07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label இரா.வசந்த குமார்.. Show all posts
Showing posts with label இரா.வசந்த குமார்.. Show all posts

Sunday, December 7, 2008

இசையில் தொடங்குதம்மா..

'சையில் தொடங்குதம்மா...' என்ற பாடல், 'ஆதியில் ஒலி இருந்தது' என்ற பைபிளின் வாக்கியத்தோடு ஒக்கிறது. 'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' என்கிறது உலகப் பொதுமறை. இசை பற்றி, வைகோ அவர்கள் கூறுவது இங்கே...! தாலாட்டில் இருந்து ஒப்பாரி வரைக்கும் நம் வாழ்வில் இசை இல்லாது நிகழ்வுகள் இல்லை. பரமஹம்ச யோகானந்தா 'ஒலி அலைகள் தான் உலகமே' என்று சொல்கிறார்.

இசையைப் பற்றி சில பதிவுகளைப் பார்ப்போம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, இசை என்றால் திரைத்தமிழிசை தான். கானா பிரபா இனிய நல்ல பாடல்களை வரிசையிட்டுத் தம் கருத்துக்களைச் சொல்லிப் பாடல்கள் கூறுகிறார்.

பாடும் நிலா பாலுவின் காலத்தால் அழியாத திரைப் பாடல்களை வரிசையிட்டு வழங்குகிறார்கள் கோவை ரவி மற்றும் சுந்தர்.

கானக் கந்தர்வன் கே.ஜே.யேசுதாஸின் இனிய மயக்கும் பாடல்களைத் தொகுத்து வைக்கிறார்கள், இங்கே!

இனிமையான நாதஸ்வரப் பாடல்களை மார்கழி மகோத்சவத்தில் வழங்குகிறார்கள், இங்கே!

அமிழ்தினிமையான கண்ணன் பாடல்களை இங்கே பாடுகிறார்கள்!

செயபாலின் கூடையில் தமிழும், இசையும் இணைந்த மாயம் குறித்து அலசப்படுகின்றது.

யாழ் சுதாகரின் பதிவில் பல கடிதங்களைக் காண்கிறோம்.

நாகார்ஜூனன் 'திணை இசை சமிக்ஞை'யில் இசை பற்றியும் சொல்லுகிறார்.

ன்னும் நான் கண்டிராத, நான் குறிப்பிடாத ஆயிரம் நூற்றுக்கணக்கான தளங்கள் தமிழில் இருக்கலாம். அவற்றைச் சொல்லாததன் ஒரே காரணம், நான் மிகக் குறைவாகவே வலையுலகின் மேய்பவன் என்பது மட்டுமே! மற்றபடிக்கு வேறு எந்த காரணங்களும் இல்லை. நண்பர்களின் பதிவுகளைக் குறிப்பிடாதது, எந்த காரணங்களை முன்னிட்டும் அல்ல என்பதை அறிவார்கள்.

சென்ற வாரம் முழுக்க நான் எழுதிக் கொள்ள முடிவு செய்த போது துறை வாரியாகப் பிரித்துக் கொண்டு, அதன் படியே எழுத வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதை ஓரளவிற்காவது பூர்த்து செய்திருக்கிறேனா என்பதை, நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

வாய்ப்பு கொடுத்த சீனா ஐயா அவர்களுக்கும், பின்னூட்டங்கள் கொடுத்துப் பாராட்டிய அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி கூறி விடை பெறும் முன், எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலில் இருந்து முதல் சில வரிகள்,

உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
தொடர்கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...!



வணக்கம்.

***

படம் உதவி நன்றி :: http://farm1.static.flickr.com/28/92452265_6efaec82ec.jpg
மேலும் வாசிக்க...

எழுத்தாளர் ஆக எக்கச்சக்க ஆசையா?

ற்போது அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் இடத்தில் எனக்கு அருகில் ப்ரிண்டர் இருக்கின்றது. 'இதனால் உனக்கு ஏதேனும் ப்ரைவசி பாதிக்கப்படுகின்றதா?' என்று ஒருவர் கேட்டார். 'ஆபிஸிலேயே எல்லோரும் தவறாமல் செல்லும் பகுதிகள் இரண்டு. ஒன்று டாய்லெட் ரூட். மற்றொன்று ப்ரிண்டர் க்யூபிக்கள். இரண்டிலும் உள்ள ஒற்றுமை, இரண்டு இடங்களிலும் பேப்பர் பயன்படுத்துகிறார்கள்.' என்றேன்.

அது போல, அடிப்படைச் செயல்களைத் தவிர, எல்லோராலும் செய்யக் கூடிய கலைகள் இரண்டு. ஒன்று பாடுதல்; மற்றொன்று வரைதல் (அ) கிறுக்குதல்.

எழுதுதல் என்பதற்கு கொஞ்சம் மூளை உழைப்பையும் இட வேண்டி இருப்பதால், அதில் கை வைப்பவர்கள் குறைவு; நாம் வலைப்பூ வைத்திருப்பத்தால் நமக்கு எழுதும் ஆர்வம் இருக்கின்றது என்று நம்புகிறேன்.

எனவே எழுதுவதற்கு, எழுத்தாளன் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்..? எனக்குத் தெரிந்த அளவில் கொஞ்சம் பார்ப்போம்.

'ழுதுவது எப்படி?'

இது விஷயமாகச் சந்தித்த அத்தனை பேரும், படித்த அத்தனை கட்டுரைகளும், கண்ட புத்தகங்களும் சொல்லும் வார்த்தை, 'படி...படி..'.

மூன்று பங்கு நேரத்தை இதற்காக நாம் ஒதுக்கினால், அதில் இரண்டு பங்கைப் படிப்பதற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, மிஞ்சிய ஒரு பங்கை மட்டுமே எழுத வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

சில இலக்கிய வடிவங்களைப் பற்றி ஜெயமோகன் தரும் அறிமுகங்கள் ::

சிறுகதையில் என்ன நடக்கிறது?

தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு

‘நான் எழுதலாமா?’ ஒரு கடிதம்

சிறுகதை ஒரு சமையல்குறிப்பு

நாவல் - ஒரு சமையல்குறிப்பு

எழுதப்போகிறவர்கள்

கட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்…

யெஸ்.பாலபாரதி கொடுக்கும் ஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?

விஞ்ஞானச் சிறுகதைகளில் நிலவும் குழப்பங்கள் பற்றி வாத்தியார் கூறிய சில பதில்கள், தேசிகனின் வலைப்பூவில்!

திண்ணையின் இலக்கியக் கட்டுரைகள் பகுப்பில், சில நல்ல கட்டுரைகள் வரையறை செய்கின்றன.

சிறுகதை - அதன் அகமும் புறமும்

சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)

எனக்குத் தெரிந்த அளவிற்கு சில தளங்களைக் குறிப்பிடுகிறேன். அவற்றில் இருந்து நாம் பெறுகின்ற படைப்புகளின் அறிமுகங்கள், நம்மையும் நல்ல எழுத்தாளர் ஆக்க ஒரு முயற்சி!

ManyBooks

1800களில் வெளிவந்த ஆங்கில க்ளாசிக் நாவல்கள், நூல்கள் அத்தனையும் இங்கே கிடைக்கின்றன, இலவசமாக! அவற்றில் நல்லதொரு நடை, சொல்லும் கருத்துகள் என்று நாம் கற்றுக் கொள்ள ஏராளம்.

EBooks - Tamil

தமிழின் தொடர்ந்த எழுத்து சூப்பர் ஸ்டார்களான பேராசிரியர் கல்கி மற்றும் வாத்தியாரின் படைப்புகள் பி.டி.எஃப். வடிவில் கிடைக்கின்றன. இவற்றைத் தெரிந்து கொள்வது, தமிழ் எழுத்து மொழியில் நிகழ்ந்த கால மாற்றங்களை அறிந்து கொள்ள முக்கியம்!

சென்னை நூலகம்.

பெரும்பாலான தமிழ்க் கதைகள் இங்கே படிக்கக் கிடைக்கின்றன.

மீண்டும் நாளை கடைசிப் பதிவில் காண்போமா..?
மேலும் வாசிக்க...

Friday, December 5, 2008

சில பிரபலங்கள்... சில பதிவுகள்.

லையில் இருக்கின்ற பெரும் பிரபலங்களின் வலைப்பூக்களை நான் அறிந்திருப்போம். அவற்றுடன் இன்னும் சில அவ்வளவு பரவலாகத் தெரியாத (என்று நான் நினைக்கின்ற) சில தளங்களையும் பார்ப்போம்.

பெரும்பாலும் எல்லோர்க்கும் தெரிந்ததாக இருப்பினும், புதியவர்களும் தெரிந்து கொண்டார்கள் எனில் இன்னும் தெளிவு பெறக் கூடும். அதன் மூலம் வலைப்பதிவுகளில் எப்படி நேரம் வீணாக்காமல், உருப்படியாகச் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பெற்றால், எனது குறிக்கோள் நிறைவேறிற்று என்று திருப்தியுறுவேன்.

நீல.பத்மநாபன்

தமிழில் ஓர் மூத்த எழுத்தாளர். இவரது முதல் நாவலான 'தலைமுறைகள்' தமிழின் முதன் முறையாக முழுக்க முழுக்க வட்டார மொழியைப் பயன்படுத்தி எழுதப்பட்டது. கேரள எல்லையில் வசிக்கின்ற தமிழ் மக்களின் மொழியில் எழுதப்பட்ட நாவல் வந்த காலங்களில் பெரும் கவனத்தைப் பெற்றது. இவரது 'இலையுதிர் காலம்' என்ற முதியோர் பிரச்னைகளைப் பேசும் நாவலுக்காக 2007-ம் ஆண்டு சாகித்ய ஆகாதமி விருது பெற்றார்.

தற்போது திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.

இணையதளம் :: நீல.பத்மநாபன்

வலைப்பூ :: நீலபத்மம்

ஜெயமோகன் கூறியது :

நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை

நீல.பத்மநாபன் அவர்களுடன் ஒரு சந்திப்பு.

பாலகுமாரன்

வணிக எழுத்துக்களில் பெரும் கவனத்தைப் பெற்ற படைப்பாளி, அவரது ரசிகரான கிருஷ்ண துளசி கேட்கும் சந்தேகங்களுக்குத் தரும் பதில்களையும், சில கட்டுரைகளையும் இந்த வலைப்பூவில் காணலாம்.

பாலகுமாரன் பேசுகிறார்


பா.ராகவன்

சொல்லவே வேண்டாம். உலக வரலாறு, தீவிரவாதம் மேல் ஒரு தீவிரமான ஆர்வம், ஆசை கொண்டு பெரும் புத்தகங்களை எழுதும் பா.ராகவன், எழுதும் இப்போதைய ஹாட் கேக், 'யுத்தம் சரணம்'. இவரது வலைத்தளத்தில் எனக்குப் பிடித்தவை மாமி மெஸ் பற்றிய இவரது வர்ணனைகளும், வீடு மாற்றிப் போன அனுபவங்களும்!


மாலன்

எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான மாலனின் வலைத்தளம். தேர்தல் நேரங்களில் அவர் பேசுவதைத் தொலைக்காட்சிகளில் காணலாம். அதே போன்ற அமைதியான நடையில் எழுதுகிறார்.

சுதாங்கன்

இந்தப் பெயர் எனக்கு முதலில் பரிச்சயமானது, தினமணி கதிரில்! அப்போது அதில் பொறுப்பில் இருந்தாரா அல்லது ஏதேனும் எழுதிக் கொண்டிருந்தாரா என்று நினைவில்லை. ஆனால், ஆனந்த விகடனில் கல்லூரிப் பத்திரிக்கையாளர் திட்டத்தைக் கொண்டு வந்ததில் இவருக்குப் பெரும் பங்கு இருந்தது என்பார்கள்.

நெல்லை கண்ணன்

பட்டிமன்றங்கள் வாயிலாகப் பிரபலமான இவர் எழுதிய வெண்பாக்கள் இந்த வலைத்தளத்தில் நெருக்கியடிக்கின்றன.

சாரு நிவேதிதா

கலகக்கார எழுத்து என்று சொல்கிறார்கள். இவர் எழுதியவற்றில் படைப்புகளாக ஏதும் படித்ததில்லை என்பதால் என் கருத்து என்று எதுவும் இல்லை. வலைத்தளத்தில் எழுதியவற்றில் எனக்குப் பிடித்திருந்தன, சுஜாதா - ஒரு கலாச்சார சக்தியும், ஜெயமோகனுடனான இவரது சண்டைப் பதிவுகளும்! முன்னது தமிழ் எழுத்து சூப்பர் ஸ்டாரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தேடித் தேடிப் படிக்கும் இன்பத்திற்காகவும், பின்னது ஊரார் சண்டையை எட்டிப் பார்க்கின்ற தமிழனின் மனோபாவத்திற்காகவும்!

சுஜாதா என்ற கலாச்சார சக்தி - 1

சுஜாதா என்ற கலாச்சார சக்தி - 2

சுஜாதா என்ற கலாச்சார சக்தி - 3

சாரு - ஜெ., சண்டைகள் ஜாலியாக இருக்கும். படித்துப் பாருங்களேன் ::

போய் பணி நோக்கடா மோனே!

போய் பணி நோக்கடா மோனே! - 2

மம்மி ரிட்டர்ன்ஸ்

ஜெயமோகன்

தினமும் எப்படி இத்தனை எழுதுகிறார் என்பது ஆச்சாரியத்துடனான கேள்வி. இலக்கியம் தொடர்பாக எழுதுகின்ற இவரது பதிவுகளை, எழுத்தை ரசிப்பவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். எழுதுவதில் இருக்கும் சந்தேகங்களுக்கு பதில் தருகிறார்.

இவரும் சும்மா இல்லை..! பல இடங்களில் சாரு நிவேதிதாவைக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்.

திரிச்சூரில்

ஜூவியின் பதினாறாம் பக்கம்.

சாரு

இவர்களின் அடிதடியை வைத்து நான் எழுதிய ஒரு கிண்டல் பதிவு ::

ஹைய்யா... ஜாலி...!

வினவு எழுதிய கிண்டல் :: பாரு நிவேதிதா - சுயமோகன் ஒரு லடாய் !

எஸ்.இராமகிருஷ்ணன்

நேரில் பார்த்தால் இவரைக் கேட்க வேண்டும் என்று நான் வைத்திருக்கும் கேள்விப் பட்டியலில் முதல் கேள்வி, 'நீங்கள் ஏன் உங்கள் பெயரில் 'இ' சேர்த்துக் கொள்வதில்லை'? ஊர்சுற்றியான... ஓ.. ஓ.கே..ஓ.கே.. தேசாந்திரியான (:)) இவரின் எழுத்துக்கள், பல பயண அனுபவங்களைத் தருகின்றன. என் நண்பன், எனது சில கவிதைக் கட்டுரைகளில் இவரது தாக்கம் இருக்கின்றது என்பான். உலகத் திரைப்படங்களை நகநுனியில் வைத்திருக்கும் இவரிடம் இவ்வருட ஐ.எஃப்.எஃப்.கே. விழாவில் என்னென்ன படங்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். பதில் அனுப்பி இருக்கிறார்.

பாமரன்

கோவைக் குசும்பரான பாமரனின் நக்கல் எழுத்துக்களின் பின்னே அவரது கருத்துக்கள் தெளிவாகப் புலப்படுகின்றன.

அ.ராமசாமி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் தலைவரான இவரின் வலைப்பூ, படிக்கப் படிக்கப் பல தகவல்களைக் கொட்டிச் செல்கிறது.

தமிழ்வாணன்

தமிழ்வாணனையோ, சங்கர்லாலையோ தமிழ் வாசகர்கள் மறந்திருக்க முடியாது. லேனா தமிழ்வாணனின் இணையத் தளம். அவர்களது புத்தகங்கள் போலவே எளிமையாகக் கட்டுரைகளைச் சொல்கிறார்கள்.

தமிழச்சி

'வனப்பேச்சியான' கவிஞர் தமிழச்சியின் வலைப்பூவில் அவரது பத்திரிக்கைப் பேட்டிகள் மட்டுமே இருக்கின்றன. வேறு வகையான கட்டுரைகள் இல்லை. அரசியலில் நேரடியாக இறங்கியுள்ளவர். இவரிடம், 'நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள்' என்று எத்தனை பேர் சொல்ல முடியும் இப்போது..?

சேதன் பகத்

மிகச் சூடான விற்பனையில் இருக்கும் மூன்று புத்தகங்களை எழுதியிருக்கும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். க்ரேஜுவேட்டான சேதன் பகத், இப்போது அடுத்த நாவலுக்கான தயாரிப்பில் ஆழ்ந்துள்ளதாகச் சொல்லியுள்ளதால், இப்போதைக்கு கொஞ்சம் பதிவிடுதலை நிறுத்தி வைத்திருக்கிறார்.

சுப்ரபாரதிமணியன்.

இவரது பெயர் எனக்குச் சட்டென நினைவுபடுத்துவது, வாத்தியார் குமுதத்தின் பொறுப்பாசிரியராக இருந்த போது வைத்த கதைப் போட்டியில், நகரம் - 90 என்று ஹைதராபாத் பற்றி எழுதி, ஐரோப்பிய டூர் சென்று வந்தார். ஏர் - இந்தியா ஸ்பான்சர். நான் கூட ஏதாவது எழுதி அனுப்புவோமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். என்னால் ஏன் மறக்க முடியவில்லை என்றால், முதலில் 'கர்ஃப்பியூ' என்ற வார்த்தை அந்தக் அக்தையில் தான் அறிமுகமாயிற்று.

சத்யராஜ்குமார்.

ராஜேஷ்குமார் நாவல், கதை தலைப்புகள் (மூன்று நொடி முத்தம்!) போலவே தோன்றுகின்ற இவரது கதைகள் பல வகைப்பட்டவை. என்ன தான் யோசித்தாலும் இவரது முகம் நடிகர் சத்யராஜ் போல இருப்பதாக கற்பனை செய்ய முடிவதை தடுக்க முடிவதில்லை.

டாக்டர்.ருத்ரன்

மனோதத்துவ மருத்துவரான இவர் ஆங்கிலத்தில் எழுதும் வலைப்பதிவு.

டாக்டர்.ஷாலினி

இவர் எழுதிய 'ஆண்களைக் கையாள்வது எப்படி?' என்ற பதிவு எனக்கு பிடித்திருந்தது.

சின்மயி

பாடகியும், நிகழ்ச்சி நடத்துனருமான சின்மயி எனக்கெல்லாம் சீனியர். 2005-ல் இருந்து வலைப்பதிவு நடத்தி வருகிறார்.

உமர் அப்துல்லாஹ், Dr.மஹாதீர் மொஹம்மத், ஆமிர் கான் ,Big B , அனுராக் காஷ்யப் , இராம் கோபால் வர்மா ,ரேவதி என்று பல பிரபலங்கள் தனி வலைப்பதிவுகளோ, தளமோ வைத்து ரசிகர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள விழைவதை வரவேற்கலாம்.
மேலும் வாசிக்க...

Thursday, December 4, 2008

ச-மையல்..!

ழுத்துக்களில் வசீகரமான வகை ஒன்று இருக்கிறது.

எப்படியும் முழுதாகப் படிக்க வைத்து விடும். பிடிக்கின்றதோ, இல்லையோ..! அப்படி சில வலைப்பதிவுகளைப் பார்ப்போம்.

அ. ஜெகத் எழுதும் கைமண் அளவு. தெளிவான நடை. பிசிறடிக்காத ஒரு சாக்ஸ்போனின் குரல் போல இவரது பதிவுகள் இருக்கின்றன. சொல்ல வந்த கருத்தை துல்லியமான தகவல்களோடு தருகிறார். ஏற்பதும், மறுப்பதும் வேறு..! தெளிவான, வழுக்கல் இல்லாத நடை பார்க்க விரும்பினால், இங்கே பார்க்கலாம்.

ஆ. பி.கே.பி. பற்றி சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். முக்கியமாக அவர் கொடுக்கின்ற பிடிஎஃப் இலவசங்களுக்காகவே அவரது பதிவுகளைப் பார்த்து வந்தவர்கள், அவரது வார்த்தைகளை வசதியாக காணாமல் விட்டிருந்தால், நல்ல சில அனுபவங்களை தவற விட்டவர்கள் என்பேன்.

பி.கே.பி.

இ. 'அவார்டா கொடுக்கறாங்க'

இப்படி ஓர் அதிசயமான தலைப்பை வைத்துக் கொண்டு தமிழ்த் திரைப்படங்களை அலசிக் காய வைத்து, கதை பேசுகின்ற வலைப்பதிவு, சுவையானதொன்று. சமீபத்தில் இயக்குநர் ஸ்ரீதர் மறைவிற்கு பக்ஸும், ஆர்.வி.யும் எழுதிய பதிவுகள் இவர்களது ரசனைத் திறம் பற்றிச் சொல்கின்றன.

மிழ் மக்களுக்கு மட்டும் அல்ல, மானிடர் எல்லோர்க்கும் முதலில் சமையல்; பின் தான் மையல். பசி வந்திடப் 10ம் பறந்து போகும் என்றனர். 'ஒருவன் இதயத்தை அவன் வயிற்றின் மூலம் அடையலாம்' என்று பைபாஸ் ரூட் சொன்னார்கள். 'உப்பிலாப் பண்டம் குப்பையிலே; உப்பிருக்கும் பண்டம் தொப்பையிலே' என்பது பழைய கோகுலம் ஜோக். பந்தியில் யாருக்கு முதல் பந்தி என்பது கல்யாணங்களில் அடிதடி வரை போகும். செல்லப்புட்டியைக் காணாமல் தேடும் காமராஜனிடம், 'நீங்களும் குக்; உங்க கிராமமும் குக்கா..?' என்று திரிபுரசுந்தரி க்ரேஸி மோகன் டயலாக் சொன்னார். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கோவையிலிருந்து அடையாறில் கிளை பரப்ப, முருகன் இட்லி கடை மதுரையில் இருந்து, பெசன்ட் நகருக்கு ஒரு ஆபீஸ் போட, சரவண பவன் டெல்லி, என்.ஜே. என்று இறக்கை விரிக்கிறது. 'சாப்பாட்ல கை வெச்சப்புறம் துரத்திர இல்ல; நீ அழுதுகிட்டே போடற பந்திக்கு வர்றேன்' என்று பரதேசி சபதம் போட்டு விட்டுச் சென்றான். நாஞ்சில் நாடனின் கட்டுரைகளில் உணவு முறைகள் பற்றியும், தொலைந்து போன கம்பு, கேழ்வரகு பதார்த்தங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இரவு ரெண்டு மணிக்கும் கல்லில் குத்தி மைதா பிசைந்த புரோட்டாவும், சிக்கன் குருமாவும் கிடைக்கும் ஆரப்பளையம் பஸ் ஸ்டேண்டும், புழுக்கை எழுத்துக்களில் முன் பேர் எழுதி விட்டு, பெரிதாக 'சாந்தி ஸ்வீட்ஸ்' என்று எழுதி ஏமாற்றி அல்வா கொடுக்கும் நெல்லை சென்ட்ரல் பஸ் ஸ்டேண்டும், தேங்காய் எண்ணெய் பொறித்த சிப்ஸ் மணக்கும் திருவனந்தபுரம் நிலையமும், பின்னிரவு ரெண்டு மணிக்கும் புழுங்கித் தள்ளும் பாரீஸ் கார்னர் டீக் கடைகளும் இதுவரை நான் கண்ட இரவு நேர அட்சயப் பாத்திரங்கள்.

அ. தூயாவின் சமையற்கட்டு.

எங்கள் ஊர்ப்பக்கங்களில் சமையல் அறையை சமையக்கட்டு என்று தான் சொல்வோம். அப்படியே இவரும் சொல்கிறார். வறட்சியாகச் சமையல் குறிப்புகளை மட்டும் சொல்லாமல், சுவையாக எழுத்துக்கள் வழியாக அவற்றைப் பரிமாறவும் செய்கிறார்.

அ. ரஜ்மியின் ரெசிப்பிஸ்.

வீட்டுத் தலைவியான ரஜ்மி அவர்கள் கொடுக்கின்ற சமையல் முறைகள். ஆங்கிலத்தில் எழுதிய வரை குறைவாக எழுதியவர், தமிழில் எழுதும் நுட்பம் தெரிந்தவுடன், பலப்பல பதார்த்தங்களாக எழுதிக் குவிக்கிறார்.

இ. சமைத்துப் பாருங்க என்கிறார் ஜெர்மனியில் வசிக்கும் கட்டுமான நுட்பரான ராகினி. மிகக் குறைவாகவே எழுதி இருந்தாலும், இவர் எழுதுகின்ற பதிவுகளின் எண்ணிக்கையைப் பார்த்த போது,'அடங்கொக்கமக்கா; என்று கூவி விட்டேன். இவரது சமையல் குறிப்பில் 'ஆட்டு இறைச்சி வடை' மிகவும் கஷ்டமான ஒன்றாக இருக்கின்றது.

ஈ. 'தாளிக்கும் ஓசை'

எல்லோர்க்கும் தெரிந்த ஆள் தான். ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். இவரது சமையல் குறிப்புகளோடு, சளைக்காது போட்டி போடும், கலாய்த்தல் குறிப்புகள். 'மரத்தடி ஜெயஸ்ரீ' என்று பெயர் வருமளவிற்கு மரத்தடி குழுமத்தில், 'சுஜாதா சூறாவளி'யையே உருவாக்கியவர். வாத்தியார் மறைவிற்குப் பின் இன்னும் இவர் எதுவும் எழுத வராமல் இருக்கிறார். கூடிய விரைவில் ஆறுதல் பெற்று வர வேண்டுகிறேன்.
மேலும் வாசிக்க...

குற்றம் - The Wrong Thing.

மூன்று தினங்களாகப் பதிவுகளாகப் பார்த்துக் களைத்துப் போனவர்களுக்காக, எனது முதல் நாடக முயற்சி.

ஒரே ஓர் ஆள் மட்டும் வைத்து ஒரு நாடகம் எழுத முயன்றிருக்கிறேன். எனது தனி வலைப்பதிவில் இட்டால், என்னையும், என் அம்மாவையும் தவிர இன்னும் மூன்று பேர் (மட்டும்) பார்ப்பார்கள். 'வலைச்சரம்' பொது இடத்தில் வைத்தால், பலர் வந்து பார்த்து கருத்து சொல்லுவார்கள் என்று நம்புகிறேன்.

***

(மேடை முழுதிலும் இருள். மையத்தை நோக்கி மெல்ல ஒரு ஒளிக் கற்றை பாய்ச்சப்படுகிறது. அதில் ஒரு முகம் தெரிகின்றது. முகம் மட்டும், மற்றபடி மேடை இருளாக இருக்கின்றது. வயதான முகம். ரிட்டையர்ட் ஏஜ். ஆனாலும் கம்பீரமான முகம். அரங்கத்தைப் பார்த்துப் பேசுகிறார்.)

ஆசாமி : நான் ரங்கராஜன். ரிட்டையர்ட் போலீஸ். பொள்ளாச்சி, நெல்லை, பாபநாசம், அந்தியூர், நாகர்கோவில் என்றெல்லாம் மாறி விட்டு செங்கல்பட்டில் கடைசியாக உதிர்ந்த போது, என்ன போஸ்ட் என்பது முக்கியமில்லாத ஒன்று. பேரன்களோடு விளையாடும் வயதிலும் சில கேஸ்கள் என்னைத் தேடி வரும். கெளரவக் காரணத்தால் வெளியே சொல்லக் கூடாத பிரச்னைகளை நான் தீர்த்து வைப்பேன் என்ற நம்பிக்கையில் தரப்படுபவை. நானும் முடிந்த வரை முயல்வேன்...வெளியே சொல்லாமல் இருக்க! இப்போது சொல்லப் போகும் கேஸ் அப்படி மூடி மறைக்க வேண்டிய கட்டாயம் இல்லாத ஒன்று. சம்பந்தப்பட்ட பெயர்கள் மாறி இருக்கும். ஆனால் சம்பவம் நம் தினவாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளின் மற்றொரு வடிவம்.

போகலாமா..?

(மெல்ல மெல்ல மேடை வெளிச்சம் ஆக்கப்படுகின்றது. முகத்திற்குச் சொந்தக்காரர் பேப்பர் குனிந்து பேப்பர் படிக்கத் தொடங்குகிறார். அவர் ஒரு சோபாவில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் ஒரு சின்ன மேஜை. அதில் செல்போன். சில பேப்பர்கள். பேப்பர்களின் மேல் வெய்ட்டுக்காக
ஒரு பேனா. வலது பக்கம் ஒரு அறைக்குச் செல்லும் திறப்பு. இடது பக்கம் பின்புறமாக ஓர் அறை. இரண்டு அறைகளின் முகங்களிலும் ஸ்க்ரீன்கள். ஒன்றில் பூக்கள் வரையப்பட்டிருக்கின்றன. மற்றொன்றில் இரண்டு யானைகள், பூத்தூவ, நின்ற கோலத்தில் சரஸ்வதியின் ஓவியம். ஒரு மூலையில் ஒரு மேஜை. அதில் ஒரு ப்ளாஸ்டிக் பூஜாடி. சுவரில் ஒரு காலண்டர். பின்புற அறை சமையலறை போல், குக்கர் விசில் சத்தம் கேட்கின்றது. வலது புற அறையில் இருந்து விதம் விதமான சேனல் சத்தங்கள் வருகின்றன. ஓர் இயல்பான குடும்பச் சூழல். ஆசாமி ஆர்வமாகப் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார்.)

ரங்கராஜன் : ஓஹோ..! அடடே..! அப்படியா..? ம்ம்ம்...! (பக்கத்தைப் புரட்டுகிறார்..!) இப்படி வேற நடக்குதா..? கலி காலம் தான்.

(அப்போது பக்கத்தில் வைத்திருக்கும் செல்போன் அடிக்கிறது. பேப்பரை மடித்து வைத்து விட்டு செல்போனை எடுத்து நம்பரைப் பார்க்கிறார்.)

ர : அட, நம்ம விசு..!

(காதருகில் வைத்து பேசத் தொடங்குகிறார். மைக் அவர் காலரில் இருந்தால் நல்லது. பார்வையாளர்களுக்கு அவர் பேசுவது மீத் தெளிவாகக் கேட்க வேண்டும். ஒவ்வொரு வசனத்திற்கும் இடையே மூன்று, நான்கு வினாடிகள் இ டை வெ ளி விட வேண்டும்.)

ர : ஹலோ..! ரங்கராஜன் ஸ்பீக்கிங்..! யாரு, விசுவா..?

...

ர : நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க..? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க..? உன் பிஸ்னெஸ் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு..?

...

ர : சந்தோஷம். கடைசியா எங்க பார்த்தோம்..? பாலனோட பொண்ணு மேரேஜ்ல, இல்லியா..? ஒரு மாசம் முன்னாடி..! ஆமா, இப்ப என்ன விஷயம் சொல்லு..! காரணம் இல்லாம போன் பண்ண மாட்டியே நீ!

...

ர : பின்ன, பிஸ்னெஸ்மேன் ஆச்சே..! ஏதாவது ஒரு காரணம் இருக்கணுமே..! ஒரு நிமிஷம் இரு..!

(இடது பக்கம் திரும்பி, கிச்சனைப் பார்த்து)

சாந்தி, கொஞ்சம் அந்த பால் குக்கரை அடக்கும்மா..! ஒரு முக்கியமான கால் பேசிட்டு இருக்கேன்.

(பால் குக்கர் விசில் நிறுத்தப்பட வேண்டும்.)

இப்ப சொல்லுடா. என்ன விஷயம்..?

...

ர : ஓ..! அப்படியா..? எவ்ளோ பவுன்..?

...

ர : எவ்ளோ நாள் ஆச்சு? போலீஸ்கிட்ட கம்ப்ளெய்ண்ட் கொடுத்தியா...?

...

ர : ஏண்டா... திருட்டுப் போய்... ஸாரி...உன் வார்த்தைகள்ல காணாமப் போய் ஒரு வாரம் ஆகி இருக்கு..? இன்னும் கம்ப்ளிய்ண்ட் பண்ணாம இருக்கறது நல்லதில்ல.

...

ர : சரி. உன் பிரச்னை புரியுது. வெளியே தெரிஞ்சு போனா, பேர் பாதிக்கும்னு சொல்ற. நான் என்ன பண்ணணும்னு எதிர்பாக்கற..?

...

ர : குடும்பத்திலேயே யாரோ எடுத்திருக்கலாம்னு சொல்ற. நீயே எல்லாரையும் கூப்பிட்டு வெளிப்படையா பேசலாமே! 'த பாருங்கப்பா..! எனக்கு நகை போனது முக்கியம் இல்லை. பட், நம்ம ஃபேமிலிக்குள்ளயே ஒரு திருட்டு நடக்குதுனு வெளிய தெரிஞ்சா எல்லார்க்கும் அவமானம். நீங்களே சொல்லிடுங்க. யாரு எதுக்கு செலவு பண்ணிணீங்கனு சொல்லிடுங்க'னு கேட்டுப் பாரு.

...

ர : சரி, விடு! என் கிட்ட குடுத்திட்ட இல்ல, கவலைப்படாத, நான் பாத்துக்கறேன்.

...

ர : அட, தேங்ஸ் எல்லாம் ஃப்ரெண்ட்ஸ்குள்ள எதுக்கு! சரி, என்கொயரியை ஆரம்பிச்சுடறேன். உனக்கு யார் மேல சந்தேகம்?

...

ர : போப்பா..! என்ன இருந்தாலும் பெத்த பையன் மேல போய் யாராச்சும் சந்தேகப்படுவாங்களா..?

...

ர : உனக்கும், அவனுக்கும் ரிலேஷன்ஸ் சரி இல்லைனு நினைக்கறேன். அதான் இவ்ளோ காட்டமா பேசற. நான் முன்னாள் போலீஸ்காரன். எல்லார் மேலயும் எனக்குத் தான் சந்தேகம் வரணும். உன் பையன் விஜய், பொண்ணு அனிதா, வொய்ஃப் லக்ஷ்மி... வீட்டு வேலைக்காரி பேரென்ன...(கொஞ்சம் இடைவெளி விடுகிறார்.) அஞ்சலை... எல்லோரையும் என்கொயரி பண்ணப் போறேன். டோண்ட் வொரி மேன். கண்டுபிடிச்சரலாம்.

...

ரா : எனக்குத் தெரியாதா..? உங்க ரிலேஷன்ஸை கெடுத்திடற மாதிரி என் விசாரணை இருக்காது. ஐ ஏம் ஷ்யூர் எபவுட் திஸ். ஓ.கே..? டன். நீ என்ன செய்ற..? இந்த லிஸ்ட்ல இருக்கற எல்லாரோட மொபைல் நம்பரையும் எனக்கு மெஸேஜ் பண்ணிடு. அஞ்சலைகிட்ட செல் இருக்கா..?

...

ரா : நல்லது. ஏழைக்கேத்த எலிஃபெண்ட். வெச்சிடறேன்.

(மொபைலை வைத்து விடுகிறார். முகவாயைத் தடவிக் கொண்டு யோசிக்கிறார். பேப்பரைப் புரட்டுகிறார்.)

ர : ஓ..! பவுன் இவ்ளோக்கு வந்திடுச்சா...?

(மனதுக்குள் கணக்கு போடும் பாவனையை முகத்தில் காட்டுகிறார். மொபைலை எடுத்து ஒரு கால் செய்கிறார். காத்திருந்து பின்...)

ர : ஹலோ, குமரனா..? நான் தான் ரங்கராஜன் பேசறேன்.

...

ர : குட்மார்னிங்..குட்மார்னிங்..! ஸ்டேஷனுக்குப் போய்ட்டீங்களா..? இல்லை எங்கயாவது ட்யூட்டி போட்டிருக்கா..?

...

ர : ஜாக்கிரதையா இருங்க. அந்த ஏரியால மைன் பாம்ஸ் இருக்கறதா கேள்விப்பட்டிருக்கேன். ஜமுனா எப்படி இருக்கா? பொண்ணு என்ன சொல்றா..?

...

ர : ஓ.கே. எனக்கு ஒரு சின்ன வேலை பண்ணனும் நீங்க..?

...

ர : ஒண்ணும் பெரிசா இல்ல. போன ஒரு வாரத்துக்குள்ள சிட்டிக்குள்ள எந்த நகைக் கடையிலயாவது எழுபத்தஞ்சு பவுன் நகை விற்கப்பட்டிருக்கா இல்ல அடகு வெச்சிருக்காங்களானு ஒரு தகவல் வேணும். ஒரு சின்ன விசாரணைக்கு.

...

ர : இல்ல, அவங்க கம்ப்ளெய்ண்ட் எல்லாம் குடுக்கல. ஃபேமிலிக்குள்ள டவுட் பண்றார். அதனால் போலீஸ் வரைக்கும் போக வேணாம்னு இருக்கார். நான் சைலண்டா இதை டீல் பண்றேன். நீங்க இத மட்டும் கொஞ்சம் விசாரிச்சு சொன்னா சந்தோஷம்.

...

ர : அவ்ளோ நேரம் ஆக வேண்டியதில்லைனு நினைக்கறேன். சிட்டிக்குள்ள இவ்ளோ பெரிய அளவுக்கு நகைகளை டீல் பண்றவங்க ரொம்ப கம்மி. செளகார்பேட் சேட்களை எல்லாம் விடுங்க. என்கொயர் டைரக்ட்லி தி ஜூவல்லரி ஷாப்ஸ். எனக்கு கொஞ்சம் அர்ஜெண்ட்டா இன்ஃபர்மேஷன் வேணும். நம்ம கையை விட்டு ஜூவல்ஸ் போயிடக் கூடாது. அஞ்சு நிமிஷம். அதுக்குள்ள முடியும், பாருங்க.தேங்க்ஸ். வெச்சிடறேன்.

(மொபைலில் மெஸேஜ் டோன் கேட்கிறது. எடுத்துப் பார்த்து, பக்கத்தில் இருக்கும் டேபிளில் இருந்து பேப்பரையும் பேனாவையும் எடுத்து, மொபைலைப் பார்த்து, பேரையும், செல் எண்ணையும் குறிக்கிறார். ஒரு எண்ணை கால் செய்கிறார்.)

ர : ஹலோ விஜய்! ஹவ் ஆர் யூ...?

...

ர : அங்கிள் இஸ் ஃபைன். எவ்ரிஒன் இஸ் ஃபைன். வேர் ஆர் யூ நவ், மை யங் மேன்..?

...

ர : குட். ஷட்டில் இஸ் குட் ஃபார் ஹெல்த். சரி, உனக்கும் அவனுக்கும் டெர்ம்ஸ் சரி இல்லையா..? போன் பண்ணி புலம்பறான்.

...

ர : அது ஜென்ரேஷன் கேப், விஜய். உனக்கே தெரியுமே...? நான் அருண்கிட்ட எவ்ளோ சண்டை போட்டிருக்கேன் தெரியுமா..?

...

ர : இல்ல. நீ வந்து உன் ஃப்ரெண்ட்கிட்ட கேட்டுப் பாரு. அவனும் என்னைப் பத்தி இதே மாதிரி தான் குறை சொல்லுவான்.

...

ர : எல்லாம் உங்க மேல இருக்கற அக்கறையினால தான். ஓ.கே. ஸ்டடிஸ் தவிர மத்தபடி உனக்கும் அவனுக்கும் எதுவும் க்ளாஷ் இல்லையே..? பாக்கெட் மணி எல்லாம் ஒழுங்காத் தர்றானா...?

...

ர : அது போதும். ஓ.கே. பை. அவன் கூட அளவா சண்ட போடு. பி.பி.பேஷண்ட் அவன். ஷுகர் இருக்கு. டேக் கேர். பை.

(குறித்து வைத்த சீட்டில் ஒரு டிக் செய்கிறார். கொஞ்ச நேரம் யோசித்து விட்டு, மீண்டும் கால் செய்கிறார்.)

ர : ஹலோ..! அனிதா..! நான் தான்...

...

ர : ஸ்வீட் கேர்ள். எஸ்..! அங்கிள் ரங்கு தான் பேசறேன். எங்கம்மா இருக்க..? சல்ஸா க்ளாஸா..? ஹார்ஸ் ரைடிங்கா..?

...

ர : குட்..! நான் எதுவும் டிஸ்டர்ப் பண்ணிடலையே...?

...

ர : ஓ.கே..! இப்ப எதுக்கு ஃபோன் பண்ணிணேன்னா, உங்க டேடிக்கும், விஜய்க்கும் இடையில பிரச்னைகள் இருக்கா..? சரியாகவே பேச மாட்டேங்கறாங்க ரெண்டு பேரும்..?

...

ர : இவனைக் கேட்டா அவன் மேல குறை சொல்றான். அவன் இவன! நார்மல் ஃபாதர் சன் க்ளாஷ் தான..? வேற எதுவும் சீரியஸா இல்லையே..?

...

ர : ஓ.கே.டா. அங்கிள் அப்புறமா கால் பண்றேன். டேக் கேர்.பை.

(வைத்து விட்டு அடுத்த டிக் செய்கிறார். கால் வருகின்றது.)

ர : சொல்லுங்க குமரன். விவரம் தெரிஞ்சிடுச்சா..?

...

ர : ஓ...! என்னிக்கு...? யார் வந்தாங்களாம்..?

...

ர: ஓஹோ..! அதுவும் அப்படியா..? ஓ.கே. தேங்க்ஸ் ஃபார் தி டைம்லி ஹெல்ப், குமரன்.

...

ர : இல்ல. வேணாம். நானே பாத்துக்கறேன். அவர் தான் கம்ப்ளெய்ண்ட் பண்ணலைன்னு சொல்லிட்டாரே..? அதுக்கப்புறம் நாம எப்படி ஏக்ஷன் எடுக்க முடியும்..? மோர் ஓவர், எனக்கு இன்னும் கொஞ்சம் குழப்பம் இருக்கு. நீங்க சொன்னவங்க அதைத் திருடித் தான் அடகு வெச்சிருக்கணும்னு இல்ல. ஐ வில் டேக் கேர் அபவுட் திஸ். ஓ.கே. வெச்சிடறேன்.

(காலை கட் செய்கிறார். தீவிரமாகக் கொஞ்ச நேரம் யோசிக்கிறார். குறித்து வைத்திருந்த எண்களை மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு, மீண்டும் செல்போனில் கால் செய்கிறார்.)

ர : அஞ்சலை..! நான் உன் முதலாளியோட ஃப்ரெண்ட் பேசறேன். ரிட்டையர்ட் போலீஸ் ஆபீஸர். இரு.. பதறாத..! இப்ப எங்க இருக்க..?

...

ர : நல்லது. நான் ஒரே ஒரு கேள்வி கேக்கறேன். உண்மையான பதில் வந்திச்சுனா ஒண்ணும் செய்ய மாட்டேன். பொய்யோட வாசம் கொஞ்சம் அடிச்சாலும், கால்கள்ல முட்டினு ஒரு ஏரியா இருக்காது. என்ன சொல்றியா..?

...

ர : ஒரே கேள்வி..? எழுபத்தஞ்சு பவுன் நகையை ஏன் நீ திருடினே..?

...

ர : இல்ல. இது நடிக்கறதுக்கான நேரம் இல்ல. நீ அடகு வெச்ச டி. நகர் ஷாப்ல அன்னிக்கு என்ன கலர் ரிப்பன் கட்டிட்டுப் போயிருந்தங்கறதுல இருந்து எல்லா தகவலும் தெரிஞ்சிடுச்சு. 'இல்ல.. தெரியாது'னு சொல்றதுல அர்த்தம் இல்ல. எனக்கு ஒரே ஒரு உண்மை தெரிஞ்சா போதும். நீயா இந்த வேலையச் செஞ்சியா இல்லை யாராவது செய்யச் சொன்னதாலா..? ஏன்னா எனக்கு நம்பிக்க இருக்கு. நீயா செய்யல. அப்படி செய்யறவளா இருந்தா நகைகளை அடமானம் வெச்சிருக்க மாட்ட. வித்திட்டு ஊர விட்டே ஓடிப் போயிருப்ப. மறுபடியும் அங்கயே வேலை பாக்கறத வெச்சுப் பார்த்தா, இதுல தெரியாம நீ மாட்டிக்கிட்டனு தான் தோணுது. உஷ்...! அழக் கூடாது. யாரு உங்கிட்ட நகைகளை கொடுத்தா..? அத மட்டும் சொல்லிடு.

...

ர : ஆகாது. அவங்களுக்கு எதுவும் ஆகாது. நான் கேரண்டி.ம்.. சொல்லு..!

...

ரா : ஓ..! எதிர்பார்த்தது தான். சரி. இப்ப ஒண்ணு செய். இனிமேல் அந்த வீட்ல காட்டிக் குடுத்திட்டமேன்னு குற்ற உணர்ச்சியோட நீ வேல செய்ய வேணாம். மனிதர்களைப் பத்தி உனக்குத் தெரியாது. அவங்களுக்கு சாதகமா இருக்கற வரைக்கும் தான் ஒத்துப் போவாங்க. இல்லாட்டி கழிச்சுக் கட்டிடுவாங்க. அவங்களே உனக்கு திருட்டுப் பட்டம் கட்டி அனுப்பினாலும் அனுப்பிடுவாங்க. அதுக்காக கவலப்படாத. அந்த வேலய விட்டுடு. என்னிக்கு உன்னை வீட்டை விட்டு அனுப்பறாங்களோ அன்னிக்கு எனக்கு போன் பண்ணு.. நான் வேற எடத்துல வேல வாங்கித் தரேன். இப்ப மார்க்கெட்ல இருந்து அவங்க வீட்டுக்குப் போய் வழக்கமா வேலையப் பாரு.

(போனை வைக்கிறார். அடுத்து ஓர் எண்ணைக் குறித்துக் கொண்டு கால் செய்கிறார்.)

ர : ஹலோ..! நான் தான் ரங்கராஜன் பேசறேன்.

...

ர : fine. நீங்க நல்லா இருக்கீங்களா..?

...

ர : ஆமா, சும்மா இல்ல. காரணம் இருக்கு. உங்களுக்கு திடீர்னு எழுபத்தஞ்சு பவுன் நகைய அடமானம் வெக்கற அளவுக்கு என்ன தனிப்பட்ட வகை கஷ்டம்..? அவன்கிட்ட கேட்ட குடுக்க மாட்டானா..? வீட்ல யாருக்கும் தெரியாம அப்படி என்ன திரைமறைவு வேலைகள்..?

...

ர : இருங்க. அழாதீங்க. எல்லாம் தெரிஞ்சிடுச்சு. எனக்கு மட்டும் தான் தெரியும். அவனுக்குத் தெரியாது. உங்க வேலைக்காரிகிட்ட குடுத்து விட்டு, ரகசியமா பணம் வாங்கி... எதுக்கு இதெல்லாம்..?

...

ர : என்கிட்ட நீங்க தைரியமா சொல்லலாம். என்னை விட்டு எங்கயும் வெளிய போகாது. எனக்குள்ள மட்டும் இருக்கும். உங்களுக்கு நினைப்பிருக்கானு தெரியல. ஒரு தடவ ரெண்டு ஃபேமிலியும் மூணாறு டூர் போனப்ப, என் கைல ராக்கி கட்டி விட்டீங்க. இருபது வருஷத்துக்கு முன்னாடி. அதுக்கு அர்த்தம் தெரியும் இல்லையா..?

...

ர : சொல்லுங்க. (நீண்ட மெளனம்.) இதை எல்லாம் நீங்க முன்னாடியே போலீஸ்கிட்ட சொல்லி இருக்கலாம். அட்லீஸ்ட் என்கிட்டயாவது..! fine. இப்பயும் ஒண்ணும் காரியம் கெட்டுப் போயிடல. அந்த ஆள, உங்க மாமானு தான சொன்னீங்க... மூணே நாள்ல கண்டுபிடிச்சு, குடுக்கற எனிமால இனிமேல உங்க வழிக்கே வராம பண்ணிடலாம். அவன்ட்ட இருந்து பணத்த மறுபடியும் வாங்கி, நகைய மீட்டிடலாம்.

...

ர : கண்டிப்பா அவனுக்கு டவுட் வரும். காணாம போன நகை எப்படி திடீர்னு திரும்பி எப்படி வந்திச்சுனு அவன் கேட்பான். நான் சொல்ற மாதிரி சொல்லுங்க. உங்க வீட்டு வேலைக்காரி அஞ்சல தான் நகையைத் திருடிட்டு போய் அடமானம் வெச்சிருக்கா. சமயம் பாத்து வேலய விட்டு ஓடிப் போக திட்டம் போட்டிருந்தா. யதேச்சையா கண்டுபிடிச்சுட்டேன். நகை எல்லாம் மீட்டுக் கொண்டு வந்திட்டேன்னு அவன்கிட்ட சொல்லுங்க.

...

ர : குதிக்கத் தான் செய்வான். போலீஸ்கிட்ட போறேன். கம்ப்ளெய்ண்ட் குடுக்கறேன்னு கத்துவான். குடும்ப நிலவரம் வெளிய தெரிஞ்சா மீடியாவுக்குத் தான் அவல். அதனால, வேலைக்காரிய, வேலைய விட்டு மட்டும் துரத்திடலாம்னு சொல்லிடுங்க. மீடியான்னா அவனுக்கு கொஞ்சம் பயம். ஒருதடவ போர்ட் மீட்டிங் முடிஞ்சு ஆனுவல் ரிப்போர்ட் டிஸ்ட்ரிப்யூட் பண்ணும் போது, ஒரு ஜர்னலிஸ்ட் கூட தகராறு ஆகி, இப்போ இவன் மேல ப்ரெஸ் ஒரு கண் வெச்சிருக்கு. சின்ன திரி கிடைச்சா போதும். வெடி வெச்சிடுவாங்க. இது அவனுக்கும் தெரியும். சோ ரெண்டு மூணு நாள்ல பணம் கிடைச்ச உடனே, நகைய மீட்டுக் கொண்டு வந்திடுங்க. நான் சொன்ன மாதிரி செஞ்சிடுங்க.

...


ர : இல்ல. நகை எங்கயும் போகாது. ப்ளாக் பண்ணி வெச்சிருக்கோம்.

...

ர : அழாதீங்க. இனிமேலயாவது உஷாரா இருங்க. நானும் அவன் கிட்ட சொல்லி போலீஸ் அளவுக்கு போக வேணாம்னு சொல்றேன். பணத்தை மீட்டப்புறம் உங்களுக்கு மறுபடியும் கால் பண்றேன். சரி, இப்ப வெச்சிடறேன்.

(போனை வைத்து விடுகிறார். சமையலறைச் சத்தங்கள் அமைதியாகின்றன. சேனல் குரல்கள் ஓய்ந்து மெளனமாகின்றன. ரங்கராஜன் முன்னே நிமிர்ந்து பார்க்கிறார். விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு, மீண்டும் ஒற்றைக் கற்றை ஒளி அவர் முகத்திற்கு மட்டும் பாய்ச்சப்படுகிறது. அரங்கத்தைப் பார்த்துப் பேசுகிறார்.)

ர : இது தான் நான் செய்த வேலை. பிறகு லக்ஷ்மியின் மாமாவைப் பிடித்துப் பணத்தை மீட்டு, நகையை மீட்டு, வேலைக்காரி மேல் லக்ஷ்மி திருட்டுக் குற்றம் சுமத்தி, அவளைத் துரத்தி, அவள் என் மூலமாக வேறொரு வீட்டில் வேலை செய்கிறாள்.

இதில் எத்தனை பேரை நான் ஏமாற்றி இருக்கிறேன்? விசு, அவன் மனைவி லக்ஷ்மி, வேலைக்காரி அஞ்சலை.

விசுவைப் பொறுத்தவரை, நகை திருடியவள் வேலைக்காரி. அவள் மூலமாக நகை மீண்டும் கிடைத்து விட்டது. அவளுக்குத் தண்டனை பணிநீக்கம். அவனுக்கு குடும்பத்தின் மேல் இருந்த அவநம்பிக்கை போய், மீண்டும் குடும்பத்தில் இன்பம் வீசுகிறது.

லக்ஷ்மிக்கு அவள் செய்த குற்றம் அவள் கணவனிடம் இருந்து மறைக்கப்பட்டு, நல்லவளாகவே தொடர்கிறாள். அவளுக்கு அவள் மாமன் தொல்லையும் ஒழிந்தது. பணமும், நகையும் கிடைத்தது.

வேலைக்காரி அஞ்சலைக்கு 'இப்படி தன்னை உபயோகப்படுத்தி விட்டு, தன் மேலேயே திருட்டுப் பட்டம் கட்டி, துரத்திய வீட்டிலிருந்து' விடுதலை. வேறொரு நல்ல வீட்டில் வேலை.

மூன்று பேருக்கும் சுகமான முடிவைத் தரும் வகையில் சம்பவங்கள் என்னால் டிசைன் செய்யப்பட்டன. இதில் எதுவும் தவறு நான் செய்து விட்டதாக நினைக்கவில்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் நான் செய்தது நல்லது. மொத்தமாகப் பார்த்தால், ஒரு வகைக் குரூரமாகவும் தெரியலாம். ஆனால் தனிப்பட்ட அவர்களது நன்மைகளுக்காக கலெக்டிவான செயல்முறைகள் சில சமயம் இப்படிக் கொடூரமாகத் தெரியலாம். நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா..?

(அந்த ஒற்றை ஒளிக் கற்றையும் அணைகிறது. மேடையைப் பழையபடிக்கு இருள் முழுக்க முழுக்க சூழ்கிறது.)

***

கலைவனாக நாடகம் எழுத, கற்றுத் தந்த துரோணருக்குச் சமர்ப்பணமாக, 'ரங்கராஜனை' நாயகனாக்கி இருக்கிறேன். வாத்தியாருக்கு நன்றிகள்!




நன்றி!

***
மேலும் வாசிக்க...

Tuesday, December 2, 2008

ஹே ராம், பிஸ்னெஸ், ஊர்சுற்றி.



ஹே ராம் படம் என்றால் உங்களுக்கு என்ன தோன்றுகின்றது..?

எனக்கு உடனே தோன்றுவது, அபர்ணா இடுப்பை சாகேத்ராம் கடிக்கும் 'சீன்'. மற்றும் பலருக்கும் பல காட்சிகள் நினைவுக்கு வரக் கூடும்.

ஆனால்... சிவப்பு இரத்தத்தில் கதறியபடியே சரியும் கமலின் அருகில் துள்ளும் பல்லியின் அர்த்தம் என்ன..? கல்கத்தாவில் இருந்து விலகி ஓடும் போது பாகன் இன்றி தெருவில் அலையும் யானை உணர்த்துவது என்ன..? சமஸ்தானத்தில் தழுவும் வசுந்த்ரா, நீளத் துப்பாக்கியாக மாறிக் குறிப்பது என்ன..?

தமிழில் விளக்கம் கொடுக்கிறார் ஜமாலன்.

'இதெல்லாம் எனக்குப் போதாதுங்க. பத்து ரூபாய்க்கு சாம்பார், ரசம், கூட்டு, அவியல், பொறியல், ரசம், தயிர், ஸ்வீட், பாயசம்.. இதெல்லாம் போதாதுன்னு ஒரு டம்ளர் தண்ணி வேற கேக்கற ஆளுங்க நாங்க. எங்கயாவது ஃபுல் அனலிஸிஸ் இருக்கா..?' என்று கேட்ப்வர்களுக்காக, ஆங்கிலத்தில் சீன் - பை - சீனாக அனுபவித்து, ஆராய்ந்து விளக்கம் கொடுத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன், இங்கே..! (அறிமுகப்படுத்திய நாடோடிக்கு நன்றிகள்.)

University of Iowaன் இணையத் தளத்தில் Philip Lutgendorf சொல்லும் சில கருத்துக்கள், இங்கே..!

லகப் பொருளாதாரச் செய்திகளையும், பண வர்த்தக நிலவரங்களையும், நிதி மேலாண்மை நுட்பங்களையும், பங்கு வணிக ரோலர் கோஸ்டர் விசித்திரங்களையும், நிதி நிலை அறிக்கைக் குழப்ப வார்த்தைகளையும்,கச்சா எண்ணெய்க் கச்சடாத் திருட்டுக்களையும் ஆங்கிலத்தில் அள்ளித் தெளிக்க ஆயிரம் தளங்கள் இருக்கின்றன.

தமிழில் நாம் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கின்றனவா..? முக்கியப் பத்திரிக்கைத் தளங்கள் ஒரு க்ளிக் கண்ணியாக வைத்திருந்தாலும், முழுக்க முழுக்க வணிகச் செய்திகளைத் தரும் சில தளங்களையும், வலைப்பதிவுகளையும் இனிக் காண்போம்.

நாடும், நடப்பும் - 1

தமிழ் வர்த்தகம் என்ற பெயரோடு திருமதி. பிரியா பொருளாதாரக் கட்டுரைகளை எழுதுகிறார். சில படிக்க வேண்டிய பதிவுகள் ::

கார்- டூ வீலர் விற்பனை கடும் சரிவு

யுஎஸ் பொருளாதாரம் தேக்கம்: 2007லிலேயே தொடங்கி விட்டது-குழு

இரண்டே நாளில் ரூ. 50,000 கோடி இழப்பு

வட்டி விகிதம் மேலும் 0.50% குறையும்?

டாட்டா குழும நிறுவனங்கள்-எதிர்கொண்ட சோதனைகள்

நாடும், நடப்பும் - 2

ஆச்சரியமாக இதே பெயரிலேயே மற்றுமொரு பதிவு. அதுவும் வணிகப் பதிவு. சென்னையிலிருந்து 'வெறும் பேச்சுப் பேசேல்' என்று தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ளும், 'நாட்டு நடப்பு' என்பவர் இப்பதிவில் கட்டுரைகள் எழுதுகிறார்.

பங்குச் சந்தை பற்றிய தனது அலசல்களை ஈஸ்வர் மோகன் இந்தப் பதிவிலே பேசுகிறார்.

ஜாஃப்னாவில் இருந்து இளங்கலை மாணவரான சுமன், கொஞ்சம் பொருளியல் பற்றிக் கூறுகிறார், இங்கே..!

இவர்கள் எல்லாரும் புதியவர்களே..! நாம் நிறைய பின்னூட்டம் கொடுத்தால், மேலும் ஆர்வமாக எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.

சந்தை நிலவரம்

மும்பையில் இருந்து 'மேக்ஸிமம் இந்தியா' என்பவர் எழுதும் இப்பதிவில் பிற தலைப்புகளும் காணக் கிடைத்தாலும், பங்குச் சந்தையைப் பற்றி, எக்கானமி பற்றிப் பதிவுகள் எழுதி இருக்கிறார். சமீபத்திய மும்பைத் தாக்குதல் பற்றிய இவரது இந்தப் பதிவு ஒன்றே, மும்பை மீது இவருக்கான காதலைச் சொல்கிறது.

ஷேர் ஹண்டர்

ஜோஷ் அலெக்ஸாண்டர் பங்கு மார்க்கெட் பற்றி எழுதும் கருத்துக்கள். அவ்வப்போது சிறுகதைகள், அறிவியல் கதைகள் என்று விலகினாலும், மீண்டும் மைய நீரோட்டத்தில் வந்து கலந்து கொள்கிறார்.

தமிழ் வணிகம்

முழுக்க முழுக்க வர்த்தகச் சந்தையின் அத்தனை முக்கியமான துறைகளையும் பற்றி எழுதுகின்ற தளம் இது. கண்டிப்பாகப் தினசரி பொருளாதார நிலைகளைத் தெரிந்து கொள்ளவும், பண விவகாரங்களை அலசும் கட்டுரைகளுமாக தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

வ்வொரு பெருநகரத்தில் இருந்தும், அதனைச் சுற்றிலும் உள்ள சிற்றூர், டவுன், கிராமங்களில் இருந்தும் கிளம்பிய தமிழர்கள் தம் மண்ணையும், அதன் நினைவுகளையும் மறக்க முடியாமல் ஊர்ப்பதிவுகளாகக் குழு அமைத்து எழுதுகிறார்கள். பெரும்பாலும் அனைவர்க்கும் தெரிந்திருக்கும் பதிவுகள் தான் என்றாலும், புதியவர்களுக்கு அறிமுகமாக இருக்கட்டுமே என்று இங்கே குறிப்பிடுகிறேன்.

சென்னை

கோவை

மதுரை

குமரி

புதுவை

ரிச்மண்ட்

ஹைதை தமிழ்ச் சங்கம்

மீண்டும்.. அ.பதிவில்...!
மேலும் வாசிக்க...

வெண்பா நுட்பங்கள் மற்றும் இயற்பியல் சந்தேகங்கள்.


வி அன்பர்களுக்கு...

வணக்கம்.

இந்த குழுவைப் பற்றி கொஞ்சம் பேசலாம்.

நிறைய கவிதைகள் எழுதப்பட்டு உள்ளன. எழுதியவை நன்றாக இருப்பினும், குழுவின் அடிப்படைச் சரடு 'மரபுக் கவிதை'. புதுக்கவிதையில் எளிதாக சந்தங்கள் வைத்து எழுதும் நாம், மரபுக் கவிதை பக்கமும் முயன்று பார்ப்போமே!

'கண்டபடி அசைதல் குதித்தல்;
கட்டுப்பாட்டோடு அசைதல் நடனம்'

எது பார்ப்பதற்கு இனிமையாக இருக்கும்..?

நம்மால் புதுக்கவிதை எழுத முடிகின்ற போது, கொஞ்சம் முயன்றால் மரபிலும் விளையாடலாம்.

முதற்படியாக பாக்களில் மிக எளிதான வெண்பா வகையை முயற்சித்துப் பார்க்கலாம். திரு.அகரம் அமுதா அவர்கள் மிக இலகுவாக கற்றுத் தருகிறார்,

நாம் வெண்பா எழுதத் தொடங்கி விட்ட பின், நமக்கே அதில் ஒரு சுவை உருவாகி விடும். வெண்பாவின் கட்டுப்பாடு, இலக்கணம், வரிகள் அதற்குள்ளேயே சொல்ல வேண்டும் என்ற சவால் நமக்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

உதாரணத்திற்கு சில:

பண்ணாத ரௌசெல்லாம் பண்ணிவெச்சி இன்னிக்குக்
கண்ணால முன்னா கசக்குதா -அண்ணாத்தே
ஆத்தாவந் தாலுன்னை அடுப்பில் முறிச்சிவெப்பா
போயோன் தொலைஞ்சிபோ யேன்!

-எழுத்தாளர் புதுமைப் பித்தன்.

பாலாடை மேனிகாட்டி நாகரிகம் ஈதென்று
காலாடை யேயணியும் பாவை அறிவாளோ?
கச்சணிந்து நாகரிக வாழ்வறியா ளேயறிவாள்
அச்சமடம் நாணம் பயிற்பு

-இராஜகுரு.

நேர்பிடித்து ‘கீவில்’ நிதமுமே நிண்ணாலும்
நீர்வருமோ கார்ப்பரே ஷன்குழாயில்? -பார்த்தாக்கா
காத்துவரும்; காத்தோட சத்த(ம்)வரும் நீர்க்குமிழி
பூத்துவரும் பாத்துட்டு போ!

-அகரம் அமுதா.

பங்கலா கார்கனவில் பட்டினிகள் போக்கிடலாம்
மங்கலான ஆடைபோதும் வாழ்ந்திடலாம் - அங்கங்கே
சிங்கிய டிக்கின்ற செந்தமிழா! படித்து
சிங்கார சென்னைவந்து சேர்!

-தஞ்சை இனியன்.

காதலியே காலையில்தான் கைப்பிடித்தோம் மேடைதனில்
ஆதலினால் ஆதுரமாய் அன்பிலணை - போதவிலை
இச்சமயம் இன்பத்தில் இச்இச்தா நீமற
அச்சமடம் நாணம் பயிர்ப்பு!

-இரா.வசந்த குமார்.

எளிதாகத் தானே இருக்கின்றன?

சில சூத்திரங்கள். சில முயற்சிகள். சில ஆரம்பத் தவறுகள். சில திருத்தல்கள். சில புரிதல்கள்.

போதும். பின் நாமும் வெண்பாச் சாலையில் இராஜநடை போடலாம்.

மரபுக் கவிதைகள் நமக்குப் பிடிக்கும் என்று தானே இந்தக் குழுவில் இணைந்தோம்..? பின் என்ன தயக்கம்...?

வாருங்கள்..! தாருங்கள்...!


ஆர்குட்டில் 'தமிழ் மரபுக் கவிதைகள்' குழுவில் எழுதிய ஒரு மடல்.

ப்போதும் மரபுக் கவிதைகள் எனக்கு விருப்பமான ஒன்று. மனப்பாடச் செய்யுளைப் படித்தாலே போதும் என்றிருந்தாலும், தமிழ்ப் பாடத்தின் அனைத்துச் செய்யுள்களையும் வார்த்தைகள் பிரித்து, பொருள் புரிந்து படித்துச் சுவை கொள்வது ஆனந்தம்.

இப்போதும் மனம் கொஞ்சம் கலங்கி இருக்கும் போதெல்லாம், 'மனமெனும் தோணி பற்றி..' பாடலை மனதுக்குள் சொல்லிக் கொண்டே இருப்பது, கொஞ்சம் ஆறுதல் அளிக்கும்.

இன்றைய அவசரக் காலக் கட்ட்த்தில் வார்த்தைகளைப் பிரித்துக் கொண்டிருக்க யாருக்கும் அவகாசம் இல்லை என்பதால், வாக்கியத்தை வெட்டி வெட்டி, அதைப் புதுக்கவிதை என்று சொல்லி விட்டு, 'ஆஹா..! நாமும் கவிஞன் தான்..'..!

மரபு வடிவங்களிலேயே, எளிமையாக இருப்பது வெண்பா. அதனை அகரம் அமுதா எளிமையாக தரை மட்டத்தில் இருந்தே சொல்லித் தருகிறார், இங்கே ::

வெண்பா எழுதலாம் வாங்க!

அகரம் அமுதா இலக்கிய இன்பமும் சொல்கிறார்.

இராமாயணத்தை இரகு வெண்பா என்று எளிமைப்படுத்த முயற்சி செய்யும் முகவைமைந்தனையும் பார்க்கலாம்.

சென்னைக் கல்லூரி ஒன்றில் உயிர்த்த் தொழில்நுட்பம் பயிலும் இராஜகுருவும் வெண்பாக்களாலும், சந்தக் கவிதைகளாலும் தனது பக்கத்தை நிரப்பி வைத்துள்ளார்.

இப்போது அகரம் அமுதா வகுப்பில் கற்று நான் எழுதிய சில வெண்பாக்கள். ( இப்படி பரப்பிக் கொண்டால் தான் ஆயிற்று.! :) )

எதையெழுத யென்றெண்ணி யேதுந்தோன் றாமல்
உதையேதும் வந்துவிழு தற்குமுங்க தையேதும்
நான்குவரி சொல்லிவைப்போம் நையுமன மேவருந்தா
நாளை நமதென்று நம்பு!

ஆதாரம் ஓரில்லம். ஆசையாய்க் கட்டபணம்
போதாமல் யோசிப்போர் தம்மால்மா தாமாதம்
வட்டியோட சற்கட்டும் வாய்ப்பு உறுதியெனில்
கிட்டிடும் வங்கிக் கடன்.

உணவுண்ணத் தோன்றா உடுப்பணிய எண்ணா
கனவிலுங் கூடலின்பங் கவ்வும் - தினமிரா
பாயிற் படுத்திளைக்கப் பற்றும் பசலைநோய்த்
தீயிற் கொடியதோ தீ!

"கலங்காதே வைதேகி! காற்றுமகன் கோபம்
நிலம்முழுதும் ஏற்றும் நெருப்பால், இலங்கையின்
கோஇல் எரிகிறது! கொள்அமைதி சீதைநீ
தீஇல் கொடி!...அதோ தீ...!"

ஆத்துதண்ணி அய்ரமீனு அத்தமவ அள்ளிவந்து
சோத்துமேல சூடாச் செவச்செவன்னு - ஊத்திவிட்டா!
மென்னுதின்னு கிட்டபோயி முத்தம்வைக் கப்பார்த்தா
பொண்ணொதடே துள்ளுதுமீ னாட்டம்!

மாலைகோர்க்க கூடையொடு சோலைதேடிச் சென்றநாட்சில்
மாலைவேளை, கண்ணன் மறைந்து நல் - வேலையென்று
வாயிற்முத் தங்கொடுத்தான். வாட்டுகின்ற என்விரகத்
தீயிற் கொடியதோ தீ!

யமுனைநதித் தீரத்தில் யெளவனப்போ தில்நான்
அமுதெனக்கு ழல்நாதம் கேட்டேன் - குமுதந்தான்
சாயுங்கா லக்குளிர்ச் சந்திர வெண்ணொளித்
தீயிற் கொடியதோ தீ!

ஏரோப்ளேன் ஏர்பஸ் எடுத்துச் சரித்த
பீரோபோன் மின்வண்டி பந்தாவாய்க் காரெனினும்
கைக்கிளைக் காதலியைக் கண்போற் சுமந்தெனது
சைக்கிளை எண்ணுகிறேன் நான்!

குரங்குதான் முன்னோர் குறிப்பிட்டார் டார்வின்
அரங்கை நிறைத்ததுகை தட்டல டங்கியபின்
எல்லாம் அறிவேன் எழுந்தொருவர் சொல்லிய
தில்லாளால் முன்பேயே யான்!

மேலும் ராஜா வருகை என்ற ஒரு சிறுகதைக்கு அற்புதமான கட்டுமானமாக வெண்பாக்களே அமைந்தன என்பதையும் இங்கே நன்றியுடன் கூறிக் கொள்கிறேன்.

இதைப் படித்து விட்டு ஒருவராவது மரபிலக்கியங்கள் மேல் பற்று கொண்டால், மகிழ்வேன்.

ள்ளிக் காலங்களில் இருந்தே பிடித்தமான மற்றொரு பாடம் 'இயற்பியல்'. இயல்பாகவே அதன் எளிமை மற்றும் சிந்தனையைக் குடையும் கருத்து(க்)கள் (கருத் துகள் - ப்ளாக் மேட்டர்:) ), ஈர்த்துக் கொண்டன எனில், வேதியியல் மீதிருந்த பயம், இதன் பக்கம் கொஞ்சம் சொகுசாகச் சாய்ந்து கொள்ள உதவியது. அந்தக் கதை இங்கே!

தமிழ் வலையுலகில் இயற்பியல் தொடர்பாக யாரேனும் எழுதுகிறார்களா என்று பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சியது. எளிதாக கதை, கவிதை என்று எழுதும் நம்மவர்கள் அறிவியல் என்று வரும் போது, ஜகா வாங்கி விடுகிறோம். அப்படியும் கொஞ்சம் எழுத வரும் போதும், கொஞ்சம் கதைகளை மிக்ஸ் அடித்து, அறிவியல் கதை என்று திரும்பி விடுகிறோம்.

'எங்கே ஏதேனும் தவறாக எழுதி விட்டால்..?' என்ற சந்தேகம் இதற்கு காரணமாக இருக்கலாம்.

முயற்சி செய்வதில் தவறில்லை. தவறுகளில் இருந்தே கற்றுக் கொள்வோமே..!

கனடாவில் இருந்து எழுதும் ஜெயபாரதன் அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நெடுங்காலமாக அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார். தனிப்பட்டு எதையும் சொல்ல வேண்டியதில்லை. எல்லாமே தகவல் கொத்துக்கள்.

கல்வித் துறையில் பணியாற்றும் எஸ்.இராமநாதன் சார் அவர்களும் எளிதாக இயற்பியல் பாடங்களை நடத்துகிறார். எரிமக் கலன் பற்றியும், காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் பற்றியும், பொதுவான இயற்பியல் கான்செப்டுகள் பற்றியும், சிலிக்கான் சிப்பு தயாரிக்கிறார்களே.. அது எப்படி என்றும் தனித்தனியாக அழகாகச் சொல்கிறார்.

தற்போது ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் The History of Time என்ற நூலின் எளிமையான தமிழாக்கத்தை ஒலி வடிவில் சொல்கிறார்.

சென்னையில் உள்ள இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி.) ஆசிரியர் துறையில் பணியாற்றும் அருண் சாரும் எளிமையாக சில உயர் இயற்பியல் பற்றி எழுதியுள்ளார். தற்போது அந்த வலைப்பதிவு பாதுகாப்பில் உள்ளது. எனினும், பிற்காலத்தில் திறக்கப்பட்டால் சென்று பார்க்கலாம்.

ஆங்கிலத்தில் பல பதிவுகள் இருந்தாலும் நான் தினமும் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுவது இயற்பியல் மற்றும் இயற்பியலாளர்களில் தான். இந்த வலைப்பதிவில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய மற்றும் ஒன்று, பின்னூட்டமே ஒன்று கூட வரா விட்டாலும் எப்படி தொடர்ந்து நம் பணியை நிறுத்தாது செய்வது என்பதை..!

ரு காலத்தில் மளிகைக் கடையின் முன்புறம் கொஞ்சம் சின்னதாகப் பலகைகள் பரப்பி, காய்கறிகளும் விற்பார்கள். கடையில் பெரிய சாமான்கள் வாங்கிய பின், சில்லறைத் தட்டுப்பாடு வந்து விட்டால், காய்கறிக் கடைக்குச் சென்று அந்தச் சில்லறைக்குக் காய்கறிகள் வாங்கிச் செல்வார்கள். கொசுறாக கொஞ்சம் நாலணா, எட்டணாவிற்கு கறிவேப்பிலை, கொத்தமல்லி கொத்தாகத் தருவார்கள். இன்னும் சில இடங்களில் அவை சும்மாவே தரப்படும். வாங்கிய மற்ற பெரும் பொருட்களோடு ஒப்பிட்டால், இவை சும்மா ஜுஜுபி தான்..!

அது போல, மேலே சொன்னவர்களோடு ஒப்பிட்டால் கருவேப்பிலை அளவுக்குக் கொஞ்சம் இயற்பியல் பற்றி எழுதியுள்ளேன்.

ஒளியிலே தெரிவது...

அழகிய முரண்.

பிஸிக்ஸ் - பிட்ஸ் ஸிக்ஸ்.

மீண்டும் அடுத்த பதிவில்...!
மேலும் வாசிக்க...

Monday, December 1, 2008

இலக்கியமும், TD இரண்டாம் விதியும்..!



லக்கியம் என்றால் என்ன என்பதை, குருடன் யானையைத் தடவியது போல் சொல்வதற்கு முன் Thermo Dynamics இரண்டாம் விதியைக் கொஞ்சம் பார்க்கலாம்.

விக்கியில் சென்று தெளிவான விளக்கம் பார்த்தால் கொஞ்சம் சூடு ஏறி விடும் என்பதால், சுருக்கமாக ஒழுங்கான நிலையில் இருந்து ஒழுங்கற்ற நிலைக்கு காலத்தின் திசையில் ஒரு அமைப்பு நகர்ந்து கொண்டே இருக்கும். மேஜையின் மேலிருந்து கீழே விழும் கண்ணாடி டம்ளர் சுக்கல் சுக்கலாகச் சிதறி விடும். ஆனால் சுக்கலான துகள்கள் இணைந்து ஒரு ஒழுங்கான (ஒழுங்கான என்றால், எதிர்பார்க்கப்படும் தன்மை. அதாவது இந்தப் பகுதி இங்கு தான் இருக்க முடியும் என்று சொல்ல முடிவது.) நிலைக்கு வருவது , காலம் முன்னோக்கி ஓடிக் கொண்டிருக்கும் போது சாத்தியம் இல்லாத ஒன்று.

கால அம்பு திசை மாறும் போது சாத்தியம் ஆகலாம்.

இரண்டு வெவ்வேறு நிறத் திரவங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஜாடியில் அவை கலக்கத் துவங்கும் போது, இரண்டின் மூலக்கூறுகளும் இருக்கும் பற்பல சாத்தியக் கூறுகளில் கலக்கும். அவற்றுள் ஒரு சாத்தியமான, மீண்டும் இரு திரவங்களும் தனித்தனியாகப் பிரிந்து நிற்பது மிக அதிக காலங்கள் எடுத்துக் கொள்ளும்.

இன்னும் சுருக்கமாக, எப்போதும் முந்திய தலைமுறைத் தாத்தாக்கள் சொல்லும்,"ஹூம்..! அந்தக் காலம் போல வருமா...? காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு..!" என்ற பெருமூச்சுக்கள், தெர்மோடைனமிக்ஸின் இரண்டாம் விதியைக் கொஞ்சம் ஒட்டி வருகின்றது.

நாம் ஒரு படைப்பைப் படித்து விட்டு, நமது எதிர்காலத்திற்குத் தான் நகர முடியும். இறந்த காலத்திற்குச் செல்ல முடியாது. கடந்த காலத்தின் கசப்புகள் மறைந்து, மிஞ்சி நிற்பது இனிப்புகளாக இருக்கும் போது, எந்த படைப்புகள் நம்மை நிகழ்காலக் குண்டு வெடிப்புகளையும், பவர் கட்களையும் மறக்க வைத்து, கொஞ்சம் சுகமாக நினைவலைகளில் நீந்தச் செய்கிறதோ, அவை என்னைப் பொறுத்த வரை, இலக்கியங்கள்..!

அவை ஓவியங்களாக, எழுத்துக்களாக, இசையாக, பாடல்களாக, திரைப்படமாக.. எதுவாகவும் இருக்கலாம்.

இவற்றுள் எழுத்துக்களுக்கு இருக்கும் சிறப்பு, முழுக்க முழுக்க நம் கற்பனையில் அவை வடிவம் பெறுவது தான்.

நமது கற்பனையில் வந்தியத் தேவன் பிரமிக்கும் வீர நாராயணபுர ஏரி, நாம் கண்ட கொடைக்கானல் ஏரியாக இருக்கலாம்; முள் க்ரீடம் சுமக்கும் அடைக்கலசாமி வாத்தியாரின் முகம், உங்களுக்குப் பாடம் எடுத்த தங்கவேல் சார் முகமாக இருக்கலாம்; நாலுகெட்டுக்குச் சொந்தக் காரனான அப்பு, நாயர் டீக்கடையில் டம்ளர் கழுவும் சிறுவனாக இருக்கலாம்; மாஞ்சுவின் தம்பி பாச்சா, உங்கள் தெருவில் இருந்து கிளம்பி, இப்போது எல்.ஏ.வில் இருக்கும் கோபாலாக இருக்கலாம்; இன்னும் ஜமுனாவும் பாபுவும், பரஞ்சோதியும், நந்தினியும், பரதேசியும், பாரதியின் கண்ணம்மாவும், பிரதாப முதலியாரும், கணேஷ் வசந்தும், கமலாம்பாளும், செளந்தர ராகவனும், சீதாவும், விஸ்வநாதனும் , தாரிணியும் நம் கண்களுக்கெதிரே காணும் முகங்களை மாட்டிக் கொண்டு தான் நம் மனவுலகில் வலம் வருகின்றனர்.

இலக்கியம் குறித்துப் பேசும் சில வலைத்தளங்களைப் பார்ப்போம். இதில் இருக்கும் சிக்கலானது, கொஞ்சம் இலக்கியம் பற்றியும், நல்ல புத்தகங்கள் பற்றியும் பேசி விட்டு, உடனே சாக்கை எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டு, தெரு விலக்குமாற்றில் ஏறி அமர்ந்து 'சர்'ரென்று மேலே பறக்கும் சூனியக்காரிகள் போல் தலைக்கு மேல் அமர்ந்து கன்னா பின்னா என்று பொழிகின்றார்கள்.

எனினும் 'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்ற தாத்தாவின் குரலைக் கைக் கொண்டு நல்லன மற்றும் எடுத்துக் கொள்வோம்.

யாழிசை ::

துரையில் இருந்து லேகா எழுதுகிறார். 'இயந்திர வாழ்கை நம்மை அல்லும் பகலும் ஆட்டி படைக்க ஒரே விடிவு என நான் கருதியது தமிழ் இலக்கிய வாசிப்பு...இது ஓர் இனிய இலக்கிய அனுபவ பயணம்.வாழ்வின் தேடல் குறித்து உணர செய்ய வாசிப்பு என்பது ஒரு சுகானுபவம்..' என்ற கொள்கையோடு நல்ல புத்தகங்கள் பற்றி எழுதுகிறார்.

சில பதிவுகள் ::

நீல.பத்மநாபனின் "பள்ளிகொண்டபுரம்"

வண்ணதாசனின் "நடுகை" - சிறுகதை தொகுப்பு

தி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு "சிலிர்ப்பு"

அசோகமித்ரனின் தேர்ந்தெடுத்த தமிழ் சிறுகதைகள் தொகுப்பு

தகழியின் செம்மீன் காலம் கடந்து நிற்கும் காவியம்

கோபி கிருஷ்ணனின் 'உள்ளே இருந்து சில குரல்கள்'

வடிகால் ::

சென்னையிலிருந்து சிம்ம ராசிக்காரரான, பதிப்பித்தல் துறையில், பணிபுரியும் கிருத்திகா எழுதுகிறார். அவ்வப்போது கொஞ்சம் இறங்கி வந்து எழுதினாலும், இவரது இலக்கியம் குறித்த பதிவுகள் தரம்.

மௌனியின் கதை உலகம் - ஒரு பகிர்வு

சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான் - வாசிப்பானுபவம்

எஸ். ராமகிருஷ்ணனின் - யாமம்.- உயிர்மை வெளியீடு - ஒரு பார்வை

கைகளில் சுவாசித்த புத்தகம் – குள்ளச்சித்தன் சரித்திரம்

இலக்கியவாதியின் இலக்குகள் எதுவாயிருக்க முடியும்??

வரலாறு ::

வலைச்சர ஆசிரியன் பொறுப்பேற்கும் முன்பே ஒரே ஒரு முடிவெடுத்தேன். வலைப்பூக்களை மட்டும் சொல்லிச் செல்லாமல், எடுத்துக் கொள்ளும் துறைக்கேற்ற, நாம் படிக்கும் வலைப்பூ அற்ற தளங்களையும் சொல்லி விடுவது என்று..! சீனா ஐயா கோபித்துக் கொள்ள மாட்டார் என்ர நம்பிக்கையில், அந்த வரிசையில் முத்லாவதாக, வரலாறு.காம்!

கோயில்களிலும், கோட்டைகளிலும், பழம் நூல்களிலும் தமிழின், தமிழரின் கடந்த காலத்தைத் தேடுகின்ற ஒரு குழுமத்தின், மாத இதழ். மற்ற பகுதிகளை நீங்களே சென்று படித்துப் பாருங்கள்.

சில இலக்கியப் பகுதிகள் ::

நீங்கல் சரியோ நீயே சொல்!

சொற்கள்தான் எத்தனை பொய்யானவை!

சங்கச் சிந்தனைகள் (தொடர்)

ன்றிகள். மீண்டும் அடுத்த பதிவில் பார்ப்போமா..?
மேலும் வாசிக்க...

வலைக்கு வசந்த் வந்த வரலாறு...!

சென்ற வாரம் சீனா அய்யாவிடமிருந்து தகவல் வந்தவுடன் முதலில் ஆச்சரியப்பட்டேன்.

அவ்வளவாக அறிமுகம் இல்லாத, பொதுவாகத் தமிழ் வலைத்தளங்களில் பிரபலமாக கருதப்படும் வலைப்பதிவுகளில் எதிலும் பின்னூட்டங்களில் கை வைக்காத ஒருவன். மூத்த பதிவர் என்று சீனா அய்யா கூறியுள்ளார். அதனை அளவுகோலாக வைத்துக் கொண்டு பார்த்தால், இத்தளத்திற்கு வருகின்ற பார்வையாளர்களின் வலை அனுபவ நாட்கள் புலனாவதுடன், எனக்கு கூடுதல் பொறுப்பும் இருக்கின்றது என்பதையும் சொல்கிறது.

முதலில் இரண்டு செயல்கள்.

அ. ஒரு பயங்கர நிகழ்வை முறியடித்து, தேசத்தின் பாதுகாப்பு நிலவரத்தைச் சுட்டிக்காட்டி, எல்லோரையும் உஷார்படுத்தியிருக்கும் கமாண்டோகளுக்கும், மாநகரக் காவல் துறைக்கும், இன்னுயிர் ஈந்த சகோதரர்களுக்கும் ஒரு Grand Royal Salute.

இந்நிலையில் ஓர் ஒழுங்கான வரிகட்டும் குடிமகனாக நாம் செய்யக் கூடியது என்ன..? நம்மால் செய்ய முடிகின்ற சின்னஞ்சிறு ஒழுங்குகளையும் செய்யத் தவறுவதை விடுத்தலே பெரும் பணி என்று தோன்றுகின்றது.

தெருவில் காற்றில் பறக்க குப்பை கொட்டுதல், எச்சில் உமிழ்தல், பாதி உணவோடு எழுந்திருத்தல்... எத்தனை செய்கிறோம்..? முதலில் இந்தச் சின்ன ஒழுங்கீனங்களைத் தவிர்க்க முயல்வோமே..!

இந்தச் சின்னச் சின்ன செயல்களால் ஏதேனும் பெரிய மாற்றம் வருமா...? என்று அங்'கலாய்ப்போர்', மீண்டும் தசாவதாரம் பார்க்கக் கடவதாக..! :)

ஆ. பரிசிலாருக்கு நன்றிகள்.

சரி. இப்போது கொஞ்சம் சுய கதை சொல்கிறேன்.

முதலில் வலைப்பதிவு என்ற சொல், எப்போது எனக்கு அறிமுகம் ஆயிற்று என்று 'கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தால்',... அப்படி ஒன்றும் சுப நிகழ்வு இல்லை அது!

கி.பி.2006ன் மத்திய மாதங்களில் ஒரு நாள், குமுதம் ரிப்போர்ட்டரில் ஒரு கட்டுரை படித்தேன். அப்போது அனல் அடித்துப் பறந்து கொண்டிருந்த 'போலி டோண்டு' பற்றியும், அவரது ஆபாச வலைப்பதிவுகள் பற்றியும் சொல்லப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட மூன்று பக்கங்கள். அப்போது தான் 'வலைப்பதிவு' என்ற சொல் மூளையின் குழப்பக் கோடுகளில் பதிந்தது. ஆனாலும் ஏதும் செய்யவில்லை.

ஆகஸ்டில் பெங்களூருக்கு இடம் பெயர்ந்த போது, அலுவலகத்தின் குறை வேலை நாட்களும், சட்டென்ற கலாச்சாரத் தடுமாறல்களும், இணையத்திலேயே என்னைத் தொடர்ச்சியாகச் சுற்ற வைத்து, இருவரின் வலைப்பதிவுகள் எப்படியோ கண்ணில் சிக்கி, எனது வலைப் பிரவேசத்திற்கு அடிகோலின.

கொங்கு ராசா.

டுபுக்கு.

காவிரிக் கரையின் வளப்பமான ஒரு டவுன் சிறுவன் ஆனதால், கொங்குத் தமிழ் கொண்டு நான் மீண்டும் நுரை பொங்கி அலையடிக்கும் காவேரிக் கரையிலேயே குதித்தாடுவதைப் போன்ற சில் அனுபவத்தைத் தந்தன கொங்குராசாவின் எழுத்துக்கள்.

அவரது இந்தப் பதிவு, சிறுகதைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை அறிவதற்கு முன்பே சிறுகதைகளை எழுதும் விதத்தைச் சொல்லியது என்றால்...as they told மிகையல்ல..!

டுபுக்கு சாரைப் பற்றி நான் சொல்லி அறிய வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு வாக்கியத்திலும் வெடிச் சிரிப்பு பறக்கும். சர்வசாதாரணமாக நாற்பது, ஐம்பது பின்னுட்டங்கள் வாங்கித் தள்ளுவார்; தள்ளுகிறார். எனக்கும், நகைச்சுவை எழுத்துக்கும் நாலைந்து சந்த்ராயன்கள் செல்ல வேண்டிய தூரம் என்பதால், செமத்தியான ஈர்ப்புடன் இழுத்துக் கொண்டது, இவரது பதிவு..!

குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், ஜொள்ளித் திரிந்ததொரு காலம்..., நான்கெட்டு நீகெட்டு கிரிகெட்டு.

சரி, நாமும் எதையாவது செய்தாக வேண்டுமே என்று கை, கால்கள் பரபரக்கத் துவங்கியது, என் பயணத்தின் பிம்பங்கள்.

ஐந்தாவது படிக்கும் போதிலிருந்தே, 'மழை, வானம், பூமி, நிலா' என்றெல்லாம் எழுதிக் கொண்டு வந்து அம்மாவிடம் காட்டுவேன். பின் காலப் போக்கில் பரிணாம வளர்ச்சி பெற்று, ஏழாவது படிக்கையில் ஒரு வெண்பா ('பெண், கண், இடை, உடை') எழுதி தமிழ் வாத்தியாரிடம் காட்ட, அவர் பொறுமையாக, 'யாப்பு, இலக்கணம்' என்றெல்லாம் ஆப்பு வைக்க, அம்முயற்சிக்கு முழுக்குப் போட்டேன், அப்போதைக்கு..! பின் எட்டாவது மே லீவுக்கு திருச்சி சென்று, அப்போதிருந்த இராஜேஷ்குமார் பைத்தியத்தில் மூன்று நாவல்கள் எழுதி, டைரி நிரம்பியது. மூன்றிலும் அத்தனை கொலைகள்; இரத்தம் தெறித்து ஓடியது; ஒவ்வொரு சேபட்ரின் கடைசி வரியிலும் சஸ்பென்ஸ் (அப்போது... - தொடரும்.). அம்மா படித்து விட்டு, குடும்பக் கதை எழுதச் சொல்ல, அந்த வயதில் சிக்கவே இல்லை.

இப்படி பள்ளி நாட்கள், கல்லூரி நாட்கள், பயணக் காலங்கள், வலி நேரங்கள்... அத்தனையிலும் என் கூடவே வந்தது, செம்மொழி..!

ஆங்காங்கே கிறுக்கி வைத்திருந்த தாள்கள் எல்லாம், காலத்தோடு காற்றோடு காணாமல் போய் கரைந்தே போயின. எனவே மிச்சமிருந்ததை சாஸ்வதப் படுத்துவதற்கே வலைப்பதியத் துவங்கினேன்.

நான் வலைப்பதியக் காரணமே இது தான் என்பதால், பின்னூட்டங்களைப் பற்றிய அக்கறை இல்லை; திரட்டிகளில் வர வேண்டுமே என்ற பதற்றம் இல்லை. படித்தால் பிடிக்க வேண்டும்; பிடித்தவர்கள் மீண்டும் வர வேண்டும். Thats All.

தமிழ் இலக்கியத்தில் ஒரு மாபெரும் நிகழ்வு நிகழ்ந்தது, அதே காலக் கட்டத்தில்!

ந்து வயதில் எழுதத் துவங்கியதில் இருந்து கவிதை தவிர வேறு இலக்கிய வடிவங்களைப் பற்றி அக்கறை அற்று இருந்தவனுக்கு மற்றுமொரு பிரம்மாண்டத் தளத்தை அறிமுகப்படுத்திச் சவால் விட்டது... தேன்கூடு சிறுகதைப் போட்டிகள்..!

'பொதுவாக எம்மனசு தங்கம்; ஒரு போட்டியினு வந்து விட்டா சிங்கம்' என்ற தலைவரின் வரிகள் நமக்கு வே.வா.

அப்போது பரபரவென பற்றிக் கொண்டது தான் இந்த தீ..! சட்டென கவனம் முழுதும் சிறுகதையில் பாய, விதவிதமான தளங்களில், விதவிதமான மொழிகளில், சிறுகதைகள் வந்து விழத் தொடங்கி, இன்று எது அதிகம்..? கவிதையா, கதையா..? என்ற அடிதடியில் இரண்டும் மோதிக் கொண்டிருக்கின்றன.

என்னால் சிறுகதையும் எழுத முடியும் என்று எனக்கே எடுத்துக் காட்டிய தேன்கூடு நிர்வாகத்திற்கும், இப்போது இறைவனுக்கு அருகில் அமைதியாக சாந்தி அடைந்திருக்கும் சாகரன் சாருக்கும் நன்றிகள் சொல்லாவிட்டால், நான் மனிதன் இல்லை..!

Thank You Sagaran Sir...!

'ம்மால் என்ன செய்ய முடியும் என்று அறிவதற்காகத் தான் போட்டிகளில் பங்கெடுப்பது முக்கியமே தவிர பரிசு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் அல்ல' என்ற எண்ணம் இருப்பதால், தேன்கூடு போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டேன்.

அந்த ஆர்வமே இப்போது சிறில் அலெக்ஸின் 'அறிவியல் புனைகதைப் போட்டியில்' முதல் பரிசைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பது உறுதி..!

சரி.. இதோடு நிறுத்திக் கொள்வோம்.

கடைசியாக ஒன்றே ஒன்று கூறிக் கொள்கிறேன். ஆரம்பக் காலக் கட்டங்களில் கிட்டத்தட்ட எனது அனைத்துப் பதிவுகளுக்கும் எப்படியோ வந்து கமெண்ட் போட்டுச் சென்ற மல்லிகை மேடத்துக்கு எனது நன்றிகள். 'பண்புடன் குழுமம் மல்லிகை' என்றால் அனைவர்க்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.

வெள்ளை நிறத்திலும், சாம்பல் நிறத்திலும் குட்டிகள் இருந்தாலும், அத்தனையும் ஒன்றன்றோ என்று மகாகவி கேட்டது போல், எழுதிய அனைத்தும் எனக்குப் பிடித்தவையாக இருப்பினும், சில கொஞ்சம் அதிகப் பிடித்தம். அவற்றில் சில கீழே..!

சிறுகதை :

அம்மா - தீபாவளி சிறப்புச் சிறுகதை!

அக்காவுக்கு...!

ராஜா வருகை.

இது உங்கள் கதை.

ஹாஸ்டல் டு கேண்டீன் - ஓர் என்ன(ண்ண)ப் பயணம்.

டகால் பாச்சா!

முதல் அறிவியல் புனைகதை.

நினை..வா.. நினைவா?

நான் கடவுள்.

H2SO4.

நானென்பது நீயல்லவா..

உன் குற்றமா.. என் குற்றமா..?

இணைத்த இலவசம்.

பரவசம்.. இலவசம்...!

இப்ப இன்னான்ற..?

வாசம்.

லாந்தர் விளக்கு.

அண்ணே..லிப்ட் அண்ணே..!

கொஞ்சம் உடன் அழைத்துச் செல்வீர்களா..?

"ங்கா...ங்கா.."

கவிதை :

(இது மீக் கடின வேலை. ஏனெனில் கதைக்குச் சிந்திக்கின்ற மனம் சமூக நிர்ப்பந்தங்களையும், யதார்த்தங்களையும் நினைவில் வைத்துக் கொண்டே சிந்தித்தாக வேண்டும். ஆனால் கவிதை என்பது நமது அந்தரங்கப் பரவச நிலையின் மொழி மாற்றம். ஒவ்வொரு கவிதையும் நமது ஆனந்தத் துளிகளில் ஒரு சொட்டு. எனவே தரம் பிரிப்பது என்பது நம்மாலேயே முடியாத காரியம். எனினும் கொஞ்சம் டேஸ்ட் செய்து பார்க்க..!)

இவனை இவளால்..!

ஒரு மழை நாளின் இரவில்.

உன் முகம் தொட்டு...!

எழுதிப் பார்க்க என் காதல்...!

காதல் போல் ஒரு மழைத்துளி..!

யமுனே நின்னுட நெஞ்சில்...

மதுரச் சிற்பம்.

யமுனை நதிக்கரையிலே...

கிருஷ்ணா - இராதை.

பூ - காதல் - பேரருவி. (A)

பெய்யத் தொடங்கட்டும் பெருமழை...!(A)

சென்னை - நல்லா இரு கண்ணு!

ல்லது... இனி அடுத்த பதிவுகளில் பார்ப்போமா..?

நன்றிகள்..!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது