக்கு பற்றிய பதிவுகள், பல பதிவர்களைப் பற்றிய சிறு அறிமுகம் எனப் பல பதிவுகள் இட்டு கொடுத்த பொறுப்பினைச் சிறப்பாக நிறைவேற்றி...
மேலும் வாசிக்க...
கண்மூடி கண் திறப்பதற்குள் ஒரு வாரம் ஓடி விட்டது (நீ என்ன அவ்வளோ நேரம் தூங்குறியானுலாம் கேட்கப்படாது). புகழ் பெற்ற பல பதிவர்கள் எழுதிய இந்த வலைச்சரத்தில் நானும் ஒரு வார காலமாக ஆசிரியராக இருந்துவிட்டேன் என நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.முன் பின் அறிந்திருக்காத என்னையும் நம்பி, ஒரு வார காலமாக ஆசிரியர் பொருப்பை ஒப்படைத்த சீனா ஐயாவிற்கும், என்னை எழுத அழைத்த சஞ்சய் அண்ணாவிற்கும் மிக்க நன்றி.உடனடி அழைப்பு என்பதினால்...
மேலும் வாசிக்க...
இன்று நம் சுற்றத்தை பற்றிய சிறு பார்வை. பதிவர்களுக்கு உலகம் முழுவதும் நண்பர்கள். பதிவுலகில் பிரவேசித்து பல நல் உள்ளங்களின் அன்பையும் பாசத்தையும் சம்பாதித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நான் பிளாக்கரில் எழுத வந்த அதே சமயத்தில் எழுதத் தொடங்கியவர் பரிசல்காரன் . பூ போன்ற மனதுடையவர் (புத்தகம் வாங்கி அனுப்பி வச்சிருக்காருப்பா), கள்ளம் கபடம் தெரியாதவர், அடுத்தவரை கலாய்க்கவோ அல்லது மொக்கை போடவோ எள் முனை அளவும் நினைத்துப் பார்த்திராதவர்.ஒரு...
மேலும் வாசிக்க...

பதிவுலகம் ஒரு பயன் மிக்க பொழுதுபோக்கு மையம் எனக் கூறினால் அது மிகையாகது என்றே நினைக்கிறேன். வேண்டியத் தகவலை சுலபமாகத் தேடிப் பிடித்துப் படிக்க முடிகிறது.பொழுதுபோக்கு என்பது நாம் விருப்பம் கொண்டு செய்யும் செயல். அதில் ஒரு நிறைவு இருக்கும். மனதின் முழு ஈடுபாடும் அதில் திலைத்திருப்பதை ஒரு செயல்பாட்டின் முடிவிலும் அதன் முழுமையினிலும் நாம் அறிந்துக்...
மேலும் வாசிக்க...
கவிதை என்பது என்ன? இது இன்று வரை நம்மைக் குழம்பச் செய்யும் கேள்வியாகவே அமைகிறது. கவிதையின் வரையறை என்னவென விவாதிக்கப்பட்ட வாதங்கள் இன்றளவில் சிலருக்கு திருப்தி இல்லாமலே இருக்கிறது.மரபுக் கவிதை, புதுக் கவிதை என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறோம். மரபின் அடிப்படையில் இன்று எழுதினால் அது புதுக் கவிதையா இல்லை பழைய கவிதையா? சற்று சிக்கலான கேள்வி இல்லையா?சரி, இதைப் பற்றிய நமது கவிஞர்களின் பதில் என்னொன்று நோக்குவோமே:திருத்தி எழுதிய தீர்ப்புகள்...
மேலும் வாசிக்க...
சிறுகதை எழுதுவதென்பது எல்லோராலும் இயலாதது என்று தான் கூற வேண்டும். நாம் எழுதுவது இரசிக்கும் படியாக இருக்க வேண்டும். அடுத்தவரின் நடை நம் எழுத்தில் எட்டிப்பார்க்காமல் இருக்க வேண்டும். மாறுபட்ட சிந்தனையும் அவசியம் வேண்டும். எழுதியதையே திரும்ப எழுதாமல் புதிய கோணத்தை தந்திருக்க வேண்டும். இவை சிறுகதையை படிப்பவர்கள் எதிர்பார்ப்பது.சடுதியில் தோன்றும் எண்ணத்தை அழகுபெற எழுத்தாக வடித்து வாசகர்களுக்கு கொடுத்திட நினைப்பது ஒரு சிறுகதை எழுத...
மேலும் வாசிக்க...

சனிக்கிழமை காலையில் சஞ்சய் அண்ணன் கேட்டாரு.“விக்கி வலைச்சரத்தில் எழுதுறியாப்பா”.பதில் கூட சொல்லவில்லை. இன்னுமொரு அரட்டை சன்னல் திறந்தது,“வலைச்சரத்தில் எழுதுறிங்களா?" எனக் கேட்கப்பட்டிருந்தது.அட என்ன இது ரொண்டு பேரு ஒரே கேள்விய கேட்குறாங்களே என யோசித்தேன்.சஞ்சய் அண்ணன் சொன்னாரு, “வரும் திங்கள் முதல் ஒரு வாரத்துக்கு எழுதனும்”.“திங்களா? எப்படிங்க?...
மேலும் வாசிக்க...
அருமை நண்பர் கைலாஷி என்ற முருகானந்தம் வித்தியாசமான முறையில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை நிறைவேற்றி விடை பெற்றிருக்கிறார். வழக்கமாக ஒரு வார காலம் ஆசிரியராக இருப்பதற்குப் பதிலாக இரு வார காலம் ஆசிரியர் பதவியை வகித்திருக்கிறார். ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் அரிய புகைப்படங்கள் - திருக்கயிலாயம் பற்றியது இணைத்திருந்தார். அரிய செயல் - வித்தியாசமான சிந்தனை. பலரும் தரிசனம் செய்தனர். தனது கயிலாய யாத்திரை பற்றிய குறுந்தகடு / புத்தகம் வேண்டுவோர்...
மேலும் வாசிக்க...

பொன்னிறத்தில் எம்பெருமான் ஆடுகின்றானடி திருக்கயிலையிலே ( விஷ்ணு மத்தளம் கொட்ட, பிரம்மா தாளம் தட்ட, அம்மை பார்வதி, கணேசன், முருகனுடன் ஐயன் உடுக்கையை ஒலித்துக்கொண்டு திருக்கயிலையில் ஆனந்தத் தாண்டவமாடிக் கொண்டே சகல புவனத்தையும் ஆட்டி வைக்கும் அற்புதக்காட்சி.) இன்று வரை தாங்கள் தரிசித்த திருக்கயிலாய மானசரோவர் தரிசனம் (படங்களை கிளிக் செய்து பெரிதாக...
மேலும் வாசிக்க...

இந்தக் காலத்துல எல்லாம்மே தலை கீழா மாறிப்போச்சுங்க, காலம் கெட்டுப்போச்சுன்னு இதைத்தான் சொல்றாங்களோ. எங்க காலத்துல வெட்டிப்பசங்கன்ன ஒரு "தனி மரியாதை" இருந்துங்க அதை இவங்க கெடுத்துட்டாங்க.வெட்டி பய புள்ளைக சங்கம்!!!இதுல இவங்க ரெம்ப உருப்படியா நேரம் செலவழிச்சு எழுதறதைப் படிக்கப்போனா, ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு!!!...
மேலும் வாசிக்க...