07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label அகல்விளக்கு. Show all posts
Showing posts with label அகல்விளக்கு. Show all posts

Thursday, December 1, 2011

சினிமா...



வலையுலகில் அதிகம் படிக்கப்படும் தகவல்களில் ஒன்றாக சினிமா இருப்பதை மறுக்கவியலாது. ஓடாத உள்ளூர் படங்களில் தொடங்கி தவறவிடக்கூடாத உலக சினிமாக்கள் வரை அனைத்தையும் அலசும் விமர்சகர்கள் பலர் வலையுலகில் இருக்கின்றனர். அவற்றில் நான் ரசித்த பதிவர்களை இன்று அறிமுகப்படுத்துகிறேன்.


1. சுரேஷ்கண்ணன் - பிச்சைப்பாத்திரம் என்ற பெயரில் அட்சய பாத்திரமாய் பதிவுகளை வழங்கி வருகிறார்

உலக சினிமா ஒன்றைக் காண வேண்டுமா? எனும் பதிவே அதற்கு சாட்சி...


2. பட்டர்பிளை சூர்யா - வண்ணத்துப்பூச்சியார் என்ற வித்தியாசமான பெயரில் உலகசினிமாக்கள் பற்றி அட்டகாசமாக எழுதி வருகிறார்.

உதாரணமாக இவரின் "சில்ரன் ஆஃப் ஹெவன் இயக்குனர் மஜித் மஜிதி" பதிவைச் சொல்லலாம்...


3. ஜெய் - பிற மொழிப்படங்கள் தமிழில் எழுதிவரும்(வந்த) ஜெய் அவர்களின் விமர்சனங்களுக்கு நான் என்றுமே ரசிகன்... மெமண்டோ படத்தினைப் பற்றிய இவரின் அற்புதமான விமர்சனம் memento

4. கீதப்ரியன் - ஆன்லைன் லைப்ரரி என்றுகூட இவரது வலைப்பூவைக் குறிப்பிடலாம். அந்த அளவிற்கு திரை விமர்சனங்களால் தனது வலைப்பூவை நிரப்பி வைத்திருக்கிறார்...

குறிப்பாகச் சொல்ல வேண்டிய விமர்சனங்கள்...

ஷஷாங் ரிடெம்ப்ஷன்..
களவானி

5. ஜெட்லி - பார்த்தும் படித்ததும்- எதிர்பார்ப்புக்குரிய படங்களின் விமர்சனங்களை வித்தியாசமாக தொகுத்துத் தருகிறார். முதல் நாளிலேயே படங்களைப் பார்த்து மொக்கை வாங்குவதில் வல்லவரான இவர் தி.பி. காலம் (அதாங்க.. திருமணமான பின்) வந்தவுடன் உஷாராகிவிட்டார் போல... :-)

2010 இன் டாப் 10 மொக்கை படங்கள்...!!

வாடா - ஒலகபடம் விமர்சனம்

நஞ்சுபுரம் - ஒரு கோர பார்வை

6. வர்மா - அன்புடன் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். தடம் மாறிய தமிழ்ப்படங்கள் என்ற பெயரில் இவர் பதியும் தொடர், சினிமாவின் வேறோரு முகத்தைக் காட்டி வருகிறது...

தடம்மாறிய தமிழ்ப்படங்கள் - 12

தடம்மாறிய தமிழ்ப்படங்கள்  முழுத்தொகுப்பு 

7. சி.பி.செந்தில்குமார்  - புதிய படங்களின் விமர்சனங்களை உடனுக்குடன் பதிவு செய்து வருகிறார், அட்ரா சக்க எனும் வலைப்பூவில் எழுதிவரும் சி.பி.செந்தில்குமார்...

உதாரணமாக போராளியின் விமர்சனத்தை முதல் ஆளாக பதிவிட்டிருக்கிறார்...

8. கருந்தேள் கண்ணாயிரம்... - மிகச்சிறந்த விமர்சகர். சினிமா மட்டுமின்றி அதன் தொழிற்நுட்பத்தை விமர்சிப்பதிலும் வல்லவர்...

நான் வியந்த அவரது பதிவுகள்...
LOTR - The Series 

9. ஜாக்கி சேகர் - பிறமொழிப்படங்களின் விமர்சனங்களை எழுதிவருகிறார் ஜாக்கிசேகர். அனேக திரைப்படங்களின் விமர்சனங்களை இணையத்தில் தேடினால் இவரது வலைப்பூவை கை காட்டும் அளவிற்கு நிறைய பதிவுகளை எழுதியுள்ளார்.

Ocean's Eleven
Travellers and Magicians 


10.கேபிள்சங்கர் - இவரைப் பற்றிச் சொல்லாம் இந்த பதிவை நிறையடையச் செய்ய முடியாது. அந்த அளவிற்கு ரசிக்கும்படியான விமர்சனங்கள் இவருடையது. தமிழ் படங்கள் மட்டும் என்று இல்லை இவரது பிறமொழிப்படங்களின் விமர்சனங்களுக்கு நான் ரசிகன்.

உதாரணமாக பீப்லி லைவ் படத்திற்கான இவரது விமர்சனத்தைப் பாருங்கள். -

*******************

வேறொரு தொகுப்புடன் நாளை சந்திப்போம்

-அகல்விளக்கு
மேலும் வாசிக்க...

Tuesday, November 29, 2011

செவ்வாய் - துறைசார் தொழில்நுட்பம்...


தொழில்துறை சார்ந்த நுட்பமாக பதிவுகள் தமிழ் வலையுலகில் அதிகம் இல்லை என்பது உண்மை. அறிவியல், கணிணி போன்ற துறைகள் சார்ந்த வலைப்பூக்கள் சில இருந்தாலும் அவை தொடர்ந்து செயல்படுவதில்லை. அதற்கு அவர்களின் வேலைப்பளு ஒரு காரணியாக இருந்தாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் துறை சார்ந்த பதிவுகளை தொடர்ந்த இட வேண்டும்.

பள்ளி ஆசிரியராக இருக்கும் என் நண்பர் ஒருவர், தமிழ் வலைப்பூக்கள் சிலவற்றிலிருக்கும் தொழிற்நுட்ப தகவல்களையெல்லாம் சேகரித்து வைத்திருந்தார். அவற்றை முதன்முதலாகப் பார்த்தபோது நான் ஆச்சரியமடைந்தேன். அவர் அவை எளிமையாக இருப்பதால் தம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் என்று காரணம் கூறினார். உண்மையில் நாம் பொழுதுபோக்கிற்காகவோ, நேரக்கடத்தியாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ எழுதும் நம் பதிவுகளுக்கு இதைவிட பிறவிப்பலன் கிடையாது. இத்தகைய வலைப்பூக்கள் தொழில்நுட்பம் சார்ந்த பல புத்தகங்கள் எதிர்காலத்தில் வெளிவருவதற்கு நிச்சயம் உதவி செய்வதாக அமையும். 

*****************

ராஜாசங்கர் - பொறியாளரான இவர் தனது வலைப்பூவில் இயற்பியல் மற்றும் உயிரியல் சம்பந்தமான கொள்கைகளை ஆராய்ந்து கருத்துக்களை எழுதி வருகிறார். மேலும் இவரது குவாண்டம் கொள்கை பற்றிய தொகுப்பு, இதுவரை தமிழில் வெளிவந்த எந்த நூல்களிலும் இல்லாத அளவு மிக எளிமையாக புரியும்படி இருக்கிறது. அவற்றிற்கான தொடுப்பு...

குவாண்டம் கொள்கை 
குவாண்டம் கொள்கை தொகுப்பு 

முருகன் - அறிவியல் மக்களுக்கே என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். அறிவியல் சம்பந்தமான தகவல்களை மிக அழகாக கோர்த்து வரும் இவர் அடிக்கடி பல விழிப்புணர்வு கட்டுரைகளையும் வலைப்பூவில் பதிந்து வருகிறார்.

சவ்வூடு பரவல் 
சிட்டுக்களின் அழிவும், புறாக்களின் பெருக்கமும்

சுடுதண்ணி - சுடுதண்ணி என்ற வலைப்பூவில் எழுதி வரும் நண்பர் தமிழரசன் அவர்கள், கணிணி சம்மந்தமான கட்டுரைகளைப் பதிவிட்டு வருகிறார்.  பல அரிய கணிணிச் செய்திகளையும், கணிணித் தொழிற்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் புரட்சிகளைப் பற்றியும் மிக அழகாக எழுதி வருகிறார். குறிப்பாக அவரின் எள்ளல் எழுத்துநடையும், இடையிடையே தோன்றும் நகைச்சுவையும் பதிவுகளை சோர்வில்லாமல் வாசிக்க வைக்கிறது.

டோரண்ட் ஓர் அறிமுகம்
விக்கிலீக்ஸ், தி ஹிந்து பெருமையுடன் வழங்கும் 


சசிக்குமார் - வந்தேமாதரம் எனும் தலைப்பில் வலைப்பூவில் எழுதிவரும் கணிணி தொடர்பான பல கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இவரின் பல்வேறு பதிவுகள், அடிப்படை கணிணிப் பிரச்சனைகளிலிருந்து, கணிணியுகத்தின் புதிய வரவுகள் வரை பதிவுகளில் அலசுகிறார்.

வைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்கள் மீட்டெடுக்க 
தேவையில்லாத பைல்களை நீக்கி கணினியை வேகமாக இயங்க வைக்க 

பொன்மலர் - பொன்மலர்பக்கம் என்ற வலைப்பூவில் பதிவுகள் இட்டு வரும் தோழி பொன்மலர், இணையம் தொடர்பான பல இடுகைகளை ஏற்றம் செய்து வருகிறார்கள். அவர் இடுகைகளில் குறிப்பிடத்தக்கவை...

நவீன தொழில்நுட்பம் - பெண்களே உசார்!
பிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க 

ஷேக் பரீத், அர்ஜீன், ஆகியோர் 365-தினமொரு ஆன்டிராய்டு அப்ளிகேஷன் என்ற தலைப்பினில் வலைப்பூ ஒன்றினினை ஆரம்பித்து எழுதி வருகின்றனர். கைபேசி தொழில்நுட்பத்தின் மிகச்சமீபத்திய வரவான ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கைபேசிகளில் பயன்படுத்தக் கூடிய மென்பொருட்களை தினம் ஒன்றாக அறிமுகப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இந்தபுதிய வரவுகளைப் பற்றியும் அறிந்து கொள்வது முக்கியமென உணர்த்துகிறது இவர்களின் வலைப்பூ.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பதிவுகள்,

Bar Code Scanner 
SoundHound 

சமுத்திரா - எனும் வலைப்பூவில் எழுதிவரும் நண்பர் அணு, அண்டம் அறிவியல் என்ற தொடரினை வெகு அழகாக தொடுத்து வருகிறார்... அதில் குறிப்பிடும்படியான ஒன்று....

அணு அண்டம் அறிவியல்

நாளை  சந்திப்போம்... :)
 - அகல்விளக்கு

மேலும் வாசிக்க...

Sunday, November 27, 2011

சுயம் - ஒரு அறிமுகம்

 
வலைச்சர வாசகர்களுக்கு வணக்கங்கள். உண்மையில் இன்று மிகப்பிரம்மிப்பாக உணர்கிறேன். ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் ஓடிவிட்டது. 2009 ஆகஸ்டு மாதத்தில் அகல்விளக்கு என்ற பெயரில் ஒரு வலைப்பூ-வினைத் தொடங்கினேன். எத்தனையெத்தனை நண்பர்கள், வாசகர்கள், முகமறிந்த, அறியாத நலவிரும்பிகள், தட்டிக்கொடுத்து நல்வழிப்படுத்தும் அன்பு உள்ளங்கள்... அனைத்திற்கும் காரணம் இந்த தமிழ் வலைப்பூ உலகம்தானே. 
 
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தமிழ் வலையுலகில் மகத்தானதொரு சேவையை தொடங்கி வைத்த திரு.சிந்தாநதி அவர்களை  இந்த நேரத்தில் நினைவுகூர்வது முக்கியம்.  பொருத்தமான நேரத்தில் இதைத் தொடங்கி வைத்த அவருக்கும், அதனை சிறப்பாக தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் வலைச்சர நிர்வாகத்தினருக்கும் நிச்சயம் தமிழ் வலைப்பூ உலகம் கடமைப்பட்டிருக்கிறது...

இனி என்னைப் பற்றி எழுதுவதற்கு முன்.... 
 
சுயம் என்பதே என்றும் மாறாதது என்பதால்  :-) முன்பு இப்பணியை ஏற்றபோது எழுதிய அறிமுகப் பதிவு...
 
********************************************

நான் என்பதாக அறிமுகம் செய்து கொள்ளப் பயன்படுத்துவது "ராஜா ஜெய்சிங்". எம் அம்மையும் அப்பனும் ஈன்ற அவர் உயிர்க்கு இட்ட பெயர்தான் அது. ஒத்த விசைகள் கொண்ட காந்தப்புலம் ஒன்றையொன்று விலக்குவதுபோல், ஒன்றோடொன்று வேறுபட்ட இருவேறு சமூகங்களை இணைக்கும் ஒற்றை இரும்புப்புள்ளியாகப் பெற்றெடுத்தனர்.

அடர்ந்த மலைக்காடுகளிலும், அங்கு சுற்றிக்கொண்டிருக்கும் மென்தென்றல் காற்றுடனும் என் சிறுவயதுப் பருவத்தை தொலைத்தேன். பிழைப்புக்காகப் பெயர்ந்த சமூகத்தின் ஓர் அங்கமாக, வாழ்வை எதிர்நோக்கியபடி தற்போது நகரவாசம். மலையின் வனப்புகளை நெஞ்சில் நிறைத்து நடமாடிக்கொண்டிருக்கும் நகரத்து மனிதர்கள் வெகுசிலரில் நானும் ஒருவன்.

பகல்முழுதும் அலைந்து திரிந்து பின் பட்டியில் அடைபடும் ஆடுகளின் மனதையொத்தது என் நிலை. மீண்டும் கிராமங்களில் உறைந்து, உறக்கம் கொள்ளும் தருணம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு சீவன்.

என் எண்ணங்களை வலையில் பதிக்க எண்ணியபோது தோன்றியதுதான் இந்த அகல்விளக்கு எனும் புனைப்பெயர். ஒற்றை மண்சுவர் தாங்கிய மாடம் சூழ எழுப்பிய ஓர் குடிசை. அங்கு நித்தமும் நிறைந்தது அகலின் ஒளி வெளிச்சம். அந்த வெளிச்சத்தில்தான் பிழைத்துக் கிடந்தது என் பள்ளிப்பிராயம்.

பள்ளிப்பிராயம் கடந்த பின் பெயர்ந்து விட்ட சில நண்பர்களை மீண்டும் சேர்த்த பெருமை இந்த இடுகைக்கு உண்டு - என் அவள்.

வலையுலகிலும், மின்னஞ்சல்குழுமங்களிலும் எனக்கொரு நற்பெயரைப் பெற்றுத்தந்த இன்னொரு இடுகை - வசனக்கோயில். 

சமீபத்திய(?) இடுகை - யாக்கை  

என் சில கவிதைகள்...

 
*******************************************

உண்மையில், சீனா ஐயா வலைச்சரத்தில் ஆசிரியராக அழைப்பு விடுத்தபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. காரணம், முன்பு ஒருமுறை ஆசிரியர் பணிக்கு இசைந்தபோது எதிர்பாராத நிகழ்வுகளினால் தொடர இயலாமல் போயிற்று. இப்போது அந்த பணியை நிறைவு செய்யக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவே இதைக் கருதுகிறேன். இந்த அரிய பணியை மேற்கொள்ளுமாறு மீண்டும் பணித்த சீனா ஐயா அவர்களுக்கும், ஆதரவு தரப்போகும் பதிவுலக நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் என் நன்றிகள்.
 
நான் ரசித்த பதிவுகளை நாளை முதல் பார்க்கலாம்.
 
நன்றி...
மேலும் வாசிக்க...

Thursday, March 24, 2011

கவிதைப்பூக்கள்...


கவிதைகளைச் சுகிக்கும் மனம் அனைவருக்கும் வாய்த்தாலும், கவிஞனின் பார்வையில் உலகைப் பார்க்கும் மனம் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்ப்பதில்லை.

பூக்களை பார்த்து, அதன் மலர்ச்சியில் மகிழ்ச்சி கொள்வது யாராலும் முடியும், ஆனால் அந்த பூக்களை மகரந்தம் தாங்கும் கர்ப்பிணிகளாகவும், படர்ந்து வளர்ந்த நட்சத்திரக்கூட்டங்களாகவும் பார்த்து உணர்வது கவிஞர்களேயன்றி யாரும் இல்லை.

அவ்வகையில் நான் தொடர்ந்து வாசித்து வரும் சில கவிஞர்கள் சிலரை கீழே வரிசைப்படுத்தியுள்ளேன்.

கமலேஷ் - சுயம் தேடும் பறவை எனும் வலைப்பதிவில் கவிதைகளை இட்டு வருகிறார். எதார்த்த நடையிலும் கவிதை தெறிக்க எழுதும் புலமை வாய்த்தவர். அதற்குச்சான்றாக அவரின்
இலந்தைப் பூக்கள்

கவிஞர் வைரமுத்துவைப்பற்றி அவர் வரைந்த கவிதை
ஒரு அட்சய பாத்திரம் 


நாவிஷ் செந்தில்குமார் - நாவிஷ் கவிதைகள் எனும் தனது தளத்தில் கவிதைகளை எழுதி வருகிறார். வாரப்பத்திரிக்கைகள் சிலவற்றிலும் இவரது கவிதைகளை நான் பார்த்ததுண்டு. ஒன்றிரண்டு வரிகள் என்றாலும் நீங்காமல் மனதில் இருத்தி வைத்து விடுவதில்லை இவரது கவிதைகள் என்றுமே வீரியமானது. அதில் ஒன்றுதான் இந்த உணவே மருந்து .

சாலையைக் கடக்க குழந்தைக்கள் என் விரல் பிடிக்கும்போதெல்லாம் நினைவிற்கு வரும் இவரின் இந்த அறிவுரைகள்...
சாலையைக் கடக்கும் குழந்தை

ரசிகை - ரசிகை என்ற வலைப்பதிவில் கவிதைகள் நிரப்பி வருகிறார். அனுபவித்து கவிதை எழுதுவதில் வல்லவர். இதோ... குளியலில் கூட எவ்வாறு விளையாடுகிறார் பாருங்கள்.. கவிதைக் குளியல்.
சிட்டுக்குருவிகளுக்காக சூழ் மவுனம் கலைக்கா இவரது பார்வையை இன்னும் அழகாக வடித்திருக்கிறார் இந்த கவிதையில் - மழை நாளில்.
முரளிகுமார் பத்மநாபன் - அன்பே சிவம் எனும் வலைப்பதிவில் எழுதுகிறார். காணும் யாவிலும் புதுமையாய் ஏதோவொன்றைக் கண்டுகொள்ளும் மழலைபோல இவரின் மனதில் எங்கும், எதிலும் அழகு நிறைந்திருக்கிறது. 
கிறுக்கல் என்ற பெயரில் அவர் சித்திரமாய்த் தீட்டிவரும் கவிதைகளில் சில...

கிறுக்கல்கள்
போனஸ்

இரவுப்பறவை - இரவுப்பறவை என்ற வலைப்பதிவில் எழுதிவருகிறார். இவரது கவிதைகள் சட்டென முடிந்து விடுவது போலத்தோன்றினாலும், அதன் பின்னால் ஏதோ ஒரு வெறுமையை அல்லது ஆழ்வெளியை கண்டுகொள்ளலாம். சில நேரங்களில் குறும்புத்தனமான கவிதைகளும் உண்டு...

அவரின் இரு கவிதைகள்

வாரக்கடைசி
நிறைவாய் ஒரு வாழ்வு

தியா - தியாவின் பேனா பேசுகிறது என்ற தலைப்பு கொண்ட அவரின் வலைப்பூவில் எழுதி வருகிறார். வீரியம் மிக்க எழுத்துக்களைக் கொண்டு கவிதை புனைவதில் வல்லவர், ஆனால் தற்போது அதிகமாய் வலைப்பக்கங்களில் பார்க்க முடிவதில்லை என்பது வருத்தமே. நண்பர் மீண்டும் வந்து அவரின் கவிதைகளைத் தொடர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்...

உதிர்கின்ற பூக்கள் 
நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும் 

மணீஜி - இவருக்கு அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன். வலையுலகில் இருக்கும் அனைவரும் அறிந்த ஒருவர். அவரின் வீச்சு மிகு கட்டுரைகளுக்கும், எள்ளல் கொஞ்சும் இடுகைகளுக்கும் இடையே அவ்வப்போது வரும் ஒருசில கவிதைகள் மகா அற்புதமானவவை. கறுப்புக்கலர் ஆரஞ்சு எனும் இவரது கவிதை என்றுமே மறக்கவியலா ஒன்று. வலையுலகம் சாராத என் அனேக நண்பர்களிடம் நான் பகிர்ந்து கொண்ட ஒரே கவிதையாக அதுதானிருக்கிறது.

கறுப்புக்கலர் ஆரஞ்சு 

அவரின் இன்னொரு அற்புதக்கவிதை

பிறிதொரு சரித்திரம் 

வேலு - GeeVee எனும் வலைப்பதிவில் எழுதிவரும் நண்பர் வேலு அவர்களின் கவிதைகளும் மிக நல்ல அமைப்பைப் பெற்றவை. பெரும்பாலும் மனித மனங்களின் தேடுதல்களை கவிதைப்படுத்தும் இவரது நயம் போற்றத்தக்கது. அவரின் தேடல் கவிதைகளுக்கு நான் என்றுமே ஒரு நல்ல ரசிகன். இதோ அவரின் இரண்டு முத்துக்கள்

அவதார் 
வட்டங்கள் 

சி.சரவணகார்த்திகேயன் (WriterCSK) - இவர் ஒரு பிரபல எழுத்தாளர். அதைவிட ட்விட்டரில் இவரது கீச்சுக்கள் மிகப்பிரபலம். யாரோ ஒருவர் எழுதியது போல இவர் தமிழ்பேப்பர் தளத்திற்கு எழுதிய காதல்புராணம் இவருக்கு மிக நல்ல வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அக்கவிதைத் தொடரை அனானியாக இவர் எழுதிய நேரத்தில், இவர் யாராக இருக்கும் என்ற அனுமானத்தில் ட்விட்டரில் பெரிய சலசலப்பே ஏற்பட்டது. இதோ அவரது காதல் புராணத்தின் தொகுப்பு... 

காதல் புராணம் 

ஈரோடு கதிர் - வலையுலகில் ஒரு முக்கிய பதிவரான இவர், சமூகம் சார்ந்த இடுகைகளுக்குச் சொந்தக்காரர். சமயங்களில் கவிஞராகவும் உருவெடுத்து நல்ல படைப்புகளைத் தருகிறார். அவரின் கவிதைகளில் சமூகச்சிக்கல்களும், வாழ்வியல் கருத்துக்களும் அழுத்தமாக பதியப்படும். அவரின் சில கவிதைகள்

அவளாக இருப்பாளோ 
சிறகை விரிக்கும் சிறை 

இன்னும் பல நல்ல கவிஞர்களை வலையுலகம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆயினும் இவர்கள் என் வாசிப்பு எல்லைக்குள் இருப்பதால், எளிதான அடையாளம் கண்டு பதிவிட்டு விட்டேன். இவர்களைப்போல பல நல்ல கவிஞர்களை வலைச்சரம் ஒவ்வொரு வாரமும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதில் நானும் சிறு பங்காக இன்று இருப்பது எனக்கு ஒரு பெருமைமிக்க ஒரு நிகழ்வு.

அடுத்து வரும் இடுகைகளில் வேறு பல நயங்களைக் கொண்டு, பதிவிடும் பதிவர்களின் தொகுப்போடு சந்திக்கிறேன்....

தொடர்வோம்...
மேலும் வாசிக்க...

Wednesday, March 23, 2011

சுயம் - ஒரு அறிமுகம்...

நான் என்பதாக அறிமுகம் செய்து கொள்ளப் பயன்படுத்துவது "ராஜா ஜெய்சிங்". எம் அம்மையும் அப்பனும் ஈன்ற அவர் உயிர்க்கு இட்ட பெயர்தான் அது. ஒத்த விசைகள் கொண்ட காந்தப்புலம் ஒன்றையொன்று விலக்குவதுபோல், ஒன்றோடொன்று வேறுபட்ட இருவேறு சமூகங்களை இணைக்கும் ஒற்றை இரும்புப்புள்ளியாகப் பெற்றெடுத்தனர்.

அடர்ந்த மலைக்காடுகளிலும், அங்கு சுற்றிக்கொண்டிருக்கும் மென்தென்றல் காற்றுடனும் என் சிறுவயதுப் பருவத்தை தொலைத்தேன். பிழைப்புக்காகப் பெயர்ந்த சமூகத்தின் ஓர் அங்கமாக, வாழ்வை எதிர்நோக்கியபடி தற்போது நகரவாசம். மலையின் வனப்புகளை நெஞ்சில் நிறைத்து நடமாடிக்கொண்டிருக்கும் நகரத்து மனிதர்கள் வெகுசிலரில் நானும் ஒருவன்.

பகல்முழுதும் அலைந்து திரிந்து பின் பட்டியில் அடைபடும் ஆடுகளின் மனதையொத்தது என் நிலை. மீண்டும் கிராமங்களில் உறைந்து, உறக்கம் கொள்ளும் தருணம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு சீவன்.

என் எண்ணங்களை வலையில் பதிக்க எண்ணியபோது தோன்றியதுதான் இந்த அகல்விளக்கு எனும் புனைப்பெயர். ஒற்றை மண்சுவர் தாங்கிய மாடம் சூழ எழுப்பிய ஓர் குடிசை. அங்கு நித்தமும் நிறைந்தது அகலின் ஒளி வெளிச்சம். அந்த வெளிச்சத்தில்தான் பிழைத்துக் கிடந்தது என் பள்ளிப்பிராயம்.

பள்ளிப்பிராயம் கடந்த பின் பெயர்ந்து விட்ட சில நண்பர்களை மீண்டும் சேர்த்த பெருமை இந்த இடுகைக்கு உண்டு - என் அவள்.

வலையுலகிலும், மின்னஞ்சல்குழுமங்களிலும் எனக்கொரு நற்பெயரைப் பெற்றுத்தந்த இன்னொரு இடுகை - வசனக்கோயில். 

அனைத்தும் தாண்டி தற்போதைய சமீபத்திய இடுகை - வெயிற்காலம்.

என் சில கவிதைகள்...

 
***************************-

சுயத்தைப் பற்றியெழுதும் இவ்வேளையில், என்னை வளர்த்த சில மோதிரக்கைகளுக்கு நன்றி நவிலும் நல்லதோர் தருணமாக, இதுவன்றி வேறெதும் இருக்கவியலாது.

வலைச்சரம் - பெருமைக்கும், பிரம்மிப்புக்கும் உரித்தான இடம். மரகதங்களும், மாணிக்க மலர்களும் அலங்கரித்த கோபுரம். அத்ததைய பெருமைமிகு கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்ட ஓர் சிறு கூழாங்கல்லாக உணர்ந்துகொண்டிருக்கிறேன்.

வளர்ந்த மாணவனை வகுப்பெடுக்கச் சொல்லிவிட்டு தள்ளி நின்று பார்க்கும் இணையில்லா ஆசிரியராய் திரு.சீனா அய்யா அவர்கள். எம்மை இந்த சிம்மாசனத்தில் ஏற்றி விட்டு அழகுபார்க்கிறார்.

அவருக்கு நன்றி என்ற ஒற்றைச்சொல்லால் குருதட்சனை கொடுப்பது முறையா எனத்தெரியவில்லை.

ஆனாலும் இப்போது அவர் இட்ட பணியை செவ்வனே நிறைவேற்றுவதுதான் சாலச் சிறந்த கைமாறாக இருக்கும் என எண்ணுகிறேன்...

வலைச்சரத்தில் வாய்ப்பளித்த அதன் நிர்வாகிகளுக்கும், திரு.சீனா அய்யா அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்கி இப்பணியைத் துவக்குகிறேன்...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது