07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label அருணா செல்வம். Show all posts
Showing posts with label அருணா செல்வம். Show all posts

Sunday, March 24, 2013

முடிவல்ல இது... துவக்கம் தான்...!!!



அளிப்பவர் அருணா செல்வம்
 

வணக்கம்


தமிழே... என் உயிரே...!

எந்த நிலையிலும்

உன்னை நான் முன் வைத்தேன்!

எந்த சபையிலும்

என்னை நீ முன் வைப்பாய்!!



நட்புறவுகளுக்கு வணக்கம்!

      எந்த ஒரு செயலில் முடிவும் வேறு ஒரு செயலின் தொடக்கமாகத்தான் அமைந்து விடும். இது தான் உலக நியதி. எந்த ஒரு துணிவான ஆரம்பமே வெற்றியைத் தொட பாதி தூரம் வந்து விட்டோம் என்பதை நமக்கு உணர்த்தும். அதற்கு விடா முயற்சியும் தன்நம்பிக்கையும் தான் முக்கியம்

     நிறைய பேர் எந்தக் காரியத்தையும் தொடங்கிவிட்டு முடிக்கத் தெரியாமல் விழித்து பின் கைவிட்டு விடுகிறார்கள். அவர்களை மற்றவர்கள் கைத்தூக்கி அல்லது கைதட்டி ஊக்குவித்து உயர வைக்க வேண்டும். ஆனால் அதற்கு அவர்களும் முழு மூச்சுடன் முயற்சியும் செய்ய வேண்டும்.

     முயற்சி இல்லாவிட்டால் அதிஷ்டம் வந்தாலும் யாராலும் எதையும் சாதிக்க முடியாது. அப்படி முன்னேறத் துடிப்பவர்களை வலைச்சரமானது வாரம் ஒருவரைக் கொண்டு அவர்களின் மூலம் புதியவர்களுக்கு ஊக்கத்தையும் பழையவர்களுக்கு மேலும் உற்சாகத்தையும் கொடுக்கச் செய்கிறது.

    எனக்கு இந்தப்பணி கிடைத்ததால் தான் நான் பல பதிவுகளைப் போய் படித்திருக்க முடிந்தது. படிக்கப் படிக்கத்தான் நான் எவ்வளவு அறியாதவளாக இருக்கிறேன் என்பதை என்னால் உணர முடிந்தது.

    அந்த வகையில் எனக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்த வலைச்சர நிர்வாகி சீனா ஐயாவிற்கு பணிவுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



     இன்று நான் சுட்டிக்காட்டும் அனைவரும் நல்ல திறமைசாளிகள். அவர்களை மேலும் ஊக்குவித்து மேலும் மேலும் உணர்வடைய உதவும் படி கேட்டுக்கொள்கிறேன்.   




     படித்தது B.Sc.,(Maths) M.A(Tamil).பள்ளி நாட்களிலேயே எழுத்தின் மீது காதல். தினமலர் பெண்கள் மலர் என்னை அடையாளம் காட்டி நிறைய தோழிகளைத் தந்தது. என்று தன் அறிமுகத்தில் கூறும் இவரின் சிறுகதைகளும் மற்ற படைப்புகளும் மிக மிக அருமையாக உள்ளது. நீங்களும் சென்று படித்து மகிழுங்கள்.













     “இயற்கையின் இலவசங்களுக்குள் எதிர்ப்பின்றி எடுத்துக்கொண்ட ஒரு சில தேவைகளோடு என் பயணம். எனைப்பற்றி கிறுக்க வேறேதுமில்லையே! இருந்தும் என்னுயிரின் ஸ்பரிசங்கள் இங்கே எல்லோரையும் இதமாய்த் தழுவும் என நினைக்கிறேன். அதுவே போதுமானதாய் இருக்கட்டுமே. எனது பிறப்பிடம், வாழ்விடம் கேட்க்காதீர்கள். ஏனெனில் எல்லோரையும் போல நானும் ஓர் நாடற்ற ஈழத்தமிழன், காற்றில் மூச்சாய், கனவில் வாழ்விடமாய் நாட்களைக் கடத்தும் எனக்குள்ளும் நினைவுகளை விதைத்துக் கவிதைகளை அறுவடை செய்ய காரணமாய்ப் போன என் காதல் தேவதைக்கான கவிதைகள் மட்டுமே இங்கே பூத்திருக்கின்றன. பிடித்திருந்தால் அவற்றை ரசித்துக் கொள்ளுங்கள் எனக்காகவும், என் கடந்துபோன காலங்களுக்காகவும். ........... என்றும் பிரியமுடன் சீராளன்“

    தன் அறிமுகத்தையே இவ்வளவு சோகத்துடன் சொல்லியிருந்தாலும் இவரின் சோகத்திலும் எவ்வளவு சுவை இருக்கிறது என்று படித்தால் நமக்கு புரியும்.













    இவரின் கதம்ப வலையிலிருந்து சில பதிவுகளை எடுத்துக் கொடுத்துள்ளேன். நீங்களும் படித்து மேலும் வளர இவரை ஊக்குவியுங்கள்.






அருண் (சிறுகதை)







    இவர் தமிழ் மணத்தின் ரேங்கின் முதல் இடத்தில் இருப்பவர். இவரைப்பற்றி அனைவருக்குமே தெரிந்திருந்தாலும் இவரின் பதிவில் அறிமுகமாகிய ஆதிரை வேணு கோபாலின் “30 வகை திடீர் சமையல்“ அனைவருக்கும் உதவும் பதிவாக உள்ளது. படித்துப் பயனடையுங்கள்.




    “எளியோன் எனை பற்றி ஏதுமிலை இயம்ப.என்று தன் அறிமுகத்தில் சொன்னவர், தன் பதிவில் உலகின் மிகச்சிறந்த ஓவியர்களின் ஓவியங்களையும் சிலரின் வாழ்க்கைக் குறிப்புகளையும் பதித்திருக்கிறார். ஓவியப் பிரியர்கள் மட்டுமின்றி அனைவருமே பார்க்க ஏங்கும் ஓவிய பதிவுகளை எடுத்துப் பதித்துள்ளேன். சென்று பார்த்து மகிழுங்கள்.















6.சமையல்... சமையல்... (பேச்சிளர்)

    இவர் தனியாக வாழும் இளையவர்களுக்காக மிக மிக சாதாரனமாக சமைக்கும் விதத்தில் சமையலைக் கற்றுத் தந்திருக்கிறார். நிறைய வகைகள். தேவைப்படுபவர்கள் சென்று கற்கலாம்.




    "தூயா" நான் புலம்பெயர் நாட்டில் தமிழ் கற்ற தமிழீழத்து வாரிசு...என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட தூயா சமையல் செய்முறை விளக்கங்களை அழகாகச் சொல்லியிருக்கிறார்.




   “பழைய சாதம் மீந்துவிட்டால்.....?“  அதை வீணாக்காமல் என்ன செய்யலாம்.. என்று யோசிக்கும் குடும்ப அக்கரை உள்ளவர்களுக்குத் தேவையான பல விவரங்களைக் கொடுத்துள்ளார். நிறைய “டிப்ஸ்“ களுடன் பதிவமைத்து உள்ளார். நமக்குத் தேவையான பல தலைப்புகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.  அதில் தேவையான தலைப்பை கிளிக் செய்து படிக்கும் படி வடிவமைத்துள்ளார். தவிர  நிறைய சமையல் குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார்.



    சமையலில் 20 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம்,  குழந்தை வளர்ப்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.“ என்று அவருக்குத் தெரிந்த அனைத்தையும் நமக்கும் சொல்லித் தருகிறார். தேவைப்பட்டவர்கள் போய் படித்துப் பார்த்துக் கற்றுக் கொள்ளங்கள்.


   “கோல மயில்களே கோலமிடக் கற்போம் என்று அழைத்து கல்லூரிப் பருவம் முதல் வசந்த காலம்! தற்போது நான் என்னைப் புதுப்பித்துக் கொண்ட இரண்டாம் வசந்த காலம் இது.! இந்தக் காலம் என்னைப் போல சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கெல்லாம் பொற்காலமாக அமையட்டும்.  எனது வாழ்த்துக்கள் அனைத்து மகளிருக்கும்.!“ என்று சொல்லும் இவரின் கோலங்கள் அழகானதாகவும் மனங்களை கவரும் விதத்திலும் வரைந்து காண்பித்துள்ளார்.
தேர்க் கோலம்
நேர்ப்புள்ளி நெளிகோலங்கள்
ரோஜாப்பூ கோலம்

 

   நட்புறவுகளே... இன்றைய பதிவுகள் உங்களுக்கெல்லாம் பிடித்திருந்ததா...? எனக்குப் பிடித்திருந்ததால் உங்களுக்கும் பகிர்ந்தேன்.

     தவிர, இன்றுடன் எனக்குக் கொடுத்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பு நிறைவடைகிறது. எனக்குக் கொடுத்தப் பொறுப்பைச் சொன்னது போலவே செய்து முடித்துக் கொடுத்து இருக்கிறேன் என்று நம்பி... எனக்கு பின் வரும் வலைச்சர பொறுப்பேற்கும் ஆசிரியருக்கு என் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு அவர்களுக்கு வழிவிடுகிறேன்.

    இங்கே எனக்குக் கொடுத்த வேலையை முடித்ததால் என் வலைப்பூவின் வாசல் திறக்கப்படுகிறது. என்னை இதுவரை ஊக்குவித்தவர்கள் அருணா செல்வம் என்ற என் வலைக்கும் வந்து என்னை தட்டிக் கொடுத்தும் தவறுகளைச் சுட்டிக்காட்டித் தலையில் குட்டு கொடுத்தும் நல்வழி காட்ட அன்புடன் அழைக்கிறேன்.



நட்புடன்



         
மேலும் வாசிக்க...

கதம்ப மலர் மாலை!!



அளிப்பவர் அருணா செல்வம்
 
வணக்கம்



நட்புறவுகளுக்கு வணக்கம்!

    இன்று “கதம்ப மலர் மாலைஎன்ற தலைப்பில் பல இயல்களைச் சார்ந்த பலரின் பதிவுகளின் தளங்களைச் சுட்டிக்காட்டப் போகிறேன். இதில் என்ன ஒரு கடினம் என்றால்... ஒவ்வொரு பதிவரும் பற்பல விசயங்களில் கைத் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். யாரையும் இவர் இதில் மட்டும் சிறந்தவர் என்று பிரித்துப் பார்த்து எழுத முடியவில்லை.

உதாரணத்திற்கு....



கண்ணே!

அருவிகள் ஆற்றில் கலக்கின்றன.

ஆறுகள் கடலில் கலக்கின்றன.

நான் மட்டும் ஏன்

உன்னோடு கலக்கக் கூடாது?

அதோ பார்!

உயர்ந்த மலைகள் வானைத் தழுவி முத்தமிடுகின்றன.

அலைகள் ஒன்றையொன்று தழுவி முத்தமிடுகின்றன.

நான் உன்னைத் தழுவி

முத்தமிடாவிட்டால்

இயற்கைக்குப் பொருந்துமா?



     இது “ஷெல்லி“ யின் தழுவல்! இதில் அன்பு, காதல், காமம், கவிதை என்பதை எந்த எந்த வரிகளில் சுட்டிக்காட்ட முடியும்?

    இது போலத்தான் இன்றுள்ளவர்களின் பதிவுகளில் எதையும் தனித்தனியாகச் சுட்டிக்காட்ட முடியவில்லை.

    தவறி கிணற்றில் விழுந்தவன் விழுந்ததே விழுந்தோம். நல்லா குளிச்சிட்டே வெளியேறலாம் என்று சற்றும் பயமில்லாமல் சிந்திப்பது போல் நானும் புதிய பதிவர்களைத் தேடுவதே தேடுகிறோம்... அவர்களிடம் உள்ள பயனுள்ளதை நானும் நன்றாக கற்றுக்கொள்வோமே... என்று நானும் படித்து மகிழ்ந்தேன்.

   “கற்றுக் கொடுக்கும் பொழுது தான் நாம் மேலும் கற்றுக் கொள்ள முடிகிறது“ என்ற உண்மை எனக்கு இப்பொழுது தான் புரிகிறது.

    அதிலே நான் தேடிப்பிடித்துப் படித்தத் தளங்களில் எனக்குப் பிடித்ததை உங்களுக்கும் பகிர்ந்து மகிழ்கிறேன்.






. “மானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்தன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து 2006 லிருந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்“ என்று தன் அறிமுகத்தைத் தாழ்மையுடன் தொடங்கும் இவர் நம்மின் மிகவும் உயர்ந்தவர். இவரின் பதிவுகள் ஒருசில உங்களின் பார்வைக்கப் படைக்கிறேன்.








2  முதல் துளி நிரேஷ் குமார் (சிறுகதைகள்)


   தமிழின் மீது நான் கொண்ட பற்றும், சமூகத்தின் மீது நான் கொண்ட கோபமும் என் விரல்களை எழுதத் துாண்டியது! பத்திரிகை நண்பர்களின் ஆதரவும் கிடைத்த பரிசுகளும் என் எழுத்தைத் தொடர வைத்தன!! எவ்வளவு காலம்தான் பத்திரிகைகளுக்காகவும்  பரிசில்களுக்காவே  எழுதுவது?  இப்போது நான் தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் எழுதுகின்றேன். என் எழுத்தைப் பரவலாக்கும் முயற்சியின் முதல் தடமே தமிழ் வலையில் என் கால் தடம்.......!  என்று தன் அறிமுகத்தைத் தொடர்ந்து இவர் எழுதிய அனைத்துப் பதிவுகளுமே அருமையானவைகள்.   








3. காலக் கூத்து (சிறுகதைகள்)

“ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையிலிருந்து விலகி விடுகின்றன“ - கலீல் ஜிப்ரான்

   வரிகளை அறிமுகமாகக் கொண்ட இவரின் படைப்புகள் நாங்கள் மனிதர்கள் என்பதை உணர்த்தும்.









    “நாங்கள்ளாம்... தலையில இடியே விழுந்தாலும் !!.. வாய்க்குச் சேதாரம் இல்லாம இருந்துச்சின்னா சாப்புடச் சூடா என்னா இருக்கு? -ன்னு கேக்குறவிங்க..!!!என்ற நகைச்சுவை உணர்வுடன் கூடிய அவரின் படைப்புகளில் சில...











5. இசையின் ஈர இயக்கங்கள் (நித்தியவாணி மாணிக்கம்)

     இவரின் பதிவுகள் அனைத்தும் இசையைக் குறித்தே உள்ளது. இசை விரும்பிகளுக்கு பிடித்தமான தளமாக இருக்கும் இவரின் தளம்.







     கவி வானில் சுற்றித் திரியும் சுதந்திர பறவை. என் மனம் சிந்திக்கிற விசயங்களை இந்த வலைப்பூவின் வழியே எண்ணச்சிதறல்களாக எழுதி வைக்கிறேன்தங்களைப் போன்ற நல்ளுள்ளங்களின் ஆதரவும், விமர்சனமும் என் வளர்ச்சிக்கு உதவட்டும்“ என்று நம்மை அழைக்கும் இவரின் படைப்புகள் சமுக சிந்தனையுள்ள படைப்புகள். படித்துப்பாருங்கள்.







    விருப்பு வெறுப்புக்கு அப்பால் விதி தந்த பாதையிலே நகர்ந்திடும் பல கோடிப் பேரில் நானும் ஒருவன்.என்று சொல்லி நமக்கு அறிமுகம் கொடுத்துவிட்டு இவர் படைத்தப் படைப்புகள் நமக்கு விருந்தாக உள்ளது.









ஹைகூகள்

    கல்லூரிப் பருவம் முதல் வசந்த காலம் தற்போது நான் என்னைப் புதுப்பித்துக் கொண்ட இரண்டாம் வசந்த காலம் இது.! இந்தக் காலம் என்னைப் போல சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கெல்லாம் பொற்காலமாக அமையட்டும்.  எனது வாழ்த்துக்கள் அனைத்து மகளிருக்கும்.! “ என்று தன்னை அறிமுகம் படுத்தும் இவர் எழுதிய நிறைய குறுங்கவிதைகளை இன்றைக்கெல்லாம் படித்துக்கொண்டே இருக்கலாம்.
எது நீ?
 
பயணம் 
 
தாய் வாசம்
 
9. பூவிழி மலர்பாலன்

   தன்னைப்பற்றி எதுவுவே அறிமுகப் படுத்தாத இவர் எழுதிய பதிவுகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. படித்து ஊக்கமூட்டுங்கள்.
காதல் கிச்சி கிச்சி 
 
மூடிய கையில் என்ன இருக்கிறது?
 
அவலம் அவலம் அவலம்..?
 
10 ஜோக்களி

    தினசிரிஒரு ஜோக். இவரைப்பற்றி நான் சொல்லவே தேவையில்லை. எல்லோரும் இவரைப் படித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். இவர் தினமும் எழுதும் சின்னச் சின்ன நகைச்சுவைகள் ஒவ்வொன்றும் நம்மை சிரிக்க வைப்பன. (நேற்று இரவு வலைச்சரத்திற்காக எழுத இவரின் வலைப்பதிவுக்குள் போய்.... படித்துச் சிரித்துச்... சிரித்து... வயிற்று வலியே வந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் படுத்தப்பிறகும் இவரின் ஜோக்குகளை நினைத்துச் சிரிக்க... “எனக்கு ஏதோ பிடித்துக்கொண்டது“ என்பது போல் என் கணவர் என்னைப் பார்த்தார்...!)
கோவிலுக்கு போனால்...
 
காலி பிளவர்
 
கஞ்ச பிசினாறி!
 

    இது வரையில் கதம்ப மாலையில் உள்ள பூக்களைச் சுட்டிக் காட்டினேன். ஆனால் பறிக்க முடியாத உயரத்தில் இருக்கும் பூவலைகளையும் இங்கே சுட்டிக்காட்டக் கடமை பட்டுள்ளேன்.

திறக்காத வலைப்பூக்கள்!!








திருமதி பக்கங்கள். (கோமதி அரசு)





     இவர்களின் தலைப்புகளைத் தமிழ் மணத்தில் பார்த்து விட்டு வாசலுக்கு நுழைந்தால் கதவைத் திறந்து உடனே மூடிவிடுவார்கள். நான் தட்டத் தட்டத் திறக்காத வலைகள் இவைகள். (இப்பவாவது அவர்கள் இதைச் சரி செய்வார்களா... படிக்க நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறோம்)



     நண்பர்களே இன்றைய வலைச்சரத்தின் கதம்ப மலர்கள் அனைத்தும் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். நாளை வலைச்சர கடைசி பதிவுடன் உங்களைச் சந்திக்கிறேன்.



நட்புடன்

அருணா செல்வம்.





மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது