07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, April 4, 2009

05.04.09 - வைடூரியச்சரம் - (Cat's Eye )- நவரத்னங்கள் விடைபெறுமின்றன

வணக்கம் !! இந்த வாரத்தொடக்கத்தில் இருந்து வலைச்சரம் தொடுக்க எனக்கு வாய்ப்பு அளித்த சீனாஜி க்கு எங்களுடைய நன்றியை தெரிவித்து கொண்டு நவரத்தினங்களை பற்றி நானும் நிறைய அறிந்துக் கொள்ள வாய்ப்பு கொடுத்தமைக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறோம். இந்த வாரங்களில் இட்ட பதிவுகளை வரிசைப்படுத்த விரும்புகிறேன்....



நவரத்தினங்களின் தொகுப்பு - (Summary)


30.03.2009 முத்துச்சரம் – (pearl ) – பார்வைகள்

31.03.09 – வைரச்சரம் (Diamond)-பிடித்த எழுத்துக்கள்

01.04.09 - ரத்தினச்சரம்-(lapiz lazuli) புதிய பதிவர்கள்

02.04.09 - மாணிக்கச்சரம் (Ruby) - பிடித்த பெண் எழுத்தாளர்கள்

03.04.09 – பவளச்சரம் (coral ) - பழப்பச்சடி

04.04.09 – கோமேதகச்சரம் – (Sappire )– வலைச்சரம் பற்றி பதிவர்கள்

05.04.09 - வைடூரியச்சரம் - (Cat's Eye )- நவரத்னங்கள் விடைபெறுமின்றன



அணில் குட்டி அனிதா : ஆமாம் கிளம்பறோம், சீனா அண்ணாச்சி ரொம்ப நன்றி நன்றி நன்றி..!! .. உங்க வலைச்சரம் கவி பென்டை சூப்ப்ரா நிமித்துச்சி... :)) பின்ன சரம் தொடுக்கறதுன்னா சும்மாவா? அம்மணிக்கு முதுகுவலி ன்னு புலம்பல்ஸ் ஆஃப் வேளச்சேரி ஆயிட்டாங்க.. :) ஸ்ஸ் கொஞ்ச நாள் நிம்மதியாக இருக்கலாம்... முதுகு சரியா ஆகிறவரைதான்...!!



பீட்டர் தாத்ஸ் :- வைடூரியச்சரம் - (Cat's Eye )- Some Quality of Cat's Eye • Smoothness• Brilliance of chatoyance• High specific gravity - heavier than average stone of the same size• Having three streaks of light, similar to the sacred thread worn by Brahmins in India• Straightness of the chatoyance


Read more about Cat's Eye


மேலும் வாசிக்க...

04.04.09 – கோமேதகச்சரம் (Sapphire )–வலைச்சரம் பற்றி பதிவர்கள்

வலைச்சரம் தொடுப்பது என்பது அவ்வளவு எளிதாக எனக்கு தோன்றவில்லை, எல்லாம் இந்த ஐந்து நாட்களில் பெற்ற அனுபவம் தான். சரி நம்மை போல மற்ற நண்பர்களின் அனுபவமும் கேட்டு தெரிந்துக்கொண்டு அப்படியே வலைச்சரத்தின் பழைய புதிய நினைவுகளை கொண்டு வரலாம் என்று ஆசைப்பட்டு அனைவரிடமும் அவர்களின் கருத்தை கேட்டிருந்தேன்.. இதோ...(இதுவரை அனுப்பியவர்கள் வரை,) வலைச்சரம் பற்றிய அவர்களின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள் :-

கயல்விழி முத்துலெட்சுமி :- வழக்கம்போலத்தான் நம்மளையும் நம்பி கூப்பிடறாங்களேன்னு முதலில் குஷி.. நாமபாட்டுக்கு தினம் வர பதிவுன்னு தமிழ்மணத்துல காட்டுற எல்லாமே படிச்சு குவிக்கிறோமே.. அதுல இருந்து எழுதிடலாமேன்னு தோணிச்சே தவிர.. இதைப்படிங்க ..நீங்க தவறவிட்டறாதீங்கன்னு சொல்லனும்ன்னா அதுஎப்படிப்பட்ட நல்ல பதிவா இருக்கனும்ன்னு ஒரு விதமான தடுமாற்றம் ஆகி எப்படியோ பொறுப்பை முடிச்சிட்டேன்னு தான் சொல்லனும்.. ஆனால் அதுக்கப்பறம் சொந்தப்பதிவுகளை பொறுப்பா எழுதனும்னு தோன்ற ஆரம்பிச்சது .. :)

குட்டி கண்ணம்மா (G3) :- கவிதாயினி காயத்ரிக்கும் ஜி3 காயத்ரிக்கும் குழப்பம் வந்து தான் நான் சிக்கினேன் வலைச்சரத்துல. இல்லாட்டி நம்மள எல்லாம் யாரு சீண்ட போறா... சரி.. அந்த கதைய விடுங்க. ஆனா ஒரு வாரம் போட வேண்டிய பதிவுக்காக பழைய பதிவுகள் எல்லாம் படிச்சப்போ, திரும்ப அந்த நாட்களுக்கே போன மாதிரி ஒரு அனுபவம். பதிவுகள்ல பின்னூட்டங்கள் அதை தொடர்ந்த ஜி-டாக் அரட்டைகள்னு எல்லாத்தையும் திரும்பிப்பாக்க ஒரு வாய்ப்பா இருந்துது. நான் தொகுத்த அந்த ஒரு வாரம் மத்தவங்களுக்கு எப்படி இருந்துதுனு தெரியலை (டெர்ரராத்தான் இருந்திருக்கும் :) என்ன இருந்தாலும் அதை நானே சொல்லக்கூடாதில்ல :P ) ஆனா தொகுத்த எனக்கு மனநிறைவா இருந்துது :)

ஆயில்யன் :- எழுதுவதை மட்டுமே யோசிக்க வைக்கும் பதிவுலகில்
எழுத்துக்களை வலைச்சரம் வாசிக்க வைக்கிறது !

கடந்து போன நிமிடங்களில் மலர்ந்து மறைந்த வலைப்பூக்கள்
பின் மீண்டும் மலர்ந்து வாசம் வீசச்செய்யும் வலைச்சரம்

வலைச்சரத்தில்
எழுதுபவர்களுக்கும் உற்சாகம்!
எழுத்தில் வலம் வருபவர்களுக்கும் உற்சாகம்!
எழுத்தினை வாசிப்பவர்களுக்கும் உற்சாகம்!

பழமையான வலைச்சர பக்கத்தினை கொஞ்சம் எளிமைப்படுத்துங்கள் யாவரும் வலம் வந்து வரிகள் கண்டு வாசித்து செல்ல....!

கோபிநாத் :- இருவர் மனதில் எப்போதும் விழா மேடைகள் பெருமையான விஷயமாக இருக்கும். ஒன்று பரிசை வாங்குபவர் மற்றொருவர் பரிசை தருபவர். அப்படி ஒரு பெருமைக்குறிய மேடை தான் நம்ம வலைச்சரம். அதில் நானும் இந்த இரண்டு நிலைகளில் இருந்திருக்கிறேன் என்பது எனக்கு மிக பெருமையான விஷயம். என்னையும் தொடர்ந்து ஏழு நாட்கள் பதிவுகள் போட வைத்தவர்கள்.அவர்கள் செய்யும் பணி மிக பெருமைக்குறிய விஷயம். தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் ;) இந்த வாய்ப்பை தந்தமைக்கு கவிதா அக்காவுக்கு என்னோட மனமார்ந்த நன்றி ;)

ஜமால் :- அது நாள் வரை, வலைச்சரத்தில் அறிமுகமே செய்யப்படாத நான் ஒரு தொகுப்பாளராக, மிக்க மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. முதல் நாள், ஒரு வித பயம் கலந்த எதிர்ப்போடு போயிற்று, வாசகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அடுத்தடுத்த நாட்கள் இன்னும் கண் விருந்து வைக்கவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. முடிந்த அளவு புதியவர்களை அறிமுகம் செய்தேன். ஐந்து நாட்கள் தான் முடிந்தது பின்னர் சற்று சோர்வடைந்துவிட்டேன். மொத்தத்தில் மெத்த மகிழ்ச்சி.

கோவி கண்ணன் :- வலைச்சரம் தொகுப்பு என்பது 'படித்ததில் மனதில் பதிந்தவை' வகை, பின்னே தெரியாததை எப்படி எழுத முடியும் ? நாலு பேருக்கு நாம் என்ன என்ன மண்டையில் ஏற்றிவைத்திருக்கிறோம் என்பதாக மறைமுகமாக புரிய வைக்கும், பிடித்தவற்றை எழுதுவது எல்லோருக்கும் எளிமையானது தான். ஆனால் நமக்கு நன்கு அறிமுகமானவங்களை பதிவுல குறிப்பிடலையேன்னு யாரும் வருத்தப்படுவாங்களோ ன்னு கொஞ்சம் உறுத்தலாக இருக்கும். இந்த 'பதிவை' விட்டுட்டிங்களேன்னு சிலர் கேட்பாங்க, வலைச்சரம் விளம்பரத்துக்கானது அல்ல, அது அவரவர் பார்வையிலான தொகுப்பு என்ற எண்ணத்தில் தான் எழுதினேன்.

தருமி :- வலைச்சரத்தின் அந்த ஒரு வாரப் பொறுப்பில் நான் செய்த தவறுகள் தான் அதிகம். சரியான புரிதல் இல்லாமல் என் பதிவுகளுக்கு ஒரு முன்னோட்டம் ஏதும் முதல் பதிவில் சரியாகக் கொடுக்கவில்லை என்றே நினைக்கிறேன். தொடர்ந்த பதிவுகளிலும் முழுமையான அளவில் மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு இடம் கொடுத்ததாக நினைவில்லை. மொத்தத்தில் சரியான முன்னேற்பாடு ஏதுமின்றி ஒரு வார வலைச்சரத்தை கெடுத்த 'பெருமை' மட்டும் என்னைச் சேரும். மன்னிக்கணும்.

சென்ஷி :- வலைச்சரம் ஆரம்பித்த புதிதிலேயே அதில் ஆசிரியர் பொறுப்பு கொடுத்திருந்தார் நண்பர் சிந்தாநதி.. (இப்ப எங்க தலைவா இருக்கீங்க?). அன்றைய பதிவுகளில் இப்போது இருப்பதை போல நிறைய்ய பதிவர்கள் இல்லாது இருந்த போதும் நண்பர்கள் அல்லாது மற்றையோர் எழுதும் பதிவர்களில் ரசனைக்குரிய பதிவுகளை தேர்ந்தெடுக்க சற்று சிரமப்பட்டு போயிருந்தேன். (இப்போதும் நல்ல பதிவுகளை யாரேனும் தொடுப்பு அனுப்ப வேண்டி உள்ளது.) இப்போது வலையுலகத்தில் நிரம்பி வழியும் பதிவுகளிலும் சிறந்ததை தேர்ந்தெடுத்து தொடுத்து கொடுக்கும் பதிவர்களை பார்க்கும்போது வலைச்சரத்தின் பங்கு மற்றவர்களை விட எனக்கு மிக அதிகமாய் பயன்பட்டுக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாய் உள்ளது.

வலைச்சரத்தின் அத்தனை ஆசிரியர்களுக்கும், வலைச்சரம் என்ற புதுவலையை தொடுத்து தந்த சிந்தாநதி மற்றும் இதர பொறுப்பாசிரியர் குழுவினருக்கும் ரசிகர்களின் சார்பாய் நன்றிகளை

தெகாஜி :- ம்ம்... நான் வலைச்சரம் தொடுக்கும் பொழுது ரொம்ப யோசிக்க வேண்டியதா இருந்தது யாரையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்றதுங்கிறதில. ஏன்னா, அதிகம் கவனிக்கப்படாத அதே நேரத்தில் என் மனதில் நின்றவங்கங்கிற முறையில நான் கொடுக்க முனைந்திருப்பேன். சந்தோஷத்தை கொடுத்தது! ரொம்ப எக்ஸ்சைட்டடா இருந்தேனாம் கவனிச்ச ஒரு நண்பன் சொன்னான்.

நாகைசிவா :- விடிஞ்சா கல்யாணம் பிடிடா வெத்தலை பாக்கு என்பது போல் தான் நான் வலைச்சரம் ஆசிரியர் ஆனதும். அதனால் ரொம்ப எல்லாம் ஹோம் வொர்க் பண்ணாமல் 2006ல் வந்த பதிவுகள் எவை என்று யோசித்து மனதில் சட்டேன ஞாபகம் வந்த பதிவுகளை ஒரு வாரம் சரமாக தொடுத்தேன். ஞாபகம் வந்த போதிலும் அதை தேடி எடுத்து சுட்டி தருவது என்பது ஒரு இமாலய சவால் தான். இருந்தும் அதை பிடித்து மறுபடியும் படிக்கும் போது பள்ளி காலத்து தோழனை சந்தி்த்த மகிழ்வு இதில் கிடைத்தது. சுருக்கமாக இனிமையான அசை போடலாக அமைந்தது.


அணில்குட்டி அனிதா:- ம்ம்.. எல்லாரையும் சொன்னாங்களே அம்மணியின் அனுபவத்தை சொன்னாங்களா...? சொல்ல மாட்டாங்க.. ஏன்னா.. ஹி ஹி.. பெண்டு நிமுந்து போச்சி இல்ல... ..... ..எனக்கும் ஒரு அனுபவம் கிடைச்சது.. பட்னி கிடந்த அனுபவம் தான்.... ஆனாலும்... ஓசில ஜூஸ் வாங்கி குடிக்க நானு என்ன வேணுனாலும் செய்வேனில்ல.. ! :)


பீட்டர் தாத்ஸ் :- கோமேதகச்சரம் (Sapphire)–Sapphire is the most precious of blue gemstones. It is a most desirable gem due to its color, hardness, durability, and luster. The most valuable color of sapphire is cornflower blue, known as Kashmir sapphire or Cornflower blue sapphire.
Read More About Sapphire :-
http://www.addmorecolortoyourlife.com/gemstones/sapphire.asp
http://en.wikipedia.org/wiki/Sapphire
http://www.cwjewelers.com/stonesapph.htm
மேலும் வாசிக்க...

Friday, April 3, 2009

03.04.09 – பவளச்சரம் (coral ) - பழப்பச்சடி

பவளச்சரத்தில் இன்று பழப்பச்சடி'யாக (Fruit Salad) மூன்று வித தலைப்பில் பதிவர்களை கலந்திருக்கிறேன் அவர்கள் முறையே கவிஞர்கள், கதைக்காரர்கள், புகைப்படம் பிடிப்பவர்கள்

I. கவிஞர்கள் :- ஒன்றும் சொல்லுவதற்கு இல்லைங்க… ஒவ்வொருத்தரும் எழுதற கவிதைகள் இருக்கே… மயக்கம் வருதுங்க.. நீங்களும் போங்க திரும்ப மாட்டீங்க மயங்கி அங்கேயே விழுந்துவிடுவீர்கள்

1. தமிழரசி

2. கவிதாயிணி காயத்திரி

3. இனியவள் புனிதா

4. உமா சக்தி

5. சுடர்விழி

6. நான் சித்தன் - இது வலி! அனைவரும் பார்க்க, படிக்க உகந்தது அல்ல.. !!


II. கதைக்காரர்கள் : எல்லாருமே கதை எழுதறாங்க, என்னையும் சேர்த்து, யாரையென்று குறிப்பிட்டு சொல்லுவது, எனக்கு பிடித்த, அதனால் படித்த சில கதைக்காரர்களின் கதைகள்.

1. தேவ் : ப்ளாகிற்கு வந்து முதன் முதலில் படித்தது இவருடைய கதையை தான். ரொம்ப சுவாரசியமாக இருந்தது.. கதை என்றால் என் சாய்ஸ் முதலில் தேவ்' தான், அடிச்சிக்க ஆள் இல்லை.. இதோ உங்களின் பார்வைக்கு ஒன்று

இது விச்சுவின் கதை

2. செந்தழல் ரவி :
எங்களின் நட்பை சினிமாவில் தான் பார்க்கமுடியும், அடிச்சிக்குவோம்.. கொஞ்சிக்குவோம்.. எப்போ எது நடக்குமென்று எங்களுக்கே தெரியாது. இவரின் எல்லா பதிவுகளுமே ஏதோ ஒரு கருத்தை கொண்டு இருக்கும், கும்மியாக இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். குறிப்பாக சமூகபார்வை ஆச்சரியப்படவைக்கும். இவரின் கதைகள் ரொம்பவும் யதார்த்தமானவாய் நம்மில் பலர் இதை அனுபவித்தவர்களாகவும் இருப்போம். எனக்கு பிடித்தவை

a. கோழித்திருடன்

b. தேங்காய்பொறுக்கி

3. ராயல் ராம் :- இவரை பற்றி என்னங்க சொல்றது.. ராயலோட கதைகள் எல்லாம் ஒரே செண்டிமென்டு டச்….. அழவச்சிடுவாரு…. அப்படி அழுத ஒன்று

மாணிக்கமலர்

4. நாமக்கல் சிபி :- நயன் நாயகன், நக்கல் மன்னன், சும்மாவே கதைக்காரர், சுட்டிக்காரர், ஆனால் பெரிய சோம்பேரி ஒரு கதையை எழுதிட்டு தொடராமல் இருக்கிறார். நல்ல விறுவிறுப்பாக போயிக்கிட்டு இருந்தது, அப்படியே நிறுத்திவைத்து இருக்கிறார், தொடருவார் என்ற நம்பிக்கையுடன்...

நாலாம்பிறை திதி 1

4. ஆதவா : இவரைப்பற்றி எனக்கு தெரியவில்லை, இவரின் மற்ற கதைகள் கூட சுவாரசியமாகவே உள்ளன. ஒரு வித்தியாசமான விஞ்ஞான கதை

யாழினியின் காதல்

5. ஜி: மிக சமீபத்தில் இவர் எழுதிய கதையை படிக்க வாய்ப்பு கிடைத்தது. அட.. நம்ம ஜி'க்கு இவ்வளவு அருமையாக கதை எழுத தெரியுமா என்று வியந்தேன், ஒவ்வொரு வரியையும் ரசித்தேன். .நீங்கள் ரசிக்க...

மயிலிறகு பக்கங்கள்...



III. புகைப்படக்காரர்கள்
:
நாங்களும் தான் கேமரா வைத்திருக்கிறோம், ஆனால் இங்க இருக்க படங்களை பாருங்கள்... எதுக்கு நம் கையில் கேமரா'? என்று தோன்றும்.

1. ராயல் ராம்: - இவருடைய புகைப்படங்கள் பற்றி விமர்சனம் செய்யும் அளவிற்கு என்னோட புகைப்பட அறிவு இல்லை.. இவரு வல்லவர், ரொம்ப நல்லவர், போட்டோ பாருங்க… உங்களுக்கே புரிந்துவிடும்.. ஆல்பத்திற்கு பெயர் வைக்கவில்லை அதனால் நானே வைத்துவிடுகிறேன்.

Royal Raam's Rock collections

2. மாதவன் – சொல்வதற்குவார்த்தைகள் இல்லை, இவரோட போட்டோஸ் பார்க்கவே இவர் பதிவுக்கு போவது வழக்கம். ராயல் ராம் நீங்களும் பாருங்க.. சூப்பரா இருக்கும்..

Maddy Made us Mad

3. நாகை சிவா பாம்பு படம் எடுக்கும் பார்த்து இருப்பீங்க இங்க புலி படம் எடுக்குது பாருங்க… அவரோட ப்ளாக் போட்டோ பார்த்து, வாயப்பொளந்து கிட்டு, நீங்களா எடுத்தீங்கன்னு கேட்டேன்.. இல்லைங்க.. ஆள் வைத்து எடுத்ததுங்க' ன்னு சொன்னாரு, ஆள் வைத்து எடுத்த போட்டோவை பாருங்க..
a. சிசெல்ஸ் - புகைப்படங்கள் - வாய்பிளந்து பார்த்தது
b. பொங்கலோ பொங்கல் 2009 - அடுத்தவருடம் அக்கம் பக்கம் பொங்கலையும் சேர்த்து எடுங்க.

c. பாலைவன பூக்கள் - சூப்பர்

( சிவா முடியல!! தயவுசெய்து போட்டோ ஆல்பம் தனி ப்ளாக் பண்ணுங்க.. ஒரே லிங்க்'காக கொடுக்கலாம்.. ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ணக்கட்டுதே... இன்னும் நிறைய இருக்கே.. !! )

d. சாலைகள் பலவிதம் - Exclusive
e. கண்ணுக்கு விருந்து! - நிஜமான விருந்து

f..குண்டு 1 வச்சி இருக்கேன்! : Unique Collection
g. வண்ணக் கோலங்கள் - வண்ணங்கள் !



4. ஆனந்த்
: ஆஹா.. மை லென்ஸ் ன்னு ப்ளாக் பெயரோட போட்டோ பதிவிட்டு இருக்கிறார். எப்படித்தான் இப்படி போட்டோ எடுக்கறாங்களோ தெரியல..

மை லென்ஸ்

5. தீபா : முதலில் பார்த்தவுடன் பொறாமையாக இருந்தது… நாமும் தான் கேமரா வைத்து இருக்கிறோம்.. எங்க..?!! புகைப்படங்களை பாருங்க.. வகை வகையா பிரித்து ச்சும்மா கலக்கியிருக்காங்க...

Keep Watching Deepa's Collections

6. ஓவியா: இப்பத்தான் படம் எடுக்க பழகறேன் னு சொல்றாங்க.. ஆனா... புகைப்படம் எடுப்பதை தன் பொழுது போக்கில் ஒன்றாக வைத்து சரிவர எடுக்க பழகியும் வருகிறார்கள் போல் தெரிகிறது..

ஓவியாவின் கலக்ஷன்ஸ்

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்ம்ம்...! நான் இன்னும் உண்ணாவிரதம் முடிக்கல... ஏன்னா யாருமே என்னை கண்டுக்கல..!! அவ்வ்வ்வ்!! இப்பவாச்சும் போட்டோ பாத்துட்டு எனக்கு அப்படியே ஃபிரஷ் ஜூஸ் கொடுத்துட்டு போவிங்களாம்...!! வெக்கத்தவிட்டு சொல்றேன்........பசிக்குதுங்க...!!

பீட்டர் தாத்ஸ் : பவளச்சரம் (coral ) :- Since ancient times, Coral gemstone has been given recognition by all astrologers. It is not a mineral. Coral is kind of organic substance. Coral gemstone is prepared by non-vertebrate sea organism which are called Isis Nobiles. Coral gem is found in the shape of vine branch at about 600-700 feet deep into the sea. Scientists regard it as a component of calcium carbonate. Read More About Coral :-

http://www.rudraksha-ratna.com/coral-gemstones.html

http://www.mineralszone.com/gemstones/coral.html

http://www.addmorecolortoyourlife.com/gemstones/coral.asp

மேலும் வாசிக்க...

Thursday, April 2, 2009

02.04.09 - மாணிக்கச்சரம் (Ruby) - பிடித்த பெண் எழுத்தாளர்கள்

தனியாக பெண்களுக்கு என்று ஒரு சரம் தொடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. தனித்துக்காட்ட வேண்டாம் என்றாலும், என்னை உற்சாகப் படுத்தவும், பெண்கள் அவ்வளவு சுலபமாக எழுதிவிட முடிவதில்லை என்னையும் சேர்த்து என்பதாலும் இந்த மாணிக்கச்சரத்தை தொடுக்கிறேன்.

யாரைவிடுவது யாரை தொடுப்பது என்ற அளவு நம் தோழிகள் அடிச்சி ஆடறாங்க… பார்த்தவரையில் நிறைய பெண்கள் கவிதை எழுதறாங்க…. சமீபத்தில் மகளிர் தினத்தன்று நம் தோழிகளின் பதிவுகள் நிறைய விகடனில் வந்தது. பார்க்க சந்தோஷமாக மனதுக்கு நிறைவாக இருந்தது. எங்கும் எதிலும் எப்போதும் ஏதோ ஒரு விதத்தில் நம் வலை தோழிகள் ஜொலித்துக்கொண்டு இருந்தாலும், என்னை கவர்ந்த சில மாணிக்கங்கள்

1. மங்கை : முதல் பதிவிலியே என்னை கவர்ந்தவர்'ன்னு சொல்லிவிட்டேன். இன்னொரு முறை சொல்லுங்க..!! ன்னு சொல்ல வைத்து விட்டார்கள்..(அவங்க சொல்லல என்னையே சொல்லவைத்துவிட்டார்கள்) இதிலும் அவரே முதலில்… சொல்லிவிட்டேன்..

2. தமிழச்சி : இவங்க இப்ப இருக்கற தமிழச்சி இல்லைங்க.. இவங்களோட எழுத்து நடை திருநெல்வேலி தமிழ் என்று நினைக்கிறேன்.. ஒன்னும் புரியாது.. என்ன என்னவோ எழுதுவாங்க. .ஆனா எழுதுகின்ற ஒவ்வொரு விஷயமும் சூப்பரா ரொம்ப இண்டர்ஸ்டிங்காக… மேலும் நகைச்சுவை கலந்து எழுந்துவாங்க… வெள்ளேந்தி ன்னு சொல்லுவாங்களே அப்படி இருக்கும் எழுத்து.. பேச்சும் அப்படித்தான், இப்போது எழுதுவதே இல்லை , இருந்தாலும் எனக்காக.

3. பொன்ஸ் : சொல்லனும்மா… அறிமுகமே தேவையில்லையே.. வலையுலகில் அத்தனை பேரும் அறிவார்கள், இவர்களுக்காக தனி பதிவே எழுதி இருக்கேன்.


4. உஷாஜி : சிறந்த எழுத்தாளர், எல்லாவித பிரிவுகளில் எழுதுபவர். பிரச்சனைன்னு சொன்னா போதும் முதலில் ஓடி வந்து என்னம்மா ஆச்சி அமைதியா இரு பார்த்துக்கலாம்னு சொல்வதோடு இல்லாமல் பின்னூட்டத்தில் பின்னி எடுப்பாங்க.

5. அமிர்தவர்ஷணி அம்மா : இவங்க நிஜ பெயர் தெரியவில்லை. இவர்களின் எண்ண ஓட்டம் என்னமோ எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இவரின் எழுத்துக்கள் என்னை கவர்ந்ததை விடவும் என்னுடைய பதிவுகளில் இவரின் பின்னூட்டங்கள் என்னை கவர்ந்தவை.

6. பூர்ணிமா சரண் :- என்னுடைய நவீன் மாதிரி இவங்களும் ஒரு ரவுண்டு குட்டி. சூப்பரா கும்மி அடிப்பாங்க.. பல சமயம் உருகி உருகி கவிதை எழுதுவாங்க…நாம் எதிர்ப்பார்க்காத போது தீடிரென்று ரொம்ப தீரமா பேசுவாங்க.. எல்லாத்தும் மேல் பதிவுகளை போய் பாருங்க.. சீக்கிரத்தில் 1000 பின்னூட்டம் வாங்கிய அபூர்வ பிளாகர்லேடி ன்னு பேரு வாங்கினாலும் வாங்குவாங்க..

7. தூயா : முடியலைங்க..இவங்க சமையல் குறிப்பு இருக்கே…. ம்ம்.. விடமாட்டேங்கறாங்க.. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க. .இல்ல சமையல் செய்து காட்டிட்டு தான் மறுவேலைன்னு சொல்றாங்க..…. நாம எல்லாம் ரொம்ப பாவம்தான்.. ஆனா அவங்களுக்கு தெரியலையே…

8. அம்மாக்கள் வலைப்பூக்கள் : மிகவும் அவசியமான ஒரு குழுவாக இதை நினைக்கிறேன். 2008-ல் சந்தனமுல்லை தொடங்கியிருக்காங்க. இந்த குழுவைப் பற்றிய விவரங்கள் இந்த பதிவில் தெளிவாக எழுதி இருக்கிறார்கள். இதை அம்மாக்கள் படிப்பதை விடவும் அப்பாக்கள் படித்தால் இன்னும் கூடுதல் பலன் தரும் என்று நினைக்கிறேன். இதற்கு பல காரணங்கள் சொல்லலாம், கடவுள் எல்லோரிடமும் இருக்கமுடியாது அதனால் அம்மாவை கொடுத்து இருக்கிறார் என்று சொல்லுவார்கள், அப்படி கடவுளாக நினைக்காவிட்டாலும், ஒவ்வொரு அம்மாவும் தன் குழந்தையை நல்ல முறையில் வளர்க்க எத்தனை பாடுபடுகிறார்கள் என்பதற்கு இந்த குழுவில் இடப்படும் பதிவுகள் ஒரு உதாரணம்.

குழுவை ஆரம்பித்த சந்தனமுல்லை பற்றிய ஒரு சிறு தகவல், மிக அற்புதமான ஒரு அம்மா, நான் வியந்துப்போய் வாய்பிளக்கும் ஒரு அம்மான்னு சொல்லலாம்..இப்போது எல்லாம் அம்மா என்றாலே எனக்கு சந்தனமுல்லை தான் நினைவுக்கு வருகிறார், (நானும் என்னை தத்து எடுத்துக்கோங்கன்னு சொல்லி பார்த்தேன்.. பப்புவை கூட மேய்பேன் உன்னை முடியாது ஓடி போ கண்மறவா!! ன்னு டிரெக்டா ரிஜெக்ட் செய்துட்டாங்க) அடுத்து விடுதலைக்காக போராடியா வீர பெண்மணி அஞ்சலை அம்மாவின் கொள்ளுபேத்தி, வாவ்… !! எழுதும் போதே மெய்சிலிர்க்கிறது !!

அணில் குட்டி அனிதா: கவிவீஈஈஈஈஈ........அவ்வ்வ்வ்வ்வ்வ்!! அவ்வளவுதானா லிஸ்ட்டு...! ஏன் எப்பவும் என் லிஸ்ட் டை செக் பண்ணவே மாட்டேன்ங்கறீங்க.. திஸ் ஈஸ் டூ பேட் !! . நான் கோச்சிக்கிட்டேன்..... அப்படி ஓரமா போயி உட்காந்து உண்ணாவிரதம் இருக்கேன்.. இந்த பக்கம் வரவங்க எல்லாரும் எனக்கு இரு டம்ளர் பிரஷ் ஜூஸ் (நோட் ஒன்லி ஃபிரஷ் ஜூஸ்) கொடுத்து உண்ணாவிரதத்தை முடிச்சி வைங்க சரியா...?!!

பீட்டர் தாத்ஸ் :- மாணிக்கச்சரம் (Ruby) :- For thousands of years, the ruby has been considered one of the most valuable gemstones on Earth. It has everything a precious stone should have: magnificent colour, excellent hardness and outstanding brilliance. In addition to that, it is an extremely rare gemstone, especially in its finer qualities.


Read More About Ruby :
http://www.gemstone.org/gem-by-gem/english/ruby.html
http://www.kamalkapoor.com/gemstones/ruby.asp
http://en.wikipedia.org/wiki/Ruby
மேலும் வாசிக்க...

Wednesday, April 1, 2009

01.04.09 - ரத்தினச்சரம்-(lapiz lazuli) புதிய பதிவர்கள்

புதிய பதிவர்கள் என்று எழுத ஆரம்பிக்கும் போதே நான் புதிதாக இங்கு வந்தபோது எனக்கு உதவியவரை நினைவு கூறவது சரி என்று நினைக்கிறேன். ப்ளாக் எனக்கு அறிமுகம் செய்தவர் ஒருவர் என்றாலும் அதற்கு மேல் அவர் எந்த வழிகாட்டுதலையும் செய்யவில்லை. என்னுடைய அறிமுக பதிவின் போதே, பாலா(பாரதி) தானாக ஓடி வந்து உதவி செய்தார், அவருக்கு அப்போது எல்லாம் அது தான் முழுநேர வேலையாக இருந்தது. யாராவது புதிதாக வந்துவிட்டால் போதும் குடுகுடுகுடு'ன்னு ஓடி வருவார், "இந்த பக்கம் பாலா", அந்த பக்கம் உங்களை பற்றி சொல்லுங்கள்" என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயிரை வாங்கி அதற்கு பின் நாம் வேணும்னு நினைப்பதற்கு மேலேயே உதவியும் செய்வார். என்னை தமிழ்மணத்தில் சேர்த்துவிட்டது, என்னுடைய டெம்லெட் டில் எல்லாவித தேவையான மாற்றங்களை செய்து கொடுத்தது, எல்லாமே பாலா தான். பாலா இல்லைன்னா நான் தமிழ்மணத்திற்குள் எல்லாம் கண்டிப்பாக வந்து இருக்க வாய்ப்பு இல்லை. அவருக்கு என் மனமார்ந்த நன்றியை இங்கே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டு இருக்கேன்.

சரி சரி ரொம்பவும் கொசுவத்தியை கொளுத்தி உங்களை எல்லாம் அழவைக்காமல், புதியவர்களின் அறிமுகத்திற்கு செல்லுவோம். :-

ரத்தினங்களாக நான் கண்ட சில புதியவர்களை அறிமுகம் செய்வதில் சந்தோஷம் அடைகிறேன். படித்து விட்டு சும்மா செல்லாமல் எல்லோருக்கும் அவரவர் பதிவில் சென்று வாழ்த்து சொல்லிட்டு போகனும் டீல் சரியா..!!

1. சுபஸ்ரீ இராகவன் கவிதை நிறைய எழுதறாங்க.. கவிதைகள் நன்றாகவே உள்ளன, அதற்கு அவரின் ஆத்திசூடி கவிதை ஒரு உதாரணம். அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி அவரை உற்சாகப்படுத்தலாமே..

2. நிலா – ராஜா, கோமதி தம்பதியின் குழந்தை நிலா குட்டி பெயரில் அவர்கள் ஆரம்பித்துள்ள பதிவு. கோமதி இது வரையில் எழுதியதில்லை, இந்த ப்ளாக் மூலம் நிலா குட்டியியுடன் தன் அனுபவங்களை இதில் பகிர்ந்து கொள்கிறார்கள். நிலாவை பற்றி நீங்களும் தெரிஞ்சிக்கனுமா.. வாங்க வாங்க....

3. கிருஷ்ணாபிரபு என்பவர் இந்த ப்ளாகை எழுதுகிறார். சற்று வித்தியாசமாகவே இருந்தது. அவருக்கு பிடித்த புத்தகங்களை அறிமுகம் செய்து எழுதுகிறார், புத்தகங்களை புரட்டி பாருங்களேன்.

4. சிம்பா என்பவர் எழுதுகிறார், அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். எனக்கு பிடிந்திருந்தது.. நீங்களும் பாருங்களேன்..

5. கலகலபிரியா.. :- ஆஹா பெயரே கலகல..வென இருக்கு, பதிவுகளும் கலக்கல்ஸ் ஆ இருக்கும், உங்களுக்கு எப்படி இருக்குன்னு முயற்சி செய்து பாருங்க..

6. மாதவன் என்னுடைய பதிவுகளில் பின்னூட்டம் இடுவார், அதை கொண்டு அறிவேன், அவ்வப்போது படிப்பேன், இவருடைய புகைப்படங்கள் எனக்கு ரொம்பவும் பிடித்தவை.

7. ஜஸ்டின் , பத்திரிக்கை துறையில் வேலை செய்த அனுபவங்களின் மூலம் பதிவுகளை எழுதுகிறார். நன்றாகவே உள்ளன.

8. தமயந்தியின் நிழம்வலை என்ற பெயரிட்டு சூப்பர் பதிவுகளை எழுதி இருக்கிறார்கள். ஆனால் யாரும் படிப்பதாக தெரியவில்லை. .இவர்களை போன்றவர்களை குழுக்களில் சேர்த்துவிட்டால் படிப்பவர்கள் அதிகமாகும்.

9. ஒரு வார்த்தை :- என்ற பெயரில் எழுதுகிறார், திரைபடதுறையில் பணியாற்றும் இவரை பற்றி அறிமுகமே என்னை கவர்ந்தது, தைரியமாக அரசியல் பதிவில் ஆரம்பித்து இருக்கிறார், படித்துதான் பாருங்களேன்..

10. வெங்கிராஜா:- வாவ்!! இவருடைய பாதசாரி டெம்ளேட்.. சூப்பர்.. !! இதற்காக ஒருதரம் சென்று பார்த்துவிட்டு அப்படியே பதிவுகளை படித்துவிட்டு வாருங்கள்..

11.பொன்னிலா , பெயர் தான் நிலா வென்று முடிகிறது ஆனால் நிலா சுடுகின்றது… சுடுவதை நீங்களும் உணர்வீர்கள் சென்று படியுங்கள்.

புதிய பதிவர்களுக்கு எனக்கு தெரிந்த சில டிப்ஸ்' :

1. முகம் தெரியாமல் எழுதினால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்னு என்ற நினைப்பை விட்டுவிடுங்கள்
2. உங்களுடையது எப்படிப்பட்ட முகமாக இருந்தாலும் நான் இப்படித்தான் என்று காட்டிக்கொள்ள தயங்காதீர்கள்
3. எத்தனை கும்மி அடித்தாலும் நடுவே ஒரே ஒரு நல்ல பதிவாவது எழுதுங்கள்

அணில் குட்டி அனிதா :- என்னை அடக்கி அராஜகம் செய்வதால் நானும் ஒரு புது பதிவு ஆரம்பிக்கிறேன் மக்கா… அல்ரெடி இங்க யூ.ஆர்.எல் ரெடி செய்துட்டேன், சோ...எல்லாரும் இனிமே அங்க வந்து சேருங்க. .அம்மணிய எல்லாரும் Boycott பண்ணுங்க….. நோ மோர் டீலிங் வித் திஸ் லேடி !! கவி நோ மோர் ரீடர்ஸ் டூ யூ !! ...ஹாங்... ஐ சேலஞ்சு..!!

மக்கா உங்கள நம்பி சேலஞ்சு எல்லாம் ஓவரா சவுண்டு விட்டுட்டேன்.. சோத்துல மண்ணை போட்டுடாதீங்க… !! அவ்வ்வ்வ்வ்!! ஆதரவு கொடுங்கோஓஓஓ!!

பீட்டர் தாத்ஸ் : ரத்தினச்சரம் - (lapiz lazuli) :
Photobucket Lapis Lazuli with deep azure blue color, often flecked with golden pyrite inclusions, was treasured by ancient Babylonian and Egyptian civilizations and often worn by royalty. Lapis lazuli was widely used by Egyptians for cosmetics and painting . Persian legend says that the heavens owed their blue color to a massive slab of Lapis upon which the earth rested. Lapis Lazuli was believed to be a sacred stone, buried with the dead to protect and guide them in the afterlife.
Read more about Lapiz Lazuli
http://www.astroshastra.com/gemstore/lapiz.asp
http://en.wikipedia.org/wiki/Lapis_lazuli
http://www.all-that-gifts.com/se/lapis_lazuli.html
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது