(அமெரிக்காவில் மேடையேற்றப்பட்ட பொன்னியின் செல்வன் நாடகத்தின் ஒரு காட்சி)
அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,
இன்றைக்கு யாரை அறிமுகப்படுத்தலாம்னு யோசித்த பொழுது, பொன்னியின் செல்வன் தான் ஞாபகத்துக்கு வந்தார். அவர் ஞாபகத்துக்கு வருவதற்கு காரணம், கடந்த இரண்டு வாரங்களாக நான், பொன்னியின் செல்வனைத்தான்
மூன்றாவது முறையாக மிகவும் நிதானமாக புகைவண்டியில் படித்துக்கொண்டு அலுவலகத்துக்கு
சென்று வருகிறேன்.
ஏற்கனவே ஒரு குழு பொன்னியின் செல்வன் என்ற பெயரில் யாஹூ குழுமத்தில்
(yahoo groups) இயங்கி வருகிறது. அதனால் நிச்சயமாக வலைப்பூவிலும் இந்த புதினத்தைப் பற்றி
பேசியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கூகிள் ஆண்டவரை நாடினேன். அவரும் என்னை கைவிடாமல், அவர்களை எனக்கு
அறிமுகப்படுத்தினார். இதோ, நானும் அவர்களை உங்களுக்கு அறிமுகப்
படுத்துகிறேன்.
நம் அன்பிற்கினிய கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்கள் தன்னுடைய வலைப்பூவில், இராஜராஜ சோழனின் சமாதிக்கு சென்று வந்த அனுபவத்தை விவரிக்கிறார் - பொன்னியின் செல்வன்
சுரேஷ் என்பவர் தன்னுடைய கனவுகளே வலைப்பூவில் குந்தவைத் தான் கொலையாளியா என்று அவருடைய பாணியில்
அலசியிருக்கிறார் - குந்தவை தான் கொலையாளியா?
நாம் எல்லோரும் பொன்னியின் செல்வனைப் பற்றி படித்திருப்போம்.
இந்த தலைமுறையினருக்கு பொன்னியின் செல்வன் எந்த அளவிற்கு அறிமுகம் ஆகியிருக்கும் என்று
தெரியவில்லை. ஆனால் ஒரு பதினோராம் வகுப்பு மாணவி, நான் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும்
படித்து முடித்து விட்டேன் என்று கூறினார். எப்படி உனக்கு ஈடுபாடு வந்தது என்று கேட்டபோது, நான் சிறியவளாக இருக்கும்போது, என் தாயார் தினமும் அந்த
கதையை எனக்கு சொல்லுவார், அப்படி அந்த கதையை கேட்டதிலிருந்தே
எனக்கு அந்த புதினத்தின் மீது நாட்டம் ஏற்பட்டு
விட்டது. அதனால் என்னால் அந்த கதையை மிகுந்த ஈடுப்பாட்டோடு இப்போது படிக்க முடிந்தது
என்று கூறி என்னை ஆச்சிரியத்துக்குள்ளாக்கினார்.
நாளை வேறு சில பதிவர்களுடன் உங்களை சந்திக்கிறேன்.
மேலும் வாசிக்க...
அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,
இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கி விட்டது. இருபது இருபத்தைந்து
வருடங்களுக்கு முன்பு சுற்றுலா போவது என்பது மிகவும் பெரிய விஷயம். அதிலும் வெளிநாட்டிற்கு
போவது என்பது ரொம்பவே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு இந்தியாவிற்குள்ளேயோ, வெளிநாட்டிற்கோ சுற்றுலா
போவது என்பது ஒரு கஷ்டமான காரியமே இல்லை.
வெளிநாட்டைப் பற்றி எழுதிய பதிவர்களைத்தான் இன்றைக்கு நாம சந்திக்கப்
போகிறோம்.
இந்திய பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு, ஏறக்குறைய எல்லா நாட்டிற்கும் விசா எடுத்தாக வேண்டும். விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில
நாடுகளுக்குத்தான் விசா எடுக்க வேண்டாம். எந்தெந்த நாடுகளுக்கு விசா வேண்டும் என்ற
விளக்கத்துடன் ஒரு பதிவை குட்லக் அஞ்சனா என்பவர் தன் தளத்தில் சொல்லியிருக்கிறார் -
விசா வாங்க வழிகாட்டும் இணையத்தளம் இதில் நீங்கள் www.visamap.net என்ற தளத்திற்கு
சென்று பார்த்தால் விசா தொடர்பான செய்திகள் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். (www.visamapper.com இயங்கவில்லை)
விசா எடுத்துட்டீங்க, விமானத்திற்கு டிக்கெட் போட வேண்டியது தானே, நாம் நிறைய
வலைப்பூக்களில் வீட்டுக்குத் தேவையான டிப்ஸ் படித்திருப்போம். இங்கு மழைக்காகிதம் என்ற
வலைப்பூவில் விமான பயணத்திற்கான டிப்ஸ் வழங்கியிருக்கிறார் - விமான பயண டிப்ஸ்
சரி,நீங்க விமான சீட்டும் எடுத்துட்டீங்க, ஆனா சில பல காரணங்களால்
உங்கள் விமான சேவையை ரத்து செய்து இருப்பார்கள்,அடுத்த விமானத்தில்
தான் நீங்கள் செல்ல முடியும் என்று நிலமை ஏற்படலாம். இது மாதிரி விஷயங்கள் விமானசேவையில்
நடக்கக்கூடியது தான். நம் நண்பர் நாடோடிக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே படியுங்கள் - எமிரேட் ஏர்லைன்ஸ் நீங்க நல்லா வரணும்
கீழே சொல்லியிருக்கிற எந்த நாடுகளுக்காவது உங்கள் விமானம் வந்து
இறங்கியிருக்கா?
ஹாங்காங்
ஹாங்காங்கிலிருந்து திரு, ராம் என்பவர் ஹாங்காங்கைப் பற்றிய அவர் முழுமையான
கட்டுரையை நமக்காக இங்கே எழுதியிருக்கிறார். ஹாங்காங் ஒரு அறிமுகம். உண்மையிலேயே ஒரு நாட்டைப் பற்றிய கட்டுரையை இந்த அளவிற்கு நான் எங்கேயும் படித்ததே
இல்லை. அந்த அளவிற்கு விஷயங்களை எளிய முறையில் விளக்கியிருக்கிறார். நான் முதற்கொண்டு, வெளிநாட்டில் இருக்கும் பதிவர்கள் எல்லாம் அந்த அந்த நாடுகளைப் பற்றி இம்மாதிரியான
ஒரு கட்டுரையை எழுதி பகிர்ந்துக்கொண்டால், மற்றவர்களுக்கு அது
பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்,
சிங்கப்பூர்
துபாய்/ஷார்ஜா
திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் முத்துச்சிதறல் என்ற வலைப்பூ மூலமாக துபாய்,ஷார்ஜா நாடுகளைப் பற்றி எழுதி
வருகிறார். துபாய் அழகு.
ஷார்ஜாவில் இருக்கும் ஒரு சிறிய மிருகக் காட்சிசாலையைப் பற்றி
இங்கே பார்க்கலாம் - போஷ் பாவ்
லண்டன்
மூத்த பதிவாளர் திரு.டுபுக்கு அவர்கள் விடுமுறைக்கு வேல்ஸ்
போன அனுபவத்தை இங்கே மூன்று பதிவுகளில் சொல்லியிருக்கிறார்.
ஜெர்மனி
டுபுக்குவைபோல் ஒரு மூத்த பதிவாளர் திருவாட்டி சுபாஷினி டிரெம்மெல்
அவர்கள் ஜெர்மனியில் நடக்கும் ஒரு சாலைத் திருவிழாவைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள்
- சாலைத் திருவிழா
மற்றுமொரு சகோதரி ஏஞ்சலின் அவர்கள் ஐரோப்பாவிற்கு சுற்றுலா போகிறவர்கள்
ஜெர்மனியை மிஸ் பண்ணக்கூடாது என்று கூறுகிறார்கள். ஊரைச் சுற்றி பார்ப்போம்
சுவிட்சர்லாண்ட்
சக பதிவாளர் கில்லர்கீ அவர்கள் சுவிட்ஸர்லேண்ட்டில் தனக்கு ஏற்பட்ட
ஒரு அனுபவத்தை இங்கே சொல்லியிருக்கிறார் - சுவிட்சர்லாண்ட்
இன்னும் நிறைய நாடுகளுக்கு செல்லலாம் தான், ஆனால் எதுவுமே ஒரு அளவோடு
இருந்தால் தான் நன்றாக இருக்கும். “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்னு” சும்மாவா
சொல்லியிருக்காங்க. அதனால, நான் இத்தோட இந்த பதிவை முடித்துக்கொள்கிறேன்.
நாளை வேறு சில பதிவர்களுடன் உங்களை சந்திக்கிறேன்.
மேலும் வாசிக்க...
அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,
இன்றைக்கு யாரையெல்லாம் அறிமுகப்படுத்தலாம்னு ஒரே யோசனையாக இருந்தது.
ஏற்கனவே என்னுடைய புகுந்த வீட்டின் உறவினர்களையும், வலைப்பூவிற்கு புதியவர்களையும், குழந்தை எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியாச்சு. அடுத்து பெண்களை அறிமுகப்படுத்தலாம்னு தோணுச்சு. ஆனா பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தாமல், பெண்ணியம்,பெண் சுதந்திரம் போன்ற பதிவுகளை எழுதியவர்களை
அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்தேன். அதிலும் பெண்ணியத்தை பற்றி பெண்களே சொல்லாமல், ஆண்கள் சொன்னால் எவ்வாறு இருக்கும் என்று ஒரு எண்ணம். என்னுடைய எண்ணத்திற்கு
ஈடு கொடுக்கும் விதமாக, நிறைய ஆண் எழுத்தாளர்கள் பெண் சுதந்திரத்தைப்
பற்றியும்,பெண்ணியத்தைப் பற்றியும் தங்கள் வலைப்பூக்களில் சொல்லியிருக்கிறார்கள்.
அவர்களிலிருந்து சிலரை மட்டும் உங்களுக்கு அறிமுகப்படுதுவது தான் இந்த பதிவு. இவர்கள்
உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகியிருக்கலாம். அதனால் அவர்களுடைய இந்த பதிவை மீண்டும்
படிக்கும் வாய்ப்பாக நினைத்துக்கொள்ளுங்கள்.
நான் இந்த தலைப்பை எடுத்துக் கொண்டதற்கு காரணம், நம் தாய் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெறுகிவிட்டது. தினமும் பத்திரிக்கைகளில் இந்த செய்திகள் இடம் பெறாமல் இருக்கிறதில்லை. அந்த அளவிற்கு அந்த குற்றங்கள் பெருகி விட்டது. இப்படியிருக்கின்ற சூழ்நிலையில், ஆண்கள் பெண்ணியத்தைப் பற்றியும் அவர்களின் சுதந்திரத்தைப் பற்றியும் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
தஞ்சாவூரான் ஐயா அவர்கள், பாரதி பயிலகம் வலைப்பூ என்ற இந்த வலைப்பூவில், இளம் பெண்கள் ஆண்களிடம் பழகும்போது ஒரு எல்லைக்கோட்டிற்குள் தான் பழக வேண்டும்
என்று கூறுகிறார். பெண் சுதந்திரம்
நந்தா என்பவர் பத்தினிப்பெண்கள் என்ற தலைப்பில் திருமணமான பெண்கள்
தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு அதனுள்ளேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள்
என்று கூறுகிறார். பத்தினிப் பெண்கள்
ஜாக்கி சேகர் என்ற இவர் பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் என்ற
வலைப்பூவில் பெண் சுதந்திரத்தைப் பற்றி ஒரு கவிதையை எழுதியிருக்கிறார். பெண் சுதந்திரம் உண்மையில் இந்த கவிதையில், நம் நாட்டில் மட்டும் தான் ஆண்கள் இப்படி சுதந்திரமாக இருக்க முடியும். அது
தான் இந்தியா...
தான்ஸ் என்கிற இவர் விளைச்சல் என்கிற இந்த வலைப்பூவில், பெண்களை பற்றி நினைத்தாலே, அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற சலுகைகள் தான் நியாபகத்துக்கு வருகின்றன
என்று அவருக்கு தெரிந்த வகையில் புலம்பியிருக்கிறார் . பெண்களைப் பற்றிய என்னுடைய எண்ணம்
கே.ஆர்.பி. செந்தில், தன்னுடைய வலைப்பூவில் தந்தைப் பெரியார் எழுதிய “பெண் எப்போது அடிமையானாள்”
என்ற புத்தகத்திலிருந்து சில கருத்துக்களை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அடுத்து ஜெயதேவ் என்பவர் தன்னுடைய வலைப்பூவில் பெண் விடுதலையைப்
பற்றி சொல்லியிருக்கிறார். பெண் விடுதலை
தமிழ்மணி என்பவர் தன்னுடைய வலைப்பூவில் தன் தாய்,சஓக்தரி,தன்னுடன் வேலைப் பார்க்கும் தோழி, உடன்பிறவா சகோதரியின்
மகள் என்று நான்கு பேரிடமும் சில கேள்விகளைக் கேட்டு அவர்களின் பதில்களை அலசுகிறார். பெண்கள் மத்தியில் பெண்ணியம்
சுவாமி வித்தியானந்தா என்பவர், இந்தியாவில் பெண்களின் சுதந்திரத்தைப்
பற்றி புராணங்களோடும், சாஸ்திரங்களோடும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.
இந்தியாவில் பெண்களின் சுதந்திரம்
நாளை வேறு சில பதிவர்களுடன் உங்களை சந்திக்கிறேன்.
மேலும் வாசிக்க...
அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,
இன்றைக்கு நான் வலைப்பூ உலகில் பிறந்து ஒரு வயது கூட நிறைவடையாமல்
இருக்கும் குழந்தைகளையும் மேலும் ஒரு வயதே ஆன குழந்தைகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம்
என்று இருக்கிறேன். இதில் சில குழந்தைகள் தங்களின் வயதுக்கு மீறிய வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள்
(100க்கும் அதிகமான படைப்புகளை படைத்திருக்கிறார்கள்) இருப்பினும் அவர்களை நாம் சரியாக
கவனிக்காமல் விட்டுவிட்டோம். அதனால் அவர்களை மீண்டும் இந்த பதிவின் மூலம் உங்களின்
பார்வை அந்த குழந்தைகளின் மீது பட வேண்டும் என்று எண்ணுகிறேன். என்னையும் இப்படித்தான்
ஸ்கூல் பையன் அவர்கள் உங்களிடம் அறிமுகப்படுத்தியதால், என்னாலும் இந்த அளவு வளர
முடிந்தது. அதுபோல் அவர்களும் வளர வேண்டும்.
சரி இனி அந்த குழந்தைகளைப் பார்ப்போமா.
"உமையாள் காயத்ரி" என்ற வலைப்பூவை 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்
தொடங்கி இன்று வரை 123 பதிவுகளை திருமதி
உமையாள் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இந்த பதிவில் செட்டி நாட்டு வெள்ளைப் பணியாரம் - இவர் செட்டிநாட்டு பலகாரமான “வெள்ளைப் பணியாரத்தின்”
செய்முறையை விளக்கியிருக்கிறார்.
"சுதா’ஸ் போயெம்ஸ் (sutha’s poems)" என்ற வலைப்பூவில் சுதா யுவராஜ்
என்பவர் 2013ஆம் ஆண்டு நவம்பர் முதல் கவிதைகளை எழுதி வருகறார். இந்த பதிவில் நெஞ்சம் பொறுக்குதில்லையே - என்று நம் தேசத்தை நினைத்து குமறுகிறார்.
சந்தோஷ் குமார் என்னும் இவர் "கவிப்படைப்புகள்" என்ற வலைப்பூவில்
2013ஆம் ஆண்டு ஜூலை முதல் 67 பதிவுகளை எழுதியுள்ளார். இந்த பதிவில் அலைபேசியில் சீரழியும் இளம் சிறார்கள் - அலைபேசியினால் இளம் சிறார்கள் எவ்வாறு சீரழிகிறார்கள் என்று தன்னுடைய ஆதங்கத்தை
கவிதையாய் கொட்டியிருக்கிறார்.
திரு.பிச்சையா என்பவர் “அய்யவின் களஞ்சியம்” என்ற வலைப்பூவில்
இந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி 46 பதிவுகளை எழுதியுள்ளார். இந்த பதிவில் என்ன இது அநியாயம் - நம் தொப்புள் கொடி உறவுகளான
இலங்கை தமிழ் உறவினர்களை எண்ணி மனம் வேதனைபடுகிறார்.
மீரா ப்லாசம் என்பவர் தன் "எண்ணத்துரிகையை" 2013ஆம் ஆண்டு அக்டோபர்
மாதத்தில் தொடங்கி 80 பதிவுகளை எழுதியிருக்கிறார். இந்த பதிவில் காகிதத்தில் ஒரு காடு ஒரு தூரிகையைக் கொண்டு ஒரு வானத்தை வரைந்து, அதில் எவ்வாறு அவர்
அரசியானார் என்பதை மிக அழகாக கவிதைத்துவமாய் சொல்லியிருக்கிறார்.
பாண்டி பிரியன் என்பவர் "கனவுப்பிரியன்" என்ற பெயரில் வலைப்பூவை
2013ஆண்டு ஜூலை
மாதத்தில் தொடங்கி 159 பதிவுகளை எழுதியிருக்கிறார். இந்த பதிவில் மனைவி அமைவதெல்லாம் - அவருக்கு எப்படி நல்ல மனைவி அமைந்திருக்கிறார் என்று சொல்கிறார்
நாளை வேறு சில பதிவர்களுடன் உங்களை சந்திக்கிறேன்.
மேலும் வாசிக்க...
அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,
இந்த பதிவு
மற்ற வலைப்பூ எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் பதிவு இல்லை. மாறாக குழந்தைகளையும் எழுத்து
உலகத்திற்குள் பயணிக்க ஊக்குவிக்கும் பதிவாகும்.
என்னைப் பொறுத்தவரை
எழுதும் பழக்கம் நம்மோடு முடிந்து விடக்கூடாது. அடுத்த தலைமுறையினருக்கும் அதை கொண்டு
செல்ல வேண்டும் என்பது தான் ஆசை. அதனால் நாம் எல்லோரும் நம்முடைய குழந்தைகளை எழுதுவதற்கு
ஊக்குவிப்போம். அவர்களை ஊக்குவிப்பதற்கு குழந்தை எழுத்தாளர்களைப் பற்றி சொல்லி
அவர்களுக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கலாம். சரி, முதலில் இரண்டு பிரபலமான
குழந்தை எழுத்தாளர்களை பார்க்கலாம்.
மேல உள்ள
படத்தில் தோன்றுபவரின் பெயர் - ஹர்ஷிதா மேக்டம் (இவரைப் பற்றிய
செய்தியை நான் பத்திரிக்கையில் படித்து மிகவும் வியந்து போனேன்). இவர் 12 வயதில் முதல் நாவலையும் 14 வயதில் மற்றொரு நாவலையும்
எழுதி வெளியிட்டிருக்கிறார். அந்த இரண்டு நாவல்களுமே ஆங்கில நாவல்கள் தான். முதல் நாவலின்
பெயர் “ரூபி ரஷ்” இது ஒரு சயின்ஸ் பிக்ஷன்
நாவலாகும். லண்டனை கதைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலாகும். மற்றொரு நாவல் 'அல்மோஸ்ட்... டெஸ்பெரேட்' என்ற ஃபிக்ஷன் த்ரில்லர் நாவல். இது ஸ்வீடனை கதைக்களமாகக்
கொண்டு எழுதப்பட்ட நாவலாகும். இதில் முக்கியமான விஷயம்,அந்த இரு நாடுகளுக்கும் அவர்
சென்றதில்லை என்பது தான். பள்ளிக்கூடம் போய் படிக்கிற வயதில் எப்படி இந்த ஆர்வம் வந்தது
என்று கேட்டால், அவருடைய தந்தை நிறைய புத்தகங்களை வாங்கிக் கொடுத்து ‘வாசிப்பு என்பது
வரம்’ என்று சொல்லி ஊக்கப்படுத்தியிருக்கிறார். பிறகு அந்த வாசிப்பே அவரை எழுத தூண்டியிருக்கிறது.

மற்றொரு குழந்தை ஸ்காட்லாண்ட்டைச் சேர்ந்த
பள்ளிக்கூட மாணவி மார்த்தா பேய்ன் (‘Martha Payne’) அவர் தன்னுடைய வலைப்பூவான NEVERSECONDSவில்
ஆரம்ப நிலை பள்ளிக்கூடத்தில் வழங்கப்படும் மதிய உணவினை பற்றி எழுதி வருகிறார். இரண்டு
வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட அந்த வலைப்பூ தற்சமயம் பத்து மில்லியன் ஹிட்ஸ்ஸை
கடந்து சாதனை புரிந்து வருகிறது. இந்த வலைப்பூவை ஆரம்பிக்கும்போது அவருக்கு ஒன்பது
வயது தான். ஆரம்பத்தில் அவருக்கு இந்த வலைப்பூவை தொடரமுடியாதபடி பள்ளியிலிருந்து பிரச்சனை
ஏற்பட்டிருக்கு, ஆனால் அவருக்கு ஊடகத்துறையும், மக்களுக்கு ஆதரவளித்ததைத் தொடர்ந்து,
அவர் அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்.
எனக்குத் தெரிந்து நம் வலைப்பூ நண்பர்கள்
வட்டத்தில் இருந்து திரு.வெங்கட் நாகராஜ் அவர்களின் மகளான செல்வி. ரோஷினி வெங்கட் மட்டும்
தனியாக வலைப்பூவை ஆரம்பித்து அதில் படங்களை வரைந்து கொண்டு வருகிறார். வெளிச்சக்கீற்றுகள்
பெரியவர்கள் நாம் உற்சாகம் அடைவதற்கு,
மற்றவர்களின் பாராட்டுக்கள் தேவையாக இருக்கிறது. அப்படியிருக்க குழந்தைகளின் படைப்புகளை
கண்டிப்பாக நாம் பாராட்டினால் தான் அவர்கள் மேன்மேலும் தங்களை வளர்த்துக்கொள்வார்கள்.
அதனால் வேறு எந்த குழந்தையாவது வலைப்பூவையில் (தமிழிலோ,ஆங்கிலத்திலோ) எழுதிக் கொண்டிருக்கிறார்கள்
அல்லது வரைந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தால் சொல்லுங்கள், நான் அவர்களையும்
இந்த பதிவில் சேர்க்கிறேன்.
சென்ற ஆண்டு இங்கு சிட்னியில் ‘உலகத்
தமிழ் இலக்கிய மாநாடு” நடைபெற்றது, அதில் தமிழ் பள்ளியில் படிக்கும் குழந்தைகளும் கலந்து
கொள்ள வேண்டும் என்பதற்காகவே மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை மாநாட்டு மலரில் வெளியிட்டார்கள்.
அதில் எங்கள் பள்ளியிலிருந்து 6 குழந்தைகளின் கட்டுரைகள் வெளிவந்தன. இரண்டு குழந்தைகள்
தாமாதமாக கட்டுரைகளை படைத்தமையால் மலரில் வெளியிடப்படவில்லை. இந்த 8 பேரின் கட்டுரைகளையும்
நான் என்னுடைய வலைப்பூவில் வெளியிட்டிருந்தேன். அந்த கட்டுரைகள் இதோ:
முடிந்தால்
இன்று மாலையே மற்றொரு பதிவில் வேறு சில பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன்.
மற்றொரு குழந்தை எழுத்தாளர் - நம் பதிவுலக சகோதரி ராஜி அவர்களின் மகள் தூயாவின் எழுத்துக்களில் - தேவதையின் கனவுகள்
மற்றுமொரு குழந்தை எழுத்தாளர் - நம் பதிவுலக சகோதரி ஏஞ்சலின் அவர்களின் மகளின் கைவண்ணத்தில் - Flowers Crafty Room
இப்படி குழந்தைகளின் வலைப்பூக்களை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
மேலும் வாசிக்க...