07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, December 29, 2012

வகுப்பு- ஆறாம் நாள்

குப்பு-6  பாடம்-5அனைவர்க்கும் காலை வணக்கம்!அந்தப் புகழ் பெற்ற எழுத்தாளரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று அந்த இளைஞன் வந்திருந்தான். வந்தவன் ரொம்ப நேரம் எதுவும் பேசாமல் மவுனமாக உட்கார்ந்திருந்தான். எழுத்தாளர் என்ன விஷயம் என்று வற்புறுத்திக் கேட்கவே, ""அய்யா! நான் உங்களிடம் யாசகம் கேட்டு வரவில்லை. உழைத்து முன்னேறவே விரும்புகிறேன். அதற்குத் தொழில் துவங்க கொஞ்சம் மூலதனம் தேவைப்படுகிறது. நீங்களோ புகழ் பெற்ற எழுத்தாளர். உங்கள் எழுத்தின் மூலம் நிறையச் சம்பாதித்தும் இருக்கிறீர்கள். கொஞ்சம் பணத்தைக் கடனாக எனக்குக் கொடுத்தால் அதன் மூலம் தொழில் செய்து உங்கள் கடனையும் அடைத்துவிடுவேன்'' என்றான்.
எழுத்தாளர் சிரித்தபடி, ""உழைத்து முன்னேற நினைக்கிறாய் என்பது மிகப்பெரிய விஷயம்தான். ஆனால் உனக்குக் கடன் தர வேண்டுமானால் ஏதாவது நீ அடமானம் வைத்தால்தான் அது முடியும். உன்னிடம் அடமானம் வைக்க என்ன இருக்கிறது?'' என்று கேட்டார்.
""அது இருந்தால் உங்களிடம் கடன் கேட்டே வந்திருக்க மாட்டேனே'' என்றான் அந்த இளைஞன்.
""சரி உன்னிடம் இருப்பதையே கேட்கிறேன். அதைக் கொடு. பணத்தைப் பெற்றுக்கொண்டு செல். உதாரணத்திற்கு உன் சுண்டு விரலைக் கொடு'' என்றார் எழுத்தாளர்.
""சுண்டு விரலா?'' என்று திகைத்தான் இளைஞன்.
""சரி. சுண்டு விரலைக் கொடுக்க இஷ்டப்படாவிட்டால் ஒரு கண்ணைக் கொடு'' என்றார் எழுத்தாளர்.
எழுத்தாளர் நம்மைக் கிண்டல் செய்கிறார். இவரிடம் பணம் பெயராது என்று எண்ணிய அந்த இளைஞன் கிளம்பினான்.
""தம்பி பொறு. உன் உறுப்புகளைப் பெற்றுக்கொண்டு உன்னை ஓர் ஊனமுள்ளவனாக ஆக்க வேண்டும் என்பது என் ஆசையில்லை. உனக்குப் புரிய வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிக் கேட்டேன். உன்னிடம் விலை மதிக்க முடியாத எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. அவைதான் உனக்கு மூலதனம்! அவற்றைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற நீ முயற்சிக்க வேண்டும். கண், காது, கை, கால், அறிவு என்று எத்தனையோ மூலதனம் உன்னிடமிருந்தும் அதன் அருமை தெரியாமல் பணம் என்ற மூலதனத்தைத் தேடி அலைகிறாய். நம் மூதாதையர்கள் அத்தனை வெற்றிகளையும் பணத்தைக் கொண்டு அடையவில்லை. அதை நீ புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார் அந்த எழுத்தாளர்.
உண்மையான மூலதனம் எது என்று புரிந்துகொண்ட அந்த இளைஞன் பிரகாசமான முகத்துடன் அவருக்கு நன்றி கூறி விடை பெற்றான். அந்த எழுத்தாளர் புகழ்வாய்ந்த டால்ஸ்டாய்! 

                                                     *****
 நம் அனைவரிடம் சிந்தனை என்ற மூலதனம் இருக்கிறது. அதன் அருமையை உணர்ந்து நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்களையே எழுத்தாக படைப்போம்.  நல்ல எழுத்துக்களை படைக்கும் போதும், படிக்கும் போதும் நல்ல சமுதாயம் உருவாகும்! நாமும் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
                                                     *****

இப்ப  சுவாரஸ்யமான பதிவுகளை பார்ப்போமா?

   1) என்.கணேசன்
ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளார். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் . நிலாச்சாரல் இணைய சஞ்சிகையில் நீ நான் தாமிரபரணி, மனிதரில் எத்தனை நிறங்கள்!,அமானுஷ்யன் என்ற மூன்று நாவல்கள் , யூத்ஃபுல் விகடனில் ”ஆழ்மனதின் அற்புத சக்திகள்” என்று பல படைப்புக்களை தந்துள்ளார்.

நாணயம்

சுடும் உண்மை; சுடாத அன்பு!


2) சிட்டுக்குருவி      விமலனின் இந்த சிறுகதை மறந்து போன கிராமத்து மண் வாசனையை நம்மிடம் வீசிவிட்டுத்தான் போகிறது.
வண்டிப்பைதா,,,,,

பூனையின் இலக்குஇலக்கு,,,,,,,,                                       

3) வீடு திரும்பல்  மோகன் குமார் அரசியல், சுற்றுப்புறம், நதிகள் உள்ளிட்ட பல்வேறு  சமூக  விஷயங்களை  பற்றி எழுதி வருபவர். 


4) சாமியின் மனஅலைகள் -ல்
கரை ஒதுங்கிய சில  பதிவுகள்
ஸ்ரீலட்சுமி தேவி பிரசன்னமானாள்

உங்களுக்குப் பேசத் தெரியுமா?

5) செயற்கையா ஓடிட்டிருக்கோம்.. கொஞ்சம் நின்னு இந்த இயற்கைய ரசிப்போமா? கல்பட்டார் பக்கங்கள்
இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (13) இருவாட்சி

6)சின்ன சின்ன சிதறல்கள்  அகிலாவின் இந்த பக்கங்கள் அருமை!
எனக்கு...

பெற்றோர்கள் படிக்க வேண்டிய இந்த செய்தியையும்...  நேற்றிரவு ஒரு திரௌபதி....


7) என் அப்பாதுரை
விபரீத சிறு கதையும் கனவு பலி...க்கும்
கவிதை மாயம்

8) வினவு   
சொல்லும் இந்த உண்மை சம்பவங்களை படிங்க
உண்மைச் சம்பவம் : மண்ணுள்ளிப் பாம்பிடம் மயக்கம் !

 கருணையா, கொலையா? வரமா, சாபமா? – உண்மைச் சம்பவம்!

9)குருவிகள்
கிறீச்சிட்ட கவிதை
கனவாகி.. கணிதமாகி.. கண்ணீரானது… என்ன..?!

 10) வல்வையூரான்

முகுந்தன் ராஜதுரையின்  ஹைக்கூ
ஹைக்கூக்கள் 5

சிறுகதை
இளநீர்.

11) கரந்தை ஜெயக்குமார்  

கணித மேதை ராமானுஜரை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய விரிவான
தகவல்கள் அனைத்து  அத்தியாயங்களையும்  நிச்சயம் படிக்க வேண்டிய பதிவு.

கணிதமேதை அத்தியாயம் 12


 
மீண்டும் நாளைய வகுப்பில் பார்ப்போம்!

45 comments:

 1. வணக்கம்
  உஷா அன்பரசு

  வருட இறுதி வாரம் வேலையின் நிமிர்த்தம் காரணமாக இரண்டு நாள் இடைவெளியின் பின்பு மீண்டும் சந்திக்கிறேன் வலைச்சரத்தில் இன்று 6ம் நாள்

  "நல்ல எழுத்துக்களை படைக்கும் போதும், படிக்கும் போதும் நல்ல சமுதாயம் உருவாகும்!" நல்ல சிந்தனையுள்ள வரி

  இன்று நல்ல சிந்தனைக்கு அறிவூட்டக்கூடிய தளங்களை அறிமுகம் செய்துள்ளீர்கள் பாராட்டுக்கள் உங்களுக்கு அத்தோடு இன்று தொகுக்கப்பட்ட தளங்கள் எனக்கு சிலது புதியவை சிலது அறிந்தவை தொடருகிறேன் பதிவுகளை,,,,

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. அகிலாவும், அபபாதுரையும் நான் ரசித்துப் படிக்கும் இரண்டு‘அ’கரங்கள். வீடு திரும்பலும் சிட்டுக்குருவியும் அறிமுகமானவர்கள் எனக்கு. மற்றவர்களை கவனிக்கிறேன். நல்ல அறிமுகங்களான அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 3. நம் அனைவரிடம் சிந்தனை என்ற மூலதனம் இருக்கிறது. அருமை ..

  விரல்கள் பத்தும் மூலதனம் -
  இருக்க மூடத்தனமாய் தேடுவதை சாடி இருக்கும் அற்புத படைப்புக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. என்.கணேசன் அவர்களின் அருமையான அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்..

  தற்போதைய பரம(ன்) ரகசியம் என்னும் தொடர் விரும்பிப் படிக்கிறேன் ..

  நிலாச்சாரலில் அமானுஷ்யன் என்னும் தொடரும் மற்ற பதிவுக்ளும் சிறப்பானவை ...

  அனைத்து அறிமுகங்ளும் அருமை,, பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 5. உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இன்றே இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம்.

  ReplyDelete
 6. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. அருமையான சிந்தனை மூலதனத்தை புரிந்துகொண்டோம் அறிமுகங்கள் நிறைய எனக்கு புதிது நன்றி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. அன்புள்ள டீச்சருக்கு காலை வணக்கங்கள்.

  இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

  மீண்டும் சற்றே தாமதமாக வருவேன்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 9. கதாபாத்திரங்கள் : உஷா + கோ

  உஷா = திருமதி உஷா டீச்சர்

  கோ = கோபாலகிருஷ்ணன், மாணவன்

  காட்சி: இப்போது “கோ” அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக வகுப்பறைக்குள் நுழையப்பார்க்கிறான்.

  இப்போது வசனங்கள் ஆரம்பம்:

  >>>>>>>>>>

  ReplyDelete
 10. உஷா:
  “டேய் கோபாலகிருஷ்ணா,
  எங்கேடா காலையிலே வந்து ஆஜர் சொல்லிவிட்டு கிளாஸுக்கு கட் அடிச்சுட்டு இப்போத்தான் மிகவும் லேட்டாக வருகிறாய்?

  அதுவும் அழுது கோண்டே வருகிறாய்! இன்னிக்கு என்னாச்சு உனக்கு?

  இந்த மாய்மாலமெல்லாம் என்னிடம் நடக்காது.

  கையை நீட்டு. பிரம்படி கொடுக்க வேண்டும்.

  கோ:
  அய்யோ டீச்சர், அப்படியெல்லாம் பிரம்படி கொடுக்காதீங்கோ டீச்சர்.

  நான் ஒரு முக்கியமான வேலையாகத்தான் போனேன்.

  சொல்றதைக்கேளுங்கோ.

  உஷா:
  [ ”கோ” வின் காதைப்பிடித்து திருகியபடி], சரி சீக்கரமாச் சொல்லித்தொலை.

  கோ:
  அய்யோ, நான் சொல்ல வந்ததைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் இப்படி என் காதைப்பிடித்து திருகிறீங்களே, எனக்கு வலிக்காதா?

  உஷா:
  சரி சீக்கரமாச்சொல்லுடா ......

  [”கோ” வின் காது டீச்சரிடமிருந்து தப்பியது இப்போது]

  >>>>>>>>>>>

  ReplyDelete
 11. கோ:
  உங்களுக்கும், நம் தலைமை ஆசிரியர் ஐயா அவர்களுக்குமாக இரண்டு இளநீர் வாங்கக் கடைக்குப்போனேன்.

  நேத்தோ முந்தாநேத்தோ ஆசையாகக் கேட்டீங்க தானே!

  உஷா:
  பொய் சொல்லாதே,
  வெறும் கையோடு அழுதுகிட்டே வந்துட்டு, இளநீஈ வாங்கியாறப்போனேன்ன்னு பொய் வேறு சொல்கிறாயே?

  வாங்கி வந்த இளநீர் எங்கே?

  கோ:
  அது ஏன் கேட்கிறீங்க டீச்சர், அது ஒரு பெரிய கதை.

  உஷா:
  ஆஹா, கதையா அப்படின்னா உடனே சொல்லு.

  நீ தான்.அழகழகாக் கதைகள் எல்லாம் சொல்லுவாயாமே!

  நானும் இதுவரை நீ கதை சொல்லிக்கேட்டதே இல்லேடா!

  சொல்லு சொல்லு சீக்கரமாச் சொல்லு.

  >>>>>>>>>

  ReplyDelete
 12. கோ:
  இளநீர் விற்கும் ஆளிடம் போனேனா?

  அங்கே நிறைய இளநீர் அடுக்கி வைத்திருந்தார் அந்த ஆளு.

  கேட்கிறவர்களுக்கெல்லாம் சீவி சீவி கொடுத்துக்கினே இருந்தாரு.

  நான் சின்னப் பொடிப் பையன் தானே; அங்கனையே என்னை ஒரு ஓரமா நிக்க வெச்சுப்புட்டாரூஊஊ.

  அங்கே பக்கத்திலே நான் ஒரு காட்சியைப் பார்த்தேனா!

  எனக்கு மனதுக்கு ரொம்பவும் கஷ்டமாப் போயிடுச்சு.

  உஷா:
  அது என்னடாப் பொல்லாத காட்சி?
  சீக்கரமாக் கதையைச் சொல்லு நீ!!

  >>>>>>>>>

  ReplyDelete
 13. கோ:
  அங்கே என்னைப்போலவே என் வயதுள்ள ஒரு ஏழைச் சிறுவன் டீச்சர்.
  பாவம் அவன்.

  சட்டை பனியன் செருப்பு ஏதும் போடாமல், தலையையும் எண்ணெய் தடவி சீவிக்கொள்ளாமல், ஒரு கிழிஞ்ச டிராயர் மட்டும் போட்டுக்கிட்டு பரட்டைத்தலையுடன் இருந்தான்.

  உஷா:
  அவன் உன்னை என்ன பண்ணினான்.

  கோ:
  அவன் என்னை ஒண்ணும் பண்ணலை டீச்சர்.

  அங்கு கீழே பிளந்து தூக்கியெறியப்படும் இளநீர் ஓட்டுக்குள்ளே ஒட்டியிருக்கும் தேங்காயை [வழுக்கையை] கஷ்டப்பட்டு தன் கை விரல் நகங்களால் பெயர்த்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறான்.

  அவனைப்பார்க்க பாவமா இருந்துச்சு.

  உஷா:
  நீ என்ன செய்தாய்?.

  கோ:
  எனக்கு அந்த சூழ்நிலையை வைத்து ஒரு பாடல் [கவிதை] பாடணும் போலத்தோணிச்சு டீச்சர்.

  உஷா:
  ஓஹோ, உனக்குக் கவிதை கூட வருமா?

  கோ:
  என்னா இப்படி சொல்லிட்டீங்க? அதைப்பத்தி கடைசியிலே சொல்றேன்.

  உஷா:
  சரி, அப்புறம் என்னாச்சு, சொல்லு.

  >>>>>>>>>>>

  ReplyDelete
 14. கோ:
  நான் உங்களுக்காகவும், நம் தலை’மை’ ஆசிரியருக்காகவும், கஷ்டப்பட்டு சீவி வாங்கிய இரண்டு இளநீரையும் அவனுக்கே கொடுத்துக் குடிக்கவும் சாப்பிடவும் செய்தேன்.

  என்னைப்பார்த்து அவன் அன்புடன் சிரித்தான்.

  அவனுக்கு நான் கை கொடுத்து அவன் கையை அன்புடன் பிடித்துக் குலுக்கினேன்.

  உஷா:
  பிறகு நீ என்ன செய்தாய்?

  கோ:
  பிறகு அவனை என் வீட்டுக்கு கூட்டிப்போய் அவனுக்கு என்னோட ஒரு டிராயரையும் சட்டையையும் என் அம்மாகிட்ட விஷயத்தைச்சொல்லி வாங்கி கொடுத்தேன்.

  உஷா:
  அடடா, அப்படியா? அம்மா சரின்னு சொன்னாங்களா?

  கோ:
  என் அம்மாவுக்கு ரொம்ப நல்ல மனஸு.

  அவனுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் கொடுத்து, குளிருக்குப் போர்த்திக்கொள்ள ஒரு பழைய போர்வையும் கொடுத்து அனுப்பினாங்கோ! ;))))

  >>>>>>>>

  ReplyDelete
 15. உஷா:
  நீ ஏதோ கவிதை சொல்கிறேன் என்றாயே!

  அதைச் சொல்லு முதலில்

  கோ:
  சொல்றேன் சொல்றேன் ....

  முதலிலே அதை ஒரு பேப்பரில் தெளிவாக எழுதிக்கிறேன்.

  அதன் பிறகு அதைப்பார்த்து நான் படிக்கிறேன்.

  உஷா:
  ஓக்கேடா, சீக்கரமா எழுதுடா, சீக்கரமாச் சொல்லுடா.

  >>>>>>>>>>>>>>>>>>>>

  //அதுவரை [எழுதும்வரை] இப்போது இடைவேளை//

  >>>>>>>>>>>>>>>>>>>>

  ReplyDelete
 16. வணக்கம்! அண்ட் மிக்க நன்றி!
  to
  ரூபன், பாலகணேஷ், ராஜராஜேஸ்வரி, மஞ்சு, லக்ஷ்மி, கோவை.மு.சரளா
  நாளை வகுப்பு முடிகிறது. அவசியம் நீங்க நாளைக்கும் வரனும்!

  ம்... வை.கோ சார் இருங்க.. உங்க கிட்ட பேச வேண்டியது நிறைய இருக்கு..!

  ReplyDelete
 17. கோ:
  அதாவது டீச்சர்; அந்த ”இளநீர்”களில் ஒன்று, தன் சொந்தக் கதையைப்பற்றி அந்த ஏழைச்சிறுவனிடம் பேசுவது போல நான் கவிதை படைத்துள்ளேன்.

  அந்தப்பாய்ண்டை மறந்துடாமக் கேளுங்கோ எல்லோரும்.

  உஷா:
  டேய்ப்பசங்களா, அமைதியா இருங்கோ எல்லோரும்.

  இப்போ நம்ம கோபாலகிருஷ்ணன் கவிதை படிக்கப்போறான்.

  எல்லோரும் காதைத் தீட்டி வெச்சுக்கிட்டு கேட்கோணும்.

  சொல்லிட்டேன்.

  டேய் கோபாலகிருஷ்ணா,

  நீ இப்போ ஸ்ட்டார்ட் பண்ணி உன் கவிதையைப் படிக்கலாம்.

  >>>>>>>>>>

  ReplyDelete
 18. கோ:

  [இளநீர் அந்த ஏழைச்சிறுவனைப்பார்த்து இப்போ பேசுவதாக கற்பனை செய்து கொள்ளவும்]


  குறும்பையாய இருந்தோம்!

  குளுமையாய் வளர்ந்தோம்!!


  உச்சியில் இருந்தோம்!

  உருண்டு விழுந்தோம்!!


  வண்டியில் ஏற்றினர்!

  வழியில் நிறுத்தினர்!!


  பாயை விரித்தனர்!

  பாங்காய் பரப்பினர் !!


  அளவாய்ப் பிரித்தனர்!

  அழகாய் அடுக்கினர்!!


  பலரும் வந்தனர்!

  பார்த்து மகிழ்ந்தனர்!!


  ஒருசிலர் வந்தனர்!

  உடைக்கக் கோரினர்!!


  சீவப்பட்டோம் !

  சிந்தினோம் கண்ணீர்!


  இளநீர் என்றனர்!

  இனிமையாய்க் குடித்தனர்!!


  வழுக்கை என்றனர்!

  வழித்து உண்டனர்!!


  எறியப்பட்டோம்!

  எச்சில் ஓடாய் !!


  என் கதைக் கேட்டாய்!

  உன் காது செவிடோ!!


  வழித்தது போதும்!

  விழித்தெழு கண்ணா!!


  உழைத்தால் உணவு!

  உண்டு இந்த உலகில்!!

  -oOo-

  வகுப்பறையில் இப்போது பலத்த கைத்தட்டல்.

  உஷா டீச்சர் “கோ” வின் கையைப்பிடித்துக்குலுக்கிப் பாராட்டுகிறார்.

  உஷா:

  டேய் கோபாலகிருஷ்ணா,
  நீ சாதாரண ஆளு இல்லையடா !

  சூப்பரா எழுதியிருக்கேயேடா.

  இன்னும் என்னன்ன கவிதைகள் இதுபோல எழுதியிருக்கிறாய், சொல்லுடா.

  >>>>>>>>>>

  ReplyDelete
 19. ஏதோ கொஞ்சம் அவ்வப்போது கிறுக்குவது உண்டு டீச்சர்.

  இந்த ”இளநீர்” கவிதைதான் நான் முதன்முதலில், சின்னூண்டு பையானா இருந்தபோது எழுதி, ”கோகுலம்” என்ற குழந்தைகள் பத்திரிகையில் அது அச்சேறி, எனக்கு அதன் ஆசிரியரான “குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா” அவர்களால் கையொப்பமிட்ட பாராட்டுக்கடிதமும், பரிசுத்தொகை
  ரூ. 25 ம் கூடக் கிடைத்தது.

  >>>>>>>>>>>

  ReplyDelete
 20. நிறைய நான் இதுவரை இதுபோலக் கிறுக்கியிருந்தாலும், ஏதோ என் மனசுக்கு பிடித்த ஒருசிலவற்றை மட்டும் பயந்து கொண்டே பதிவாகப் போட்டிருக்கிறேன்.

  அதற்கான இணைப்புகள் இதோ:

  http://gopu1949.blogspot.in/2011/04/blog-post.html

  அந்த நாளும் வந்திடாதோ [கவிதை]

  http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html

  உனக்கே உனக்காக [கவிதை]

  http://gopu1949.blogspot.in/2011/01/blog-post_9035.html

  சொன்னதைச் சொல்லுமாம்


  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  மீண்டும் ஓர் இடைவேளை
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  ReplyDelete
 21. கலக்கல் மாணவர் வை.கோ சார் வாழ்க!
  எப்படி சார் எப்படி..? நிசமாவே ஒரு க்ளாஸுக்குள்ள இருந்தது மாதிரி பீல் வந்தது. இள நீர் ருசியை விட உங்க கவிதை இள நீர் ரொம்ப இனிப்பு! கலக்கிறீங்க சார்.. சான்ஸே இல்ல நகைச்சுவையில் இப்படி ஒரு கலாட்டாவா கற்பனையை அள்ளி கொட்டறதுக்கு உங்களுக்கு நிகர் நீங்கதான்! மிக்க நன்றி!!!!!!!!!!!!

  ReplyDelete
 22. நாளைக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு! மறக்காம எல்லாரும் வகுப்புக்கு வந்துடுங்க!

  ReplyDelete
 23. உழைப்பே மூலதனம் என்ற டால்ஸ்டாய் உணர்த்திய ஒரு நிகழ்வை நன்றாகச் சொன்னீர்கள்.

  // நம் அனைவரிடம் சிந்தனை என்ற மூலதனம் இருக்கிறது. அதன் அருமையை உணர்ந்து நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்களையே எழுத்தாக படைப்போம். நல்ல எழுத்துக்களை படைக்கும் போதும், படிக்கும் போதும் நல்ல சமுதாயம் உருவாகும்! நாமும் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்! //

  என்ற உங்கள் வரிகள் வலைப் பதிவாளர்களுக்கு ஒரு நல்ல
  வழிகாட்டி.  ReplyDelete
 24. மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா!

  ReplyDelete
 25. அந்தப் புகழ்வாய்ந்த எழுத்தாளர் டால்ஸ்டாய் அவர்கள் சொன்ன சிறிய கதையுடன் துவங்கியுள்ள தங்களின் இன்றைய வகுப்பு மிகவும் ஜோராக உள்ளது.

  அந்தப் புகழ்வாய்ந்த எழுத்தாளர் டால்ஸ்டாய் அவர்கள் சொன்ன சிறிய கதையைச் சொல்லி இன்றைய நம் வகுப்பினை ஆரம்பிக்க சிறப்பு அனுமதி அளித்துள்ள இந்தப் புகழ் வாய்ந்த நம் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நம் நன்றிகள்.

  இது ஏற்கனவே பலமுறை கேள்விப்பட்ட கதையேயாகினும், தங்கள் திருக்கரத்தால் மேலும் ஒரு முறை இங்கு தரப்பட்டுள்ளது, எனக்கு மேலும் பத்து கரங்களும், மேலும் பத்து கண்களும் கிடைத்தது போல மகிழ்ச்சியாக உள்ளது.

  அதுமட்டுமா, ஒரு மிகப்பெரிய வாலும் முளைத்ததுபோல ஒரே குஷியாகி, மரத்தினில் இங்குமங்கும் தாவிக்குதிக்கும் நம் முன்னோர்கள் போல என்னையும் துள்ளிக்குதிக்கச் செய்துள்ளது.

  >>>>>>>

  ReplyDelete
 26. / நம் அனைவரிடம் சிந்தனை என்ற மூலதனம் இருக்கிறது. அதன் அருமையை உணர்ந்து நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்களையே எழுத்தாக படைப்போம். நல்ல எழுத்துக்களை படைக்கும் போதும், படிக்கும் போதும் நல்ல சமுதாயம் உருவாகும்! நாமும் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!//

  வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். என்ன இருந்தாலும் டீச்சர் டீச்சர் தான்.

  நல்ல சமுதாயத்தை உருவாக்கச்சொல்லும் நல்ல டீச்சர் ’உஷாவா கொக்கா’ என சிலர் கொக்கரிக்கக்கூடும். ;))))

  >>>>>>>

  ReplyDelete
 27. இன்றைய தங்களின் 11 அறிமுகங்களில் Serial Nos: 2, 3, 4, 7 and 11 ஆகிய ஐவரின் தளங்களுக்கு நான் எப்போதோ சில முறை சென்று, கருத்துச்சொல்லியுள்ள ஞாபகம் எனக்கு உள்ளது.

  இவர்களில் சிலர், நான் அவர்கள் தளத்திற்கு வருகிறேனா இல்லையா என்பது பற்றியெல்லாம் கவலையே படாமல், என் தளத்திற்கு வருகை தந்து கருத்துக் கூறிச்செல்வதும் உண்டு.

  அதுதான் மிகச்சிறந்த இந்தப் பதிவர்களின் ஸ்பெஷாலிடி என்பேன்.

  அவர்கள் ஐவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

  >>>>>>>

  ReplyDelete
 28. இன்றைய தங்களின் வகுப்பு-6 பாடம்-5 வழக்கம் போல வெகு அருமையாக அமைந்து விட்டது.

  நாளை ஒரே ஒரு நாள் தான் பாக்கியுள்ளது.

  அதன் பிறகு

  நீங்கள் உங்கள்
  வேலூர் கோட்டையில் !

  நான் எங்கள் திருச்சி மலைக்கோட்டையில் !!

  இருவருக்குமே ஒரே ஜாலி தான் .. நிம்மதி தான். ;)))))

  >>>>>>>>>

  ReplyDelete
 29. நான் இந்த ஆண்டுக்கு [2012] கடைசியாக் கொண்டுவந்து
  சேர்த்து விட்ட
  “திருமதி உஷா அன்பரசு”
  என்ற டீச்சரை

  இந்தப்பதிவுலக வலைச்சரம் என்ற பள்ளிக்கூடம் என்றும் மறக்கவே மறக்காது.

  என்னாலும், உங்களை என்றும் மறக்கவே முடியாது.

  இந்த புத்தாண்டுப் பரிசாக எனக்குப் புதிதாகக் கிடைத்துள்ளது தங்களின் அன்பும் நட்பும். ;)))))

  >>>>>>>>

  உங்களைத்தவிர என் பரிந்துரையில் பொ

  ReplyDelete
 30. உங்களைத்தவிர என் பரிந்துரையில்

  பொறுப்பேற்றுக்கொண்ட

  மற்ற 19 வலைச்சர ஆசிரியர்களில்

  யாருமே இந்த அளவுக்கு என்னை

  ’சு ளு க் கு’ எடுத்தது இல்லை

  என்றே நான் சொல்வேன்.

  அவர்கள் விஷயத்தில் ஏதோ கொஞ்சம் என் கைவிரல்கள் வலித்தது உண்டு.

  உங்கள் விஷயத்தில் என் சர்வாங்கமும் வலிக்கிறது. ;)))))


  அணையும் விளக்கு சுடர் விட்டு எரியும் என்பார்களே, அதே போல, எனக்கு என்னவோ ஓர் உணர்வு ஏற்படுகிறது, என் உடலிலும் உள்ளத்திலும். ;(((((

  ஏதோ ஒரு சின்ன சந்தோஷம்.

  ஏதோ இன்று வரை நம்மால் வழக்கம் போல எதைப்பற்றியும் சரளமாக எழுத முடிகிறதே என்று.

  நாளை நடக்கப்போவது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

  பிரியமுள்ள,
  VGK

  -oOo-

  ReplyDelete
 31. இதில் சில அறிமுகங்கள் புதிதானவை. அறிமுகபடுத்திய உங்களுக்கு என் நன்றிகள்...
  ஆனாலும் உஷா மேம் கிளாஸ் நல்லாதான் இருக்கு...

  ReplyDelete
 32. என்னுடைய பதிவை அறிமுகப்படுத்தியதிற்கு மிக்க நன்றி, உஷா அவர்களே.

  ReplyDelete
 33. தினம் தினம் புது புது அறிமுகங்கள் கலக்குறிங்க டீச்சர்.

  கல்பட்டார் பக்கங்கள் பகிர்வு மிக மிக அருமை.

  என்பது ப்ளஸ் வயதுள்ள பெரியவர், விபரம் தெரிந்தவர் எழுதுவது.அவருடைய நிறைய கட்டுரைகள் பரிசு வாங்கி இருக்கிறது. அவர் வலைப்பதிவில் இப்போதுதான் பதிகிறார். ஆனால் எழுதுவது எத்தினை எத்தினையோ காலங்களுக்கும் முன்பு முதல், அந்த காலத்திலயே சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட, கதை, கட்டுரை,புகைப்படங்கள் என்று தினமும் ஏதாவது எழுதிக்கொண்டே இருப்பார். சிறந்த கலை எண்ணம் கொண்டவர். இந்த வயதிலும் தவறாமல் தினமும் ஒரு கவிதையும், ஒரு கட்டுரையையும் தவறாமல் எழுதிவிடுவார். வலைப்பதிவில் அவருக்கு இணைக்க இப்போதுதான் கற்றுக்கொண்டுள்ளார். இனிவரும் காலங்களில் சிறந்த நிறைய பதிவுகளை பார்க்கமுடியும். நல்ல நகைச்சுவையாக எழுதி நம்மை எல்லாம் சிரிக்க வைப்பார். இப்போது கூகுள் குழுமங்களில் எழுதி வருகிறார்.

  இவருடைய கட்டுரைகளை அயோக்கியர்கள் திருடி பிரபல பத்திரிக்கைகளுக்கு அனுப்பி பரிசையும் வாங்கிச் சென்றுள்ளனர்.
  இருந்தாலும் அதையெல்லாம் மனதில் பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் மிகச் சாதாரணமாகவே மன்னித்துவிட்டார். பயன்பெரட்டும் என்று சொல்லி முடித்துக்கொண்டார், உயர்ந்த உள்ளம் கொண்ட அருமையான மனிதர் அடுத்தமுறை சென்னை வருகையில் அவரை நேரில் சந்திக்க இருக்கிறேன்.

  அவருடைய பதிவை இங்கு பதிந்தர்க்கு மிக்க நன்றிங்க...

  உங்க பாடம் இன்னும் ஒருநாள்தான் இருக்கிறதா? ஆறுநாள் முடிந்துவிட்டதா?

  திருமதி உஷா அன்பரசு அவர்களை இன்னும் ஒரு வாரம் பாடம் எடுக்கச் சொல்லவேண்டும் என்று வலைப்பதிவு ஆசிரியர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

  வணக்கம்.

  ReplyDelete
 34. உறுப்புகள் அனைத்தும் மூலதனம் என உணர்த்தும் டால்ஸ்டாய் சம்பவம் நல்லதொரு நினைவூட்டல்.

  ReplyDelete
 35. மிக முக்கிய பதிவர்களைத்தான் இன்று அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். இங்கு தொகுத்தளித்தது மிகச் சிறப்பு.

  ReplyDelete
 36. மிக முக்கிய பதிவர்களைத்தான் இன்று அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். இங்கு தொகுத்தளித்தது மிகச் சிறப்பு.

  ReplyDelete
 37. என் பதிவையும் பகிர்ந்துள்ளீர்கள். மிக்க நன்றிகள் உஸா.

  ReplyDelete
 38. செம்மலை ஆகாஷ் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.

  உஷா அன்பரசு அவர்கள் மறு வாரமும் ஆசிரியராகத் தொடரலாம்.

  ReplyDelete
 39. உங்கள் பகிர்வுகள் அருமை.நேரம் கிடைக்கும் பொழுது தான் பார்க்க வேண்டும்.நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 40. பகிர்வுகள் அருமையாக உள்ளன.

  எனது பதிவு ஒன்றினையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இதன் மூலம் எனது ஒரு கனவான "நான் பெற்ற இன்பம் இவ் வையகம் பெறுக" என்பது நிறைவேறும் என்னும் எண்ணம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

  ReplyDelete
 41. ஆஹா ஆகாஷ், நிஜாமுதீன் சார் என்னை மாட்டிவிட பார்க்கிறீங்களே..?!
  முடியல...! இன்னொரு வாரமும் நான் ஆசிரியரா இருக்கனுமா... அங்க பாருங்க மத்த ஸ்டூண்ட்ஸ் எல்லாம் கையில் எதையோ எடுத்துகிட்டு ஆவேசமா வர்றாங்க... ஐ மீன் அது அழுகின தக்காளி... போல.. எஸ்கேப்!

  ReplyDelete
 42. இரவுவணக்கம்
  உஷாஅன்பரசு (டீச்சர்)


  இரண்டு நாள் பாடம் எனக்கு கட்டாகிவிட்டது அதனால் எப்படிப்பட்ட பாடங்களை இழந்த நான் என்பதை நான்தான் அறிவேன் கட்டாயம் ஒரு பாடசாலை ஆரம்ப நாள் அன்றும் இறுதி நாள் அன்றும் என்ன வேலை இருந்தாளும் போக வேண்டிய கடமை கட்டாயம் நாளை இறுதிப் பரீட்சையில் சந்திப்போம் டீச்சர்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 43. காலையிலேயே புத்துணர்ச்சி தரக் கூடிய ஒரு பதிவு.
  இதில் இடம் பெற்ற பதிவர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 44. மிக்க நன்றி உஷா மேடம்

  ReplyDelete
 45. அறிமுகத்துக்கு மிக நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது