07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 21, 2013

மழை தருமோ இந்த மேகம்!


பல பிரபல பதிவர்கள் ஆசிரியராய் பொறுப்பேற்று மிகச்சிறப்பாய் நடத்திவரும் வலைச்சர உலகிறது இந்த சின்னவனையும் தேர்ந்தெடுத்த ஐயா சீனா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஏதோ விளையாட்டுத்தனமா கிறுக்க ஆரம்பிச்சி இன்றைக்கு இங்கே வந்து நிற்குது. இதுவரை 250 பதிவுகள் வரை எழுதியிருந்தாலும் சிறப்பாக எந்த பதிவும் எழுதிடாத உணர்வு! படிக்கும் காலங்களிலிருந்தே நிறைய வாசிக்க பிடிக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்களோ,நாவல்களோ வாங்குவதற்கு வசதியில்லாததால் தினசரி பத்திரிகைகள்தான் படிக்க முடிந்தது. அதில் வரும் ஆக்கங்களை படிக்கும் போது நாமும் இது போல் கட்டுரை,கவிதை எழுத வேண்டும் என்ற ஆவல். அவ்வாறு ஆசையிருந்தாலும் நாம் எழுதுவதை மற்றவரைக்கொண்டு எப்படி படிக்க வைப்பது என்ற கேள்வி. இதனால் எழுதிய நிறைய ஆக்கங்கள் டயரிகளிலும்,பாடப்புத்தகங்களிலும் மட்டுமே யார் கண்ணிலும் படாமல்.

இன்றைய இணைய உலகின் வளர்ச்சியாலும் கூகுல் தந்த இலவச பிளாக்கர் வசதியாலும் நம் எண்ணங்களையும்,ஆசைகளையும் எழுத்தின் மீதான ஆர்வத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள ஏதுவாகயிருக்கிறது. இனி நான் எழுதியதில் எனக்குப்பிடித்த சில பதிவுகளை இங்கே அறிமுகம் செய்கிறேன். உங்களுக்கும் பிடிக்கலாம் என்ற நம்பிக்கையில்!

பதிவெழுத தொடங்கிய காலத்தில் அதிகமாக கவிதை  என்ற பெயரில் கிறுக்கியிருக்கிறேன். இப்போது அந்த இலக்கிய சேவையை குறைத்துக்கொண்டுள்ளேன். காரணம் தமிழ் இலக்கிய உலகிற்கு என் கவிதைகளால் ஏதும் கெட்ட பெயர் வந்துவிடக்கூடாதென்ற எண்ணத்தில்!
ஆனாலும் விடுவதில்லை அவ்வப்போது கிறுக்குகிறேன்.

சின்ன வயதில் நடக்கும் சில சம்பவங்கள் என்றைக்கும் மறக்காமல் நம் மனதோடே பயணிக்கும் அப்படியொரு ஒரு சம்பவம்தான் இது  நான் ஒரு கொலை செய்திட்டேன்! நான் ஒரு கொலை பண்ணிட்டேன். பயப்படாதீங்க! உள்ள போய்த்தான் பாருங்களேன்.

நிறைய பேர் சிறுகதை எழுதுகிறார்கள். நாங்களும் சிறுகதை எழுதுவம்ல என்று கிளம்பியதன் விளைவு இது. விடியல்-சிறுகதை  ஆனாலும் நிறைய பேர் நல்லாருக்குன்னு சொன்னாங்க.

விவசாயிகள் உலகிற்கே உணவுற்பத்தி செய்பவர்கள் ஆனால் அவர்கள் வாழ்க்கை என்றும் வறுமையில்தான்.! விவசாய பூமியில் பிறந்து வளர்ந்ததால் அவர்களின் கஷ்ட நஷ்டங்களில் எனக்கும் பங்குண்டு அவர்களின் வாழ்க்கையை பற்றியும் எழுதிட ஆவலில் எழுதியது. மழை தருமோ இந்த மேகம்.

இரவையும் இருளையும் ரசிப்பவன் நான். அது சம்பந்தமாக இரவு-இருள்-உறக்கம்-அலாரம்!

அதிஷாவின் "தெருநாய்கள்" சிறுகதையை படித்துவிட்டு புலியைப்பார்த்து சூடுபோட்டுக்கொண்ட எலியாக தெருநாய்கள்! என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை.
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக ஈழப்போராட்டமும் இனப்படுகொலைகளும்.

நான் பார்க்கும் நல்ல திரைப்படங்களைப்பற்றிய என் அனுபவங்களை பகிர்ந்திடும் ஆசையில் சில திரைப்படங்களை பற்றியும் எழுதியுள்ளேன்.

The Gods Must Be Crazy.html

Hotel Rwanda

Baran உணர்வுகளை வருடிய ஓர் ஈரான் சினிமா.

ரேணிகுண்டா- வன்முறையும் கவிதையாக.

தாரே சமீன் பர்

இத்தோடு எனது சுயபுராணத்தை முடிக்கிறேன். நாளை முதல் எனக்குப்பிடித்த சில பதிவுகளை அறிமுகம் செய்ய இருக்கிறேன். எல்லாரும் பதிவுலகில் அறிமுகமானவர்கள்தான். அவர்களின் எழுத்தில் என்னைக்கவர்ந்த விடயங்களை சொல்லவிருக்கிறேன். உங்கள் ஆதரவை வேண்டியவனாய் விடைபெறுகிறேன் நன்றி.

21 comments:

  1. நல்ல சுய அறிமுகம்.... உங்கள் பதிவுகளை மாலை அலுவலகத்திலிருந்து வந்த பின்பு படிக்கிறேன்....

    த.ம. 2

    ReplyDelete
  2. எழுத்துப்பணி தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. அன்பின் ரியாஸ் - சுய அறிமுகம் அருமை - அனைத்துப் பதிவுகளையும் படித்து மறுமொழி இடுகிறேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  4. சுவாரஸ்யமாய் சுய அறிமுகப் பதிவுகள்.

    சுறுசுறுப்பாய் பதிவிட்ட வேகம் வியக்க வைக்கிறது.

    நன்றே தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அன்பின் ரியாஸ் - தமிழ் மணப் பட்டை - வாக்கிடுவதற்கான பட்டை என்ன ஆயிற்று ? சரி பார்த்து அப்படையினை இணைக்கவும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. உங்களைப் பற்றிய அறிமுகம் அருமை...

    மனோ அம்மா முத்துக்களைச் சிதறவிட்டார்... தாங்களும் கலக்குங்கள்...
    உங்களுடன் நாங்களும் வலைச்சரப் பயணத்தில் தொடர்ந்து வருகிறோம்

    ReplyDelete
  7. அழகிய அறிமுகம் இரவின் குளுமையை ரசித்த வண்ணம் இருக்கிறேன்.

    ReplyDelete
  8. சுய அறிமுகம் நன்று, வருகிறேன் வாசிக்க அங்கே நன்றி...!

    ReplyDelete
  9. நன்றி திரு.வெங்கட் நாகராஜ் உங்கள் முதல் வருகைக்கும் ஆதரவிற்கும்.



    நன்றி திரு சேக்கனா M. நிஜாம் உங்கள் ஆதரவிற்கும் கருத்திற்கும்.

    ReplyDelete
  10. அன்பின் cheena(சீனா) ஐயா மிக்க நன்றி உங்கள் ஆதரவிற்கு.

    மேலும் தமிழ்மணத்தில் யாரும் பெரிதாக ஓட்டு போடுவதில்லை அதனால் அதை கண்டு கொள்வதில்லை..தமிழ்மணத்தில் பதிவுகளை இணைத்து விடுவேன்.

    ReplyDelete

  11. நன்றி NIZAMUDEEN வருகைக்கும் ஆதரவிற்கும்.


    நன்றி சே. குமார் உங்கள் தொடர்ச்சியான ஆதரவிற்கு.

    ReplyDelete
  12. நன்றி Sasi Kala வருகைக்கும் உங்கள் ரசனைக்கும்.


    நன்றி MANO நாஞ்சில் மனோ வருகைக்கும் உங்கள் ஆதரவிற்கும்.

    ReplyDelete
  13. உங்களின் 'மழை தருமோ மேகம்' பதிவைப்படித்தேன். தலைப்பு அசத்தல்! பதிவும் மிகச் சிறப்பாக இருக்கின்ற‌து!

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்! உங்கள் பதிவுகளை படித்து இருக்கிறேன்! புதிய சிறந்த பதிவர்களை அறிமுகம் செய்ய வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  15. ஆரம்பமே அமர்க்களமாக இருக்கு.தொடர்ந்து அசத்துங்க ரியாஸ்...

    ReplyDelete
  16. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். தலைப்பு அருமை...

    ReplyDelete
  17. பதிவு மிகச் சிறப்பாக இருக்கின்ற‌து!வாழ்த்துகள்

    ReplyDelete
  18. அமர்க்களமான
    அறிமுகப் பகிர்வுகளுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  19. வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  20. //பதிவெழுத தொடங்கிய காலத்தில் அதிகமாக கவிதை என்ற பெயரில் கிறுக்கியிருக்கிறேன். இப்போது அந்த இலக்கிய சேவையை குறைத்துக்கொண்டுள்ளேன். காரணம் தமிழ் இலக்கிய உலகிற்கு என் கவிதைகளால் ஏதும் கெட்ட பெயர் வந்துவிடக்கூடாதென்ற எண்ணத்தில்!// அப்படியெல்லாம் அவசரப்பட்டு கவிதை எழுதுவதை விட்டுடாதீங்க. நானும் அதைத்தான் (கிறுக்கல்) பண்னுகிறேன். நல்ல அறிமுகம்.

    ReplyDelete
  21. நல்ல ஒரு அறிமுகத்துடன் ஆசிரியர் பணியில் வந்து இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது