07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 5, 2008

பாசக்காரச்சரம்

இந்த மக்களெல்லாம் எப்படி, எப்போ சேர்ந்தோம்ன்னு எல்லாம் தெரியாது. ஆனா எல்லோரும் ஒரே குடும்பாக இருக்கிறோம். இந்த குடும்பத்தில் இணைந்த‌தில் சந்தோஷமே..! தமிழ்மணத்தின் பாசக்கார குடும்பத்தினை பற்றியது இன்றைய தொகுப்பு.

அபி அப்பா

குடும்பத்தோட மூத்த உறுப்பினரில் தலயும் ஒருவர். தமிழ்மணத்துல இவரை தெரியாதவங்க இருக்கவே முடியாது! சீரீயஸ்ன்னு இவரு பதிவு போட்டா கூட சிரிச்சிக்கிட்டே தான் படிப்பேன். நல்ல மனுஷன், பாசக்கார அண்ணன். இவரோட நகைச்சுவை பதிவுகளில் எனக்கு பிடிச்சது பாரதிக்கும் பாரதமாதாவுக்கும் என்ன பிரச்சினை?


கண்மணி

பல சங்கங்க‌ளில் உறுப்பினர். எங்க கும்மி குடும்பத்தை நடத்துறவ‌ங்க. இதை எல்லாம் கடந்து இவங்க ஒரு பொறுப்பான ஆசிரியர். கலாய்க்கிற‌துல இவ‌ங்களை அடிச்சிக்கவே முடியாது. அஆஇஈஉஊஎஏ.........ய்...........[டோன்ட் மிஸ் இட்] நகைச்சுவையிலும் சரி, கவிதையிலும் சரி, கதைகளிலும் சரி பின்னிடுவாங்க..! சமீபத்தில் எழுதிய இந்த கவிதை எனக்கு பிடித்த ஒன்று தேடலின் முடிவில்... இவ‌ங்க தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருக்கும்போது போட்ட பதிவு இது. எனக்கு பிடித்த பதிவுகளில் இதுவும் ஒன்று மனிதரில் இத்தனை நிறங்களா?


மை ஃபிரண்ட்

எங்க குடும்பத்தோட கடைக்குட்டி, தமிழ்மணத்தில் மை ஃபிரண்ட்டோட பின்னூட்டம் வாங்காதவங்க‌ யாருமே இருக்க முடியாது. அம்புட்டு பெரிய ஆளு இவுங்க. அவுங்க profileலே அதுக்கு ஒரு பெரிய உதாரணம். சகலகலாவல்லின்னு சொல்லாம். இவை எல்லாத்தையும்விட என்னோட பாசக்கார தங்கச்சி. இவுங்களுக்கு நடந்த ஒரு நிகழ்ச்சியை நகைச்சுவையோடு சொல்லியிருப்பாங்க இந்த பதிவில் சீனப் பெருநாளில் நான் வாங்கிக்கிட்ட ஆப்பு!! .
சமீபத்தில் இவ‌ங்க எழுதிய குமரனுடன் சில நிமிடங்கள் பதிவு மனசை பாதித்த பதிவுகளில் ஒன்று. சாதனை புரிந்த பெண்களை பற்றியும் விட்டுவைத்த‌தில்லை எந்த பெண்ணும் விண்வெளியாளராய் ஆகலாம்


குசும்பன்

தமிழ்மணத்தில் எங்க அண்ணாத்த குசும்பு பண்ணாத‌ ஆளுங்க இல்லவே இல்லை.
அந்த அளவுக்கு குசும்பு பண்ணும் எங்க அண்ணாத்த. ஆனா பாருங்க! இவரு எழுதிய ஒரு கதைதான் இப்போ இங்க கொடுக்க போறேன் யார் திருந்தவேண்டும்? . எனக்கு பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. கலாய்க்கிற‌துல மட்டும் இல்லை கற்று கொடுக்கவும் தெரியும் எங்கள் அண்ணனுக்கு அவர் சமீபத்தில் பதிவர்களுக்கு PHOTOSHOP பற்றி கற்று கொடுத்துக் கொண்டு இருக்கிறார் இங்கே பாருங்கள் படிக்கலாம் வாங்க


இம்சை அரசி



பேருக்கு தகுந்த மாதிரி ஆளு அப்படி இல்லை (நான் பார்த்த வரைக்கும்).
பெரிய எழுத்தளார், கவிதை, கதை அதுவும் காதல் தொடர்கதைகள் எழுவதில் பெரிய ஆளு இவுங்க. கதைகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு பிடித்தது இவுங்க எழுதிய அழகுகள் ஆறு பதிவு தான் அழகென்ற சொல்லுக்கு.......


குட்டி பிசாசு

அடிக்கடி காணாமல் போகும் பதிவர்களில் இவரும் ஒருவர். தற்போது சினிமா சார்ந்த பதிவுகள் போட்டு பின்னிக்கிட்டு இருக்காரு. கவிதைகள் கூட எழுத ஆரம்பிச்சிருக்காரு, அப்படி சமீபத்தில் இவரு எழுதிய ஒரு கவிதையில் எனக்கு பிடித்த கவிதை கலையட்டும் மௌனம் அதேபோல அவர் எழுதிய இந்த சிறுகதை நான் ரசித்த ஒன்று நஞ்சாவது பிஞ்சாவது.


டாக்டர் டெல்பின்

அம்மாவை பற்றி நான் செல்வதை விட நம்ம பதிவர் திரு. ராகவன் அவர்கள் சொல்லியிருப்பாதை பாருங்கள் - (சின்ன சின்ன எட்டுகள்..... பதிவில் இருந்து எடுத்தேன். )

திரு. ராகவன்
ஒரு பாட்டு உண்டு. அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையேன்னு. 25000 ஈன்ற அன்னைன்னு பட்டம் கொடுக்கலாம். இதுல என்ன சாதனைன்னா....25000 முறை இரண்டு உயிர்களைக் காப்பாற்றீருகீங்க. அதாவது குறைந்த பட்சம் 50000 பேர் உயிர்வாழ நீங்களுமொரு காரணமாயிருக்கீங்க. பாராட்டுகள்.


இதை விட இவரை பற்றி நான் எப்படி சொல்ல முடியும். எங்க பாசக்கார குடும்பத்துக்கு அம்மா இவுங்க. இவர் கூறும் மருத்துவ குறிப்புகள் அனைவருக்கும் ப‌ய‌னுள்ள‌ பெட்ட‌க‌ங்க‌ள். ம‌ருத்துவ‌ காப்பீட்டைப் ப‌த்தி, இளைய‌ ச‌முதாய‌ம் போகும் வேக‌த்தைப்ப‌த்தி இவ‌ங்க‌ அக்க‌றையோட‌ எழுதியிருக்க‌ற‌ இந்த‌ ப‌திவு - Need your Brains
அப்புகுட்டனும் நானும்... , சோர்ந்து போன தருணம், இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்..அம்புட்டு இருக்கு.


மங்கை



த‌மிழ்ம‌ண‌த்துல‌ எழுதுற‌ மிக‌ச்சிற‌ந்த ப‌திவ‌ர்க‌ள்ல‌ ரொம்ப‌ முக்கிய‌மான‌வ‌ர். பல பட்டங்கள் கிடைத்தாலும் அதை எல்லாம் தலையில் ஏற்றி கொள்ளாமல் இவர் அளிக்கும் பதில் வியக்க வைக்குது. இவர்களோடுகூட நானும் இருக்கேன்னு நினைக்கும் போது பெருமையாக இருக்கு. சத்தமே இல்லமால் பல சாதனைகள் செய்திருக்காங்க அதுக்கு சின்ன உதாரணம் இங்கே வாருங்கள் வாழ்த்துவோம் மங்கையை! இவர் ஒரு இயக்குனர் அவர் எடுத்த படத்தை பற்றி இங்கே பாருங்கள் பரீக்ஷித் - குறும்படம் த‌னியான‌ ஒரு ப‌திவ‌ எடுத்துக்கொடுக்க‌ற‌துங்க‌றது ரொம்ப‌ சிர‌ம‌ம். அத‌னால‌ அப்ப‌டியே இவ‌ங்க‌ லிங்க்க‌ எடுத்துக்கொடுத்துட்டேன் ப‌டிச்சு ஜ‌மாயுங்க‌... மங்கை


வித்யா கலைவாணி

சமீபத்தில் தமிழ்மணத்தில் இணைத்து கலக்கு கலக்குன்னு கலக்குனாங்க. எல்லா விஷயத்திலும் இவங்களுக்கு கருத்துக்கள் உண்டு. இவங்களோட பொது அறிவை வியந்து பார்த்த பதிவர்களில் நானும் ஒருவன்.
இவங்களோட இந்திய பொருளாதார வளர்ச்சியும், வளைகுடா இந்தியர்களும் வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்களின் பொருளாதார பிரச்சனையை அலசி காயப்போட்டு இருப்பாங்க. அதே போல் ஜப்பானில் நடந்த அணுகுண்டு சம்பவத்தை எல்லோரும் படித்திருப்போம். அதே சம்பவத்தை இவுங்க எப்படி சொல்லியிருக்காங்ன்னு பாருங்கள் வரலாற்று நிகழ்வுகளுடன் ஒரு விடுகதை - விடை நாளை






நாளை சந்திப்போம்....
மேலும் வாசிக்க...

Friday, January 4, 2008

சினிமா/பொழுதுபோக்குச்சரம்

எந்த படம் வந்தாலும் பார்க்கிற ஆளுங்க நாம. அது மொக்கையோ இல்ல சூப்பரா இருக்கோ. எல்லா படத்தையும் பார்த்துடணும்.


கப்பி
ஜாவா பாவல‌ர் கப்பி அவர்கள் ஒரு மிகச்சிறந்த கவிஞர்.
கதை எல்லாம பின்னிபெடலடிப்பாருன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா கப்பி ஒரு நல்ல சினிமா விமர்சகர். தமிழாகட்டும், ஆங்கிலமாகட்டும் எந்த படத்துக்கும் கப்பியின் விமர்சனம் ஒரு தனி அழகு தான். அவர் எழுதிய Gandhi - My Father மற்றும் Apocalypto விமர்சனம் எனக்கு பிடித்த ஒன்று.

இப்போ விமர்சனத்துக்கு தனியாகவே ஒரு ப்ளாக் ரெடி செய்து கீத்துக்கொட்டாய்ன்னு பேரு எல்லாம் வச்சி கலக்க ஆரம்பிச்சிருக்காங்க நம்ம மக்கள் - தேவ், இளா, கப்பி பய மற்றும் புது மாப்பிள்ளை வெட்டிப்பயல்.



கானா பிரபா

நமக்கும் தல கானாவுக்கும் எப்போதும் சினிமா பத்தி தான் பேச்சு. அதுவும் மலையாள படங்களின் கானாவோட விமர்சனத்தை எப்போதும் எதிர்பார்ப்பேன். கானா சினிமா சார்ந்த ரெண்டு ப்ளாக் வச்சிருக்காரு. பாடலுக்கே ஒரு தனியாக ரேடியோஸ்பதி ன்னு ஒரு ப்ளாக் இருக்கு. தமிழ்மணத்தில் முதல் முதலில் நேயர்கள் விரும்பி கேட்கும் பாடலை ஒலி பரப்பும் முறையை கொண்டுவந்தவார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நேயர்கள் கேட்ட பாடல்கள் அந்த பதிவில் ஒலிக்கும்.

அதே போல வீடியோஸ்பதி என்று ஒரு தனி ப்ளாக் இருக்கு. அதில் சிறந்த குறும் படங்கள், பல பாடல் காட்சிகள், வெவ்வேறு மொழியில வந்த பாடல்கள் என்று பல அற்புதமான காட்சிகளை கொடுத்திருப்பார்.



கவிதாயினி காயத்ரி

கவிதாயினி காயத்ரி ஒரு பெரிய கவிஞர்ன்னு இந்த தமிழ்கூறும் நல்உலகம் அறிந்த விஷயம். ஆனால் பல மொக்கை படங்களை பார்த்து அதனால தமிழ் மக்களுக்கு பல விழிப்புணர்வு பதிவுகள் போட்டு நல்ல உள்ளம் படைத்தவர். அவர் சமீபத்தில் எழுதிய கொலைவெறி ஏனடா? பதிவை பாருங்க அவுங்க எம்புட்டு நல்ல உள்ளம் படைத்தவர்ன்னு தெரியும்.



அய்யனார்





அய்யனாருன்னு பேரை கேட்டாலே பின்நவீனத்தும், புனைவுன்னு தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். ஆனா எங்க தல ஒரு சினிமா வெறியார். அவர் பார்க்கதா படங்களே இல்லைன்னு கூட சொல்லாம். அவர் மட்டும் படத்தை பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டாரு அதை எங்களுக்கும் கொடுத்து பார்க்க சொல்லும் உயர்ந்த உள்ளம் படைத்தவர். சில படங்கள் கடைகளில் இல்லமால் கூட இருக்கலாம் ஆனா எங்க தலக்கிட்ட கண்டிப்பாக இருக்கும்.
நான் அவரிடம் கேட்டு கொள்வது சீக்கிரம் திரைப்படத்துக்குன்னு தனியாக ஒரு ப்ளாக் ஆரம்பிங்கன்னு தான். அவர் எழுதிய திரைப்படங்கள் ஒன்றை மட்டும் கொடுக்க மனம் இல்லமால் அத்தனையும் இங்கே கொடுக்கிறேன் திரைப்படம்


தேன்கிண்ணம்

தமிழ்மணத்தில் சமீபத்தில் புகுந்து புயலாக கலக்கிட்டு இருக்காங்க நம்ம நண்பர்கள்.
வேதா, ஜி3, நாகை சிவா, ராம், மை ஃபிரண்ட், கப்பி பய, J.K, காயத்ரி, இம்சை அரசி, கோவை ரவி மற்றும் நாமக்கல் சிபி.

தேண்கிண்ணத்துல 1950 வெளிவந்த பாடல் முதல் சமீபத்தில் வந்த திரைப்பாடல்கள் வரை இருக்கிறது. பாடல் வரிகளுடன் நன்றாக தொகுத்து வழங்குகிறார்கள்.


ஜமால்

ஜமால் அவர்கள் நட்சத்திரமாக இருந்த போது அவர் எழுதிய ஹேராம் படம் குறித்த விமர்சனம் என்னை கவர்ந்த ஒன்று. நன்றாக அலசி ஆராய்ந்து விமர்சனம் செய்திருப்பார். அந்த பதிவு ஒளிரும் பாரதத்திற்காக பலியிடப்பட்ட மகாத்மா - ஹே ராம் எனும் அழித்தெழுதப்பட்ட பிரதி.



சின்ன குட்டி

இவரை வலையுலகத்தின் வீடியோ கடை அதிபர்ன்னு சொல்லாம். அவரோட இந்த
அப்பன் மவனே சிங்கன்டா வலையில எல்லா விதமான வீடியோகளும் கிடைக்கும். போயி பாருங்கள்





நாளை ஒரு ஸ்பெசல் தொகுப்பு.....
மேலும் வாசிக்க...

Thursday, January 3, 2008

கவிதைச்சரம்

கவிதை - இந்த வகையை பற்றி அதிகம் தெரியாது. கவிதைக்குன்னு நிறைய முறைகள் வச்சிருக்காங்க மற்றும் நிறைய வகைகள் வச்சிருக்காங்க. என்னை பொறுத்த வரைக்கும் எழுதியிருக்குற விஷயம் படிக்கிறவனுக்கு புரிஞ்சா போதும். ரசிகனுக்கு வேற என்னாங்க வேணும். அப்படி ரசிச்ச, உணர்ந்த கவிதை பதிவுகள் சில

காட்டாறு

பேரே சும்மா அதிருதுல்ல...இவுங்க கவிதைகள் கூட அப்படி தான் இருக்கும், நிறைய விஷயம் தெரிஞ்சவுங்க, ஒவ்வொரு கவிதைக்கும் இவுங்க எடுத்துக்கிட்ட நேரம் சில நிமிஷங்கள்ன்னு சொல்லும் போது ஆச்சிரியமாக இருக்கும். கவிஞர்கள் எல்லாம் இப்படி தான் போல!இவுங்க‌கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை இந்த அத்தையின் மருமகன்
சமீபத்தில் எழுதிய இயற்கை சிற்பி நீ யாரோ வழக்கமான கவிதை கருவில் இருந்து வித்தியாசமாக இருந்தது.

இவுங்க போட்ட போஸ்ட்டுல ஒரு ஸ்பெசல் போஸ்ட்டு இது தாயுமானவள்

அருட்பெருங்கோ

அருட்பெருங்கோஇந்த காதல்முரசுவை தெரியாதவுங்க இந்த தமிழ்மணத்துல யாருமே இல்லைன்னு சொல்லாம். அம்புட்டு பெரிய ஆளு. இவரோட பெரும்பாலான கவிதைகள் காதல், காதல், காதல் தான். பிப்ரவரி மாதம் முழுக்க காதல் கவிதையாக எழுதி தள்ளிய காதல் அரசன். இவரோட காதல் கூடம் ரொம்ப பிடிக்கும். அதில் வார்த்தைகளில் விளையாடியிருப்பாரு. வாழ்க காதல் முரசு.

மணிபிரகாஷ்

பாரத விலாஸ் மாதிரி மணிவிலாஸ் தான் இவரோட பதிவோட பேரு. இவருக்கு பதிவர்கள் சேர்ந்து வச்சபேரு காலெண்டர் கவிஞர். காலெண்டரை வச்சே கவிதை எழுதி தள்ளியிருக்காரு. இதே உங்கள் பார்வைக்கு.

எனது நேற்றைய கிழமை...

இன்னுமோர் காலண்டர் கவிதை


வேதா

கவிஞர் வேதாவின் சில கவிதைகளில் ஒரு மெல்லிய சோகம் இருக்கும். ஆனால் வேதான்னு சொன்ன டக்குன்னு ஞாபகத்துக்கு வந்த கவிதை இதுதான் சகிப்பு.. பின்னியிருப்பாங்க.
அதே போல இந்த என்றும் நட்புடன்.. , என்றும் நேசமுடன் இவுங்க எழுதிய கதை போல உள்ள இந்த கவிதையும் மிகவும் பிடிச்ச ஒண்ணு. மிகத்தெளிவாக அழுத்தமான வரிகளில் எழுதியிருப்பாங்க.

பிரேம்குமார்

அருட்பெருங்கோவுக்கு காதல்ன்னா மாப்பி பிரேமுக்கு நட்பு. இவரோட நட்பு கவிதைகளின் அழகே தனி நட்புன்னு ஒரு தொகுப்பே வச்சிருக்காரு. பாருங்கள் நட்பு


சென்ஷி

இவரு பெரிய ஆளு, கவிதையாகட்டும், கதையாகட்டும் எதுக்கும் ரெடி ஆனா என்ன எல்லாத்தையும் கடைசியில காமெடியாக்கிடுவாரு. இவரோட சின்ன சின்ன கவிதை தொகுப்புல‌ எனக்கு பிடித்த ஒண்ணு குப்பைத்தொட்டி மனசு.

திவ்யா

இவுங்க ஒரு தொடர்கதை நாயகி, மாமியார், மருமகள், கணவன், மனைவி இவுங்களுக்கு எல்லாம் நிறைய ஐடியா கொடுக்குற ஒரு ஐடியா குடவுன். அதெல்லாம் விட எனக்கு முதல் பின்னூட்டம் போட்டவாங்க மகராசி. இந்த இடத்துல ஒரு நன்றியை சொல்லிக்கிறேன் ;) இவுங்க பதிவுல அதிகமாக கதைகள் தான் இருக்கும் ஆனா இவுங்க எழுதிய ஒரு கவிதை எனக்கு ரொம்ப பிடிச்ச ஒண்ணு அதை படிச்சிட்டு எல்லோரும் இவுங்களுக்கு தான் அந்த மாதிரி நடத்திருக்கு போலன்னு நினைச்சிட்டாங்க. அந்த அளவுக்கு மனசை தொட்ட கவிதை அது இப்போது உங்கள் மனசை தொட அம்மம்மா பிள்ளைக்கனி, அங்கம்தான் தங்கக்கனி!!!

J.K ஞானசேகர்

ஒரு தாயின் வலியை உணர்ந்து எழுதியிருப்பார் தலைப்பே அந்த வலியை உணர்த்தும்
சுயப்பிரசவம்



போனஸ் கவிதை



விழியனின் பதிவில் எனக்கு பிடிச்ச கவிதை இது தேவதையின் தோசை


நாளை சந்திப்போம்.....
மேலும் வாசிக்க...

Wednesday, January 2, 2008

கதைச்சரம்

சின்னவயசுல இருந்தே கதை கேட்குறதுன்னா ரொம்ப ஆர்வம். அம்மா தூங்கும்போது அவங்க சொந்த கதை கொஞ்சம் உல்டா பண்ணி சொல்லி தூங்க வைப்பாங்க. அப்போதிலிருந்து யாராவது கதை சொன்னா போதும். வாயில ஈ நுழைஞ்சாலும் கவலைப்படாம கேட்பேன். சுவாரஸ்யமாகவும், வித்தியாசமாகவும் சொன்ன சில கதைகள் தான் இன்னிக்கு நாம பார்க்க போறோம்.

ராகவன்

இவரோட கதைகள்னாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரோட எழுத்து நடை ரொம்ப நன்றாக இருக்கும். அதே நேரத்தில் இவர் எடுக்கும் கதையின் கருக்கூட வித்தியாசமானதாகவும் வியப்பாகவும் இருக்கும். இவரோட பதிவில் எனக்கு பிடித்த கதை விடுதலை.
மிகவும் கவனமாக சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லி நமக்கு உணர்த்தியிருப்பாரு. அதே போல பூர்ணிமா கதையும், கள்ளியிலும் பால் தொடரும் கூட.

தேவ்

அண்ண‌ணோட இடத்துல கவிதைகளுக்கும், கதைகளுக்கும் பஞ்சமே இல்ல. கலாய்க்கிறதுல‌யும் சரி, கதையிலும் சரி, அண்ணோட வழி தனிவழி...அவரோட வசனங்கள், வர்ணனைகள் அந்த கதையின் சூழலை சுலபமாக கற்பனை செய்து பார்க்க முடியும்.
அவரோட சின்னக்குளமும் சில விடுமுறைகளூம் - மொத்தம் ஏழுபாகம் ஒண்ணு ஒண்ணும் அட்டகாசமாக இருக்கும்.
இவரு சமீபத்தில் எழுதிய என்கவுண்டர்/ENCOUNTER கதையும் ரொம்ப பிடித்த ஒன்று.


அரைபிளேடு

பேரு தான் அரைபிளேடு ஆனால் போடுகிற கதை எல்லாம் பிளேடு கிடையாது.
கதையும் சரி அஜால் குஜால் கவிதையும் சரி எதுக்கும் ரெடியான ஆளு.
ஒவ்வொரு கதையும் வித்தியாசமாகவும், நகைச்சுவையுடனும் எழுதக்கூடியவர்.
அவரோட நாம பிரிஞ்சிடலாம் ஒரு உளவியல் சிறுகதை இப்படி கூட நடக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லற கதை.
அவன் சாமியார் ஆனது ஏன்? கதையும் பிடித்த ஒன்னு.


வா.மணிகண்டன்

பேசலாம்ன்னு போடு போட்டு ஆளு அடிக்கடி எஸ்கேப்பு ஆயிடுவாரு. சிறுகதையில புலின்னு சொல்லாம் இவரை.

என் பிரச்சினை எனக்கு






என் த‌ற்கொலைக்கான‌ வாக்குமூல‌ம்






எனக்கு பிரம்மச்சாரி ராசி







இந்த மூன்று கதைகளும் அட போட வைக்கும் கதைகள்.


முத்துலெட்சுமி

எங்க பாசக்கார குடும்பத்தின் உறுப்பினர். சிறுமுயற்சின்னு சொல்லி தன்னடக்கத்தோட இருக்காங்க. இவங்களோட சுற்றுலா பதிவுகள் எல்லோருக்கும் பிடித்தமான ஒண்ணு.
ஆனால் எனக்கு இவுங்க கதைகள் ரொம்ப பிடிக்கும்.
நானா ரசனை இல்லாதவன்?
ஒரு கணவனின் பார்வையில் இருந்து எழுதியிருப்பாங்க.
உதிர்ந்த நட்சத்திரங்கள் ஒரு பெண்ணின் மெல்லிய சோகம் தவழும் கதை.


ராயல் ராம்

மாப்பி மருத தமிழ்ல எது போட்டாலும் சும்மா நச்சுன்னு இருக்கும். மாப்பி எழுதிய
சவடன் கதை கதையில சும்மா மருத தமிழுல புகுந்து விளையாடியிருப்பான். சமீபத்தில் எழுதிய காமக் கடும்புனல் தலைவர பார்த்து சூப்பர்ன்னு சொல்ல வச்ச கதை.
கவிதைகளை இடையில் சொல்லி ரொம்ப அழகாக எழுதியிருப்பாரு ராம்.

ஜி3

ஜி3 இந்த பெயருக்கு பின்னாடி ஒரு கதையே இருக்கு. நண்பர்களுக்கு பிறந்தநாளுன்னா போதும் பதிவு போட்டு கேக் எல்லாம் (எல்லாம் பதிவுல தான்) வெட்டி கலக்கிடுவாங்க. சமீபத்தில் இவுங்க எழுதிய கதை ஜி3யா இதுன்னு பல பதிவர்களை வாய் பிளக்க வைத்த ஒண்ணு. அம்புட்டு நல்லாயிருக்கும்.

அவள் டைரியிலிருந்து சில குறிப்புகள் 1..






அவள் டைரியிலிருந்து சில குறிப்புகள்.. - II


செல்வன்

செல்வனோட கதைகளை படிக்கும் போது எப்படி தான் இந்த மனுசன் இப்படி எல்லாம் யோசிக்கிறாரேன்னு தோணும் நாம யூகிக்க முடியாதா தளத்தில் இருந்து கதையை எழுதியிருப்பாரு அதில் சில...

அம்மா பிள்ளை 1

அம்மா பிள்ளை 2,

மது மங்கை மாமிசம்

தூயா

தூயா ஈழத்து பதிவர்களில் முக்கியமான நபர். இவரின் நானும் என் ஈழமும் பகுதி நான் தவறாமல் படிக்கும் பகுதி. அதில் இவுங்க சமீபத்தில் எழுதிய பகுதி இது
நானும் என் ஈழமும் 7 மாவீரர்களின் நினைவினை ஒட்டி எழுதியது.
இவுங்க எழுதிய விதையானால் முளையாகும் சிறந்த சிறுகதை. ஈழத்து தமிழில் படிக்கும் போதும் மனசு கன‌க்கும். இது ஒரு பத்திரிக்கையில் வெளிவந்த கதையும் கூட.

J.K. ஞானசேகர்

ரசிக்கும் படியான எழுத்துக்கு சொந்தக்காரர். இவரோட எழுத்து நடை மிகவும் அழகாக இருக்கும். இவரோட அத்தைமார் முத்தம் கதைன்னு சொல்லறதை விட வாழ்க்கையின் பதிவுன்னு சொல்லாம் அவ்வளவு அழகாக எழுதியிருப்பாரு.

போனஸ் கதையாக ஒன்று இவர் பேரு சரவ் வலையில மேஞ்சிக்கிட்டு இருக்கும் போது படிச்ச கதை இது முடிவில் ஒரு புதிய முயற்சி ஒன்னு செய்திருக்கிறார் பாருங்கள்
கதையில் அமைத்து எழுது!!


விட்டா இன்னும் போயிக்கிட்டே இருக்கும்...அதனால இப்போதைக்கு எஸ்கேப்பு ;)
மேலும் வாசிக்க...

Tuesday, January 1, 2008

அனுபவச்சரம்

அனுபவங்கள் சொல்லி கொடுக்குற பாடத்துக்கு இணையாக எந்த கல்லூரியிலும் எந்த புத்தகத்திலும் சொல்லி தருவதில்லை. அப்படி தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை எழுதிய பதிவுகளையும் பதிவர்களையும் தான் இன்னிக்கு நான் தொடுத்திருக்கேன்.

இளவஞ்சி

இவரை பத்தி சொல்ற அளவுக்கு நான் இன்னும் வளரல....அவரோட பதிவுகளில் நான் படிச்ச முதல் பதிவு என்ஃபீல்ட் புல்லட் இது தான் அப்படியே கன்ன‌த்துல ஒங்கி ஒரு அறைவிட்ட மாதிரி இருந்திச்சி. (ஏன் எதுக்குன்னு எல்லாம் கேட்காதீங்க) சமையல் செய்யும் போது ஏற்பட்ட அனுபவத்தை நல்ல நகைச்சுவையுடன் சொல்லியிருப்பாரு முட்டைய‌ பிச்சு பரோட்டா இது மட்டும் தான்னு நினைக்காதிங்க. புகைப்பட கலையிலும் பின்னிபெடலேடுத்துயிருப்பாரு கோவை to ஈரோடு & என் புகைப்படப் பெட்டி

இவரோட பதிவுல இருந்து ஒரு போனஸ் பதிவு. இந்த பதிவை படிக்கிறதுக்கு உங்களால முடியுமான்னு தெரியல. ஆனால் பின்னூட்டத்தில் பாருங்க அவரோட கவிதை வண்ணத்தை கலக்கியிருப்பாரு ஸ்பெசல்

கானா பிரபா

இவரோட அனுபவங்களை படிக்கும் போது கூடவே நம்மளையும் அந்த இடத்துக்கு கூட்டிக்கிடு போயிடுவாரு. அப்படி ஒரு எழுத்து நடை. அதுவும் அவரோட ஈழத்து தமிழில் படிக்கும் போது இன்னும் அழகாக இருக்கும். நாமளும் தான் சினிமா பார்த்திருக்கோம். ஆனா இவர் பார்த்த மாதிரி வருமா! மண்ணெண்ணையில் பார்த்த படங்கள், நானும் விளையாடுவேன்னு ஒரு வீர விளையாட்டு விளையாடி பரிசு வாங்கின அனுபவத்தை பாருங்க. ஆனா ஒண்ணு சிரிக்க கூடாது. விளையாட்டுப் போட்டியும் வினோத உடைக்கூத்தும் சமீபத்தில் அவர் எழுதிய தீபாவளி அனுபவங்கள் தீவாளி வருஷங்கள்....!

கீதா சாம்பசிவம்

"I want to be the same, what I am now. " எந்த மாற்றமும் இல்லாமல் இன்றுவரை அதே கிண்டல், பகிர்தலோட இருக்கும் எங்கள் தலைவி இவ‌ங்க. இவரின் பதிவுகளை படிக்கும் போது நேரடியாக பேசிக்கொள்வது போல இருக்கும். கிண்டலில் இவரை அடிச்சிக்க ஆளே இல்ல. பின்னூட்டங்களில் இவர் கொடுக்கும் பதிலும் அருமையாக இருக்கும். அதே போல பதிவுகளில் யாருக்கும் வராத பிரச்சனை எல்லாம் இவருக்கு வரும். ஆன்மீகமாக‌ட்டும்,வரலாறு ஆகட்டும்.. அவ‌ங்களுக்கு தெரிந்த விஷயத்தை பகிர்ந்து கொள்வதில் தலைவிக்கு நிகர் தலைவி தான். இவங்களுக்கு நேதாஜியும், பாரதியும் இவரின் இரு கண்கள் என்று சொல்லாம்.
திரு. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்சை பற்றி இவர் எழுதிய‌ வரலாற்று பதிவுகளில் ஒன்று. அதேபோல் ஆன்மீகத்தில் சமீபத்தில் இவர் எழுதிய‌ ஜயப்பன் பதிவுகளில் பல புதிய விஷயங்கள், பல வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் தெரிந்துக்கொள்ள முடிந்தது.


அருண்

இவர் பதிவை படிக்கும் போது எல்லாம் இவர் நம்ம ஆளுடா மச்சின்னு தோணும். ஆனா பாருங்க இப்ப எல்லாம் அந்த அளவுக்கு எழுதுறது இல்லை. இவரோட வீர விளையாட்டை கொஞ்சம் பாருங்க‌ இங்க வீர விளையாட்டு
அருண் என்ற அவரோட பெயரை ஒரு வெள்ளைக்காரன் எப்படி எல்லாம் கொலைவெறியோடு தாக்கியிருக்கான் பாருங்க துரத்து...


ஜி

இவரை பத்தி சொல்லனுமுன்னா ஒரு பதிவே போடணும்..அதுவும் அவருக்கு இருக்கும் அடைமொழி எல்லாம் சேர்ந்தா ரெண்டு பதிவு போடலாம். அம்புட்டு பெரிய ஆளு. இவரோட கதை கவிதை எல்லோரும் படிச்சிருப்பிங்க. ஆனா இவர் கல்லூரி நாட்களில் நடந்த அனுபவங்களை படிக்கும் போது நாமும் இந்த மாதிரி எல்லாம் செய்திருக்கலாமேன்னு ஒரு நினைப்பு வருப‌தை தவிர்க்க முடியல

புது வருசமா? புது வசந்தமா?

கல்லறை தீபம்...

சிக்காகோவில் குத்தாட்டம்...

தம்பி

தன்னோட அனுபவங்களை எழுதுறது ஒரு வகை. மற்றவங்களோட அனுபவங்கள் எழுதுறது இன்னொரு வகை. அந்த இன்னொரு வகையில தம்பியை அடிச்சிக்க ஆளே இல்ல. மற்றவங்களோட அனுபவங்கள் தனக்குள் எற்படுத்திய பாதிப்போட எழுதுவதில் வல்லவன். அப்படி அவர் எழுதி பதிவுகள் இங்கே

குண்டு வெடிக்கலன்னா போர் அடிக்கும்!

உழைக்க வரவில்லை, உயிர்பிழைக்க வந்தேன்

சிவிஆர் - CVR

காதல்ன்னு நினைச்சாலே போதும் நம்ம சிவிஆர் ஞாபகத்துல வந்துடுவாரு. அப்படி காதலை எல்லாம் பிரிச்சி மேய்ஞ்சி பல பாகங்களாக பதிவாக போட்ட ஆராய்ச்சி புலி இவரு. ஆனா இவர் இந்தியாவில் இருந்து அமெரிக்க வந்த அனுபவத்தை ரொம்ப அழகாக எழுதியிருப்பாரு.
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 1

துர்கா

வளர்ந்து வரும் கவிதாயினின்னு சொல்லாம். கவிதையில ஒண்ணு இயந்திர வாழ்க்கை. காமெடியிலும் கலக்குறாங்க. இவுங்க வகுப்பறையில் தூங்குவதை பத்தி இவுங்க தான் சொந்த அனுபவத்தை வச்சி எழுதியிருக்காங்க. வகுப்பில் உறங்குவது எப்படி?(A Guide for Dummies)

கனவுலக கார்த்திக்

வலைப்பதிவர் மத்தியில் மு.க.ன்னு அழைப்போம். எங்க கட்சி தலைவர், அனுபவத்தை உவமைகளோட எழுவதில் இவரை அடிச்சிக்க முடியாது. எப்படித்தான் எழுதுவாரோ இவரோட அனுபவத்த பதிவுகள் நிறைய சொல்லாம். அதில் ஒண்ணுதான் இவரோட கிராமத்து அனுபவம் அ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 1

சின்ன அம்மணி

இவுங்க என்னைப்போல மாசத்துக்கு ஒரு பதிவு இல்லன்னா ரெண்டு. இவுங்க சைக்கிள் ஒட்டிய பதிவை படிச்சிட்டு என்னோட சைக்கிள் நினைவுகளை கிளறிவிட்டவ‌ங்க. இந்தாங்க அவுங்களோட சைக்கிள் அனுபவம் கொஞ்சம் சொல்லுங்க.



நாளை சந்திப்போம்....
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது