வலைச்சரத்தில் இரண்டாம் நாள்!-காரஞ்சன்(சேஷ்)
➦➠ by:
இருளும் ஒளியும்,
காரஞ்சன் கவிதை,
முதியோர்
வலைச்சர அன்பர்களுக்கு இனிய காலை வணக்கம்! இந்த நாள் நம் அனைவருக்கும் மகிழ்வளிக்கும் நாளாக அமையப் பிரார்த்திக்கிறேன்.
நேற்று என்னுடைய அறிமுகப் பதிவைப் பார்த்து, வரவேற்பளித்து உற்சாகமளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் பணிவான வணக்கங்களையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்!
இன்று "இருளும் ஒளியும்" எனும் தலைப்பில் போட்டோக்கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளேன். (பட உதவி: கூகிளுக்கு நன்றி!)
வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
அதில் வண்ணம் காட்டும் வானவில்-
4. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?
5. காரிகை கற்றுக் கவிதை படைத்தலின் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று என வேடிக்கையாகக் கூறுவார்கள்.
எது கவிதை? அறிய வாருங்கள் திரு ரமணி அவர்களின் வலைப்பூவிற்கு
6. இது சுண்டைக்காய் மேட்டர் எனச் சொல்பவர்களுக்கு சுண்டைகாயின் மகத்துவமான மருத்துவ குணம் பற்றி அறிய மிடில் க்ளாஸ் மாதவியின் வலைப்பூவிற்கு வாருங்கள்.
என்ன நண்பர்களே! இரண்டாம் நாள் சந்திப்பில் தங்களுக்கு பிடித்த விஷயங்கள் இடம்பெற்றிருந்ததா? அறியும் ஆவலில் நான்! அனைவருக்கும் நன்றி!
நாளை சந்திப்போம்!
என்றும் அன்புடன்
காரஞ்சன்(சேஷ்)
நேற்று என்னுடைய அறிமுகப் பதிவைப் பார்த்து, வரவேற்பளித்து உற்சாகமளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் பணிவான வணக்கங்களையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்!
இன்று "இருளும் ஒளியும்" எனும் தலைப்பில் போட்டோக்கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளேன். (பட உதவி: கூகிளுக்கு நன்றி!)
இருளும் “ஓளி”யும்
ஒருபுறம் ஒளியும்
மறுபுறம் இருளுமாய்
உலகம் இருப்பதை
உரைக்குதோ உன்முகம்!
மறுபுறம் இருளுமாய்
உலகம் இருப்பதை
உரைக்குதோ உன்முகம்!
ஒளிவெள்ளம் பெருகிவர
ஒளியாத இருளுண்டோ?
எத்தகைய தடைவரினும்
ஏற்றுநீ எதிர்கொள்வாய்!
எண்ணையும் திரியும்
இணைந்தெரிந்து இருள்நீக்க
காலத்தே ஏற்றிடு நீ
கல்வியெனும் நல்விளக்கை!
உன்போல் அறிவொளிகள்
உலகெங்கும் உதித்திட்டால்
கல்லாமை இருளெங்கும்
சொல்லாமல் அகலாதோ?
-காரஞ்சன்(சேஷ்)
ii) படித்ததில் பிடித்தது!
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம் !
பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு
சலனமின்றி நீவெளியேறிய போது,
முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால் நீ
கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!
முதல் தரமிக்க இந்த இல்லத்தை
தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!
இதுவரையில் ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை
மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக
மனம் மகிழ்ச்சியடைகிறது.
நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!
இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்…
உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு… வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு… உறவுகள் இதுதானென்று!
இந்தக் கவிதையைப் படித்ததும் கண்கள் குளமாகின்றது.. எவ்வளவு யதார்த்தமும் வலியும் இந்தக் கவிதையில்அடங்கியுள்ளது
(நண்பர் அனுப்பிய மின்னஞ்சல்-நண்பருக்கு நன்றி!)
III) மனதை நெகிழச் செய்யும் காணொளி ஒன்று: தயவுசெய்து காணத்தவறாதீர்கள்!
இவர்களின் பதிவுகளை இன்று படிப்போமா?
1. தனக்கே உரித்தான பாணியில் கதையாகட்டும், நகைச்சுவையாகட்டும் பகிர்வதில் தனித்திறம் கொண்ட திரு வைகோ அவர்களின் வலைப்பூவில் நகைச்சுவையாக, சுவையான அடை செய்வது எப்படி? என விவரிக்கிறார். படித்து இன்புறுங்கள்!
"அடடா என்ன அழகு அடையைத் தின்று பழகு"
2. பயணக்கட்டுரை, பொக்கிஷங்கள், நகைச்சுவை சம்பவங்கள் இவற்றைப் பகிர்வதில் இவருக்கு இணை இவர்தான். பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் கனவில்

மும்தாஜ் வந்துவிட்டால்…
3.பனிரெண்டாம் வகுப்பில் பயிலும் செல்வி நிரஞ்சனா மாணிக்கம் அவர்களின் வலைப்பூ
எண்ணங்களின் ஓர் மலர்க்கொத்து!
4. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?
திரு பட்டாபி இராமன் அவர்களின்
அனுபவ ஞானம் அறியுங்கள்.
இதே கருத்து என்னுடைய
படைப்புகளில்: