கும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம்--தும்பை, ஆரம், காழ்வை, நறவம்
➦➠ by:
கும்மாச்சி,
பதிவுலகம்,
வலைச்சரம்
முந்தைய பதிவுகளான மலர்ச்சரங்கள்
இன்று தொடுக்கும் நான்காவது மலர்ச்சரத்தில் இன்னும் சில பதிவர்களையும் அவர்களின் வலைப்பூக்களையும் அறிமுகப்படுத்துகிறேன்.
பதிவுலகில் மற்றுமொரு கவிஞர் வேடந்தாகல் கருண். இவருடைய தளத்தில் ஏராளமான கருத்தாழம் உள்ள புதுக்கவிதைகள் இருக்கின்றன. அவற்றில் சில இது ஒரு பெண்ணின் அவலம். எவ்வளவோ உள்வாங்கி எதனையும் கொடுக்காத கஞ்சனின் பணப்பெட்டி நான் என்று ஒரு பெண்ணின் குமுறலை கவிதையில் வடிக்கிறார். உங்களுக்கும் மரணம் இப்படித்தான் இருக்கவேண்டுமா? எப்படி வாழவேண்டும் என்று மரணத்தின் மூலம் குறிப்பிடுகிறார். சில அரசியல் பதிவுகளும் எழுதியிருக்கிறார். ஓட்டுப்பொறுக்கிகளும் அரசியல் வியாதிகளும் என்று நமது அரசியல் வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை சாடுகிறார். சினிமா நடிகர்களுக்கு சொம்பு தூக்குவதை நிறுத்துவோம் எனபது இன்றைய இளைஞர்களுக்கான அறிவுரை. கருண் அவர்களின் வலைத்தளம் ஒரு சுரங்கம், தோண்ட தோண்ட வைரங்களும், வைடூர்யங்களும் கிடைக்கும்.
மதுரை தமிழனின் அவர்கள் உண்மைகள் இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்கவேண்டிய ஒரு வலைத்தளம். அரசியல் அவலங்களையும் அசிங்கங்களையும் அப்பட்டமாக எடுத்துக்காட்டுவார். அம்மாவின் அடுத்த அதிரடி அறிவிப்பு என்று இன்றைய தமிழ் நாட்டின் நடப்பை கூறுகிறார். மோடியுடன் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி இன்றைய காலகட்டத்தில் ஆட்சிமாற்றம் ஒன்றும் சாதிக்க முடியாது என்பதை தெரிவிக்கிறது. தமிழகத்தில் நடந்த டாப் மேட்டர்கள் ஒரு நையாண்டி பதிவு.
அடுத்ததாக வெங்கட் நாகராஜ் அவர்களின் வலைப்பூ. தான் சந்தித்ததையும், சிந்தித்ததையும் அருமையாக தனது வலைப்பூவில் தொகுத்து வைத்திருக்கிறார். இந்திய தலைநகரில் வசிக்கும் நெய்வேலி தமிழர். அடிக்குது குளிரு என்று டில்லி வாசிகளின் குளிர்கால ஆயத்தங்களை நகைச்சுவை கலந்து கட்டுரையாக்கியிருக்கிறார். சீக்கிய நண்பருடன் அவர்களது குருத்வாரா சென்று வந்ததை நகைச்சுவையும் போவோமா குருத்வாரா என்று விவரிக்கிறார். படித்ததில் பிடித்தது என்று சுஜாதாவின் மேகத்தை துரத்தியவன் கதையை நினைவுகூறும் பதிவு. பாம்புடன் போட்ட டீல் என்று தன் வீட்டில் பாம்பு வந்ததை பற்றிய நகைச்சுவை பதிவு.
ரசித்த பாடல், தங்கமணியின் வலைப்பூ, மகளின் கைவண்ணம் என்று மற்ற வலைப்பூக்களுக்கும் தளத்தில் இணைப்பு கொடுத்திருக்கிறார்.
நான் விரும்பி செல்லும் மற்றுமொரு வலைத்தளம் என் ராஜபாட்டை.
ராஜா அவர்களின் இந்த தளம் தொழில்நுட்பம் , அரசியல், நகைச்சுவை என்று எல்லாம் கிடைக்கும் ஒரு பலபொருள் அங்காடி. எது மதச்சார்பின்மை? என்பது நம் நாட்டு அரசியல்வாதிகளால் கேள்விக்குறியாகப்பட்ட போலி மதச்சார்பின்மையை வெட்டவெளிச்சமாக்கும் பதிவு.
ராஜா அவர்களின் இந்த தளம் தொழில்நுட்பம் , அரசியல், நகைச்சுவை என்று எல்லாம் கிடைக்கும் ஒரு பலபொருள் அங்காடி. எது மதச்சார்பின்மை? என்பது நம் நாட்டு அரசியல்வாதிகளால் கேள்விக்குறியாகப்பட்ட போலி மதச்சார்பின்மையை வெட்டவெளிச்சமாக்கும் பதிவு.
ராஜாவின் தளத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. சிரிக்கலாம் வாங்க.
பாத்திரம் கழுவது எப்படி? கிங்க்ஸ்கிச்சன் என்று எல்லா பதிவர்களுடன் ஒரு காமெடி கும்மி.
தயவு செய்து இதை படிக்காதீங்க. என்று இலவச அறிவுரை வழங்குவார்.
சமயத்தில் சில நல்ல தொழில்நுட்பப்பதிவுகள் இவரது தளத்தில் தட்டுப்படும். இலவசமாக பத்து மென்பொருட்கள்.
சும்மா ஜாலியாக இருக்க ராஜாவின் தளம் ஒரு நல்ல இடம்.
இன்னும் எனக்கு பிடித்த நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள், அவர்களை அடுத்த மலைர்ச்சரத்தில் பார்க்கலாம்.
அதுவரை,
என்றென்று அன்புடன்,
கும்மாச்சி
|
|
சிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteவரவேற்கிறேன்
வருகைக்கு நன்றி.
Deleteஅவர்கள் உண்மைகள்... 'கரும்பு தின்ன கூலியா"? அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிசு வருகைக்கு நன்றி.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
என்பக்கம் கவிதையாக
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை???:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி.
Deleteவலைச்சரத்தின் இன்றைய அறிமுக தளங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் ..
ReplyDeleteவருகைக்கு நன்றி ஐயா.
DeleteGlad to have found your site. Keep up the good work! DB Product Review
ReplyDeleteநான் தொடரும் அருமையான பதிவர்களின் அறிமுகம் நன்று! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசரேஷ் நன்றி,
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteஅருமையான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன்
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருமே பிரபலமாகவர்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
அருணா நன்றி.
Deleteஅறிமுகங்களைக் கண்டேன். நன்றி. தொடர்ந்து படித்து வருகிறேன்.
ReplyDeleteஜம்புலிங்கம் ஐயா வருகைக்கு நன்றி.
Deleteநன்றி நண்பரே...
ReplyDeleteகருண் வருகைக்கு நன்றி.
Delete///இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்கவேண்டிய ஒரு வலைத்தளம். அரசியல் அவலங்களையும் அசிங்கங்களையும் அப்பட்டமாக எடுத்துக்காட்டுவார்///
ReplyDeleteகல்யாணம் ஆகாத இளைஞர்கள் அவசியம் படிக்கவேண்டிய ஒரு வலைத்தளம். குடும்ப அரசியல் (பூரிக்கட்டை )அவலங்களையும் அசிங்கங்களையும் அப்பட்டமாக எடுத்துக்காட்டுவார் என்று எழுதி இருக்க வேண்டும் கும்மாச்சி
அறிமுகத்திற்கு நன்றி... தகவல் தந்த ரூபனுக்கும் நன்றி
மதுரை தமிழன் நன்றி.
Deleteஅருமையான அறிமுகங்கள். என் கணவரின் தளம் அறிமுகம் ஆனதில் மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி சகோதரி, உங்களது தளத்தைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.
Deleteஅனைவரும் சிறப்பான அறிமுகங்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்.