07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 11, 2010

வலைச்சர ஞாயிறு - தொழில் நுட்பம் மற்றும் வலைத்தளங்கள்


விடை பெறும்போது
சற்றே நின்று
மீண்டும் தொடர்கிற
பேச்சென நான்
மீண்டும் வருவேன்
இவ்வலைச்சரத்தில்
பின்னூட்டங்களாய்...



இந்த ஆறு நாட்களும் எனக்கு மிகுந்த ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் வணக்கங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

நிறைய பதிவர்களை என்னால் அறிமுகம் செய்ய இயலவில்லை.. மிகுந்த பணிச்சுமைக்கு இடையில் கூடுமானவரை புதிய பதிவர்களையும் அறிமுகப்படுத்தி உள்ளேன்.

தொழில் நுட்பம் பற்றி வலையுலகில் அதிகம் சைபர் சிம்மனும், வேலனும் சொல்லிவருகிறார்கள். மேலும் நிறைய நண்பர்கள் அடிக்கடி சொல்லிவருகிறார்கள்.

சுதந்திர இலவச மென்பொருள் எனும் வலைப்பக்கம் ஏராள தகவல்களோடு நாற்பது இணையதளங்களின் இணைப்புகளும், கொடுத்து இருக்கிறார்கள்.மிகவும் உபயோகமான வலைப்பக்கம்..

தமிழ் தோட்டம் எனும் வலைப்பக்கம் தமிழ் எழுத்துருக்களின் தரவிறக்கிகொள்ளும் இணைய இணைப்புகளோடு, தமிழில் உள்ள சில வலைபக்கங்களையும் தொகுத்து உள்ளது.


மேலும் சில புதிய பதிவர்கள்..

விந்தை மனிதன் ராஜாராமின் விரகதாபம் எத்தனை உருக்கமானது..


எண்திசை சாமிதுரை கோவணத்தை பறிகொடுத்தவர்களின் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்..


தனிக்காட்டு ராஜாவின் பதிவுகள் அடங்க மறுக்கும் அத்து மீறல் ..


இணையதளங்கள் :

சிக்கிமுக்கி சமூக கலை இலக்கிய இதழ் கடந்த ஒன்பது மாதங்களாக வந்து கொண்டிருக்கும் இணையதளம். கதை, கட்டுரை ,கவிதை நேர்காணல் என அனைத்தும் எழுதலாம். உங்கள் படைப்புகளை அவசியம் அனுப்பி வையுங்கள்..


தடாகம் வலைத்தளம் இதில் பன்முக பதிவுகளோடு உலக சினிமாவை பற்றியும் பேசலாம். இதற்கும் உங்கள் படைப்புகளை அவசியம் அனுப்பி வையுங்கள்..

நட்பு வலைத்தளம் தமிழ் சமூகத்தின் இணைய முகம் என தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது.. இதற்கும் உங்கள் படைப்புகளை அவசியம் அனுப்பி வையுங்கள்..


தமிழ்குறிஞ்சி இணையத்தளம் இதுவும் ஒரு பன்முக தளம். உங்கள் படைப்புகளை உடனுக்குடன் வெளியிட இது ஒரு நல்ல இணைய தளம்.



இந்த வாரம் முழுதும் எனக்கு மிகவும் திருப்தியான வாரமாக அமைந்திருக்கிறது.. நான் நிறைய பதிவர்களை அவர்களின் பதிவுகள் அனைத்தையும் முடிந்தவரை படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.

இந்த வாய்ப்பினை வழங்கிய சீனா ஐயாவிற்கும், எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்த உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ..

நன்றி ... வணக்கம் ....

மேலும் வாசிக்க...

Saturday, July 10, 2010

வலைச்சர சனி - சினிமாவும், இசையும்

அரசியலின் முதல் படி
சினிமா
கனவுலக நாயகர்களிடம்
ஆட்சியைக் கொடுத்தால்
கூத்தாடித்தான் போகும்
வாழ்க்கை..

நேற்றைய பதிவிற்க்கான உங்கள் அமோக ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்..

தமிழில் பிரபல இயக்குனர் அல்லது நடிகர் நடித்த படம் என்றால் அந்த வாரம் முழுதும் அதைப்பற்றியே நிறைய பதிவுகள் வரும்.. இவ்வளவு பிரசித்தம் பெற்றதை நான் சொல்லாவிட்டால் எப்படி?..

நான் சொல்லப் போகிற அனைவரும் நீங்கள் தொடர்ந்து படிப்பவர்களே.. ஒரு சிலர் அதிலும் முக்கியமாக இசை விமர்சகர் ஷாஜி பற்றி நிறைய பேருக்கு தெரியாது..

கேபிள் சங்கர் வலையுலகில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை.. பன்முகம் கொண்ட சினிமாக்காரன்.. இவரின் சினிமா வியாபாரம் சினிமா துறைக்கான கையேடு..
மிகப் பிரசித்தி பெற்றது மீண்டும் ஒரு காதல் கதை.. இவர் தமிழ் தவிர தெலுங்கு மற்றும் இந்திப் படங்களைப் பற்றி அதிகம் விமர்சிப்பவர்..தமிழில் வெளியாகும் அத்தனை படங்களையும் பார்த்தவர்..


ஜாக்கி சேகர், ஜாக்கி ஜானின் மேல் உள்ள தீவிர காதலால் பெயரை இப்படி வைத்துக் கொண்டாலும் வலைப்பூவின் தலைப்பு "பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்" நான் மிகவும் ரசித்த நாவலான பட்டுக்கோட்டை பிரபாகரின் நாவலின் தலைப்பு.. சமுதாய கோபத்துடன் தான் ரசித்த படங்களை மட்டும் எழுதும் உலக சினிமா ரசிகன்..

உண்மைத்தமிழன் சமுதாயக் கருத்துகளுடன், தமிழ் சினிமாக்களை மட்டும் எழுதும் "சங்கத்"தமிழன்.. ஆனால் படிக்கதான் பொறுமை அவசியம் வேண்டும்..


வண்ணத்து பூச்சியார் சூர்யா, உலக சினிமாவை தீவிரமாக அலசுபவர்.. ஏனோ சமீபமாக அதிகம் எழுதுவது இல்லை..


ஹாலிவுட் பாலா இவரும் உலக சினிமா விமர்சகர்தான்.. ஆனால் மிகவும் சுவாரஸ்யமான இவரது விமர்சனங்கள் மிக எளிமையானவை..


நீ கேளேன் என மொக்கை படங்களையும் மொழி மாற்று படங்களையும் கூட விட்டுவைக்காமல் பிட்டு பிட்டு வைப்பவர்கள்.. தியேட்டர் கமெண்ட்ஸ் போடுவார்கள்.. சிரிப்பு விமர்சகர்கள் ஜெட்லி ..


இயக்குனர் சார்லசின் வலைபக்கமான வார்த்தைகள் சினிமாவை பற்றிய அலசல் மட்டுமல்லாது தன்னை பாதித்த படங்களை பற்றிய விமர்சனங்களையும் எழுதுபவர்..


உலக சினிமாக்களை பற்றிய மிக விரிவான பார்வை கொண்டவர் கீதப்பிரியன்.. சினிமாக்காரர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய வலைப்பக்கம்..


கருந்தேள் கண்ணாயிரம் இவரும் விரிவான பார்வையுடன் கூடிய உலக சினிமா ரசிகன்.. சுவாரஸ்யமான தகவல்களுடன் சொல்பவர்..


இன்னும் நிறைய நண்பர்களை அறிமுகம் செய்ய இயலவில்லை ..

இசையுலகில் விமர்சகர் என்றாலே சுப்புடுதான் ஆனால் உலக இசைக்கூறுகள் அனைத்தையும் பற்றி தெரிந்து வைத்திருக்கும் இசை விமர்சகர் ஷாஜியின் வலைப்பக்கத்தை அவசியம் பாருங்கள்..


இசை ராஜா இளையராஜாவுக்காகவே ஒரு வலைப்பக்கம்.. ராஜா ரசிகர்கள் அனைவருக்காகவும்..

மீண்டும் நாளை சந்திக்கிறேன்..


மேலும் வாசிக்க...

Friday, July 9, 2010

வலைச்சர வெள்ளி - புதிய பதிவர்கள்

இன்று புதிதாய் தோன்றுவது
நாளை பழசாகும்
நாளை மறுநாள்
இன்னொரு புதியவை தோன்றும்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கனவுகள்..

நேற்றைய பதிவில் பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி..

இன்று சில புதிய பதிவர்கள் பற்றி பேசலாம்.. ஒவ்வொரு நாளும் புதிய பதிவர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள், ஆர்வம் மிகுதியில் எழுத வந்தாலும் வெகு சிலரே தொடர்ந்து எழுதுகிறார்கள்.. ஒரு கட்டத்தில் அடுத்து என்ன எழுதுவது என்று தெரியாமல் தேங்கி விடுகிறார்கள்.. சிலரோ யாராலும் கவனிக்கப்படாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள்..

புதிய பதிவர்கள் உங்கள் பதிவுகளை போட்டதுடன் வெறுமனே காத்திராமல் மற்ற பதிவுகளை படித்து பின்னூட்டம் இடுங்கள்.. பல பதிவர்கள் அனைத்து பதிவுகளையும் படிப்பவர்களாக இருப்பார்கள் அவருக்கு பாலோயராக மாறுங்கள்.. பிடித்த பதிவுகளுக்கு ஓட்டு போடுங்கள்.. விளம்பரம் இல்லாத எதுவும் பிரபலம் ஆகாது.. அது எவ்வளவு நல்ல சரக்காக இருந்தாலும்.. முதலில் உங்களை அனைவரிடமும் அறிமுகபடுத்திக் கொள்ளுங்கள்..

நிலவின் மடியில் வினோத் எழுதும் கவிதைகள் கவனிக்கப்பட வேண்டியவை.. மரித்துப் போகும் உயிரணுக்கள் பற்றிய இவரது கவிதை, மிக நேர்த்தியான ஒன்று..


மின்மினிதேசம் மீனாட்சி சுந்தரம் நீண்ட காலமாக எழுதினாலும் சமீப காலமாகத்தான் தமிளிஷில் மட்டும் இணைக்கிறார்.. இவர் சொல்லும் குட்டிகதைகள் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.. வாய் விட்டு சிரிக்க வைப்பதுடன் நம்மை சிந்திக்கவும் வைக்கிறார். இந்த தில்லு துர என்ன பண்ணிருக்காரு பாருங்களேன்..

வேட்டைபெருமாள் ராமச்சந்திரன் நிச்சயம் பிரபல பதிவர் ஆகிவிடுவார் என்பதற்கு அவரின் இந்த பதிவே சாட்சி..


அம்பிகாவின் சொல்லத்தான் நினைக்கிறேனில் ஒரு தோழி இருந்தாள்..


ஒன்பதாம் வகுப்பு ஈ பிரிவு (எப்படியல்லாம் தலைப்பு வைக்கிறாங்க) கபிலன் 55 வார்த்தைகளில் சுஜாதவை போல் கதை சொல்லியிருக்கிறார்.. வாத்யார் பெயரை காப்பாற்றிவிட்டார்..

கம்ப்யூட்டர் கனவுகள் என்ற பெயரில் சாப்ட்வேர் எஞ்சினியர் எழுதும் வலைப்பக்கம் ஆனால் கம்ப்யூட்டர் பற்றி எழுதவில்லை.. பிரபல பதிவர் ஆக வேண்டுமா?
இதனை படியுங்கள்..


பாடினியார் ஜெயந்தி நிறைய தலைப்புகளில் நிறைய விசயங்களை எழுதுகிறார்.. சிந்தனைகளை தூண்டக் கூடிய பதிவுகள் அதிகம் எழுதுகிறார்.. இவர் அப்பாவுக்கு எழுதிய கடிதம் கண்ணீரை வரவழைக்கும்..


எனது இரண்டு சதங்கள் அனாமிகா துவாரகன் இட்லி மாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறார்.. எத்தனை வகை இட்லிகள்..

ராசாராச சோழனின் பழனி பாத யாத்திரை பயணம், ஒரு புதிய அனுபவம்..

மாற்றம் புறமுதுகு பேசுவோர் பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளார்..


ரிஷபன் எழுதும் கிங் க்வீன் ஜாக் ஒரு வித்தியாச தொடர்..


கோமாளி (பெயர் நல்லா இருக்குங்க) மொக்கையின் வரலாற்றை ஆய்வு செய்திருக்கிறார்..


வானதி சுஜாதா பற்றி ஒரு கதை எழுதி இருக்கிறார் படியுங்கள்..

உன்னைத் தேடி நான் ஆர்.கே குரு தள்ளாடும் முதுமை பற்றி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்..

ரோமியோவின் ஏழாம் உலகம் மிக சிறப்பான விமர்சனம்...


செங்கோல் பெட்ரோல் விலையைப் பற்றிய கட்டுரை.. நமக்கு வயிறு பற்றி எரிகிறது..


ரசிகனின் ஏவாள் காதலி ஒரு வித்தியாசமான கவிதை..


அடிச்சுவடு முனியாண்டியின் ஆதலால் காதல் செய்தல்..

விட்டாலனின் பயணத்தில் மக்கள் கலாசார இலக்கிய மாத இதழ்..

சே.குமாரின் பந்தய மனசு, ஒரு வித்தியாச கிராம அனுபவம்..

வெட்டிக்காடு ரவிச்சந்திரன் இவர் பழைய பதிவர் ஆனால் நீண்ட விடுமுறைக்குப் பின் இப்போதுதான் எழுத வந்திருக்கிறார்.

அஞ்சா நெஞ்சன் ஜோதி பதிவுலகில் ஒரு வித்தியாச புதிய அறிமுகம்..


கொஞ்சம் அலசல் கொஞ்சம் வெட்டிப்பேச்சு கார்த்திக்கின் வித்தியாசமான வலைப்பக்கம்..

ரசிகன் சௌந்தரின் சமுதாய சிந்தனைகள் மிக குறுகிய காலத்திலேயே நிறைய நபர்களை வாசிக்க வைத்த வலைப்பக்கம்..

மாப்பிள்ளை ராஜா பேசுகிறார் ..

வந்தே மாதரம் சசிகுமார் புதிய ABCD விளக்கம் தருகிறார் பாருங்கள்..

நவயுக தமிழச்சி கவிதையின் நாயகி நாம் ஏமாளிகளா? என்று கேட்டிருக்கிறார். பதில் சொல்லுங்கள்..

தமிழ் தலைமகனின் இயந்திரப் பறவை ஒரு புத்தம் புதிய பதிவர் ..

விஷ்ணு பிரசாத்தின் தேவதைகளின் பிரசங்கம் நேர்த்தியாக பின்னப்பட்ட கவிதை ..

வெறும்பய ( ரசனையான பேரு) பெட்ரோல் பிரச்சினைகளை தீர்க்க சில யோசனைகளை
சொல்லிருக்காரு..

இன்னும் நிறைய புதிய பதிவர்களைப் பற்றி சொல்ல முடியவில்லை..

நாளை சினிமா மற்றும் இசை பற்றிய பதிவர்களை பார்க்கலாம்..






மேலும் வாசிக்க...

Thursday, July 8, 2010

வலைச்சர வியாழன் - சிந்தனைகள்

வாழும் நாட்களின் பிரதிகள்
எழுதும் வார்த்தைகள்தான்
ஏதோ ஒரு தருணத்தில்
என் பிரதி உங்களை
நேசித்தது எனில்
பூரணமாகும் என்
வாழ்வும் ..


சென்ற அறிமுகங்களுக்கு பின்னூட்டம் இட்டு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி... சென்ற பதிவுகளில் திருத்தம் மேற்கொண்டபோது அதில் சில தவறுகள் வந்துவிட்டன.. நாளை சரி செய்து விடுகிறோம்..

இன்று கட்டுரைகள் மற்றும் சமுதாய சிந்தனைகள் பற்றி எழுதும் பதிவர்களை பற்றிய பார்வை ..

வினவு தளம் ரௌத்ரம் பழகியவர்கள், இவர்கள் போன்ற மிகச் சிலராவது இருப்பதால்தான் நாட்டில் நடக்கும் அநியாயங்கள் தெரிய வருகிறது..
லீனா மணிமேகலை,திருப்பூர் தியாகு மற்றும் சந்தன முல்லை விவகாரத்தில் இவர்களின்மேல் எனக்கு மாற்று கருத்து இருந்தாலும், எப்போதும் இவர்களின் ஆதரவாளன் நான்..இவர்களின் இந்த கட்டுரை பாருங்கள்..

நாம் அவசியம் படிக்க வேண்டிய முக்கியமான வலைத்தளம் அழியா சுடர்கள் . தமிழின் முக்கியமான படைப்பாளிகளை அவர்தம் படைப்புகளுடன் அறிமுகப் படுத்துகிறார்கள்.. நாம் அறியப்படாத படைப்பாளி சம்பத் இந்தக் கதை உங்கள் மனசில் தங்கும் ..

தேவியர் இல்லம் திருப்பூர் ஜோதி கணேசனின் வலைப்பூ நிறைய விசயங்களை அலசுகிறது.. அவரின் இந்த கட்டுரையின் தலைப்பே வித்தியாசமானது..

கலையகம் கலை எழுதும் கட்டுரைகள் அனைத்தும் உலக அலசல்கள்.. கால் சென்டர் பற்றிய இந்த கட்டுரை ஒரு விரிவான உண்மை..

பெண்ணியம் வலைபக்கமும் நான் விரும்பி படைக்கும், வலைப்பக்கம் நல்ல சிந்திக்கவைக்கும் கட்டுரைகள் நிறைய வரும், காலுடைந்த ஆட்டுக்குட்டி பற்றிய கவிதை உயிரோட்டமானது..

ஆண்டாள் மகன் சற்று அபூர்வமாய் எழுதும் சிந்தனைவாதி... கி.ரா வின் ஒரு படைப்பை கதை சொல்லியிருக்கிறார்..

அடர் கருப்பு காமராஜ் கட்டுரைகளுடன் கதையும் எழுதக் கூடியவர்.. இந்த கதையில் வரும் பெண் எவ்வளவு தெளிவான கேள்விகளுடன்.. ஆனால் நிலைமை ..

பத்திரிகையாளர், கட்டுரையாளர், வன இலாகா அதிகாரி என பன்முகம் கொண்ட லதானந் படைத்த வளம் தரும் வலைபூக்கள் ..

இயக்குனர் கற்றது தமிழ் ராமின் காட்சி உலகம் அசாத்தியமானது, யார் வேண்டுமானாலும் தங்கள் சிந்தனைகளை அரங்கேற்றலாம், தகுதி இருப்பின் உடனே வெளியிடுகிறார்கள்..லெட்சுமி அம்மாவின் இந்த கதை அவசியம் படிக்க வேண்டும் ..

ரிஷபன் மீனாவின் வலைப்பக்கம் சென்செக்ஸ், முயலாமை, தாய்லாந்து பயணம், தோல் பைகள் தயாரிக்கும் முறைகள் என பல்வேறு தளங்களில் பார்வை இருக்கும்... தோல் பைகள் இனி வாங்க யோசிக்க வேண்டும் ..

பி.கே.பி யின் வலைபக்கத்தில் தற்போதிய முக்கிய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கங்கள்.. இப்போதெலாம் மாதம் ஒருமுறைதான் எழுதுகிறார்.

நீங்கள் பணக்காரர் ஆகவேண்டுமா அதன் அடிப்படை விதிகளை பற்றிய கோட்பாடுகளை வாரன் பப்பெட் சொல்லியிருக்கிறார்.. உளறுவாயன் ( ஏன் இந்த பேரு ) அவர்களின் பதிவில் பாருங்கள் ..

மதுரை சரவணின் சிந்தனைகள் அனைத்தும் மிகவும் நியாயமானவை.. அவசியம் படித்து கலந்துரையாட வேண்டிய பதிவுகள்.. கல்வி பற்றிய கட்டுரைகள் வரவேற்கப்பட வேண்டியவை..

தோழர் தியாகுவின் செம்மலர் கட்டுரைகள் நான் தொடர்ந்து வாசிப்பவை.. மருந்துகள் பற்றிய இந்த கட்டுரை நல்ல ஆய்வு..

வேர்களைதேடும் முனைவர் இரா.குணசீலனின் தமிழாய்வு.. தமிழின் சிறப்பு..

உணவு உலகத்தில் சுத்தம் சோறு போடுகிறது..

சிந்தனை பற்றிய அறிமுகங்களில் பிரபலமான நிறைய பதிவர்களின் பெயர்களை இணைக்க வைத்திருந்த குறிப்புகள் என் கணினியில் அழிந்து விட்டதால் நினைவில் இருந்த சிலரை மட்டும் அறிமுகப் படுத்த முடிந்தது..

நாளை புதிய பதிவர்களுடன் வருகிறேன்..


மேலும் வாசிக்க...

Wednesday, July 7, 2010

வலைச்சர புதன் - கவிதை

காதலைப்போல் எளிதாய்
பூப்பது
கவிதை மட்டுமே ..

சட்டென தோன்றி மறையும்
வானவில்லென
எப்போதாவது அபூர்வமாய்
கிடைக்கும் சில
நல்ல கவிதைகளும்..


இன்று கவிதை எழுதும் பதிவர்களை பார்க்கலாம்.. பொதுவாகவே கவிதை படிப்பவர்களைவிட எழுதுபவர்கள் அதிகம் என்று சொல்லபடுவது உண்டு..
காதலை சொல்ல கவிதைதான் சரியான வழி.. ஆனால் சமுதாய கோபம் பற்றிய கவிதைகள்தான் நமக்கு நிறைய தேவை.. பா.ரா, ,நேசமித்திரன், அய்யனார், யாத்ரா, மண்குதிரை, ஜ்யோவ்ராம் சுந்தர், அனுஜன்யா, நந்தா,விநாயக முருகன் போன்ற பிரபல பதிவர்களின் கவிதைகள் தொடர்ந்து படித்தால் கவிதை நமக்கு எளிதாகும்..

மற்றபடி இங்கு நான் குறிப்பிடும் நண்பர்களின் கவிதைகள் என்னை மிகவும் பாதித்தவை..

அண்ணாச்சி கலாநேசன் சோமாயனத்தில் நெய்த கவிதை இது..மனசாட்சி பேசுகிறது..

மௌனம் கிவியன் சூட்சுமம் ற்றி சொல்லியிருக்கிறார்.. பகுத்தறிவு கவிதை ..

வெறுப்பை தொலைக்க முடியுமா உயிரோடையில் அது முடியும் என்கிறார் சகோதரி..

சாத்தூர் மாக்கான் எனப்பெயர் வைத்துக்கொண்டு அறிவாளியாய் வளம் வரும் ராமசாமி கண்ணனின் முதுமையில் காதல் ஒரு அற்புதமான வாழ்வின் சாரம்..

எழுத்துப் பிழை என்று சொல்லி பிழையற்ற கவிதை சொல்லும் போகனின் உயிர்தெழல்..

நம்ம பாலாசி நிறைய கனவுகள் வச்சிருக்கிறாரு.. கண்ணீர் கட்டாயம் வரவழைக்கும் கனவுகள்..

ஆறுமுகம் ஆனந்த் இலையுதிர் காலத்தில் காதலை சொல்ல அவர் நெய்த கவிதை பிரமாதம்..

சகோதரி சுந்தரா தன் குறிஞ்சி மலர்களில் பிள்ளைகளின் பேரன்பை விவரிக்கிறார்.. கொடுத்து வைத்த பிள்ளை..

செல்வராஜ் ஜெகதீசன் கவிதையை முன் வைத்து சங்கத் தமிழ் அனைத்தையும் கேட்கிறார்..

ஹேமாவின் குழந்தை நிலாவில் வானம் வெளித்த பின்னும் தோன்றிய இந்த கவிதை மிகசிறப்பான ஒன்று.. அந்த நேரத்தில் நான் சில வார்த்தைகளை மறு பரிசீலனை செய்ய சொல்லியிருந்தேன்.. ஆச்சர்யம் பின்னூட்டத்தில் அத்தனை பேரும் அதை பொருட்படுத்தாது பாராட்டியிருந்தது..

அன்புடன் ஆனந்தியின் எனக்காய் பிறந்தவனே கவிதை காதலை சொல்லும் மொழி ..

சாய்ராமின் சுயத்தை மறைத்தல் எல்லோரையும் ஒரு கேள்வியை எழுப்புகிறது..

முகிலின் பித்தனா? புத்தனா ஆத்மம் + அர்த்தம் = அறிவு ..

பிரபாகரன் பழனிச்சாமியின் அழகிய முற்றுப்புள்ளி வைக்கும் அனாதைக் காதலன் ...

மக்களை கொத்து கொத்தாய் கொல்லப் போவதாக மிரட்டும் ராஜேஷின் கவிதைகள் கோடிட்ட இடங்களையும் நிரப்புகின்றன..

வள்ளுவம் கோமாவின் பசி பற்றிய புலம்பல்கள் .. அவசியம் படிக்க வேண்டிய நல்ல கவிதை..

ஈரோடு கதிரின் கசியும் மௌனத்தில் காவல் காக்கும் கடவுள் நிலைமையை பாருங்கள்..

கமலேஷின் சுயம் தேடும் பறவையில் சொல்லத் தெரியாதவை ...

மின்னற் பொழுதே தூரம் அபிலாஷ் நிறைய நல்ல பிறமொழிக் கவிஞர்களின் படைப்புகளை தருபவர்.. இவரின் தத்தம் இடங்களுக்கு கவிதை தரும் ஆழம் அற்புதமானது..

இதில் நண்பர் தேவாவின் கவிதையை சேர்க்கவில்லை.. அவரும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை வகித்து இருந்ததால் பதில் மரியாதை ஆகிவிடக் கூடாதே என்பதற்காக..

மற்றபடி கூடுமானவரை கவிதைகளை படித்து தேர்வு செய்துள்ளேன்.. விடுபட்டவர்கள் இருப்பின் அது என் கவனக் குறைவே..

மீண்டும் நாளை சந்திக்கிறேன்..




மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது