07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 31, 2010

தமிழுக்கு அமுதென்று பேர் (வலைச்சரம் 3ம் நாள்)

மொ. : என்ன அக்பர் நீங்கள் நேற்று சொன்னதில் பாதி பேரை ஸ்டார்ஜன்னும் அறிமுகப்படுத்தியிருக்கிறாரே.

அக்பர் : ஒரு ஷோரூமில் வேலை பார்க்கும் இருவர் வலைச்சரத்தில் வேறு என்னதான் செய்யமுடியும்.

மொ. : இந்த மொக்கை காரணம் எல்லாம் சொல்லாமல் மேலும் புதியவர்களை அறிமுகப்படுத்துங்கள்.

அக்பர் : உத்தரவு மன்னா. தமிழுக்கு பெருமை ஏற்படுத்திய பலரில் முனைவர் எம். ஏ. சுசீலா அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர் பியோத்தர் தஸ்தயேவ்ஸ்கியின் "குற்றமும் தண்டனையும்" நாவலை மொழிபெயர்த்து பலவிருதுகள் வாங்கியுள்ளார். பிரபல எழுத்தாளர்களின் பாராட்டும் அந்நூலுக்கு கிடைத்துள்ளது.

மொ. : அருமை. அருமை.. நிச்சயம் தமிழுக்கு பெருமைதான்.

அக்பர் : இதே வரிசையில் அடுத்து முனைவர் கல்பனாசேக்கிழார் இவரின் வலைத்தளத்தில் சங்க இலக்கியம், இலக்கணம், தமிழர் திருமண முறை, பழமொழிகள் , சொற்பொழிவுகள் என்று தமிழ் துள்ளி விளையாடுகிறது.

மொ. : அப்படியா. கண்டிப்பாக படித்தாக வேண்டுமே.

அக்பர் : இவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்திய சரவணனுக்கு நன்றி சொல்லி ஒரு போன் செய்து விடுகிறேன். (சிறிது நேரம் கழித்து) என்ன சரவணன் வீட்டுலையா இருக்கீங்க?

சரவணன் : ஆமாம் அக்பர். வீட்டுல எல்லோரும் ஒரு ஃபங்ஷனுக்கு போயிருக்காங்க.
அக்பர் : அப்படியா. போன் ஃபங்ஷன்ல தானே இருக்கு.
சரவணன் : இல்லைஜி எங்கிட்டதான் இருக்கு.
அக்பர் : அட! அடிச்சா எடுக்கலையே ஆன் பண்ணி இருக்கான்னு கேட்டேன்.அப்புறம் அறிமுகப்படுத்துனதுக்கு ரொம்ப நன்றி சரவணன்.

மங்குனி : மொக்கை போட்டது போதும் அடுத்து யாருன்னு சொல்லுங்க

அக்பர் : அடுத்து கயல்விழி சண்முகம். இவரின் கூர்வாளில் இருந்து புறப்படும் கவிதைகள் ஆழமாக மனதை பதம் பார்க்கிறது உதாரணத்துக்கு இந்த கவிதை.

நாலே வரியில் கவிதையில் கலக்கும் ஜீனும் மனதில் பதிந்த காவியம். ஆனாலும் இவருக்கு பாசம் அதிகம் தான்

அடுத்து பிரேமா மகள்,சுபி வன்யா (சரிதானே) அவர்களின் காதலனைப் பற்றி எழுதியுள்ள கவிதை அருமை. நானும் சாத்தனும் அப்படின்னு வேற பீதி கிளப்புகிறார்.

மொ. : அட எல்லாமே கவிதைகளாக இருக்கிறதே.

அக்பர் : பெண்களே கவிதைகள் தானே மன்னா.

ரெண்டு வரியில் எழுதிய முக்கனிக்குறளை பாரட்டும் நம்ம கோமா, அதே ரெண்டுவரியில் எழுதப்படும் எஸ்.எம்.எஸ் அழிச்சாட்டியங்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

மொ. : எனக்கும் விளம்பர எஸ்.எம்.எஸ் தொல்லை தாங்க முடியவில்லை அக்பர்.

மங்குனி : மன்னர் காலத்தில் எஸ்.எம்.ஸா லாஜிக் இடிக்கிறதே.

மொ. :அட மங்குனி அமைச்சரே. நம் மக்கள் காமெடி பதிவில் லாஜிக் பார்க்க மாட்டங்கையா.

அக்பர் : மேனகாசாதியா(Mrs.Menagasathia ) அவர்களின் சமையல் குறிப்புகளை சமைத்துப்பாருங்கள். பின்பு விடவே மாட்டீர்கள் அதன் சுவையை.

புதுப்பதிவர் மின்மினியும் சமையல் குறிப்பு அழகு குறிப்புகள் என்று அசத்துகிறார்.

மேலும் சிறப்பாக கதை, கவிதை, சமையல் குறிப்பு, அனுபவம், சமூகம் என்று எழுதிக்கொண்டிருக்கும் சகோதரிகள் தேனம்மை அக்கா, ஹுசைனம்மா, க.நா.சாந்தி லக்ஷ்மணன், ஜலீலா, ஸாதிகா, சித்ரா, அம்பிகா, சுமஜ்லா, மைதிலி கிருஷ்ணன், ஜெஸ்வந்தி, அனன்யா மகாதேவன், பவி, லக்ஷ்மி SRK, சிநேகிதி, பத்மா, பத்மினி , ஹேமா , மலிக்கா அனைவரும் ஏற்கனவே பிரபல பதிவர்கள் ஆகிவிட்டதால் விரிவாக சொல்லவேண்டாம் என்று நினைக்கிறேன். விரிவாக இங்கே இருக்கிறது.

தேனம்மை அக்கா எல்லோரையும் நீங்களே அறிமுகப்படுத்திட்டா நாங்க யாரை அறிமுகப்படுத்தன்னு கேட்பதால் இத்தோட நிறுத்திக்கிறேன்.

மொ. : எல்லாத்தையும் சொல்லிட்டு இப்படி ஒரு பிட்டா. இனி சொல்றதுக்கு யாரு இருக்கா.

அக்பர் : இன்னும் இருக்காங்க மன்னா, தினம் தினம் வந்து கொண்டு இருக்கிறார்கள் கலக்குவதற்கு.

,

43 comments:

  1. தேனக்காவின் வேண்டுகோளை ஏற்றதற்கு நன்றி

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  2. அக்பர் அண்ணா.., அருமையான அறிமுகங்கள்..

    ஒவ்வொரு நாளும் உங்களிடமிருந்து வித்யாசமான அறிமுகங்கள். இங்கே நீங்க குறிப்பிட்டிருக்கும் அனைத்து பதிவர்களும் செம சூப்பர். அவர்களுக்கு மத்தியில் என்னையும் அறிமுகப்படுத்தியது என்னை மேலும் மேலும் சிறப்பாக எழுத வைக்கும். இதற்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலண்ணே..

    நான் இப்போதான் வலைப்பூ ஆரம்பித்து எனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன். என்னை அறிமுகப்படுத்தி எனக்கு ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கீங்க. நன்றிகள் அக்பர் அண்ணே..

    வலைச்சரம் ஆற்றிவரும் அரும்பணியில் உங்கள் பங்கும் மிக அருமை.. சென்ற வாரம் ஸ்டார்ஜன் கலக்கினார்;இந்தவாரம் நீங்க.. வாழ்த்துக்கள் அக்பர் அண்ணே..

    ReplyDelete
  3. ஹைய்யா நாந்தான் முதல்லயா..

    ReplyDelete
  4. நிஜமாவே சவால்தான்; அநேகப் பதிவர்களும் அடையாளம் கண்டபின்னும் சுவைகுறையாமல் எழுதும் சவாலைச் சமாளிக்கவும் செய்கிறீர்கள்.

    என் அறிமுகத்திற்கும் நன்றி. முன்முறைகளில் பார்க்காதவர்கள் இப்போது தெரிந்துகொள்வார்களே.

    ReplyDelete
  5. தொடரட்டும் அரசசபை,
    களை கட்டுகிறது.
    ஆமா நாட்டிய நிகழ்ச்சி எல்லாம்
    கிடையாதா........ஹி.....ஹி.......:))

    ReplyDelete
  6. இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் சூப்பர் அக்பர்.. தொடரட்டும்

    ReplyDelete
  7. //T.V.ராதாகிருஷ்ணன் said...

    தொடரட்டும்//

    ரிபீட்டு..,

    ReplyDelete
  8. அகபர்சபை நன்றாக உள்ளது.விறுவிறுப்பு குறையாமல் உள்ளது.என்னையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி அக்பர் சார்.

    ReplyDelete
  9. நீங்கள் சொல்லியவர்களில் நிறைய புது முகங்கள்.

    நன்றி அறிமுகத்திற்கு.

    ReplyDelete
  10. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. // சைவகொத்துப்பரோட்டா said...

    தொடரட்டும் அரசசபை,
    களை கட்டுகிறது.///

    அக்பர் அரசவையில் பீர்பாலை காணோம் :))

    ReplyDelete
  12. வாங்க விஜய்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  13. இன்னைக்கும் அசத்தல் அறிமுகங்கள்.

    கலக்குங்க தல..

    ReplyDelete
  14. பரவால்ல - நல்லாத்தான் போய்ட்டு இருக்கு - பலப்பல பதிவர்கள் அறிமும நன்று -
    நல்வாழ்த்துகள் அக்பர்

    ReplyDelete
  15. அருமையான அறிமுகங்கள் அக்பர்.

    ReplyDelete
  16. நன்றி, நன்றி, நன்றி.

    தொடர்ந்து சபையில் கலக்கும் அக்பர் சாருக்கு ஒரு ஜே!

    ReplyDelete
  17. அனைவரின் அறிமுகங்களும் அசத்தல்.என்னையும் குறிப்பிட்டதிற்க்கு மிக்க நன்றி சகோ!!

    அரச சபை களை கட்டுகிறது....வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  18. வாங்க மின்மினி

    தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  19. அக்பர் சபை அருமை ...பீர்பால் எங்கே..? அறீமுகங்கள் தொடரட்டும்

    ReplyDelete
  20. வாங்க ஹுஸைனம்மா

    //நிஜமாவே சவால்தான்; அநேகப் பதிவர்களும் அடையாளம் கண்டபின்னும் சுவைகுறையாமல் எழுதும் சவாலைச் சமாளிக்கவும் செய்கிறீர்கள்.//

    தங்கள் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  21. அக்பரே... அவையில் ஒரே கலகலப்பா இருக்கு...

    அறிமுகங்கள் அருமை...

    தேனம்மை கோபப்பட்டார்கள் என்று சொல்லி எல்லோரையும் சொல்லியாச்சு.. ஆமாம் மன்னா... வலைச்சர ராஜ்ஜியத்தில் அடுத்து முடி சூட்டுபவர் அவர்தானோ...?

    ReplyDelete
  22. நன்றி அக்பர்.. என் எழுத்துக்களை மதித்து என்னை அறிமுகம் செய்திருக்கும் உங்களுக்கு.. பெரியமனதுதான்..

    ReplyDelete
  23. வாங்க‌ சைவகொத்துப்பரோட்டா

    //தொடரட்டும் அரசசபை,
    களை கட்டுகிறது.
    ஆமா நாட்டிய நிகழ்ச்சி எல்லாம்
    கிடையாதா........ஹி.....ஹி.......:))//

    அதுக்கு டிவி சேனல் வச்சிருக்கோம். மானாட மயிலாட பாருங்க.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  24. வாங்க ஸ்டீபன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  25. வாங்க ராதாகிருஷ்ணன் சார்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  26. வாங்க தல‌

    ரெண்டு வார்த்தைக்கும் ரிப்பீட்டா. இருக்கு உங்களுக்கு :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  27. வாங்க ஸாதிகா

    //என்னையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி அக்பர் சார்.//

    குறிப்பிட படவேண்டியவர்கள்தான் நீங்கள்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  28. வாங்க இராகவன் அண்ணா

    //நீங்கள் சொல்லியவர்களில் நிறைய புது முகங்கள்.
    நன்றி அறிமுகத்திற்கு.//

    சீனா ஐயா சொன்னதையும் கொஞ்சம் பரிசீலனை செய்யுங்க.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  29. வாங்க பத்மா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  30. வாங்க ஸ்டார்ஜன்

    //அக்பர் அரசவையில் பீர்பாலை காணோம் :))//

    வெளியூர் போயிருக்கார்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  31. வாங்க கண்ணா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  32. வாங்க சீனா ஐயா

    //பரவால்ல - நல்லாத்தான் போய்ட்டு இருக்கு - பலப்பல பதிவர்கள் அறிமும நன்று -
    நல்வாழ்த்துகள் அக்பர்//

    நன்றி சார்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  33. //ஒரு ஷோரூமில் வேலை பார்க்கும் இருவர் வலைச்சரத்தில் வேறு என்னதான் செய்யமுடியும்.//

    அந்த ஷோரூம் முதலாளிதான் பாவம்... ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  34. வாங்க துபாய் ராஜா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  35. வாங்க சித்ரா

    //தொடர்ந்து சபையில் கலக்கும் அக்பர் சாருக்கு ஒரு ஜே!//

    ஜே! ஜே!!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  36. வாங்க Mrs.Menagasathia

    //அனைவரின் அறிமுகங்களும் அசத்தல்.என்னையும் குறிப்பிட்டதிற்க்கு மிக்க நன்றி சகோ!!//

    நன்றியெல்லாம் எதுக்கு சகோ!! குறிப்பிடபட வேண்டியவர்கள்தான் நீங்கள்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  37. வாங்க தேனம்மை அக்கா.

    //அக்பர் சபை அருமை ...பீர்பால் எங்கே..? //

    நீங்களுமா :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  38. வாங்க சே.குமார்

    //தேனம்மை கோபப்பட்டார்கள் என்று சொல்லி எல்லோரையும் சொல்லியாச்சு.. ஆமாம் மன்னா... //

    தேனம்மை அக்கா கோபமெல்லாம் படவில்லை குமார். அது அன்புக்கட்டளை.

    //வலைச்சர ராஜ்ஜியத்தில் அடுத்து முடி சூட்டுபவர் அவர்தானோ...?//

    அதுதான் எனக்கும் தெரியலை.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  39. வாங்க பிரேமா மகள்

    //நன்றி அக்பர்.. என் எழுத்துக்களை மதித்து என்னை அறிமுகம் செய்திருக்கும் உங்களுக்கு.. பெரியமனதுதான்..//

    மிக அருமையாக எழுதுகிறீர்கள் நீங்கள்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  40. வாங்க அபுஅப்ஸர்

    //அந்த ஷோரூம் முதலாளிதான் பாவம்... ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்//

    நீங்க வேற காட்டி கொடுத்துடுவிங்க போலிருக்கு அண்ணே :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  41. மகளிர் மட்டும்!! சிலரைச் சில நேரங்களில் படித்திருக்கிறேன். மன்னர் மன்னன் பயங்கரப் படிப்பாளியாவும் இருக்காரே! வாழ்த்துகள்.

    ReplyDelete
  42. வாங்க ஷங்கி

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது