07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 18, 2014

பேரைக்கேட்டாலே சும்மா அதிருதில்ல............சூப்பர் ஹிட் வெள்ளி.








இன்று நான் அறிமுகம் செய்யப்போவது பதிவுகளை அல்ல. பதிவர்களை! நான் ப்லாக் க்கு வந்த புதுசுல எழுத மட்டும் தான் தெரியும். எப்படி, எங்கே, எதை எழுதிறதுன்னு பல தயக்கங்களும், குழப்பமும் இருந்துச்சு.
               அப்போல்லாம் இவங்கள பார்த்து பல விஷயங்கள் கத்துக்கிட்டேன். பதிவுகள், தள அமைப்பு, பின்னூட்டம், பதிவுக்கு எடுத்து கொள்ளும் விஷயங்கள், எடுத்துகொள்ளும் மேனகேடல், எழுத்தில் நேர்மை, பின்னூட்டத்தில் கலக்குவது, அப்புறம் காண்டாக்ட்ஸ் அதாவது நிறைய பேரை படிக்கவைக்கும் வாய்ப்புகள், இப்படி பல விஷயங்கள் கற்றுக்கொள்ள இவர்களது வலைபூ என்னை போன்ற கத்துகுட்டிகளுக்கு உதவியா இருக்கும். மற்றபடி அவர்களை தனியா அறிமுகம் செய்றதெல்லாம் ஐஸ் வைக்கிற மாதிரிதோற்றம் தரும் என்பதால் நீங்களே சுட்டியிருக்கும் வலைபூவுக்கு சென்று எங்க எதை கத்துக்கலாம்னு பாருங்க.


சீனா அய்யா அவர்களின் இந்த பதிவை பாருங்க

இது கிராமத்து கருவாச்சி கலை அவர்களின் காதல் கவிதை!

எழுத்தாளர் உஷா அன்பரசுஅவர்களின் அட்டகாசமான ஒரு கதை.

வலையுலக வசிஸ்டர் வருண் சகாவின் திரை அலசல்.

பின்னூட்டப் புலி ரூபன் சகோவின் கவிதை போராட்டம்.

ஆதி வெங்கட் அவர்களின் சுவாரஸ்யமான அனுபவ பகிர்வு.

வலையுலக வைகோ திரு கோபாலகிருஷ்ணன் அய்யாவின் பரபர விமர்சனப்போட்டி.

நிகழ்காலம் எழில் அவர்களின் ஒரு பயணக்கட்டுரை.

ஜோக்காளி பகவான்ஜி சகோவின் ஒரு ஜோக்.

சகோ சுபத்ரா வின்   நறுக் கவிதை ஒன்னு 

கசியும் மௌனம் கதிர் அண்ணாவின் நச் கவிதை ஒன்னு 

வலையுலக சித்தர் டி.டி.அண்ணாவின் ஒரு திருக்குறள் ,திரைஇசை பதிவு..

கவிதையில் கலக்கும் ரமணி அய்யாவின் ஒரு கவிதை தொடர்.

நோக்கும் இடமெல்லாம் நாமன்றிஇரா.எட்வின் அய்யாவின் ஒருநிலைத்தகவல் பகிர்வு!

யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள் என வரவேற்கும் யாழ் பாவாணனின் மரபுக்கவிதை இதோ.

செல்லப்பா தமிழ் டைரி இமயத்தலைவன் கவிஞர் இராய.செல்லப்பா அய்யாவின் ஒரு ஒப்பீட்டுக்கட்டுரை 

மணிராஜ் தளம் ராஜராஜேஸ்வரி அவர்களின் ஒரு ஆன்மீகப்பதிவு 

கற்றது கை மண்ணளவு அப்படின்னு இப்போ சிலருக்கு தெளிவாகிருக்கும் இல்ல? அப்போ மற்றவர்கள்?? அவங்களாம் அல்ரெடி ப்ரைட்டோ ப்ரைடு :)) சரிதானே !!



62 comments:

  1. சூப்ப்ப்பர்!!!

    அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் என் வணக்கமும் வாழ்த்துக்களும்.

    சும்மா அதிர வைக்கிறீர்கள் தோழி. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! அப்படியா!
      நன்றி தோழி!!

      Delete
  2. வணக்கம்
    சகோதரி..
    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவரையும் இரத்தின சுருக்கமாக அறிமுகம் செய்துஅசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் என்னுடைய வலைப்பூவையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல.... இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்த விடயத்தை அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. சிறந்த அறிமுகங்கள்
    எனது வலைப்பூவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
    தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  4. என்னவளின் வலைப்பூவையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி மைதிலி.........

    அறிமுகம் செய்யப்பட்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! சூப்பர் தம்பதிகள்!!
      வாழ்த்துக்கள் அண்ணா! கண்ணு பட்டுட போகுது!

      Delete
  5. சுபத்ரா தவிர அனைவரும் சீனியர்ஸ் எனக்கு. சுபத்ரா உட்பட அனைவரும் எழுத்தில் கலக்குகிற ஆசாமிகள்தான். வெள்ளித் தொகுப்பாச்சே.... அதான் மின்னுகிறது ஜோராய்...

    ReplyDelete
  6. வணக்கம்
    எல்லாத்தளங்களுக்கும் சென்றுவந்தேன் அனைத்தும் அறிந்த தளங்கள் தாங்கள் பதிவை பதிவிடும் போது
    இரா எட்வின் ஐயாவின் வலைப்பூவுக்கு கொடுத்த இணை வேலைசெய்யாமல் இருந்தது.. பின் சரிசெய்யப்பட்டுள்ளது. வேறு எந்தப்பிரச்சினையும் இல்லை. சிறப்பாக அசத்தியுள்ளீர்கள் நன்றிகள்.. நன்றிகள். பல.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! இந்த பணி மிகச்சிறப்பானது தான்:))

      Delete
  7. நன்றி நன்றி நன்றி...

    மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. இன்று தாங்கள் அறிமுகப்படுத்திய அனைத்து பதிவுகளையும் படித்தேன். பலர்முன்னரே அறிமுகம் ஆனவர்கள். சிறப்பான தொகுப்புக்கு வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  9. ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பேர் வைத்து நீங்கள் அறிமுகப்படுத்துவது சுவாரசியமாக இருக்கிறது சகோ.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இப்படி நீங்கலாம் ரசிக்கிறது தான் உற்சாகமா இருக்கு சகோ!
      நன்றி சகோ!

      Delete
  10. எமது தளத்தினை அறிமுகம் செய்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

    ReplyDelete
  11. என்ன மைதிலி டீச்சர், என்னை இப்படி கடன்காரனாக்கிட்டீங்களே? உங்ககிட்ட பட்டிருக்கிற "இந்தக் கடனை" எப்படி அடைக்கிறதுனு பார்க்கணும்.

    வட்டி எம்புட்டு வாங்குவீங்கனு தெரியலை..பார்ககலாம்! :)

    அதென்னவோ "வ வா வ" னு ஒரே குறிலும் நெடிலுமா அடைமொழி நல்லாத்தான் வந்து இருக்கு! :)

    ReplyDelete
    Replies
    1. கடன் நட்பை முறிக்கும். so இது கடன் இல்லை கடமை:))
      ஒ! நீங்க கவனிக்கலையா ! இது என் வலைச்சரம் முதல் பதிவின் பின்னூட்டத்தில் மதுரை தமிழன் அன்போடு உங்களுக்கு கொடுத்த அடைமொழி!! ஏன் பலர் உங்களை கண்டு டரியல் ஆகுறாங்குன்னு தெரியலை?! but ஒரு விஷயம் இங்க சொல்லணும், பின்னூட்டத்தில் உங்க நேர்மை கிரேட் ! மனசுக்கு தோணினத ஸ்ட்ரைடா சொல்லிடுறீங்க! ஜஸ்ட் அருமை னு நான் கடக்கிற வெகு சில பதிவுகளில் உங்க பின்னூட்டம் நான் சொல்ல நினைத்தா இருக்கும். சில பின்னூட்டம் அட! ஆமால்ல என யோசிக்கவைக்கும்! நான் வேற ஆங்கில் ல தான் பார்ப்பேன்கிற ஒரு கொள்கையா வச்சுருக்கீங்களா? எதுவும் HURT பண்ற மாதிரி சொல்லிருந்தா மன்னிச்சூ !

      Delete
    2. எங்க நெடிலைக்காணோம், குறிலாத்தானே இருக்கு? என்ன சொல்றான் இவன்? னு தேடாதீங்க. நாந்தான் தவறா எழுதிட்டேன்! எல்லாமே குறிலாத்தான் இருக்கு. குழப்பியதற்கு மன்னிக் கவும் :-)

      பி எஸ்:

      எனக்கு இப்போ நேரம் 8: 55 am -friday!

      world clock- அதான் இந்த ஐ-ஃபோன்ல சொல்லுது உங்க நேரம் 7:26 p m னு. நான் வேலைக்குப் போகணும். :) It must have been a long week for you! Enjoy the weekend and relax, please! :)

      Delete
  12. நல்ல அறிமுகம். அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. டீச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட வலையுலக வாத்தியார்கள் லிஸ்ட். அனைத்து வாத்தியார்களுக்கும் பாராட்டுகளௌம் வாழ்த்துக்களும்

    ReplyDelete
    Replies
    1. சும்மா டீச்சர் , டீச்சர் னு ஏன் ப்பா பார்மாலிட்டி???
      ரொம்ப நன்றி சகா!

      Delete
  14. அத்தனை பதிவர்களையும் அழகாக
    வரிசைப்படுத்தி அறிமுகம் செய்தவிதம் அழகு!

    அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. எமது தளத்தினை அறிமுகம் செய்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

    இந்த இனிய தகவலை என் கவனத்திற்கு பேரன்புடன் கொண்டுவந்து கொடுத்த திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் என் அன்பான இனிய நன்றிகள்.

    //மணிராஜ் தளம் ராஜராஜேஸ்வரி அவர்களின் ஒரு ஆன்மீகப்பதிவு // என அவர்களின் தளத்தினையும் இன்று அறிமுகம் செய்துள்ளதில் எனக்கு மேலும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதற்காகவும் தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலும் ஒரு தலைப்பில் friends இணைக்கிற மாதிரிதான் ப்ளான் பண்ணினேன்:))
      செண்டிமெண்டா இருக்கும்ல:))
      நன்றி அய்யா!

      Delete
  16. //பேரைக்கேட்டாலே சும்மா அதிருதில்ல............சூப்பர் ஹிட் வெள்ளி.//

    என தலைப்புக்கொடுத்துவிட்டு சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் சிலரையும் தேவையில்லாமல் இங்கு இணைத்து ஒட்டுமொத்தமாகப் பாராட்டி அறிமுகம் செய்துள்ளதை மட்டும் என்னால் ஜீரணிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.

    OK ..... ஒவ்வொருவர் பார்வை ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கும். உலகம் பலவிதம். அதில் தாங்களும் ஒருவிதம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா அய்யா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் :)
      நன்றி அய்யா!

      Delete
  17. ரா.எட்வின் அய்யா தளம் புதிது.

    ReplyDelete
    Replies
    1. படித்துபாருங்கள்! எங்க பக்கத்தில் பெரிய ஆளுமை! அறிவியல், ஆங்கில பாடபுத்தகங்கள் வடிவமைப்பதில் அய்யாவின் சாதனைகள் சொல்லில் அடங்காதது! அட்டகாசமான , பிள்ளைகளை நேசிக்கிற ஆசிரியர். தீவிர மனித நேயர்! சமூக கொடுமைகளின் மேல் பெருங்கோபமும், சமுதாயத்தின் மீது பேரன்புகொண்ட மனிதர்! திடுக்கிடும் வகையில் இளமை கொப்பளிக்கும் சின்ன காதல் கவிதைகளையும் வெளியிட்டு ஆச்சரியப்படுத்துவார்!!

      Delete
  18. ரா.எட்வின் அய்யா தளம் புதிது.

    ReplyDelete
  19. அசத்தும் தலைப்புகளுடன் - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியாக -
    தளங்களை முன்னிறுத்துவது அருமை..

    இன்று அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.
    இனிய தொகுப்பு.. தங்களின் உற்சாகமான உழைப்பு தெரிகின்றது. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. உங்களை போன்ற உற்சாகமூட்டுபவர்களால் தான் இது சாத்தியமானது!
      நன்றி அய்யா!

      Delete
  20. அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர் அண்ணா!

      Delete
  21. அசத்தலான பதிவர்களை அதிரடியாய் அறிமுகம் செய்த விதம் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. ஏதோ ஒன்றை என்னிடமிருந்தும் கற்றுக்கொண்டீர்கள் என்று கூறியது மகிழ்ச்சி. பலர் எனக்கும் அறிந்தவர்கள் என்பதால் இன்னம் மகிழ்வு. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. நான் ஏற்கனவே குறிப்பிட்டேன். உங்க அளவு ஸ்ட்ராங்கா இன்னும் பெரியாரை என்னால் பின்பற்ற முடியலை சகோ! முயற்சித்தபடி இருக்கிறேன். அர்த்தமற்ற பெண்ணியம் பேசுவதில்லை உங்கள் பதிவுகள்:) என் புரிதல் சரியா சகோதரி!

      Delete
  24. நன்றி சொல்லி காலையில் நான் போட்ட கருத்தை காணலியே !
    பரவாயில்லை ,மறுபடியும் சொல்லிக்கிறேன்..நன்றி !

    ReplyDelete
    Replies
    1. என்ன பிரச்சனைனு தெரியலை பாஸ்! சுப்பு தாத்தாவும் இதை தான் சொன்னார்!
      அட! நான் கொடுத்த ரிப்ளை கூட ஒன்னு காணலை. டெக் ஆசாமிகள் உதவினால் தெரியும்:)) வெல்கம் பாஸ்!

      Delete
  25. ennaiyum arimugam seythathil mikka makizhchi... matravarkalukkum paaraattukal.

    ReplyDelete
  26. சிறப்பான பதிவுகள் பற்றி...
    சுருக்கமான அறிமுகங்கள்.
    நன்று!

    ReplyDelete
  27. கருத்து போட்டு விட்டேன் என்றல்லவா நினைத்தேன். இல்லையா? சரி இப்போ வாழ்த்தினாப் போச்சு.அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் ...!
    அம்முவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .....!

    ReplyDelete
    Replies
    1. ஒ! உங்களுக்கும் இதே பிரச்சனையா? பலருக்கும் இருந்திருக்கு அம்மு! மிக்க நன்றி டா!

      Delete
  28. எல்லா பதிவர்களுமே அறிவு ஜீவிகள் சகோதரி! அறிமுக அறிவு ஜீவிகள் எல்லோருக்கும் (பதிவர்கள் எல்லோருக்குமே) எங்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. ஹா,,,ஹா....ஹா....
    ரொம்ப நன்றி சகோ!!

    ReplyDelete
  30. வணக்கம் அக்கா
    பேரைக் கேட்டா சும்மா அதிருதுல்ல பொருத்தமான தலைப்பு அக்கா. அறிமுகங்கள் என்று சொல்வதை விட நம் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களின் எண்ணங்கள் தொடர்ந்து தமிழ்ச் சமுதாயத்திற்கு உதவட்டும். அறிமுகம் செய்த என் அன்பு அக்காவிற்கு ந்ன்றிகள் பாராட்டுகளும்...

    ReplyDelete
  31. அனைவரும் மிகச் சிறந்த பதிவர்கள்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது