07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 7, 2014

கும்மாச்சி - சுய அறிமுகம்

அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் எனது முதற்கண் வணக்கம்.

வலைச்சரத்தின் இந்த வார (07/07/2014-13/07/2014) ஆசிரியர் பொறுப்பை ஏற்றுள்ளேன், இந்த வாய்ப்பை எனக்களித்த வலைச்சர குழுமத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வரும் நாட்களில் எனக்குப்பிடித்த வலைப்பூக்களை அறிமுகம் செய்ய உள்ளேன், அதற்கு முன் என்னைப்பற்றியும் என் வலைப்பூ கும்மாச்சி  பற்றியும் ஒரு சிறிய அறிமுகம்.

கும்மாச்சி என்ற புனை பெயரில் 2009லிருந்து வலைப்பூவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழ் கூறும் நல்லுலகிலே விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூரில் பிறந்து சிங்காரச் சென்னையிலே வளர்ந்து "திரைகடல் ஓடி திரவியம் தேட" கத்தாரில் நடுக்கடலில் எண்ணெய் கிணறுகளில் என்னை தொலைத்துக்கொண்டிருக்கிறேன்.

முதலில் அனுபவங்களை கதைகளாக எழுதி வலைப்பூவில்அறிமுகம், பின்பு வந்த வரவேற்பினாலும், வாசகர் ஊக்கத்தினாலும் கதை, கட்டுரை, கவிதை என்று எழுத்தின் வீச்சு சற்று பெருகியது.

எனது எண்ணத்தில் தமிழ் மொழியின் பெருமையை உணர்த்திய எனது தமிழாசிரியை கமலா டீச்சர் பற்றிய பதிவு என் பதிவுகளில் சிறந்ததாக  கருதுகிறேன்.

எங்கிருந்தோ வந்தார் எங்களது குடும்பத்தில் ஒருவராக இருந்து எங்களுக்கு உழைத்த முதியவரைப் பற்றியது.

சென்னையில் உரத்தொழிற்சாலையில் பணிபுரிந்தபொழுது கிடைத்த வித்யாசமான அனுபவம் தெருநாய்க்கு மரியாதை என்ற பதிவானது..

நகைச்சுவையில் கவிதை எழுதலாம் வாங்க.

நான் எப்படி பதிவரானேன் மற்றுமொரு நகைச்சுவை பதிவு.

கவிதை என்ற பெயரில் கவிதை இலக்கணம் குறித்து கவிதை கிறுக்க தொடங்கிய காலம் அரசியல் ஆத்திச்சூடி என்ற நையாண்டியில் முடிந்தது.

மழைக்கால நினைவில் அவள் என் வாழ்வில் மறக்கமுடியா நினைவு.

சிறு வயது முதல் எனக்கிருந்த அரசியல் ஈடுபாடு பல அரசியல் பதிவுகளும் கலக்கல் காக்டெயில் என்ற பல்சுவை பகுதியும் டீ வித் முனியம்மா என்ற செய்தி தொகுப்பும் எழுத வழி செய்தன.

நாளை முதல் எனக்குப் பிடித்த பதிவர்களை கும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம் என்ற தலைப்பிலே அறிமுகப்படுத்த உள்ளேன்.

 என்னை ஊக்குவிக்கும்  வலைப்பூ நண்பர்களுக்கும், வலைச்சரம் ஆசிரியர் குழுமத்திற்கும் மீண்டும் ஒரு முறை எனது நன்றியை தெரிவித்து தற்பொழுது விடைபெறுகிறேன்.

வணக்கம்
என்றென்றும் அன்புடன்
கும்மாச்சி






37 comments:

  1. வணக்கம்
    அறிமுகம் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து அசந்த எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. //எண்ணெய் கிணறுகளில் என்னை தொலைத்துக்கொண்டிருக்கிறேன்// அருமையான அறிமுகம்.

    நானும் அங்கே பல வருடங்கள் என்னை கிணற்றில் என்னையே வறுத்து(தி) கொண்டவன் தான்.

    ReplyDelete
  3. சுய அறிமுகம் நன்று கும்மாச்சி அவர்களே...

    மேலும் அசத்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. சுய அறிமுகம் நன்று.....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் நாகராஜ் நன்றி.

      Delete
  5. சுய அறிமுகம் நன்று... அசத்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  7. அழகான
    தன் (சுய) அறிமுகம்
    என் உள்ளத்தை ஈர்க்கிறதே!
    தங்கள்
    அறிமுகங்கள் தொடர
    எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. ஆதி வெங்கட் நன்றி.

    ReplyDelete
  10. அறிமுகம் நன்று! பணிதொடர வாழ்த்து!

    ReplyDelete
  11. அன்பின் திரு.. கும்மாச்சி..
    தங்கள் வரவு நல்வரவாகுக..
    நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை செல்வராஜூ

      Delete
  12. சுய அறிமுகமும் அதனில் கொடுத்த பதிவுகளும் சிறப்பாக இருந்தன! மலர்சரம் மணக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. அசத்தலான அறிமுகம் அருமை கும்மாச்சி அவர்களே... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் கும்மாச்சி அண்ணா.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  15. அருணா வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  17. அறிமுகம் நன்று! பணி சிறக்க என் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  18. சுய அறிமுகம் அருமை.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. இன்றுதான் தங்களின் பதிவைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். அறிமுகம் அருமையாக உள்ளது. தொடர்ந்து வாசிப்பேன். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது