07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 22, 2012

முதல் நாள் பதிவு - சிவஹரி - அறிமுகம்




இறையடி பற்றிட இளகிய தென்மனம்
மறைபொருள் கண்டேன் மதிதெளிய – பறையறை
தமிழின் பழஞ்சுவை சபையொ டலாவ
நேமிவழி நல்கிடு இறையே.

அனைவருக்கும் எந்தன் பணிவான நல்வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் சிவஹரி. சிவஹரி என்பது என் பெயர். எல்லோருக்கும் பொது வழியென்றிருந்தாலும் என் வழியென்றுமே அதில் தனித்து நிற்கவேண்டும் என்ற பேராசை கொண்டவன்

எண்ணத்தில் உதிக்கும் வரிகளில் சிலவொன்றை எழுத்துருவாக்கி அதனைக் கண்டு மகிழ்பவன். அதே வழியிலே அடுத்தவரின் கருவறிந்து அவர் வளர பாராடிடவும் வேண்டுமென்று எண்ணுபவன். புரியா வரிகளுக்கு பொருள் கேட்பதில் வன்மனத்தோன். என்னைப் பற்றி நானே எடுத்துச் சொல்ல மேலும் ஏதுமில்லையாதலால் என் படைப்பினைப் பற்றி விரிந்து சொல்லவும் என் மனம் மறுக்கின்றது.


என் வலைப்பூவினில்( ிவியின் சேமிப்பில் சில..... )எழுதிச் சேர்த்த வரிகள் எல்லாம் என் மனவிசைவோடே படைக்கப்பட்டதால் என் கண்களில் எது சிறந்தது என்று என்றுமே பிரித்துக் காட்டிட விரும்பவில்லை


என் படைப்புகளுக்கு மீயிணைப்பினை இங்கே தந்து பதிவர்களின் ரசனைக்கே விட்டுவிட விரும்புகின்றேன்.

இதோ என் படைப்புகளின் வகையொட்டிகள்:






அடுத்து ஒரு முக்கியமான வலைப்பூவினை இங்கே அறிமுகப் படுத்திடவும் விழைகின்றேன். இந்த சரீரத்தின் இயக்கத்தில் பங்கு செலுத்தி இன்னும் என்னை கடனாளியாகவே எப்போதும் வைத்து அழகு பார்ப்பவர். கூடவே வலைச்சர ஆசிரியப் பணிக்கு பரிந்துரைத்திருப்பதும்.  


 
கற்றதைப் பகிர்வதிலும், கருத்தின் செறிவை வழங்குவதிலும், பிறர் மனம் வாழ தன் மனங்கருதாமலே அன்பு செலுத்துவதிலும், கறிவேப்பிலையாய் காரியக்காரர்கள் நினைத்தாலும் கவலை கொள்ளாது கனிவுடன் பழகுவதில் வல்லவராய்த் திகழும் எங்கள் மஞ்சுபாஷிணி அக்கா அவர்களின் கதம்ப உணர்வுகள் என்னும் வலைப்பூவினில் எனக்கு படித்ததில் பிடித்த சிலவற்றினை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.


மரணத்தின் நிழல் என்னும் தலைப்பிலான கவிதையில் படிக்கையிலே பயம் நம்மை சூழ்ந்து கொள்வதோடு அக்காவின் எழுத்து நடையினையும் ரசிக்க வைத்து விட்டது.

முத்தான மூன்று முடிச்சு என்னும் தலைப்பில் வெளியாகியிருக்கும் பதிவினில் ஒருவரைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள உதவும் வகையிலான கேள்விகள் அமையப் பட்டிருக்கின்றது. அந்த வகையிலே அக்காவைப் பற்றி மேலும் நாம் அறிந்து கொள்ள இப்பதிவு உதவும் என்று எண்ணுகின்றேன்.

எதார்த்தமாய் இந்த பதிவினை இப்போது தான் கண்டேன். கதையின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை பல சிந்தனை வீச்சுகளை நமக்கு அள்ளித்தந்திடும் கலைக்கண் என்ற இக்கதையின் முடிவிலே கருவை இதமாய்ப் பொருத்தியிருக்கின்றார்கள் அக்கா. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று சொல்வது இதனின் காரணமாகத்தானோ என்னவோ.

என் வீட்டுக்கண்ணாடி என்னைப் பார்த்து ஏளனமாய் சிரிக்கின்றது பாருங்களேன்.

காண்பது எல்லாம் நல்லவையாகவும் தெரிகின்றதாம் இங்கே.

சராசரி மனித வாழ்வின் உண்மை நிலையினை எடுத்துரைக்கும் கவிதையாக செல்லக் கூடல் மிளிர்கின்றது.

நெஞ்சைத் தொட்டுச் சென்ற கதையாய் மரணம் காதலைப் பிரிக்குமா?” வெளிப்படுகின்றது இருமுறை படித்தும் நான் இன்னும் மறுமொழியிடவே இல்லை.


அடுத்த பதிவானது என் தாய் மன்றம் குறித்து எழுதப்பட்டவையாக அமையும். அதன் பின்பு நான் ரசித்த வலையகங்களில் சிலவற்றை அடுத்தடுத்து காண்போம்.


நன்றி.


64 comments:

  1. வாங்க! கீதைஉபதேசப் படத்துடன் ஆரம்பம்! சொல்லுங்க! சொல்லுங்க!

    ReplyDelete
  2. சிறப்பான ஆரம்பம்... தொடர்கிறேன்... வாழ்த்துக்கள்...

    தமிழ்மணம்-இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்...

    நன்றி...

    ReplyDelete
  3. >{சந்திர வம்சம் said...

    வாங்க! கீதைஉபதேசப் படத்துடன் ஆரம்பம்! சொல்லுங்க! சொல்லுங்க!}<

    வரவேற்றமை கண்டு மகிழ்ச்சி சகோ.!

    நன்றி

    ReplyDelete
  4. >{திண்டுக்கல் தனபாலன் said...

    சிறப்பான ஆரம்பம்... தொடர்கிறேன்... வாழ்த்துக்கள்...

    தமிழ்மணம்-இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்...

    நன்றி...}<

    மிக்க மகிழ்ச்சி சகோ.!

    திட்ட அட்டவணையின் படி பதிவிடுவதால் பதிவு வெளியாகிடும் சமயத்தில் என் நிகழ்நிலையிருப்பு இணையத்தில் இருந்திடாது.

    தமிழ் மணத்தில் தாங்களே தொடர்ந்து இணைத்துச் சென்றிடினும் மகிழ்வே!

    நன்றி

    ReplyDelete
  5. அன்பின் சிவஹரி

    அருமையான துவக்கம் - கீதை உபதேசத்துடன் துவக்கம் - நன்று நன்று.

    //எல்லோருக்கும் பொது வழியென்றிருந்தாலும் என் வழியென்றுமே அதில் தனித்து நிற்கவேண்டும் என்ற பேராசை கொண்டவன். // - அருமையான் குறிக்கோள் - வாழ்க வளமுடன்.

    அருமைச் சகோதரி மஞ்சுபாஷினியினைப் பற்றிய அறிமுகம் அருமை.

    //பிறர் மனம் வாழ தன் மனங்கருதாமலே அன்பு செலுத்துவதிலும் // - உண்மை உண்மை

    துவக்கம் அருமை சிவஹரி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  6. அன்பின் சிவஹரி

    மரணத்தின் நிழலின் சுட்டியில் - தட்டச்சுப் பிழையான - இறுதி எழுத்தான “v" யினை எடுத்து விடுக. சுட்டி செல்ல மறுக்கிறது.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  7. வலைச்சர வார ஆசிரியாரானதற்கு
    வாழ்த்துக்கள்.
    அழகாக ஆரமபித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  8. அழகான அருமையான அறிமுகம்
    ஆசிரியர் பணியும் சிறக்க
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. >{ cheena (சீனா) said...

    அன்பின் சிவஹரி

    அருமையான துவக்கம் - கீதை உபதேசத்துடன் துவக்கம் - நன்று நன்று.

    //எல்லோருக்கும் பொது வழியென்றிருந்தாலும் என் வழியென்றுமே அதில் தனித்து நிற்கவேண்டும் என்ற பேராசை கொண்டவன். // - அருமையான் குறிக்கோள் - வாழ்க வளமுடன்.

    அருமைச் சகோதரி மஞ்சுபாஷினியினைப் பற்றிய அறிமுகம் அருமை.

    //பிறர் மனம் வாழ தன் மனங்கருதாமலே அன்பு செலுத்துவதிலும் // - உண்மை உண்மை

    துவக்கம் அருமை சிவஹரி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா}<

    விரிவான கருத்துரைக்கு நன்றிகள் பற்பல.!

    ReplyDelete
  10. >{Muruganandan M.K. said...

    வலைச்சர வார ஆசிரியாரானதற்கு
    வாழ்த்துக்கள்.
    அழகாக ஆரமபித்திருக்கிறீர்கள்.}<

    வாழ்த்தினைக் கண்டு மகிழ்ச்சி சகோ.!

    இனிய வரவேற்புகள்.

    நன்றி

    ReplyDelete
  11. >{ Ramani said...

    அழகான அருமையான அறிமுகம்
    ஆசிரியர் பணியும் சிறக்க
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்}<

    மகிழ்ச்சி சகோ.!

    ReplyDelete
  12. >{அப்பாதுரை said...

    வாழ்த்துக்கள்}<

    மகிழ்வுடன் நன்றி சகோ.!

    ReplyDelete
  13. >{cheena (சீனா) said...

    அன்பின் சிவஹரி

    மரணத்தின் நிழலின் சுட்டியில் - தட்டச்சுப் பிழையான - இறுதி எழுத்தான “v" யினை எடுத்து விடுக. சுட்டி செல்ல மறுக்கிறது.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா}<

    சரி செய்யப்பட்டு விட்டது.

    சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

    ReplyDelete
  14. வலைச்சர வார ஆசிரியர் பொறுப்பிற்கு நிறைவான இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  15. அருமையான ஆரம்பமே அசத்தலா இருக்கு ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. அன்பின் சிவ ஹரி

    அருமைச் சகோதரி மஞ்சுவின் படைப்புகளில் ஏழு படைப்புகளைத் தேர்ந்த்டுத்து அறிமுகப் படுத்தியது நன்று.

    அத்தனை அறிமுகங்களையும் சுட்டி, சென்று, பார்த்து, படித்து, மகிழ்ந்து, மறுமொழியும் இட்டு வந்தேன். மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கின்றன.

    நல்வாழ்த்துகள் சிவஹரி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  17. மஞ்சு பாஷிணி அவர்களின் பதிவுகள் பற்றிய அறிமுகங்கள் அருமை. எழுத்தோடு நில்லாமல் பிற பதிவர்களைத் தேடிப் படித்து விரிவான பின்னூட்டம் இடும் அவர்களின் பேரன்பிற்கு நாம் எல்லோருமே கடன்பட்டவர்கள் தான்.

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் ..சிவஹரி .....







    அன்பின்.....



    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  19. அருமையான ஆரம்பம். எங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள்! சிவஹரி!

    என் இனிய அன்பு மகள் மஞ்சு பாஷிணி பற்றிய அறிமுகம் அனைத்தும் உண்மை! அதனை வழிமொழிவதோடு தங்களுக்கு நன்றியும் மீண்டும் வாழ்த்தும் கூறுகிறேன்!

    ReplyDelete
  21. அருமையான அறிமுகத்துடன் ஆரம்பித்திருக்கும் இந்த வார வலைச்சரம் பல எதிர்பார்ப்புகளை தூண்டிகிறது.

    மஞ்சுபாஷிணியின் அறிமுகம் பிரமாதம்.


    தொடருங்கள் சிவஹரி!

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!



    ReplyDelete
  22. அன்புத்தம்பியின் அற்புதமான கீதை உபதேசத்துடன் அருமையான தொடக்கம்....

    படமே மனதை கவர்ந்தது....

    அதன் கீழே இறைவாழ்த்து மிக இயல்பு....

    அதன்பின் சுய அறிமுகத்தில் கொடுத்திருந்தது அத்தனையும் நேர்த்தி. இறைவன் என்றென்றும் உனக்கு நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் நற்றமிழையும் நல்க வேண்டிக்கொள்கிறேன்...

    இன்னுமொருமுறை கடனாளி என்று சொல்லாதே தம்பி...

    மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் வலைச்சர ஆசிரியர் பணி சிறப்புடன் நடக்க....

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் அழகிய குழந்தை தாய்மேல் இருக்கும் அன்பினை உணர்த்தும் படமும்... என்னைப்பற்றிய அறிமுகத்திற்கும் வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கும்...

    வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்...

    சந்திரவம்சம்

    திண்டுக்கல் தனபாலன்

    சீனா அண்ணா

    முருகானந்தன் எம் கே அவர்கள்

    ரமணி சார்

    அப்பாதுரை

    இராஜராஜேஸ்வரி

    லஷ்மிம்மா

    ரிஷபன்

    ஆரண்ய நிவாஸ் இராமமூர்த்தி சார்

    கே ஜி கௌதம் ( எங்கள் பிளாக் ஆசிரியர் குழு)

    புலவர் சா இராமானுசம் அப்பா

    ரஞ்சனி நாராயணன் மேடம்

    அனைவருக்கும் என் மனம் நிறைந்த அன்புநன்றிகள்....

    இன்றைய நாள் எல்லோருக்கும் நன்னாளாய் அமையட்டும்...

    ReplyDelete
  23. நல்லதொரு அறிமுகத்திற்கும் நல்ல படைப்புக்களை அறிமுகம் செய்தமைக்கும் மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. வெல்கம் சிவஹரி... உங்களுடன் ஒரு வாரப் பொழுது சுவாரஸ்யமாய்ச் செல்லும் என்பதில் மிக மகிழ்ச்சி எனக்கு. அசத்துங்கள்.

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறப்பாக அமையட்டும் .இன்றைய
    வலைசரத்தில் அறிமுகமான அனைத்து வலைத்தள உறவுகளுக்கும்
    என் இனிய வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  26. வணக்கம் சிவஹரி

    என்று வலைச்சரம் வலைப்பதிவை. பொறுபேற்றதை நினைத்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பணி சிறப்படைய எனது வாழ்த்துக்கள்.

    முதலாம் நாளில் சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கும் .இரண்டாம் நாளும் வலைப்பூவலைச்சரம் சிறப்பாக மலர எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.சிவஹரி

    -நன்றி-
    -அன்புடன்-
    _ரூபன்-

    ReplyDelete
  27. >{இராஜராஜேஸ்வரி said...
    வலைச்சர வார ஆசிரியர் பொறுப்பிற்கு நிறைவான இனிய வாழ்த்துகள்..}<

    கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ.!

    ReplyDelete
  28. >{Lakshmi said...
    அருமையான ஆரம்பமே அசத்தலா இருக்கு ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள்.}<

    தங்களின் வாழ்த்தினைக் கண்டு மிக்க மகிழ்ச்சி சகோ.!

    ReplyDelete
  29. >{cheena (சீனா) said...
    அன்பின் சிவ ஹரி

    அருமைச் சகோதரி மஞ்சுவின் படைப்புகளில் ஏழு படைப்புகளைத் தேர்ந்த்டுத்து அறிமுகப் படுத்தியது நன்று.

    அத்தனை அறிமுகங்களையும் சுட்டி, சென்று, பார்த்து, படித்து, மகிழ்ந்து, மறுமொழியும் இட்டு வந்தேன். மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கின்றன.

    நல்வாழ்த்துகள் சிவஹரி
    நட்புடன் சீனா}<

    சிவனையும் ஹரியையும் பிரிச்சிட்டிங்களே ;)

    ஏழு என்பது தான் இந்த பணியின் முக்கியமான எண். அதன் அடிப்படையிலே தான் நான் ஏற்கனவே தங்களுக்கு ஒரு திட்ட மடல் அனுப்பியிருந்தேன்.

    ஆனால் அக்காவின் பதிவினில் ஏழு பதிவுகளைப் பகிர்ந்திருப்பதை தாங்கள் சொல்லித்தான் நானும் கண்ணுற்றேன்.

    எண்ணங்களும் என்னோடு துணை நிற்கின்றன போலும். அக்கா அவர்களின் தாங்கள் வெளியிட்ட கருத்துரைகளை மட்டுறுத்தி வெளியிட்டு விட்டார்கள் சகோ.

    நன்றி

    ReplyDelete
  30. //வலைச்சர வார ஆசிரியர் பொறுப்பிற்கு நிறைவான
    இனிய வாழ்த்துகள்..//

    அதே அதே ....
    என் இனிய வாழ்த்துகளும்.


    தொடரும்.....

    ReplyDelete
  31. >{ரிஷபன் said...
    மஞ்சு பாஷிணி அவர்களின் பதிவுகள் பற்றிய அறிமுகங்கள் அருமை. எழுத்தோடு நில்லாமல் பிற பதிவர்களைத் தேடிப் படித்து விரிவான பின்னூட்டம் இடும் அவர்களின் பேரன்பிற்கு நாம் எல்லோருமே கடன்பட்டவர்கள் தான்.}<

    கருத்திற்கு முதற்கண் நன்றிகள் பற்பல சகோ.!

    விரிவான பின்னூட்டம் இடுகின்றேன் என்று தன் உடல் நலத்திலும், பணியிலும், சூழலிலும் கவனம் வைத்துக் கொண்டால் எல்லாம் சுகமே!

    நன்றி

    ReplyDelete
  32. >{”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
    வாழ்த்துக்கள் ..சிவஹரி .....



    அன்பின்.....



    ஆர்.ஆர்.ஆர். }<

    மகிழ்ச்சி சகோ.

    நன்றி

    ReplyDelete
  33. >{kg gouthaman said...
    அருமையான ஆரம்பம். எங்கள் வாழ்த்துக்கள் }<

    சுவைபட பார்வையிட்டுக் கருத்திட்டமைக்கு நன்றிகள் பற்பல சகோ.!

    ReplyDelete
  34. >{புலவர் சா இராமாநுசம் said...
    வாழ்த்துக்கள்! சிவஹரி!

    என் இனிய அன்பு மகள் மஞ்சுபாஷிணி பற்றிய அறிமுகம் அனைத்தும் உண்மை! அதனை வழிமொழிவதோடு தங்களுக்கு நன்றியும் மீண்டும் வாழ்த்தும் கூறுகிறேன்! }<

    வாழ்த்தியமைக்கும், வழிமொழிந்தமைக்கும் நன்றிகள் பற்பல சகோ.!

    ReplyDelete
  35. >{Ranjani Narayanan said...
    அருமையான அறிமுகத்துடன் ஆரம்பித்திருக்கும் இந்த வார வலைச்சரம் பல எதிர்பார்ப்புகளை தூண்டுகிறது.

    மஞ்சுபாஷிணியின் அறிமுகம் பிரமாதம்.


    தொடருங்கள் சிவஹரி!

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!}<

    வாருங்கள் சகோ.! வருக வருக.

    தங்களின் எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்யும் அளவிற்கு என் எழுத்திற்கு திறமையை வளர்க்க முற்படுகின்றேன். பீனிஸ் பறவையாய்..!

    பாராட்டுக்களுக்கு நன்றி

    ReplyDelete
  36. >{மஞ்சுபாஷிணி said...
    அன்புத்தம்பியின் அற்புதமான கீதை உபதேசத்துடன் அருமையான தொடக்கம்....

    படமே மனதை கவர்ந்தது....

    அதன் கீழே இறைவாழ்த்து மிக இயல்பு....

    அதன்பின் சுய அறிமுகத்தில் கொடுத்திருந்தது அத்தனையும் நேர்த்தி. இறைவன் என்றென்றும் உனக்கு நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் நற்றமிழையும் நல்க வேண்டிக்கொள்கிறேன்...

    இன்னுமொருமுறை கடனாளி என்று சொல்லாதே தம்பி...

    மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் வலைச்சர ஆசிரியர் பணி சிறப்புடன் நடக்க....

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் அழகிய குழந்தை தாய்மேல் இருக்கும் அன்பினை உணர்த்தும் படமும்... என்னைப்பற்றிய அறிமுகத்திற்கும் வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கும்...

    வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்...

    சந்திரவம்சம்

    திண்டுக்கல் தனபாலன்

    சீனா அண்ணா

    முருகானந்தன் எம் கே அவர்கள்

    ரமணி சார்

    அப்பாதுரை

    இராஜராஜேஸ்வரி

    லஷ்மிம்மா

    ரிஷபன்

    ஆரண்ய நிவாஸ் இராமமூர்த்தி சார்

    கே ஜி கௌதம் ( எங்கள் பிளாக் ஆசிரியர் குழு)

    புலவர் சா இராமானுசம் அப்பா

    ரஞ்சனி நாராயணன் மேடம்

    அனைவருக்கும் என் மனம் நிறைந்த அன்புநன்றிகள்....

    இன்றைய நாள் எல்லோருக்கும் நன்னாளாய் அமையட்டும்... }<

    கொடுத்தவங்க கேட்டாலும் திரும்ப கொடுக்க முடியுதுங்க அக்கா.

    என் சார்பில் நன்றி தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  37. //கற்றதைப் பகிர்வதிலும்,

    கருத்தின் செறிவை வழங்குவதிலும்,

    பிறர் மனம் வாழ தன் மனங்கருதாமலே அன்பு செலுத்துவதிலும்,

    கறிவேப்பிலையாய் காரியக்காரர்கள் நினைத்தாலும் கவலை கொள்ளாது கனிவுடன் பழகுவதில் வல்லவராய்த் திகழும்

    எங்கள் மஞ்சுபாஷிணி அக்கா //

    அன்புத்தம்பி,

    என் அன்புத்தங்கை மஞ்சுவைப்பற்றி
    வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    அதனாலேயே முன்பின் தெரியாத உங்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

    மஞ்சு ஓர் குழந்தை. சொல்ல முடியாத வருத்தங்களில் மூழ்கிப்போய் இருந்து வரும் என்னை, அவர்களின் அன்றாட் குழந்தைத்தனமான கிளிமொழிப் பேச்சுக்களே, இன்றுவரை என்னை மிகவும் ஆறுதல் படுத்திவருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

    தொடரும்.....

    ReplyDelete
  38. >{s suresh said...
    நல்லதொரு அறிமுகத்திற்கும் நல்ல படைப்புக்களை அறிமுகம் செய்தமைக்கும் மிக்க நன்றி! வாழ்த்துக்கள்! }<

    வாழ்த்துரையாய் கருத்துரை இட்டமைக்கு நன்றி சகோ.! தங்களின் வலைப்பூவினை நான் ஏற்கனவே கண்டிருக்கின்றேன் சகோ.! வளரட்டும் நற்பணி

    ReplyDelete
  39. >{பால கணேஷ் said...
    வெல்கம் சிவஹரி... உங்களுடன் ஒரு வாரப் பொழுது சுவாரஸ்யமாய்ச் செல்லும் என்பதில் மிக மகிழ்ச்சி எனக்கு. அசத்துங்கள். }<

    வரவேற்றமைக்கு நன்றி சகோ.!

    தங்களின் பொழுதினை சுவராஸ்யமாக்கிடுவேன் என்ற மாநம்பிக்கையில்...

    ReplyDelete
  40. தாங்கள் எடுத்துச்சொல்லியுள்ள

    “கதம்ப உணர்வுகள்” ளின் மணம் மனதில் மகிழ்ச்சிகொள்ளச் செய்கிறது.

    மணம் பரப்பிடும் அவற்றை ஒவ்வொன்றாக முகர்ந்து, ரஸித்து ருசித்துப் படித்து மகிழ்வேன்.

    தொடரும்....

    ReplyDelete
  41. >{அம்பாளடியாள் said...
    வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறப்பாக அமையட்டும் .இன்றைய
    வலைசரத்தில் அறிமுகமான அனைத்து வலைத்தள உறவுகளுக்கும்
    என் இனிய வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு . }<

    பணி சிறந்திட வாழ்த்தியமைக்கு எந்தன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    மகிழ்ச்சி சகோ.!

    ReplyDelete
  42. >{2008rupan said...
    வணக்கம் சிவஹரி

    இன்று வலைச்சரம் வலைப்பதிவை. பொறுபேற்றதை நினைத்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பணி சிறப்படைய எனது வாழ்த்துக்கள்.

    முதலாம் நாளில் சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கும் .இரண்டாம் நாளும் வலைப்பூ / வலைச்சரம் சிறப்பாக மலர எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.சிவஹரி

    -நன்றி-
    -அன்புடன்-
    _ரூபன்- }<

    தங்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் சகோ.!

    இரண்டாம் நாள் நான் குறிப்பிட்டு சொல்லிய படி ஒரே வலைத்தளத்தின் பதிவுகள் வளர்ந்திடும். படித்துப் பயனடைவீர்கள் என்றும் நம்பிக்கை கொள்கின்றேன்.

    மகிழ்ச்சி சகோ.!

    ReplyDelete
  43. முதல் படத்தில் காட்டியுள்ள கீதா உபதேசமும், அடுத்த படத்தில் மஞ்சுவின் தூய அன்பினை சிம்பாலிக்காகக் காட்டியுள்ளது போல அமைந்துள்ள தாய்-சேய் படமும் அருமையோ அருமை. அழகோ அழகு.


    தொடரும்......

    ReplyDelete
  44. >{வை.கோபாலகிருஷ்ணன் said...
    //வலைச்சர வார ஆசிரியர் பொறுப்பிற்கு நிறைவான
    இனிய வாழ்த்துகள்..//

    அதே அதே ....
    என் இனிய வாழ்த்துகளும்.


    தொடரும்.....}<

    தங்களின் வாழ்த்திற்கு என் உளமார்ந்த நன்றிகள் சகோ.!

    ReplyDelete
  45. மஞ்சு அவர்களும் என்னிடம் பேசும் போது, தனக்கொரு அன்புத்தம்பி இங்கேயே அருகிலேயே இருக்கிறார் என உங்களைப்பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்கள்.

    தாங்களும் மஞ்சுவிடம் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என இந்தப்பதிவின் மூலம் தெரிவித்துள்ளது, என்னால் நன்கு அறியமுடிகிறது. மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    தொடரும்.....

    ReplyDelete
  46. வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள
    இந்த வாரம் தங்களுக்கு மிகவும்
    மகிழ்ச்சிகரமாக அமையவும்,
    வெற்றிகரமாக முடியவும்
    ஆசீர்வதிக்கிறேன்.
    வாழ்த்துகிறேன்.

    பாராட்டுக்கள்.

    அன்புள்ள
    VGK

    ReplyDelete
  47. >{வை.கோபாலகிருஷ்ணன் said...
    //கற்றதைப் பகிர்வதிலும்,

    கருத்தின் செறிவை வழங்குவதிலும்,

    பிறர் மனம் வாழ தன் மனங்கருதாமலே அன்பு செலுத்துவதிலும்,

    கறிவேப்பிலையாய் காரியக்காரர்கள் நினைத்தாலும் கவலை கொள்ளாது கனிவுடன் பழகுவதில் வல்லவராய்த் திகழும்

    எங்கள் மஞ்சுபாஷிணி அக்கா //

    அன்புத்தம்பி,

    என் அன்புத்தங்கை மஞ்சுவைப்பற்றி
    வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    அதனாலேயே முன்பின் தெரியாத உங்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

    மஞ்சு ஓர் குழந்தை. சொல்ல முடியாத வருத்தங்களில் மூழ்கிப்போய் இருந்து வரும் என்னை, அவர்களின் அன்றாட் குழந்தைத்தனமான கிளிமொழிப் பேச்சுக்களே, இன்றுவரை என்னை மிகவும் ஆறுதல் படுத்திவருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

    தொடரும்..... }<

    ஹி..ஹி.. இதில் ஒரு வரியினை மட்டும் ஈண்டு நோக்கிக் கொள்கின்றேன். மஞ்சு ஓர் குழந்தை. சரியாய் கணித்திருக்கின்றீர்கள் சகோ.! அதனால் தான் என்னவோ நான் மேலே கறிவேப்பிலையாய் காரியக்காரர்கள் நினைத்தாலும் என்று சொல்லியிருப்பேனோ.

    அவர்களின் ஆறுதல் மொழி பெற்றவர்களில் தாங்களும் ஒருவரே என்பதில் மகிழ்வு.

    நன்றி

    ReplyDelete
  48. >{வை.கோபாலகிருஷ்ணன் said...
    தாங்கள் எடுத்துச்சொல்லியுள்ள

    “கதம்ப உணர்வுகள்” ளின் மணம் மனதில் மகிழ்ச்சிகொள்ளச் செய்கிறது.

    மணம் பரப்பிடும் அவற்றை ஒவ்வொன்றாக முகர்ந்து, ரஸித்து ருசித்துப் படித்து மகிழ்வேன்.

    தொடரும்.... }<

    தாங்கள் முகர்ந்து, ரசித்து, ருசித்து பார்த்து மகிழ்ந்திட என்னால் ஒரு தருணம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதையறிந்து செந்தூரானுக்கு சலாம் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன். மணங்களை முகர்ந்து, ரசித்து, ருசித்து பார்த்து பரவசமடையுங்கள் சகோ.!

    நன்றி

    ReplyDelete
  49. >{வை.கோபாலகிருஷ்ணன் said...
    முதல் படத்தில் காட்டியுள்ள கீதா உபதேசமும், அடுத்த படத்தில் மஞ்சுவின் தூய அன்பினை சிம்பாலிக்காகக் காட்டியுள்ளது போல அமைந்துள்ள தாய்-சேய் படமும் அருமையோ அருமை. அழகோ அழகு.


    தொடரும்...... }<

    அக்காவின் தூய அன்பு எனக்கே உரித்தான ஒன்றில்லை சகோ.! எங்களின் தாய் மன்றம் தான் அவர்களின் அன்பினை எடுத்துச் சொல்ல வல்லது. என்னால் முடிந்த மட்டும் அவர்களுக்கு என் எழுத்துகளிலே சிறப்புறச் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கின்றேன்/ நினைத்தேன்/ நினைப்பேன். அதன் வெளிப்பாடே அந்த படம் சகோ.!

    உணர்வுப் பூர்வமான கருத்துகளுக்கு நன்றிகள் மீண்டும்.

    ReplyDelete
  50. >{வை.கோபாலகிருஷ்ணன் said...
    மஞ்சு அவர்களும் என்னிடம் பேசும் போது, தனக்கொரு அன்புத்தம்பி இங்கேயே அருகிலேயே இருக்கிறார் என உங்களைப்பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்கள்.

    தாங்களும் மஞ்சுவிடம் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என இந்தப்பதிவின் மூலம் தெரிவித்துள்ளது, என்னால் நன்கு அறியமுடிகிறது. மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    தொடரும்.....}<

    அன்புத் தம்பி மட்டுமல்ல. அடிக்கடி சண்டை போடும் தும்பியும் அக்காவிற்கு நானே! எங்கள் பாசக்கிணற்றின் ஆழத்தைக் காட்டிட இது இடமில்லை என்றுணர்ந்து சுருக்கிக் கொண்டேன்.

    நன்றி

    ReplyDelete
  51. >{வை.கோபாலகிருஷ்ணன் said...
    வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள இந்த வாரம் தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையவும், வெற்றிகரமாக முடியவும் ஆசீர்வதிக்கிறேன்.

    வாழ்த்துகிறேன்.

    பாராட்டுக்கள்.

    அன்புள்ள
    VGK }<

    வாழ்த்திற்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள் சகோ.!

    ReplyDelete
  52. வாக்களித்த ஐவருக்கும் என் நன்றிகள்.!

    ReplyDelete
  53. ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள்...

    ReplyDelete
  54. >{வெங்கட் நாகராஜ் said...
    ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள்...<{

    வாழ்த்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  55. சிவ ஹரி அவர்களே !
    சிவனே என்றிருந்தவனை இன்று
    சிந்திக்க வைத்துவிட்டீரே !!\
    திகைத்தேன். கொஞ்சம்
    திடுக்கிட்டேன்.

    //சொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை.//

    சொல்லிக்கொள்ளும்படி யாருமில்லை எனச்
    சொல்லுகிறீர்களே ! உங்கள் பதிவிலே !!
    சொல்லுவது யாரிடம் ?
    சொல்லுவது என் பொருள் !!

    இவர் ஐயத்தைத்தீர்க்க
    இவ்வுலகில் இங்கே
    யாருமில்லையா ?

    சத்தம் போட்டுக்கேட்டேன்.
    அந்தரத்திலே எதிரொலித்தது.
    ஆகாயத்திலிருந்து
    அடடா !! அது ஓர்
    அசரீரியோ ?

    ( மாதா ச பார்வதி தேவி பிதா தேவோ மஹேஸ்வர‌
    பாந்தவா சிவபக்தாஸ்ச ஸ்வதேசோ புவத்ரயம் )

    வடமொழியில் வாட்டிடவேண்டாம். யான்
    தடமறிந்த தமிழிலே சொல்லுங்கள் என்றேன்.

    அன்புடன் உமை இங்கு அழைத்து
    ஆசிரியராக அமர்த்தியதெல்லாம் யாரென நினைத்தீர் ?
    அன்னை உமையாம்.அவளுள் அமர் ஈசனாம்.
    ஆறு நாட்கள் நீர் எழுதுமெல்லாம்
    படித்து மகிழ்வதுங்கள்
    பங்காளியாம்.

    காகமாய்க் கூவினேன்: . என் ஊர் எது ?
    தாகம் கொண்டோர் தடாகம் செல்வர்.
    தமிழ் தாகம் கொண்டோர்
    வலைச்சரம் வருவர் . .
    வாசல் திறந்திருக்கிறது.
    உள்ளே வாரும். இதுவே
    உங்கள் ஊர் மட்டுமல்ல,
    உலகமும் இதுவே.

    ஆகா.! யாதும் ஊரே ! யாவரும் கேளீர் !!

    பாகாய் உருகும் சிவஹரி வாழ்க !!

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  56. >{}<

    வாழ்த்தினை வழங்கியமைக்கு மிக்க நன்றி சகோ!

    நான் உயர்மனத்தான், நான் உயர்குணத்தான், நான் இதுவரையிலும் ஒரு ஈ எறும்புக் கூட துரோகம் நினைக்காதவன் என்ற வழியிலே சிந்தனைச் செலுத்திப் பாருங்களேன் சகோ.!

    என்னிலை உயர்ந்தது என்று சொல்லிக் கொள்ளும் படி யாருமே இல்லை என்ற முடிவு தான் வரும்.

    “யார் இதுவரையிலும் பாவங்கள் செய்யவில்லையோ அவரே இவள் மீது முதலில் கல்லெறியட்டும்” என்று புனித பைபிளின் வசனம் படித்தது நினைவிற்கு வருகின்றது.

    ஆட்டுவிப்பவன் இறைவன்; ஆட வேண்டியவன் மனிதன்.

    தெளிவான பாடல்வடிவ மறுமொழிக்கு நன்றிகள் பற்பல.

    ReplyDelete
  57. வலைச்சர ஆசிரியப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  58. >{அருணா செல்வம் said...

    வலைச்சர ஆசிரியப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.}<

    வாழ்த்தியமைக்கு நன்றிகள் பற்பல சகோ.!

    ReplyDelete
  59. வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துகள் தோழரே!

    ReplyDelete
  60. >{அ.அப்துல் காதர் said...
    வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துகள் தோழரே! }<

    வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றி தோழரே!

    ReplyDelete
  61. வலைச்சர ஆசிரிய பொறுப்பிற்கு வாழ்த்துக்கள் நண்பரே! நேரமின்மையால் முன்பே வர முடியவில்லை.

    :D :D :D

    ReplyDelete
  62. >{Abdul Basith said...

    வலைச்சர ஆசிரிய பொறுப்பிற்கு வாழ்த்துக்கள் நண்பரே! நேரமின்மையால் முன்பே வர முடியவில்லை.

    :D :D :D}<

    வருக நணபரே வருக வருக.

    தங்கள் வருகையில் எனக்கு அகமகிழ்வு

    நன்றி

    ReplyDelete
  63. >{சிவஹரி said...

    வாக்களித்த ஐவருக்கும் என் நன்றிகள்.!}<

    அடுத்தும் வாக்களித்த இரு உள்ளங்களுக்கும் சேர்த்து என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது