07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 6, 2009

இனிய நண்பர்


இண்ணைக்கு அறிமுகம் செல்வேந்திரன்.

ரமேஷ் வைத்யா மாதிரி பத்திரிக்கையுலக அனுபவசாலிகளோட ஒரே சமயத்துல வேல பாத்தவரு இவரு. மார்க்கெட்டிங்கல இருந்தவரு. இப்பவும் வேற நிறுவனத்துல இருக்குறவரு.

ரமேஷ் வைத்யாதான் போன்ல பேசுறப்போ இவரப் பத்திச் சொன்னாரு. கோயமுத்தூர்லதான் அப்ப நானு இருந்ததால ஃபாரஸ்ட் காலேஜுக்கு வரவழைச்சுப் பேசினேன். நெம்ப ஜாலியான ஆளு. அப்றமேல்ட்டு அடிக்கடி சந்திப்போம். நெம்ப க்ளோஸ் ஆயிட்டோம்.

நல்லா விஷயஞானம் இருக்குறவரு. எந்த விஷயத்தையும் உணர்ச்சிபூர்வமா அணுகாம அறிவு பூர்வமா அணுகுவாரு. கொம்புசீவிகள்கிட்ட மாட்டிக்காம லாவகமாத் தப்பிச்சுக்குவாரு. ”உங்க எச்சில் மணக்குது. ஒங்க பாதம் பட்ட மண் எடுத்துப் பல்லு வெளக்கலாம்” னெல்லாம் பின்புறம் சொறிஞ்சவங்களையும் அசால்டாப் புறந்தள்ளிக் கேலிச் சிரிப்புச் சிரிக்கும் அறிவுள்ளவரு. க்ரூப் பாலிடிக்ஸ்லயும் சிக்காதவரு.

அரசியல் நீங்கலான இவரது கட்டுரைகளைப் படிப்பேன். கருத்துக்கள் நல்லாருக்கும். நடையும் நல்லாருக்கும். புதுப்புது மாதிரி வார்த்தைகளை யூஸ் பண்ணுவாரு. ஆனாப் பாருங்க... மனுஷனுக்குத் தமிழ் சரியா எழுத வராம இருந்துச்சு. நான் சாம, தான, பேத, தண்ட முறைகளைப் பயன்படுத்தினதுக்கப்பறம் இப்பம் ஓரளவுக்குத் தப்பில்லாம எழுதுறாரு. (இதைப் பிற்காலத்துல இவரு சுய சரிதை எழுதுறப்போ என்னையப் பத்தி அவசியம் குறிப்பிட்டே ஆகோணும்!)

இவருகிட்ட நான் பயப் படுற இன்னொரு விஷயம் கவிதை.

“நான் சுஞ்சா நீ மூச்சா” ங்குற மாதிரியாகப்பட்ட கவிதைகளை இவரு படிக்காமையும் படைக்கமையும் இருந்தா மெல்லத் தமிழ் இனி வளரும்.

இவரு பதிவுக்கு இங்கே பாருங்க :
http://www.selventhiran.blogspot.com/

சரி நம்ப டச் எங்கேங்குறீங்களா? பொறுங்க. தொடர்ந்து படிங்க.

என்ர எடத்துக்கு ஒருக்கா வந்திருந்தாரு. அண்ணைக்கு ஜீப்புல ஊரெல்லாஞ் சுத்திட்டு ஊட்டுக்குத் திலும்பறப்போ 245 போட்டோ எடுத்த களைப்புல கொஞ்ச நேரம் அமைதியா வந்த செல்வேந்திரன் மொள்ளமாப் பேச ஆரமிக்கிறாரு.

“லதானந்த் சார்! ஒங்களத் தாக்கி ’மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்கள்’ அப்படினு ஒரு பதிவு போட்ருந்தனே?”

(செல்வேந்திரனின் அந்தப் பதிவுக்கும் என்னோட பதிலுக்கும் இங்க பாருங்க.
http://lathananthpakkam.blogspot.com/2008/10/blog-post_27.html)

”ஆமா! அதுக்கென்ன இப்ப?”

“நான் அப்படி எழுதிருக்கக் கூடாதுனு அடிக்கடி நெனைப்பேன்!”

“ஏம்ப்பா அப்பிடி நெனைக்கிறே?” எனக்கும் குரல் கம்மிப் போச்சு.

இப்ப செல்வேந்திரன் குரல் நெம்ப நெகிழ்சியா இருக்கு. மனவெழுச்சியும் சந்துஷ்டியும் கொரல்ல வழியுது. எங்கியோ மோன வெளிய உத்துப் பாத்துகிட்டே தனக்குத்தானே பேசுற மாதிரி நெம்ப மொள்ளமா ஒவ்வொரு வார்த்தையா உச்சரிக்கிறாரு.

“மோசமான எழுத்தாளனின் இருபத்தேழு அடையாளங்கள்னு எழுதியிருக்கணும் சார்!”

க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச். இன்னொரு சடன் ப்ரேக்!
*************
சரி! சரி!
கேள்வி பதில் போட்டு நெம்ப நாளாச்சு! கேக்குறீங்களா? சொல்றேன்!



******************************************************************

மேலும் வாசிக்க...

Tuesday, May 5, 2009

(ஒளி ஓவியம் படைத்தவர் நந்து, F/o, நிலா இண்ணைக்கு வனவிலங்குக்கணக்கெடுப்பின்போது)

இப்ப நான் சொல்லப் போறது திருமதி.ஷைலஜா பத்தி. இவிங்களும் எனக்குப் பின்னூட்டம் போட்டது மூலமா அறிமுகமானவிங்க. மொதல்ல ஆம்பிளைனு நெனைச்சேன். அப்புறமாப் போன்ல பேசுனாங்க. பெங்களூர்ல இருக்காங்க.

நான் வெண்பாப் போட்டி ஒண்ணு வெச்சிருந்தேன். அதுல ரண்டாவது ப்ரைஸ் வாங்கினாங்க. அதுக்கு ஒரு வெப் கேமிரா பரிசாக் குடுக்ககத் தீர்மானிச்சு வாங்கியும் ஆச்சு. நேர்ல சந்திக்கிறப்போக் குடுங்கனு சொன்னாங்க. நேர்ல போன வாரம் சந்திக்க ஏற்பாடாச்சு. அதுக்குள்ள வேற அவசர வேலைகள் குறுக்க வந்து பயணத்த ஒத்தி வெச்சாச்சு.

அடுத்த மாசம் எடை குறைப்புக்காகவும் யோகா பயிற்சிக்காகவும் கோபிக்கு வர்ரன்னு சொல்லியிருக்காங்க. அப்ப நேர்ல பாக்கலாம்னு முடிவாயிருக்கு. பாப்பம். நானும் அவிங்களோட அந்தக் கோர்சில சேந்து எடையக் கொறச்சு யோகா கத்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

இவிங்களும் ஒரு பலமான இலக்கியப் பின்னணியுள்ள குடும்பத்திலேருந்து வந்தவிங்க. நெம்பக கதை கட்டுரை கவிதையெல்லாம் எழுதுவாங்க. நெம்ப டமாசா எழுதுவாங்க. இவிங்க மைசூர்ப்பாகு கட்டுரை நெம்ப ஃபேமஸ்.

இலக்கியம், ஆன்மிகம், சமையல், மையல் இப்படி எல்லா சப்ஜக்ட்லயும் பூந்து வெளையாடுவாங்க. மயில், மான் இதுகளைப் பத்தி வெலாவரி பண்ணுன கட்டுரை எனக்கு நெம்பப் புடிச்சது. நச்சத்திரப் பதிவரா நெம்ப ’நன்னா’ எழுதியிருந்தாங்க.

விளம்பரங்களுக்குக் குரல் குடுத்திருக்காங்க. டெலிவிஷன் டாக் ஷோவுல கலக்குவாங்க. (talk show வுங்க!)

சமீபத்துல குடும்பநாவலில் இவிங்களோட ”காத்திருக்கிறேன் வா”ங்கிற நாவல் வந்திருக்கு. நெம்ப நல்லா இருக்கு. படிங்க. எல்லா வார இதழ்களிலும் இவரது கதை கட்டுரைகளைக் கேட்டு வாங்கிப் போடுறாங்க. ஓவியம் போன்ற fine arts களிலும் ஆர்வம் உள்ளவிங்க.

நெம்ப நல்லாப் பாடுவாங்க. குறிப்பா, ”துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?” அப்படினு அவிங்க பாடுவாங்க பாருங்க. நெம்ப நல்லாருக்கும்.

திருமதி ஷைலஜா அவிங்களோட வலைப் பூ முகவரி :

http://shylajan.blogspot.com/

லதாகிட்ட ஒருக்கா ஷைலஜாவுட இசைத் திறமை பத்திச் சொல்லிட்டு, “ஏங் கண்ணு! நீயும் எதாவது பாட்டுப் படியேன்?” அப்படினு கேட்டேன்.

லதாளுக்கு நெம்ப சந்தோஷமாயிருச்சு.

கல்லாட்டம் ஆடுறப்போ ஒண்ணு, ரண்டு, மூணு எண்ணிட்டே கல்ல மேல போட்டுப் புடிக்கிறப்போ அதப் பாட்டாப் படிச்சிட்டு ஆடுவமே! அதப் பாடுட்டுமாங்?”

”பாடு! பாடு!”

“ஒண்ணுலருந்து அஞ்சு வரைக்கும் மறந்து போச்சுங். ஆர்லெருந்து பத்து வரைக்கும் பாடுட்டுமாங்?”

“செரி ஆத்தா!”

லதா குரலெடுத்துப் பாட ஆரமிச்சா!

”ஆறெட்டுக் கோரட்டு - கோரட்டுக் கச்சேரி
ஏளக் கண்ணாட்டி - எங்க பண்ணாட்டி
எட்டாச்சிக் கோட்ட - தும்பலப் பேட்ட
ஒம்பாச் சம்பா - சமைச்சாத் திம்பா
பத்தர சித்தர சாமிக்குச் - சித்தர மாசந் தெரட்டி!”

காதுல தேனீ பாஞ்ச மாதிரி இருந்துச்சு!
*****************************************************************
மேலும் வாசிக்க...

Monday, May 4, 2009

முதல் மரியாதை


ஆச்சு! இந்த மே மாசம் நாலாந் தேதியோட வலைப் பூ எழுத ஆரமிச்சு ஒரு வருசம் ஆச்சு! செரியா ஒரு வருசங் கழிச்சு இண்ணைக்கு அதே மே 4ஆம் தேதி வலைச் சரப் பொறுப்பு!
நெம்ப நாளா சீனா கேட்டுகிட்டே இருந்தாரு. ’வலைச் சரம் ஆசிரியரா இருங்க’னு. இப்ப வேண்டாம் உண்ணொருக்காப் பாப்பமனு தப்பிச்சுகிட்டே இருந்தேன். வலைச் சரம் ஆசிரியரா ஒரு வாரம் இருக்குறதுல எனக்குச் சில சங்கடங்க இருந்துச்சு.

மொதோக் காரணம்.... எனக்கு முந்தி இதுக்கு ஆசிரியரா இருந்தவிங்க பட்டியல்ல இருந்த சில பேரு! இவிங்கல்லாம் ஆசிரியரா இருந்த எடத்துல நாம எப்படி இருக்குறதுனு ஒரு ஓசனை….. அவ்வளவு பெரியவிங்க அவிங்க!

ரண்டாவது காரணம் இதுல வலைப் பதிவருங்கள அறிமுகம் பண்ண வேண்டியிருக்கும். நம்பளுக்குப் பின்னூட்டம் போடறவிங்க, போன்ல பேசுறவிங்க, ஈமெயில் அனுப்புறவிங்க, நேர்ல பாத்தவிங்களத் தவிர வேற ஆரு ப்ளாக்கையும் நாம படிக்கிறது கெடையாது. அவிங்கள்ள முக்காவாசிப் பேர அல்லாத்துகும் ஏற்கனவே தெரியும். வலைச்சரம் ஆசிரியரானதுக்கப்பறம் அதுல எழுதறதுக்கோசரம் அல்லாரோடைய ப்ளாக்குங்களெல்லாத்தையும் படிக்க நேரமுஞ் சிக்காது. படிக்கவும் முடியாது. படிச்சா லேசா அஜீர்ணமாவும் ஆயிரும்.

மூணாவது காரணம், ’தமிழ்மணம் நச்சத்திரமா இருந்தப்போ எனக்குப் புடிச்ச சில ப்ளாகருங்களப் பத்தி எழுதியாச்சு. புதுசா என்ன இருக்கு எழுதறதுக்கு?’ அப்படிங்குற ஓசனை வேற.

நாலாவது காரணம் அரசியல், க்ரூப்பிஸம், சினிமா இதெல்லாம் நம்பளுக்கு லேசா அலர்ஜி. அதனால இப்பவே க்ளியராச் சொல்லிப்போட்றன். பதிவர அறிமுகப் படுத்துனா அவிங்களோட எல்லாப் பதிவையும் சிபாரிசு பண்றேன்னு அர்த்தமில்ல. எனக்குப் புடிச்ச மாதிரி சில பதிவுகள் இருக்கு. அவ்வளவுதான். சரியா? குறிப்பா அரசியல் பத்தின அவிங்க பார்வைக்கும் எனக்கும் சம்பந்தமில்ல. ரைட்?

சரி! மார்ச் வேலைகளும் முடிஞ்சாசா? லேசா ஃப்ரீ டைமுங் கெடைச்சுதா? அதனால வலைச் சரத்துக்கும் ஆசிரியரா இருந்து பாத்தர்லாம்னு சம்மதம் சொல்லிப் போட்டேன்.

நம்பளுக்கு நெம்பப் பேரத் தெரியாதுங்குறதால தெனோம் ஒண்ணு அல்லது ரெண்டு பதிவருங்களப் பத்தி மட்டும் எழுதுறேன். சரியா?

மொதோ மொத நா சொல்ல விரும்புறவரு

வடகரை வேலன்.

பதிவர் வட்டத்துல இவர அண்ணாச்சி அப்படினு அன்போட அழைப்பாங்க. ஏற்கனவே பரவலா அறியப்பட்டவருதான் இவரு. இவருகிட்ட எனக்கு நெம்பப் புடிச்ச விஷயம் வட்டார வழக்குல – குறிப்பாத் திருநெல்வேலி நடையில நெம்ப அழகா எழுதுவாரு.

நகைச்சுவை, நையாண்டி இதெல்லாம் கலந்து கட்டுரைகளிலும் வெளாசுவாரு. கவிதையிலும் நல்ல ஈடுபாடு இருக்கு. மித்தவிங்க எழுதின தரமான கவிதைகளை அறிமுகம் செய்வாரு. ஆனாலும் கவிதையெல்லாம் நெம்ப எழுதிப் பயப்படுத்தமாட்டாரு.

சிறுகதை மாதிரியும் சிலது அப்பப்ப எழுதுவாரு. ‘கதம்பம்’ அப்படினு ஒரு தலைப்பை ஒரிஜினலா இவரே கண்டு புடிச்சு அதுல பல விஷயங்களையும் எழுதிகிட்டு வர்ராரு.

தனது குடும்பத்தார் மேல பிரியம் பொங்க இவரு எழுதுன ரண்டு மூணு பதிவுங்கள நெம்ப விஸ்காப் படிப்பேன்.

நான் பிளாக் எழுத ஆரமிச்ச காலத்தில அடிக்கடி பின்னூட்டம் போடுவாரு. “எந்தக் கோஷ்டியிலயும் ஐக்கியமாயிராதீங்க. கொம்புசீவிங்க கிட்டச் சாக்கிரிதி” அப்படினெல்லாம் புத்திமதி சொல்லியிருக்காரு. இதைப் புதுசாப் பதிவெழுதுற அல்லாரும் நாபகம் வெச்சுக்கோணும்கிறது என்ர ஆசை. (அவரும் நாபகம் வெச்சுக்குறதும் நெம்ப நல்லது.)

நண்பர்கள் மேல நெம்ப மதிப்பு வெச்சிருக்கிறவரு.

கோயமுத்தூர் ரேஸ்கோர்ஸ்ல ஒரு இலக்கிய மீட்டிங் நடக்குதுனு(ம், அங்க கலந்துக்கிறவிங்களுக்கு மீட்டிங் முடிஞ்சதும் குடுக்கிற டிப்பன் நெம்ப நல்லாருக்கும்னும்) கேள்விப்பட்டு நானும் பழ. சந்திரசேகரனும் சாயங்காலம் காப்பியுங்கூடிக் குடிக்காம வெறும் வகுத்தோட கூட்டத்துக்குப் போயிட்டோம். போகறதுக்கு முந்தி அண்ணாச்சி வடகரை வேலனுக்கும் போன் பண்ணி அங்க வரச் சொல்லியிருந்தேன். வந்தாரு.

என்ர மீசைய வெச்சு அடயாளங் கண்டுபிடிச்சு வந்து பேசுனாரு. நெம்ப நாளு பழகுனவரு போலப் பேசுனாரு. நிதானமாப் பேசுனாரு. நெம்ப டீப்பா விஷயங்கள அலசுனாரு. நெம்பப் பண்பாடு மிக்கவரு. எனக்கு நெம்பப் புடிச்சுப் போச்சு!

அடிக்கடி போன் பண்ணிப் பேசுவேன். ப்ரமோஷனுக்கப்புறம் அதிகமா டச் இல்ல. கொஞ்ச நாளைக்கு முந்தி அவரும் வேற சில பதிவருங்களும் நான் இருக்குற எடத்துக்கு வந்திருந்தாங்க. கேள்விப்பட்டு முறிஞ்ச காலோட நொண்டி நொண்டி அவிங்களப் பாத்துப் பேசுனேன். தலையில உருமாலையெல்லாங்கட்டி அண்ணாச்சி வித்தியாசமான கெட்டப்புல இருந்தாரு.

அண்ணாச்சி வடகரை வேலன் அவிங்களோட பிளாக் அட்ரஸ் :
http://vadakaraivelan.blogspot.com/

அட! சொல்ல மறந்திட்டனே!

நான் போட்டுக்குற சொக்காய் பத்தியும், நகைகள் போட்டுக்கிறதப் பத்தியும், ராவுடி பண்றவன்னும், என்னையக் கர்வம் மிக்கவன்னும், பெண்பித்தன்னும், நாலு பேரு இருக்குற எடத்துல என்னையவே அல்லாரும் மதிக்கோணும்னு நான் நெனைக்கிறவன்னும், ஆரையும் நான் மதிக்கிறதில்லைனும், வயசானதால எனக்குப் புத்தி பேதலிச்சுப் போயிருச்சுன்னும், நான் ஒரு கழுதைனும் என்னைய விமரிசிச்சு அவரு எழுதின கட்டுரையோட லிங்க் இதோ!
http://vadakaraivelan.blogspot.com/2009/02/blog-post_06.html

அல்லாரும் இந்தப் பதிவைப் படிச்சுப் பயன் பெறணும்னு கேட்டுக்கறேன். இந்தப் பதிவு ’குங்குமம்’ இதழிலும் வந்திருக்கு. (குங்குமத்தில வெளிவர்ரதுக்கு நான் எதுவும் பண்ணலை. நெசமாங்க. நம்புங்க! ஹி!ஹி!)
******************************************************************
மேலும் வாசிக்க...

Sunday, May 3, 2009

வழியனுப்புவதும் வரவேற்பதும்

அன்பின் பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் முரு ஆசிரியப் பொறுப்பேற்று தனது பணியினைச் சிறப்பாகச் செய்து விடை பெறுகிறார். ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ எழுபதுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்று பெருமையுடன் விடை பெறுகிறார். புதிய பதிவர்கள் பலரினையும் நல்ல முறையில் அறிமுகப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது.

அத்தனை பதிவுகளும் அனைவராலும் படிக்கப்பட வேண்டிய பதிவுகள். அறிமுகப்படுத்திய பதிவர்கள் பலர் புதியவர்கள். ஊக்கப்படுத்தியதற்கு நன்றி முரு.

நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றியினைக் கூறி நண்பர் முருவினிற்கு விடையளித்து வழி அனுப்புகிறோம்.
----------------------------------------------------------------------------
இவ்வாரத்திற்கு ( நாளை 4ம் நாள் துவங்கும் வாரம் ) ஆசிரியப் பொறுப்பேற்க பெருமையுடன் வருகிறார் நமதருமை நண்பர் லதானந்த்.
இவர் பதிவு ஆரம்பித்த தினம் 2008ம் ஆண்டு மே மாதம் நான்காம் நாள். சரியாக முதல் பிறந்த நாளில் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். தமிழ் மண நட்சத்திரப் பதிவராக பணியாற்றி ஜொலித்திருக்கிறார். ஆனந்த விகடன் கல்கி குங்குமம் அமுத சுரபி ஆகிய வார இதழ்களிலும் எழுதி வருகிறார். சுட்டி விகடனில் ரேஞ்சர் மாமா என்ற பெயரில் தொடர்கள், பாக்யாவில் பாலியல் வக்கிரங்கள் தொடர், வனங்களில் வினோதங்கள் - விகடன் பிரசுரம் என நூலாசிரியராகவும் இருக்கிறார்.

வனத்துறையில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். இப்பொழுது கூட வனவிலங்குகள் கணக்கெடுப்பில் ஈடு பட்டிருக்கிறார். வாழ்க்கையினை ரசனையோடு கழிக்க களிக்க விரும்புபவர். 187 இடுகைகள் அவரது பதிவினில் ஓராண்டுக்குள் இட்டிருக்கிறார். பன்முகச் சித்தர். நவீனத்துவத்தினை ஆராய்ந்து துவைத்துக் காயப்போட்டவர். காமக் கதைகள் எழுதியவர். (தட்டச்சுப்பிழை எனில் பொறுத்தருள்க).

அருமை நண்பர் லதானந்தினை வருக வருக என வரவேற்று நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சீனா
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் முருவின் ஏழாம் பதிவு


நன்றி.,


இந்த வார்த்தையும், அதன் பிரயோகங்களும் தான் மனிதனை இன்னும் மனிதனாக வைத்துள்ளது. பதிவு எழுத வலையுலகத்திற்குள்ளே வந்த பின் என்ன எழுதுவது எனத் தெரியாமல் தத்து பித்து நடையுடன் எழுதிக் கொண்டு இருந்த(இருக்கும்) போதெல்லாம், சரியான பார்வைக்கு பாராட்டும், தவறான நடைக்கு, நடவடிக்கைகளுக்கு தனிப்பட்ட முறையில் கண்டிப்பும் செய்து என்னை ஒழுங்கு படுத்திய எனது வலையுலக நண்பர்கள் - நண்பிகளுக்கெல்லாம் என் மனம் நிறைந்த நன்றிகள். அவர்களில் மிக முக்கியமானவர் வலையுலகத்தில் எல்லோருக்கும் அண்ணனான இவருக்கு என் இதயத்தில் எப்போதும் இடமிருக்கும்(அரசியல் இல்லை)


எனது நண்பர்களுக்கு நன்றி சொல்லும் விதத்தில் ஒரு நகைச்சுவைக்காக (நன்றியை உண்மையாகத்தான் சொல்கிறேன்) எழுதிய இடுக்கைதான் முரு என்ற நான்... . இதில் எனது நண்பர்களின் தனித்திறமையைக் கொண்டு அவர்களுக்கு, அமைச்சரவையில் எந்த துறையை ஒதுக்கலாம் என எழுதியிருந்தேன்.


########################

எல்லாம் சரியாக இருந்தாலும் நமது அண்ணன் வால் பையன், அருணுக்கு டாஸ்மாக் மட்டும் கொடுத்து ஒதுக்கிவிட்டால் அது பாவம். அவரின் மற்றுமொரு முகத்தை,


என்ற இடுக்கையில் தனது வெளியிட்டுள்ளார். பதிவு எழுதிய (பிப்ரவரி 2008) திலிருந்து ஒரு வருடம் கழித்து பின்னூட்டத்தில் கருத்து மோதல்களால் ரத்த ஆறே ஓடியிருக்கும்.


தமிழகத்தின் முக்கிய பதிவர் அண்ணன் வால். (ஐஸ் இல்லை)


************************************************************************************


இதேபோல் எனக்கு வலைச்சரத்தில் இடமளித்ததோடு மட்டுமில்லாது ஒரு வாரம் என்னைப் பொறுத்தருளிய அனைத்து வலைச்சர வாசகர்களுக்கும், ஆசிரியன் சீனா அய்யா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


(நன்றியை வெளிப்படுத்தி நானும் மனிதனாகி விட்டேன்)


உங்கள்


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது