07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, October 6, 2012

கோபம் - கதம்ப உணர்வுகள் ( ஆறாம் நாள்)


கோபம்…. நம் முன்னேற்றத்துக்கு முதல் தடைக்கல்…. நம்மிடமிருந்து நம் நட்பை பிரிக்கும் எதிரி…. நம் நல்ல குணங்களை எல்லாம் பின் தள்ளிவிடும் அபாயம்… நம் உடல்நலத்தை கெடுக்கும் நோய்…
கெட்டகோபம் வந்துரும் ஆமா சொல்லிட்டேன்... கோபத்தில் நல்ல கோபம் கெட்ட கோபம் எதுவும் இல்லை. கோபத்தினால் நஷ்டங்கள் மட்டுமே ஏற்படுவதுண்டு.

கோபத்தை கட்டுப்படுத்தினாலோ…. அது இன்னும் கொடியது…. கோபம் அந்த ஷணம் அடக்கினாலும் அது நீறுபூத்த நெருப்பாய் மனதில் வன்மத்தை பெருக்கும்…. பிபி அதிகரிக்கும்…. உடல்நலம் மோசமாகும்.

ஷண நேர கோபத்தினால் கொலைகளும் நிகழ்ந்ததுண்டு. பின் சிறையில் தன் செயலுக்கு வருந்தியவரும் உண்டு… கோபம் வரும்போது கோபம் ஏற்படுத்தியவரிடம் இருந்து நகர்ந்துவிடுங்கள்.

கட்டுப்படுத்தும் கோபம் என்றாவது எதிர்ப்பார்க்காத நேரத்தில் நம்மையே அறியாமல் ஒருவர் மேலிருக்கும் கோபம் இன்னொருவர் மேல் திரும்பும்… அதுவும் அடக்கிவைக்கப்பட்ட கோபம் இருக்கிறதே அது அடக்கி வைத்து வைத்து அடக்கமுடியாத சூழ்நிலையில் சீற்றம் அதிகமாகி எதிராளியின் மனதை காயப்படுத்திவிடும்…

கோபத்தில் சிதறப்படும் வார்த்தைகளின் வீரியம் கொடியது. நல்ல உறவை சிதைத்துவிடும். நல்ல நட்பை பிரித்துவிடும்…. கோபத்தினால் சாதிக்கப்போவது ஒன்றுமே இல்லை.. கோபத்தில் இன்று நாம் வார்த்தைகள் உமிழ்ந்துவிட்டு பின்னொரு நாளில் அவரை நேருக்கு நேர் காணும்போது நாம் உதிர்த்த வார்த்தைகள் அவர் மறந்திருந்தாலும் நமக்கு நினைவுக்கு வந்து தர்மசங்கடமான ஒரு நிலை ஏற்பட்டு சிரிக்கவும் முடியாமல் இக்கட்டு ஏற்படும்...

கோபத்தினால் ஏற்படும் நம் உடலில் அசௌகரியங்களை இங்க குவைத்ல பிஸ்வரூப் ராய் சௌத்ரி அப்டின்னு ஒருத்தர் மைண்ட் பாடி பேலன்ஸ்ட் செமினார் எடுத்தார். அப்ப சொன்னார் கோபம், ஸ்ட்ரெஸ், டென்ஷன், அதீத வெறுப்பு இதனால் நமக்கே தெரியாம நம் உடலில் வயிற்றின் உள் மென்மையான சுவற்றில் ரத்தக்கசிவு ஏற்படுகிறதாம்.

உடலையும் மனதையும் சாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள்….உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். இன்னொரு நல்லதும் இருக்கிறது. கோபப்படுவதால் முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகி சீக்கிரமே முதுமை வந்துவிடுமாம் அவசியமா சொல்லுங்க? என்றும் இளமையா இருக்கறதுக்கு கோபத்தை தவிர்த்துடுங்களேன்….இவ்ளோ சொல்றீங்க.. சொல்றது எளிது தான். ஆனால் செயல்படுத்துவது தான் சிரமம்னு நீங்க சொல்றது எனக்கு கேட்கிறது… முயன்றால் முடியாததுன்னு எதுவுமே இல்லை தானே. நான் முயல்கிறேன் அப்ப நீங்க?? 

சரி இன்று எனக்கு மிகவும் பிடித்த மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன் வாங்கப்பா…



இது எங்க வீட்டுப்பிள்ளை அப்டின்னு இவர் பதிவுகள் சொல்லவைக்கும் இவருடைய எங்கள் பிளாக். எங்க வீட்டுக்கு வாங்க என்று அன்புடன் வரவேற்று உபசரிக்கும் அன்பும் பண்பும் உள்ள அருமையான குணம் கொண்ட இந்தப்பிள்ளையின் பெயருக்கேற்றார்போலவே பதிவுகளை படிக்கும்போதெல்லாம் எனக்கு எப்பவும் தோணும்... எத்தனை வாதஸல்யம்.. எத்தனை அன்பு, பண்பு இந்தப்பிள்ளைக்கு... பார்ப்போமா இவரின் சில பதிவுகளை?






ஒருவரைப்பற்றி அறிய எத்தனை நாட்களோ மாதங்களோ அவசியம் இல்லை. அவரின் ஒரு வரி எழுத்து அவரின் மனதை அவரின் இயல்பை அவரின் குணத்தை மிக அழகாய் பிரதிபலிக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு எனக்கு மிகவும் பிடித்த சுப்புரத்தினம் சிவா ஐயாவின் என் முதல் வலைச்சரம் நாளுக்கான இவர் பின்னூட்டம் தான். ஆச்சர்யத்துடன் இவர் வலைப்பூவில் தொடர்ந்தேன்... சென்று கண்டபோது ஆச்சர்யமாக பிரமித்தேன். பிற வலைதளங்களில் இருக்கும் நல்லவைகள் எல்லாம் தொகுப்பாக இவர் வைத்திருக்கும் பாங்கு ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தது... என் கவிதை வரிகளை என்னிடம் அனுமதி கேட்டு அதை பாடலாக பாடி அனுப்பி இருக்கிறார். என்னை விட அதிக வயது. ஆனால் அவர் வார்த்தைகளில் எத்தனை பணிவு.... இவரின் வலைப்பூவில் எனக்கு பிடித்த பதிவை பார்ப்போமா?






இந்தச்சகோதரரின் கவிதைகள் படிக்கும்போதும் சரி இவரின் கதைகளை படிக்கும்போதும் சரி அந்த தாக்கம் கண்டிப்பாக நமக்கும் ஏற்படும். இவர் படைப்புகள் எளிய நடையில் கருத்துகள் சொல்லும்... இவரின் பதிவுகள் சில பார்ப்போமா?







மனம் ரொம்ப சோகமாக இருக்கும்போது இவர் வலைப்பூவுக்கு சென்று பாருங்க. சோகமெல்லாம் சட்டுனு மறைந்து வயிற்றுவலி வந்துவிடும். எப்படியா? சிரித்து சிரித்து தான்.... இவர் தன் அனுபவங்களையே வாசகர்கள் படித்து சிரித்து மகிழும்படி ரசிக்கும்படி தருகிறவர்... பார்ப்போமா இவரின் சில பதிவுகளை?







இந்த இனியப்பெண் எனக்கு மிகவும் இஷ்டமான குழந்தை. ஹேமாவிடம் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தால் போதும் இவள் மனதின் சந்தோஷமும் சிரிப்பும் நம்மையும் தொற்றிக்கொள்ளும். இந்த இயல்பான மனதுடைய இந்தக்குழந்தையின் கவிதைகளின் ரசிகை நான்... பார்ப்போமா இந்த மௌனத்தின் ஓசையைக்கொஞ்சம்?


உனக்கான ஒரு கவிதையோடு




இது என் செல்லக்குழந்தையின் வலைப்பூ. சிரித்துக்கொண்டே இருப்பாள். சிரிக்கவும் வைப்பாள். மனதில் என்றும் அன்பை மட்டுமே நிறைத்து வைத்திருக்கும் இந்தக்குழந்தை நான் இந்தியாவுக்கு சென்றபோது தினம் தவறாமல் என் நலம் விசாரித்த இந்த அன்புக்குழந்தையின் வலைப்பூவில் இருந்து அன்பு பதிவுகள் சிலவற்றை பார்ப்போமா?



செய்தாலியின் கவிதைகள் 


அன்பும், பண்பும், அறிவும், நல்லொழுக்கமும், அநியாயத்தைக்கூட தன் கவிதை வரிகளில் மல்லிகைப்பூ தீண்டலாகவே யாரையும் துன்புறுத்தாது தன் கவிதைகளில் மெல்லியத் தென்றலாக வரிகள் அமைக்கும் இவர் பதிவுகள் சில பார்ப்போமா?

மன அறை ஒழுங்கீனம் 

கடவுள் பொம்மை

கருணை தர்மங்கள்

 




இனிய நண்பராக அறிமுகமாகி அன்புச்சகோதரனாக நிலைத்தவர். இவரின் கவிதைகளின் ரசிகை நான். சொல்ல வந்த கருத்தை இரண்டே வரிகளில் நச் என்று சொல்லிச்செல்வார்.... எளியநடை.... சமூகம், அரசியல், காதல், அன்பு, நட்பு எல்லா கவிதைகளிலும் சின்னக்கவிதையில் சொல்லிவிடுவார் சொல்லவந்ததை. பார்ப்போமா சில பதிவுகளை?








இந்த அற்புதமான மனிதரின் பதிவுகளில் மனிதநேயம் கண்டேன். அழகிய ஓவியத்திறமையையும் கண்டேன். அழகிய காதல் கவிதைகளையும் கண்டேன். நல்ல அனுபவங்களையும் கண்டேன். வயதில் சிறியவரானாலும் மருத்துவத்துறையில் புகழ் பெற்றிருந்தாலும் அடக்கமும், அமைதியும், அன்பும் மனநிறைவோடு கண்டேன். இவரை அன்புடன் வாழ்த்திவிட்டு பார்ப்போமா இவரின் சில பதிவுகளை?

நிவேதா முதல் நிவேதா வரை 




இவர் பதிவுகளில், இயல்பில் எப்போதும் எல்லோரையும் சிரிக்கவைக்கும் அற்புதமான ஆற்றல் பெற்றவர். எல்லோரிடமும் இயல்பாக எதார்த்தமாக பழகி யார் மனமும் புண்படாமல் நகைச்சுவை புரிந்து சிரிக்கவைப்பதில் வல்லவர். பதிவர் மாநாட்டில் இவர் செய்த ரகளை இப்போது நினைத்தாலும் நான் ரசித்து சிரிப்பதுண்டு.. பார்ப்போமா இவரின் சில பதிவுகளை?

பாரதி கண்ட புதுமைப்பெண் இவள் தானா? 





பெயருக்கேற்றார்போலவே இவர் வலைப்பூ சென்று பார்த்தால் நாம் இதுவரை அறியாத எத்தனையோ நல்ல விஷயங்களை அறியலாம்... ஆச்சர்யமாக இருந்தது. சுவாரஸ்யமான தகவல் பேழை இந்த வலைப்பூ.... பார்ப்போமா இவரின் சில பதிவுகளை?

தொப்பையை தடுக்கும் வழி 






கோமதி மேடம் இவர்களை நான் வலைச்சரத்தில் தான் முதன் 
முதல் அறிய நேர்ந்தது. இவர்களின் வலைப்பூ சென்றால் இவரின் 
மனதைப்போலவே வாத்ஸல்யமான தாயன்பை, நல்ல மனதை 
இவர் பதிவுகளில் காணமுடிந்தது.

பார்ப்போமா இந்த அன்பு உள்ளத்தின் பதிவுகள் சில?





அதிகம் இவரை அறிந்ததில்லை. ஆனால் கேரளாக்காரர் இத்தனை
அருமையாக தமிழை விரும்பி ரசித்து பதிவுகள் தருகிறாரே என்று 
இவருடைய வலைப்பூவுக்கு சென்றபோது மிக அருமையான மூன்று
பதிவுகள் கண்டேன். அதை உங்களுடன் இதோ பகிர்ந்து இருக்கிறேன். 




இன்றைய நாள் எல்லோருக்கும் மகிழ்ச்சியை மட்டுமே தரட்டும் என்று 
வேண்டிக்கொள்கிறேன். மீண்டும் நாளை சந்திப்போமா 
அன்புள்ளங்களே?












64 comments:

  1. வழுநேரி. ஹேமா, நிலவின் மறுபக்கம் மிகப்புதியவர்கள் எனக்கு. பார்க்கிறேன். மற்ற நட்புகளைக் கண்டதில் மகிழ்ச்சி, அனைவருக்கும நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. குட்டன் நான் அறியாதவர்.
    மற்றவர்களில் கோமதியின் பதிவும் எங்கள் ப்ளாகும் அடிக்கடி படிப்பவை அவர்களை இங்கே பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி மஞ்சுபாஷிணி.

    ReplyDelete
  3. பலரும் எனக்கு புதுமுகங்கள்.

    இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    நன்றிங்க மஞ்சுபாஷிணி.

    ReplyDelete
  4. மஞ்சுபாஷிணி அவர்களுக்கு, எங்கள் ப்ளாக் பற்றிக் குறிப்பிட்டதற்கும், சுட்டிகள் கொடுத்ததற்கும், எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் குழு சார்பாக, எங்கள் நன்றி!

    ReplyDelete
  5. நல்ல அறிமுகங்கள். இதில் பாதி பேருடன் மட்டுமே எனக்குப் பழக்கம் உண்டு.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்..... மஞ்சு.

    அடையாளம் காணப்பட்டுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய வாழ்த்துகள்.


    VGK

    ReplyDelete
  6. அனைவருக்கும் வாழ்த்துகள்.ஒரு சிலரை இப்போதே அறிகிறேன்..சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..

    ReplyDelete
  7. அனைவருக்கும் வாழ்த்துகள்.ஒரு சிலரை இப்போதே அறிகிறேன்..சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..

    ReplyDelete
  8. என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி மேடம், அறிமுகப்படுத்தப்பட்ட எல்லாருக்கும் என் இனிய வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. என்ன ராஜி தங்கச்சி பதிவர் சந்திப்புல ரகளை பண்ணுச்சா...? ஆஹா தெரியாமப் போச்சே ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  10. அன்பு சகோதரி மஞ்சுபாஷிணி!

    நான் இப்போது தஞ்சை வந்திருப்பதால், வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றதற்கு உங்களுக்கு இங்கு வந்து வாழ்த்து சொன்னதற்குப்பின்னர் திரும்பவும் என் வலைப்பூவைக்கூட திறக்க இயலாத நிலைமையில் இருந்தேன். இன்று மறுபடியும் திறந்த போது தான் உங்களின் நேசிப்புக்குரிய பெண்மணியாக என்னை 4ந்தேதி அறிமுகம் செய்திருப்பதைக்கண்டேன். அதற்கான பெருமிதத்துடன் உங்களுக்கு இங்கே நன்றி கூறுகிறேன்.

    அசத்தலான தலைப்புகளில் அருமையான பதிவர்களை மிக அழகான விமர்சனங்களுடன் அறிமுகப்படுத்தி வரும் உங்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள்!!

    அறிமுகம் பெற்ற‌ அனைத்து நட்புள்ள‌ங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  11. முக்கால்வாசி தெரிந்த பதிவர்கள்தான், தெரியாதவர்களை இனி படித்து தெரிந்து கொள்கிறேன் நன்றி...!

    ReplyDelete
  12. இன்று ஒரு மணிக்கு இப்பதிவு பார்த்தேன். நல்ல அறிமுகங்கள் அறிந்தவரும், அறியாதவரும். அனைவருக்கும் இனிய நல்வாழ்த்து.தங்களுக்கும் அப்படியே. பயணம் தொடர இறையாசி வேண்டி அன்புடன்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. பதிவுக் கடலில் எவ்வளவு ஆழமாக
    நீந்தியுள்ளீர்கள் என தாங்கள்
    அறிமுகப் படுத்திச் செல்லும்விதமும்
    பதிவர்களின் பட்டியலும் விளக்கிப்போகிறது
    அசத்தல் ஆறாவது நாள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. இந்த பதிவர் வட்டத்தில் பலர் அறிந்தது சிலர் அறிமுகத்துக்கு நன்றி  ! ம்

    ReplyDelete
  15. முயன்றால் முடியாததுன்னு எதுவுமே இல்லை தானே. நான் முயல்கிறேன் அப்ப நீங்க??//

    மஞ்சுபாஷிணி, உங்கள் முயற்சி வெற்றிடைய வாழ்த்துக்கள். சினத்தினால் ஏற்படும் பின் விளைவுகளை, மகான்களும், பெரியோர்களும், நிறைய சொல்லி இருக்கிறார்கள் . சினத்தை அறவே தவிர்க்க சொல்லி இருக்கிறார்கள். நாம் கடைபிடித்தால் வாழ்நாட்க்களை உடல்நலத்தோடு ஆனந்தமாய் வாழலாம். இன்றைய கதம்ப உணர்வில் நீங்கள் இந்த அவசியமான ஒன்றை எடுத்து சொன்னது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

    இன்று அருமையான பதிவர்களுடன் என்னையும் குறிபிட்டது மகிழ்ச்சி.
    நன்றி.
    ஒரு கதை தான் எழுதி இருக்கிறேன் அது உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
    பதிவுலகத்திற்கு வந்த புதிது. சர்வேசன்500 நச்னு கதைபோட்டி க்கு எழுதியது.போட்டியில் பங்கு கொண்டு அந்த வலைதளத்திற்கு அனுப்ப தெரியாமல் போட்டி முடிவுகள் வந்து என் கதை அதில் இல்லாமல் போனதில் கேட்ட போது என் வலைத்தளத்திற்கு அனுப்ப வேண்டும் என்றார்.அனுப்பாதது தெரிந்தது. ஆனால் இன்று உங்களுக்கு கதைபிடித்து இருப்பது அறிந்து மிக மகிழ்ச்சி.
    முன்பு பிரபாகர் என்பவர் வலைச்சரத்தில் இக் கதையை குறிப்பிட்டு இருந்தார். இப்போது நீங்கள்.
    ’வாழ்க்கை வாழ்வதற்கே’ வல்லி அக்கா என்னை தொடர் பதிவுக்கு அழைத்தது.அவர்களுக்கு நன்றி.
    புரட்டாசி மாதமும் பேபி அக்கா பதிவிற்கு நீண்ட பின்னூட்டம் தந்தமைக்கும் நன்றி மஞ்சுபாஷணி.
    நீங்கள் அன்புடன் குறிபிட்ட பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அருமையான அறிமுகங்கள்.. அனைவருக்கும் வாழ்த்துகள் !

    ReplyDelete
  17. கோபத்தின் விளைவுகளை அருமையாய் சொல்லி கொந்தளிக்கும் மனங்களையெல்லாம் சாந்தப்படுத்திவிட்டீங்க. நன்றி மஞ்சுபாஷிணி. இன்றைய பதிவர்களில் பாதிபேரை அறிந்திருக்கிறேன். மீதிபேரை இன்று அறிந்துகொண்டேன். கதம்ப உணர்வுகளோடு, பதிவர் அறிமுகங்களை அழகாகத் தொகுத்தளிப்பதற்குப் பாராட்டுகள் மஞ்சுபாஷிணி.

    ReplyDelete
  18. ஹேமா, வசு அக்காமார்களைத் தவிர மற்றவர்கள் எனக்குப் புதிதே!

    சினங்குறித்த முன்னுரை அருமை.


    நன்றி அக்கா.!

    ReplyDelete
  19. மஞ்சு அறிமுகப்படுத்தியவிதம் நல்லா இருக்கு அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. கோபம் - நல்ல முன்னுரை...

    அனைத்தும் நல்ல அறிமுகங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  21. அறிமுகத்திற்கு மிக்க நன்றி சகோ!

    தங்கள் ஆசிரியர் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. தனபாலன் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன்!
    ஜாம்பவான்களுடன் சேர்த்து இந்தப் புதுமுகத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ!
    நான் தமிழன்தான்;செல்லப்பெயர் குட்டன்(சிறு வயதில் கூப்பிட்ட பெயர்;தங்கி விட்டது!)

    ReplyDelete
  23. அருமையான பதிவு. அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  24. கோபம் கோபமாக வருகிறது... கோபத்தை கட்டுப் படுத்த முடியவில்லையே என்று!! கோபம் ஏற்படுத்தும் இரசாயன மாற்றங்களால் கேன்சர் செல்களுக்கும் கொண்டாட்டமாம். படித்திருக்கிறேன். கோபம் வந்தால் செயலையும், கொட்டப் போகும் வார்த்தைகளையும் பத்து நிமிடம் ஒத்திப் போடுவது என் வழக்கம்! கோபம் பற்றி அருமையான கருத்துகள் சொல்லியிருக்கிறீர்கள்.

    //இது எங்க வீட்டுப்பிள்ளை அப்டின்னு இவர் பதிவுகள் சொல்லவைக்கும்//
    'நான் ஆணையிட்டால்..' என்று பாடவா... !! :)) அறிமுகத்துக்கு நன்றி. கேஜிஜியும் ஏற்கெனவே நன்றி தெரிவித்து இருக்கிறார். உடன் அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. அருமையாக வலைச்சரத்தை முடித்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ. இன்றை சரம் அருமை. அற்புதமான பதிவுகளை பகிர்ந்திருக்கிறீர்கள். பலர் நான் அறிந்தவர்கள். இனிய அறிமுகங்கள்... நன்றி!

    ReplyDelete
  26. சிலர் தவிர மற்றவர் பதிவுகளைத் படித்திருக்கிறேன். நன்றி!

    ReplyDelete

  27. கோபம்
    அதன் காரணிகளும்
    அதற்கான தீர்வுகளும் ம்ம்ம் ..அழகாய் சொல்லபட்டு இருக்கிறது

    நல்ல அறிமுகங்கள்
    எனக்கு நிறை தோழமைகள் புதியவர்கள்
    என்னையும் என்னைபோன்ற சக தோழமைகளையும் அறிமுகப் செய்தமைக்கு
    நன்றிகள் தோழி

    ReplyDelete
  28. என்னவொரு அருமையான பகிர்வு.நன்றி மஞ்சு.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோபம் பற்றிய அலசல் செமை..

    ReplyDelete
  29. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  30. எங்கள் அண்டை வீட்டுக்காரர்களுக்கு இந்தக்கிழவன் கிழவி மேல் அவ்வளவு பொறாமை.
    ஒரு நாள் வந்தார்கள். அவர்களுக்கு எங்களில் பாதி வயது கூட இருக்காது.

    " அது எப்படி ? ஒரு நாள் கூட நீங்க இரண்டு பேரும் சண்டை போடாம கோபப்படாம‌
    இத்தன வருசம் இருக்கீக...? " கேட்டார்கள்.

    " அது எல்லாம் வள்ளுவர் தந்த வரமுங்க .." என்றோம்.

    " வள்ளுவர் தந்ததா ! எனக்குத் தெரியாததா ! " என்றாள் அந்தத் தமிழாசிரியை. தொடர்ந்து
    " வள வளன்னு சொல்லாம ஒரு மூணே வார்த்தையில் சொல்லுங்க... தாத்தா பாட்டி .." என்றாள்.

    " சொல்லப்போனா நாங்க இரண்டு பேரும் தனித்தனி கொள்கை.." என்றேன்.

    " அது சரி. சுருக்கமாச் சொல்லுங்க் "

    " செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் .." என்றாள் என் இல்லாள்.

    " அல்லிடத்துக்காக்கினென் காவாக்கா லென்."
    என்றேன் நான்.

    "புரிஞ்சுடுச்சு" என்றார் தமிழாசிரியையின் கணவர் சைக்காலஜி ப்ரொஃபசர்.

    அவரை ஒரு முறை முறைத்தவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.
    " அப்ப நான் எப்படித்தான் இருக்கணும்?"

    "மஞ்சு பாஷிணி."

    "தமிழில்ல சொல்லுங்க.."

    " இதமாய் மென்மையாய் பேசுபவள்"

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  31. நேற்று என்னுடைய பழைய பதிவுகள் சிலவற்றில் பின்னூட்டங்கள் வந்திருந்தன... ஒன்றும் விளங்காத நிலையில் தனபாலன் அவர்கள்தான் கூறியிருந்தார்கள் வலைச்சர அறிமுகம் பற்றி..

    வந்தோம் நாலு பேரை கை காட்டினோம் என்று இல்லாமல் அதிக சிரத்தை எடுத்து எழுதியிருப்பது தெரிகிறது... வாழ்த்துகளும் நன்றிகளும்...

    என்னுடைய பதிவுகளை நீங்கள் வாசித்திருப்பது மகிழ்ச்சி.. உங்களின் வாழ்த்து மிகை எனினும் நிச்சயம் மகிழ்கிறேன்... உண்மையை சொல்ல வேண்டுமனில் இன்று இந்த பட்டியலில் உங்களைத் தவிர எல்லோரையும் ஏற்கனவே அறிந்துள்ளேன்.. எனவே எனக்கு கிடைத்துள்ள புது அறிமுகம் நீங்கள் தான்.. நன்றி...

    ReplyDelete
  32. //பால கணேஷ் said...
    வழுநேரி. ஹேமா, நிலவின் மறுபக்கம் மிகப்புதியவர்கள் எனக்கு. பார்க்கிறேன். மற்ற நட்புகளைக் கண்டதில் மகிழ்ச்சி, அனைவருக்கும நல்வாழ்த்துக்கள்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் கணேஷா....

    ReplyDelete
  33. //வல்லிசிம்ஹன் said...
    குட்டன் நான் அறியாதவர்.
    மற்றவர்களில் கோமதியின் பதிவும் எங்கள் ப்ளாகும் அடிக்கடி படிப்பவை அவர்களை இங்கே பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி மஞ்சுபாஷிணி.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் வல்லிம்மா.

    ReplyDelete
  34. //சத்ரியன் said...
    பலரும் எனக்கு புதுமுகங்கள்.

    இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    நன்றிங்க மஞ்சுபாஷிணி.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் சத்ரியன்.

    ReplyDelete
  35. // kg gouthaman said...
    மஞ்சுபாஷிணி அவர்களுக்கு, எங்கள் ப்ளாக் பற்றிக் குறிப்பிட்டதற்கும், சுட்டிகள் கொடுத்ததற்கும், எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் குழு சார்பாக, எங்கள் நன்றி!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் கௌதம், ஸ்ரீராம், ப்ளாக் ஆசிரியர்கள் குழு அனைவருக்கும்பா...

    ReplyDelete
  36. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    நல்ல அறிமுகங்கள். இதில் பாதி பேருடன் மட்டுமே எனக்குப் பழக்கம் உண்டு.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்..... மஞ்சு.

    அடையாளம் காணப்பட்டுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய வாழ்த்துகள்.


    VGK//

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா.

    ReplyDelete
  37. //மதுமதி said...
    அனைவருக்கும் வாழ்த்துகள்.ஒரு சிலரை இப்போதே அறிகிறேன்..சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.//

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மதுமதி.

    ReplyDelete
  38. // MANO நாஞ்சில் மனோ said...
    என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி மேடம், அறிமுகப்படுத்தப்பட்ட எல்லாருக்கும் என் இனிய வாழ்த்துகள்...//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் மனோ.

    ReplyDelete
  39. //MANO நாஞ்சில் மனோ said...
    என்ன ராஜி தங்கச்சி பதிவர் சந்திப்புல ரகளை பண்ணுச்சா...? ஆஹா தெரியாமப் போச்சே ஹா ஹா ஹா ஹா...//

    இந்த ராஜி பண்ண அட்டகாசம் எல்லாம் நான் படிச்சிட்டேன் மனோ ராஜியோட தளத்துல போய்.. சிரிக்கவெச்சு சிரிக்கவெச்சு மனதை நிறைத்த அன்புக்குழந்தை இந்த ராஜி... ஊருக்கு போனால் கண்டிப்பா ராஜியை சந்திக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்பா..

    ReplyDelete
  40. //மனோ சாமிநாதன் said...
    அன்பு சகோதரி மஞ்சுபாஷிணி!

    நான் இப்போது தஞ்சை வந்திருப்பதால், வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றதற்கு உங்களுக்கு இங்கு வந்து வாழ்த்து சொன்னதற்குப்பின்னர் திரும்பவும் என் வலைப்பூவைக்கூட திறக்க இயலாத நிலைமையில் இருந்தேன். இன்று மறுபடியும் திறந்த போது தான் உங்களின் நேசிப்புக்குரிய பெண்மணியாக என்னை 4ந்தேதி அறிமுகம் செய்திருப்பதைக்கண்டேன். அதற்கான பெருமிதத்துடன் உங்களுக்கு இங்கே நன்றி கூறுகிறேன்.

    அசத்தலான தலைப்புகளில் அருமையான பதிவர்களை மிக அழகான விமர்சனங்களுடன் அறிமுகப்படுத்தி வரும் உங்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள்!!

    அறிமுகம் பெற்ற‌ அனைத்து நட்புள்ள‌ங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!!//

    உங்கள் ஆசீர்வாதமும் தொடரவேண்டும்... உங்கள் குரல் தொலைபேசியிலும் தொடரவேண்டும்.. என் பின்னூட்டம் உங்கள் வலைப்பூவிலும் தொடரவேண்டும். இறைவன் அருளால் நம் அன்பு என்றும் இப்படியே நிலைத்து இருக்கவேண்டும்பா...

    ReplyDelete
  41. //MANO நாஞ்சில் மனோ said...
    முக்கால்வாசி தெரிந்த பதிவர்கள்தான், தெரியாதவர்களை இனி படித்து தெரிந்து கொள்கிறேன் நன்றி...!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் மனோ.

    ReplyDelete
  42. // kovaikkavi said...
    இன்று ஒரு மணிக்கு இப்பதிவு பார்த்தேன். நல்ல அறிமுகங்கள் அறிந்தவரும், அறியாதவரும். அனைவருக்கும் இனிய நல்வாழ்த்து.தங்களுக்கும் அப்படியே. பயணம் தொடர இறையாசி வேண்டி அன்புடன்
    வேதா. இலங்காதிலகம்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் வேதாம்மா தங்களின் நிறைந்த அன்புவாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும்.

    ReplyDelete
  43. //Ramani said...
    பதிவுக் கடலில் எவ்வளவு ஆழமாக
    நீந்தியுள்ளீர்கள் என தாங்கள்
    அறிமுகப் படுத்திச் செல்லும்விதமும்
    பதிவர்களின் பட்டியலும் விளக்கிப்போகிறது
    அசத்தல் ஆறாவது நாள்
    தொடர வாழ்த்துக்கள்//

    கரெக்டா கண்டுப்பிடிச்சிட்டீங்க ரமணிசார்... மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரமணிசார்.

    ReplyDelete
  44. //தனிமரம் said...
    இந்த பதிவர் வட்டத்தில் பலர் அறிந்தது சிலர் அறிமுகத்துக்கு நன்றி ! ம்//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.

    ReplyDelete
  45. // Ramani said...
    tha.ma 6//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரமணிசார்.

    ReplyDelete
  46. //கோமதி அரசு said...
    முயன்றால் முடியாததுன்னு எதுவுமே இல்லை தானே. நான் முயல்கிறேன் அப்ப நீங்க??//

    மஞ்சுபாஷிணி, உங்கள் முயற்சி வெற்றிடைய வாழ்த்துக்கள். சினத்தினால் ஏற்படும் பின் விளைவுகளை, மகான்களும், பெரியோர்களும், நிறைய சொல்லி இருக்கிறார்கள் . சினத்தை அறவே தவிர்க்க சொல்லி இருக்கிறார்கள். நாம் கடைபிடித்தால் வாழ்நாட்க்களை உடல்நலத்தோடு ஆனந்தமாய் வாழலாம். இன்றைய கதம்ப உணர்வில் நீங்கள் இந்த அவசியமான ஒன்றை எடுத்து சொன்னது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

    இன்று அருமையான பதிவர்களுடன் என்னையும் குறிபிட்டது மகிழ்ச்சி.
    நன்றி.
    ஒரு கதை தான் எழுதி இருக்கிறேன் அது உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
    பதிவுலகத்திற்கு வந்த புதிது. சர்வேசன்500 நச்னு கதைபோட்டி க்கு எழுதியது.போட்டியில் பங்கு கொண்டு அந்த வலைதளத்திற்கு அனுப்ப தெரியாமல் போட்டி முடிவுகள் வந்து என் கதை அதில் இல்லாமல் போனதில் கேட்ட போது என் வலைத்தளத்திற்கு அனுப்ப வேண்டும் என்றார்.அனுப்பாதது தெரிந்தது. ஆனால் இன்று உங்களுக்கு கதைபிடித்து இருப்பது அறிந்து மிக மகிழ்ச்சி.
    முன்பு பிரபாகர் என்பவர் வலைச்சரத்தில் இக் கதையை குறிப்பிட்டு இருந்தார். இப்போது நீங்கள்.
    ’வாழ்க்கை வாழ்வதற்கே’ வல்லி அக்கா என்னை தொடர் பதிவுக்கு அழைத்தது.அவர்களுக்கு நன்றி.
    புரட்டாசி மாதமும் பேபி அக்கா பதிவிற்கு நீண்ட பின்னூட்டம் தந்தமைக்கும் நன்றி மஞ்சுபாஷணி.
    நீங்கள் அன்புடன் குறிபிட்ட பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.//

    சினத்தினால் அடையப்போகும் லாபமென்று எதுவும் இல்லை கோமதிம்மா.. ஆனால் இழப்பு அதிகம் ஏற்படும் என்பதே சொன்னேன்.

    தங்களின் கதைக்கு நிதானமாக வந்து கருத்தும் இடுவேன் கோமதிம்மா...

    மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா...

    ReplyDelete
  47. //இராஜராஜேஸ்வரி said...
    அருமையான அறிமுகங்கள்.. அனைவருக்கும் வாழ்த்துகள் !//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  48. //கீதமஞ்சரி said...
    கோபத்தின் விளைவுகளை அருமையாய் சொல்லி கொந்தளிக்கும் மனங்களையெல்லாம் சாந்தப்படுத்திவிட்டீங்க. நன்றி மஞ்சுபாஷிணி. இன்றைய பதிவர்களில் பாதிபேரை அறிந்திருக்கிறேன். மீதிபேரை இன்று அறிந்துகொண்டேன். கதம்ப உணர்வுகளோடு, பதிவர் அறிமுகங்களை அழகாகத் தொகுத்தளிப்பதற்குப் பாராட்டுகள் மஞ்சுபாஷிணி.//

    ஆமாம் கீதம்.. கோபப்படுவர்களை பார்த்தால் எனக்கு ரொம்ப பயம். நான் ஒதுங்கிருவேன்பா....

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் கீதம்.

    ReplyDelete
  49. //சிவஹரி said...
    ஹேமா, வசு அக்காமார்களைத் தவிர மற்றவர்கள் எனக்குப் புதிதே!

    சினங்குறித்த முன்னுரை அருமை.


    நன்றி அக்கா.!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் தம்பி.

    ReplyDelete
  50. //Lakshmi said...
    மஞ்சு அறிமுகப்படுத்தியவிதம் நல்லா இருக்கு அனைவருக்கும் வாழ்த்துகள்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் லக்‌ஷ்மிம்மா.

    ReplyDelete
  51. //திண்டுக்கல் தனபாலன் said...
    கோபம் - நல்ல முன்னுரை...

    அனைத்தும் நல்ல அறிமுகங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றி...//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் தனபாலன் இரண்டு முறை ( வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியோரின் வலைதளத்துக்கு சென்று சொன்னமைக்கும்பா)

    ReplyDelete
  52. //வரலாற்று சுவடுகள் said...
    அறிமுகத்திற்கு மிக்க நன்றி சகோ!

    தங்கள் ஆசிரியர் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.

    ReplyDelete
  53. //குட்டன் said...
    தனபாலன் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன்!
    ஜாம்பவான்களுடன் சேர்த்து இந்தப் புதுமுகத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ!
    நான் தமிழன்தான்;செல்லப்பெயர் குட்டன்(சிறு வயதில் கூப்பிட்ட பெயர்;தங்கி விட்டது!)//

    அட அப்டியாப்பா? அப்புக்குட்டா அப்புக்குட்டா அப்டின்னு இங்க குட்டி குழந்தைகளை மலையாளிகள் கூப்பிடுவதை பார்த்திருக்கிறேன். அதனால் தாங்களும் மலையாளி என்று நினைத்துவிட்டேன். தவறுக்குமன்னிக்கவேண்டும்பா....

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் குட்டன்.

    ReplyDelete
  54. என்னை இங்கு அறிமுகப்படுத்தியமைக்கும் உங்களின் அன்பான வரிகளுக்கும், புதிய நட்புகளை எனக்கு தெரியவைத்தமைக்கும்/என் வலைதளட்துக்கும் அவர்களை வருகை தரவைத்தமைக்கும்(அப்ப்ப்பா... இதனதை மைக்கும்..) என் உளமார்ந்த நன்றிகள் மஞ்சு அக்கா...

    ReplyDelete
  55. //கோவை2தில்லி said...
    அருமையான பதிவு. அனைவருக்கும் பாராட்டுகள்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் தோழி.

    ReplyDelete
  56. //ஸ்ரீராம். said...
    கோபம் கோபமாக வருகிறது... கோபத்தை கட்டுப் படுத்த முடியவில்லையே என்று!! கோபம் ஏற்படுத்தும் இரசாயன மாற்றங்களால் கேன்சர் செல்களுக்கும் கொண்டாட்டமாம். படித்திருக்கிறேன். கோபம் வந்தால் செயலையும், கொட்டப் போகும் வார்த்தைகளையும் பத்து நிமிடம் ஒத்திப் போடுவது என் வழக்கம்! கோபம் பற்றி அருமையான கருத்துகள் சொல்லியிருக்கிறீர்கள்.

    //இது எங்க வீட்டுப்பிள்ளை அப்டின்னு இவர் பதிவுகள் சொல்லவைக்கும்//
    'நான் ஆணையிட்டால்..' என்று பாடவா... !! :)) அறிமுகத்துக்கு நன்றி. கேஜிஜியும் ஏற்கெனவே நன்றி தெரிவித்து இருக்கிறார். உடன் அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்.//

    கோபம் வரும்போது அதை கொஞ்சம் ஒத்திப்போடுவதால் ஏற்படும் விளைவுகளில் இருந்து கண்டிப்பா தப்பிக்கலாம் ஸ்ரீராம் நீங்க சொன்னது போலவே??

    ஐயடா உங்களை எம்ஜிஆர்னு சொல்லலைப்பா.. எங்க வீட்டு பிள்ளைன்னு சொல்லி இருக்கேன்... :)

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் கௌதம் சார், ஸ்ரீராம், மற்றும் ஆசிரியர் குழு அனைவருக்கும்...

    ReplyDelete
  57. //துரைடேனியல் said...
    அருமையாக வலைச்சரத்தை முடித்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ. இன்றை சரம் அருமை. அற்புதமான பதிவுகளை பகிர்ந்திருக்கிறீர்கள். பலர் நான் அறிந்தவர்கள். இனிய அறிமுகங்கள்... நன்றி!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் துரைடேனியல்.

    ReplyDelete
  58. //புலவர் சா இராமாநுசம் said...
    சிலர் தவிர மற்றவர் பதிவுகளைத் படித்திருக்கிறேன். நன்றி!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஐயா...தாங்கள் சௌக்கியமா?

    ReplyDelete
  59. //செய்தாலி said...

    கோபம்
    அதன் காரணிகளும்
    அதற்கான தீர்வுகளும் ம்ம்ம் ..அழகாய் சொல்லபட்டு இருக்கிறது

    நல்ல அறிமுகங்கள்
    எனக்கு நிறை தோழமைகள் புதியவர்கள்
    என்னையும் என்னைபோன்ற சக தோழமைகளையும் அறிமுகப் செய்தமைக்கு
    நன்றிகள் தோழி//\

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் செய்தாலி.

    ReplyDelete
  60. //Asiya Omar said...
    என்னவொரு அருமையான பகிர்வு.நன்றி மஞ்சு.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோபம் பற்றிய அலசல் செமை..//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஆசியாஉமர்.

    ReplyDelete
  61. //மாதேவி said...
    அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் மாதேவி.

    ReplyDelete
  62. //sury Siva said...
    எங்கள் அண்டை வீட்டுக்காரர்களுக்கு இந்தக்கிழவன் கிழவி மேல் அவ்வளவு பொறாமை.
    ஒரு நாள் வந்தார்கள். அவர்களுக்கு எங்களில் பாதி வயது கூட இருக்காது.

    " அது எப்படி ? ஒரு நாள் கூட நீங்க இரண்டு பேரும் சண்டை போடாம கோபப்படாம‌
    இத்தன வருசம் இருக்கீக...? " கேட்டார்கள்.

    " அது எல்லாம் வள்ளுவர் தந்த வரமுங்க .." என்றோம்.

    " வள்ளுவர் தந்ததா ! எனக்குத் தெரியாததா ! " என்றாள் அந்தத் தமிழாசிரியை. தொடர்ந்து
    " வள வளன்னு சொல்லாம ஒரு மூணே வார்த்தையில் சொல்லுங்க... தாத்தா பாட்டி .." என்றாள்.

    " சொல்லப்போனா நாங்க இரண்டு பேரும் தனித்தனி கொள்கை.." என்றேன்.

    " அது சரி. சுருக்கமாச் சொல்லுங்க் "

    " செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் .." என்றாள் என் இல்லாள்.

    " அல்லிடத்துக்காக்கினென் காவாக்கா லென்."
    என்றேன் நான்.

    "புரிஞ்சுடுச்சு" என்றார் தமிழாசிரியையின் கணவர் சைக்காலஜி ப்ரொஃபசர்.

    அவரை ஒரு முறை முறைத்தவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.
    " அப்ப நான் எப்படித்தான் இருக்கணும்?"

    "மஞ்சு பாஷிணி."

    "தமிழில்ல சொல்லுங்க.."

    " இதமாய் மென்மையாய் பேசுபவள்"

    சுப்பு ரத்தினம்.//

    எத்தனை அழகாய் ரசித்து வாசித்து பின்னூட்டம் இட்டிருக்கீங்க ஐயா.....

    நானும் பலமுறை ரசித்து வாசித்தேன். திருவள்ளுவரின் இரண்டே வரிகளில் இருக்கும் உயர்வான நிறைவான கருத்துகள்....

    கோபப்படவேண்டிய இடத்தில் கோபத்தை தன் கட்டுக்குள் வைத்து காப்பவன் தான் புத்திசாலி... எத்தனை அருமையான சிந்தனை இது....

    அமைதியும் அடக்கமும் நம்மை என்றும் உயர்வான இடத்தில் வைக்கும் வெற்றிக்கு வழி வகுக்கும் என்று சொல்லாமல் சொல்லவைத்த கடைசி வரி....

    இன்னும் இன்னும் இன்னும் என்னை பண்படுத்திக்கொள்ள உங்களின் இந்த வரியை நினைவில் இருத்துவேன் ஐயா...

    உங்கள் ஆசி வேண்டி....

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஐயா...

    ReplyDelete
  63. //மயிலன் said...
    நேற்று என்னுடைய பழைய பதிவுகள் சிலவற்றில் பின்னூட்டங்கள் வந்திருந்தன... ஒன்றும் விளங்காத நிலையில் தனபாலன் அவர்கள்தான் கூறியிருந்தார்கள் வலைச்சர அறிமுகம் பற்றி..

    வந்தோம் நாலு பேரை கை காட்டினோம் என்று இல்லாமல் அதிக சிரத்தை எடுத்து எழுதியிருப்பது தெரிகிறது... வாழ்த்துகளும் நன்றிகளும்...

    என்னுடைய பதிவுகளை நீங்கள் வாசித்திருப்பது மகிழ்ச்சி.. உங்களின் வாழ்த்து மிகை எனினும் நிச்சயம் மகிழ்கிறேன்... உண்மையை சொல்ல வேண்டுமனில் இன்று இந்த பட்டியலில் உங்களைத் தவிர எல்லோரையும் ஏற்கனவே அறிந்துள்ளேன்.. எனவே எனக்கு கிடைத்துள்ள புது அறிமுகம் நீங்கள் தான்.. நன்றி...//

    பதிவர்கள் எல்லோரும் தன் திறமைகளை உள்ளடக்கி இங்கு வலைப்பூவில் ஜொலிக்கிறார்கள்பா... குடத்திலிட்ட விளக்காய் பிரகாசிப்போரை என்னால் முடிந்தவரை இங்கு காட்டி இருக்கிறேன் அவ்வளவே... அதை தனபாலன் அவர்கள் உங்களுக்கு வந்து தெரிவித்தமைக்கும் உங்களுக்கும் மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா...

    ReplyDelete
  64. // SOS said...
    என்னை இங்கு அறிமுகப்படுத்தியமைக்கும் உங்களின் அன்பான வரிகளுக்கும், புதிய நட்புகளை எனக்கு தெரியவைத்தமைக்கும்/என் வலைதளட்துக்கும் அவர்களை வருகை தரவைத்தமைக்கும்(அப்ப்ப்பா... இதனதை மைக்கும்..) என் உளமார்ந்த நன்றிகள் மஞ்சு அக்கா...//

    நமக்குள் நன்றிகள் எல்லாம் எதற்குப்பா? பிள்ளைகள் நீங்கள் எல்லோரும் சௌக்கியமாக இருந்தாலே எனக்கு சந்தோஷம்பா...அம்மா அப்பாவுக்கு என் நமஸ்காரங்களை சொல்லுப்பா..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது