07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 23, 2012

இரண்டாம் நாள் பதிவு - சிவஹரி - செயல்களே மூலாதாரம்.

இருப்பதைக் கொண்டு இல்லாதவர்க்கும் ஈந்து தனது ஈகைக் குணத்தினை வெளிப்படுத்திடும் மாந்தரை வள்ளல் என்றும் கொடையாளி என்றும் அழைக்கின்றோம். பொருட் செல்வம் மட்டுமின்றி எல்லா வகையிலும் ஈந்து வாழ்பவர் வாழ்க்கை என்றுமே போற்றுதற்குரியது.

அத்தகைய மாந்தர் வழியிலே நாம், சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் சீதக்காதியினை என்றும் மறந்திடக் கூடாது.

இது ஒரு புறமிருக்க பண்டைய தமிழ் மன்னர்களில் மூவேழு வள்ளல்களைப் பற்றிய சிறு குறிப்பினைக் காண இங்கே சொடுக்கிடுங்கள்.


இவர்களில் நமக்கு கடையேழு வள்ளல்களான 1. பாரி, 2. ஓரி, 3. காரி, 4. பேகன், 5. நள்ளி, 6. அதியமான், 7. ஆய் – ஆகியோரைப் பற்றி தான் அதிக அளவில் அறிந்திருப்போம்.

இன்றும் சிறப்பாக சொல்லப்படுவை:

முல்லை கொடி படர்ந்து வளர தன் தேரையே  கொடுத்த பாரி

குளிர் காலத்தில் மயில் அகவ, அது குளிரால் தான் நடுங்குகின்றதோ என்றெண்ணி தன்னுடைய பகுத்தறிவின் எல்லைக்குள் நுழையாமல் கொடை மடத்தோடு மயிலுக்குப் போர்வை தந்த பேகன்

வாழ் நாள் அதிகரிக்கச் செய்திடும் அரிய நெல்லிக்கனியினை தான் உண்ணாது ஔவைக்கு அகமகிழ்வோடு ஈந்த அதியமான்

துன்பங் கொண்டு துவண்டிரும் மாந்தருக்கு நல்ல குதிரைகளைக் கொடுத்து அவர்களின் வாழ்வில் வெளிச்சமடையச் செய்தவரும், கலங்கிய மனத்தோரின் கவலை நீக்கும் அருமருந்தாகவும் செயல்பட்ட காரி வள்ளல்.

ஒளிமிக்க நீலமணியையும், நாகம் தந்த கலிங்க ஆடையையும் இரவலர்க்கு கொடுத்து உன்னத இடத்திலமர்ந்தவர் ஆய் வள்ளல்.

பசிப்பிணியை தன் மக்களிடமிருந்து ஓடச் செய்த நள்ளி வள்ளல்.

கலைஞர்களின் கலைத்திறனை பாராட்டி அவர்களுக்கு நிலங்கள் வழங்கி பெருமையடைந்த ஓரி வள்ளல்

மேலும் சிறப்பாய் அறிந்திட சொடுக்கிடுக:
1 & 2

ஆக, நம் வாழ்வு நம்மில் வசப்பட நாம் செய்யும் செயல்களே மூலாதாரம். அத்தகைய ஆதாரத்தினை நாம் பல்வேறு வழிகளின் மூலமாக தினமும் பெற்றுக் கொண்டே தான் வருகின்றோம். தினமும் ஏதேனும் ஒரு விதமான படிப்பினைகள் நம் வாழ்க்கையில் வந்து கொண்டே இருக்கின்றது.

அவை எத்தன்மையன என்பதைப் பொறுத்தே நம் வாழ்க்கையும் நம்மோடு வசப்படும்.



 இணைய உலகில் நான் காலுதைத்து, தவழ்ந்து, குப்புறமாய் விழுந்து, தத்தித் தத்தி நடந்து இன்று ஏதோ ஒரு விதமான வேகத்தில் முன்னோக்கிய பயணத்தை தொடர்கின்றேனில் அதற்கு காரணமாக விளங்கியது/விளங்குவது/விளங்கிக் கொண்டிருப்பது  முத்தமிழ் மன்றம் என்ற என் தாயே!


நவரசங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இத்தளமானது அன்பையும், பாசத்தையும், நட்பையும், அறிவுத்திறனையும் பெருக்கிட வல்லது. தாய் மொழியான தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லத் தக்க ஆவணங்களை ஆணவமின்றி தன்னுள் வைத்திருப்பதோடு சீரிய நெறிமுறைகளையும் பயிற்றுவிக்கின்றது.

இத்தளத்தின் பல பதிவுகள் எனக்குப் பிடித்திருந்தாலும் சில பதிவுகளை இங்கே எடுத்துக் காட்டிட கடமைப்பட்டிருக்கின்றேன்.

கதைப்பகுதி 
  1. ஆண்டாளுக்குக் கல்யாணம்
  2. ஜென் கதைகள்
  3. மஞ்சு அக்காவின் கதைகள்
  4. நுனிப்புல் பாகம் - 2
  5. இரும்புக்கோட்டை மர்ம யோகி- நகைச்சுவைதொடர்கதை
  6. உயிரை மறந்த உடல்கள்
  7. ப‌சுமை வேட்டை....!! 
  8. ஒரு நிமிடக் கதை= உதவி
  9. பதியம்
  10. இரவில் வந்தவள்..!
  11. கடலோரக் குற்றங்கள் 
கவிதைப் பகுதி

  1. நானும் நீயும்
  2. ஆதியந்தக் கவிதை- சவாலுக்குத் தயாரா?
  3. அடுத்த வரி எழுதுங்க! - கவிதைவிளையாட்டு!
  4. முத்தமிழ்மன்றக் கவியரங்கம்.
  5. சமையல் வெண்பாக்கள் 
  6. சூஃபி கவிதைகள்
  7. கலைவேந்தனின்நல்வழி வெண்பாக்கள்..!
  8. தமிழ் மணக்கும் என் முத்தமிழ் மன்றமிது
  9. நாவிஷ் செந்தில்குமாரின்கவிதைகள்
  10. சுந்தராவின் கவிதைச் சிதறல்கள்
  11. வாலைக் கும்மி (நம்ம வாலுப் பொண்ணுக்கு சமர்ப்பணம்)
  12. காதல்என்பது!
  13. மெளன யுத்தம் !!
  14. இளவரசியின் எண்ணச்சிதறல்கள்!
  15. காகிதனின் கலைவாணி துதிகள்
  16. சுடர்க்கொடியின்கனவுகள்
  17. மகுடதீபன் கவிதைகள்
  18. இரும்பிலே ஒரு சேலை
  19. கனவுகள்
  20. மாலைமாற்று - கிரியின் முயற்சிகள்
  21. அருட்பனுவல் ஆயிரம் ( மகுடதீபன் )
  22. கதம்பப் பூ(பா)க்கள் - முத்தமிழ் மன்றம்
  23. என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக்கதை) 
  24. "இயற்கையின் மடியில்" -சுந்தரா
  25. எனக்கும் எனக்கும்
  26. மனதின்ஏக்கம்
  27. ப்ரியன் கவிதைகள்
  28. மழலைக் கிறுக்கல்கள்
  29. இலக்கியனின் கவிதைகள்
  30. என்னில்லம்
கல்வி, இலக்கியம், கட்டுரை மற்றும் பிற ஆக்கங்கள்
  1. ஈசாப்பின் குட்டிக் கதைகள்:மொழிபெயர்ப்பு வை கோவிந்தன்
  2. ஒரு சொல் இரு பொருள்
  3. சொல்லுக்குள் சொல் - கண்டறிவோம்வாருங்கள்
  4. நிஷா அத்தை சொல்லும் புத்திபுகட்டும் கோக்குமாக்கான கதைகள்
  5. கழுகுவீரன் - (வி)சித்திரக்கதை
  6. தெனாலி ராமன் கதைகள்
  7. மஞ்சு அக்காவுக்கு பிறந்தநாள் பரிசு கதை
  8. குறுக்கெழுத்துப் போட்டி
  9. எண்ணைக் கண்டுபிடியுங்க -மூளைக்கு வேலை
  10. சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை
  11. குறுந்தகவல் - தத்துவங்கள்
  12. மகுடதீபனின் எண்ணக் கலாபம்
  13. கருத்தை கவர்ந்த கருத்துகள்
  14. எளிதாய்ப் படிக்க முன்னோர்கூறும் வழிமுறைகள்
  15. நிர்வாக பாடங்கள்
  16. விட்டுத் தள்ளு கவலையை....
  17. ஐந்தாவது தூண்
  18. புரட்சியாளன் சேகுவேரா!!!!
  19. சேகுவேராவின் வாழ்க்கை வரலாறு-பாகம் 1
  20. சீற வேண்டிய நேரத்தில் சீறவேண்டும்!
  21. நான் கண்டதும் கேட்டதும்
  22. எல்லோரும் விளையாட ஒரு விளையாட்டு
  23. இசைக் கருவிகள்(புகைப்படங்கள்)
  24. ராஜா WIN தன்னம்பிக்கைப் பக்கம்...!
  25. மஞ்சு அக்காவின் சுவையான சமையல்கூடம்
  26. ப‌்த்‌திர‌ப்படு‌த்‌தி வை‌க்க‌சில தகவ‌ல்க‌ள்
  27. புவனா அக்காவின் சமையல் அறைகுறிப்புகள்
  28. என் சமையலறை
  29. சமையல் பரிமாறும் முறை
  30. பனங்கழி இல்லாமல் பனங்காய்ப்பனியாரம்
  31. கருவாட்டுத் தொக்கு!
  32. அண்டத்தின் அற்புதங்கள்
  33. உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள்
  34. அறிவியல் தத்துவங்கள் - எளியவிளக்கங்கள் - படங்களுடன்
  35. விஞ்ஞானக் கருவூலம்!
  36. மிதிவண்டி அற்புதம்
  37. சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்.
  38. தகவல் பாதுகாப்பு மேலாண்மை- அறிவோம் வாரீகளா?
  39. அசைபட வரைகலை தெரிவோமா?
  40. GIMPல் கலக்குவோம் வாருங்கள்!
  41. மின்விரிதாள் (Spreadsheet)விரிப்போம் வாரீகளா?
  42. இராவணன், தமிழர்கள், சிந்துச் சமவெளி
  43. இலக்கியத் தேன் சொட்டு
  44. கம்பன் காட்டும் காப்பிய திறம்
  45. தமிழ் வரலாற்றுப் புதினங்களின்பட்டியல்
  46. குறிஞ்சிப்பாட்டில் கபிலர்குறிப்பிடும் 99 மலர்கள்
  47. சிலேடை வெண்பா வரைவோம்
  48. சொல்லோவியம்
  49. தமிழகத்தை ஆண்ட அரசர்கள்- காலப்பட்டியல்
  50. ஆராய்ந்தறிவோம்
  51. கடவுள் யாருக்குச் சொந்தம்?
  52. திருக்-குர்ஆன் தமிழாக்கம்
  53. கச்சியப்ப முனிவர் வரலாறு
  54. இன்று பிரதோஷம்
  55. சுந்தர காண்டம்
  56. ராஜாவின் தமிழ் இனிமைப் பக்கம்...!
  57. சிவபரத்துவ நிச்சயம்
  58. பைபிள் சிந்தனை
  59. சிரிச்சா நல்லது...
  60. கணக்குப் பதிவியல் படிக்கவாரீகளா?


அடுத்த பதிவனாது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எனக்கு வாழ்க்கை நெறிகளை அவ்வப்போது சொல்லாலும், செயலாலும் கற்றுத் தரும் குருமார்களைப் பற்றியது.

நன்றி

28 comments:

  1. எத்தனை எத்தனை இடுகைகள் - மாலை வீடு திரும்பி ஒவ்வொன்றாய் படிக்கிறேன்.

    வலைச்சரப் பணி வளமாய் தொடரட்டும்.

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள நல்லதொரு தொகுப்பு... நன்றி...

    விழாக்கால வாழ்த்துக்கள்...tm3

    ReplyDelete
  3. >{வெங்கட் நாகராஜ் said...

    எத்தனை எத்தனை இடுகைகள் - மாலை வீடு திரும்பி ஒவ்வொன்றாய் படிக்கிறேன்.

    வலைச்சரப் பணி வளமாய் தொடரட்டும்.}<

    தங்களின் வருகைக்கும், வாக்கிற்கும்*2 (இரண்டிற்கும் தான்.!) நன்றி சகோ.!

    இந்தப் பதிவானது என்னை அதிக உழைக்கச் செய்ய வைத்து விட்டது.!

    ”வேர்டில்” சேமிக்கப்பட்ட தரவை பதிவேற்றிடும் போது இணைப்புகள் எல்லாம் ஏற மறுத்த நிலையிலே மறுபடியும் ஒவ்வொரு இணைப்புகளாய் கொடுக்க வேண்டியதாகி விட்டது.


    பலரும் படித்துப் பயன்பெறுவார்கள் என்ற நோக்கமே இதன் மூலாதாரம்.

    நன்றி

    ReplyDelete
  4. >{திண்டுக்கல் தனபாலன் said...

    மிகவும் பயனுள்ள நல்லதொரு தொகுப்பு... நன்றி...

    விழாக்கால வாழ்த்துக்கள்...tm3}<

    விழாக்கால வாக்குகளை வழங்கியமைக்கு வந்தனங்கள் பற்பல.

    நன்றி சகோ.!

    ReplyDelete
  5. ஆஹா... வள்ளல்கள் பற்றிய கருத்துகளும் தாங்கள் அளித்த பதிவுகளின் பட்டியலும் மிக பயனுள்ம்ளதாக அமைந்தது! மகிழ்ச்சி! நன்றி!

    ReplyDelete
  6. >{ சுடர்விழி said...

    ஆஹா... வள்ளல்கள் பற்றிய கருத்துகளும் தாங்கள் அளித்த பதிவுகளின் பட்டியலும் மிக பயனுள்ளதாக அமைந்தது! மகிழ்ச்சி! நன்றி! }<

    வருகைக்கும் மகிழ்வான கருத்திற்கும் நன்றி சகோ.!

    ReplyDelete
  7. நவரசங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  8. >{இராஜராஜேஸ்வரி said...
    நவரசங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..}<

    தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி சகோ.!

    பயன்மிகு கருத்துகளைப் படித்து நாமும் பயன்பெறுவோமாக!

    ReplyDelete
  9. அன்பின் தம்பி,

    இரண்டாம் நாளான இன்று எல்லாவற்றிற்கும் நம் செயல்களே மூலாதாரம் என்று சொல்லத்தொடங்கி கடையேழு வள்ளல்களைப்பற்றி விரிவாக எடுத்துரைத்து மிக அருமையாக நம் தாய்மன்றமாம முத்தமிழ்மன்றத்தை அறிமுகப்படுத்தியமைக்கு அன்பு வாழ்த்துகள்டா...

    தமிழ் மணம் இணைக்க தெடினால் காணோமே காக்கா ஊச்?

    ReplyDelete
  10. வலை பதிவு அல்ல வலை கடல் .. நன்றி நண்பா

    ReplyDelete
  11. பலதரப்பட்ட தகவல் களஞ்சியம் . பகிர்ந்ததற்கு நன்றி .

    ReplyDelete
  12. மிகவும் பயனுள்ள தகவல்களைக் கொடுத்து இரண்டாம் நாளை இனியதாகச் செய்து விட்டீர்கள்!

    பாராட்டுக்கள் சிவஹரி!

    ReplyDelete
  13. அப்பப்பா எவ்ளோ பதிவு... இன்னும் நிறைய வாசிக்க நேரம் ஒதுக்கனும்.நீங்கள் வெளியிட்டவற்றில் சில பதிவுகள் மட்டுமே படித்துள்ளேன்.

    ReplyDelete
  14. >{மஞ்சுபாஷிணி said...
    அன்பின் தம்பி,

    இரண்டாம் நாளான இன்று எல்லாவற்றிற்கும் நம் செயல்களே மூலாதாரம் என்று சொல்லத் தொடங்கி கடையேழு வள்ளல்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்து மிக அருமையாக நம் தாய்மன்றமாம் முத்தமிழ்மன்றத்தை அறிமுகப்படுத்தியமைக்கு அன்பு வாழ்த்துகள்டா...

    தமிழ் மணம் இணைக்க தெடினால் காணோமே காக்கா ஊச்? }<

    கருத்துச் செறிவு மிகுந்த மறுமொழி கண்டு மகிழ்ச்சி அக்கா.

    த‌மிழ் ம‌ண‌ம் இணைய‌த்த‌ள‌த்தில் ஏதோ பிர‌ச்ச‌னை போலிருக்கு அக்கா.

    அத‌னால் தான் த‌மிழ் ம‌ண‌ வாக்குப்ப‌ட்டை தெரிய‌வில்லை. விரைவில் நிர்வாக‌ம் ச‌ரி செய்திடுவார்க‌ள் என்று ந‌ம்பிடுவோம்.

    ReplyDelete
  15. >{"என் ராஜபாட்டை"- ராஜா said...
    வலை பதிவு அல்ல வலை கடல் .. நன்றி நண்பா }<

    வலைக்கடலில் இருக்கு முத்துக்களை பயன்படுத்தி வாழ்க்கையின் முன்னேற்றப் படி வழியே பயணிக்க என் வாழ்த்துகள் சகோ.!


    மறுமொழிக்கு நன்றி

    ReplyDelete
  16. >{"என் ராஜபாட்டை"- ராஜா said...

    இன்று

    அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்}<

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    காலம் கிடைக்கையில் கண்டு மகிழ்வேன்.

    ReplyDelete
  17. >{Vijay Periasamy said...
    பலதரப்பட்ட தகவல் களஞ்சியம் . பகிர்ந்ததற்கு நன்றி }<

    இனிய வரவேற்புகள் சகோ.!

    கருத்திட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  18. >{Ranjani Narayanan said...
    மிகவும் பயனுள்ள தகவல்களைக் கொடுத்து இரண்டாம் நாளை இனியதாகச் செய்து விட்டீர்கள்!

    பாராட்டுக்கள் சிவஹரி!}<

    தங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டுமே சகோ.! அதனின் சிறு முயற்சி தான் இந்தப் பதிவு.

    மகிழ்ச்சி சகோ.!

    ReplyDelete
  19. >{விச்சு said...
    அப்பப்பா எவ்ளோ பதிவு... இன்னும் நிறைய வாசிக்க நேரம் ஒதுக்கனும்.நீங்கள் வெளியிட்டவற்றில் சில பதிவுகள் மட்டுமே படித்துள்ளேன்.}<

    வலைச்சரத்திற்கு இனிய வரவேற்புகள் சகோ!

    காலம் கிடைக்கும் போது வாசியுங்கள். வாசிப்பே ஒரு மனிதரை உயிர்த்தன்மை பெற்ற மனிதாக மாற்ற வல்லது.

    படித்துப் பயனடைக.

    மறுமொழிக்கு நன்றி

    ReplyDelete
  20. //நவரசங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..//

    அதே அதே ......

    ஏழு வள்ளல்கள். ஏழு வள்ளல்களின் குணங்களையும் இன்று ஒருங்கே பெற்றுள்ள மஞ்சு அக்கா.

    முக்கியமாகப் படிக்க வேண்டிக் குறித்து வைத்துள்ள ஒரு சில

    மஞ்சு அக்காவின் கதைகள்

    மஞ்சு அக்காவுக்கு பிறந்தநாள் பரிசு கதை

    மஞ்சு அக்காவின் சுவையான சமையல்கூடம்

    அருமை அனைத்தும் அருமை.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  21. >{//நவரசங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..//

    அதே அதே ......

    ஏழு வள்ளல்கள். ஏழு வள்ளல்களின் குணங்களையும் இன்று ஒருங்கே பெற்றுள்ள மஞ்சு அக்கா.

    முக்கியமாகப் படிக்க வேண்டிக் குறித்து வைத்துள்ள ஒரு சில

    மஞ்சு அக்காவின் கதைகள்

    மஞ்சு அக்காவுக்கு பிறந்தநாள் பரிசு கதை

    மஞ்சு அக்காவின் சுவையான சமையல்கூடம்

    அருமை அனைத்தும் அருமை.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK}<

    சகோதரம் ராஜேஸ்வரி அவர்களின் சார்பிலும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    தாங்கள் படிக்க வேண்டிக் குறித்து வைத்துள்ள குறிப்புகள் கண்டு மகிழ்ச்சி.

    வாழ்த்தியமைக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  22. அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  23. வணக்கம்.
    சிவஹரி

    என்று நான் அறியாத பல புதிய தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளிர்கள் மிக சிறப்பாக உள்ளது இரண்டாம் நாளும்
    எனது பின்னூட்டம் மின்சார தடைகாரணமாக தாமதமாகி விட்டது. மின்சாரம் வந்தது சரியாக 1.00am மணிக்கு மலேசியா நேரப்படி.கண்டிப்பா அனைத்து பதிவுகளையும் நான் எனக்கு பயன் உள்ளவாறு படித்துக் கொண்டு இருக்கிறேன்.

    மூன்றாம் நாளும் வலைப்பூ வலைச்சரம் சிறப்பாக பூத்து மலர எனது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  24. வணக்கம்.
    சிவஹரி

    இன்று நான் அறியாத பல புதிய தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளிர்கள் மிக சிறப்பாக உள்ளது இரண்டாம் நாளும் எனது பின்னூட்டம் மின்சார தடைகாரணமாக தாமதமாகி விட்டது. மின்சாரம் வந்தது சரியாக 1.00am மணிக்கு மலேசியா நேரப்படி.கண்டிப்பா அனைத்து பதிவுகளையும் நான் எனக்கு பயன் உள்ளவாறு படித்துக் கொண்டு இருக்கிறேன்.

    மூன்றாம் நாளும் வலைப்பூ வலைச்சரம் சிறப்பாக பூத்து மலர எனது வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  25. >{Lakshmi said...

    அனைவருக்கும் வாழ்த்துகள்}<

    மகிழ்ச்சி சகோ!

    ReplyDelete
  26. >{ OpenID 2008rupan said...

    வணக்கம்.
    சிவஹரி

    இன்று நான் அறியாத பல புதிய தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளிர்கள் மிக சிறப்பாக உள்ளது இரண்டாம் நாளும் எனது பின்னூட்டம் மின்சார தடைகாரணமாக தாமதமாகி விட்டது. மின்சாரம் வந்தது சரியாக 1.00am மணிக்கு மலேசியா நேரப்படி.கண்டிப்பா அனைத்து பதிவுகளையும் நான் எனக்கு பயன் உள்ளவாறு படித்துக் கொண்டு இருக்கிறேன்.

    மூன்றாம் நாளும் வலைப்பூ வலைச்சரம் சிறப்பாக பூத்து மலர எனது வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-}<

    இரு முறை தனது கடமையினை சரிவரச் செய்த தங்களுக்கு என் நன்றிகள் பற்பல.

    வாழ்த்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  27. வாக்களித்த நால்வருக்கும் (cheenakay sudarvizhi268 dindiguldhanabalan venkatnagaraj) என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது