வலைச்சரத்தின் ஐந்தாம் நாள் - கதம்பம்
➦➠ by:
S.P.செந்தில்குமார்
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,
வலைச்சரத்தில் ஐந்தாம் நாளாக அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய வலைச்சரம் பலவண்ண மலர்களைக் கொண்ட கதம்பமாக மலர்கிறது.
http://veesuthendral.blogspot.in/
![]() |
| பதிவர்: சசிகலா |
இன்றைய இளம் கவிஞர்கள் பெரும்பாலும் உரைநடையை அப்படியே மூன்று நான்கு வார்த்தைகளுக்கு ஒரு வரியாக ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதி புதுக்கவிதை என்று சொல்லிவிடுகிறார்கள். ஏனென்றால் அதற்குதான் விதிமுறைகளே இல்லையே. ஆனால், மரபுக் கவிதைகள் அப்படியல்ல. அதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள், சந்தங்கள் உண்டு. அதற்குள் வார்த்தைகளை கச்சிதமாக பொருத்துவது ஒரு கலை. அந்தக் கலை இவருக்கு இயல்பாகவே கைவந்திருக்கிறது.
எழுத நினைத்த காதல் கடிதம்
http://veesuthendral.blogspot.in/2013/06/blog-post_26.html
காதலின் தவிப்பை அற்புதமாய் சொல்லும் இந்த 'எழுத நினைத்த காதல் கடிதம்' ஒரு காலப்பெட்டகம். இவரின் எழுத்து ஆளுமைக்கு இந்த ஒரு பதிவே போதும்.
* * * * *
@@@@@@@@@@@@@@@@@@
* * * * *
@@@@@@@@@@@@@@@@@@
http://puthur-vns.blogspot.com/
![]() |
| பதிவர்: வே.நடனசபாபதி |
தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து, அதை திறம்பட வழங்கி வருபவர். வங்கியில் அதிகாரியாக இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பல்வேறு சுவைகளில் பதிவுகளாக தந்து கொண்டிருப்பவர். எங்களின் பத்திரிகையில் கூட இவரின் 'ஏமாற்றுவதும் ஒரு கலைதான்' தொடராக வரவுள்ளது.
http://puthur-vns.blogspot.com/2014/01/blog-post_4969.html#more
பெரியவர்கள் கொஞ்சம் மெதுவாத்தான் நடமாடுவார்கள். எதாவது கேட்டால் கொஞ்சம் யோசித்துதான் பதில் சொல்வார்கள். அதற்கு காரணம் முதுமையால் மூளை மந்தமாகி விட்டதாக எல்லோரும் நினைப்பார்கள். அது உண்மையில்லை. அதற்கு வேறொரு காரணம் இருக்கிறது என்பதை இந்த பதிவில் படிக்கும் போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. படித்துப் பாருங்கள்!
* * * * *
http://puthur-vns.blogspot.com/2014/06/2.html
என்னதான் விவரமானவர்களாக இருந்தாலும் ஏமாற்றுபவர்கள் அதற்கு மேல் விவரமாக இருக்கிறார்கள். மனிதர்களை எத்தனை விதத்தில் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதை ஒவ்வொரு பதிவிலும் இவர் சொல்லி செல்வது அபாரம்! 'ஏமாற்றுவதும் ஒரு கலைதான்' என்ற இந்த தொடர் பதிவு முழுவதையும் படிப்பவர்கள் அத்தனை விரைவில் ஏமாறமாட்டார்கள் என்பது உறுதி!
* * * * *
* * * * *
@@@@@@@@@@@@@@@@@@
gmbat1649.blogspot.in
http://gmbat1649.blogspot.in/2015/05/blog-post.html
ஏழை எளியவர்களும் கிராமத்து மக்களும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகத்தான் காமராஜர் ஒவ்வொரு மூன்று கி.மீ.க்கும் ஒரு பள்ளிக்கூடம் இருக்க வேண்டும் என்றார். ஆனால், இன்று நாம் மீண்டும் கல்வியை வசதி படைத்தவர்களுக்கு மட்டுமானதாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். யாரோ ஒரு கல்விக் கொள்ளையன் வசதியாக வாழ்வதற்கு நாம் தரமான கல்வி என்ற பெயரில் கொட்டிக்கொட்டிக் கொடுக்கிறோம். இன்றைய அனைவருக்கும் சமமாக கிடைக்காத கல்வியைப் பற்றி அலசியிருக்கிறார் ஜிஎம்பி!
* * * * *
http://gmbat1649.blogspot.in/2015/06/blog-post_19.html
பருவத்து ஆண்கள் பலருக்கும் இருக்கும் பிரச்சனைதான் இது. முன் தோல் பின்னுக்கு செல்லாமை. இது திருமணத்தில் தொந்தரவு தரும். அதனால்தான் பெரியவர்கள், வலித்தாலும் பரவாயில்லை கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னுக்கு இழுத்துப் பழக்கிக்கொள் என்பார்கள். இல்லையென்றால் அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும். இன்றைக்கு பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்குமான இடைவெளி அதிகமாகி விட்டது. அதனால் இது போன்ற அறிவுரைகளை யாரும் தருவதில்லை. அய்யா ஜிஎம்பி கதை போல் இதை சொன்னவிதம் அருமை. பருவ வயதில் இருக்கும் ஆண்களுக்கு அவசியத் தேவை.
* * * * *
@@@@@@@@@@@@@@@@@@
http://thillaiakathuchronicles.blogspot.com/
![]() |
| பதிவர்கள்: துளசிதரன் - கீதா நான் பொறாமைப்படும் இரட்டைப் பதிவர்கள் இவர்கள். மிக்க ஞானம் பெற்றவர்கள். பின்னூட்டத்திலேயே பல விவரங்களை கூறும் வல்லமைப் பெற்றவர்கள். தேர்வெழுதி மதிப்பெண்ணுக்காக காத்திருக்கும் மாணவன் போல் பதிவெழுதி, இவர்களின் கருத்துக்காக எப்போதும் காத்திருப்பேன். மதிப்புமிக்க கருத்துக்களாகவே அவைகள் இருக்கும். இவர்கள் பின்னூட்டம் இடும் பாணி வியப்பின் உச்சத்திற்கே அழைத்து செல்கிறது. தமிழ் தொ(ல்)லைக் காட்சித் தொடர்களும்,பெண்களும்
http://thillaiakathuchronicles.blogspot.com/2015/04/Tamil-Serials-Tamil-Women.html
|
தொலைகாட்சித் தொடர் நம்மை எப்படியெல்லாம் தொல்லை செய்கிறது என்பதை தனது தோழியின் வீட்டுக்கு சென்ற அனுபவத்தோடு விவரிக்கிறார் கீதா. இன்றைய யுகத்திற்கு ஏற்ற பதிவு.
* * * * *
http://thillaiakathuchronicles.blogspot.com/2015/04/Teakwood-Museum-Nilambur-Kerala.html
கேரளாவில் இருக்கும் தேக்குமர அருங்காட்சியகத்தை பற்றி இந்த பதிவில் படித்துப் பாருங்கள். ஒரு ஆய்வுக் கட்டுரையோ என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு தகவல்கள் குவிந்துக் கிடக்கும். அதுதான் இவர்களின் பாணி. எந்தவொரு விஷயத்தையும் மிக ஆழமாக அலசுபவர்கள். வாசித்துப் பாருங்கள் நாம் அருங்காட்சியகத்தை வலம் வந்த உணர்வு தோன்றும்.
* * * * *
@@@@@@@@@@@@@@@@@@
http://www.nisaptham.com/
![]() |
| பதிவர்: வா.மணிகண்டன் |
பொறியியல் பட்டம் பெற்று பெரும் நிறுவனத்தில் பணியாற்றினாலும் இவர் கதை, கவிதை, கட்டுரை, வலைப்பதிவு என்று எப்போதும் இலக்கியத்துடனே பயணித்துக் கொண்டிருப்பவர். 'கண்ணாடியில் நகரும் வெயில்' கவிதை தொகுப்பின் மூலம் இலக்கிய வெளிக்கு அறிமுகமானவர். தினமும் பதிவெழுதுபவர். அவை அனைத்தையுமே சுவராசியமாய் தருபவர். நிசப்தம் என்ற அறக்கட்டளை மூலம் பலருக்கும் உதவி வருபவர்
ஐடி வேலை எப்படி?
http://www.nisaptham.com/2015/06/blog-post
ஐடி வேலை நிரந்தரமற்றதா? அவர்கள் மனநிலை பாதிக்கப்படுகிறார்களா? போன்ற சில அடிப்படை கேள்விக்கு இந்த பதிவு தெளிவான பதிலை சொல்கிறது. புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதன் மூலம் நீடித்து பணியில் நிலைக்கலாம். அதை செய்ய மறுப்பவர்கள் வேலை இழக்கிறார்கள். படித்துப் பாருங்கள் குழம்பிய மனம் தெளிவு பெரும்.
* * * * *
எப்படி மனசுக்குள் வந்தாய்
http://www.nisaptham.com/2012/09/blog-post_10.html
சிறுகதை விரும்பிகளுக்கு இது ஒரு அருமையான பதிவு. தங்குதடையின்றி தெளிவான நீரோட்டம் போல் செல்லும் இந்த கதை மனப்பிறழ்வை அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது.
* * * * *
@@@@@@@@@@@@@@@@@@
இன்றைய பதிவு தங்களுக்குப் பிடித்திருந்ததா..!
அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்,
எஸ்.பி.செந்தில்குமார்
இன்றைய பதிவு தங்களுக்குப் பிடித்திருந்ததா..!
அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்,
எஸ்.பி.செந்தில்குமார்






















































