விடை பெறுகிறேன் நண்பர்களே..!
➦➠ by:
எம்.ரிஷான் ஷெரீப்
இந்த ஏழு நாட்களும் காலம் இழுத்துவந்து என்னை உங்களுடன் பேசவிட்டது. நான் இணையப் பெருங்கடலில் சந்தித்த மனிதர்களை, என்னைச் சிந்திக்க வைத்தவர்களை எனப்பலரைப்பற்றியும் ஒரு பழங்காலப் பாட்டியைப் போல உங்களையும் இருத்திவைத்துக் கதைத்துக் கொண்டிருந்த அற்புதமான வாய்ப்பைத் தந்த நண்பர் சீனாவுக்கு மீண்டும் நன்றி.

முன்பே சொன்னது போல இணையப்பெருங்கடலில் வலைப்பூ எனும் பெரியதொரு கப்பலில் கூடப்பயணிக்கும் சகபதிவர்களை சுற்றிவர இருக்கும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்த முயன்றிருக்கிறேன். எனக்கருகில் நெருக்கமாக இருக்கும் மற்றும் எனது கைகளை நீட்டினால் தொட்டுவிடும் தூரத்திலிருக்கும் அன்பு நெஞ்சங்களையெல்லாம் என்னாலியன்றவரை அறிமுகப்படுத்திவிட்டதாக ஒரு சிறு ஆசுவாசம் மனதை நிறைக்கிறது எனினும் என்னால் இங்கு குறிப்பிடப்படாத மற்றும் சுட்டிக்காட்டப்படாத இன்னும் பல சிறந்த பதிவர்கள் வெளியில் உலவுகின்றனர்.
அவர்கள் எனது நண்பர்களாகவோ, நான் விரும்பிப் பார்க்கும் பதிவுகளின் சொந்தக்காரர்களாகவோ இருக்கும் பட்சத்திலும் இங்கு வலைச்சரப் பதிவுகளில் சுட்டிக்காட்டப்படாவிட்டால் அதற்குக் காரணம் நேரமின்மையும், இணையமும்தான். இப்பொழுது இதை எழுதும் கணத்தில் கூட வழமையாகப் பாவிக்கும் கணனியில் இணையம் செயலிழந்து 'இண்டர்நெட் கபே'யை நாடச் செய்திருக்கிறது.
வலைச்சரப் பதிவுகள் ஒவ்வொன்றுக்குமாக இப்படி நாடிய பொழுதில், வழமையாகப் பாவிக்கும் கணனியில் சேமித்துவைத்திருக்கும் சுட்டிகளை மறந்து மற்றும் இழந்து புதுக்கணனியில் சுட்டிகளை யோசிக்கவேண்டியிருந்தது. எனக்குப் பின்னால் காத்திருக்கும் நீண்ட வரிசை யோசிக்கவும் அனுமதியளிக்க மறுத்து ஒரு சலிப்போடு நேரத்தை விழுங்கிக் கொண்டிருக்கையில் அவசரம் அவசரமாக ஒவ்வொரு பதிவையும் எழுத வேண்டியிருந்தது. எனவே விடுபட்ட நண்பர்கள் புரிதல்கொண்டு என்னை மன்னியுங்கள்.
பதிவுகளைப் பார்த்து, படித்து பின்னூட்டமிட்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது நன்றிகள்..!
தொடர்ந்தும் உங்களுடன் பயணிக்கும் ஆவலெனக்குண்டெனினும் இந்த வருடம் தாய்நாடு திரும்பும் உத்தேசமும் உள்ளதென்பதால், உங்களுடனான பயணத்தினிடையில் எனக்கு இறங்க வேண்டியும் மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்புக்களற்றுமோ போய்விடின் என்னை மறந்துவிடாதீர்கள் !
என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்
மேலும் வாசிக்க...