07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 6, 2014

இந்த வார வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க கும்மாச்சி வருகிறார்!!

வணக்கம் வலை நண்பர்களே,
          இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த சிகரம் பாரதி அவர்கள் தமது பொறுப்பை மிகுந்த ஆர்வமுடனும், சிறப்புடனும் நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
     அவர் தமது பணிச்சுமைகளுக்கு இடையே ஐந்து இடுகைகள் எழுதியுள்ளார். பலரும் அறியாத பதிவர்களை சுட்டிக் காட்டி இவரது ஆசிரியர் பணி இருந்தது. அவர் எழுதிய இடுகைகள் விவரங்கள் கீழே படத்தில் அறியலாம்.
        திரு. சிகரம் பாரதி அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு மிக்க மகிழ்ச்சியடைகிறது.

          நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க கும்மாச்சி எனும் வலைப்பூவை எழுதி வரும் கும்மாச்சி (புனைப்பெயர்) அவர்களை அழைக்கின்றேன். இவரைப் பற்றி சொல்வதென்றால், பிறந்தது திருக்கோயிலூர், வளர்ந்தது சிங்கார சென்னையில். பள்ளி பருவம் சென்னை தியாகராய நகரில் ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில், வேதியலில் பட்டப்படிப்பை முடித்து சென்னை உரத்தொழிற்சாலையில் சில வருடங்கள் உழைத்து, பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் வாசம். தற்பொழுது கத்தாரில் எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.


    மேலும், இவர் தமிழ் வழி கல்வி பயின்றதனாலும், தமிழ் மீது இயல்பாகவே இருந்த ஈடுபாடினாலும், எண்ணற்ற எழுத்தாளர்களை வாசித்ததனாலும் வந்த எழுத்தார்வத்தால் வலைப்பூ ஆரம்பித்ததாக சொல்கிறார். இதற்கு பின் கிடைத்த நட்பின் வட்டம் வாழ்வின் புது அத்தியாயத்தை தொடக்கி வைத்ததாக சொல்கிறார். 

     இவருடைய வலைப்பூ பற்றி குறிப்பிடுகையில், சிறு சிறு அனுபவங்களை கதைகளாக்கியதில் கிடைத்த வாசகர் வட்டமும், அவர்கள் அளித்த ஊக்கமும் நாளடைவில் அரசியல், கவிதை என்று எழுத்தின் வீச்சு விரிவடையத் தொடங்கியது என சொல்லலாம்.


       திரு. கும்மாச்சி அவர்களை ஆசிரியர் பொறுப்பேற்க வருக வருக என வரவேற்பதில் வலைச்சரக் குழு மிக்க மகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துக்கள் சிகரம்பாரதி...
நல்வாழ்த்துகள் கும்மாச்சி...

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்...

23 comments:

 1. வாழ்த்துகள் கும்மாச்சி

  ReplyDelete
 2. சிகரம் ஐயாவுக்கு பாராட்டுக்கள்...
  கும்மாச்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. ஆசிரியர் பணியைச் செவ்வனே முடித்திட்ட சிகரம் பாரதி அவர்களுக்கு பாராட்டுகள்....

  கும்மாச்சி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வெங்கட் நாகராஜ் நன்றி.

   Delete
 4. திரு. கும்மாச்சி அவர்களுக்கு நல்வரவு!..

  ReplyDelete
  Replies
  1. துரை செல்வராஜூ நன்றி.

   Delete
 5. சிகரம் பாரதிக்கு வாழ்த்துக்கள் ,மற்றும் பாராட்டுக்கள் ..

  புதிய ஆசிரியர் கும்மாச்சி அவர்களுக்கு நல்வரவும் வாழ்த்துக்களும்

  ReplyDelete
  Replies
  1. எஞ்சேலின் நன்றி.

   Delete
  2. எஞ்சேலின் வருகைக்கு நன்றி,

   Delete
 6. சிகரம் பாரதி அவர்களுக்குப் பாராட்டுக்கள் ..

  புதிய ஆசிரியர் கும்மாச்சி அவர்களை வரவேற்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஜீவலிங்கம் வருகைக்கு நன்றி.

   Delete
 7. கும்மாட்சி சேகருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் கும்மாச்சி! நானும் சில வருடங்கள் கட்டாரில் வாழ்ந்தவன். அருமையான நாடு. உங்களால் முடிந்தால் 2022 உலக கால்பந்து போட்டி கத்தாரில் நடப்பதை பற்றி ஒரு பதிவு போடுங்களேன். இங்கே அமெரிக்காவிலும் சரி மற்ற நாடுகளிலும் சரி அது ஒரு சரியான முடிவே இல்லை என்ற ஒரு கருத்து.

  ReplyDelete
 9. தல அனுபவ சாலி நீங்க.. உங்க கிட்ட நிறைய எதிர்பார்க்குறோம்.. ;-)

  ReplyDelete
 10. வணக்கம்

  வருக வருக கும்மாச்சி ... இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 11. கும்மாச்சிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது