07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 15, 2008

பதிவர் குசும்பனின் இரகசியம் அம்பலமாகிறது

சனிக்கிழமை காலையில் சஞ்சய் அண்ணன் கேட்டாரு.

“விக்கி வலைச்சரத்தில் எழுதுறியாப்பா”.

பதில் கூட சொல்லவில்லை. இன்னுமொரு அரட்டை சன்னல் திறந்தது,
“வலைச்சரத்தில் எழுதுறிங்களா?" எனக் கேட்கப்பட்டிருந்தது.

அட என்ன இது ரொண்டு பேரு ஒரே கேள்விய கேட்குறாங்களே என யோசித்தேன்.


சஞ்சய் அண்ணன் சொன்னாரு, “வரும் திங்கள் முதல் ஒரு வாரத்துக்கு எழுதனும்”.

“திங்களா? எப்படிங்க? இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு. அட் ‘லிஸ்ட்’ ஒரு வாரம் டைம் கொடுங்க. நான் எழுதும்போது ரொம்ப பிழை செய்வேன். சரி பார்த்துப் போடனும்.”

“அதுலாம் பிரச்சனை இல்லை. எழுது”.

“சரி”.

சஞ்சய் அண்ணன் 'ஓகே' சொல்லிட்டு விதிமுறைகளை மின்மடலில் அனுப்பினார்.

எழுதுகிறாயா எனக் கேட்ட இன்னொருவரோடு பேசினேன். வேறு யாரும் இல்லை. நம்ம ஜெகதீசன் அண்ணாச்சிதான். அவருக்கு எப்படி தெரியும் எனக் கேட்கிறீங்களா. அழைப்பு வந்தது அவருக்கு. மாட்டிவிட்டது என்னை. ஜெகதீசன் அண்ணாச்சிக்கு நன்றி.

எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பிற்காக மகிழ்கிறேன். சீனா ஐயாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த ஒரு வருடமாக, 18.06.2007 முதல் வலையில் எழுத ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் எழுதியது ‘வெட்பிரஸ்’ தளத்தில். இரண்டு மூன்று மாதம் எழுதி இருப்பேன், நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 4 மாதங்களாக மீண்டும் ‘பிளாகர்’ வலைபதிவில் எழுதிவருகிறேன்.

எனது இந்த சுயபுராணத்தை வலைபதிவும் ஒரு வருட நிறைவும் எனும் பதிவில் எழுதி இருக்கிறேன். இதுவரை எழுதிய பதிவுகள் மொத்தம் ஐம்பது.

ஐம்பது என்பது குறைவான எண்ணிக்கை. இதில் எனக்கு பிடித்த சில பதிவுகளை சொல்வதற்கு சிரமம் உண்டாகிறது.

நான் எழுதியதில் எனக்கு பிடித்த கட்டுரைகள்:

முதலாவதாக பாரோ மன்னனின் மர்மக் கல்லறை இக்கட்டுரைச் சில மாதங்களுக்கு முன் மலேசிய நண்பன் நாளிகையில் வந்தது. ‘அதுக்கு என்ன இப்போனு’ கேக்குறிங்களா? தமிழர்கள் பழம் பெருமை பேசுவதில் பிரியம் கொண்டவர்களாம். அதான் சொல்லிவிட்டேன்.

அடுத்தது மாயாக்கள் இருந்தார்களா? எனும் கட்டுரை. இந்தப் பதிவிற்கு ஒரு அனானிமஸ் பின்னூட்டம் வந்தது. விக்னேஸ் உலகம் உருண்டை என்பது எல்லோருக்கும் தெரியும் எனக் குறிப்பிட்டிருந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னதான் சொல்ல வருது இந்த அனானினு யோசித்தேன். பிறகு புரிந்தது. எல்லோருக்கும் தெரிந்ததை ஏன்டா எழுதித் தொலைக்கிறனு கேட்டிருக்கு அந்த அனானி. என்னா ஒரு வில்லத்தனம்? ஹூம்ம்ம்.

நான் எழுதுவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டக் கட்டுரை ஆண் விந்தில் எழுதப்பட்ட சரித்திரம். அதற்கான முயற்சியும் வீண் போகவில்லை. ஏறக் குறைய ஒருவார காலமாக தமிழ்மணத்தின் சூடான இடுகையில் இருந்தது. ‘பெண் கொடுமை’ என தலைப்பிட்டிருப்பின் அன்றே தமிழ்மணத்தில் மறைந்து போயிருக்குமோ என்னவோ? தலைப்பில் இருக்கும் ‘கவுச்சி வாடை’ மட்டும் இதை வெற்றி கொள்ள செய்ததென்றால் நான் மிகவும் வருந்துகிறேன்.
என் சுயபுராணம் அளவிற்கு அதிகமாகவே இருக்கிறதாக உணர்கிறேன். மீண்டும் நாளை மற்றுமொரு பதிவில் சந்திக்கலாம்.

எச்சரிக்கை: >

1) விக்னேஸ் உலகம் உருண்டை என்பது எல்லோருக்கும் தெரியும்’ என பின்னூட்டக் கூடாது

2) அதையே இன்னொருவர் காப்பி பேஸ் செய்து ‘ரிப்பீட்ட்ட்ட்டேய்ய்ய்ய்’ போட கூடாது.



பி.கு: நேற்று குசும்பன் என்னிடம் ‘மொக்கை’ போடுகிறேன் எனக் கூறி வாய் தவறி ஒரு இரகசியத்தைச் சொல்லிவிட்டார். நான் பதிவில் போட்டுவிடுகிறேன் என சொல்லிய போது வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இருந்தாலும் என் ‘ஓட்டை வாய்’யை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் சொல்லிவிட்டேன். என்ன விடயம் என்பதை அவரிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள். இப்போதெல்லாம் குசும்பன் அதிக நேரம் ‘ஆன் லைனில்’ இருப்பதில்லை.

நாராயணா… நாராயணா….
வருகிறேன்.

33 comments:

  1. விக்கி அண்ணாச்சி ஆபீசில் இண்டர்நெட் ஏதோ பிரச்சனையாம்.. அதனால் அவர் சார்பில் இப்பதிவை நான் வெளியிடுகிறேன்...
    நன்றி!

    ReplyDelete
  2. தொடங்கட்டும் கும்மி!!!!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் விக்கி!

    ReplyDelete
  4. நீங்க எழுதும் சரித்திர தொடர்கள் லிங் ஏன் கொடுக்கவில்லை????

    ReplyDelete
  5. //ஐம்பது என்பது குறைவான எண்ணிக்கை.//

    எண்ணிக்கையா முக்கியம்? உங்கள் ஒவ்வொரு பதிவையும் பிரிண்ட் எடுத்து வீட்டில் பிரேம் போட்டு மாட்டும் அளவுக்கு முக்கியம் வாய்ந்தது!!!

    ReplyDelete
  6. 1) ‘விக்னேஸ் உலகம் உருண்டை என்பது எல்லோருக்கும் தெரியும்’ என பின்னூட்டக் கூடாது//


    விக்னேஸ் உலகம் உருண்டை என்பது எல்லோருக்கும் தெரியும்

    ReplyDelete
  7. குசும்பன் said...
    1) ‘விக்னேஸ் உலகம் உருண்டை என்பது எல்லோருக்கும் தெரியும்’ என பின்னூட்டக் கூடாது//


    விக்னேஸ் உலகம் உருண்டை என்பது எல்லோருக்கும் தெரியும்//

    ரிப்பீட்டேய்

    ReplyDelete
  8. நாங்க எல்லாம் என்னைக்கு சொன்ன பேச்சு கேட்டு இருக்கோம்!!!

    ReplyDelete
  9. //இப்போதெல்லாம் குசும்பன் அதிக நேரம் ‘ஆன் லைனில்’ இருப்பதில்லை.
    நாராயணா… நாராயணா….வருகிறேன். //

    விக்னேஸ் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்

    என் பொஞ்சாதி கூட பேசுவது குத்தமாய்யா!!! என்ன கொடுமை இது.

    ReplyDelete
  10. //மீண்டும் நாளை மற்றுமொரு பதிவில் சந்திக்கலாம்.//

    ஸ்கூல் முடிஞ்சு வந்து ஹோம் ஒர்க் எல்லாம் செஞ்சுட்டு அப்புறம் பதிவு எழுதனும் சரியா,ஸ்மார்ட் ஸ்கூல் பாய்:))))

    ReplyDelete
  11. விக்கி,
    வலைச்சரத்துல முதல் பதிவே அருமை. அடிச்சு ஆடு ராசா.

    ReplyDelete
  12. //இப்போதெல்லாம் குசும்பன் அதிக நேரம் ‘ஆன் லைனில்’ இருப்பதில்லை. //

    குசும்பன் இப்ப எல்லாம் எப்போதும் பெண் லைனில் இருப்பதால் அவரை யாரும் ஆன் லைனில் பார்க்க முடிவதில்லை.

    ReplyDelete
  13. மொதப் பதிவே இந்தப் போடு போடறே ! கும்மிஉலக நண்பர்கள் எல்லாருக்கும் சொல்லி அனுப்பிச்சாச்சா ?

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  14. அன்பின் விக்கி,

    18.06.2008 - வலைப்பதிவில் எழுத ஆரம்பித்த நாள் - சிறு பிழை இருக்கிறதென எண்ணுகிறேன் - திருத்தலாமே !!

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் விக்கி... ஜெகதீசன் உன்னை மாட்டி விடவில்லை.. ஒரே நேரத்தின் 2 மீன்களுக்கு தூண்டில் போடப் பட்டது.. மாட்டியது நீ தான்.. ஜெகதீசன் நழுவி விட்டார்..:))

    ReplyDelete
  16. //ஜோசப் பால்ராஜ் said...

    //இப்போதெல்லாம் குசும்பன் அதிக நேரம் ‘ஆன் லைனில்’ இருப்பதில்லை. //

    குசும்பன் இப்ப எல்லாம் எப்போதும் பெண் லைனில் இருப்பதால் அவரை யாரும் ஆன் லைனில் பார்க்க முடிவதில்லை.//

    கன்னாபின்னாவென்று ரிப்பீட்டேய்.. :))

    ReplyDelete
  17. @ஜெகதீசன்
    மிக்க நன்றி அண்ணாச்சி. நீங்க இந்த உதவி செய்திருக்காவிட்டால் சீனா ஐயா நான் எழுதவில்லையென நினைத்திருப்பார்.

    @குசும்பன்

    1) எந்த சரித்திரத்த நான் எழுதுறேன்?
    2) பிரேம் போட காசில்லண்ணே...
    3) குசும்பனுக்கு வால் இல்லை என்பது ஊர் அறியும்.
    4) கேட்காதிங்க... விஜயகாந்த் சாருக்கு உங்க கமேண்ட் அனுப்ப ஏற்பாடு பண்றேன்.
    5) உங்க மகனுக்கு சொல்ல வேண்டியதை என்கிட்ட சொன்னா எப்படி?

    @ஜோசப்பால்ராஜ்

    அண்ணா எதுகை மோனையோடு பின்னூட்டம் அருமை. இரகசியத்தை நான் சொல்ல மாட்டேன்.

    @சீனா

    1) நன்றி ஐயா, பதிவ போட்டது நான் இல்லை ஜெகதிசன். நல்ல வேலை சிங்க அண்டை நாடாக போனது இல்லையென்றால் இந்தியாவிற்கு போன் போட்டிருக்கனும்.

    2) திருத்திவிட்டேன் ஐயா. மிக்க நன்றி.

    @சஞ்சய்

    நன்றி. வாய்ப்பளித்ததற்கு அண்ணே.

    ReplyDelete
  18. //சென்ஷி said...
    wishes viknesh :)
    ///

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  19. //குசும்பன் said...
    நாங்க எல்லாம் என்னைக்கு சொன்ன பேச்சு கேட்டு இருக்கோம்!!!
    //

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  20. நல்லா வைக்கிறாங்கப்பா தலைப்பு... பத்திக்கிற மாதிரி... :))

    ReplyDelete
  21. ///வெயிலான் said...

    வாழ்த்துக்கள் விக்கி!//
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

    ReplyDelete
  22. விக்னேஷ் அண்ணே குசும்பன பத்தின ரகசியத்த சொல்றேன்னு பொட்டிய வாங்கிட்டு இன்னும் சொல்லாம இருக்கீங்க :))

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் விக்கி!

    ReplyDelete
  24. @சென்ஷி

    நன்றி தலைவரே

    @ஆயில்யன்

    அண்ணே இந்த ரிப்பீட்ட வச்சி எப்படியெல்லாம் 'பிலிமு' காட்டுறிங்க.. இருங்க இருங்க...

    @தமிழ் பிரியன்

    ஹி ஹி ஹி... என்ன அண்ணே நீங்க இப்படிலாம் சளிச்சிக்கிலாமா? கோவ படாதிங்க பாஸூ...

    @புதுகை அப்துல்லா

    வாங்க அண்ணே... அதான் 'ஹிண்ட்' கொடுத்திருக்கேன்... அரசல் புரசலா உங்களுக்கு தெரியலையா... அப்படியும் பாருங்களேன் இந்த குசும்பன் அடங்க மாட்டுறாரு. பெரிய வெடிகுண்டா தான் போடுனும்.

    @வடகரை வேலன்

    நன்றி அண்ணாச்சி...

    ReplyDelete
  25. //நாங்க எல்லாம் என்னைக்கு சொன்ன பேச்சு கேட்டு இருக்கோம்!!!//

    ரிப்பீட்டேய்!

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் அண்ணாச்சி....

    குசும்பந்தான் குடும்பஸ்தர் ஆயிட்டார்ல... அதனால அவ்ளாக்கா கற்பனை பண்ண முடியல :(((

    ReplyDelete
  27. @நாமக்கல் சிபி

    பீட்டுங்க பீட்டுங்க... வருகைக்கு நன்றி தலை.

    @ஜி

    அண்ணாச்சி. கல்யாணம் ஆகாதவங்கள நம்பலாம் ஆகினவங்கள நம்பக் கூடாதுனு செல்லி இருக்காங்க.... நல்லா யோசிச்சி பாருங்க....

    ReplyDelete
  28. //
    எச்சரிக்கை: >

    1) விக்னேஸ் உலகம் உருண்டை என்பது எல்லோருக்கும் தெரியும்’ என பின்னூட்டக் கூடாது
    //

    சரிங்னா உலகம் உருண்டைனு எல்லாருக்கும் தெரியாது ஓகேவா??

    ReplyDelete
  29. தாமதமான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. //
    ஜோசப் பால்ராஜ் said...

    //இப்போதெல்லாம் குசும்பன் அதிக நேரம் ‘ஆன் லைனில்’ இருப்பதில்லை. //

    குசும்பன் இப்ப எல்லாம் எப்போதும் பெண் லைனில் இருப்பதால் அவரை யாரும் ஆன் லைனில் பார்க்க முடிவதில்லை.
    //

    ஹாஹா :)))))))))))))))))))))

    ReplyDelete
  31. @ பரிசல்காரன்

    நன்றி

    @மங்களூர் சிவா

    நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது