வலைச்சரத்தில் அதிரடி ஆரம்பம் ...........
➦➠ by:
அதிரடி ஹாஜா,
சுய அறிமுகம் வலைச்சரம்
பெயர்: ஹாஜா மைதீன் NKS
அடைமொழி: அதிரடி ஹாஜா
சாதனை: நம்ம என்ன நிலாவுக்கா போனோம்! நான் ஒரு பதிவர்..அதுதாங்க நம்ம சாதனை!
பதிவராக காரணம்: வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல.எனது எண்ணங்களை ,உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக...
பதிவராக காரணம்: வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல.எனது எண்ணங்களை ,உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக...
வயது: 3 (சொல்லிக்க ஆசைதான்...ஹி ஹி..பதிவராக என் வயதுங்க இது!)
எழுதிய பதிவுகள்: அது இருக்குமுங்க 335
எழுதியதில் மக்களுக்கு பிடித்தது:
எல்லா பதிவும்தான் ஹி ஹி...இருந்தாலும் சொல்றேன்
காணாமல் போனவர்கள் (கிராமராஜன்)
பயோடேட்டா : கனிமொழி
இவங்கெல்லாம் முதல்வரானால்.......ஒரு சீரியஸ் பதிவு
பதிவர்களை வம்புக்கு இழுத்த சுஹாசினி....
லேட் பட் நாட் லீஸ்ட் : வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு...
வித்தியாசமாக அறிமுகப்படுத்தி கொள்வோம் என நினைத்ததன் விளைவே இந்த பயோ டேட்டா அறிமுகம்...
இன்று முதல் இந்த வாரம் வரை வலைச்சரத்தின் ஆசிரியராக பொறுப்பேற்க வைத்த அய்யா சீனா அவர்களுக்கு என் நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்...
வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்பது பதிவுலகில் இருக்கும் எல்லா பதிவர்களின் கனவு...பதிவெழுத வரும் எல்லாரும் நிச்சயம் யாராவது ஒரு பதிவரால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்போம்....
அப்படி அறிமுகப்படுத்தப்பட்ட நேரங்களில் நாமும் வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்று பிற பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என எண்ணி இருப்போம்...அந்த ஆசை நிறைவேறிய பின்னர் நிச்சயம் நாம் பதிவராக மற்ற எல்லா பதிவர்களாலும் அறியப்பட்டு இருப்போம்...காரணம் வலைச்சரத்தின் வீச்சு அப்படி!
எழுத வந்த புதிதில் 2 தடவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறேன்...நான் எழுதுவதற்கு ஒரு உந்துதலாக இருந்து ஊக்கம் அளித்த ரஹீம் கஸாலி அண்ணனை இந்த நேரத்தில் நினைவு கூற விரும்புகிறேன்...அவருக்கு என் நன்றி...எனக்கு ஆதரவளித்த பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...
இனி வரும் 6 நாட்களும் வலைச்சரத்தில் சிறப்பாக எழுதுவேன் என்ற நம்பிக்கையோடு....ஆரம்பிக்கிறேன்...நன்றி நண்பர்களே...
நட்புடன்...
அதிரடி ஹாஜா
நட்புடன்...
அதிரடி ஹாஜா
