ஈழத்துக் குயில்கள் எல்லாம் இசைத்தால் கூடாதா : தெவிட்டாத திங்கள் :
1 ஈழத்துக் குயில்கள் எல்லாம் இசைத்தால் கூடாதா
வலையுலக நட்புகளுக்கு என்அன்பான வணக்கங்கள் பல !
யார் இது புதிதாக என்று நீங்கள் நினைக்ககூடும். நான் தான் காவியகவி Kaviyakavi
எனும் தளத்தில் கிறுக்கிக் கொண்டிருப்பவள், இனியா எனும் பெயரில். பலருக்கு என்னை தெரியாது தான். அதனால் என்ன இப்போ தெரிந்து கொள்ளுங்களேன்... சரியா இப்பொழுது கவனமாக கேளுங்கள் . அடடா கொஞ்சம் பொறுங்கள் நன்றி சொல்லிட்டு .....வருகிறேன்.
முதல்ல இதுவரை அழைத்து வந்த ஆண்டவனுக்கும், அடுத்தபடியாக என்னை ஊக்குவித்த அனைத்து அன்பான உயிரிலும் மேலான நட்புகளுக்கும் எனது உளங் கனிந்த நன்றிகள்! என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எனக்கு இப் பணியை ஏற்கும்படி வாய்ப்பளித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும், வலைச்சர நிருவாக குழுவுக்கும் என் உளமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சீனா ஐயா அழைத்ததும் குருவி தலையில் பனங்காயை வைத்தது போல் ஆகி விடுமோ என்று பயம் தாங்க, என்றாலும் சரி பார்போம் என்று
இறங்கிட்டேங்க. நீங்க இருக்கீங்க எனும் தைரியம் தாங்க, நீங்க எல்லோரும் பெரியவங்க சிறியேன் செய்யும் சிறு பிழை எல்லாம் பொறுப்பீங்க என்ற நம்பிக்கையில் தாங்க. என்
நம்பிக்கையை உடைச்சிடாதீங்க கண்ணுகளா. எனக்கு தெரியும் நீங்க ரொம்ப நல்லவங்க, அதற்காக பெரிய பிழை என்று எல்லாம் சொல்லக்கூடாது சரியா . முழு ஒத்துழைப்பு நல்குவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.
ஈழத்துக் குயில்கள் எல்லாம்
இசைத்தால் கூடாதா
இரை தேடிப்பறப்பதும் பாவமா-அதன்
சிறகினை ஓடிப்பது லாபமா
சிறுஇதயங்கள் துடிப்பது நியாயமா- இது
இருளினில் கிடைத்த சாபமா
என்று கேட்டு கொண்டு வாழ்வதற்காக கனடா வந்தவர்கள் தான். எதோ வாழ்கிறோம் தாய் நாட்டின் தவிப்போடு. சிறு வயதில் இலக்கியம். தமிழ். சமயம். என்பவற்றை ஆர்வமாக கற்றுக்கொண்டு வந்தவள் தான். எந்த புத்தகத்தை எடுத்தாலும் வாசித்து முடிக்காமல் வைக்க மாட்டேன் ஆனால் திருமணத்தின் பின். மத்தியகிழக்கு நாடுகளில் கொஞ்சக் காலம் வசித்த போது தமிழ் வாசமே இல்லாமல் அதாவது தொடர்ந்து படிக்க வாய்ப்புகள், நேரம் ஏதும் இன்றி வாழ்ந்து வந்தேன். தாய் நாட்டிற்கு திரும்ப முடியாத காரணத்தால் கனடாவிற்கு விண்ணப்பம் செய்ய கிடைத்தவுடன் இங்கு வந்து விட்டோம்.
இரை தேடிப்பறப்பதும் பாவமா-அதன்
சிறகினை ஓடிப்பது லாபமா
சிறுஇதயங்கள் துடிப்பது நியாயமா- இது
இருளினில் கிடைத்த சாபமா
என்று கேட்டு கொண்டு வாழ்வதற்காக கனடா வந்தவர்கள் தான். எதோ வாழ்கிறோம் தாய் நாட்டின் தவிப்போடு. சிறு வயதில் இலக்கியம். தமிழ். சமயம். என்பவற்றை ஆர்வமாக கற்றுக்கொண்டு வந்தவள் தான். எந்த புத்தகத்தை எடுத்தாலும் வாசித்து முடிக்காமல் வைக்க மாட்டேன் ஆனால் திருமணத்தின் பின். மத்தியகிழக்கு நாடுகளில் கொஞ்சக் காலம் வசித்த போது தமிழ் வாசமே இல்லாமல் அதாவது தொடர்ந்து படிக்க வாய்ப்புகள், நேரம் ஏதும் இன்றி வாழ்ந்து வந்தேன். தாய் நாட்டிற்கு திரும்ப முடியாத காரணத்தால் கனடாவிற்கு விண்ணப்பம் செய்ய கிடைத்தவுடன் இங்கு வந்து விட்டோம்.
இங்கும் அவ்வப்போது வரும் சங்கடங்களை எல்லாம் ஆண்டவனை வேண்டி அவன் தயவோடு களைந்து விடுவேன். இப்படி தான் ஒரு நாள் சீரடி பாபாவிற்காக விரதம் இருந்தேன் 3 வாரம் மட்டுமே முடிந்த நிலையில் அடுத்த வியாழன் பிடிக்க முடியாத படி உடம்புக்கு முடியாமல் போயிற்று . அசையாமல் படுத்திருந்தேன். பக்கத்தில் யாரும் இல்லை. எதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோன்றியது
சொற்கள் தொடர்ந்து வந்த வண்ணம் ..... எதேதோ என்ன செய்வது என்று தெரியாமல்..... சரி எழுதி பார்ப்போம் என பேனாவை எடுத்து எழுத தொடங்கினேன். அது தான் இது விபரீத ஆசைகள்
(இதற்கு சகோதரர் திரு முத்துநிலவன் அவர்கள் அளித்த கருத்து மிகவும் தென்பை தந்தன).
பின்னர் இது கவிதை தானா என்ன இது என்று ஒரே குழப்பம். இன்னமும் தான். என்னுடன் வேலை பார்ப்பவர்களிடம் கேட்பேன் அவர்கள் எள்ளி நகையாடினார்கள். எழுந்து ஓடினார்கள். நான் சோர்ந்து போனேன்.
இதை எப்படியோ அறிந்த. I.T.R வானொலி அறிவிப்பாளர் என் கவிதைகளை வாங்கி நேரலை நிகழ்சியில் வாசித்தார். பின்னர் என்னையே வந்து வாசிக்கும் படி விட்டு விட்டார். பின்னர் என்னை பேட்டியும் எடுத்தார் . அவர் தான் திரு S.M .இளங்கோ அவர்கள். I.T.R வானொலி உரிமையாளரும் பிறவிக் கலைஞனும் ஆகிய திரு. கோணேஷ்.
திருமதி. கோணேஷ் அவர்கள் வாழும் போதே கலைஞர்கள் கௌரவிக்கப் பட வேண்டும் என்னும் உயரிய நோக்கின்
பேரில் இவை செயல் படுத்த பட்டன. இவை எல்லாம் ஒன்பது வாரத்திற்குள் நடந்து முடிந்து விட்டன. பின்னர் இப்படி ப்ளாக் ல் எழுதும் படியும் யோசனையும் தந்தவரும் திரு இளங்கோ அவர்கள் தான். அதன் படி ஜனவரி 1ம் தகதி 2013ல் இருந்து ப்ளாக் ல் எழுதிக் கொண்டிருக்கிறேன். தரமான கவிதைகளை எல்லாம் வாசிக்கும் போது எனக்கு என் மேல் சந்தேகம் வரும். நான் செய்வது சரியா தமிழை கொச்சை படுத்துகிறேனோ என்று வேதனை
யாக இருக்கும். சோர்ந்து போகும் போதெல்லாம் என் வலை தள நட்புகள் தரும் கருத்துக்கள் ஊக்கம் தருவனவையாக அமையும். அது மட்டுமல்லாமல் பொங்கலை
முன்னிட்டு என் அன்பான ரூபன் , பாண்டியன் அவர்கள் நடத்திய
போட்டியில் 2 வது இடத்தை பெற்று பெரு மகிழ்ச்சி அடைந்தேன் இதனால் கொஞ்சம் தென்பு கூடியது அது தான்
இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்
இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்
இதோ நான் எழுதிய சில பதிவுகள் :-
வலைச்சரத்தில் அறிமுகமானவை :-