வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க ஆர்வமா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!!
வணக்கம் பதிவர்களே,
வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பமான "வலைச்சரத்தில் நீங்களும் ஒரு வார காலத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க ஆர்வம் உள்ளதா?
நீங்கள் செய்ய வேண்டியது கீழே உள்ள படிவத்தில் கேட்டுள்ள தகவல்களை பதிந்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பு தேடி வரும். காத்திருங்கள் பதிவர்களே!!!
இதுவரை வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்காத பதிவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும். ஏற்கனவே ஆசிரியர் பொறுப்பேற்றவர்களும் மீண்டும் ஆசிரியர் பொறுப்பேற்க ஆர்வமிருப்பின் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.