07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 10, 2012

வலைச்சரத்தில் அதிரடி ஆரம்பம் ...........


பெயர்: ஹாஜா மைதீன்  NKSஅடைமொழி:  அதிரடி ஹாஜாசாதனை:  நம்ம என்ன நிலாவுக்கா போனோம்! நான் ஒரு பதிவர்..அதுதாங்க நம்ம சாதனை!


பதிவராக காரணம்:  வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல.எனது எண்ணங்களை ,உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக...வயது:  3 (சொல்லிக்க ஆசைதான்...ஹி ஹி..பதிவராக என் வயதுங்க இது!)எழுதிய பதிவுகள்:  அது இருக்குமுங்க  335  

                       
                                   

எழுதியதில் மக்களுக்கு பிடித்தது:  

எல்லா பதிவும்தான்  ஹி ஹி...இருந்தாலும் சொல்றேன்


காணாமல் போனவர்கள் (கிராமராஜன்)பயோடேட்டா : கனிமொழி

இவங்கெல்லாம் முதல்வரானால்.......ஒரு சீரியஸ் பதிவு


பதிவர்களை வம்புக்கு இழுத்த சுஹாசினி....                                                            

கிடைத்த அங்கீகாரம்:  
ஆனந்த விகடனில் அதிரடி...லேட் பட் நாட் லீஸ்ட் : வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு...


வித்தியாசமாக அறிமுகப்படுத்தி  கொள்வோம்   என நினைத்ததன் விளைவே இந்த பயோ டேட்டா அறிமுகம்...


இன்று முதல் இந்த வாரம் வரை  வலைச்சரத்தின் ஆசிரியராக பொறுப்பேற்க வைத்த அய்யா சீனா அவர்களுக்கு என் நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்...

வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்பது பதிவுலகில் இருக்கும் எல்லா பதிவர்களின் கனவு...பதிவெழுத வரும் எல்லாரும்  நிச்சயம் யாராவது ஒரு பதிவரால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்போம்....

அப்படி அறிமுகப்படுத்தப்பட்ட நேரங்களில் நாமும் வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்று  பிற பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என எண்ணி இருப்போம்...அந்த ஆசை நிறைவேறிய பின்னர் நிச்சயம் நாம் பதிவராக மற்ற எல்லா பதிவர்களாலும் அறியப்பட்டு இருப்போம்...காரணம் வலைச்சரத்தின்  வீச்சு அப்படி!

எழுத வந்த புதிதில் 2 தடவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறேன்...நான் எழுதுவதற்கு ஒரு உந்துதலாக இருந்து ஊக்கம் அளித்த  ரஹீம் கஸாலி அண்ணனை இந்த நேரத்தில் நினைவு கூற விரும்புகிறேன்...அவருக்கு என் நன்றி...எனக்கு ஆதரவளித்த பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...

இனி வரும் 6 நாட்களும் வலைச்சரத்தில் சிறப்பாக எழுதுவேன் என்ற நம்பிக்கையோடு....ஆரம்பிக்கிறேன்...நன்றி நண்பர்களே...


நட்புடன்...

அதிரடி ஹாஜா 

20 comments:

 1. அன்பின் ஹாஜா மைதீன்

  பதிவின் இடப் பக்கத்தில் வரும் தைப்புகள் சரியாகத் தெரியவில்லை - தேர்ந்தெடுத்த வண்ணம் அது மாதிரி - போல்ட்ல் போடலாம் - அல்லது வண்ணத்தினை மாற்றலாம். லேபிள் இடுக. விதிமுறைகளைப் படிக்கவும்.

  நல்வழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் சகோ .......

  ReplyDelete
 3. அதிரடியாக அறிமுகம் செய்துகொண்டு, இந்த வார வலைசர ஆசிரியர் பொறுப்பேற்றுள்ள திரு ஹாஜ மைதீன் அவர்களுக்கு நல்வரவும் பாராட்டுக்களும்.
  ஒரு மிகச் சிறப்பான வாரத்தைக் கொடுக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. அதிரடி இருக்கட்டும் அடிதடி இல்லாம பாத்துக்கங்க...  இந்த வார ஆசிரியர் பணியை வெற்றிகரமாக முடிக்க என் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. வாழ்த்துகள் நண்பரே!

  ReplyDelete
 6. வ்லைச்சர அதிரடி அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் நண்பரே. உங்களின் பதிவே எனக்குப் புதியது . நீங்கள் அறிமுகப்படுத்துபவர்களையும் சந்திக்க விளைகிறேன் நன்றி.

  ReplyDelete
 8. இந்தவாரத்தின் வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்க வரும் அரசியல் அதிர்வெடிகள் போடும் அதிரடி ஹாஜா எனப்படும் ஹாஜா மைதீன் NKS அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்!

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள். இங்கும் உன் அதிரடி தொடரட்டும்

  ReplyDelete
 10. அருமையான அறிமுகம்! இன்று முதல் உங்களை தொடர்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 11. தொடருங்கள் வாழ்த்துக்கள் அறிமுகமே அசத்தலாய்உள்ளது

  ReplyDelete
 12. அஸ்ஸலாமு அலைக்கும் ஹாஜா மைதீன்,

  ஆரம்பமே அமர்க்களமா இருக்கு. சிறப்பாக செயல்பட என் பிரார்த்தனைகள்..கலக்குங்க..

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 13. வாழ்த்துகள் ஹாஜா மைதீன்....

  இந்த வாரம் உங்கள் வாரம்.... அசத்துங்க!

  ReplyDelete
 14. அதிரடி வாரம் ஆரம்பம்!வாழ்த்துகள் ஹாஜா!

  ReplyDelete
 15. அன்பின் ஹாஜா மைதீன்

  முதலாம் நாளில் அரசியல் ஆய்வில் மிக பிரமாண்டமான அதிரடியாகத்தான் இருக்குது, இந்த வாரம் வலைச்சர அசிரியர் பணியை கடமையை ஏற்றதை இட்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உங்களை வருக வருக என வரவேற்கின்றேன் 2ம் நாளும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 16. வாழ்த்துகள் சகோதரருக்கு

  ReplyDelete
 17. அதிரடி அறிமுகம் வாசித்தேன் .பணி சிறக்க வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 18. உங்களின் வருகைக்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பர்களே....

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள்,.
  ரொம்ப அதிரடியா இருக்கே

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது