துன்பம் இனி இல்லை! சோர்வில்லை! தோற்பில்லை!- ஏழாம் நாளில் காரஞ்சன்(சேஷ்)
➦➠ by:
ஓடு ஓடு,
காரஞ்சன்,
நின்னைச் சரண்,
விதியின் கோடு
வலைச்சர அன்பர்களுக்கு வணக்கம்! வலைச்சரத்தில் பொறுப்பேற்று இன்றுடன் 7 நாட்கள் நிறைவடைகிறது! இயன்றவரை எனக்கிட்ட பணியினை சிறப்பாகச் செய்துள்ளேன். தங்கள் அனைவருக்கும் பிடித்த வகையில் அமைந்ததென நம்புகிறேன்! இந்த நாள் இன்பம் பயக்கும் நாளாக அனைவருக்கும் அமைய இறைவனை வேண்டுகிறேன்.
I) இன்று என்னுடைய கவிதை:
அடையாள வரிகளாய்
அகன்ற நிலமெங்கும்
உழவின் கோடுகள்!
நிலத்தினில் சாட்சியாய்
நின்றிருக்கும் மரமே-நீ
இயற்கை அன்னையிடம்
எங்கள்நிலை கூறாயோ?
எழுதும் விதிக்கரங்கள்
இரக்கம் கொள்ளாதோ?
உழுபவர் நிலை உயர
ஒருகோடு வரையாதோ?
-காரஞ்சன்(சேஷ்)
II) விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள்! இந்த நான்கு வயது சிறுமியின் திறமை வியக்க வைக்கிறது!
தவறாமல் கண்டு இரசியுங்கள்!
படங்கள் உதவி: கூகிளுக்கு நன்றி!
I) இன்று என்னுடைய கவிதை:
விதியின் கோடு!
ஆழ உழுததற்கு அடையாள வரிகளாய்
அகன்ற நிலமெங்கும்
உழவின் கோடுகள்!
நிலத்தினில் சாட்சியாய்
நின்றிருக்கும் மரமே-நீ
இயற்கை அன்னையிடம்
எங்கள்நிலை கூறாயோ?
எழுதும் விதிக்கரங்கள்
இரக்கம் கொள்ளாதோ?
உழுபவர் நிலை உயர
ஒருகோடு வரையாதோ?
-காரஞ்சன்(சேஷ்)
II) விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள்! இந்த நான்கு வயது சிறுமியின் திறமை வியக்க வைக்கிறது!
தவறாமல் கண்டு இரசியுங்கள்!
---------------------------------------------------------------------------------------------------------------
III) படித்ததில் பிடித்தது!
ஓடு.... ஓடு..... ஓடு.......
உடம்பில் ரத்தம்
நன்றாக ஓடிக்கொண்டிருக்கும்
வரை நாம்
ஆரோக்கியமாக இருப்பதாகப்
பொருள். ஓடிக்கொண்டே
இருப்பது ரத்தத்தின்
உயிர்க் கடமை
.பூமி சுழல்கிறது.
சூரியனைச் சுற்றிச்
சுற்றி ஓடும்
ஓட்டத்தை பூமியால்
விட முடியுமா?...
முடியாது! பூமி
மட்டுமல்ல....எல்லாக்
கோள்களும் ஓடுவது
முதல் கடமை.
ஓடிக்கொண்டே இருக்கும்
நதி, நகரங்களை
உண்டாக்கி, நாகரிகங்களை
உருவாக்குகிறது. நகருகிற
நதி நாகரிகத்தின்
நாற்றங்கால்.
அது ஒரு
கிராமம். அந்த
ஊருக்கு ஒரு
சித்தர் வந்தார்.
விவசாயிகள் உழுது
கொண்டிருந்தனர். அவரவர்
வேலையை அவரவர்
செய்து கொண்டிருக்கும்போது,
யாருமே அவரைக்
கவனிக்கவில்லை. சித்தருக்கு
பெரும் பசி.
கூடவே கோபம்
தலைக்கேறியது. அந்த
மக்கள் மீது
கோபம். இந்த
மக்கள் பஞ்சம்
வந்தால்தான் பட்டினியின்
கொடுமையை உணருவார்கள்
என்று, " பத்து வருடம் இந்த ஊரில் மழை பெய்யாமல் போகட்டும்" என்று சாபம் விட்டார். "பெருமாளே... உன் சங்கை எடுத்து உள்ளே வை" என்று கடவுளுக்கும் உத்தரவு போட்டார். பெருமாள்
தன சங்கை
ஊதினால்தான் இடி
மழை வரும்
என்பது அந்தக்
கால அபிப்பிராயம்.
"ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து"
என்று மழையைப்
பாடினாள் ஆண்டாள்.
இனி மழை
வராது என்று
தெரிந்ததும் மக்கள்
உழவை மறந்தனர்.
சோம்பிக் கிடந்தனர்.
ஆனால் பழுத்த
விவசாயி ஒருவர்
மட்டும், மறுநாள்
காலை வழக்கம்
போல் தமது
ஏரைத் தூக்கித்
தோளில் வைத்துக்
கொண்டு புறப்பட்டு
விட்டார். ஊரே
அவரை பார்த்து
சிரித்தது. வழியில்
பெருமாள் கோயிலை
பார்த்து, "நாராயணா...
எவன் எப்படிப்
போனா எனக்கென்ன!
என் வேலையை
நான் பார்கிறேன்"
என்று கும்பிடு
போட்டுவிட்டு வயலுக்குப்
போனார்.
இதைப் பார்த்ததும்,
பெருமாளுக்கே அதிர்ச்சி.
சங்கை எடுத்துக்
கொண்டு வயலுக்கே
வந்து " பத்து வருஷம் மழை வராது... இப்ப உழுது என்ன பயன்?" என்றார். "சாமி....... பத்து வருஷம் உழாமலேயே இருந்தா உழவே எனக்கு மறந்து போயிடும். இந்தா நீ வெச்சிருக்கியே சங்கு....... அதைப் பத்து வருஷம் நீ ஊதாமலேயே இருந்தா உள்ளே அடைச்சுக்காதா/ அது மட்டுமில்ல.... எந்த பக்கம் வாய் வெச்சு ஊதனும்கிறது உனக்கு மறந்து கூட போயிடும்" என்றார்
விவசாயி.
பெருமாள் குழம்பிப்
போனார். " ஆமா, மறந்து போயிட்டா..."
என்று படபடப்பாக
தமது சங்கை
எடுத்து வாயில்
வைத்து ஊதிப்
பார்த்தார். அவ்வளவுதான்....
மேகங்கள் திரண்டன.
இடி இடித்து
மழை கொட்ட
ஆரம்பித்தது.
இந்த உலகம்
எல்லோரும் இயங்கவேண்டிய
கர்ம பூமி.
இயங்காமல் இருக்க
இங்கே எவருக்கும்
உரிமை இல்லை.
அமெரிக்காவின் பிரபல
கோடீஸ்வரர் ராக்பெல்லர், ஒரு
முறை விமானத்தில்
பயணிக்கும்போது, பக்கத்து
இருக்கையில் ஓர்
இளைஞன், அவரை
பார்த்து, "ஐயா! இந்த வயதிலும் இப்படி கடுமையாக உழைக்க வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்துவிட்டீர்கள் ....... உட்கார்ந்து சாப்பிடலாமே...." என்று
பணிவுடன் கேட்டான்.
ஆனால் அவரோ...
"நல்லது.... இந்த விமானத்தை விமானி இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்திருக்கிறார்...... இல்லையா? சிரமப்பட்டு அது மேலே ஏறிவிட்டது.... சுலபமாகப் பறக்கிறது.... இதன் இன்ஜினை இப்போது அணைத்துவிட்டால் என்ன ஆகும்? "விபத்து
ஏற்படும்"
"வாழ்க்கைப் பயணமும் அப்படித்தான். கடுமையாக உழைத்து மேலே வரவேண்டி இருக்கிறது. மேலேதான் வந்து விட்டோமே என்று உழைப்பதை நிறுத்திவிட்டால் தொழிலில் கண்டிப்பாக விபத்து ஏற்படும். உழைப்பு வருமானத்துக்காக மட்டுமல்ல. உடல் ஆரோக்கியத்துக்கும் மனமகிழ்ச்சிக்கும் கூட...." என்றார்
ராக்பெல்லர்.
உழைப்பே
உணவு...... உழைப்பே ஓய்வு...... உழைப்பே உயிர்
நிற்காமல் ரத்தம் ஓட, நாம் ஓட, இந்த பூமியும் ஓட....... சூரிய குடும்பமும் ஓடும்.
(நன்றி: K.N.RAJAN அவர்களின் மின் அஞ்சல்)
--------------------------------------------------------------------------------------------------------
IV) இன்று சில பதிவர்களின் பதிவுகள்!
2.
வானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை : மரமல்லி:
3. கைகளில் அள்ளிய
நீர்: :யுகங்களைக் கடந்த கோயில்:
4. நவீன விருட்சத்தில்
காக்கைச் சிறகினிலே- சிறுகதை
5.
அலையல்ல சுனாமியில்- வழிப்போக்கனின் கதை- விச்சு
6. வளிமண்டலத்தைப்பற்றிய அருமையான பதிவு: வரலாற்றுச் சுவடுகள்!
7. கதை சொல்வதே அருகி வரும் காலத்தில் சிறுவர்களுக்கான கதைக்களஞ்சியம் : பாட்டி சொல்லும் கதைகள்!
திருமதி ருக்மணி சேஷசாயி அவர்களின் வலைப்பூ!
------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------
என்ன நண்பர்களே! உங்களுடன் பதிவுகளைப் பகிர்ந்த ஒரு வார காலமும் இனிமையான தருணங்கள் அல்லவா? பிழையேதும் இருந்திருந்தால் பொறுத்தருள்க! பிடித்திருந்தால் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்க!
என்னைப் பரிந்துரைத்த திரு வைகோ அவர்களுக்கும், அவரின் பரிந்துரையை ஏற்று எனக்கு வாய்ப்பளித்த திரு சீனா ஐயா அவர்களுக்கும் இத்தருணத்தில் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றிகள்!
என்னைப் பரிந்துரைத்த திரு வைகோ அவர்களுக்கும், அவரின் பரிந்துரையை ஏற்று எனக்கு வாய்ப்பளித்த திரு சீனா ஐயா அவர்களுக்கும் இத்தருணத்தில் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றிகள்!
V) எனக்குப் பிடித்த மகாகவியின் பாடலொன்றைப் பகிர்ந்து இப்பதிவினை நிறைவு செய்கிறேன்!
அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
என்றும் நன்றியுடன்
காரஞ்சன்(சேஷ்)



