07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 3, 2008

வலைச்சர குழுவினருக்கு ஒரு பூங்கொத்து

இனிப்பான கணேசர் - சாக்காலேட்டால் ஆனவர்



ஆயிரம் ஆயிரம் நன்றிகள்

சி. அ: அப்போ வலைச்சரத்துல நல்ல ஆரம்பம் விநாயகரோட, அடுத்ததா யாரைப்பத்தி சொல்லப்போறீங்க அப்பா?

நமக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தாங்களே அவங்களத்தான்.

பெ அ: யாரு வலைச்சர குழுவைங்களா?

ஆமாம்மா அவங்களத்தான்






அதுல மொதல்ல பொறுப்பாசிரியர் சீனா சார்.




இவரு ஆரம்ப காலத்திலே யாரும் நம்பள அதிகமாக படிக்காத காலத்திலேயே, "காண்டு கஜேந்திரனாட்ட" பதிவு போட்டுட்டு உட்கார்ந்திருந்த காலத்திலேயே வலைச்சரத்துல ஆன்மீக பதிவர்ன்னு அடையாளம் காட்டினவரு சீனா ஐயா.

(பெரிய அம்மணி மனதுக்குள் - ஆமா! இப்ப மட்டும் என்ன வாழுது, "கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து உக்காந்து டைப் அடிச்சு இடுப்பு வலி வந்ததுதான் மிச்சம்")

சி அ: அப்பா அவரு ஒரு துப்பறியும் வேலை செய்தாருன்னு சொன்னீங்களே அது என்னப்பா?

நானே மறந்து போன என்ற பழைய வலைப் பதிவுல போய் நம்பளோட விவரம் எல்லாத்தையும் படிச்சு வலைசசரத்தில எழுதின பொறுப்பானவரு அவரு.

பெ.அ : அப்படீன்னா பொருத்தமானவரைத்தான் வலைச்சர பொறுபாசிரியரா போட்டிருக்காங்கன்னு சொல்லுங்க.


அதுல என்ன சந்தேகம், அந்தோணி முத்துக்கு அருமையாக
இறைவனின் குழந்தைக்கு நாற்காலி
வழங்கியதில் இருந்து அவர் நல்ல உள்ளம் புரிந்திருக்குமே?

சி. அ : சரிங்கப்பா, இனி அவரு எழுதுற வலைப்பூவைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்கப்பா?

"தமிழ் கற்றவனின் மலரும் நினைவுகள் ஞாபகம் வருதே !! ஞாபகம் வருதே !! " அப்படீன்னு "அசை போடுதல்" லுங்கற வலைப்பூவில் எழுதிட்டு வர்ராரு" .



அதுல வைகையில் வந்திறங்கிய வள்ளல் அழகர் பதிவுல சூப்பரா கவிதை எழுதியிருக்காரு.



பெ. அ: இதைத்தவிர மதுரை நகரம்ன்னு ஒரு குழுப்பதிவிலயும், படித்ததில் பிடித்ததுங்கற பதிவும் போடறாங்க.



சி. அ: இவ்வளவு அருமையா சேவை செய்ய்ற சீனா அங்கிளுக்கு தேங்ஸ் சொன்னீங்களாப்பா.

சொலாம எப்படிம்மா இருக்க முடியும், இப்பதிவுல அவருக்கும் மற்ற பல அன்பர்களுக்கும் தேங்ஸ் சொல்லியிருக்கிறேன் எந்தரோ மகானுபாவுலு! அந்தரிகி வந்தனமுலு!!


"இன்று மதுரையம்பதியில் புதுமனை புகும் சீனா சாருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எங்கோனும் எங்கள் பிராட்டியும் சகல நலங்களையும், வளங்களையும் அளித்து அருளுமாறு வலையுலக அன்பர்கள் அனைவர் சார்பாகவும் பிரார்தித்துக் கொள்கிறோம்."


***



பெ. அ : இனி நான் முத்து லக்ஷ்மி -கயல்விழி அக்கா பத்தி சொல்லட்டுமா? இவங்க டெல்லிக்காரங்க , சாப்பிட வாங்க ன்னு கூப்பிட்டு, சமையல் குறிப்பு எழுதறாஙக.




அடுக்களையில்!




சமைக்கிறவங்க!




ன்னுட்டு துணைத் தலைப்புகள் எல்லாம் அருமை.



சி. அ : தேன் கிண்ணம்ங்கற சினிமாப் பாடல்களுக்கான பதிவிலயும் எழுதறாங்க.




இந்த வலைப்பூவில தன்னை தேனீன்னு சொல்லிக்கிறாங்க இவங்க. வாரம் ஒரு பாடகர் இவ்வலைப்பூவில் வார நட்சத்திரமாக மின்னுகிறார்.



க்ளிக்க்ளிக்ங்க்ற வலைப்பூவிலே கேமிராக் கவிதைகள்ன்னு அருமையான புகைப்படங்களை பதிவு செய்திருக்கறாங்க.




நேரம் கெடைக்கறப்ப போய் படம் பார்த்துட்டு, பாட்டு கேட்டுகிட்டே பலகாரம் சாப்பிடலாம் போல இருக்கே.





சி. அ : அப்பா நாந்தான் பொன்ஸ் -பூர்ணா ஆன்ட்டி பத்தி முதல்ல சொல்லுவேன், யாணைகள்ன்ன இந்த ஆன்டிக்கு ரெம்ப புடிக்கும் போல அதனாலதான் , இவங்க அமெரிக்காவிலிருந்து எழுதுவதில்லை பிளிறுகிறாங்கோ,




தமிலிங்கிலிசில் எழுத வேண்டாம் தமிழில் சிந்தியுங்கள் என்று அறிவுரை கூட சொல்லறாருங்கோ. ( நமக்கு மட்டும் ஒரு வாரத்துக்கு விலக்கு கொடுத்துருங்கோ பொன்ஸ்)









எல்லாத்தையும் நீங்க ரெண்டு பேருமே சொல்லிட்டீங்களேன்னா



, கூட்டா சிரிக்கறாங்க என்ன பண்ணறது சொல்லுங்க?



இவங்களை உட்டாலெ இதுதாங்க பிரச்சனை.



பெ அ : அடுத்தவங்க சிந்தா நதி அவர்கள்,




மூன்று வருடங்கள் பத்து மாதங்கள், இலட்சத்திற்க்கும் மேற்பட்ட பார்வைகள் என்று வால் நட்சத்திரமாக மின்னுகின்றாங்க இவங்க.



சி. அ : என்ன சிந்தாமணியா அது நம்ம ஊரு சூப்பர் மார்க்கட ஆச்சே, எப்பருந்து அது எழுத ஆரம்புச்சுச்சு.




பெ. அ: யேய் காது செவுடா, சிந்தாமணி இல்ல சிந்தா நதி




சி. அ : சரி சரி, இவங்களோட வானம் அருமை.




நடசத்திரங்கள் கண் சிமிட்டும் அழகே அழகு,




மூணு மெழுகு வர்த்தி சூப்பரோ சூப்பர்.




இவருடைய எழுத்துக்கள் எப்படீன்னு இவங்களே சொல்லறாங்க பாருங்க "எண்ணச்சுழலில் எதிர்நீச்சலிட்ட எழுத்துப்படிமங்கள்...!"



நீங்க ரெண்டு பேருமே சொல்லிட்டுப்போனா எப்படி நானும் கொஞ்சம் சொல்றேனே!!!!

என்று கெஞ்ச எனக்கும் ஒரு சான்ஸ் கெடச்சுது,



இந்தியா பெற்ற முதல் தங்கப் பதக்கத்தை இப்படி எழுதுறாங்க இவங்க பொன்(ஸ்) பதக்கம்.



வலைச்சர அன்பர்களின் புகழை இதுவரை பொறுமையாக படித்த அன்பர்களுக்கு நன்றி, பதிவு கொஞ்சம் நீளமாகி விட்டது ஆனாலும் நன்றி மறப்பது நல்லதல்லவா எனவே பொறுத்துக் கொள்ளுங்கள்.




அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம். அது வரை நன்றி கூறி விடை பெறுவது "உங்கள் கைலாஷிஸ்". ( மூன்று பேர் அல்லவா).




****************


முதல் பதிவில் துளசி டீச்சர் ஒரு நல்ல ஐடியா கொடுத்தார்கள். வாரம் முழுவதும் "சிவ சிவான்னு" இருக்கட்டுமுன்னு அதனால தினமும் திருக்கயிலை நாதரின் சில தரிசனங்களை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இன்றும் வாம தேவ முகம் எனப்படும் எம்பெருமானின் வடக்கு திருமுகத்தின் சில தரிசனங்கள்.








வாம தேவ முகம்:



மாதர் முகம் போல் ஆபரணமணிந்து வெட்சிபூ நிறமாய் இடத்தோளின் மீது வடக்கு நோக்கி இருக்கும் முகம், பஞ்ச பூதங்களில் நீரை குறிக்கின்றது. ஐந்தொழிலில் காத்தல் தொழிலைக் ( விஷ்ணு ஸ்திதி காரண முகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் 'ம'. அம்மை ஆதி சக்தி, .கையிலங்கிரியிலே மிகவும் ஸ்பஷ்டமாய் தரிசனம் தரும் முகம் இம்முகம். மேலே நாகம் குடைப்பிடிக்க இடப்பக்கத்தில் அம்மையையும் அப்பரும் சிவ சக்தியாக தரிசனம் தரும் முகம் இதுதான். முக்கண் முதல்வரையும் மலையரசன் தன் பொற்பாவையையும் ஒரு சேர இம்முகத்திலே தரிசனம் செய்கின்றோம். கயிலாயம் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் முகமும் இதுதான். இம்முகத்தை






வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நம: ஸ்ரேஷ்டாய நமோ ருத்ராய நம: காலாய நம: கலவிகரணாய நமோ பலவிகரணாய நமோ பலாய நமோ பலப்ரமதாய நமஸ்-ஸர்வ-பூததமநாய நமோ மநோந் மநாய நம:






என்னும் உத்தர வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் துதி செய்கின்றோம்








River flowing from the Holy feet of Siva Sakthi -சிவ சக்தி பாதத்திலிருந்து பெருகி ஓடி வரும் கருணை என்னும் ஆறு






Siva & Parvathi Darshan - சிவ சக்தி தரிசனம்






Snake Hood at the top of North face - நாகக் குடை எம்பெருமானுக்கு












The above is the view of Kailash during the month of June( when there is slight snow fall) -ஜூன் மாதத்தில் பனி பொழியும் சமயத்தில் திருக்கயிலாய தரிசனம்

மேலும் வாசிக்க...

Tuesday, September 2, 2008

விநாயகர் சதுர்த்தி சிறப்பு மலர்





அற்புத கீர்த்தி வேண்டின்



ஆனந்த வாழ்க்கை வேண்டின்



நற்பொருள் குவிதல் வேண்டின்



நலமெல்லாம் பெருக வேண்டின்



கற்பக மூர்த்தி தெய்வக்



களஞ்சியத் திருக்கை சென்று



பொற்பதம் பணிந்து பாரீர்



பொய்யில்லை கண்ட உண்மை.

கவிஞர் கண்ணதாசன்




ஸ்ரீ கற்பக விநாயகர் எனக்கு மங்களம் தந்தருள்க! ஆறுமுகப்பெருமான் எனக்கு மங்களம் தந்தருள்க! ஸ்ரீ மகேஸ்வரரும் எனக்கு மங்களத்தைத் தந்தருள்க!



ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் குடி கொண்டு யானை முகமும், நான்கு தோள்களும், பெருத்த தொந்தியும் வாய்ந்தவரான ஸ்ரீ கற்பக விநாயக மூர்த்தியை நான் தொடங்கும் சகல காரியங்களும் எந்தவித விக்கினங்களும் ஏற்படாமல் நிறைவேறுவதற்காக வணங்குகிறேன்.





மங்கள முகம் வாய்ந்த ஸுமுகன்




ஒற்றைக்கொம்பையுடைய ஏகதந்தன்



கபில நிறம் வாய்ந்த கபிலன்



யாணைக் காதுகள் உள்ள கஜகர்ணன்



பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரன்



குள்ளத்தோற்றமுள்ள விகடர்



சகல விகனங்களுக்கும் ராஜாவான விக்னராஜன்



துஷ்டச் செயல்களையும் இடையூறுகளையும் நீக்குவதில் வல்லவரான விநாயகன்.



நெருப்பைப் போல ஒளி வீசித் திகழ்பவரான தூமகேது.



பூதகணங்களுக்கு தலைவராக விளங்கும் கணாத்யக்ஷன்



நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடியவரான பாலச்சந்திரன்



யாணை முகத்தியுடைய கஜானனன்.



வளைந்த துதிக்கரமுள்ள வக்ரதுண்டன்



முறம் போல அகலமான காதுகள் உள்ள சூர்ப்பகர்ணன்.



தம்மை வணங்கி நிற்கும் பக்த கோடிகளுக்கு அருள் பொழியும் ஹேரம்பன்.



கந்தபெருமானின் தமைனாயரான ஸ்கந்த பூர்வஜன்.



இவ்வாறு சொல்லப்படும் விநாயகப்பெருமானின் பதினாறு திருநாமங்களையும், வித்தைகளைக் கற்கத் தொடங்கும் போதும், வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போதும், போர்க்காலத்திலும், இன்னல்கள் வந்த போதும், யாராவது வாசித்தாலும், அல்லது செவி குளிரக் கேட்டாலும் அவர்களுக்கு எந்த வித விக்கினங்களுமே சம்பவிக்காது.





அன்பர்கள் அனைவருக்கு இனிய "விநாயகர் சதுர்த்தி" நல்வாழ்த்துக்கள். அந்த விக்னவிநாய்கர் தங்களுக்கும் தங்கள் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் நல் அருளை வழங்குமாறு பிரார்த்திக்கின்றேன்.



****************



சி. அ : சூப்பர்ப்பா! விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு ஒரு நல்ல பதிவு போட சான்ஸ் கெடச்சதுக்கு.



பெ. அ: விநாயகரைப் பத்தி ஏதாவது சொல்லுங்களேன்.



விநாயகப் பெருமானும் ஒரு எழுத்தாளர் தான்னு நெறையப் பேருக்கு தெரிஞ்சுக்காது.



சி. அ: ஆஹா, அப்படியா, எந்த கதைப்பா எழுதுனாரு அவரு.



பெ. அ : இது கூடவா தெரியல்ல?



சி.அ : (ஆமாம்மான்னுடு சிரிக்கறா) , ஏமாந்திட்டயா, நல்லாவே தெரியும் அவரு மஹா பாரதத்தை எழுதினாருன்னு.



ஆமா, வியாச மஹரிஷி கூறிய பாரதத்தை, அவர் கூறிய வேகத்திற்கு எழுத யாராலும் முடியவில்லையாதலால் கணபதி தானே வந்து எழுதியருளினார்.



சி. அ: அம்மா நீங்க சொல்லுங்க , விநாயகர் எதால மஹாபாரதத்தை எழுதினாரு.



பெ. அ: பெரிய கேள்வி கேட்டுட்ட போ?



சி. அ: அதெல்லாம் முடியாது பதில் சொல்லுங்க.



பெ. அ : கஜாமுகாசூரனைக் கொன்ன தன்னோட ஒத்தை கொம்பாலதான் அவ்வளவு ஸ்பீடா எழுதுனாறு அது கூடவா எனக்குத்தெரியாது.


சரி ரெண்டு பேருமே புத்திசாலிகதான். இன்னைக்கு யாரைப்பத்தி சொல்லப்போறேன்னு சொல்லுங்க பார்க்கலாம்.



ரெ. பே: எங்களுக்கு தெரியாதா, உங்களுக்கு புடிச்ச யாராவது ஒரு ஆன்மிகப் பதிவரத்தான்.



இல்லையே, இன்னிக்கு ஆண்டவன் புகழ் பாடும் பதிவுகளைப் பத்தி சொல்லப்போறேனே.



சி. அ : அப்படியும் பதிவுகள் இருக்குதாப்பா ?.



ஆமாம்மா நெறைய இருக்கு, பல்வேறு அன்பர்கள் ஒண்ணா சேர்ந்து இது மாதிரிக் குழுப்பதிவுகள் எழுதுறாங்க.



பெ. அ: அதுல்ல எதை முதல்ல சொல்லப்போறீங்க. கண்ணன் பாடல் பதிவைப்பத்தித்தான்.



இந்த அன்பர்கள்தான் கண்ணன் பாட்டு பாடறவங்க


கண்ணபிரான்



மடல்காரன்

ஷைலஜா


மலைநாடான்


தி. ரா. ச.(T.R.C.)


கவிநயா


குமரன் (Kumaran)


dubukudisciple Raghav


இவங்க எல்லாரும் சேர்ந்து படைக்கிற விருந்துதான் கண்ணன் பாட்டு. நூறாவது பதிவில் கன்னட பாடல் "கிருஷ்ணா நீ பேகனே வாரோ" பாடலின் தமிழ் மொழி பெயர்ப்பு, பாடல் ஒரு அன்பர் பாடறவங்க ஒருவர், தனி முத்திரை அப்படின்னு கலக்கிட்டாங்க.

சி. அ: நெஜமா எல்லாரும் போய் பாக்க வேணுங்கற வலைப்பூவுன்னு சொல்லறீங்களா அப்பா?

நிச்சயமா, அதுல என்ன சந்தேகம்.

சி . அ: நூத்துக்கு மேல பதிவுகள் இருக்கறதுனால இதை முதல்ல சொன்னீங்க இல்ல அப்பா.

ஆமாம்மா முதல் முதல்ல ஆரம்பச்சதினாலயும் சொன்னேன்மா.


பெ . அ : அப்ப அடுத்து முருகனருள் பதிவைப்பத்திதான சொல்லபோறீங்க.

கரெக்ட்டா யூகிச்சிட்டியே

சி அ: உங்க பேரு அதுல வருதே அதனால தான அப்பா

விளையாடதம்மா அடுத்ததா நூறாவது பதிவைத் தொடப்போறாங்கறதால முருகனருளை ரெண்டாவதா சொல்றேம்மா.

பெ. அ: யார் யாருங்க இதுல காவடி சிந்து பாடறாங்க?



இரவிசங்கர் கண்ணபிரான்




குமரன் (Kumaran)

VSK

நாமக்கல் சிபி

SP.VR. SUBBIAH

G.Ragavan

தி. ரா. ச.(T.R.C.)

இவங்கதாம்மா அந்த முருக பக்தர்கள்.

சி. அ : திருமாலையும் அவரது மருகரான வேலனையும் பாடறவங்களைப் பத்தி சொல்லியாச்சு அடுத்து யாருப்பா?

அலையாழி அரிதுயிலு மாயனது தங்கையை ப்பாடறவங்களைப் பத்தி சொல்லலாம்மா?

பெ. அ: சரி, அம்பாளைப்பத்துன பாடல்கள் உள்ள வலைப்பூ கற்பூர நாயகியே கனகவல்லி தானேங்க?

ஆமா, அதுல அம்மன் புகழ் பாடுறவங்க

KRS கண்ணபிரான்



கவிநயா

குமரன் (Kumaran)

VSK

அன்புத்தோழி

சி. அ: இப்பதிவுல எனக்கு கவிநயா ஆன்டியோட கவிதைகள் நல்லா புடிக்கும்.

பெ. அ : எனக்கும் தான்.



அடுத்தது சிவன் பாட்டைப்பத்தி சொல்லலாமா? அன்பே உருவான கயிலை நாதரின் பாட்டுகளைக்கொண்ட இவ்வலைப்பூ இப்பத்தான் ஆரம்பிச்சாங்க.

சி.அ : வலைப்பூவோட பேரு சிவன் பாட்டு

நமச்சிவாயருக்கு மங்களம் பாடறவங்க

சிவன் பாட்டுல KRS ஐயா தேவாரம், திருவாசகம் எல்லாத்துக்கும் அருமையான விளக்கங்கள், அதை விட அருமையான படங்கள்ன்னு கலக்குறாங்க.
பெ அ: மனசுக்குள் ( ஆமா, எம் புருஷனும் கச்சேரிக்கு போறேன்னுட்டு, ஒத்தப் பதிவைப் போட்டுட்டு, ஜாலியா உக்காந்து வலைச்சரத்துல எழுதிகிட்டு இருக்கிறீங்க)
*********


சன்மத காவலர் KRS ஐயாவுக்கும் மற்ற அன்பர்களுக்கும் இந்த விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு ஒரு விண்ணப்பம், ஐயா ஆதி சங்கரர் ஸ்தாபித்த சன்மதங்களில் நான்குக்கு வலைப்பூ இருக்கு. விநாயகருக்கு இன்றைக்கு ஆரம்பியுங்களேன். அடியேனும் கலந்துக்கறேன்.
வித்தக விநாயக விரைகழல் சரணே.
மேலும் வாசிக்க...

பாரத இரத்தினங்கள்

தங்கத்தாமரை



சின்ன அம்மணி: அப்போவ்! எந்த வலைப் பதிவரை முதல்ல சொல்லறதா உத்தேசம்?

ஒரு பாரத ரத்தினத்தை முதன்முதலா அறிமுகம் செய்யலாமா அம்மா?

பெ. அ: சரிங்க, யாருங்க அந்த பாரத ரத்தினம் .

நம்ம பாரத திருநாட்டுக்கு ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கம் வாங்கிக் கொடுத்தாரே அவருதான்மா அந்த பெருமைக்குரியவரு .

சி அ : ஓ நான் கண்டு பிடிச்சுட்டேன் . அபிநவ் பிந்த்ரா தானேப்பா , அவ்ருதானே 10 மீ துப்பாக்கி சுடும் போட்டியில இந்த சாதனையை நிகழ்த்தினாரு, அவரையாப்பா.

ஆமாம்மா அவ்ரும் ஒரு வலைப்பூ எழுதுகின்றார். ஆனால் ஆங்கிலத்தில். ஆயினும் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் அவரப் பார்த்து அவரோட வலைப்பூவை படிச்சு இன்னும் தங்கப் பதக்கங்களை இந்தியாவுக்காக வாங்கி குவிக்கணுன்னு அவரோட வலைப்பதிவை முதலில் எல்லோருக்கும் சொல்லலாமமா.

பெ.அ : சபாஷ் சரியான தேர்வு



அவரு தங்கப் பதக்கம் வாங்கினதுக்கு அடுத்த நாள் இட்ட பதிவு இது.


They have all been telling me what a huge achievement winning Gold is. I realise that but frankly the enormity of the goodwill generated has caught me by surprise. Honestly enough it really has not changed me, I am still the same Abhinav who just a day ago was hanging around alone in my room in the Olympic village. Frankly, all the attention is a bit overwhelming. I am not much good at making loud public pronouncements. That in no way means that this is not the most intense experience of my life.

For more than a decade now my life has been all about my sport. In fact, I do not have a life beyond the confines of the 10m range. I have had a range built in my own home to cut down any possibility of distraction and to be able to practise my sport whenever the fancy strikes me. It all did pay off, didn't it?







It has all still not sunk in. I will post more once the feeling settles.

I ran away from all the media and official attention yesterday after I had done the bit I had do in keeping with my new-found status. Instead I chose to go to a quiet dinner with some friends.

I would like to reiterate that everyone who represents India at the Olympic Games has put in years of toil and sweat. I ask the Indian people to support our athletes more. It is fine to celebrate our achievements but it is just as important to keep up the backing when we are not on top of our game.

It is important for India to do better at Olympic sport as these are the true measure of a nation's sporting depth. I wish more private initiatives come up with corporate support apart from the backing of the government. The joy that the nation feels at my win is humbling. I just wish that this is repeated more and more often.






With our depth of talent and expanse of people I firmly believe India can be a world-class sporting power. What we need are precise systems. I will try to do my bit at grooming the next generation. I would like to appeal to each Indian to also do their bit in prodding us out of sporting complacency.

இன்னும் அவரது கருத்துக்களைப் படிக்க கிளிக்குங்க பாரத ரத்தினம்





மற்றும் குத்துச்சண்டையில் வெங்கலப்பதக்கம் பெற்ற விஜேந்திரருக்கும் , மல்யுத்தத்தில் வெங்கலப்பதக்கம் வென்ற சுசில்குமாருக்கும் வாழ்த்துக்கள்.







வலைச்சரத்தில் தமிழ் வலைப் பதிவர்களை அறிமுகம் செய்வதுதான் மரபு என்றாலும் எல்லா விதிக்கும் ஒரு விதி விலக்கு உண்டு என்று அனுமதி பெற்று நம் தாய் திருநாட்டின் பெருமையை உயர்த்தியவரின் ஆங்கில வலைப் பூவை அறிமுகம் செய்திருக்கின்றேன் அன்பர்களே ஒன்றும் தப்பில்லையே? தப்பா இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்கண்ணே.


மறுபடியும் நாளைக்கு ஒரு சிறப்பு மலரோட சந்திக்கறோங்க.





மேலும் வாசிக்க...

Monday, September 1, 2008

சின்ன அம்மணி! பெரிய அம்மணி!!

(நன்றி KRS)





இன்று காலை தங்கமணியும் ( இனி மேல் பெரிய அம்மணி), பாப்பாவும் ( இனி மேல் சின்ன அம்மணி) ரொம்ப கோபமாக வலைச்சர பதிவு எழுத கணணி முன்னே உட்கார்ந்திருந்த என் முன் வந்து நின்றார்கள் அப்போது நடைபெற்ற ஒரு சுவையான ( உங்களுக்கு ஆபத்தான) உரையாடல்.
-----------------------------------------


என்னம்மா? என்னாச்சு ரெண்டு பேரும் இப்படி வந்து மொரச்சுகிட்டு நிக்கறீங்க, என்ன பிரச்னை?

பெரிய அம்மணி: : ஹூம் நீங்க ஒன்னும் பேச வேண்டாம் போங்க. ஆமா நீங்க மட்டும் தனியா வலைச்சரத்துல பதிவுகளப் போடப் போறீங்களாமா?

அப்படின்னு யார் சொன்னாங்க?

பெரிய அம்மணி: எப்படியோ தெரிய வந்தது, நாங்களும் எழுதப்போறம் உங்களோட.

நாங்களா? இன்னொன்னு யாரு?

பெரிய அம்மணி: நானும் பாப்பாவும் தானுங்க.

சின்ன அம்மணி: ஆமாம்ப்பா, அபி அப்பா மட்டும் அபிபாப்பாவுக்கு பதிவு போட சான்ஸ் குடுத்திருக்காரு, நீங்க மட்டும் எனக்கு ஏன் சான்ஸ் தரமாட்டீக்கரேங்க?

அப்படியா நல்ல ஐடியாவா இருக்கே யோசிக்கிலாம்.

பெ. அ : யோசிக்கிறது, கீசிக்கறது எல்லாம் இங்க நடக்காது. நாங்களும் சேர்ந்து எழுதுறம் இல்லேனா நீங்க எழுதக்கூடாது.

அம்மணி ஆர்டர் போட்டுட்டா அதுக்கு அப்பீல் ஏது? ஒத்துக்கறேன்.

சின்ன அம்மணி: நீங்கதான் ஆன்மீகப் பதிவு மட்டுந்தான போடறீங்க, மத்த பதிவுகள நாங்க படிச்சு உங்களுக்கு ஹெல்ப பண்ணவோமல்ல.

அதுவும் நல்ல ஐடியாதான் நாம மூணு பேரும் சேர்ந்தே வலைச்சரப் பதிவுகளைப் போடலாம்.


அப்ப நாங்க ரெடி ( உங்களை போரடிக்க) நீங்க ரெடியா? ( அதைப் பொறுத்துக்க)
--------------------------


ஆமாங்க மூணு பேராக உரையாடுவது போல் பதிவுகளை அமைக்க எண்ணியுள்ளேன். ஆன்மீகம் சம்பந்தபட்ட பதிவுகளையே இதுவரை அதிகம் படித்திருக்கின்றேன், மற்ற பதிவுகளை சிறிதாக நோட்டம்தான் இட்டுள்ளேன் என்பதால் ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் பதிவர்களின் பதிவுகளை விட அவர்களின் தனித்தன்மையை சுட்டிக் காட்ட எண்ணம். வந்து படித்து ஊக்குவிக்குமாறு வேண்டுகிறேன்.

என்னங்க தங்கமணிக்காக தனிப்பதிவான்னு யோசிக்கிறீங்களா? உங்க ஊகம் கரெக்ட் தாங்க. திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொன்னத அப்படியே நம்பிட்டு நடுக்கடல்ல இருந்துட்டு சம்பளம் வாங்கற அடியேனோட குடும்பக் கப்பலை செலுத்தற மாலுமி என்ற பெரிய அம்மிணி தாங்க.

லீவுல வரும் போது கூட வீட்டுக்கு வேணுங்கற பொருள் எல்லாம் வாங்கறது அவங்கதாங்க. வியட்நாம் வீடு பாட்டுல வர

ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் வந்துமெண்ண
அதில் வேரென நீயிருந்தாய் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்


ன்னு வர வரிகள் எங்களுக்காகவே எழுதுனுங்க. அதானால இந்த வலைச்சர பதிவுகள் அத்தனையும் பெரிய அம்மணிக்கும் என் அன்பு மகள் சிறிய அம்மணிக்கும் சமர்ப்பணம்.




புதுகைக் தென்றல் போல புயலாக வீச ஆசையாத்தான் இருந்தது எதிர் பாராத விதமாக வெளியூர் செல்ல நேரிட்டதால் முதலில் மந்தமாகத்தான் இருக்கும் போகப் போக வேகத்தைக் கூட்ட முயற்சி செய்கின்றேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள் அன்பர்களே.



இப்பதிவுல
" பூவிலே சிறந்த பூ என்ன பூ"?

"சிரிப்பு"

என்பதால் , மிகுந்த நகைச்சுவையாக எழுதும் ஒரு அன்பரையும், வலைச்சரத்தில் புயலாக வீசிய ஒரு பூவையையும் அறிமுகம் செய்துள்ளேன். அடுத்த பதிவில் இருந்து முழுமையான பதிவாக இடுகிறேன், வந்து படித்து வாழ்த்துங்கள்.
மேலும் வாசிக்க...

வாங்கண்ணே! வாங்க அம்மிணி! வணக்கமுங்கோ!

Holy Kailsh like Rising sun between vajrapani and avalokeshwara - உதய சூரியன் போல் திருக்கயிலாயம்



அன்பு வலையுலக நண்பர்களே,

வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் "தமிழ் வலைப்பூ கதம்பம்" வலைச்சரத்தில் ஆசிரியராக இருக்கும் படி அழைத்துள்ளார் சீனா ஐயா.

வலைப்பதிவுகளில் கலக்கிக் கொண்டிருக்கும் எவ்வளவு அன்பர்களை முடியுமோ அவ்வளவு அன்பர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும் ஒரு பெரிய பொறுப்பை, குருவி தலையில் பனங்காயை வைத்தது போல வைத்துள்ளார் அவர்.


முதற்கண் அவருக்கும் வலைச்சரத்தை ஆரம்பித்து இவவாறு சேவை செய்து வரும் , முத்துலக்ஷ்மி-கயல்விழி, பொன்ஸ்- பூர்ணா, சிந்தாநதி ஆகியோருக்கும் அனந்த கோடி நன்றிகள்.

முதல் பதிவில் சுய புராணம் பாடலாம் என்று அனுமதி தந்திருக்கிறார்கள் எனவே ஒரு சிறு அறிமுகம். அடியேன் ஒரு சிறு தொண்டன். பெற்றோர்கள் இட்ட நாமம் திருமுருகானந்தம், அது பள்ளியில் சென்ற போது முருகானந்தமாக சுருங்கியது. தற்போது கைலாஷி என்ற பெயரில் பதிவிடுகின்றேன். என்னடா ஒரு 'இகார' விகுதி அதிகமாகி விட்டதே என்று தோன்றுகிறதா? அது காரணப்பெயர்.



மாபெரும் கருணைக் கடலாம் அன்பே வடிவான முக்கண் முதல்வனும், மலையரசன் பொற்பாவையும் இந்த நாயேனையும் ஒரு பொருட்டாக மதித்து தங்கள் திவ்ய தரிசனம் தந்தருளினார்கள் அதற்கு கைமாறாக இட்டுக் கொண்ட பெயர் இது. திருக்கைலாயம் தரிசித்தவன் என்ற அர்த்தமும் கொள்ளலாம்.

இனி அடியேன் பதிவுகள் பற்றி ஒரு சிறு குறிப்பு.
கிடைத்தற்கரியது மானிடப்பிறவி, இப்பிறவியில் மட்டுமே நாம் பூரண சரணாகதி செய்து , சீவனாகிய நாம் 'சீ' யில் உள்ள ஆணவமாம் கொம்பைத் தொலைத்தால் நாமே சிவமாகலாம். அதாவது, பிறப்பு, இறப்பு என்னும் இந்த சம்சார சாகரத்தை கடந்து மோக்ஷம் அடையலாம் என்ற உணர்வுடன்,

.......அகண்டாகார சிவ
போகம் என்னும் பேரின்ப வெள்ளம்
பொங்கித் ததும்பிப் பூரணமாய்
ஏக உருவாய் கிடக்குதையோ!
இன்புற்றிட நாம் இனி எடுத்த
தேகம் விழுமுன் புசிப்பதற்குச்
சேர வாரும் செகத்தீரே!

என்றபடி அந்த ஆண்டவன் தந்த திவ்ய தரிசனங்களை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆன்மீகப்பதிவுகள் எழுதுபவன். எனவே வந்து தரிசிப்பவர்களும் மிகவும் குறைவுதான்.


திருக்கயிலாய யாத்திரை மிகவும் கடினமானது என்று ஒரு அபிப்பிராயம் அனைவரிடமும் உள்ளது, ஆனால் அவ்வாறு இல்லை, தூய மனதுடன் "அம்மையப்பா தங்கள் தரிசனம் வேண்டும்" என்று பிரார்தித்தால் போதும் அவரே கையைப் பிடித்து அழைத்து சென்று எப்படி அற்புத தரிசனமும் கொடுத்து அனுப்புகின்றார் என்பதைக் கூறும் பதிவுதான் திருக்கயிலாய யாத்திரை


அம்பலத்தாடும் அரசரின் அருளையும், அருமையையும், அழகையும், " ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே" என்ற திருஞான சம்பந்தரின் வாக்கை வேத வாக்காகக் கொண்டு புனையும் பதிவுதான் அம்பலத்தரசே அருமருந்தே



அஹோபில திவ்ய தேசம் சென்று வந்தவுடன் ஆரம்பித்த பதிவு, பின்னர் விஷ்ணு சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் நரசிம்ஹர் என்னும் இப்பதிவுகளில் காணலாம். பெருமாளை கருட வாகனத்தில் த்ரிசித்தவர்களுக்கு மறு பிறவி இல்லை என்பது ஐதீகம். அந்த பொன் மலையாம் கருடன் மேல் கரும்புயலாம் திருமால் பல திருக்கோவில்களில் பவனி வரும் அழகையும், அது தொடர்பான பல ஐதீகங்களையுக் கூறும் பதிவு. மற்ற பதிவுகளை விட அதிகம் அன்பர்கள் தரிசிக்கும் பதிவு இது கருட சேவையும் தமிழுக்கு தகைமை சேர்க்கும் அத்யயனோற்சவம் பற்றிக்கூறும் வலைப்பூ வைகுண்ட ஏகாதசியும் இதனுள் அடக்கம்.


காஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி என்று பாரத தேசமெங்கும் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஜகத் ஜனனி, ஜகன் மாதா, மஹா திரிபுர சுந்தரி, அன்னையின் அருளை, அழகை,மாப்பெரும் கருணையை இயம்பும் பதிவுதான் நவராத்திரி நாயகி


சிறு வயதில் மார்கழிப்பனியில் அதிகாலையில் எழுந்து ஓடி உடுமலைப்பேட்டை பிரசண்ட விநாயகர் ஆலயத்தில் சேவித்த திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விட்டதால் அதற்காக இட்ட பதிவுகள் திருப்பாவை மற்றும திருவெம்பாவை


இனி அடுத்த பதிவில் இருந்து வலைப்பதிவர்களின் அறிமுகம் ஆரம்பம்.


" பூப் பூவா பூத்திருக்கு (வலை) பூமியிலே ஆயிரம் பூ அவற்றின் நறுமணத்தை உணர வாரும் வலை உலகத்தோரே"


என்று கை கூப்பி தாழ்மையுடன் அழைக்கின்றேன். அன்பர்கள் அனைவரும் வந்து படித்து இன்புறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

******************

இந்திர ஜாலம் மஹேந்திர ஜாலம்

எம்கோனும் சூரியனும் இணைந்து அளிக்கும் அற்புத ஜாலம்

வாம தேவ முகம் என்றழைக்கப்படும் சிவபெருமானின் வடக்கு நோக்கிய முகத்தில் சூரியன் நடத்தும் அற்புத ஜாலத்தைக் கண்டு களியுங்கள் அன்பர்களே.




இந்திர ஜாலத்தின் துவக்கம்




வர்ண ஜாலத்தின் அடுத்த கட்டம்


அடி முதல் முடி வரை சூரியக்கதிர்கள்








Full of red - அருண நிறத்தில் எம்பிரான்




Golden yellow Hued Lord Shiva - தங்கமென மின்னும் எம்பெருமான்





Lord in His usual self - சுவேத வர்ணேஸ்வராக
எப்படி இருந்தது வர்ணஜாலம்??
"கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாத கண்டேன்."
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது