07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 1, 2015

முதல் நாளில் சில நிமிடங்கள் ..உங்களோடு ..

வலைச்சரம் ..
இனிய வரவேற்பு தந்து ஊக்கமளித்திருக்கிறீர்கள் . மிக்க மகிழ்ச்சி ! கொஞ்சம் பயமாகத்தான் அறிமுகப்படுத்திக்கொண்டேன் !  உங்கள் அழகான கமெண்ட்ஸ் ரெண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றின பீல் தந்தது .



ஆசிரியர் என்று ,

தந்த வேலைக்கு  நான் படித்தப்பதிவுகளை அறிமுகப்படுத்துவதோடு , சில விஷயங்களையும் உங்களுடன் பகிர்ந்து செல்லலாம் என ஆசைப்படுகிறேன் உங்கள் சம்மதத்தோடு !

என்னடா ..பீடிகையெல்லாம் பலமாக இருக்கேன் ந்னு ரொம்ப யோசிக்கவேண்டாம் நட்புக்களே , ஜஸ்ட் சில நிமிஷங்கள் !!

அறிமுகப்படுத்திக்கொள்ளல் . 

இது பலருக்கும் எனிமா தந்த பீல் தான் . அதிலும் டீன் ஏஜ்ல ரொம்பவே கூச்சம் பிடுங்கித்திங்கும் ! இந்த உணர்விலிருந்து வெளி வருவது ஒரு சவாலான செயல் தான் !

சிந்தனைகளே செயல்களாகின்றன ! நற் சிந்தனைகள் தானாக நல் வழிகளில் நிறைவடைகின்றன. சும்மாவா சொன்னாங்க பெரியவங்க , வரும் வார்த்தை நல்ல வார்த்தையாக இருக்கணும் என்று !

ஆண் - ஆண் அறிமுகம் ஒரு விதம் , பெண் - பெண் அறிமுகமும் ஒன்றே  ஆனால் அதே மாற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது பல தடங்கல்கள் பார்க்கிறோம் !
தடங்கல்களை தகர்ப்பதும் சாத்தியம் தானே !

 * எல்லாவிதமான அறிமுகத்திற்கும் நடுவில் இருக்கும் பெரிய கல் (எத்தனை நாளைக்கு தான் block ந்னே சொல்றது , மாற்றுவோமே :) ) தயக்கம் , நம்மைப்பற்றி எதாவது தவறாக நினைத்து விடுவாங்களோ , இல்லை , தவறா எதாவது சொல்லிவிடுவோமோ என்று அத்தனையையும் விட உளறிக்கொட்டி கிளறி மூடிடுவோமோ என்ற அச்சமும் , காரணம்!

* அறிமுகத்தில் , முதலில் நம்மைப்பற்றிய சொல்வது குறைவாக இருக்கலாம்.
நம் எதிரிலிருப்பவரை நிறைய பேச அனுமதிக்கலாம் ! தானாகவே நம் மேல் நல் அபிப்ராயம் தோன்றும் ! (கூடவே இவங்களுக்கு நிறைய விஷயம் தெரியும் போலருக்கு ! என்ற இமேஜையும் சம்பாதிக்கலாம் , சரிதானே ) .

* பாரதி தந்த  நிமிர்ந்த நன்னடை , நேர் கொண்டப்பார்வை - இதை விட சிறப்பாக யாரால் சொல்லிவிட முடியும் ! ?
டைரக்டா கண்ணைப்பார்த்து பேச பழகினால் , நல் மதிப்பு தானாக கிடைக்கும் . 

* கைக்குலுக்குதல் மேற்கத்திய பழக்கம் , நம் பழக்கம் வணக்கம் தெரிவித்தல் ,ரெண்டையுமே பின்பற்றியே வாழவேண்டியே கட்டாய சூழல் . 
கைக்குலுக்குதல் ..
 இதை நம்மைப்பற்றிய அறிமுகத்துடன் சாப்டாக , ஜெண்டிலாக செய்ய , நம்முடன் அறிமுகமாகும் நபர் , இயல்பாக உணரலாம்!




என் கணவரது நண்பர் ஒருவர் ஆர்மில இருந்தவராம் , எப்போது கைக்கொடுத்தாலும் குலுக்கற குலுக்கலில் , கை எலும்பே அழுத்தத்தில் முறிந்துடும் போலருக்கு என்பார். இப்படியும் சில பழக்கங்கள்,  சிலரை மறக்க முடியாமல் செய்து விடுகின்றன .

 *ஆண்கள் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டிருக்கலாம்  பதட்டமில்லாமல் இருக்க அல்லது மறைக்க :) , வெளியே எடுத்து குலுக்கும் சமயம் , கை வியர்வையால்  ஈரமாக இல்லாமல் இருப்பதும் மறந்திடக்கூடாத ஒன்று !
எப்போதுமே பின்னால் கைக்கட்டியப்படி இருக்க , நம்மைப்பற்றிய மெஜச்டிக் பீல் வர்றத யாராலும் தடுக்க முடியாது . 

அப்ப கை முன்னாடி கட்டறது .. அது நம் குருவிடம் , கடவுளின் முன் மட்டும் போதுமே :) 

* நாம் சந்திப்பவரைப்பற்றி , உதாரணத்திற்கு , முதலில் ஹாய் சுமி ..என்று ஆரம்பித்து ..முடிக்கும்போது நன்றி . மிஸஸ் சுமிதா ரமேஷ்.   என்றிட , அட ஒரு அக்கறை பேசற விதத்துலயே ஒரு சின்ன அட்டாச்மெண்ட் காட்டறாங்களே ந்னு தோனும்.
அதே போல நம்மைப்பற்றியும் , நம்ம பெயரையும் அங்க பதிய வைக்கணுமே. .
அதற்கு , I'm sumi , Sumitha Ramesh என்று ஆரம்பிக்கலாம்!

* பெண் - ஆண் அறிமுகம் என்று வரும்போது , கொஞ்சம் பெண்களை கண்களைப்பார்த்து பேசுவது நல்ல மதிப்பை தானாகவே அள்ளித்தரும் .. என்னது ஆணுக்கும் அவசியம் என்கிறீர்களா , ஆமாங்க , இருபாலருக்கும் , ஏன் குழந்தையிடம் பேசும்போது கவனமுடம் இருந்தால் நாம் பேச நினைப்பது ஈசியா அவர்களுக்கு சென்றடையும் .
தேவையில்லாத காம்பிளிமெண்ட்ஸ் அள்ளி வீசாமல் (அதாங்க , இந்த ட்ரெஸ் நல்லா சூட் ஆகுது .. கூட வந்தது உங்க கணவரா..அவர் நண்பராகவோ , உறவினராகவோ கூட  இருக்கலாமே  !! )  நிதானமாக அதே சமயம் அன்பு புன்முறுவலோடு அறிமுகப்படுத்திக்கொள்ள,  எப்போதும் கிடைக்கும் பீல்  நண்பேண்டா தான் !

* ஒரு குழுவினருடன் சேர்ந்து இருப்பதும் , நடப்பதும் , குறிப்பாக ஆபீஸில் , கல்லூரியில் , இப்படி கிடைக்கு வாய்ப்புகள் தான் ,பின்னாளில் பல நல்ல காண்டக்ஸ் க்கு காரணமாகின்றன . 

பலருடன் செல்ல , நடக்க அல்லது நடந்து சென்று சந்திக்கும் தருணங்களில்..
, முதுகில் ஐஸ் வாட்டர் யாராவது கொட்டிவிட்டார்கள் ந்னு ( ஒரு பேச்சுக்கு தாங்க )  நினைப்போம் , ஒரு ஜில் உணர்வு வரும் அல்லவா .அப்போது நம் நடை எப்படி இருக்கும் , தோள்கள் உயர்த்தி , நேர் கொண்ட பார்வை வருமல்லவா ! அதே தான் அவசியம் மற்றவர் முன் முதல் அறிமுகத்தில் .

* என்னுடன் பணிப்புரிந்தப்பெண் மிக புத்திசாலி , ரொம்பவே தகுதியானவர் , நன்கு பழகக்கூடியவர் . அவர்   சேர்ந்து பல நாட்களில் , அவர் வரும் சமயம் அனைவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவர் , காரணம் துர் நாற்றம் ! பலரும் பல விதத்தில் அறிவுரை சொல்ல முயன்றது ம் தோற்றுப்போய் , அவரை வேலையிலிருந்தே அனுப்பிவிட்டனர் , அதே போலவே  வாய் துர் நாற்றமும்  கவனித்தல் கொள்ள வேண்டியது.

இதெல்லாம் சில சாம்பிள்கள் தான் , முதல் பார்வை , முதல் பேச்சு , முதல் அணுகுமுறை இவையே பல இடங்களிலும் வெற்றி வாய்ப்பை பெற்றுத்தருகிறது.

இப்போது ஆன் லைனிலும் பல அறிமுகங்கள் , போனில் பல இண்டர்வியூக்கள் , 

எப்போதுமே குறைவாகப்பேசி , நிறைவாக கேட்டல் நல்ல பலனைத்தருமாம்!

 (அப்ப நா மட்டும் வளவளந்னு எழுதினா தெய்வ குத்தமாகாதா :P ,)

நான் குறிப்பிட்ட சில பாயிண்ட்ஸ் பலனுள்ளதாக அமைந்திருக்கும் என்ற நம்பிக்கையோட ( யாருங்க அது. ..நம்பிக்கை தானே வாழ்க்கை ..ந்னு பிரபு டயலாக் தர்றீங்க , இதோ கிளம்பிட்டேன் :))  பதிவர்களின் பதிவுகளுடன் வருகிறேன் ..
அன்புடன்
சுமிதா ரமேஷ் .

18 comments:

  1. மகிழ்ச்சி மா அறிமுகமே இனிய நட்பை உருவாக்கும்..நம்மைப்பற்றிய மதிப்பையும்....தொடர வாழ்த்துகள்மா.

    ReplyDelete
  2. நல்ல கருத்துக்களைப் பகிர்ந்திருக்கீங்க சுமி. மனம் எப்படியோ அப்படியே பார்வையும். நேராகக் கண்களைப் பார்த்துப் பேசுதல் என்பது மனசில் களங்கமில்லையெனில் தானே வரும். அதற்குப் பயிற்சில்லாம் தரணுமா என்ன..?

    ReplyDelete
    Replies
    1. தேங்க்யூ சார் ! இது என் ப்ளாக்கில் நான் எழுத இருந்தது , இங்கே பகிர்ந்திருக்கிறேன் ! தேவையே இல்லை , ஆனால் அறிமுகம் சிறக்க நன்றாக இருக்குமே என்று எழுதினேன் :)

      Delete
  3. வலையுலகில் நாம் தான் அதிகம் பேசவேண்டும். அப்போதுதான் பதிவுகள் சுவாரஸ்யம் பெறும். நேரில் நீங்கள் சொல்வது போல....

    இன்றைக்கு அறிமுகங்கள் ஏதும் இல்லையே?

    ReplyDelete
    Replies
    1. ஆபீஸ் மீட்டிங்க்ஸ் , ஸ்கூலில் பேரண்ட்ஸ் , சக பேரண்டுடன் பேசுவது , வீடுகளில் முதல் அறிமுகம் எனப்பலரும் , பல தர்மசங்கடங்களில் ஆழ்படுவதைப்பார்க்கிறேன் ! இது முதலில் அறிமுகம் சிறப்பாக இருக்க சில டிப்ஸ்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. அழகான அறிமுகப் பகிர்வு.
    அசத்துங்க...

    ReplyDelete
    Replies
    1. நன்றி , குமார் . மகிழ்ச்சி ..

      Delete
  5. மனித உணர்வுகளின் நுணுக்கங்கள்!..

    அழகிய நடையில் அருமை.. வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. தேங்க்யூ சார் .. அப்படியே , தொடர்கிறேன் .. மகிழ்ச்சி

      Delete
  6. வணக்கம்,
    நல்ல தகவல், சக மனிதரிடம் பேசும் முறை,,,,,,, அருமை, வாழ்த்துக்கள்,
    தொடருங்கள், தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் , மகேஸ்வரி , மகிழ்ச்சி , தொடர்வோம் , இணைந்திருப்போம்

      Delete
  7. நல்லதொரு பதிவு. பெர்சனாலிட்டி டெவலெப்மென்டில் சொல்லித் தரப்படுவது, பயிற்சி அளிக்கப்படுவதும்...

    அசத்தல் தொடக்கம்...
    தொடர்கின்றோம்....

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷம் , இது சமீபத்தில் இன்னமும் சிலர் இப்படி இருக்காங்களே என்று வியந்து எழுதியது . நன்றி ..

      Delete
  8. பாரதி தந்த நிமிர்ந்த நன்னடை , நேர் கொண்டப்பார்வை - இதை விட சிறப்பாக யாரால் சொல்லிவிட முடியும் ! ? // உண்மை சுமி. அருமை. கண்கள் நேராகப் பார்த்துப் பேசாதவர்களை பார்க்கும் போது அவர்களுடன் மனம் ஒன்றுவதில்லை. பணி தொடர வாழ்த்துக்கள் மா!

    ReplyDelete
  9. அறிவுரைகள் அழகாய் இருக்கு வ்லையுலகில் தயக்கங்கள் அதிகமாக இருப்பது என் அவதானிப்பு.தயக்கம் தொலையட்டும் நட்பு நெருக்கம் பரவட்டும்]]))))

    ReplyDelete
  10. தன்னை அறிமுகப்படுத்துவதிலும் ஒரு வித்தியாசமான பாணி. பல நுணுக்கங்கள். இன்றுதான் கண்டேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது